22 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris

21 May 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தன்னுடைய அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி தன்னுடைய எதிர்காலத்தை உருவாக்குங்கள். ஏனென்றால் மரணம் தலை மீது இருக்கின்றது.

கேள்வி: -

ஞானத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கூட குழந்தைகளுக்கு தாரணை ஏன் ஏற்படுவதில்லை?

பதில்:-

ஏனென்றால் ஞான சிந்தனை (விசார் சாகா மந்தன்) செய்வதில்லை. புத்தியின் தொடர்பு தேகம் தேக சம்மந்தங்களில் மாட்டி இருக்கின்றது. புத்தியில் இருந்து மோகத்தை விட்டால் தான் தாரணை ஏற்படும். மோகம் என்பது அப்படிப்பட்டது, மனிதர்களைக் குரங்கு போல் ஆக்கிவிடு கின்றது. எனவே பாபா குழந்தைகளுக்கு முதல் உறுதி மொழியை நினைவுப்படுத்துகின்றார். தேகம் தேக சகிதமாக அனைத்து சம்மந்தங்களையும் மறந்து என்னை நினைவு செய்யுங்கள்.

 

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

கள்ளம் கபடமற்ற தந்தை தனிப்பட்டவர்..

ஓம்சாந்தி. பாபா வந்து புரிய வைக்கின்றார். கெட்டுப் போனவைகளை சீர்த்திருத்தக்கூடியவர் என்று எல்லையற்ற தந்தைக்குத்தான் கூறப்படுகின்றது. இது குழந்தைகளுக்கு நன்றாகவே தெரியும். கிருஷ்ணர் அழுக்கானவர்களை சீர்திருத்த முடியாது. கீதையினுடைய பகவான் கிருஷ்ணர் கிடையாது. சிவன் தான். சிவபாபா படைப்பவர் கிருஷ்ணர் படைப்புதான். சொர்க்கத்தின் ஆஸ்தியைக் தரக்கூடியவர் சொர்க்கத்தை படைப்பவராகத்தான் இருக்க முடியும். இது தான் பாரதத்தினுடைய மிகப்பெரிய தவறாகும். ஸ்ரீகிருஷ்ணரை பாபா என்று ஒருபோதும் கூற முடியாது. ஆஸ்தி பாபாவிடமிருந்து தான் கிடைக்கின்றது. அதுவும் பாரதத்திற்குத்தான் கிடைக்கின்றது. பாரத்தில் தான் ஸ்ரீ கிருஷ்ணர் இளவரசர் என்றும், ராதை இளவரசி என்றும் புகழ் பாடப்படுகின்றது. மகிமை உயர்ந்ததிலும் உயர்ந்த ஒரு பாபாவிற்குத்தான். ஸ்ரீ கிருஷ்ணரோ உயர்ந்ததிலும் உயர்ந்த படைப்பு விஷ்வத்திற்கு எஜமானர் சூரிய வம்சத்தின் உயர்ந்த தேவதா வம்சம் என்று தான் அழைக்கப்படுகின்றது. கீதை தான் ஆதிசனார்த்தன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திர நூலாகும். சத்தியயுகத்தில் யாரும் ஞானம் சொல்லவில்லை. சங்கமயுகத்தில் பாபா தான் ஞானம் தருகின்றார். சித்திரங்களில் முதலில் இதனை தெளிவுப்படுத்துங்கள். இருவருடைய சித்திரத்தையும் வைத்து புரியவையுங்கள். பாபா தான் வந்து கீதையினுடைய பகவான் இவர் படைப்பவர், மறுபிறவி எடுக்காதவர், கிருஷ்ணர் அல்ல, இவர் படைப்பு. சிவபாபாதான் வைரத்திற்குச் சமமாக ஆக்குகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். வைரத்திற்குச் சமம், சோழிக்குச் சமம் என்ற புகழ் இருக்கின்றது. என்னை நினைவு செய்யுங்கள் என்பது பாபா வினுடைய கட்டளை என்பது குழந்தைகளின் புத்தியில் இருக்கின்றது. இவர் எல்லலையற்ற தந்தை. கிருஷ்ணர் எல்லைக்குட்பட்ட எஜமானன். விஷ்வத்திற்கு ராஜா ஆகின்றார். சிவபாபா ராஜா ஆவதில்லை. கீதைக்கு உண்மையிலேயே மிகப்பெரிய மகிமை இருக்கின்றது. அதன் கூடவே பாரதத்திற்கும் மகிமை உள்ளது. பாரதம் அனைத்து தர்மத்தினருக்கும் மிகப்பெரிய தீர்த்தம் ஆகும். கிருஷ்ணருடைய பெயரை போட்டதால் அனைத்து மகிமைகளும் இல்லாமல் போய்விட்டது. இதன் காரணத்தால் தான் பாரதம் சோழிக்குச் சமம் ஆகி விட்டது. எல்லாம் நாடகத்தின்படி நடக்கின்றது. ஆனாலும் எச்சரிக்கை கொடுக்கவேண்டியுள்ளது. பாபா மிக நல்ல முறையில் புரிய வைக்கின்றார். நாளுக்குநாள் ஆழமான ரகசியங்களைப் புரிய வைக்கின்றார். அதனால் பழைய சித்திரங்களை மாற்றி புதியதாக தயார் செய்ய வேண்டியுள்ளது. இது கடைசி வரையில் நடந்துக் கொண்டே யிருக்கும். சிவபாபா நமக்கு ஆஸ்தியைக் கொடுத்துக் கொண்டிருக் கின்றார் என்பது குழந்தைகளின் புத்தியில் நல்ல முறையில் இருக்க வேண்டும். என் ஒருவனை நினைவு செய்தீர்களென்றால் விகர்மம் வினாசம் ஆகிவிடும். கிருஷ்ணரை நினைவு செய்வதால் விகர்மம் வினாசம் ஆகாது. அவர் சர்வ சக்திவான் அல்ல. சர்வசக்திவான் பாபா தான் வந்து ஆஸ்தியும் தருகின்றார். மனிதர்கள் கிருஷ்ணரைத்தான் நினைவு செய்து கொண்டேயிருக்கின்றார்கள். கிருஷ்ணரே சொன்னதாக இருந்தாலும் என்ன சொல்லியிருக்கின்றார் தேகம், தேக சம்மந்தங்களை மறந்து என் ஒருவனை நினைவு செய்யுங்கள். ஆத்மா பாபாவைத் தான் நினைவு செய்யும் அல்லவா? கிருஷ்ணர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தை கிடையாது. இவையனைத்தையும் ஞான சிந்தனை செய்து புத்தியில் தாரணை செய்ய வேண்டும். சிலர் மோகத்தின் மாட்டியிருக்கின்ற காரணத்தால் தாரணை செய்ய முடியவில்லை. மற்ற தொடர்பை விடுத்து உன்னுடைய தொடர்பில் இருப்பேன் என்று நீங்கள் தான் பாடினீர்கள். எனக்கு ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆனால் மோகம் என்பது அப்படிப்பட்ட பொருள் குரங்கைப்போல் ஆக்கிவிடுகின்றது. மரணம் என்பது எதிரிலேயே இருக்கின்றது என்பதை பணக்காரர்களுக்கும் புரிய வைக்கப்படுகின்றது. அனைத்தையும் ஈஸ்வரிய சேவையில் ஈடுபடுத்துங்கள் எதிர்காலத்திற்கு சேமியுங்கள். ஆனால் குரங்கைப்போல மாட்டிக்கொண்டு விடுவதில்லை. என்னவெல்லாம் தேகம் தேக சகிதமானது உள்ளனவோ அவற்றிலிருந்து புத்தியை அகற்றிவிடுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடக்கவும். இந்த செல்வம், குழந்தை, பொருள் அனைத்தும் ஈஸ்வரனாகிய கடவுள் தந்தது என்று கூறுகின்றார்கள். உங்களுடைய செல்வம், பொருள் எல்லாமே அழியப் போகின்றது என்று இப்பொழுது அவரே வந்து கூறுகின்றார். சில செல்வம் மண்ணோடு மண்ணாகி போகும்…. பூமி அதிர்ச்சி வந்தால் அனைத்தும் அழிந்து விடும். விமானம் விழுகின்றது, நெருப்பு பிடிக்கின்றது என்றால் முதலில் திருடர்கள் உள்ளே நுழைந்து விடு கின்றார்கள். குழந்தைகளே தேகதாரிகளிடம் இருந்து மோகத்தை அகற்றிவிடுங்கள். மோகத்தை வென்றவராக வேண்டும். தேக அபிமானம்தான் நம்பர் ஒன் எதிரியாகும். தேவதைகள் ஆத்ம அபிமானியாக இருப்பார்கள். தேக அபிமானம் வருவதால் தான் விகாரத்தில் மாட்டிக் கொள்கின்றோம். இப்பொழுது ஆத்ம அபிமானியாக இருப்பதற்கு பயிற்சி செய்யவும். இந்த விஷயங்கள் உலகத்தில் உள்ள எந்த மனிதர்களுக்கும் தெரியாது. பரமாத்மாவையும் தெரிந்து கொள்ளவில்லை. ஆத்மா என்பது என்ன? பரமாத்மா யார்? ஆத்மா எத்தனை பிறவி எடுக்கின்றது? எப்படி பாகத்தை நடிக்கின்றது? என்பது யாருக்கும் தெரியாது. எனவே அனாதை, ஆதரவற்றவர் என்று சொல்லப்படுகின்றது. ஆத்மா ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகிவிடு கின்றது என்று சொல்கின்றார்கள். ஆனால் ஆத்மா அழிவற்றது. ஆத்மாவில் தான் 84 பிறவிகளின் பாகம் பதிவாகியுள்ளது. ஆத்மா நட்சத்திரம் என்று சொல்கின்றார்கள் ஆனாலும் புரிந்துகொள்வதில்லை. ஆத்மாவையே பரமாத்மா என்று கூறுகின்றார்கள், பாபாவை முற்றிலும் தெரிந்து கொள்ளவில்லை. இரு புருவங்களுக்கு மத்தியில் (பிருக்குட்டியின் மத்தியில்) ஜொலிக்கும் அதிசய நட்சத்திரம் என்று ஆத்மாவைக் கூறுகின்றார்கள். பரமாத்மாவைப் பற்றி எதையும் கூறவில்லை. அவரை பரமாத்மா என்று சொல்லப்படுகின்றது, அவர் பரந்தாமத்தில் இருக்கின்றார். அவரும் புள்ளியாகத் தான் இருக்கின்றார். மறுபிறவியில் மட்டும் வருவதில்லை. ஆத்மா மறுபிறவி எடுக்கின்றது. ஞானக்கடல், ஆனந்தக்கடல், தூய்மையின் கடல் என்று பரமாத்மாவைத் தான் சொல்லப் படுகின்றது. தேவதைகளுக்கு இந்த ஆஸ்திகளை கொடுத்தது யார்? பாபாதான். சர்வகுண சம்பன்ன 16 கலைகள் சம்பூர்ண.. இந்த தேவதைகளைப் போல் யாரும் இல்லை. அவர்களுக்கு இந்த ஆஸ்தி எப்படி கிடைத்தது இது யாருக்கும் தெரியாது. பாபா வந்துதான் புரிய வைக்கின்றார். அவருக்குத் தான் ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றது.. இந்த நேரம் வந்து ஞானம் தருகின்றார், பிறகு இது மறைந்துவிடும். பிறகு பக்திதான் இருக்கும். அதனை ஞானம் என்று கூற முடியாது. ஞானத்தின் மூலமாகத் தான் சத்கதி கிடைக்கின்றது. எப்பொழுது துர்கதியில் இருக்கின்றீர்களோ அப்பொழுது சத்கதி தாதா ஞானக்கடல் வருகின்றார். பாபா வந்துதான் ஞான ஸ்நானம் செய்விக்கின்றார். அங்கு செய்வது தண்ணீரில் ஸ்நானம். அதன் மூலம் சத்கதி கிடைக்காது. இந்த சிறிய விஷயத்தையாவது தாரணை செய்ய வேண்டும். முக்கியமான நல்ல நல்ல சித்திரங்கள் இருக்கின்றன அவை பெரிய அளவில் இருக்க வேண்டும். நல்ல முறையில் புரிந்து கொள்வதற் காக வார்த்தைகள் மிக நன்றாக இருக்க வேண்டும். சித்திரங்களை உருவாக்குபவர் இதனை புத்தியில் வைக்க வேண்டும். வாருங்கள், பரம்பிதா பரமாத்மாவின் அறிமுகத்தை தெரிந்துக் கொண்டு எதிர்கால 21 பிறவிகளுக்கு பாபாவிடமிருந்து ஆஸ்தி அடையுங்கள் என்று யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் அழைப்பு விடுக்கலாம். சகோதர, சகோதரிகளே பரமபிதா பரமாத்மா விடமிருந்து எல்லையற்ற சுகத்தின் சுய ராஜ்யத்தை எப்படி அடைவது வந்து புரிந்துக் கொள்ளுங்கள். எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தியடையக் கற்றுக் கொள்ளுங்கள், இதில் பயப்பட தேவையில்லை. ஹே! பதீத பாவனா வாருங்கள் என்று அழைத்து கொண்டேயிருக் கின்றீர்கள். காமம் என்பது மகா எதிரி. பாவனமான உலகிற்குச் செல்ல வேண்டுமானால் அவசியம் தூய்மையாக வேண்டும். யார் விகாரத்தின் மூலமாக பிறவி எடுக்கின்றார்களோ அவர்கள் பதீதமானவர் என்று கூறப்படுகின்றனர். சத்தியயுகம் திரேதா யுகத்தில் விகாரங்கள் இருப்பதில்லை, எனவே தான் அதனை நிர்விகாரி உலகம் என்று அழைக்கப்படுகின்றது. விகாரம் அங்கு இருப்பதில்லை. பிறகு அங்கு குழந்தைகள் எப்படி பிறக்கும் என்ற கேள்வியை ஏன் கேட்கின்றீர்கள்? நீங்கள் நிர்விகாரியாகுங்கள். குழந்தை எப்படி வரவேண்டுமோ அப்படி வந்துவிடும். பிறகு ஏன் கேட்கின்றீர்கள்? நீங்கள் பாபாவை நினைவு செய்தீர்களென்றால் பல பிறவி களுக்கான பாவங்கள் அழிந்துவிடும். இது பாவ ஆத்மாக்களின் உலகமாகும். அது புண்ணிய ஆத்மாக்களின் உலகம் ஆகும். இதனை நல்ல முறையில் புத்தியில் பதிய வைத்துக் கொள்ளவும். பக்தியினுடைய பலனை பகவான் வந்துதான் தருகின்றார். பாபாதான் அனைவருக்கும் சத்கதியை அளித்து சொர்க்கத்திற்கு எஜமானன் ஆக்குகின்றார். இப்பொழுது பவித்திரமாகுங்கள், என் ஒருவனை நினைவு செய்யுங்கள், இதுதான் மகாமந்திரமாகும். பாபாவிடமிருந்து அவசியம் ஆஸ்தி கிடைக்கும். நீங்கள் என்னை நினைவு செய்தால் சதோபிரதானமாகிவிடுவீர்கள். ஏணிப்படியில் புரிய வைக்கவும். நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருளும் மாறிக் கொண்டேயிருக்கின்றது. இதை தெளிவுப்படுத்தி எழுதவும். பிரம்மா மூலமாக ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் ஸ்தாபனையாகின்றது. எப்போது ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இருந்ததோ? அப்போது வேறு எந்த தர்மமும் கிடையாது. யார் பவித்திரமாகுகின்றார்களோ? அவர்களே பவித்திரமான உலகிற்கு வருகின்றார்கள். எவ்வளவு சக்தி உங்களுக்குள் நிறைகின்றதோ? அவ்வளவு முதலில் வருவீர்கள். அனைவரும் ஒன்றாக வர முடியாது. சத்தியயுகம், திரேதா யுகத்தில் தேவி தேவதைகள் மிகக்குறைந்த அளவில் தான் இருப்பார்கள். பிறகு தான் அதிகமாகின்றார்கள். பிரஜைகள் கூட நிறைய இருப்பார்கள். புரிய வைப்பவர்கள் மிக நன்றாக (புத்திசாலிகளாக) இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தையிடம் வந்து ஆஸ்தியடையுங்கள். அவரைத்தான் அழைத்தீர்கள் ஹே! தந்தையே என்று! அவருடைய பெயர் சிவன் ஆகும். ஹே! ஈஸ்வரா, பிரபு என்று சொல்லும் போது அவர் தந்தை, ஆஸ்தி அவரிடமிருந்து கிடைக்கின்றது என்ற புரிதல் வருவதில்லை. சிவபாபா என்று சொல்லும் போதுதான் ஆஸ்தியின் நினைவு வருகின்றது. சிவ பரமாத்மா நமஹ! என்று அவருக்கு சொல்கின்றார்கள் அவருடைய பெயரைக் கூறுங்கள். பெயர் ரூபத்திற்கு அப்பாற்பட்டது எதுவும் இருக்க முடியாது. அவருடைய பெயர் சிவன். சிவாய நமஹ! என்று மட்டும் கூறக்கூடாது. சிவ பரமாத்மாய நமஹ! என்று கூறுங்கள். ஒவ்வொரு வார்த்தையையும் மிகத் தெளிவு படுத்தி புரிய வைக்கவும். சிவாய நமஹ என்று கூறுவதால் பாபா என்ற குரல் வருவதில்லை. மனிதர்கள் அனைத்து பெயரையும் தனக்கு வைத்துக்கொண்டார்கள். உங்களுக்குத் தெரியும் மனிதர்களை ஒருபோதும் பகவான் என்று கூறமுடியாது. பிரம்மா விஷ்ணு சங்கரரைக்கூட தேவதை என்றுதான் சொல்லப்படுகின்றது. ஒரேவொரு நிராகார தந்தையைத்தான் படைப்பவர் என்று சொல்லப்படுகின்றது. எப்படி லௌகீக தந்தை குழந்தைகளைப்படைக்கின்றார் அல்லவா? ஆஸ்தியும் தருகின்றார். அப்படி எல்லையற்ற தந்தையும் ஆஸ்தி தருகின்றார். பாரதத்தை உலகிற்கு எஜமானன் ஆக்குகின்றார். முழு உலகிற்கும் பதீத பாவனன் ஒரே ஒரு பாபாதான். இதனை யாராவது தெரிந்திருக்கின்றார்களா? நம்முடைய தர்மஸ்தாபகர் கூட இந்த நேரம் பதீதமாக உள்ளார். சுடுகாடாக உலகம் இருக்கினறது. இப்பொழுது அனைவருக்கும் கணக்குகளை முடிக்கும் கடைசி நேரம். பாபா வந்துதான் அனைவரையும் எழுப்புகின்றார். கடைசி நேரத்தில் தான் குதா, பகவான் வருகின்றார். அவர்தான் ஞானக்கடல்……… குழந்தைகள் எரிந்து சாம்பலாகிவிட்டார்கள் அதாவது காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகிவிட்டார்கள், இரும்பு யுகமாகி விட்டது. பிறகு எப்படி வெண்மையாவது? நினைவு யாத்திரையின் மூலமாகத்தான் என்று பாபா கூறுகின்றார். யோகம் என்ற வார்த்தையைக் கேட்டாலே மனிதர்கள் குழம்புகின்றார்கள். என்னை நினைவு செய்தீர்களென்றால் அந்த் மதி சோ கதியடைவீர்கள். எவ்வளவு சகஜமாக புரிய வைக்கின்றார் என்றாலும் ஏன் புத்தியில் பதிவதில்லை? தேக அபிமானம் நிறைய இருக்கின்றது. எனவே புத்தியில் பதிவதில்லை. பாபா மிக நல்ல யுக்தி கூறுகின்றார். எல்லையற்ற தந்தை யாரை நீங்கள் நினைவு செய்தீர்களோ அவர் வந்து என்ன செய்தார்? பாரதத்தை சொர்க்கம் ஆக்கியிருக் கின்றார். எல்லைகுட்பட்ட ஆஸ்தியை பல பிறவிகளாக அடைந்துவந்தீர்கள். இப்பொழுது எல்லையற்ற தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு எல்லையற்ற ஆஸ்தியை அடையவும். சத்தியயுகம், திரேதாயுகத்தில் தேவி தேவதைகள் ராஜ்யம் செய்தார்கள். சூரிய வம்சம், பிறகு சந்திரவம்சம் அவர்களே வைஷ்ய வம்சம் சூத்திர வம்சம், இந்த வார்த்தைகளை தெளிவாக எழுதும் போது அவர்களே மறுபிறவி எடுத்து வர்ணங்களில் வருகின்றார்கள் என்பதைப் புரிந்துக் கொள்வார்கள். பாபா அனைவருக்கும் புரிய வைக்கின்றார். நீங்கள் எதிரில் அமர்ந்து இருக்கின்றீர் கள் எனவே மகிழ்ச்சியாக உள்ளீர்கள். சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லையென்றால் சேவை செய்வ தில்லை. சேவை செய்தால் பெயர் கிடைக்கும். பாபாவினுடைய குழந்தைகள் எவ்வளவு புத்திசாலி யாக உள்ளார்கள், அனைத்து காரியங்களையும் செய்கின்றார்கள் என்று கூறுவார்கள். அனைவருக்கும் சொர்க்க இராஜ்யத்திற்கான ஆஸ்தியையும் இந்த பொக்கிஷத்தையும் தரு கின்றார். இந்த படங்கள் குருடர்களுக்கு முன்னால் கண்ணாடிப்போல் ஆகும். அதில் மந்திரத் திற்கான விஷயங்கள் எதுவுமில்லை. பவித்திரத்தாதான் (தூய்மை) முக்கியமான விஷயம். இது கடைசி பிறவி. சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமானால் அவசியம் தூய்மையாக வேண்டும். வினாசம் எதிரிலேயே இருக்கின்றது. அவசியம் பாவனமாக வேண்டும். பாவனமாவதற்காக சன்யாசிகள் வீடு வாசலை விட்டுவிடு கின்றார்கள். வினாசம் எதிரிலேயே இருக்கின்றது, எனவே என்னை நினைவு செய்யுங்கள் உங்கள் படகு கரை சேர்ந்துவிடும். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகு காலத்திற்குப்பிறகு கண்டெடுக்கப்பட்ட குழந்தைகுளுக்கு தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) வினாசத்திற்கு முன்னால் தன்னுடைய அனைத்தையும் பயனுள்ளதாக்கிக் கொள்ளுங்கள். இது கடைசி (கணக்கு வழக்கு சரிபார்க்கும்) நேரம் எனவே அவசியம் பாவனமாக வேண்டும்.

2) தேகதாரியிடமிருந்து மோகத்தை அகற்றி மோகத்தை வென்றவராகுங்கள். தேக அபிமானம் என்ற முதல் எதிரி மீது வெற்றியடையவும். மற்ற தொடர்பிலிருந்து விடுப்பட்டு ஒரு பாபாவிடம் புத்தியினை இணைக்கவும்.

வரதானம்:-

நிகழ்காலத்தில் மனன சக்தி மூலம் ஆத்மாவில் அனைத்து சக்திகளை நிரப்புவதற்கான அவசியம் உள்ளது. இதற்காக உள்நோக்குமுகமுடையவர் ஆகி ஒவ்வொரு பாயிண்ட்டையும் சிந்தனை செய்யுங்கள், அப்பொழுது வெண்ணைய் கிடைக்கும், மேலும் சக்திசாலி ஆகிவிடுவீர்கள். அப்பேற்பட்ட சக்திசாலி ஆத்மாக்கள் அதீந்திரிய சுகத்தின் பிராப்தியை அனுபவம் செய்வார்கள். அவர்களை அல்ப காலத்தின் எந்தப் பொருளும் தன் பக்கம் கவர்ச்சிக்க முடியாது. அவர்களுடைய மூழ்கி இருக்கும் நிலையின் மூலம் ஆன்மீகத் தன்மையின் சக்திசாலியான ஸ்திதி என்ன உருவாகின்றதோ, அதன் மூலம் தடைகளின் ஃபோர்ஸ் சமாப்தி ஆகிவிடுகிறது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top