20 January 2023 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
19 January 2023
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் அமைதியை ஸ்தாபனை செய்ய (படைக்க) நிமித்தமானவர்கள் (கருவி), ஆகையினால் மிக-மிக அமைதியாக இருக்க வேண்டும், நாம் பாபாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தங்களுக்குள் சகோதர-சகோதரிகள், என்பது புத்தியில் இருக்க வேண்டும்"
கேள்வி: -
முழுமையான சமர்ப்பணம் என்று எதைச் சொல்ல முடியும், அதனுடைய அடையாளம் என்ன?
பதில்:-
யாருடைய புத்தியில் நாம் ஈஸ்வரிய தாய்-தந்தையினரின் வளர்ப்பில் இருக் கின்றோம் என்பது புத்தியில் இருக்கிறதோ, அவர்கள் தான் முழுமையாக அர்ப்பணித்தவர்கள் ஆவர். பாபா இவையனைத்தும் உங்களுடையது, நீங்கள் எங்களை வளர்க்கின்றீர்கள். சிலர் வேலை செய்யலாம், ஆனால் புத்தியின் மூலம் இவையனைத்தும் பாபாவிற்காக என்று புரிந்து கொள்வார்கள். பாபாவிற்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார்கள், அதன் மூலம் இவ்வளவு பெரிய யக்ஞத்தின் பணிகள் நடக்கிறது, அனைவருடைய பாலனையும் (வளர்ப்பு) நடக்கிறது ……. அது போன்ற குழந்தைகளும் கூட அர்ப்பண புத்தியுடையவர்கள். கூடவே உயர்ந்த பதவி அடைவதற்காக கற்க வேண்டும் மேலும் கற்பிக்கவும் வேண்டும். சரீர நிர்வாகத்திற்கு கர்மம் செய்து கொண்டே எல்லையற்ற தாய்-தந்தையை ஒவ்வொரு மூச்சிலும் நினைவு செய்ய வேண்டும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
ஓம் நமோ சிவாய …..
ஓம் சாந்தி! இந்த பாடல் மகிமைக்குரிய பாடலாகும். உண்மையில் மகிமை அனைத்தும் உயர்ந்ததிலும் உயர்ந்த பரமாத்மாவினுடையதாகும், அவரைத் தான் குழந்தைகள் தெரிந்துள் ளார்கள், மேலும் குழந்தைகüன் மூலம் முழு உலகமும் அவர் தான் நம்முடைய தாயும்-தந்தையும் என்று தெரிந்து கொள்கிறது. இப்போது நீங்கள் தாய்-தந்தையரோடு குடும்பத்தில் அமர்ந்துள்ளீர் கள். ஸ்ரீகிருஷ்ணரை தாய்-தந்தை என்று சொல்ல முடியாது. அவரோடு ராதையும் இருக்கலாம், ஆனாலும் தாய்-தந்தை என்று சொல்ல முடியாது, ஏனென்றால் அவர்கள் இளவரசன்-இளவரசி ஆவார்கள். சாஸ்திரங்கüல் இந்த தவறு இருக்கிறது. இப்போது எல்லை யற்ற தந்தை உங்களுக்கு அனைத்து சாஸ்திரங்கüன் சாரத்தையும் கூறுகின்றார். இந்த சமயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் மட்டும் முன்னால் அமர்ந்திருக்கலாம், சில குழந்தைகள் தூரத்தில் இருக்கலாம், ஆனால் அவர்களும் கூட கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். தாய்-தந்தையர் நமக்கு சிருஷ்டியின் (படைப்பின்) முதல்-இடை-கடைசியின் இரகசியத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் எப்போதும் சுகமுடையவர்களாக இருப்பதற்கான வழியை அல்லது யுக்தியை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், என்பதை தெரிந்துள்ளார்கள். இது அப்படியே வீட்டைப் போன்றதாகும். சில குழந்தைகள் இங்கே இருக்கிறார்கள், நிறைய குழந்தைகள் வெüயே இருக்கிறார்கள். இது பிரம்மாவின் கமல வாயின் மூலம் வந்த புதிய படைப்பாகும். அது பழைய படைப்பாகிவிட்டது. பாபா நம்மை எப்போதும் சுகமுடையவர் களாக ஆக்குவதற்கு வந்திருக்கிறார் என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். லௌகீக தாய்-தந்தையர்கள் கூட குழந்தைகளை வளர்த்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கே எல்லையற்ற தந்தை நமக்கு படிப்பும் சொல்லித் தருகின்றார், நம்மை வளர்க்கவும் செய் கின்றார். குழந்தைகளாகிய உங்களுக்கு ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. தாய்- தந்தையும் இவர்கள் நம்முடைய குழந்தைகள், என்று புரிந்துள்ளனர். லௌகீக குடும்பம் என்று இருந்தால் 10-15 குழந்தைகள் இருப்பார்கள், 2-3 திருமணங்கள் செய்திருப்பார்கள். இங்கேயோ அனைவரும் பாபாவின் குழந்தைகள் அமர்ந்திருக்கிறார்கள். எவ்வளவு குழந்தை கள் பிறப்பிக்க வேண்டுமோ, இப்போதே பிரம்மாவின் கமல வாயின் மூலம் பிறப்பிக்க வேண்டும். கடைசியில் குழந்தைகள் பிறப்பிக்கப்படக் கூடாது. அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். இவர் ஒருவர் தான் நிமித்தமாக தத்தெடுக்கப்பட்ட தாய் ஆவார். இது மிகவும் அதிசயமான விசயமாகும். நம்முடைய தந்தை ஏழை என்று கண்டிப்பாக ஏழையின் குழந்தை கள் தான் புரிந்து கொள்ள முடியும். செல்வந்தரின் குழந்தைகள், நம்முடைய தந்தை செல்வந்தர் என்று புரிந்து கொள்வர். அதுபோல் நிறைய தாய்-தந்தையர்கள் இருக்கிறார்கள். இவர்களோ முழு உலகத்திற்கும் ஒரே தாய்-தந்தையர் ஆவார்கள். நாம் அவர்களுடைய வாயின் மூலம் தத்தெடுக்கப் பட்டிருக் கின்றோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இவர்கள் நம்முடைய பரலௌகீக தாய்-தந்தையர் ஆவர். இவர் வருவதே பழைய உலகத்தில். மனிதர்கள் அனைவரும் மிக-மிக துக்கமுடையவர்களாக இருக்கும் போது தான். நாம் இந்த பரலௌகீக தாய்-தந்தையினரின் மடியில் வந்துள்ளோம் என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நாம் அனைவரும் சகோதர- சகோதரிகளாவோம். நமக்குள் வேறு எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே சகோதர- சகோதரிகள் தங்களுக்குள் மிகவும் இனிமையாக, ராயலாக, அமைதியானவர் களாக, ஞானம் நிறைந்தவர்களாக, மகிழ்ச்சி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கின்றீர்கள் எனும் போது நீங்களும் கூட மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். நாம் பரலௌகீக தந்தையினுடைய தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பது குழந்தைகளுக்கு புத்தியில் இருக்க வேண்டும். பரந்தாமத்திலிருந்து பாபா வந்திருக்கின்றார். அவர் (சிவபாபா) தாத்தா, இவர் (பிரம்மா பாபா) மூத்த சகோதரர் ஆவார், யார் முழுவதும் சமர்ப்பணம் ஆகியுள்ளார்களோ அவர்கள், நாம் ஈஸ்வரிய தாய்- தந்தையினர் மூலம் வளர்க்கப்படுகிறோம் என்று புரிந்து கொள்வார்கள். பாபா இவை யனைத்தும் உங்களுடைய தாகும். நீங்கள் எங்களை வளர்க்கின்றீர்கள். எந்த குழந்தைகள் அர்ப்பணம் ஆகின்றார்களோ அவர்கüன் மூலம் அனைவருடைய வளர்ப்பும் நடக்கிறது. சிலர் வேலை செய்தாலும் கூட, இவையனைத்தும் பாபாவிற்காக என்று புரிந்து கொள்கிறார்கள். ஆகவே பாபாவிற்கும் கூட உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் யக்ஞத் தின் காரியங்கள் எப்படி நடக்கும்? இராஜா இராணியைக் கூட தாய்-தந்தை என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களும் கூட சரீர தாய்- தந்தை ஆகிவிட்டார்கள். இராஜ மாதா என்றும் சொல் கிறார்கள், இராஜ பிதா என்றும் சொல்கிறார்கள். இவர் எல்லையற்ற தந்தையாவார். நாம் தாய்- தந்தையரோடு அமர்ந்திருக்கின்றோம் என்று குழந்தைகள் தெரிந்துள்ளார்கள். நாம் எந்தளவிற்கு கற்கிறோம் மேலும் கற்பிக்கின்றோமோ அந்தளவிற்கு உயர்ந்த பதவி அடைவோம், என்பதை யும் குழந்தை கள் தெரிந்துள்ளார்கள். கூட- கூடவே சரீர நிர்வாகத்திற்காக கர்மமும் செய்ய வேண்டும். இந்த தாதாவும் (பிரம்மா) கூட வயதானவர் ஆவார். சிவபாபாவை ஒருபோதும் வயதானவர் என்றோ இளைஞர் என்றோ சொல்ல முடியாது. அவர் நிராகாரமானவர் ஆவார். ஆத்மாக்களாகிய நம்மை நிராகார தந்தை தத்தெடுத்துள்ளார், என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பிறகு சாகாரத்தில் இந்த பிரம்மா தந்தை ஆவார். நாம் பாபாவை நம்முடைய வராக ஆக்கியுள்ளோம், என்று அகம் ஆத்மா சொல்கிறது. பிறகு கீழே வந்தால், நாம் சகோதர- சகோதரிகள் பிரம்மாவை நம்முடையவராக ஆக்கியுள்ளோம் என்று சொல்வோம். நீங்கள் பிரம்மாவின் மூலம் நம்முடைய பிரம்மாவின் வாய்வம்சாவழியினர் ஆகியுள்ளீர்கள், என்று சிவபாபா கூறுகின்றார். நீங்கள் என்னுடைய குழந்தைகளாக ஆகியுள்ளீர்கள், என்று பிரம்மாவும் கூறுகின்றார். பிராமணர்களாகிய உங்களுடைய புத்தியில் சுவாசம் சுவாசமாக, இவர் நம்முடைய தந்தை, இவர் நம்முடைய மூத்த சகோதரர் என்பதே ஓடிக்கொண்டிருக்கும். தந்தையை விட அதிகம் தாத்தாவை நினைவு செய்கிறார்கள். அந்த மனிதர்கள் தந்தையிடம் சண்டையெல்லாம் போட்டு கூட தாத்தாவின் சொத்துகளை வாங்கி விடுகிறார்கள். நீங்களும் கூட முயற்சி செய்து தந்தையை விட அதிகமாக தாத்தாவிடம் ஆஸ்தி எடுக்க வேண்டும். பாபா கேட்கும்போது அனைவரும் நாராயணனை மணம் புரிவோம் என்று சொல்கிறார்கள். சிலர் புதியவர்கள் வந்தார்கள் என்றால், தூய்மையாக இருக்க முடியவில்லை என்றால் கையை உயர்த்த முடியாது. மாயை மிகவும் பலசா-யாக இருக்கிறது என்று சொல்-விடுகிறார்கள். நாங்கள் நாராயணன் அல்லது லஷ்மியை மணம் புரிவோம், என்று அவர்கள் சொல்லக் கூட முடியாது. பாருங்கள் பாபா நேராக சொல்லும் போது குஷியின் அளவு எவ்வளவு அதிகரிக் கிறது! புத்தியை புத்துணர்வூட்டும்போது போதை அதிகரிக்கிறது. பிறகு சிலருக்கு அந்த போதை நிலையாக இருக்கிறது, சிலருக்கு குறைந்து விடுகிறது. எல்லையற்ற தந்தையை நினைவு செய்ய வேண்டும், 84 பிறவிகளை நினைவு செய்ய வேண்டும் மேலும் சக்கரவர்த்தி இராஜ்யத் தையும் நினைவு செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்ளாதவர்கள் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு நினைவு இருக்காது. பாபா-பாபா என்று சொல்கிறார்கள், ஆனால் உண்மையிலும் உண்மையாக நினைவு செய்வதில்லை. மேலும் லஷ்மி-நாராயணனை மணம் புரியத் தகுதி யில்லாதவர்கள் என்று பாபாவும் புரிந்து கொள்கிறார். நடத்தையே அப்படித்தான் இருக்கிறது. அந்தர்யாமி (உள்ளுக்குள் இருப்பதை தெரிந்து கொள்பவர்) பாபா ஒவ்வொருவருடைய புத்தியை யும் புரிந்து கொள்கிறார். இங்கே சாஸ்திரங்கüன் விஷயம் எதுவும் இல்லை. பாபா வந்து இராஜயோகம் கற்றுக் கொடுத்துள்ளார், அதனுடைய பெயர் தான் கீதை என்று வைக்கப் பட்டுள்ளது. மற்றபடி சிறிய மற்றும் பெரிய தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அவரவருடைய சாஸ்திரங்களை உருவாக்கிக் கொள்கிறார்கள், பிறகு அதைப் படித்துக் கொண்டி ருக்கிறார்கள். பாபா சாஸ்திரம் படிக்கவில்லை. பாபா கூறுகின்றார், குழந்தைகளே! நான் உங்களுக்கு சொர்க்கத்திற்கான வழியைக் கூற வந்திருக்கின்றேன். நீங்கள் எப்படி அசரீரியாக வந்தீர்களோ, அப்படி அசரீரியாகத்தான் செல்ல வேண்டும். தேகம் உட்பட அனைத்து துக்கங்கüன் கர்மபந்தனங்களையும் விட்டு விட வேண்டும், ஏனென்றால் தேகம் கூட துக்கம் தருகிறது. வியாதி இருந்தால் வகுப்பிற்கு வரமுடியாது. ஆகவே இதுவும் கூட தேக பந்தனம் ஆகி விட்டது அல்லவா, இதில் புத்தி மிகவும் முழுமையானதாக வேண்டும். உண்மை யில் பாபா சொர்க்கத்தைப் படைப்பவர் என்ற நிச்சயம் முதலில் வேண்டும். இப்போது இருப்பதோ நரகமாகும். யாராவது இறந்து விட்டால் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார் என்று சொல்கிறார் கள், அப்போது கண்டிப்பாக நரகத்தில் தான் இருந்தார் அல்லவா? ஆனால் இதை நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். ஏனென்றால் உங்களுடைய புத்தியில் சொர்க்கம் இருக்கிறது. உங்களுடைய புத்தியில் நல்ல விதத்தில் பதியட்டும், என்று பாபா தினமும் புதிய-புதிய முறைகüல் புரிய வைக்கின்றார். அவர் நம்முடைய எல்லையற்ற தாய்- தந்தை ஆவார். முதலில் புத்தி ஒரேயடியாக மேலே சென்று விடும். பிறகு பாபா இந்த சமயத்தில் அபுவில் இருப்பார் என்று புத்தி சொல்லும். யாத்திரை செல்கிறார்கள் என்றால் பத்ரிநாத் கோவில் மேலே இருக்கிறது. வழிகாட்டிகள் அழைத்துச் செல்கிறார்கள், அழைத்துச் செல்வதற்கு பத்ரிநாத் அவரே வருவதில்லை. மனிதர்கள் வழிகாட்டிகளாக ஆகிறார்கள். இங்கே சிவபாபா பரந்தாமத்தி-ருந்து அவரே வருகின்றார். வந்து ஹே ஆத்மாக்களே! நீங்கள் இந்த சரீரத்தை விட்டுவிட்டு சிவபுரிக்குச் செல்ல வேண்டும், என்று கூறுகின்றார். எங்கே செல்ல வேண்டுமோ அந்த குறிக்கோள் கண்டிப்பாக நினைவிருக்கும். அந்த பத்ரிநாத் சைதன்யமாக (உணர்வுள்ள வராக) வந்து குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் செல்வது, என்பது நடக்க முடியாது. அவரோ இங்கே வசிக்கக் கூடியவர். இந்த பரமபிதா பரமாத்மா கூறுகின்றார்: நான் பரந்தாமத்தில் வசிக்கக் கூடியவனாக இருக்கின்றேன். உங்களை அழைத்துச் செல்ல வந்திருக் கின்றேன். கிருஷ்ணர் இப்படிச் சொல்ல முடியாது. ருத்ரன் சிவபாபா கூறுகின்றார், இந்த ருத்ர யக்ஞம் படைக்கப் பட்டுள்ளது. கீதையிலும் கூட ருத்ரனுடைய விஷயம் எழுதப்பட்டுள்ளது. என்னை நினைவு செய்யுங்கள் என்று அந்த ஆன்மீகத் தந்தை கூறுகின்றார். பாபா இதுபோல் யுக்தியோடு யாத்திரை கற்றுத்தருகிறார், பிறகு வினாசம் ஏற்படும்போது ஆத்மக்களாகிய நீங்கள் சரீரத்தை விட்டுவிட்டு நேராக பாபாவிடம் சென்று விடுவீர்கள். பிறகு தூய்மையான ஆத்மா விற்கு தூய்மையான சரீரம் வேண்டும். ஆக இந்த பழைய உலகம் வினாசமானால் தான் அது நடக்கும். தேனீக் கூட்டம் போல் பாபாவுடன் அனைவரும் திரும்பிச் சென்று விடுவோம். ஆகையால் தான் அவரைப் படகோட்டி என்றும் சொல்லப்படுகிறது. இந்த விஷக் கடலிலிருந்து அந்த கரைக்கு அழைத்துச் செல்கிறார். கிருஷ்ணரை படகோட்டி என்று சொல்ல முடியாது. பாபா தான் இந்த துக்கமான உலகத்திலிருந்து சுகமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். இதே பாரதம் தான் விஷ்ணுபுரியாக இருந்தது, லஷ்மி- நாராயணனுடைய இராஜ்யம் இருந்தது. இப்போது இராவணபுரியாக இருக்கிறது. இராவணனுடைய படத்தையும் காட்ட வேண்டும். படங்களை நிறைய பயன்படுத்த வேண்டும். எப்படி நம்முடைய ஆத்மா இருக்கிறதோ, அதேபோல் தான் பாபாவுடைய ஆத்மாவும் இருக்கிறது. நாம் முதலில் அஞ்ஞானிகளாக இருந்தோம், அவர் ஞானக்கடலாக இருக்கின்றார், அவ்வளவு தான்! அஞ்ஞான ஆத்மா விற்கு படைப்பவரைப் பற்றியும் படைப்பைப் பற்றியும் தெரியாது என்று சொல்லப்படுகிறது. படைப்பவரின் மூலம் யார் படைப்பவரைப் பற்றியும் படைப்பைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார்களோ அவர்களை ஞானிகள் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு இந்த ஞானம் இங்கே தான் கிடைக்கிறது, சத்யுகத்தில் கிடைப்பதில்லை. அந்த மக்கள் பரமாத்மா உலகத்தின் எஜமானர் என்று சொல்கிறார்கள். மனிதர்கள் அந்த எஜமானரை நினைவு செய்கிறார்கள், ஆனால் உண்மையில் உலகத்தின் அல்லது சிருஷ்டியின் எஜமானர்கள் என்னவோ லஷ்மி- நாராயணன் தான் ஆகிறார்கள். நிராகார சிவபாபா உலகத்தின் எஜமானர் ஆவதில்லை. ஆகவே அவர்கüடம் அந்த எஜமானர் நிராகாரமானவரா அல்லது சாகார மானவரா, என்று கேட்க வேண்டும். நிராகாரமானவர் உலகின் எஜமானர் ஆக முடியாது. அவர் பிரம்மாண்டத்தின் எஜமானர் ஆவார். அவர்தான் வந்து தூய்மையற்ற உலகத்தை தூய்மையாக ஆக்குகிறார். அவர், தானே தூய்மையான உலகத்திற்கு எஜமானர் ஆவதில்லை. தூய்மையான உலகின் எஜமானர்களாக லஷ்மி-நாராயணன் ஆகிறார்கள், அவர்களை எஜமானர் களாக ஆக்குவது பாபா ஆவார். இது மிகவும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். ஆத்மாக் களாகிய நாமும் கூட பிரம்ம தத்துவத்தில் இருக்கும் போது பிரம்மாண்டத்தின் எஜமானர்களாக இருக்கிறோம். இராஜா இராணி எப்படி நாங்கள் பாரதத்தின் எஜமானர்கள் என்று சொல்வார்களோ, அதேபோல் பிரஜைகளும் நாங்கள் எஜமானர்கள் என்று சொல்வார்கள். அவர்களும் அங்கே இருக்கிறார்கள் அல்லவா? அதேபோல் பாபா பிரம்மாண்டத்தின் எஜமான ராக இருக்கின்றார், நாமும் கூட எஜமானர்கள் தான். பிறகு பாபா வந்து புதிய மனித உலகத்தைப் படைக்கின்றார். நான் இதில் இராஜ்ஜியம் செய்வதில்லை, நான் மனிதனாக ஆவதில்லை. நான் இந்த உடலைக் கூட கடனாகத்தான் எடுக்கின்றேன். உங்களை எஜமானர் களாக ஆக்குவதற்கு இராஜயோகம் கற்றுத் தருகின்றேன். நீங்கள் எந்தளவிற்கு முயற்சி செய்வீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த பதவி அடைவீர்கள், முயற்சியில் குறைவு வைக்காதீர்கள். ஆசிரியரோ அனைவருக்கும் கற்பிக்கின்றார். ஒருவேளை தேர்வில் நிறைய பேர் தேர்ச்சி பெற்றால் ஆசிரியருக்கும் மதிப்பு ஏற்படுகிறது. பிறகு அவருக்கு அரசாங்கத்திடமிருந்து பதவி உயர்வு கிடைக்கிறது. இதுவும் கூட அதுபோலாகும். எந்தளவிற்கு நன்றாக படிப்பீர்களோ, அந்தளவிற்கு நல்ல பதவி கிடைக்கும். தாய்-தந்தை கூட குஷியடைவார்கள். தேர்வில் தேர்ச்சி பெற்றால் இனிப்பு வழங்குகிறீர்கள். பிறகு எப்போது தேர்வில் தேர்ச்சி பெறுகிறீர்களோ அப்போது தங்க புஷ்பங்கüன் மழை பொழிகிறது. உங்கள் மீது ஆகாயத்திலிருந்து மலர்கள் விழாது, ஆனால் நீங்கள் ஒரேயடியாக தங்க மாüகைகüன் எஜமானர்களாக ஆகிவிடுகிறீர்கள். இங்கே சிலரை மகிமை செய்வதற்காக, தங்கத்தால் மலர்கள் செய்து அவர்கள் மீது போடுகிறார்கள். தர்பங்காவின் இராஜா மிகவும் செல்வந்தராக இருந்தார், அவருடைய மகன் வெü நாட்டிற்குச் செல்லும்போது விருந்து கொடுத்தார், நிறைய பணம் செலவு செய்தார், அவர் தங்க மலர்கள் செய்து மழையாகப் பொழிய வைத்தார். அதற்கு நிறைய செலவாயிற்று. மிகுந்த பெயர் புகழ் ஏற்பட்டது, பாருங்கள் பாரதவாசிகள் எப்படி பணம் செலவு செய்கிறார்கள், என்று சொன்னார்கள். இங்கு நீங்களே தங்க மாüகையில் சென்று அமரப் போகின்றீர்கள் எனும்போது எவ்வளவு போதை இருக்க வேண்டும். என்னையும் சக்கரத்தையும் மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால், உங்களுடைய துக்கம் போய் விடும், என்று பாபா கூறுகின்றார். எவ்வளவு சகஜமாக இருக்கிறது.
குழந்தைகளாகிய நீங்கள் உணர்வுள்ள விட்டில் பூச்சிகள், பாபா உணர்வுள்ள விளக்காவார். இப்போது நம்முடைய இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். இப்போது உண்மையான பாபா பக்தியின் பலனை கொடுப்பதற்கு வந்திருக்கின்றார். பாபா தான் வந்து எப்படி பிராமணர்கüன் உலகத்தை படைக்கின்றார் என்று அவரே கூறியுள்ளார். நான் கண்டிப்பாக வர வேண்டியுள்ளது. நாம் பிரம்மா குமார, குமாரிகள், என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சிவபாபாவின் பேரப்பிள்ளைகள். இந்த குடும்பம் அதிசயமானதாகும். தேவி-தேவதா தர்மத்தின் நாற்று எப்படி நடப்பட்டுக் கொண்டிருக்கிறது, என்பது கல்ப விருக்ஷ மரத்தில் தெüவாக இருக்கிறது. கீழே நீங்கள் அமர்ந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு சௌபாக்கியசாலிகள். நான் குழந்தைகளாகிய உங்களை இராவணனுடைய சங்கி-யில் இருந்து விடுவிப்பதற்காக வந்துள்ளேன், என்று மிகவும் அன்பான பாபா வந்து புரிய வைக்கின்றார். இராவணன் உங்களை ரோகியாக்கி விட்டான் (வியாதியுள்ளவர்களாக). இப்போது பாபா கூறுகின்றார், என்னை நினைவு செய்யுங்கள், அதாவது சிவபாபாவை நினைவு செய்யுங்கள் இதன் மூலம் உங்களுடைய ஜோதி ஏற்றப்படும், பிறகு நீங்கள் பறப் பதற்குத் தகுதியானவர்களாக ஆகிவிடுவீர்கள். மாயை அனைவருடைய சிறகுகளையும் உடைத்து விட்டது. நல்லது.
இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
(1) புத்தியை எஜமானன் ஆகுவதற்கு தேகத்தில் இருந்து கொண்டே, தேகத்தின் பந்தனத்திலிருந்து (கட்டு) விடுபட்டு இருக்க வேண்டும். அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்ய வேண்டு வியாதி இருக்கக்கூடிய சமயங்கüல் கூட பாபாவின் நினைவில் இருக்க வேண்டும்.
(2) பரலௌகீக தாய்-தந்தையினரின் குழந்தைகளாக ஆகியுள்ளோம், ஆகையினால் மிக-மிக இனிமையாக, இராயலாக, அமைதி நிறைந்தவர்களாக, ஞானம் நிறைந்தவர்களாக மேலும் மகிழ்ச்சி நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். அமைதியாக இருந்து அமைதியை ஸ்தாபிக்க வேண்டும்.
வரதானம்:-
சில குழந்தைகள் அதிகம் ஜாலியாக இருக்கின்றனர், அதையே ரமணீக நிலை என்று நினைக் கின்றனர். இரமணீக குணம் நல்ல குணம் என்று கூறப்படுகிறது. ஆனால் மனிதன், நேரம், குழு, இடம், வாயுமண்டலத்தைப் பொறுத்து ரமணீகம் நல்லதாக இருக்கும். ஒருவேளை இந்த அனைத்து விசயங்களில் ஒன்று சரியில்லை என்றாலும் ரமணீகமும் வீணானவை என்ற வரிசையாகவே கணக்கில் கொள்ளப்படும். இவர் அதிகம் சிரிக்க வைக்கின்றார், ஆனால் அதிகம் பேசுகின்றார் என்ற சான்றிதழ் கிடைக்கும். ஆகையால் சரியான மகிழ்ச்சி என்றால் அதில் ஆன்மீகம் இருக்க வேண்டும். மேலும் அந்த ஆத்மாவிற்கு இலாபம் ஏற்பட வேண்டும், நியமம் என்ற கோட்டிற்குள் வார்த்தைகள் இருக்க வேண்டும், அப்போது தான் மரியாதா புருúˆôத்தம் என்று கூற முடியும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!