1 September 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
31 August 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இப்போது பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளை விடவும் அதிகமான இராயல் தன்மையுடன் (இராஜ கம்பீரத்துடன்) நடக்க வேண்டும், ஏனென்றால் நீங்கள் இப்போது நிராகார மற்றும் சாகார உயர் (ஈஸ்வரிய) குலத்தைச் சேந்தவர்கள் ஆவீர்கள்.
கேள்வி: -
எந்தக் குழந்தைகளின் முகம் மலர்களைப் போல் மலர்ந்திருக்கும்?
பதில்:-
யாருக்கு நாம் தந்தையிடமிருந்து எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை அடைந்து உலகின் எஜமான் ஆகிறோம் என்ற குப்தமான குஷி இருக்குமோ, 2. யார் ஞானம் மற்றும் யோகத்தின் மூலம் சதோபிரதானமாக ஆகிக் கொண்டிருக்கின்றனரோ, ஆத்மா தூய்மை யடைந்து கொண்டி ருக்குமோ அப்படிப்பட்ட குழந்தைகளின் முகம் மலர்களைப் போல் மலர்ந்திருக்கும். ஆத்மா வில் சக்தி வந்து கொண்டே இருக்கும். வாயிலிருந்து ஞானரத்தினங்களை வெளிப்படுத்தி ஞானம்-யோகத்தில் சிறந்தவர்களாக ஆகி விடுவார்கள். புதிய இராஜ்யத்தின் காட்சி தோன்றிக் கொண்டிருக்கும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
இறந்தாலும் உன் மடியில். .
ஓம் சாந்தி. நாம் பாபாவின் கழுத்தின் மாலையாக ஆக வேண்டும் என இனிமையிலும் இனிமையான குழந்தைகள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டனர். இதை யார் சொன்னது? இப்போது உங்களுடைய கழுத்தின் மாலையாகத்தான் ஆக வேண்டும் என ஆத்மா சொன்னது. தேக அபிமானத்தை விட வேண்டும். இப்போது நாம் ருத்ர மாலையில் உருட்டப்படுவோம். திரும்பிச் செல்ல வேண்டும், ஆகையால் வாழ்ந்தபடியே தேக அபிமானத்தை விட வேண்டும். ஆத்மா பரமாத்மாவின் குழந்தையாகும், அவரிடமிருந்துதான் நாம் இப்போது ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு இந்த போதை இருக்க வேண்டும். அப்போது புத்தி சிவபாபாவிடம் சென்று விடும். ஆத்மாக்களாகிய நாம் அவருடைய குழந்தைகள் ஆவோம். இப்போது பிரம்மாவின் மூலம் அவருடைய பேரக் குழந்தைகள் ஆகியிருக்கிறோம். நிராகாரமானவர் (சரீரமற்றவர்) பாபா, சாகாரமானவர் (சரீரமுள்ளவர்) தாதா (பிரம்மா). தந்தை உயர்ந்தவரிலும் உயர்ந்தவர். உயர்ந்த செல்வந்தர்களாக இருக்கும் மனிதர்கள் மிகவும் இராயல் (அரசனுக்குரிய) தன்மை மிக்கவர்களாக இருப்பார்கள். தமது அந்தஸ்தைக் குறித்த போதை இருக்கும். குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளுக்குள் மிகவும் குஷி இருக்க வேண்டும். தந்தை யின் நினைவில் இருப்பதுதான் ஆத்ம அபிமானி நிலையாகும், அதன் மூலம் உங்களுக்கு மிகவும் இலாபம் இருக்கிறது. நாம் ஈஸ்வரிய குழந்தை, பிரம்மாவின் குழந்தையாக இருக் கிறோம் என குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் என்னுடைய குழந்தைகள்தான், இப்போது பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கிறேன் என பாபா சொல்கிறார். நாம் நிராகார மற்றும் சாகார உயர்ந்த பிராமண குலத்தவர் என்ற போதை உங்களுக்கு இருக்க வேண்டும். தம்மை பிராமணர் என புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள், பிரம்மாவின் வாரிசுகள் ஆவீர்கள். நாம் பிராமணரிலிருந்து தேவதைகளாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். இதை மறக்கக் கூடாது. பிராமணர்களாகிய நீங்கள் தேவதைகளை விடவும் மிகவும் இராயலாக (கம்பீரமாக) நடக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை மிகவும் மதிப்பு வாய்ந்ததாக இப்போது ஆகிறது. முன்னர் சோழி போல இருந்தது, இப்போது வைரத்தைப் போல ஆகிறது, ஆகையால் உங்களின் மகிமை இருக்கிறது. கோவில்களும் கூட உங்களுடைய நினைவுச் சின்னங்களாக கட்டப்பட்டுள்ளன. தேவதை களின் நினைவு சின்னமாகவும் அப்படி சோமநாத் ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களுடைய நினைவுச் சின்னங்களும் உள்ளன. சோமநாதர் அழிவற்ற ஞான இரத்தினங்களைக் கொடுத்தார் எனும்போது அவருடைய கோவில் எவ்வளவு நன்றாக கட்டப்பட்டுள்ளது. நீங்கள் பாடலைக் கேட்கும்போது நாம் இப்போது சிவபாபாவின் கழுத்தில் மாலையாக ஆகியிருக்கிறோம் என தெரிந்து கொள்கிறீர்கள். பாபா நம்மை கற்பிக்கிறார். நம்மை கற்பிக்கக் கூடியவர் யார் என்ற குஷியும் இருக்க வேண்டும். முதலில் அல்லா மற்றும் ஆஸ்தியைப் பற்றி படிக்கும்போது தரையில் அமர்ந்து படிக்கின்றனர், பிறகு மர பென்ச்சின் மீது அமர்ந்து படிக்கின்றனர், அதன் பின் நாற்காலியின் மீது அமர்ந்து படிக்கின்றனர். இளவரசன்-இளவரசி கல்லூரியில் கோச்சில் அமர்ந்து படிப்பார்கள். அவர்களை கற்பிக்கக் கூடியவர் ஏதும் இளவரன்-இளவரசியாக இருக்க மாட்டார்கள். ஆசிரியர்தான் படிக்க வைப்பார். ஆனாலும் இளவரசன்-இளவரசியின் அந்தஸ்து உயந்ததாக இருக்கும் அல்லவா. நீங்கள் சத்யுகத்தின் இளவரசன், இளவரசியை விடவும் உயர்ந்தவர்கள் அல்லவா. என்னதான் இருந்தாலும் அவர்கள் தேவதைகளின் குழந்தைகள். நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள். அவரிட மிரு ந்து ஆஸ்தி எடுக்க வேண்டும், அவரை நினைவும் செய்ய வேண்டும். அமர்ந்திருந்தாலும் எழுந்தாலும், காரிய விவகாரங்களை கவனித்தாலும் அவரை மறந்து விடக் கூடாது. நினை வின் மூலமே ஆரோக்கியம் மிக்கவராகவும், செல்வம் மிக்கவராகவும் ஆகிறீர்கள்.
தந்தை குழந்தைகளுக்கு உயில் எழுதிக் கொடுத்துவிட்டு வானபிரஸ்தத்தில் சென்று விட்டால் பிறகு தனக்கென்று எதுவும் இல்லை. அனைத்தையும் கொடுத்தாகி விட்டது – பாபா இவை யனைத்தும் உங்களுடையது என்று நீங்கள் உயில் எழுதிக் கொடுப்பது போல – பாபா பிறகு சொல்கிறார் – நல்லது டிரஸ்டியாகி கவனித்துக் கொள். நீங்கள் என்னை டிரஸ்டியாக ஆக்கு கிறீர்கள், பிறகு நான் உங்களை டிரஸ்டியாக ஆக்குகிறேன். ஆக ஸ்ரீமத்படி நடக்க வேண்டும், தலைகீழான காரியம் எதுவும் செய்து விடக் கூடாது. என்னிடம் (வழிமுறை) கேட்டபடி இருக்க வேண்டும். சிலரோ குழந்தைகள் எப்படி உண்ண வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்கின்றனர். பிரம்மா போஜனத்திற்கு பெரிய மகிமை இருக்கிறது. தேவதைகள் கூட பிரம்மா போஜனத்தின் மீது ஆர்வம் வைக் கின்றனர், எனவே நீங்கள் (போக்) பிரம்மா போஜனம் எடுத்துச் செல்கிறீர்கள். இந்த பிரம்மா போஜனத்தில் மிகவும் சக்தி இருக்கிறது. முன்னே போகப்போக யோகிகள் உணவை சமைப்பார்கள். இப்போது முயற்சியாளர்களாக இருக்கின்றனர். முடிந்த அளவு சிவபாபாவின் நினைவில் இருக்கும் முயற்சி செய்கின்றனர். குழந்தைகள் அல்லவா. சாப்பிடக் கூடிய குழந்தைகள் உறுதியாக ஆகிக் கொண்டு செல்வார்கள் எனும்போது சமைப் பவர்கள் கூட உறுதியானவர்களாக வெளிப்படுவார்கள். பிரம்மா போஜனம் என சொல்லி விடு கின்றனர். சிவ போஜனம் என சொல்வதில்லை. சிவனின் களஞ்சியம் (பண்டார்) என சொல் கின்றனர். எதையெல்லாம் அனுப்பி வைக்கின்றனரோ அதெல்லாம் சிவபாபாவின் களஞ்சியத் தில் தூய்மையடைகிறது. சிவபாபாவின் களஞ்சிய மாகும். பாபா சொல்லி யிருக்கிறார் – ஸ்ரீநாத் வாயிலில் நெய்க் கிணறுகள் இருக்கின்றன. அங்கே சமைத்த உணவு தயாராகிறது மற்றும் ஜகன்னாத் வாயிலில் அரை – குறையான (வெந்தும், வேகாத) உணவு தயாராகிறது. வித்தியாசம் உள்ளதல்லவா. அவர் சியாம் (கருப்பானவர்), இவர் சுந்தர் (அழகானவர்). ஸ்ரீநாத்திடம் நிறைய செல்வம் இருக்கிறது – அங்கே (ஒரிஸ்ஸா பக்கம்) அந்த அளவு செல்வந்தர்கள் இருப்பதில்லை. ஏழைகள் மற்றும் செல்வந்தர்கள் இருக்கின்றனர் அல்லவா. இப்போது மிகவும் ஏழையாக இருக்கின்றனர், பிறகு செல்வந்தர் களாக ஆவார்கள். இந்த சமயத்தில் நீங்கள் மிகவும் ஏழைகளாக இருக்கிறீர்கள்.அங்கே உங்களுக்கு 36 விதமான உணவு வகைகள் கிடைக்கும். ஆக இப்படிப்பட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பிரஜைகளும் கூட 36 விதமான உணவு வகைகள் சாப்பிட முடியும், ஆயினும் இராஜ்யத்தின் அந்தஸ்து உயந்தது அல்லவா. அங்கே உள்ள உணவு மிகவும் முதல் தரமானதாக இருக்கும். அனைத்து பொருட்களும் ஏ-ஒன் தரத்தில் இருக்கும். இங்கே அனைத்தும் கீழான தரத்தினுடையதாய் இருக்கிறது. இரவு பகலுக்கான வித்தியாசம் இருக்கிறது அல்லவா. விளையக் கூடிய தானியங்கள் அனைத்தும் கெட்டுப் போனவை யாக இருக்கின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் போதை இருக்க வேண்டும், பெரிய படிப்பில் தேர்ச்சியடைந்தால் போதை யுடன் இருக்கின்றனர் அல்லவா. அதுபோல உங்களுக்கு மிகவும் உயர்வான போதை இருக்க வேண்டும் – நம்மை பகவான் படிப்பிக் கிறார். அவர் தான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல். நான் உங்களுடைய கீழ்ப் படிந்த சேவகன் என தந்தை சொல்கிறார். தந்தை குழந்தை களின் கீழ்ப்படிந்த சேவகனாக இருக்கிறார் அல்லவா. குழந்தைகள் மீது பலியாகி பிறகு வான பிரஸ்தத்தில் சென்று விடுகின்றனர். நானும் பலியாகிறேன் என தந்தை சொல்கிறார். ஆனால் நீங்கள் முதலில் பலியாகிறீர்கள். மனிதர் இறக்கும் போது அவர் பயன்படுத்திய பொருட்களை இறுதிச் சடங்கு செய்பவருக்கு கொடுத்து விடுகின்றனர். செல்வந்தர்களாக இருக்கும் பட்சத்தில் ஆசனங்களைக் (ஃபர்னிச்சர்கள்) கூட கொடுத்து விடுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் எதைக் கொடுக்கிறீர்கள்? குப்பை. அதற்கு ஈடாக உங்களுக்கு என்ன கிடைக்கிறது? ஏழைகள் தான் ஆஸ்தியை எடுக்கின்றனர். பலியாகின்றனர். பாபா எதை எடுக்கிறார், எதைக் கொடுக்கிறார்? ஆக குழந்தைகளாகிய உங்களுக்கு போதை இருக்க வேண்டும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை கிடைத்திருக்கிறார், அழுக்குத் துணியை வெளுக்கிறார். சீக்கியர் கள் சொல்கின்றனர் – குரு நானக் இந்த வார்த்தைகளைச் சொன்னார் – அவை கிரந்தமாக உருவாகியுள்ளன. நம்முடைய கீதையை யார் சொன்னது என பாரதவாசிகளுக்குத் தெரியாது. கீதையின் பகவான் யார்? எந்த தர்மத்தை ஸ்தாபனை செய்தார்? அவர்கள் இந்து தர்மம் என சொல்லி விடுகின்றனர். ஆரிய தர்மம் என சொல்கின்றனர், அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. ஆரிய (பழமையான ஒரு இனம்) தர்மம் இருந்தது என அவர்கள் புரிந்து கொள்கின்றனர், இப்போது முழு பாரதமும் அனாரியர்களாக (எதையும் சாராதவர்களாக) இருக்கின்றனர். (சிந்து) இந்தப் பெயரை தயானந்தர் வைத்தார். கடைசியில் வெளிப்படும் கிளைகள் வேக வேகமாக வளர்ச்சியை அடைகின்றன. நீங்கள் உழைக்க வேண்டியிருக் கிறது. அவர்கள் மதமாற்றம் செய்வதற்கு காலம் தாழ்த்துவதில்லை. இங்கே மதமாற்றத்தின் விசயமே கிடையாது. இங்கே சூத்திரரி லிருந்து பிராமணர் ஆக வேண்டும். பிராமணர் ஆவது என்பது ஏதும் சிற்றன்னை வீடு போல அல்ல. போகப் போக மறைந்து போய் விடுகின்றனர். பாபா சொல்கிறார் – யாராவது கழுத்தை வெட்டினாலும் சரி, தூய்மையற்றவராக ஆகக் கூடாது. இந்த நிலையில் என்ன செய்வது? என பாபாவிடம் கேட்கின்றனர். அப்போது பொறுத்துக் கொள்ள முடியவில்லை போலும் என பாபா புரிந்து கொள்கிறார். எனவே, போய் பதிதமாக (தூய்மையற்றவராக) ஆகுங்கள் என பாபா சொல்கிறார். இதெல்லாம் உங்களைப் பொருத்த விசயம். அவர்கள் மீறிப்போனால் இந்தப் பிறவியில் கொல்வார்காள், நீங்களோ 21 பிறவிகளுக்கு தம்மை அழித்துக் கொள்கிறீர்கள். போகப்போக மாயை வேக மாக அடித்து விடுகிறது. குத்துச் சண்டை அல்லவா. ஒரே அடியில் ஒரேயடியாக வீழ்த்தி விடுகிறது. 15, 20 வருடங்கள் ஆனவர்கள், ஆரம்பத்திலிருந்து வந்திருந் தவர்கள் கூட ஒரேயடியாக விட்டு விட்டு ஓடிப்போய் விடுகின்றனர், இறந்து போய் விடு கின்றனர். இப்படி பொறுமை இல்லாதவர்களும் உள்ளனர். தவறு ஆகிவிட்டதென்றால் வருந்த வேண்டியிருக்கிறது அல்லவா. குழந்தைகளே நீங்கள் இந்த தவறு செய்கிறீர்கள், இது சரியல்ல என தந்தை புரிய வைக்கிறார். அறிவுரை கொடுக்கப்படுகிறது அல்லவா. ஏதும் அடிகள் கொடுப்பது கிடையாது. சொல்கிறார்கள் அல்லவா – வீட்டில் குழந்தைகள் குறும்பு செய்தார்கள் என்றால் அடிக்க வேண்டியிருக்கிறது. பாபா சொல்கிறார் – நல்லது, அவர்களின் நன்மைக்காக லேசாக காதைப் பிடித்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை மிகவும் அன்போடு புரிய வையுங்கள். கிருஷ்ணரைப் பற்றி சொல்லும்போதும் கூட அவரை கயிற்றால் கட்டிப் போட்டார் கள் என சொல்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட குறும்புகள் அங்கே நடப்பதில்லை. இந்த சமயத்தின் குழந்தைகள்தான் மூச்சுத் திணற வைக்கின்றனர்.
இலட்சியம் மிக உயர்ந்தது என தந்தை புரிய வைக்கிறார். அனைத்து விˆயங்களுக்கும் கேளுங் கள், பாபா யுக்திகளை கொடுத்தபடி இருப்பார். ஒவ்வொருவரின் நோயும் வேறு வேறாக இருக்கும். ஒவ்வொரு காலடியிலும் அறிவுரை கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மோசம் போய் விடுவீர்கள். மிக மிக இனிமையானவராக ஆக வேண்டும். சிவபாபா எவ்வளவு இனிமையானவர், எவ்வளவு அன்பானவர். குழந்தைகளும் அவ்வாறு ஆக வேண்டும். குழந்தை கள் நம்மை விடவும் உயர்வாக ஆக வேண்டும் என தந்தையும் விரும்புவார் அல்லவா. பெயர் பெற வேண்டும். என்னை விடவும் உங்களுடைய பதவி உயர்வாக ஆகும் அளவு முதல் தரமாக ஆகுங்கள். உயர்ந்த பதவி கொடுக்கிறார் அல்லவா. இவர் எப்படி உலகின் எஜமானாக ஆகப் போகிறார் என யாரும் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆக, உங்களின் நடத்தை மிகவும் உயர்வாக இருக்க வேண்டும். நடப்பது, சுற்றுவது, பேசுவது, உண்பது மிகவும் இராயல்டியாக (அரசனுக்குரிய தன்மை) இருக்க வேண்டும். நாம் ஈஸ்வரிய குழந்தை என உள்ளுக்குள் மிகவும் போதை இருக்க வேண்டும் – நாம் ஈஸ்வரிய குழந்தையாக இருக்கிறோம். இலட்சுமி நாராயணர் படம் வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது. நீங்கள் குப்தமாக இருக்கிறீர்கள் அல்லவா. பிராமணர்களாகிய உங்களைப் பற்றி பிராமணர்களுக்கு மட்டுமே தெரியும், வேறு யாருக்கும் தெரியாது. நாம் குப்த வேடத்தில் பாபாவிடமிருந்து ஆஸ்தியை எடுத்து உலகின் எஜமானாக ஆகிறோம் என நீங்கள் அறிவீர்கள். மிக உயர்ந்த பதவியாகும், இதில் உள்ளுக்குள் மிகவும் குஷியாக இருக்கிறது. முகம் மலரைப் போல மலர்ந்திருக்க வேண்டும், அப்படிப்பட்ட முயற்சி செய்ய வேண்டும். இப்போது யாரும் அப்படி ஆகவில்லை. முயற்சி செய்ய வேண்டும். இன்னும் போகப்போக உங்களுடைய மதிப்பு உயரும். கடைசி காலத்தில் சன்னியாசிகள் மற்றும் இராஜாக்களுக்கும் கூட ஞானத்தைக் கொடுக்க வேண்டும். உங்களுக்குள் முழுமை யான சக்தி வந்து விடும்போது அது நடக்கும்.
ஞானம் மற்றும் யோக பலத்தின் மூலம் நீங்கள் சதோ பிரதானமாக ஆக வேண்டும். வாயிலிருந்து எப்போதும் ஞான இரத்தினங்கள்தான் வெளிப்பட வேண்டும். அப்போது நீங்கள் ஞான யோகத்தில் சிறந்தவர்களாக ஆகி விடுவீர்கள். ஆத்மா தூய்மையடந்தபடி இருக்கும். நீங்கள் எந்த அளவு அருகாமையில் வருகிறீர்களோ அந்த அளவு உள்ளுக்குள் நிறைய குஷி இருக்கும். உங்களுடைய இராஜ்யத்தின் காட்சியும் தெரிந்தபடி இருக்கும். நீங்கள் தம்முடைய முயற்சியை மிகவும் குப்தமான (மறைமுகமான) முறையில் செய்ய வேண்டும். வழி காட்ட வேண்டும். நீங்கள் அனைவரும் திரௌபதிகள் ஆவீர்கள். பாபாவுக்காக இந்தக் கொடுமைகளை சகித்துக் கொள்ள வேண்டும். சத்யுகத்தில் எவ்வளவு தூய்மை இருக்கும். 100 சதவிகிதம் நிர்விகாரமான உலகம் எனப்படுகிறது. இப்போது உள்ளது 100 சதவிகிதம் விகாரம் நிறைந்த உலகம். இப்போது நாம் சிவாபாபாவின் கழுத்தின் மாலையாக ஆவதற்காக ஆன்மீக யோகத்தின் ஓட்டப்பந்தயத்தில் வேகமாக ஓடிக் கொண்டி ருக்கிறோம் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. பிறகு நாம் விஷ்ணுவின் கழுத்தின் மாலையாக ஆகப் போகிறோம். உங்களுடைய முதன் முதலான குலம் பிராமணர்களுடைய தாகும். பிறகு நீங்கள் தேவதா, சத்ரியர்களாக ஆகிறீர்கள். இறங்கும் கலையில் உங்களுக்கு முழு கல்பமும் பிடிக்கிறது மற்றும் ஏறும் கலையில் ஒரு வினாடி பிடிக்கிறது. இப்போது உங்களுடையது ஏறும் கலையாக இருக்கிறது. பாபாவை நினைவு மட்டும் செய்ய வேண்டும், இது கடைசி பிறவியாகும். விழுவதில் உங்களுக்கு 84 பிறவிகள் பிடிக்கிறது. இந்த பிறவியில் நீங்கள் ஏறிக் கொண்டே இருக்கிறீர்கள். பாபா ஒரு வினாடியில் ஜீவன் முக்தி கொடுக்கிறார். அந்த குஷி இருக்க வேண்டும். அந்த ஞானத்திலிருந்து நாம் என்னவாக ஆகிறோம், இந்த ஞானத்திலிருந்து நாம் என்னவாக ஆகப் போகிறோம் என ஒப்பிடப்படுகிறது. இதுவும் படிக்க வேண்டும், அதுவும் படிக்க வேண்டும். இல்லற விசயங்களில் இருந்தபடியே எதிர்காலத்திற்காக முயற்சி செய்ய வேண்டும் என பாபா சொல்கிறார். அசுர மற்றும் தெய்வீக குலங்கள் என இரண்டிலும் உறவை பராமரிக்க வேண்டும். ஒவ்வொருவரின் கணக்கையும் பாபா எடுக்கிறார். பிறகு அதனை அனுசரித்து இதில் இவ்வாறு நடந்து கொள்ளுங்கள் என யுக்திகளை கூறுகிறார். மற்றவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும், ஆனால் நீங்கள் மிகவும் இனிமையானவராக ஆக வேண்டும். யாராவது திட்டினாலும் கூட நீங்கள் புன்சிரிப்புடன் இருக்க வேண்டும்.
நல்லது, நீங்கள் நிந்தனை செய்கிறீர்கள், நான் உங்கள் மீது மலர்களைத் தூவுகிறேன். அப்போது முற்றிலும் அமைதியடைந்து விடுவார்கள். ஒரு நிமிடத்தில் குளிர்ந்து போவார்கள். பாபா யுக்திகளை உருவாக்குபவர். நிறைய யுக்திகளை கூறுவார். தூய்மையற்றவர்களை தூய்மை யாக்குகிறார் என்றால் கண்டிப்பாக யுக்திகள் இருக்கும் அல்லவா. ஸ்ரீமத் பெற வேண்டும். ஸ்ரீமத்படி உயர்வானவர்களாக ஆவதற்காகத்தான் வந்திருக்கிறீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தந்தையின் பெயர் புகழடையும் அளவிற்கு இனிமையானவராகவும் இராயல் தன்மை மிக்கவராகவும் ஆக வேண்டும். யாரேனும் கோபித்துக் கொண்டாலும் நிந்தனை செய்தாலும் புன்சிரிப்புடன இருக்க வேண்டும்.
2. ஸ்ரீமத்படி முழுமையிலும் முழுமையான டிரஸ்டியாக ஆக வேண்டும். எந்த தலைகீழ் காரியமும் செய்யக் கூடாது. முழுமையிலும் முழுமையாக பலியாக வேண்டும்.
வரதானம்:-
எந்தவொரு தர்மத்தை சேர்ந்த ஆத்மாக்களை சந்திக்கிறீர்கள் அல்லது பார்க்கிறீர்கள் என்றால் இவர்கள் அனைத்து ஆத்மாக்களும் நம்முடைய பெரியதிலும் பெரிய தந்தையின் வம்சத்தை சேர்ந்தவர்கள் என்ற இருக்க வேண்டும். பிராமண ஆத்மாக்களாகிய நாம் தான் பூர்வஜ் (மூதாதையர்கள்). பூர்வஜ்ஜாக இருப்பவர்கள் அனைவரையும் வளர்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அலௌகீக பாலனை சொரூபமான நீங்கள் பாபாவின் மூலம் அடைந்துள்ள அனைத்து சக்திகளையும் மற்ற அத்மாக்களித்தில் நிரப்புவதாகும். யாருக்கு எந்த சக்தியின் அவசியம் தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு அந்த சக்தி மூலம் பாலனை செய்வதாகும். இதற்காக தனது உள்ளுணர்வை மிகவும் சுத்தமானதாகவும் மனம் சக்திசாலியானதாகவும் இருக்க வேண்டும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!