28 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
27 August 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
ஹோலியை கொண்டாடுவது என்றால் திட எண்ணங்களின் அக்னியில் பலவீனங்களை எரிப்பது மற்றும் சந்திப்பின் மகிழ்ச்சியை கொண்டாடுவது
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று ஆன்மீக தோட்டத்தின் எஜமானரான பாப்தாதா இரண்டு விதமான தோட்டங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். (இன்று மேடையில் மிக அழகான பூந்தோட்டத்தை அலங்கரிக்கப் பட்டுள்ளது) ஒரு புறம் இயற்கையால் உருவாக்கப்பட்ட அழகு (அலங்காரம்). மற்றொரு புறம் ஆன்மீக ரோஜா மலர்களின் பூந்தோட்டத்தின் அழகு. நாடகத்தில் தொடக்க காலமான சத்யுகத்தில் இயற்கை யின் சதோபிரதானமான அழகை மாஸ்டர் ஆதி தேவ் (தேவதைகள்), மிகவும் உயர்ந்த ஆத்மாக்களாகிய உங்களுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது. இந்த இறுதி காலகட்டத்திலும் கூட இயற்கையின் அழகை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஆரம்ப காலக்கட்டம் மற்றும் இறுதி காலக்கட்டம் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது. உங்களுடைய இராஜ்யத்தில் இயற்கையின் சொரூபம் மிகவும் உயர்ந்த சதோபிரதானமான அழகுடையதாக இருக்கும். அங்கே இருக்கும் (சத்யுகத்தின்) பூந்தோட்டம் மற்றும் தற்சமயத்தில் இருக்கும் உங்களின் பூந்தோட்டத்தில் மிகுந்த வேறுபாடு இருக்கிறது. அங்கு உண்மையான நறுமணத்தின் அனுபவம் செய்துள்ளீர்கள் அல்லவா? ஆனாலும் கூட இயற்கையின் அதிபதியாகிய நீங்கள் உயர்ந்த ஆத்மாக்களாக இருக்கிறீர்கள். இயற்கையின் அதிபதியாக இருக்கிறீர்கள், இந்த இயற்கையின் விளையாட்டை பார்த்து புன்முறுவல் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். இயற்கை சீற்றம் கொண்டாலும், இயற்கை அழகான விளையாட்டை காட்டினாலும் – இரண்டிலும் இயற்கை யின் அதிபதியான ஆத்மாக்களாகிய நீங்கள் சாட்சியாக இருந்து விளையாட்டை பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். விளையாட்டில் ஆனந்தத்தை பெறு கிறீர்கள், பயப்படுவதில்லை. ஆகையால் பாப்தாதா தபஸ்யாவின் மூலம் சாட்சித்தன்மை என்ற மனநிலையின் ஆசனத்தில் உறுதியாக நிலைத்திருப் பதற்கான விசேஷமான பயிற்சியை செய்ய வைத்துக் கொண்டிருக்கிறார். எனவே இந்த மனநிலை (சாட்சி) என்ற ஆசனம் அனைவருக்கும் பிடித்திருக்கிறதா? அல்லது குழப்பத்தின் ஆசனம் பிடித்திருக் கிறதா? நிலையாக இருக்கும் ஆசனம் பிடித்திருக்கிறதல்லவா. என்ன நடந்தாலும் இயற்கையாக இருக்கட்டும், மனிதர்களாக இருக்கட்டும் இருவருமே உறுதியான அசையாத ஆசனத்தை சிறிதளவுக் கூட அசைக்க முடியாது. இந்தளவு உறுதியாக இருக்கிறீர்கள் அல்லவா! அல்லது இப்பொழுது ஆக வேண்டுமா?
இயற்கையின் 5 ஆட்டக்காரர்களும், மாயாவின் 5 ஆட்டக்காரர்களும் இருக்கிறார்கள். இந்த 10 ஆட்டக்காரர்களை நன்றாக தெரிந்துள்ளீர்களா? ஆட்டம் (விளையாடமல்) இல்லாமல் விளை யாட்டு வீரர்கள் இருப்பார்களா என்ன? சில நேரங்களில் ஒரு சில விளையாட்டு வீரர்களும், சில சமயம் மற்ற விளையாட்டு வீரர்களும் முன்னால் வருவார்கள். தற்சமயத்திலும் கூட பழைய உலகத்தில் விளையாட்டை பார்ப்பதற்கு பலர் ஆர்வமாக உள்ளார்கள் அல்லவா? மிக அன்பாக விளையாட்டை பார்க்கிறார்கள். அவர்கள் பழைய உலகத்தை சேர்ந்தவர்கள், ஆனால் நீங்கள் சங்கமயுகத்தை சேர்ந்த பிராமண ஆத்மாக்கள், எனவே விளையாட்டை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டுமா அல்லது பயப்படுகிறீர்களா? சிலர் கீழே விழுகிறார்கள், சிலர் கீழே விழ வைக்கிறார்கள். ஆனால் விளையாட்டை பார்க்கக் கூடியவர்களுக்கு விழுவதை பார்த்தாலும் ஆனந்தம் ஏற்படுகிறது, மேலும் வெற்றியடைந்தவர்களை பார்த்தாலும் ஆனந்தம் ஏற்படுகிறது. எனவே இதுவும் கூட மிகப்பெரிய விளையாட்டாக இருக்கிறது. ஆசனத்தில் இருந்து கீழே இறங்கி விடாதீர்கள், அது மட்டும் போதுமானது. யார் எப்படி வேண்டுமானாலும் அசைக்கட்டும், ஆனால் சக்திசாலியான ஆத்மாக்களாகிய உங்களை அசைக்க முடியாது. எனவே பாப்தாதா இன்று ஒவ்வொரு ஆன்மீக ரோஜா மலர்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். தோட்டத்திற்கு அழைக்கிறார்கள் என்றால் தோட்டத்திலுள்ள இலைகளை பார்ப்பீர்களா அல்லது மலர்களை பார்ப்பீர்களா? இங்கும் கூட மிக அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. முயற்சி (அலங்காரம்) செய்தவர்கள் அதிசயம் மிக நன்றாக இருக்கிறது. ஆனால் பாப்தாதா ஆன்மீக மலர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். வித விதமான மலர்கள் இருக்கிறதல்லவா. ஒரு சில மலர்கள் மிகவும் அழகான வண்ணமாக இருக்கிறது. ஒரு சில நிறமும், தோற்றமும் கொண்டதாக இருக்கிறது. மற்ற சில மலர்கள் வண்ணம், தோற்றமும் மற்றும் நறுமணமுடையதாக இருக்கிறது. ஒரு சில தோற்றமும் நிறமும் மட்டும் உடையதாக இருக்கிறது. நிறமும் தோற்றமும் அனைத்து குழந்தைகளிடமும் வந்துவிட்டது. ஏனெனில் பாபாவின் தொடர்பில் இருப்பதன் வண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுவிட்டது. ஒரு சிலர் நடவடிக்கையின் விஷயத்தில், முயற்சியின் விஷயத்தில் முழுமையாக திருப்தியாக இல்லையென்றாலும் பாபாவின் தொடர்பினுடைய வண்ணம் (சங் கா ரங்) அனைவருக்கும் மிக அன்பானதாக இருக்கிறது. ஆகையால் வண்ணம் அனைவரிடம் வந்து விட்டது, மேலும் தோற்றத்திலும் கூட மாற்றம் வந்து விட்டது, ஏனெனில் பிராமண ஆத்மா ஆகி விட்டீர்கள். எப்படிப்பட்ட முயற்சி செய்யும் ஆத்மாவாக இருந்தாலும், ஆனால் பிராமண ஆத்மா ஆவதின் மூலம் தோற்றம் அவசியம் மாறிவிடுகிறது. பிராமண ஆத்மாவின் ஜொலிப்பின் அழகு ஒவ்வொரு ஆத்மாவிற்குள்ளும் வந்து விடுகிறது. ஆகையால் நிறமும் தோற்றமும் அனைவரிடத்திலும் தென்பட்டுக் கொண்டிருக்கிறது. நறுமணமும் நம்பர்வராக இருக்கிறது. சம்பூரண தூய்மை தான் நறுமணமாக இருக்கிறது. அதுபோல யாரெல்லாம் பிராமணர்களாக மாறுகிறார்களோ, பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரி என்று அழைக்கப்படுகிறார்கள். குமார் மற்றும் குமாரி ஆவது என்றாலே தூய்மையானவர் ஆவதாகும். தூய்மையின் வரையறை மிகவும் சூட்சமமானதாகும். பிரம்மச்சரியம் மட்டுமல்ல.. உடலிருந்து பிரம்மச்சாரியாக இருப்பது மட்டும் சம்பூரண தூய்மையானவர் என்று சொல்ல முடியாது. மனதின் மூலமும் பிரம்மச்சாரியாக இருப்பது என்றாலே மனதில் பாபாவை தவிர யாரிடத்திலும் பற்றுதல் இருக்க கூடாது. உடலிலும் பிரம்மச்சரியம், தொடர்பிலும் பிரம்மச்சரியம், சன்ஸ்காரத்திலும் பிரம்மச்சரியத்தில் இருப்பது. இதனுடைய வரையறை மிகவும் அன்பானதாகவும், மிகவும் ஆழமானதாகவும் இருக்கிறது. இதனுடைய விரிவான விளக்கத்தை பிறகு சொல்வேன். இன்று ஹோலியை கொண்டாட வேண்டும் அல்லவா. ஆழமான படிப்பாக இல்லை. இன்று கொண்டாட்டமாக இருக்கிறது.
ஹோலியை கொண்டாடக்கூடியவர் யாராக இருக்கிறார்கள்? ஹோலி ஹன்ஸ் (புனித அன்ன பறவை) ஆக இருக்கிறார்கள். ஹோலி ஹன்ஸ் மிகவும் அன்பானவர்களாக இருக்கிறார்கள். அன்ன பறவை எப்பொழுதும் நீரில் நீந்தக்கூடியதாக இருக்கும். புனித அன்ன பறவையும் எப்பொழுதும் ஞானம் என்ற நீரில் நீந்தக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பறக்கக்கூடியவர்கள் மற்றும் நீந்தக்கூடியவர்கள் நீங்கள் அனைவரும் பறக்கவும், நீந்தவும் தெரிந்துள்ளீர்கள் அல்லவா. ஞானத்தை சிந்தனை செய்வதைத் தான் ஞான அமிர்த்தத்தில் நீந்துவது என்று சொல்லப்படுகிறது. மேலும் பறப்பது என்றால் எப்பொழுதும் உயர்ந்த மனநிலையில் இருப்பதாகும். இரண்டையும் தெரிந்துள்ளீர் கள் அல்லவா? அனைவருடைய மனதிலும் பாபா மிது 100% அதிகமான அன்பு இருக்கிறது. மேலும் பாபாவின் அன்பும் ஒவ்வொரு குழந்தைகளிடமும், அவர்கள் கீழே விழுந்திருந்தாலும், மேலே ஏறி இருந்தாலும், விளையாடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனாலும் பாபாவிற்கு அன்பானவர்கள். பாபா விளையாட்டை பார்த்து இது குறும்புகார குழந்தை என்று புரிந்து கொள்கிறார்கள். அனைத்து குழந்தைகளும் ஒன்று போன்று இருப்பதில்லை அல்லவா. ஒரு சிலர் குறும்புத்தனமுடையவர் களாகவும், ஒரு சிலர் கம்பீரமான வராகவும், ஒரு சிலர் மகிழ்ச்சிகரமானவராகவும் இருக்கிறார்கள், ஒரு சிலர் மிக வேகமுடைய இயல்புடையவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் குழந்தைகளாக இருக் கிறார்கள் அல்லவா. குழந்தை என்ற வார்த்தை மிகவும் அன்புடையதாக இருக்கிறது. உங்கள் அனை வருக்கும் பாபா என்ற வார்த்தை மிக பிடித்தமானதாக இருக்கும், அதனால் பாபாவிற்கு குழந்தைகள் பிடித்தமானவர்களாக இருக்கிறார் கள். பாபா எந்த குழந்தைகளாலும் மனமுடைந்து போவதில்லை. எப்பொழுதுமே நல்ல நம்பிக்கை வைத்துள்ளார். ஒருவேளை ஒரு சிலர் ஒதுங்கியும் சென்று விடுகிறார்கள், ஆனாலும் பாப்தாதா அவர்கள் மீதும் இன்று இல்லையென்றாலும் நாளை வந்து விடு வார்கள் என்ற நம்பிக்கை வைக்கிறார். எங்கு செல்வார்கள்? உடல் ரீதியான கணக்கு வழக்கில் கொஞ்சம் அதிகமாக நோய் ஏற்பட்டாலும், அதில் சரியாவதற்கு சிறிது அதிகமாக கால அவகாசம் தேவைப்படுகிறது. மேலும் சிறிதளவு உடல் பாதிப்பு இருக்கும் பொழுது, அது விரைவாக சரியாகி விடுகிறது. ஆனால் நோய் ஏற்பட்டிருக்கிறது. எப்படிப்பட்ட வியாதியாக இருந்தாலும் ஸ்தூலமான முறையில் நோயாளி களிடமிருந்து நம்பிக்கையை இழக்க வைப்பதில்லை. சதா நம்பிக்கை கொடுக்கப் படுகிறது – இன்று இல்லையென்றாலும் நாளை சரியாகிவிடும். ஆகையால் பாப்தாதா எந்தவொரு குழந்தையின் மீதும் அவநம்பிக்கை வைப்பது கிடையாது. இன்று கொஞ்சம் பலவீனமாக இருக்கிறார் கள், ஆனால் நாளை புத்திசாலி ஆகிவிடுவார்கள் என்ற நல்ல விருப்பங்களை எப்பொழுதும் வைக் கிறார், ஒரே குறிக்கோள் தான் இருக்கிறது, ஒரே ஒரு பாபா தான் இருக்கிறார், பாபாவை தவிர எங்கு செல்வார்கள்? ஆனாலும் ஒவ்வொரு ஆத்மாவிற்கும் பாபாவிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்க வேண்டும். பாபாவை நிந்தனை செய்தாலும் கூட பாபா முக்தியின் ஆஸ்தியை கொடுத்தே தீருவார். முழு உலகத்திலுள்ள அனைத்து ஆத்மாக்களுக்கும் முக்தியையோ, ஜீவன் முக்தியின் ஆஸ்தி அவசியம் கிடைத்தே ஆகும். ஏனெனில் பாபா உலகத்தில் அவதாரம் செய்திருக்கிறார். குழந்தை களுக்கான ஆஸ்தியை கொடுக்காமல் இருக்க முடியாது. தந்தை ஆஸ்தியை கொடுத்தே ஆக வேண்டும். எடுத்துக் கொண்டாலும், எடுத்துக் கொள்ளா விட்டாலும் பாபா கொடுத்து விடுவார். மேலும் அனைத்து ஆத்மாக்களுக்கும் பாபாவின் மூலம் ஆஸ்தி கிடைக்கிறது, அதனால் தான் பாபா என்று சொல்லி அழைக்கிறீர்கள் அல்லவா. தந்தை என்றாலே ஆஸ்தியை கொடுக்கக்கூடியவர் தான். எந்த தர்மத்திற்கு சென்று இருந்தாலும் கூட தந்தையே என்று கூறி நினைவு செய்கிறார்கள் அல்லவா. ஒரு ஆத்மாவும் ஆஸ்தியை பெறாமல் இருக்க முடியாது. எனவே சாகார உலகத்தில் நடிப்பை நடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்தி கொடுக்காமல் இருந்தால் தந்தை என்று எப்படி சொல்ல முடியும்? ஆனால் நீங்கள் நேரடியாக ஆஸ்தியை பெற்றுக் கொள்கிறீர்கள். தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா. உங்களுக்கு நேரடியான தொடர்பு இருக்கிறது. சாகாரத்தில் பிரம்மா பாபா கருவியாக இருக்கிறார், ஆனால் பிரம்மாவை நினைவு செய்வது கிடையாது, சிவ பாபாவுடன் தான் நினைவை இணைக்கிறோம். பிரம்மா பாபாவும் சொல்கிறார் பாபாவை நினைவு செய்யுங்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று சொல்வது கிடையாது. ஒருபொழுதும் தந்தையின் முழு ஆஸ்தியையும் வேறு எந்த சம்மந்தத் திலிருந்தும் கிடைக்காது. நீங்கள் நேரடியாக பாபாவிடமிருந்து சம்மந்தத்தை இணைத்து ஆஸ்திக் கான உரிமை மூன்று காலங்களிலும் அடைகிறீர்கள். இப்பொழுதும் ஆஸ்தி கிடைத்துக் கொண்டி ருக்கிறது அல்லவா. கிடைத்து விட்டதா? மேலும் முக்தி தாமத்திலும் கூட எங்கு இருப்பீர்கள்? அருகாமையில் தான் இருப்பீர்கள் அல்லவா. எனவே இப்பொழுதும் ஆஸ்தி இருக்கிறது, முக்திதாமத்திலும் இருக்கிறது, மேலும் மீண்டும் 21 பிறவிகளுக்கும் ஆஸ்தி கிடைக்கிறது. எனவே மூன்று காலங்களிலும் அதிகாரி ஆகிவிட்டீர்கள் அல்லவா! உலகத்தினர் சொல்கிறார்கள் அல்லவா – உங்கள் அனைவருடைய ஜீவன் முக்தியை விட எங்களுடைய முக்தி நன்றாக இருக்கிறது, நீங்கள் சக்கரத்தில் (நாடக சுழற்சியில்) வருகிறீர்கள், நாங்களோ சக்கரத்திலிருந்து விடுபட்டு இருக்கிறோம். முக்தியின் ஆஸ்தி எங்களுக்கும் கிடைக்கிறது, ஆனால் எங்களுக்கு முக்திக்கு பிறகு ஜீவன் முக்தியின் ஆஸ்தியையும் அடைகிறோம் என்று பெருமையாக நீங்கள் சொல்ல முடியும். இரட்டிப்பு (ஆஸ்தி) கிடைக்கிறதல்லவா. முக்தி தாமத்தை கடந்து செல்ல வேண்டும் அல்லவா. என்வே நேரடியாக தொடர்பு இருக்கும் காரணத்தினால் தற்சமயம் மற்றும் மரணத்திற்கு பிறகும் மீண்டும் புது உடலை பெற்று மூன்று காலங்களிலும் ஆஸ்திக்கு அதிகாரி ஆகிறீர்கள். அந்தளவு நஷா இருக்கிறதா?
இன்று ஹோலியை கொண்டாடி கொண்டிருக்கிறீர்கள் அல்லவா. ஹோலி என்றால் எரிக்கவும் படுகிறது, கொண்டாடவும் படுகிறது. முதலில் எரிக்கப்படுகிறது. பிறகு கொண்டாடப்படுகிறது. ஹோலி கொண்டாடுவது என்றால் சிலவற்றை எரிக்க வேண்டும் மற்றும் சிலவற்றை கொண்டாட வேண்டும். எரிக்காமல் கொண்டாட முடியாது. எனவே திட எண்ணம் என்ற அக்னி மூலம் முதலில் தனது பலவீனங்களை எரிக்க வேண்டும், அப்பொழுது தான் கொண்டாடுவதற்கான ஆனந்தத்தை அனுபவம் செய்ய முடியும். ஒருவேளை எரிக்க வில்லையென்றால் கொண்டாடு வதற்கான ஆனந்தத் தின் அனுபவம் சதா காலத்திற்கு இருக்காது. ஹோலி என்ற வார்த்தையின் பொருள் நினைவில் இருந்தால் எரிக்கவும் செய்கிறீர்கள், ஆனால் சதா காலத்திற்கு இருக்காது. ஹோலி என்ற வார்த்தையில் எரிக்கவும் செய்ய வேண்டும், கொண்டாடவும் செய்ய வேண்டும். இரண்டு விதமான பொருட்கள் இருக்கிறது. ஹோலி என்ற வார்த்தை உறுதியாக இருக்கிற தல்லவா? எனவே ஹோலி என்றால் ஹோ-லி, நடந்தது நடந்து முடிந்து விட்டது. எந்த விஷயம் முடிந்து விட்டதோ, அதைத் தான் ஹோ-லி (கடந்து விட்டது). எது நடந்ததோ, அது தான் ஹோ-லி. எனவே நடந்து முடிந்ததை கடந்து செல்வது என்றால் ஹோலியை எரிப்பதாகும். மேலும் பாபாவிற்கு முன்னால் வரும் பொழுது சொல்கிறீர்கள், நான் பாபாவினுடையவன் ஆகி விட்டேன். எனவே கொண்டாடுவது என்றால் ஆகிவிட்டேன். நடந்தது நடந்து விட்டது. கடந்தவற்றை மறந்துவிடுவது என்பது தான் எரிப்பதாகும். ஒரே ஒரு ஹோலி என்ற வார்த்தையில் எரிப்பது மற்றும் கொண்டாடுவது இருக்கிறது. நான் பாபா வுடையவன் ஆகிவிட்டேன் என்று பாடுகிறோம் அல்லவா. உறுதியாக இருக்கிறீர்கள் அல்லவா. ஏனெனில் பாப்தாதா அனைவருடைய தபஸ்யா வின் கணக்கு களையும் பார்த்தார். ஒருவேளை தபஸ்யா எப்பொழுதாவது குறைந்துவிடுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன? நடந்து முடிந்த வற்றை முற்றுப்புள்ளி வைப்பதற்கு பதிலாக கேள்வி குறியை போட்டு விடுகிறோம். மேலும் சிறிய தவறு செய்கிறோம், சிறியது தான் ஆனால் நஷ்டம் மிகப்பெரியதாக இருக்கும். அது என்ன தவறாக இருக்கிறது? எதை மறக்க வேண்டுமோ, அதை நினைவு செய்கிறீர்கள் மேலும் எதை நினைவு செய்ய வேண்டுமோ அதை மறந்து விடுகிறீர்கள். எனவே மறக்க வருகிறதல்லவா? பாபாவை மறக்க விரும்பவில்லை யென்றாலும் மறந்து விடுகிறீர்கள். மேலும் எந்த நேரத்தில் மறக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் என்ன சொல்கிறோம் – மறக்க விரும்புகிறேன், ஆனால் மறக்க முடியவில்லை, அடிக்கடி நினைவில் வந்து விடுகிறது. எனவே நினைவும் வேண்டும், மறக்கவும் வேண்டும் இந்த இரண்டு விஷயங் களும் வருகிறது. ஆனால் எதை நினைவு செய்ய வேண்டும், எதை மறக்க வேண்டும்? எந்த நேரத்தில் மறக்க வேண்டும், அந்த சமயத்தில் நினைவிற்கு வந்து விடுகிறது. எந்த நேரத்தில் நினைவு செய்ய வேண்டுமோ, அந்த நேரத்தில் மறந்து விடுகிறது. சின்னஞ்சிறிய தவறு ஏற்பட்டு விடுகிறது அல்லவா? எனவே இதை ஹோ லி (முடித்து) செய்து விடுங்கள். எரித்து விடுங்கள். அம்சத்தையும் முடித்து விடுங்கள். ஞானம் நிறைந்த ஆத்மாவாக இருக்கிறீர்கள் அல்லவா? ஞானம் நிறைந்தவர் என்பதன் பொருள் புரிந்து கொள்பவர். மேலும் நீங்கள் மூன்று காலங் களையும் புரிந்து கொண்டவர்கள். ஆகையால் ஹோலியை கொண்டாடுவது என்றால் இந்த தவறை எரித்து விடுவதாகும். எதை மறக்க வேண்டுமோ அது நொடி பொழுதில் மறந்துவிடும், எதை நினைவு செய்ய வேண்டுமோ, அவையும் நொடியில் நினைவிற்கு வந்துவிடும். புள்ளி வைப் பதற்கு பதிலாக கேள்விகுறி வந்து விடுவது தான் காரணமாக இருக்கிறது. ஏன் என்று யோசிக் கிறோம், அதனால் க்யூ (வரிசை) ஆரம்பமாகிவிடுகிறது. அப்படி இப்படி ஏன் என்ன போன்ற வரிசை ஆரம்பமாகி விடுகிறது. கேள்விக்குறி போடுவதினால் மட்டும் தான். மேலும் புள்ளி வைத்து விட்டால் என்ன ஆகும்? நீங்களும் புள்ளியாக இருக்கிறீர்கள், பாபாவும் புள்ளியாக இருக்கிறார், மேலும் வீணான வற்றிற்கும் புள்ளி, முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள். நிறுத்துவது மட்டும் அல்ல, முற்றுப்புள்ளி வைத்து விடுவது. இதைத் தான் ஹோலி என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த ஹோலியினால் எப்பொழுதுமே பாபாவின் தொடர்பின் வண்ணமயமான ஹோலி, சந்திப் பினுடைய ஹோலி கொண்டாடிக் கொண்டே இருங்கள். அனைவரிடம் உறுதியான வண்ணம் என்ன இருக்கிறது? இந்த ஸ்தூலமான வண்ணம் மிகவும் உறுதியாக இருந்தாலும், ஆனால் அனைத்தையும் விட உயர்ந்த மற்றும் அனைத்தையும் விட திடமான வண்ணம் பாபாவின் தொடர்பின் வண்ணமாகும். எனவே இந்த வன்ணத்தை கொண்டாடுங்கள். கோப கோபியர்களின் ஹோலி கொண்டாடுவதற்கான நினைவு சின்னமாக நீங்கள் தான் இருக்கிறீர்கள். அந்த சித்திரத்தில் (ஒவியத்தில்) என்ன காட்டப்படுகிறது? பாபா மற்றும் நீங்கள் இருவரும் இணைந்து ஹோலியை விளையாடு (கொண்டாடு) கிறீர்கள். ஒவ்வொரு கோபர்களுடனும், கோபியர் களுடனும் கோபி வல்லபரை காட்டப்படுகிறது. எனவே இந்த தொடர்பு ஏற்பட்டுவிட்டது அல்லவா. துணை மற்றும் தொடர்பு அழிவற்ற ஹோலியாக இருக்கிறது, பாபாவின் தொடர்பினுடைய வண்ணத்தின் நினைவு சின்னமாக ஹோலி நடனத்தின் கூடவே வண்ணமயமாக காட்டப்படுகிறது. எனவே ஹோலி கொண்டாட வருகிறதல்லவா? இப்படி நடந்து விட்டது, என்ன செய்வது, விரும்ப வில்லை, ஆனால் நடந்துவிட்டது. இன்றிலிருந்து இது போன்ற ஹோலியை எரியுங்கள். முடித்துவி டுங்கள். மாஸ்டர் சர்வசக்திவான் ஒருபொழுதும் எண்ணத்திலும் கூட இப்படி யோசிக்க முடியாது. நல்லது.
இரட்டை அயல்நாட்டவரை சேர்ந்தவர்கள் நன்றாக சேவையின் வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டேயிருக் கிறார்கள். பாபாவிடமும் அன்பு இருக்கிறது, அதனால் சேவையிலும் கூட அன்பு இருக்கிறது. சேவை என்றால் சுயத்தின் கூடவே அனைத்து ஆத்மாக்களுக்கும் சேவை செய்வதாகும். முதலாவதாக சுயம், ஏனெனில் தனது மனநிலையை நன்றாக வைத்துக் கொள்பவர் களால் தான் மற்ற ஆத்மாக்களையும் பிரச்சனையிலிருந்தும் விடுவிக்க முடியும். சேவையின் வெற்றியே – சுயத்திலும் அனைத்திலும் சமநிலையான மனநிலையில் இருப்பதாகும். நான் சேவையில் மிகவும் பிஸியாக இருந்த காரணத்தினால் சுயத்தின் மனநிலையின் சார்ட் சற்று தளர்ச்சியடைந்து விட்டது என்று ஒருபொழுதும் சொல்லக்கூடாது. ஒரு பக்கம் சம்பாதிப்பது, மறுபக்கம் இழப்பது என்றால் மீதம் என்ன தான் இருக்கும்? ஆகையால் எப்படி பாபாவும் நீங்களும் இணைந்து இருக்கிறீர்கள், உடலும் ஆத்மாவும் இணைந்து இருக்கிறது, உங்களுடைய வருங்கால விஷ்ணு சொரூபமும் இணைந்து தான் இருக்கிறது. அதுபோல சுயத்தின் சேவை, மற்ற அனைத்து சேவைகளும் இணைந்தே இருக்க வேண்டும். இதை பிரித்து வைக்காதீர்கள், இல்லையென்றால் முயற்சி அதிக மாகவும் வெற்றி குறைவாக கிடைக்கிறது. பாதியளவு ஆகிவிட்டது அல்லவா. இந்த குழுவின் சார்ட்டிலும் இரண்டாவது நம்பராக இருக்கிறது. முதலாவதே குறைவாக இருக்கிறது என்றால் நான்காவது, ஐந்தாவதும் குறைவாக தான் இருக்கும், இரண்டாவது வந்து விட்டீர்கள் என்றால் இரண்டிற்கு பிறகு முன்னால் என்ன இருக்கிறது? முதல் எண் அல்லவா. இரண்டாவது வரை அடி எடுத்து வைத்திருக்கிறீர்கள், மற்றப்படி இப்பொழுது ஒரே ஒரு அடியை முதலில் வைக்க வேண்டும். அதற்கான விதி – இணைந்த சொரூபத்தில் இருந்து சேவை செய்வ தாகும். குழந்தைகள் சேவைக்கான திட்டங்களை உருவாக்குகிறீர்கள் அல்லவா. இப்பொழுது நேரத்திற்கு தகுந்தப்படி என்னவெல்லாம் சேவை செய்தீர்களோ, அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று பாப்தாதா ஏற்கனவே இசாரா (சைகை) கொடுத்திருக்கிறார். இதனால் பாபாவிற்கு தன்னை வெளிப்படுத்தினீர்கள், வாயுமண்டலம் மற்றும் வைப்ரேஷன் மாற்றம் அடையும். அன்பு மற்றும் சகயோகி ஆத்மாக்கள் நாலா பக்கத்திலும் அதிகப்படியான எண்ணிக்கை நெருக்கத்தில் வரும். ஒன்றின் மூலம் அனைத்து விதமான சேவை செய்யும் படி செய்யுங்கள். முழு உலகத்திற்கும் சந்தேஷ் (செய்தியை) கொடுக்க வேண்டும். ஒவ்வொரு வருக்கும் செய்தியை கொடுக்கிறார், யாரெல்லாம் இராஜ்யத்தில் வரக்கூடிய ஆத்மாக்களாக இருக்கிறார் களோ, அவர்கள் தனது பாக்கியத்தை உருவாக்கி முன்னேறிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது இராஜ்ய அதிகாரி குழந்தைகளை விட அதிகமான எண்ணிகையில் செய்தியை கொடுக்க வேண்டும். இராஜ்ய குடும்பத்தில் வரக்கூடியவர்கள் மற்றும் இராஜ்ய சிம்மாசனத்தில் அமரக் கூடியவர்கள் நன்றாக உருவாகிறார்கள். இராஜ்ய அதிகாரிகளாக நீங்கள் தான் மாறுகிறீர்கள் அல்லவா. நீங்கள் ஆவீர்களா அல்லது மற்றவர்களை மாற்று வீர்களா? மற்றவர்களை இராஜ்ய அதிகாரியாக ஆக்கு வீர்கள் மேலும் நீங்கள் என்ன ஆவீர்கள்? நல்லது.
கல்பத்திற்கு முன்பு போலவே ஆஸ்தியை பெறுவதற்காக புதுப்புது குழந்தைகளும் வந்து சேர்ந்துள்ளனர், ஆகையால் பாப்தாதா வரவேற்கிறார். மேலும் புது பிறந்த நாளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
நாலாபக்கத்திலுமுள்ள அனைத்து இணைந்த சொரூபத்திலுள்ள நிலைத்திருக்கக்கூடிய, சதா இணைந்த சேவையில் களைப்பற்ற சேவைக்கு நிமித்தமாக மாற்றக்கூடிய, சதா கடந்தது கடந்தாக செய்து பாபாவின் தொடர்பின் வண்ணத்தில் ஹோலி கொண்டாடக்கூடிய ஹோலிஹன்ஸ் (புனித அன்னபறவை) ஆத்மாக்களுக்கு, சதா மூன்று காலங்களின் ஆஸ்தியின் குஷியில் இருக்கக்கூடிய, சதா சாட்சியாளராக இருந்து இயற்கை மற்றும் மாயாவின் விளையாட்டை பார்க்க கூடிய – அப்படிப்பட்ட சதா வெற்றியாளர், சதா பறக்கும் கலையில் இருக்கக்கூடிய, சதா ஃபரிஸ்தா சொருபத்தை நெருக்கத்தில் அனுபவம் செய்யக்கூடிய, சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்,.
மகான் ஆத்மா ஆவதற்கான ஆதாரம் – தூய்மையின் விரதத்தை உறுதிமொழி வடிவத்தில் தாரணை செய்ய வேண்டும். ஏதாவது உறுதியான எண்ணங்கள் என்ற விரதம் எடுப்பது என்றால் தனது உள்ளுணர்வை மாற்றம் செய்வது. உறுதியான விரதம் உள்ளுணர்வை மாற்றிவிடுகிறது. விரதத்தின் பொருள் மனதில் எண்ணங்களை கொண்டு வருவது மற்றும் ஸ்தூலமான முறையில் பத்தியத்துடன் இருப்பது. நீங்கள் அனைவரும் தூய்மையின் விரதத்தை எடுப்பது மற்றும் உள்ளுணர்வை உயர்ந்ததாக மாற்றுவதாகும். அனைத்து ஆத்மாக்களுக்காக ஆத்மா சகோதரன் – சகோதரன் என்ற உள்ளுணர்வை உருவாக்குவதன் மூலம் தான் மகான் ஆத்மா ஆகிறீர்கள்.
வரதானம்:-
மகான் ஆத்மா ஆவதற்கான ஆதாரம் – தூய்மையின் விரதத்தை உறுதிமொழி வடிவத்தில் தாரணை செய்ய வேண்டும். ஏதாவது உறுதியான எண்ணங்கள் என்ற விரதம் எடுப்பது என்றால் தனது உள்ளுணர்வை மாற்றம் செய்வது. உறுதியான விரதம் உள்ளுணர்வை மாற்றிவிடுகிறது. விரதத்தின் பொருள் மனதில் எண்ணங்களை கொண்டு வருவது மற்றும் ஸ்தூலமான முறையில் பத்தியத்துடன் இருப்பது. நீங்கள் அனைவரும் தூய்மையின் விரதத்தை எடுப்பது மற்றும் உள்ளுணர்வை உயர்ந்ததாக மாற்றுவதாகும். அனைத்து ஆத்மாக்களுக்காக ஆத்மா சகோதரன் – சகோதரன் என்ற உள்ளுணர்வை உருவாக்குவதன் மூலம் தான் மகான் ஆத்மா ஆகிறீர்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!