25 November 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
24 November 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! அவகுணங்களை நீக்கி, தூய மனமுள்ளவர் ஆகுங்கள். உண்மை மற்றும் தூய்மையின் குணங்களை தாரணை செய்வீர்களானால் சேவையில் வெற்றி கிடைத்துக் கொண்டே இருக்கும்.
கேள்வி: -
பிராமணக் குழந்தைகளாகிய உங்களது கர்மாதீத் அவஸ்தா (நிலை) எப்போது மற்றும் எப்படி உருவாகும்?
பதில்:-
எப்பொழுது யுத்தத்திற்கான பொருள்கள் முழுமையாகத் தயாராகின்றனவோ அப்போது உங்கள் அனைவருடைய கர்மாதீத் அவஸ்தா வரிசைக்கிரமமாக அமைந்து விடும். இப்போது பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கர்மாதீத் ஆவதற்காகப் பழைய உலகிலிருந்து புத்தியை விலக்கிவிட வேண்டும். சிவபாபா விடமிருந்து 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கின்றது, அவரைத் தவிர வேறு யார் நினைவும் வரக் கூடாது. முழுப் பவித்திரமாகுங்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
முகத்தைப் பார்த்துக் கொள் மனிதா!..
ஓம் சாந்தி.எப்போது எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்குக் கிடைத்து விட்டாரோ, குழந்தைகள் அவரைத் தெரிந்து கொண்டார்களோ, அப்போது ஒவ்வொருவரும் நாம் எவ்வளவு பாவாத்மாவாக இருந்தோம், எவ்வளவு புண்ணிய ஆத்மாவாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்கின்றனர். எந்த அளவுக்கு ஸ்ரீமத் படி நடக்கிறார்களோ அந்த அளவுக்கு நிச்சய மாகத் தந்தையைப் பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு முன் இந்தச் சித்திரங்கள் உள்ளன, மேலும் தில்வாடா கோயிலும் கூட முழுமையான ஞாபகார்த்தமாக உள்ளது. பாடலும் பாடு கின்றனர். தூரதேசத்தில் வசிப்பவர்… இப்போது மாற்றான் தேசத்தில் பதீத் (தூய்மையற்ற) சரீரத்தில் வந்துள்ளார். பாபா தானே சொல்கிறார், இது வேறொரு தேசம். வேறு யாருடைய தேசம்? இராவணனுடையது. நீங்களும் கூட வேறு தேசத்தில் அதாவது இராவண ராஜ்யத்தில் இருக்கிறீர்கள். பாரதவாசிகள் முதலில் இராம ராஜ்யத்தில் இருந்தனர். இச்சமயத்தில் வேறு தேசத்தில் அதாவது இராவண ராஜ்யத்தில் உள்ளனர். சிவபாபாவோ விசார்சாகர் மந்தன் (மனன சிந்தனை) செய்வதில்லை. இந்த பிரம்மா விசார் சாகர் மந்தன் செய்து சொல்லிப் புரிய வைக் கிறார். அதாவது இந்த ஜைன மதத்தினருடைய தில்வாடா கோயில் உள்ளது. யார் சைத்தன்யமாக இருந்துவிட்டுச் சென்றிருக்கிறார்களோ அவர்களின் ஜட ஞாபகார்த்தம் தான் இது. ஆதிதேவர் மற்றும் ஆதி தேவியும் கூட அமர்ந்துள்ளனர். மேலே சொர்க்கம் உள்ளது. இப்போது யார் அவர்களுடைய பக்தர்களாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஞானம் கிடைத்தால் நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது கீழே நிச்சயமாக இராஜயோகத்தின் கல்வியைப் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். மேலேயும் இல்லற மார்க்கம், கீழேயும் இல்லற மார்க்கம். குமாரி கன்யா, அதர் கன்யா வின் (மாதா) சித்திரங்களும் கூட உள்ளன. அதர் குமார் மற்றும் குமார் கூட உள்ளனர். ஆக, இந்தக் கோயிலில் ஆதி தேவ் பிரம்மாவும் அமர்ந்துள்ளார், மேலும் குழந்தைகள் பிரம்மா குமார், பிரம்மா குமாரிகளும் கூட அமர்ந்துள்ளனர். இப்போது நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள், பிரம்மா சரஸ்வதி தான் ராதை கிருஷ்ணராக ஆகின்றனர். பிரம்மாவின் ஆத்மாவினுடைய அநேக ஜென்மங்களின் கடைசி ஜென்மம். இது தந்தை மற்றும் குழந்தைகளின் ஞாபகார்த்தம். ஆயிரம் லட்சம் சித்திரங்களை வைப்பார்கள் என்ப தெல்லாம் இல்லை. மாதிரிக்காகக் கொஞ்சம் சித்திரங்கள் வைக்கப்படுகின்றன. இது ஜடம், ஆனால் நம்முடையது சைத்தன்யம். யார் கல்பத்திற்கு முன் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கினார்களோ அவர்களின் ஞாபகார்த்தம். ஜகத் அம்பா, ஜெகத் பிதா மற்றும் அவர்களின் குழந்தைகள். பெரும்பான்மையாக மாதர்கள் இருக்கிற காரணத்தால் பி.கு. என்று எழுதப் பட்டுள்ளது. கோயிலிலும் குமாரி கன்யாவும் அதர் தேவியும் உள்ளனர். உள்ளே போவீர்களானால் யானைகளின் மேல் ஆண்கள் அமர்ந்திருக்கும் சித்திரங்கள் உள்ளன. ஆக, நீங்கள் அவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியும். யாராவது பெரியவர் களுக்குச் சொல்லிப் புரியவைப்பதன் மூலம் சிறியவர்கள் தாமாகவே புரிந்து கொள்வார்கள். சொல்லிப் புரிய வைப்பவர்களும் புத்திசாலிகளாக இருக்க வேண்டும். நாம் இப்போது தூய மனம் உள்ளவர்களாக ஆகின்றோம். ஆத்மாவுக்குள்ளிருந்த அவகுணங்கள் வெளியேறிக் கொண்டி ருக்கின்றன. உங்களுடைய மம்மா யாருக்கு இதைச் சொல்லிப் புரிய வைத்தாலும் அவர்களுக்கு புத்தியில் நன்கு பதிந்தது. அவரோ குமாரி தான். மம்மாவின் பெயர் முதலில் வருகின்றது. முதலில் இலட்சுமி, பிறகு நாராயணர்.
இப்போது பாபா சொல்கிறார், மம்மாவைப் போல் குண தாரணை செய்யுங்கள். அவ குணங்களை நீக்கிக் கொண்டே செல்லுங்கள். நீக்கவில்லையென்றால் பதவி கீழானதாக ஆகிவிடும். நல்ல குழந்தைகளின் வேலை ஒவ்வொரு விஷயத்தையும் புரிந்து கொள்வது. முதலில் நீங்கள் புத்தி யற்றவர்களாக இருந்தீர்கள். இப்போது பாபா புத்திசாலிகளாக ஆக்குகின்றார். அஞ்ஞானத்தில் குழந்தைகள் கெட்டவர்களாக இருந்தால் தந்தையின் பெயரைக் கெடுத்து விடுகின்றனர். இவரோ எல்லையற்ற தந்தை. பிரம்மா குமார் குமாரிகள் என்று சொல்லிக்கொண்டு பிறகு ஈஸ்வரன்-தந்தையின் பெயரை கெடுத்தால் அவரது நிலை என்னவாகும்? பதவியும் கீழாகும், அனேகருக்கு நஷ்டம் விளைவிக்கும் அத்தகைய செயலை ஏன் செய்ய வெண்டும்? அதனால் பாபா சொல்லிப் புரிய வைத்துள்ளார், தூரதேசத்திலிருந்து வேறொரு தேசத்திற்கு வருகின்றேன். பிறகு இராவண ராஜ்யம் துவாபரத்திலிருந்து தொடங்குகின்றது. பக்தியும் கூட துவாபரயுகத்திலிருந்து தொடங்கு கின்றது. இச்சமயம் அனைவருக்கும் தமோபிரதான், இற்றுப் போய்க் கீழே விழும் நிலை. இது எல்லையற்ற பழைய விருட்சம். எல்லையற்ற ஞானத்தை வேறு யாரும் கொடுக்க முடியாது. எல்லையற்ற சந்நியாசத்தை யாரும் செய்ய வைக்க முடியாது. அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசம் செய்விக்கின்றனர். எல்லையற்ற தந்தை எல்லையற்ற பழைய உலகத்தின் சந்நியாசத்தைச் செய்விக்கின்றார். ஆத்மாக்களுக்குச் சொல்கிறார், ஏ, குழந்தைகளே! இது பழைய உலகம். உங்களுக்கு இப்போது 84 பிறவிகள் முடிந்து விட்டது. மகாபாரத யுத்தம் முன்னாலேயே இருக்கிறது. வினாசம் அவசியம் நடந்தாக வேண்டும். அதனால் எல்லையற்ற தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். ஏ ஆத்மாக்களே! கேட்கிறீர்களா? நாம் ஆத்மாக்கள், பரமாத்மா தந்தை நமக்குக் கற்பிக்கின்றார். எதுவரை இதில் முழு உறுதி ஏற்படவில்லையோ, அதுவரை எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். முதலில் இதில் நம்பிக்கை ஏற்பட வேண்டும், நாம் ஆத்மா அவினாசி (அழிவற்றது) நாம் அசரீரி ஆத்மா சரீரத்தில் வந்து பிரவேசிக்கிறோம். இல்லை யென்றால் மக்கள் தொகை எப்படி விருத்தியடையும்? எப்படி ஆத்மாக்கள் பரந்தாமத்திலிருந்து வந்து சரீரத்தில் பிரவேசமாகின்றனவோ அதுபோல் பரமபிதா பரமாத்மாவும் கூட இந்த சரீரத்தில் பிரவேசமாகி, சொல்கிறார். நீங்கள் என்னுடைய குழந்தைகள். கடலாகிய என்னுடைய குழந்தை கள் நீங்கள் எரிந்து சாம்பலாகி விட்டிருக்கிறீர்கள். உங்களைப் தூய்மையாக்கி வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக. இப்போது நான் வந்திருக்கிறேன், யார் விகாரத்தில் அதிக மாகச் செல்கிறார்களோ, அவர்கள் தாம் (பதீத் பிரஷ்டாச்சாரி) தூய்மையற்ற கீழானவர்கள் எனப்படு கிறார்கள். இந்த முழு உலகமுமே விகாரி. அதனால் நாடக திட்டத்தின் படி இராவணனின் தேசத்தில் வந்திருக்கிறேன். 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட வந்திருந்தேன். ஒவ்வொரு கல்பத்திலும் வருகிறேன், வருவதும் சங்கமயுகத்தில் தான். குழந்தைகளுக்கு முக்தி, ஜீவன் முக்தி தருவதற்காக வருகிறேன். சத்யுகத்தில் ஜீவன்முக்தி உள்ளது. மற்ற அனைவரும் முக்தியில் (பரந்தாமம்) உள்ளனர். இருந்தாலும் இத்தனை ஆத்மாக்களாகிய அனைவரையும் யார் அழைத்துச் செல்வார்? பாபா தான் துக்கத்திலிருந்து விடுவிப்பவர் மற்றும் வழிகாட்டி எனப்படுகின்றார். பாபா தான் வந்து பக்தர்களுக்கு பக்தியின் பலனைக் கொடுக்கின்றார். நீங்கள் தாம் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவர்களாக ஆகிறீர்கள். பாபா வேறு எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை. தில்வாடா கோயிலில் சித்திரங்கள் நிச்சயம் சரியாகவே உள்ளன. குழந்தைகள் யோகத்தில் அமர்ந்துள்ளனர். அவர்களுக்குக் கல்வி போதிப்பவர் யார்? பரமபிதா பரமாத்மாவின் சித்திரமும் உள்ளது. சிவபாபா பிரம்மாவின் மூலம் சத்யுக ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார். இங்கும் கூட சித்திரத்தில் பாருங்கள், விருட்சத்தின் கீழே தபஸ்யா செய்து கொண்டிருக் கின்றனர். பிரம்மா, சரஸ்வதிக்கும் கூட அம்மா ஆகிறார். நீங்களே தாயும் தந்தையும் என்று பாடப்படுகின்றது, நிராகாரை (சரீரமற்ற வரை) எப்படிச் சொல்ல முடியும்? இவருக்குள் அவர் பிரவேசமாகியிருக்கிறார் என்றால் இவர் மாதா ஆகிவிட்டார் இல்லையா? சந்நியாசிகளோ நிவிருத்தி (துறவற) மார்க்கத்தினர். தங்கள் வாயால் சொல்கின்றனர், இவர்கள் என் சிஷ்யர்கள் (என்னைப் பின்பற்றுவோர்). அவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் சிஷ்யர்கள். இங்கோ மாதா பிதா இருவருமே உள்ளனர். அதனால் சொல்கிறார்கள், நீங்கள் தான் தாயும் தந்தையும், உறவினராகவும் இருக்கிறீர்கள். யாருக்குள் பிரவேசமாகி யிருக்கிறாரோ அவரும் கூட படித்துக் கொண்டே இருக்கிறார், ஆக, நண்பனாகவும் ஆகிவிடுகிறார். சிவபாபா சொல்கிறார், நான் பிரம்மா மூலம் தத்தெடுத்துள்ளேன். நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சிவபாபாவுக்குத் தமது சரீரமென்று எதுவும் இல்லை. அங்கே கோயிலில் லிங்கம் வைத்துள்ளனர். தில்வாடாவின் அர்த்தத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதர் குமாரி, குமாரி கன்யாவும் உள்ளனர். கற்றுக் கொடுக்கின்ற சிவபாபாவின் சித்திரமும் உள்ளது. சொர்க்கத்தின் எஜமானர் ஆக்கக்கூடியவர் நிச்சயமாக ஆசிரியராக இருக்க வேண்டும். அங்கே கிருஷ்ணரின் விஷயம் இல்லை. எங்கே பிரம்மா அமர்ந்துள்ளாரோ அங்கே கிருஷ்ணர் எப்படி வருவார்? கிருஷ்ணரின் ஆத்மா தபஸ்யா செய்துகொண்டுள்ளது, சுந்தர் (அழகு) ஆவதற்காக. இப்போது அவர் ஷியாமாக (கருப்பாக) இருக்கிறார். மேலே வைகுண்டத்தின் அழகிய சித்திரங்கள் உள்ளன. பிராமணன், பிராமணிகள் தாம் பிறகு தேவதா ஆவார்கள். உங்களை அதுபோல் ஆக்குபவர் அனைவரிலும் உயர்ந்தவர். ஆக, இந்த தில்வாடா கோயிலும் கூட அனைத்திலும் உயர்ந்தது. சோமநாத் சோமரசத்தை அதாவது ஞான அமிர்தத்தை அருந்தச் செய்கிறார். அதனால் சோமநாதரின் பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டி அவருக்குப் பூஜை செய்கின்றனர்.
குழந்தைகளாகிய நீங்கள் ஞானத்தை அனைவருக்குமே தான் கொடுக்கின்றீர்கள். ஆனால் அநேகர் நினைக் கின்றார்கள், கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்து கொண்டு பவித்திரமாக இருப்பது என்பது மிகப்பெரிய ஒரு சக்தி. ஆனால் இது சர்வசக்திவான் பாபாவின் சக்தி என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. பாருங்கள், பாபா சொர்க்கத்தைப் பற்றி எவ்வளவு கவனப்படுத்துகிறார்! குழந்தை களே! பவித்திரமாவீர்களானால் சொர்க்கத்தின் எஜமான் ஆகிவிடுவீர்கள். மாயாவின் புயல்களோ நிறைய வரத்தான் செய்யும். பாபா சொல்கிறார், குழந்தைகளே நீங்கள் எவ்வளவு முதல் தரமானவர்களாக இருந்தீர்கள்! உங்களுக்கு என்னவாயிற்று? இச்சமயம் பிராமணர்களின் மாலை யில் வரிசைக் கிரமமாக யார் யார் இருக்கிறார்கள் என்பதை பாபா சட்டென்று சொல்லி விடுவார். ஆனால் அனைவரும் நிலையாக இருக்க மாட்டார்கள். வருமானத்தில் கிரகங்கள் அமர்கின்றன அல்லவா? யார் மீதாவது இராகு திசை அமர்ந்தால் பிறகு விட்டு விட்டுப் பழைய உலகத்திற்குப் போய்விடுகிறார்கள். என்னால் முயற்சி செய்ய முடியவில்லை எனச் சொல்லி விடுகிறார்கள். பாபாவை அவர்களால் நினைக்க முடிவதில்லை. இல்லை எனச் சொல்வதன் மூலம் நாஸ்திகர் ஆகிவிடுகிறார்கள். கிரகங்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. மாயாவின் புயல் வருவதால் மந்த நிலை ஆகிவிடுகின்றனர். கைவிட்டுப் போய் விட்டால் ஷியாம் (கருப்பு) ஆகிவிட்டனர் எனப் புரிந்து கொள்வர். இங்கே வருகின்றனர் சுந்தர் (அழகாக) ஆவதற்காக. பிராமண குலத்தவரான நீங்கள் ஷியாமிலிருந்து சுந்தர் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே மிகப் பெரும் வருமானம் உள்ளது. குழந்தை களுக்குத் தெரியும் மம்மா பாபா, இலட்சுமிலிநாராயணர் ஆவார்கள். குழந்தை கள் சொல்கிறார்கள், பாபா, நாங்களும் உங்களைப் போல் புருஷார்த்தம் செய்து சிம்மாசனத்தில் அமரத் தகுதி யுள்ளவர்களாக ஆவோம். வாரிசுகளாக ஆவோம். ஆனால் பிறகும் கூட கிரகச்சாரம் பிடித்து விடுகின்றது. நடத்தையும் நல்லதாக இருக்க வேண்டும். உங்களுடைய வேலையே வீடு வீடாக செய்தியைக் கொண்டு சேர்ப்பது அதாவது சிவபாபாவை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் வினாசமாகி விடும். வினாசம் முன்னாலேயே இருக்கிறது.. நீங்கள் அழைப்புக் கொடுத்துக் கொண்டே இருங்கள். உங்களுக்கு நாள்தோறும் விருத்தி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சென்டர்கள் திறக்கப் பட்டுக் கொண்டே இருக்கும். இவ்வளவு பெரிய இந்தக் கட்டடமும் கூடச் சிறியதாக ஆகிவிடும். இன்னும் போகப்போக எத்தனை கட்டடங்கள் வேண்டும்! டிராமாவில் வரப்போகிறவர்களுக்கும் கூட ஏற்பாடுகள் அவசியம் தேவை. குழந்தை கள் தங்களுக்காகவே அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றனர். ஆக, குழந்தைகளுக்கு எல்லையற்ற குஷி இருக்க வேண்டும். ஆனால் மாயா அடிக்கடி புத்தியோகத்தை விடுபடுமாறு செய்துவிடுகின்றது. இப்போது மாலை உருவாக முடியாது.. இறுதியில் ருத்ரமாலை உருவாகும். பிறகு விஷ்ணுவின் மாலை உருவாகிவிடும். பாபா எவ்வளவு நன்றாகச் சொல்லிப் புரிய வைக்கிறார்! தில்வாடா கோயில் அல்லது அம்பாளின் கோயிலின் முன்பு தங்களின் சென்டர் இருக்க வேண்டும். அங்கே அனைவருக்கும் புரியவைத்தால் இப்போது இவர்கள் ஞான ஞானேஸ்வரி. அங்கும் கூடக் கூட்டம் அதிகமாகக் கூடிவிடும். நீங்கள் சேவையை மட்டும் செய்யுங்கள். பைசா தானாகவே வந்துவிடும். டிராமாவில் ஏற்கனவே விதிக்கப் பட்டுள்ளது. நீங்கள் 10 சென்டர்களைத் திறந்து வையுங்கள். பாபா வாடிக்கையாளர்களைக் கொண்டு வருவார். ஆனால் சென்டரையே திறந்து வைக்க முடிவ தில்லை. கல்கத்தா போன்ற நகரங்களிலோ நிறைய சென்டர்களைத் திறந்து வைக்க வேண்டும். குழந்தைகள் தைரியம் வைத்தால் பாபா உதவி செய்வார். யாருக்காவது தூண்டுதல் ஏற்படுத்து வார். சேவையை நீங்கள் செய்தாக வேண்டும். பல ரூபதாரியின் குழந்தைகள் நீங்களும் பல ரூபங்களை தாரணை செய்து இந்த சேவையைச் செய்ய முடியும். எங்கு வேண்டுமானாலும் சென்று அநேகருக்கு நன்மை செய்ய முடியும். ஜைனர்களுக்கும் கூட சேவை செய்ய வேண்டும். மிக நல்ல பெரிய பெரிய ஜைனர்கள் உள்ளனர். ஆனால் அதுபோல் சேவை செய்கிற அளவுக்கு குழந்தைகளிடம் விசால புத்தி இல்லை, கொஞ்சம் தேக அபிமானம் இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. பாபாவின் குழந்தையாக ஆகிவிட்டபின் மாயாவின் வசமாக ஆகக் கூடாது. கர்மாதீத் ஆவதற்கான புருஷார்த்தம் செய்ய வேண்டும். பாபாவை மறந்து நாஸ்திகர் ஆகக் கூடாது.
2. புத்தி மூலம் எல்லையற்ற சந்நியாசம் செய்ய வேண்டும். எல்லையற்ற குஷியில் இருந்து கொண்டு, விசால புத்தியுள்ளவர் ஆகி, சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:-
எந்த குழந்தை தூரத்தில் அமர்ந்திருந்தாலும் சதா தந்தையின் மன நெருக்கத்தில் இருக்கிறார் களோ, அவர்களுக்கு உதவிக்கான அதிகாரம் பிராப்தியாக கிடைக்கிறது. மேலும் கடைசி வரை உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும். ஆகையால் இந்த அதிகாரத்தின் நினைவில் ஒருபோதும் பலவீனமாக ஆகாதீர்கள், மனம் உடைந்து விடாதீர்கள், முயற்சியில் சாதாரண முயற்சியாளராக ஆகிவிடாதீர்கள். தந்தை இணைந்த ரூபத்தில் இருக்கின்றார். ஆகையால் சதா ஊக்கம்-உற்சாகத்தின் மூலம் தீவிர முயற்சியாளர் ஆகி முன்னேறிக் கொண்டே இருங்கள். பலவீனம் அல்லது உடைந்த மனதை தந்தையிடம் அர்ப்பணித்து விடுங்கள், தன்னிடம் ஊக்கம்-உற்சாகத்தை மட்டுமே வைத்துக் கொள்ளுங்கள்.
சுலோகன்:-
மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியம்
சதோகுணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற இம்மூன்று வார்த்தைகளை கூறு கின்றோம். இவைகளை சரியாகப் புரிந்து கொள்வது அவசியம் ஆகும். மனிதர்கள் நினைக் கின்றார், இம்மூன்று குணங்களும் சேர்ந்தே இருப்பதில்லை என்று, ஆனால் விவேகம் (அறிவு) என்ன கூறுகிறது லி இம்மூன்று குணங்களும் சேர்ந்தே வருகின்றனவா? அல்லது மூன்று குணங்களின் பார்ட் (பாகம்) தனித் தனியான யுகத்தில் நடக்கின்றதா? விவேகமோ அவ்வாறு தான் கூறுகிறது, அதாவது இம்மூன்று குணங்களில் சேர்ந்தே இருப்பதில்லை என்று. எப்பொழுது சத்யுகம் இருக்கிறதோ, அப்போது சதோகுணம் இழுக்கிறது, துவாபர யுகத்தில் ரஜோ குணம் இருக்கிறது, மற்றும் கலியுகத்திலோ தமோகுணம் உள்ளது. எப்போது சதோ இருக்கிறதோ, அப்போது தமோ, ரஜோ இல்லை, எப்போது ரஜோ இருக்கிறதோ, அப்போது தமோ, இல்லை, இம்மூன்று குணங்களும் சேர்ந்தே வருகின்றன் என்று தான் மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்விசயத்தைச் சொல்வது முழுவதும் தவறாகும். எப்போது மனிதர்கள் உண்மை பேசுகின்றனரோ, பாவ காரியங்கள் செய்கின்றனரோ அப்போது அவர்கள் தமோகுணி ஆகின்றனர் என அவர்கள் நினைக் கின்றனர். ஆனால் விவேகம் கூறுகிறது லி எப்போது நாம் சதோகுணம் என்பதன் பொருள் முழுமையான சுகம் அதாவது முழு உலகமும் சதோகுணி ஆகும். மற்றபடி அவ்வாறு கூற மாட்டோம். யார் உண்மை பேசு கின்றனரோ, அவர்கள் சதோகுணி, யார் பொய் பேசுகின்றரோ, அவர்கள் தமோகுணி, அவ்வாறு தான் உலகத்தில் வழக்கம் இருந்து வருகிறது. எப்பொழுது நாம் சத்யுகம் என்று செல்கிறோமோ, அதற்குப் பொருள் முழு உலகிலும் சதோகுண, சதோபிரதானம் வேண்டும் என்பதாகும், ஆம், ஏதோ சமயம் அப்படிப்பட்ட சத்யுகம் இருந்தது, அங்கு முழு உலகமும் சதோ குணியாக இருந்தது. இப்போது அந்த சத்யுகம் இல்லை, இப்போதோ கலியுக உலகம் அதாவது முழு உலகின் மீதும் தமோ பிரதானத்தின் இராஜ்ஜியம் உள்ளது. இந்த தமோகுணி சமயத்தில் சதோ குணம் எங்கிருந்து வந்தது! இப்போது காரிருள், இதனை பிரம்மாவின் இரவு என்று கூறுகிறோம், பிரம்மாவின் பகல் சத்யுகம் மற்றும் பிரம்மாவின் இரவு கலியுகம், எனவே நாம் இரண்டையும் ஒன்று சேர்க்க முடியாது.
2. இந்த கலியுக உலகத்தில் எந்த சாரமும் இல்லை, இது சாரமற்றதாகும்.
இந்தக் கலியுக உலகத்தை சாரமற்ற உலகம் என்று ஏன் கூறுகின்றனர்? எனெனில் இந்த உலகத்தில் எந்த சாரமும் இல்லை என்றால் எந்தப் பொருளிலும் அந்த சக்தி இல்லை அதாவது சுகம், சாந்தி தூய்மை இல்லை. இந்த உலகில் ஏதோ சமயத்தில் சுகம், சாந்தி, தூய்மை இருந்தது என்று அர்த்தம். இப்போது அந்த சக்தி இல்லை, ஏனெனில் இவ்வுலகில் 5 பூதங்களில் பிரவேசம் உள்ளது. எனவே தான் இந்த உலகினை பயக்கடல் அல்லது கர்ம பந்தனக் கடல் என்று கூறுகிறோம். அதனால் தான் மனிதர்கள் துக்கமடைந்து பரமாத்மாவை அழைத்துக் கொண்டே இருக்கின்றனர், பரமாத்மா எங்களை உலக வாழ்க்கை என்ற கடலிலிருந்து அக்கரை கொண்டு செல்லுங்கள் என்றால் அவசியம் ஏதோ அச்ச மற்ற அதாவது பயமற்ற உலகமும் இருக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது, அதனால் இந்த உலகினை பாவக்கடல் என்கிறோம். இதைக் கடந்து, புண்ணிய ஆத்மாக்களின் உலகத்திற்குச் செல்ல விரும்புகிறோம். எனவே உலகங்கள் இரண்டு, ஒன்று சத்யுக சாரமுள்ள உலகம், மற்றொன்று, கலியுக சாரமற்ற உலகம் இரண்டு உலகங்களும் இந்த பூமியில் தான் இருக்கின்றன, நல்லது ஒம்சாந்தி
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!