26 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris

26 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris

25 May 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நிச்சயபுத்தி உள்ளவராகி பாபாவின் ஒவ்வொரு கட்டளைப்படியும் நடந்து கொண்டே இருங்கள். கட்டளைப்படி நடப்பதால் தான் சிரேஷ்டமாக (உயர்வானவர்களாக) ஆவீர்கள்.

கேள்வி: -

எந்தக் குழந்தைகளை உண்மையிலும் உண்மையான கடவுளின் உதவியாளர் எனச் சொல்வார்கள்?

பதில்:-

யார் இராஜ்யத்தை அடைவதற்கான புருஷார்த்தம் செய்கிறார்களோ மற்றும் மற்றவர் களையும் தங்களைப் போல் ஆக்குகிறார்களோ அப்படிப்பட்ட ஈஸ்வரிய சேவையில் ஈடுபட்டி ருக்கக் கூடிய குழந்தைகள் உண்மையிலும் உண்மையான கடவுளின் உதவியாளர் ஆவார்கள். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் சகயோகி ஆவார்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கும் போது அனைவருக்கும் சொல்ல வேண்டும் – சிவபாபாவை நினைவு செய்யுங்கள். இதையோ நீங்கள் அறிவீர்கள் சிவபாபா இருக்கிறார், அவருடைய கோவிலுக்கும் செல்கின்றனர். ஆனால் சிவபாபா யார் என்பது. உங்களைத் தவிர யாருக்குமே தெரியாது – சிவபாபாவின் நினைவைக் கொடுக்க வேண்டும். இங்கே அமர்ந்திருக்கும் போது அநேகரின் புத்தியோகம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கும். அதனால் நினைவு படுத்த வேண்டியது உங்கள் கடமை. சகோதர-சகோதரிகளே, தந்தையை நினைவு செய்யுங்கள். அந்தத் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. நீங்கள் இப்போது உண்மையிலும் உண்மையான சகோதர-சகோதரிகள். அவர்களோ, வெறுமனே ஆண்-பெண் என்ற காரணத்தால் சகோதர-சகோதரி எனச் சொல்கின்றனர். சொற்பொழிவு செய்யும் போதும் கூட இதுபோல் சொல்வார்கள் – பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்…….. அவர்களோ சரீரத்தின் சம்மந்தத்தினால் சகோதர-சகோதரிகள். இங்கே அந்த விஷயம் கிடையாது. இங்கோ ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கப் படுகின்றது – தங்களின் படைப்பவரை நினைவு செய்யுங்கள் என்று . அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. வித்தியாசம் உள்ளது இல்லையா? சகோதர-சகோதரி என்ற வார்த்தையோ பொதுவானது. இங்கே தந்தை குழந்தைகளுக்குச் சொல்கிறார், தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். இந்த சிவபாபா ஆன்மிகத் தந்தை, மேலும் பிரஜாபிதா பிரம்மா சரீர சம்மந்தமான தந்தை. ஆக, பாப்தாதா இருவருமே சொல்கின்றனர், குழந்தைகளே, தந்தையை நினைவு செய்யுங்கள், வேறு எங்குமே புத்தியோகம் செல்லக் கூடாது. புத்தி அதிகமாக அலைகின்றது. பக்தி மார்க்கத்திலும் கூட இது போல் ஆகிறது. கிருஷ்ணரின் முன் அல்லது யாராவது தேவதையின் முன் அமர்கின்றனர். மாலை சுற்றுகின்றனர். புத்தி எங்கெங்கோ அலைந்து கொண்டே இருக்கிறது. தேவதைகள் என்பவர்கள் யார் ? அவர்களுக்கு இந்த இராஜ்யம் எப்படிக் கிடைத்தது? எப்போது கிடைத்தது? இது யாருக்கும் தெரியாது. சீக்கியர்கள் அறிந்துள்ளனர்- குருநானக் சீக்கிய தர்மத்தை ஸ்தாபனை செய்தார் என பிறகு அவருடைய குரு-பேரன்மார் (வம்சாவளியினர்) இருந்து வந்துள்ளனர். அவர்கள் புனர்ஜென் மத்தில் வந்து கொண்டே இருக்கின்றனர். இந்த விஷயங்களை யாருமே அறிந்திருக்கவில்லை. சதா குருநானக்கை நினைவு செய்ய மாட்டார்கள். குருநானக், புத்தர் அல்லது யாராவது தங்களின் தர்ம ஸ்தாபகரை நினைவு செய்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது எங்கே உள்ளனர் என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகி விட்டதாகச் சொல்லி விடுகின்றனர். அல்லது சப்தத்தைக் கடந்து சென்று விட்டனர் எனச் சொல்லி விடுகின்றனர், மேலும் கிருஷ்ணர் இங்கேயே ஆஜராகியுள்ளார், எங்கே பார்த்தாலும் கிருஷ்ணரே கிருஷ்ணர் தான். ராதையே ராதை தான். இது போல் சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பாபா அமர்ந்து புரிய வைக்கிறார் – பாரதவாசிகளாகிய நீங்கள் தேவதைகளாக இருந்தீர்கள். உங்கள் தோற்றம் மனிதருடையதாக, குணங்கள் தேவதையுடையதாக இருந்தது. தேவதைகளின் சித்திரங் களோ உள்ளன இல்லையா? சித்திரங்கள் இல்லை என்றால் இதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். இராதை-கிருஷ்ணருடன் உள்ள சித்திரம் பிறகு லட்சுமி-நாராயணருடன் என்ன சம்மந்தம்? இதை பாபா தான் வந்து புரிய வைக்கிறார். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும்-இதுவோ நிராகார் பாபா நமக்குப் புரிய வைக்கிறார் என்பதை. உண்மையில் நிராகாராக அனைவரும் தான் இருக்கிறார்கள். ஆத்மா நிராகார். பிறகு இந்த சாகார் (சரீரத்தின்) மூலம் பேசுகிறது. நிராகாரோ பேச முடியாது. நீங்கள் புரிய வைக்க முடியும்-எங்களுடைய பாபா தான் உங்களுடைய பாபாவும் கூட. சிவபாபா ஞானக்கடல், சாந்தியின் கடலாக இருக்கிறார். எல்லையற்ற தந்தை. அவருக்கும் சரீரமோ வேண்டும் இல்லையா? தாமே சொல்கிறார்-நான் இந்த பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி வருகிறேன். அப்போது தான் பிராமண தர்மத்தின் ஸ்தாபனை ஆகும். பிரம்மாவின் மூலம் பிராமணர்களின் படைப்பு நடைபெறுகிறது. ஆக, பாபா பிராமணக் குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கிறார். வேறு யாருக்கும் புரிய வைப்பதில்லை. குழந்தை களுக்குத் தான் புரிய வைக்கிறார். நாம் சிவபாபாவின் குழந்தைகள் அதனால் பகவான் என்பது கிடையாது. தந்தை தந்தை தான், குழந்தைகள் குழந்தைகள் தான். ஆம், எப்போது குழந்தை வளர்ந்து பெரிய வராகிறதோ, அப்போது தந்தையாகலாம், குழந்தை பெற்றெடுத்தால் தந்தை எனலாம். இவருக்கோ ஏராளமான குழந்தைகள் உள்ளனர் இல்லையா? குழந்தைகளுக்குத் தான் புரிய வைக்கிறார். யார் நிச்சயபுத்தி உள்ளவர்களோ, நிச்சயபுத்தி உள்ளவர்கள் தந்தையின் ஆணைப்படி நடப்பார்கள். ஏனென்றால் ஸ்ரீமத் மூலம் தான் சிரேஷ்டமானவராக ஆக முடியும்.

இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் அந்த தேவதைகள் போல் ஆகிக் கொண்டிருக்கிறோம். ஜென்ம- ஜென்மாந்தரமாக நாம் தேவதைகளின் மகிமையைப் பாடியே வந்திருக்கிறோம். இப்போது நாம் ஸ்ரீமத் படி அது போல் ஆக வேண்டும். இராஜ்யம் ஸ்தாபனை ஆக வேண்டும். அனைவருமோ முழுமையாக ஸ்ரீமத் படி நடக்க மாட்டார்கள். வரிசைக்கிரமமாக இருப்பார்கள். ஏனென்றால் மிகப்பெரிய இராஜ்யம். இராஜ்யத்தில் பிரஜைகள், வேலைக்காரர்கள், சண்டாளர்கள் முதலான அனைவரும் வேண்டும். அப்படிப்பட்ட நடத்தை உள்ளவர்களுக்கும் கூட சாட்சாத்காரம் கிடைக்கும். அதாவது இவர்கள் சண்டாளர்களின் குடும்பத்தில் செல்வார்கள். சண்டாளர் என்று ஒருவர் மட்டுமே இருக்க மாட்டார். அவருக்கும் குடும்பம் இருக்கும். சண்டாளர்களுக்கும் சங்கம் உள்ளது. அனைவரும் தங்களுக்குள் ஒன்று கூடுகின்றனர். வேலை நிறுத்தம் முதலியன செய்தார் கள் என்றால் அனைத்துக் காரியங்களையும் விட்டு விடுகின்றனர். சத்யுகத்தில் இது போன்ற விசயங்கள் கிடையாது. உங்களுடைய ஒரு சித்திரமும் உள்ளது. அதைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள், என்னவாக ஆக விரும்புகிறீர்கள்? பேரிஸ்டர் (வக்கீல்) ஆவீர்களா, தேவதை ஆவீர்களா? உங்களுடைய ராஜதானி முழுவதும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கின்றது. இது சாதாரண விசயம் கிடையாது. எல்லையற்ற தந்தை எல்லையற்ற விசயங்களை அமர்ந்து புரிய வைக்கிறார். இது புத்தியில் பதிய வேண்டும். நாம் வருங்காலத்திற்காக முயற்சி செய்து உயர்ந்த பதவி பெறுவோம். ஸ்ரீமத் படி நாம் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான ராஜபதவி பெறுவோம். பிறகு மற்றவர்களை எப்போது தங்களுக்குச் சமமாக ஆக்குகிறீர்களோ, அப்போது கடவுளின் உதவியாளர் எனச் சொல்லப்படுவீர்கள். ஒருவருடைய எதையுமே மறைத்து வைக்க முடியாது. இன்னும் போனால் அனைத்தும் தெரிய வரும். இது தான் ஞானத்தின் பிரகாசம் எனச் சொல்லப்படுகிறது. ஒளி கிடைத்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. வெடிகுண்டு களையும் உள்ளே (வெளியில் தெரியாமல்) உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். எந்த ஒரு பொருளும் சும்மா வைத்திருப்பதற்காக உருவாக்கப்படுவதில்லை. முதல்-முதலில் வாளைக் கொண்டு யுத்தம் நடைபெற்றது. பிறகு துப்பாக்கி உருவாக்கப்பட்டது, பயன்படுத்துவதற்காக. வைத்துக் கொள்வதற்காக அல்ல. இதனால் மரணம் நேரிடும் என்பதைப் புரிந்து கொண்டும் இருக்கின்றனர். சோதித்துப் பார்த்துள்ளனர் இல்லையா? ஹிரோஷிமாவில் ஒரு வெடிகுண்டால் எத்தனைப் பேர் மடிந்தார்கள்! அதன் பிறகு பாருங்கள், எவ்வளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தி யுள்ளனர்! எவ்வளவு ஏராளமான கட்டடங்களைக் கட்டியுள்ளனர்! இப்போது மருத்துவமனையில் போய்ச் சிகிச்சைக்காக இருக்கிற மாதிரியான விநாசம் ஏற்படாது. மருத்துவமனை முதலியனவோ இருக்காது. அதனால் நிலநடுக்கம் முதலியவை ஒன்றாக வரும். இயற்கையின் ஆபத்துகளை யாராலும் நிறுத்த முடியாது. சொல்லவும் செய்கின்றனர், இவையெல்லாம் ஈஸ்வரனின் கையில் உள்ளது என்று. இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், விநாசமோ நடை பெறத்தான் போகிறது. பஞ்சம் ஏற்படும். தண்ணீர் கிடைக்காது……… அதை நீங்களும் அறிவீர்கள். புதிய விசயம் எதுவும் இல்லை. கல்பத்திற்கு முன்பும் கூட இதுபோல் நடந்துள்ளது. கல்பத்தைப் பற்றிய ஞானமோ யாரிடமும் கிடையாது. சொல்லவும் செய்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் சொர்க்கம் இருந்தது. பிறகு சாஸ்திரங்களில் கல்பத்தின் ஆயுள் லட்சக் கணக்கான ஆண்டுகள் என எழுதப் பட்டுள்ளது. யாருடைய கவனத்திலும் செல்வதில்லை. கேட்டு விட்டுப் பிறகு தங்கள் வேலை முதலியவற்றில் ஈடுபட்டு விடுகின்றனர். ஆக, இப்போது பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் – இப்போது சீக்கிரம்-சீக்கிரமாகப் புருஷார்த்தம் செய்யுங்கள். பாபாவின் நினைவில் இருந்தால் கறை நீங்கிக் கொண்டே போகும். நீங்கள் இங்கேயே தான் சதோபிரதானமாக ஆக வேண்டும். இல்லையென்றால் தண்டனைகள் பெற்று அவரவர் தர்மங்களில் சென்று விடுவார்கள். பகவானின் ஸ்ரீமத் கிடைக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணரோ இராஜ குமார். அவர் யாருக்கு என்ன வழிமுறை தருவார்? இந்த விசயங்களை உலகத்தில் யாருமே அறிந்திருக்கவில்லை. அன்போடு புரிய வைக்க வேண்டும்-சிவபாபாவை நினைவு செய்யுங்கள். சிவபாபா தாமே சொல்கிறார்-என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அவரும் கல்யாணகாரி. மற்ற தொடர்பை விட்டு ஒருவருடைய சங்கத்தில் (தொடர்பில்) இணைய வேண்டும். நீங்கள் பாரதத்தின் படகை அக்கரை சேர்ப்பவர்கள். சத்திய நாராயணனின் கதையும் கூட பாரதத்துடன் தான் தொடர்பு ஏற்படுகிறது. வேறு தர்மங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் சத்திய நாராயணனின் கதை கேட்க மாட்டார்கள். யார் நரனில் இருந்து நாராயணனாக ஆகக் கூடிய ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ, அவர்கள் தான் கேட்பார்கள். அவர்கள் தான் அமரகதையைக் கேட்பார்கள். அமரலோகத்தில் தேவி-தேவதைகள் இருந்தனர் என்றால் நிச்சயமாக அமரலோகத்தில் அமரகதையின் மூலம் இந்தப் பதவி பெற்றிருப்பார்கள். ஒவ்வொரு விஷயமும் நினைவு செய்வதற்குரியது. ஒரு விஷயமாவது கூட புத்தியில் நல்லபடியாகப் பதிந்து விட்டால் அனைவரும் வந்து விடுவார்கள். பாபாவை நினைவு செய்ய வேண்டும் மற்றும் சுயதரிசனச் சக்கரத்தை கவனத்தில் வைக்க வேண்டும். சிவபாபாவுடன் கூட இங்கே பார்ட்டை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறகு போக வேண்டும்.

உண்மை எது, பொய் எது என்று பாபா தான் புரிய வைக்கிறார். சத்தியம் ஒன்று தான். மற்ற அனைத்தும் பொய். இலங்கையில் இராவணன் இருந்தான் என்றால் அது ஒருவரின் விசயமா என்ன? சத்யுக-திரேதாவிலோ இது போன்ற விசயங்கள் கிடையாது. இந்த மனிதர்களின் உலகம் முழுவதுமே இலங்கையாக உள்ளது. இதுவே இராவண இராஜ்யம். சீதைகள் அனைவரும் ஒரு இராமனை நினைவு செய்கின்றனர். அல்லது அனைவரும் பக்தைகள், மணமகள்கள், ஒரு பகவானாகிய மணமகனை நினைவு செய்கின்றனர். ஏனென்றால் இது இராவண இராஜ்யம். சந்நியாசிகள் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியாது. அனைவரும் துக்கத்தில் உள்ளனர், சோகவனத்தில் உள்ளனர். சோகவனம் என்பது கலியுகம். அசோகவனம் என்பது சத்யுகம். இங்கோ ஒவ்வோர் அடியிலும் சோகம், துக்கம் தான். உங்களை பாபா சோகமில்லாத சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார். இங்கோ மனிதர்கள் எவ்வளவு துக்கப்படுகின்றனர்! யாராவது இறந்து போனால் பைத்தியமாகவே ஆகி விடுகின்றனர். சொர்க்கத்திலோ இந்த விசயங்கள் அனைத்தும் இருப்பதில்லை. மனைவியாக இருப்பவர் விதவையாக ஆவது போன்ற அகால மரணம் ஒரு போதும் நடப்பதில்லை- அங்கோ சமயத்தில் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுத்துக் கொள்வார்கள். ஆண் அல்லது பெண்ணின் சரீரத்தை எடுத்துக் கொள்வார்கள். அப்போது இது சாட்சாத்காரம் ஆகும். கடைசியில் அனைத்தும் தெரிய வரும். யார்-யார் என்னவாக ஆவார்கள்? பிறகு அந்த கடைசி நேரத்தில் சொல்வார்கள், நாம் இவ்வளவு காலம் முயற்சி செய்யவில்லையே என்று. ஆனால் அந்த நேரத்தில் சொல்வதால் என்னவாகும்? சமயமோ முடிந்து போனது இல்லையா? அதனால் பாபா சொல்கிறார்-குழந்தைகளே, முயற்சி செய்யுங்கள். சேவையில் உண்மையான வலது கரமாக ஆவீர்களானால் இராஜ்யத்தில் வந்து விடுவீர்கள். சேவையில் ஈடுபட்டு இருங்கள். உதாரணமும் உள்ளது இல்லையா, எப்படி குடும்பம்-குடும்பமாக சேவையில் ஈடுபட்டுள்ளனர். சொல்வார்கள், இந்தக் குடும்பத்தில் அப்படிப்பட்ட நல்ல கர்மங்கள் செய்துள்ளனர், அதனால் அனைவரும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபட்டுள்ளனர். தாய்-தந்தை, குழந்தைகள்……. இதுவோ நல்லது தான் இல்லையா? சேவைக்குப் பின்னால் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்க வேண்டும். எப்படி மனிதர்களுக்கு வழி சொல்வது-அதன் மூலம் அவர்களின் ஆத்மா குஷி அடையும். எவ்வளவு பேருக்கு வழி சொல்கிறீர்கள்? நீங்கள் பிரஜைகளை உருவாக்கினீர்கள் என்றால் விதை போட்டீர்கள் அல்லவா? பிறப்பிலேயே ராஜாவாகவோ யாரும் இருப்பதில்லை. முதலில் பிரஜைகளின் அதிகாரியாக இருப்பார்கள். பிறகு முயற்சி செய்து-செய்தே எதிலிருந்து எதுவாக ஆக முடிகிறது! நீங்கள் சேவை செய்வதைப் பார்த்து மற்றவர்களுக்கும் ஊக்கம் வரும்-நாமும் ஏன் இது போல் புருஷார்த்தம் செய்யக் கூடாது என்று. இல்லையென்றால் கல்ப-கல்பமாக இதே நிலை ஏற்படும். அநேகர் வருவார்கள். வருத்தப் படுவார்கள். அந்தச் சமயத்தின் துக்கத்தைப் போல் முழு ஆயுளிலும் ஒரு போதும் பார்த்திருக்க மாட்டார்கள். ஸ்ரீமத் படி நடக்காத காரணத்தால் கடைசியில் இது போல் துக்கத்தைப் பார்ப்பார்கள். கேட்கவே வேண்டாம். ஏனென்றால் அநேக விகர்மங்கள் செய்துள்ளனர். பாபா வழியும் கூட மிகவும் சுலப மானதாகச் சொல்கிறார்-பாபாவை நினைவு செய்தால், போதும். மற்றவர்களுக்கும் இந்த வழியைச் சொல்லுங்கள்.

நீங்கள் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். எப்படி கிறிஸ்தவ தர்மத்தின் மனிதர்கள் உள்ளனர், இஸ்லாமிய தர்மத்தின் மனிதர்கள் உள்ளனர், அதுபோல. இது அனைத்திலும் தூய்மையான தர்மம். இதைப் போன்ற தர்மம் வேறெதுவும் இருக்க முடியாது. அரைக்கல்பம் நீங்கள் தூய்மையாக இருக்கிறீர்கள். சொர்க்கம் மற்றும் நரகம் பாடப் பட்டுள்ளது. ஹெவன் எனச் சொல்லப் படுவது எது என்பது கூட யாருக்கும் தெரியாது. பாபா பாரதத்தில் தான் வந்து அனைவரையும் எழுப்புகிறார். 5000 ஆண்டுகளின் விசயம். யார் சொர்க்கவாசியாக இருந்தனரோ, அவர்கள் தான் இப்போது நரகவாசியாக ஆகி விட்டுள்ளனர். பிறகு பாபா வந்து தூய்மையான சொர்க்கவாசியாக ஆக்குகிறார். ஒரு மணமகன் வந்து அனைத்து மணமகள்களையும் தம்முடைய அசோகவனத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஆக, முதல்-முதலில் அனைவருக்கும் இதைச் சொல்லுங்கள்- பாபாவை நினைவு செய்யுங்கள். இல்லையென்றால் இங்கே அமர்ந்திருக்கும் போதே புத்தி எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. பக்தி மார்க்கத்திலும் கூட இதே நிலைமை ஏற்படுகின்றது. (பிரம்மா) பாபா இதில் அனுபவியாகவோ உள்ளார் இல்லையா? ,அனைத் திலும் நல்ல தொழில் நகைவியாபாரத் தொழிலாகும். அதில் உண்மை-பொய்யைப் (அசல் மற்றும் கலப்படம்)புரிந்து கொள்வது கஷ்டம். இங்கேயும் கூட உண்மை மறைந்துள்ளது. எங்கும் பொய்யே நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுவும் டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. நீங்கள் அறிவீர்கள், நாம் அனைவரும் டிராமாவின் நடிகர்கள். இதிலிருந்து யாருமே வெளியேற முடியாது. யாருமே மோட்சத்தை அடைய முடியாது. விவேகத்தின் (பகுத்தறிவு) மூலம் காரியமாற்ற வேண்டியுள்ளது. தத்தமது நடிப்பில் நடித்துக் கொண்டே உள்ளனர். பிறகு கல்பத்திற்குப் பிறகு அதே பார்ட்டைத் திரும்பவும் செய்வீர்கள். மனிதர்கள் எப்படி இறந்து போகிறார்கள், விநாசம் ஏற்படுகிறது என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். அனைத்து ஆத்மாக்களும் நிர்வாணதாமத்திற்குச் சென்று விடுவார்கள். இந்த ஞானம் புத்தியில் உள்ளது. சேவையில் ஈடுபடுவதன் மூலம் அநேகருக்கு நன்மை ஏற்படும். பரிவாரம் முழுவதுமே இந்த ஞானத்தில் ஈடுபட்டு விட்டால் பெரிய அதிசயமாகவே ஆகி விடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) கடைசி நேரத்தின் பயங்கரக் காட்சிகளில் இருந்து அல்லது துக்கங்களில் இருந்து விடுபடுவதற்கு இப்போதி-ருந்தே பாபாவின் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். ஸ்ரீமத் படி தன்னைப் போல் மற்றவர்களை உருவாக்குகிற சேவை செய்ய வேண்டும்.

2) சேவையில் பாபாவின் வலதுகரமாக ஆக வேண்டும். ஆத்மாவைக் குஷிப் படுத்துவதற்கான வழி சொல்ல வேண்டும். அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

வரதானம்:-

எந்தக் குழந்தைகள் தன்னைத் தான் ஒரே தந்தையின், அதாவது இராமரின் உண்மையான சீதை எனப் புரிந்து, சதா சதா ஈஸ்வரிய மரியாதைகளின் கோட்டுக்கு உள்ளே இருப்பார்களோ, அதாவது இந்த கவனம் வைக்கிறார்களோ, அவர்கள் கவனம் உள்ளவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்தவர் களாகவும் (கேயர்ஃபுல் ஸோ சீயர்ஃபுல்) தானாகவே இருப்பார்கள். ஆகவே காலை முதல் இரவு வரைக்குமான என்னென்ன மரியாதைகள் (நடத்தைக்கான அறிவுரை) கிடைத்துள்ளனவோ, அவற்றைப் பற்றிய தெளிவான ஞானத்தை புத்தியில் வைத்து, தன்னை உண்மையான சீதை எனப் புரிந்து, மரியாதாக்களின் கோட்டுக்கு உள்ளேயே இருப்பீர்களானால் அப்போது மரியாதை புருஷார்த்தம் எனப் படுவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top