03 June 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

2 June 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! சிவபாபா உங்களுடைய மலர்களை ஏற்பதில்லை. ஏனென்றால் அவர் பூஜைக்குரியவராகவோ அல்லது பூஜாரியாகவோ மாறுவதில்லை. நீங்கள் கூட சங்கம யுகத்தில் மலர் மாலைகளை அணிந்துக் கொள்ள வேண்டியதில்லை.

கேள்வி: -

எதிர்கால இராஜ்ய சிம்மாசனத்தில் அமருபவர்களாக யார் மாறுகிறார்கள்?

பதில்:-

இப்போது தாய் தந்தையின் இதய சிம்மாசனத்தை வெற்றி அடைபவர்களே எதிர்கால சிம்மாசனத்தில் அமரக்கூடியவர் ஆவார். குழந்தைகள் தாய் தந்தையின் மீது வெற்றி அடைவது அதிசயமாக இருக்கிறது. முயற்சி செய்து தாய் தந்தையை விட முன்னேறிச் செல்கிறார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஆகாய சிம்மாசனத்தை விட்டு…

ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். இந்த பாடலினால் சர்வ வியாபி என்ற ஞானம் போய் விடுகிறது. நினைக்கிறார்கள், இப்போது பாரதம் மிகவும் துக்கத்தில் இருக்கிறது. நாடகத்தின் படி இந்த பாடல்கள் அனைத்தும் உருவாக்கப் பட்டிருக்கிறது. உலகத்தினர் அறியவில்லை. அழுக்கானவர்களைத் தூய்மையாக மாற்றுவதற்கு அல்லது துக்கத்தில் இருப்பவர்களை துக்கத்திலிருந்து விடுவித்து சுகம் கொடுப்பதற்கு பாபா வந்திருக்கிறார். அதே தந்தை வந்து விட்டார் என குழந்தைகள் அறிந்துக் கொண்டீர்கள். குழந்தை களுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. நான் சாதாரண உடலில் பிரவேசம் ஆகி முழு சிருஷ்டிக்கும் முதல், இடை, கடை ரகசியத்தைக் கூறுகிறேன் என பாபாவே தெரிவிக்கிறார். சிருஷ்டி ஒன்று தான், புதியதாகவும் மற்றும் பழையதாகவும் மாறுகிறது; குழந்தைப் பருவத்தில் உடல் புதியதாகவும் பிறகு பழையதாகவும் மாறுவது போன்று தான். அதே போன்று உலகம் ஒன்று தான், புதியதிலிருந்து இப்போது பழையதாகிறது. புதியதாக எப்போது இருந்தது. இதை யாரும் சொல்ல முடியாது. தந்தை வந்து புரிய வைக்கின்றார். குழந்தைகளே! புதிய உலகமாக இருந்த போது பாரதம் புதியதாக இருந்தது. சத்யுகம் என்று கூறப்பட்டது. அதே பாரதம் இப்போது பழையதாகி இருக்கிறது. இதற்கு மிகப்பழைய உலகம் என்று கூறப்படுகிறது. புதியதிலிருந்து பழையதாகி விட்டது. பிறகு அதை நிச்சயம் புதியதாக மாற்ற வேண்டும். புதிய உலகத்தை குழந்தைகள் சாட்சாத் காரம் செய்திருக்கின்றனர். சரி, அந்த புது உலகத்தின் அதிபதியாக யார் இருந்தனர். நிச்சயமாக இந்த லஷ்மி நாராயணன் தான் இருந்தனர். ஆதி சனாதன தேவி தேவதைகள் அந்த உலகத்தின் அதிபதியாக இருந்தனர். இந்த தந்தை குழந்தை களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். இப்போது நிரந்தரமாக இதை நினையுங்கள் என பாபா கூறுகின்றார். அப்பா பரந்தாமத்திலிருந்து நம்மை படிக்க வைக்க வருகிறார். இராஜயோகத்தைக் கற்பிப் பதற்காக வருகின்றார். எல்லா புகழும் அவர் ஒருவருக்கே! இவருடைய புகழ் எதுவும் இல்லை. இச்சமயம் அனைவரும் கீழான புத்தி உடையவராக இருக்கின்றனர். எதையும் புரிந்துக் கொள்ள வில்லை. ஆகவே நான் வருகிறேன். எனவே தான் பாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வ வியாபி என்ற ஞானம் பறந்து போகிறது. ஒவ்வொருவருக்கும் தனக் கென்று நடிப்பு இருக்கிறது. அப்பா தேக உணர்வை விட்டு நீங்கள் ஆத்ம உணர்வடையுங்கள். மேலும் உடல் மூலமாகப் பாடத்தைக் கடை பிடியுங்கள் என அடிக்கடி கூறுகின்றார். போகும் போதும், வரும் போதும் இந்த பாபாவை பார்க்கிறீர்கள். ஆனால் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அனைத்தையும் சிவபாபா தான் செய் கிறார் என நினையுங்கள். பிரம்மா கிடையாது. இவருடைய ரூபம் இந்த கண்களில் தெரிகிறது. உங்களுடைய புத்தி சிவபாபாவின் பக்கம் இருக்க வேண்டும். சிவபாபா இல்லை என்றால், இவருடைய ஆத்மா இவருடைய உடலுக்கு எந்த வேலையும் இல்லை. இவருக்குள் சிவபாபா இருக் கின்றார் என்று எப்போதும் புரிந்துக் கொள்ளுங்கள். அவர் இவர் மூலமாகப் படிக்க வைக்கிறார். இவர் உங்களுடைய டீச்சர் கிடையாது. சுப்ரீம் டீச்சர் அவர் ஆவார். அவரைத்தான் நினைக்க வேண்டும். ஒரு போதும் உடலை நினைக்கக் கூடாது. புத்தியோகம் பாபாவுடன் இருக்க வேண்டும். மீண்டும் வந்து ஞான யோகத்தைப் கற்பியுங்கள் என குழந்தைகள் நினைக்கிறார்கள். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இராஜயோகம் கற்றுத்தர முடியாது. அவரே அமர்ந்து கீதா ஞானத்தைக் கூறுகின்றார். பிறகு இந்த ஞானம் மறைந்து போகும் என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கிறது. அங்கே அவசியம் இல்லை. இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சத்கதி கிடைத்து விடுகிறது. கெட்ட நிலையிலிருந்து நல்ல நிலையை அடைவதற்காக ஞானம் கொடுக்கப்படுகிறது. மற்றபடி அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும். மனிதர்கள் ஜபம், தவம், தானம், புண்ணியம் போன்றவைகளைச் செய்கிறார்கள். அது அனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள் ஆகும். இதனால் யாரும் என்னை அடைய முடியாது. ஆத்மாவின் சிறகுகள் துண்டிக்கப் பட்டிருக்கிறது. கல் புத்தி ஆகி விட்டனர். கல்லில் இருந்து மீண்டும் தங்கமாக மாற்ற நான் வர வேண்டியிருக்கிறது. இப்போது எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள், கடுகுகளைப் போன்று உலகம் நிறைந்திருக் கிறது. இப்போது அனைத்தும் அழியப்போகிறது என பாபா கூறுகின்றார். சத்யுகத்தில் இவ்வளவு மனிதர்கள் இருக்க மாட்டார்கள். புது உலகில் வைபவங்கள் நிறைய இருக்கிறது. மனிதர்கள் குறைவாக இருப்பார்கள். இங்கே இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள். சாப்பிடுவதற்குக் கூட கிடைப்பதில்லை. பழைய தரிசு நிலமாக இருக்கிறது. பிறகு புதியதாக மாறும். அங்கே அனைத்தும் புதியதாக இருக்கும். சொர்க்கம், ஹெவன், தேவதைகளின் புதிய உலகம் என பெயர். எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பழையதை இடித்து விட்டு புதியதில் அமர மனம் விரும்புகிறது அல்லவா? இப்போது புதிய உலகம் சொர்க்கத்திற்கு செல்வதற்கான விஷயம் ஆகும். இதில் பழைய உடலுக்கு எந்த மதிப்பும் இல்லை. சிவபாபாவிற்கு எந்த உடலும் இல்லை.

பாபாவிற்கு மாலை போடலாம் என குழந்தைகள் கூறுகிறார்கள். ஆனால் இவருக்கு மாலை அணிவித்தால் உங்களுடைய புத்தியின் தொடர்பு இவர் மீது போகும் மாலையின் அவசியம் இல்லை என சிவபாபா கூறுகிறார். நீங்கள் தான் பூஜைக்குரியவராக மாறுகிறீர்கள். பூஜாரியாகவும் நீங்கள் தான் மாறுகிறீர்கள். தாங்களே பூஜைக்குரியவர், தாங்களே பூஜாரி! எனவே தங்களின் சித்திரத்தையே (சிலை) பூஜை செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். நான் பூஜைக்குரியவராக மாறுவதில்லை. (எப்போதுமே பூஜைக்குரியவர்) மலர்களின் அவசியமும் இல்லை என பாபா கூறுகின்றார். நான் எதற்காக இதை அணிந்துக் கொள்ள வேண்டும். ஆகவே ஒரு போதும் மாலை போன்ற வைகளை எடுத்துக் கொள்வதில்லை. நீங்கள் பூஜைக்கு உரியவராக மாறுகிறீர்கள். பிறகு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு மலர்களை அணிந்துக் கொள்ளுங்கள். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் அன்பான கீழ்படிந்த தந்தையாக, ஆசிரியராக, வேலைக்காரனாக இருக்கிறேன். பெரிய பெரிய ராயலான மனிதர் கள் எழுதும் போது கீழே கையெழுத்திடும் போது மின்டோ, கர்சென் என…… கையெழுத்திடுகிறார்கள். தன்னை ஒரு போதும் லார்ட் என எழுதவில்லை. இங்கேயோ ஸ்ரீலஷ்மி நாராயணன், ஸ்ரீ இன்னார், ஒரேயடியாக ஸ்ரீ என்ற வார்த்தை போட்டு விடுகிறார்கள். இப்போது இந்த உடலை நினைக்காதீர்கள் என பாபா புரிய வைக்கிறார். தன்னை ஆத்மா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தந்தையை நினையுங்கள். இந்த பழைய உலகத்தில் ஆத்மா மற்றும் உடல் இரண்டும் அழுக்காக இருக்கிறது. தங்கம் 9 காரட் என்றால், நகையும் 9 காரட் தான். தங்கத்தில் தான் கலப்படம் சேருகிறது. ஆத்மாவில் எதுவும் ஒட்டாது என்று ஒரு போதும் நினைக்கக் கூடாது. இந்த ஞானம் இப்போது உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் அரை கல்பத்திற்கு 21 பிறவிகளுக்கு சொத்தை அடைகிறீர்கள் என்றால், எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். ஆனால் குழந்தைகளோ அடிக்கடி மறந்து போகிறீர்கள். சிவபாபா பிரம்மா மூலமாக நமக்கு கல்வியைக் கற்றுக் கொடுக்கின்றார். பிரம்மா வின் ஆத்மா கூட அவரை நினைக்கிறது. பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சும வதனவாசி ஆவார். அப்பா முதலில் சூட்சும சிருஷ்டியைப் படைக்கிறார். நிர்வாணதாமம் உயர்ந்ததிலும் உயர்ந்த தாமம் ஆகும். ஆத்மாக்களின் நிர்வாணதாமம் அனைத்தையும் விட உயர்ந்தது. ஒரு பகவானை அனைத்து பக்தர் களும் நினைக்கிறார்கள். ஆனால் அழுக்காக மாறி விட்டதால் அப்பாவை மறந்து கல், முள் அனைத்தையும் பூஜை செய்துக் கொண்டிருக்கிறார்கள். என்னென்ன நடக்கிறதோ நாடகத்தில் பதிவாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் நமக்குத் தெரியும். நாடகத்தில் ஒரு முறை என்ன பதிவாகி விடுகிறதோ அதாவது ஒரு பறவை பறப்பது போன்று இடையில் பதிவாகி விட்டால் அந்த நொடி வரும் போது அதே திரும்ப நடக்கும். பட்டம் பறப்பது போன்று பதிவாகி விட்டால் அது மீண்டும் திரும்ப நடக்கும். இதுவும் நாடகத்தில் ஒவ்வொரு நொடியும் திரும்ப நடக்கிறது. பதிவாகிக் கொண்டே இருக்கிறது. இது ஏற்கனவே உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். நடிகர்களாகிய நீங்கள் முழு நாடகத்தையும் சாட்சியாக இருந்து பார்க்கிறீர்கள். ஒவ்வொரு நொடியும் நாடகத்தின் படி கடந்து போகிறது. இலை அசைகிற காட்சியும் நாடகத்தில் நடந்தது. ஆனால் ஒவ்வொரு இலையும் பகவானின் கட்டளையால் அசைகிறது என்பது கிடையாது. இல்லை. இது அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இதை நன்கு புரிந்துக் கொள்ள வேண்டும். தந்தை தான் வந்து இராஜ யோகத்தைக் கற்பிக்கின்றார். மேலும் நாடகத்தின் ஞானத்தைக் கொடுக்கிறார். படங்கள் கூட எவ்வளவு நன்றாக உருவாக்கப் பட்டிருக்கிறது. சங்கமயுகத்தில் கடிகார முள் கூட பொருத்தப் பட்டிருக்கிறது. கலியகத்தின் முடிவு சத்யுகத்தின் ஆரம்பம் சங்கமம் ஆகும். இப்போது பழைய உலகத்தில் பல தர்மங்கள் (மதம்) இருக்கின்றன. புதிய உலகத்தில் பிறகு இவை இருக்காது. நம்மை பாபா படிக்க வைக்கின்றார், நாம் இறை மாணவர்கள் என குழந்தைகளாகிய நீங்கள் எப்போதும் புரிந்துக் கொள்ளுங்கள். பகவான் வாக்கு: நான் உங்களை ராஜாக்களுக்கு ராஜாவாக மாற்றுகிறேன். ராஜாக்கள் கூட லஷ்மி நாராயணனை பூஜை செய்கிறார்கள். எனவே அவர்களை பூஜைக் குரியவர் களாக மாற்றுவது நானே! யார் பூஜைக்குரியவராக இருந்தார்களோ அவர்களே இப்போது பூஜாரி ஆகிறார்கள். நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம். பிறகு நாமே பூஜாரி ஆகி யிருக்கிறோம் என குழந்தைகள் புரிந்துக் கொள்கிறீர்கள். பாபா மாறுவதில்லை. நான் பூஜாரியும் ஆவதில்லை, பூஜைக்குரிய வராகவும் ஆவதில்லை என பாபா கூறுகின்றார். ஆகையால் நான் மாலையை அணிந்துக் கொள்வதில்லை. அணிவிக்க வேண்டியதும் இல்லை. பிறகு நாம் ஏன் மலர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்களும் ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டப்படி தேவதைகளுக்குத்தான் உரிமை இருக்கிறது. அவர்களுடைய ஆத்மா மற்றும் உடல் தூய்மையாக இருக்கிறது. அவர்களே மலர்களை அணிவதற்கு உரிமையாளர்கள். அங்கே சொர்க்கத்திலோ மணம் உள்ள மலர்கள் இருக்கின்றன. நறுமணத் திற்காக மலர்கள் இருக்கின்றது. அணிந்துக் கொள்வதற்காகவும் இருக்கின்றது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகிறீர்கள் என பாபா கூறுகின்றார். வரிசைக் கிரமத்தில் நீங்கள் சிம்மாசனத்தில் அமர வேண்டும். யார் எவ்வளவு, போன கல்பத்தில் முயற்சி செய்தனரோ இப்போது செய்கிறார்கள். செய்ய வேண்டியிருக்கும். வரிசைக் கிரமம் இருக்கிறது. இந்த குழந்தை மிகவும் சேவை செய்ய கூடியவர் என புத்தி கூறுகிறது. எப்படி கடையில் சேட்டாக இருக் கிறார்கள், பங்குதாரராக இருக்கிறார்கள், மேனேஜராகவும் இருக்கிறார்கள். கீழே இருப்பவர்களுக்குக் கூட லிப்ட் (உயர் பதவி அடைய) கிடைக்கிறது. இங்கே கூட அப்படியே! குழந்தைகளாகிய நீங்கள் கூட தாய் தந்தையின் மீது வெற்றி அடைய வேண்டும். தாய் தந்தையை விட எப்படி முன்னேறி போக முடியும்? என நீங்கள் அதிசயப்படுவீர்கள். பாபா குழந்தைகளை கடின உழைப்பு செய்வித்து தகுதி படுத்து கிறார். சிம்மாசனத்தில் அமரக் கூடியவர் களாக மாறுவதற்காக இப்போது என்னுடைய இதய சிம்மாசனத்தை வெற்றி அடைபவர்களே எதிர்காலத்தில் சிம்மாசனத்தில் அமரக் கூடியவர்களாக மாறுவார்கள் என கூறுகிறார். நரனிலிருந்து நாராயணன் ஆகும் அளவிற்கு முயற்சி செய்யுங்கள். குறிக்கோள் முக்கியமானது ஒன்றே ஆகும். பிறகு இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அதில் விதவிதமான பதவி இருக்கிறது.

நீங்கள் மாயாவை வெற்றி அடைவதற்கு முழுமையாக முயற்சி செய்ய வேண்டும். குழந்தைகளை கூட அன்போடு நடத்துங்கள். ஆனால் டிரஸ்டியாக இருங்கள். பிரபு இது அனைத்தும் தாங்கள் கொடுத்தது. தாங்கள் கொடுத்த பொருளை தாங்களே எடுத்துக் கொண்டீர்கள் என பக்தி மார்க்கத்தில் கூறுகிறார்கள் அல்லவா? சரி, பிறகு அழக்கூடிய விஷயமே இல்லை. ஆனால் இதுவோ அழுகையின் உலகம் ஆகும். மனிதர்கள் நிறைய கதைகளைக் கூறுகிறார்கள். மோகஜீத் ராஜாவின் கதையைக் கூட கூறுகிறார்கள். பிறகு யாருக்கும் துக்கம் ஏற்படுவதில்லை. ஒரு உடலை விட்டு சென்று இன்னொன்றை எடுத்தனர். அங்கே ஒரு போதும் யாரும் நோய் வாய்ப்படுவதில்லை. மிகவும் ஆரோக்கியமான நோயற்ற உடல் 21 பிறவிகளுக்கு கிடைக்கிறது. குழந்தை களுக்கு அனைத்து காட்சிகளும் கிடைக்கிறது. அவ்விடத்தின் பழக்க வழக்கங்கள், எப்படி நடக்கிறது? எப்படி இருக்கிறது, எந்த ஆடை களை அணிகிறார்கள், சுயம்வரம் போன்றவை எப்படி நடக்கிறது? என்பதை குழந்தைகள் காட்சிகளாகப் பார்த்திருக்கிறார்கள். அந்த நடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. அச்சமயம் இவ்வளவு ஞானம் இல்லை. இப்போது ஒவ்வொரு நாளும் குழந்தைகளாகிய உங்களுக்குள் சக்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. அதிசயமாக உள்ளது அல்லவா? பரமபிதா பரமாத்மாவிற்கு கூட எவ்வளவு நடிப்பு இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் கூட மேலே உட்கார்ந்து நான் எவ்வளவு வேலை செய் கிறேன் என அவரே வந்து புரிய வைக்கிறார். கீழே கல்பத்தில் ஒரு முறை தான் வருகிறேன். நிறைய பேர் நிராகாரரின் பூஜாரிகளாக இருக்கிறார்கள். ஆனால் நிராகாரர் பரமாத்மா எப்படி வந்து படிக்க வைக்கின்றார். இந்த விஷயங்களை மறைத்து விட்டார்கள். கீதையில் கூட கிருஷ்ணரின் பெயரை போட்டு விட்டார்கள். எனவே நிராகாரரின் மீது அன்பு துண்டிக்கப் பட்டு விட்டது. இதை பரமாத்மா வந்து சகஜயோகத்தைக் கற்பித்தார். மேலும் உலகத்தை மாற்றினார். உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. யுகங்கள் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தின் சக்கரத்தை இப்போது நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள். மனிதர்கள் எதையும் புரிந்துக் கொள்ளவில்லை. சத்யுகத்தின் தேவி தேவதைகளைக் கூட அறிய வில்லை. தேவதைகளின் அடையாளம் மட்டும் இருக்கின்றது. நாம் சிவபாபாவினுடயவர் என எப்போதும் புரிந்துக் கொள்ளுங்கள் என பாபா புரிய வைக்கிறார். சிவபாபா நம்மை படிக்க வைக்கின்றார். சிவபாபா இந்த பிரம்மா மூலமாக எப்போதும் பாடங்களை அளிக்கிறார். சிவபாபாவின் நினைவில் மிகவும் ஆனந்தம் வந்துக் கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட இறை தந்தை யார்? அவர் ஆசிரியராகவும், டீச்சராகவும், சத்குருவாகவும் இருக்கிறார். சில தந்தையர் குழந்தைகளைப் படிக்கவும் வைக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் எங்களுடைய இந்த தந்தை ஆசிரியராகவும் இருக்கிறார் என கூறுவார்கள். ஆனால் அந்த தந்தையே குருவாக இருக்க முடியாது. ஆம் டீச்சராக முடியும். தந்தையை ஒரு போதும் குரு என கூற முடியாது. இவருடைய(பாபாவினுடைய) தந்தை டீச்சராக இருந்தார். படிக்கவும் வைத்தார். அவர் எல்லைக்குட்பட்ட தந்தை ஆசிரியர் ஆவார். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை ஆசிரியர் ஆவார். நீங்கள் தங்களை இறை மாணவர் என உணர்ந்தால் ஆஹா! சௌபாக்கியம். இறை தந்தை படிக்க வைக்கிறார். எவ்வளவு தெளிவாக இருக்கிறது. எவ்வளவு இனிமையான பாபா. இனிமையான விஷயம் நினைவு செய்யப்படுகிறது. எப்படி மணவாளன் மணப்பெண்ணுக்கு அன்பு ஏற்படுகிறது. அவர்களிடம் விகாரத்திற்கான அன்பு கிடையாது. ஒருவர் ஒருவரை பார்த்துக் கொண்டே இருக்கிறார் கள். உங்களுடையது ஆத்மா பரமாத்மாவுடனான தொடர்பாகும். பாபா எவ்வளவு ஞானத்தின் கடல், அன்பின் கடல் என ஆத்மா கூறுகிறது. இந்த அழுக்கான உலகம் அழுக்கான உடலில் வந்து நம்மை எவ்வளவு உயர்ந்தவராக மாற்றுகிறார். மனிதனிலிருந்து தேவதையாவதற்கு எந்த சண்டையும் போடுவதில்லை என பாடப்பட்டிருக்கிறது. நொடியில் வைகுண்டத்திற்கு போகிறார்கள். நொடியில் மனிதனிலிருந்து தேவதை ஆகிறார்கள். இதுவே குறிக்கோள் ஆகும். இதற்காக படிப்பை படிக்க வேண்டும். குருநானக் கூட அழுக்கான அசுத்தமான துணிகளை துவைக்க….. வாருங்கள் என கூறியிருக்கிறார். இலட்சியம் என்ற சோப்பு இருக்கிறது அல்லவா? நான் எவ்வளவு நல்ல வண்ணாராக இருக்கிறேன் என பாபா கூறுகிறார். உங்களுடைய உடை, உங்களுடைய ஆத்மா மற்றும் உடலை எவ்வளவு தூய்மையாக மாற்றுகிறேன். எனவே இவரை (தாதாவை) ஒரு போதும் நினைக்கக் கூடாது. இந்த காரியம் முழுவதும் சிவபாபாவினுடையதாகும். அவரையே நினையுங்கள் இவரை விட இனிமையானவர் அவர் ஆவார். உங்களுக்கு இந்த கண்கள் மூலமாக பார்ப்பதற்கு இந்த பிரம்மாவின் ரதம் தெரிகிறது. ஆனால் நீங்கள் சிவபாபாவை நினையுங்கள் என ஆத்மா விற்குப் கூறுகிறார். சிவபாபா இவர் மூலமாக உங்களை கூழாங்கல்லிலிருந்து வைரம் போன்று மாற்றிக் கொண்டிருக் கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

இப்போது உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைத்துள்ளது. ஆகவே அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். முழு சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி நாம் இப்போது அறிந்துள்ளோம். இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் விஷயங்கள். உங்களுக்கு முதலிலேயே தெரிந்திருந்தது, அதாவது, தீயதைக் கேட்காதீர்கள்…….. இந்தச் சித்திரம் ஏன் உருவாக்கப்பட்டுள்ளது? உலகத்தில் யாருமே இதன் அர்த்தத்தை அறிந்திருக்க வில்லை. எப்படி பாபா ஞானம் நிறைந்தவராக இருக்கிறாரோ, அதுபோல் குழந்தைகள் நீங்களும் ஞானம் நிறைந்தவர்களாக நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு சிலருக்கோ அதிக நஷா ஏறுகின்றது. ஆஹா! பாபாவின் குழந்தை ஆகி பிறகு பாபாவிடம் முழு ஆஸ்தி பெறவில்லை என்றால் (இதுவரை) என்ன செய்தீர்கள்? தினம் இரவில் தனது கணக்கைப் பார்க்க வேண்டும். பாபா வியாபாரி அல்லவா? வியாபாரிகளுக்கு தினமும் கணக்கு பார்ப்பது சகஜமாக உள்ளது. அரசாங்க அலுவலருக்கு கணக்கைப் பார்க்க வராது. அவர்கள் வியாபாரியாக இருப்பதும் இல்லை. வியாபாரிகள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். நீங்கள் வியாபாரிகள். நீங்கள் தங்களின் இலாப-நஷ்டம் பற்றிப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தினந்தோறும் கணக்கைப் பாருங்கள். விருப்பத்தை நிறைவேற்றுவதில் விழிப்போடிருங்கள். நஷ்டமா, இலாபமா? வியாபாரி அல்லவா நீங்கள்? பாடல் உள்ளது இல்லையா – பாபா வியாபாரி, இரத்தின வியாபாரி! அழிவில்லா ஞான இரத்தினங்களின் வியாபாரம் தருகிறார். இதையும் நீங்கள் அறிவீர்கள் – நம்பர்வார் புருஷார்த்தத்தின் அனுசாரம். அனைவருமே கூர்மையான புத்தியுள்ளவர் களல்ல. ஒரு காதினால் கேட்கின்றனர், பிறகு மற்றொன்றின் மூலம் வெளியேற்றி விடு கின்றனர். பையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளிவந்து விடுகின்றது. பை நிரம்பு வதில்லை. பாபா சொல்கிறார், செல்வத்தைக் கொடுப்பதால் செல்வம் குறைவதில்லை. இது அழியாத ஞான இரத்தினங்கள் இல்லையா? பாபா ரூப்-பஸந்தாக உள்ளார். ஆத்மா வுக்குள் ஞானம் நிரப்பப்படுகின்றது. அதற்கு ரூபம் உள்ளது. ஆத்மா சிறியதாக இருக் கலாம். ரூபமோ உள்ளது தானே? அது அறிந்து கொள்ளப்படுகின்றது. சோமநாதருக்கு பக்தி செய்கின்றனர் என்றால் இவ்வளவு சிறிய நட்சத்திரத்திற்கு என்ன பூஜை செய்வார் கள்? பூஜைக்காக எவ்வளவு லிங்கங்களை உருவாக்குகின்றனர்! சிவலிங்கத்தைக் கூரையை தொடும் அளவுக்குப் பெரிது-பெரிதாகவும் தயாரிக்கின்றனர். சிறியதாகத் தான் உள்ளது என்றாலும் பதவியோ உயர்ந்தது இல்லையா?

பாபா கல்பத்திற்கு முன்பும் கூட சொல்லியிருந்தார், இந்த ஜபம், தபம் முதலியவற்றால் எந்த ஒரு பிராப்தியும் கிடைப்பதில்லை. இவை அனைத்தையும் செய்தாலும் கீழே இறங்கியே செல்கின்றனர். பிறவிகளின் ஏணிப்படியில் கீழே தான் இறங்குகின்றனர். உங்களுக்கோ இப்போது உயரும் கலை. பிராமணர்களாகிய நீங்கள் முதல் நம்பர் ஜின் பூதமாக இருக்கிறீர்கள். கதை உள்ளது இல்லையா – ஜின் பூதம் சொன்னது, எனக்கு வேலை கொடு, இல்லையென்றால் உன்னை விழுங்கிவிடுவேன் என்று. அதற்கு வேலை கொடுக்கப்பட்டது – ஏணிப்படியில் ஏறி, இறங்கிக் கொண்டே இரு என்று. ஆக அதற்கு வேலை கிடைத்துவிட்டது. பாபாவும் சொல்லியிருக்கிறார், இந்த எல்லை யற்ற ஏணிப்படியில் நீங்கள் கீழிறங்குகிறீர்கள், பிறகு ஏறுகிறீர்கள். நீங்கள் தான் முழு ஏணிப்படியிலும் இறங்குகிறீர்கள், பிறகு ஏறுகிறீர்கள். ஜின் நீங்கள் தான். மற்ற யாருமே முழு ஏணிப்படியில் ஏறுவதில்லை. முழு ஏணிப்படியின் ஞானம் கிடைப்பதால் நீங்கள் எவ்வளவு உயர்ந்த பதவி பெறுகிறீர்கள்! பிறகு கீழிறங்குகிறீர்கள். ஏறுகிறீர்கள். பாபா சொல்கிறார் – நான் உங்களுடைய தந்தை. நீங்கள் என்னைப் பதீத-பாவனர் எனச் சொல்கிறீர்கள் இல்லையா? நான் சர்வசக்திவான், ஆல்மைட்டி. ஏனென்றால் நான் ஆத்மா எப்போதுமே 100 சதவிகிதம் பவித்திரமாக இருக்கிறேன். நான் பிந்தி ரூப அத்தாரிட்டி. அனைத்து சாஸ்திரங்களின் இரகசியத்தை அறிவேன். இது எவ்வளவு பெரிய அதிசயம்! இது அனைத்தும் அற்புதமான ஞானம். இது போல் கேட்டிருக்க முடியாது, அதாவது ஆத்மாவுக்குள் 84 பிறவிகளின் அழியாத பாகம் அடங்கியுள்ளது. அது ஒருபோதும் தேய்வதில்லை. நடந்துக் கொண்டே இருக்கிறது. 84 பிறவிகளின் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இவ்வளவு சிறிய ஆத்மாவுக்குள் எவ்வளவு ஞானம் உள்ளது. பாபாவிடமும் உள்ளது என்றால் குழந்தைகள் உங்களிடமும் உள்ளது. எத்தனை பார்ட் (பாகம்) நடிக்கிறீர்கள்! இந்தப் பார்ட் ஒருபோதும் அழியாது. ஆத்மாவை இந்தக் கண்களால் பார்க்க இயலாது. அது பிந்தியாக உள்ளது. பாபாவும் சொல்கிறார், நான் அது போல் பிந்தியாக இருக்கிறேன். இதையும் குழந்தைகள் நீங்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எல்லையற்ற தியாகி மற்றும் இராஜரிஷி. எவ்வளவு நஷா ஏற வேண்டும்! இராஜரிஷி முற்றிலும் பவித்திரமாக இருப்பார்கள். இராஜரிஷி எனப்படுபவர்கள் சூரியவம்சி, சந்திரவம்சி-அவர்கள் இங்கே இராஜ்யத்தை அடை கிறார்கள். எப்படி நீங்கள் இப்போது அடைந்து கொண்டிருக்கிறீர்களோ, அதுபோல். இதையோ குழந்தைகள் அறிவார்கள், அதாவது நாம் இப்போது சென்றுக் கொண்டே இருக்கிறோம். படகோட்டியின் கப்பலில் அமர்ந்துள்ளோம். மேலும் இதையும் அறிந்துள் ளோம். இதையும் அறிவீர்கள், இது புருஷோத்தம சங்கமயுகம். நிச்சயமாகச் செல்லவும் வேண்டும். பழைய உலகிலிருந்து புது உலகத்திற்கு, சாந்திதாம் வழியாக. இது சதா குழந்தைகளின் புத்தியில் இருக்க வேண்டும். நாம் சத்யுகத்தில் இருந்தபோது வேறு எந்த ஒரு கண்டமும் கிடையாது. நம்முடைய இராஜ்யம் மட்டுமே இருந்தது. இப்போது மீண்டும் யோகபலத்தினால் தங்களின் இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏனென்றால் யோக பலத்தின் மூலம் தான் உலக இராஜ பதவியை அடைய முடியும் எனப் புரிய வைக்கப்பட்டுள்ளது. புஜ பலத்தினால் யாருமே அடைய முடியாது. இது எல்லையற்ற டிராமா. விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டைப் பற்றிய புரிதலை பாபா தான் தருகிறார். ஆரம்பத்திலிருந்து முழு உலகத்தின் சரித்திர- பூகோளத்தைச் சொல்கிறார். நீங்கள் சூட்சுமவதனம், மூலவதனத்தின் இரகசியத்தையும் நல்லபடியாக அறிவீர்கள். ஸ்தூலவதனத்தில் இவர்களின் இராஜ்யம் இருந்தது. நீங்கள் எப்படி ஏணிப்படியில் இறங்கி வருகிறீர்கள் என்பதும் நினைவு வந்துவிட்டது. ஏணிப் படியில் ஏறுவது மற்றும் இறங்குவது என்ற விளையாட்டு குழந்தைகளின் புத்தியில் பதிந்துள்ளது. எப்படி இந்த உலகத்தின் சரித்திர-பூகோளம் திரும்ப திரும்ப நடக்கிறது, இதில் நமது ஹீரோ-ஹீரோயின் பார்ட் இப்போது புத்தியில் உள்ளது. நாம் தான் தோல்வி யடைகிறோம், பிறகு நாம் தான் வெற்றி பெறுகிறோம். அதனால் ஹீரோ-ஹீரோயின் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. பாபாவின் இதயம் என்ற சிம்மாசனத்தை வெற்றி அடைய முயற்சி செய்யுங்கள். குடும்பத்தில் டிரஸ்டியாக இருந்து அன்போடு அனைவரையும் நடத்த வேண்டும். மோகத்தை வென்றவர் ஆக வேண்டும்.

2. யோகபலத்தால் ஆத்மாவை சுத்தமாக்க வேண்டும். இந்த கண்களினால் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் ஒரு தந்தையை நினைக்க வேண்டும். இங்கே மலர் மாலையை ஏற்றுக் கொள்ளாமல் மணமுள்ள மலராக வேண்டும்.

வரதானம்:-

சேவாதாரி ஆத்மாக்களின் நெற்றியில் வெற்றித் திலகஎந்த குழந்தைகள் தன்னுடைய அலைபாயும் உள்ளூணர்வை மாற்றிக் கொள்கிறார் களோ, அவர்களால் தான் சதோபிரதான சூழ்நிலையை உருவாக்க முடியும். ஏனெனில் உள்ளுணர்வு மூலம் தான் வாயுமண்டலம் (சூழ்நிலை) உருவாகிறது. உள்ளுணர்வில் இத்தனை பெரிய (உலக மாற்றத்தின்) காரியத்தின் நினைவு இல்லாத பொழுது தான் உள்ளுணர்வு அலைபாய்கிறது. ஒருவேளை ஏதாவ தொரு குழந்தை பிஸியாக இருந்தும் கூட மிகவும் அங்கும் இங்கும் அலைந்துக் (விளையாடி) கொண்டிருக்கிறது, விளையாடுவதை விடுவதில்லையென்றால், அதை கட்டி போட்டு விடுவார்கள். அதுபோல ஞானம் யோகத் தில் பிஸியாக இருந்தாலும் கூட உள்ளுணர்வு அலைபாய்கிறது என்றால், ஒரு பாபாவோடு அனைத்து தொடர்புகளின் பந்தனத்தில் உள்ளுணர்வை கட்டிப்போடு விடுங்கள், அலை பாய்வது நின்றுவிடும்.ம் இடப்பட்டிருந்தாலும், எந்த இடத்தில் சேவை செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் முன் கூட்டியே சர்ச் லைட்டின் வெளிச்சம் கொடுக்க வேண்டும். நினைவு என்ற சர்ச் லைட் மூலம் அநேக ஆத்மாக்கள் எளிதாக நெருக்கத்தில் வந்து விடும் அளவிற்கு வாயுமண்டலம் உருவாகி விடும். பிறகு குறைவான நேரத்தில் வெற்றி ஆயிரம் மடங்கு கிடைக்கும். நான் வெற்றி இரத்தினம், ஆகையால் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி நிறைந்திருக்கிறது என்ற திட சங்கல்பம் செய்ய வேண்டும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top