19 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris

18 May 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! தங்களின் உயர்ந்த அதிர்ஷ்டத்தை உருவாக்கிக் கொள்வதற்காக நீங்கள் பாபாவிடம் வந்திருக்கிறீர்கள். எந்தளவு ஸ்ரீமத் படி நடக்கிறீர்களோ, அந்தளவு உயர்ந்ததாக அதிர்ஷ்டம் உருவாகும்.

கேள்வி: -

பக்தியின் எந்த ஒரு பழக்கம் இப்போது குழந்தைகளாகிய உங்களிடம் இருக்கக் கூடாது?

பதில்:-

பக்தியில் கொஞ்சம் துக்கம் ஏற்படுகிறது, நோய் வருகிறது என்றால் ஹே ராம், ஹே பகவான் என்று அழைப்பது, ஐயோ-ஐயோ எனக் கூக்குரலிடுகிற பழக்கம் பக்தி மார்க்கத்தில் உள்ளது. இப்போது நீங்கள் ஒரு போதும் இது போன்ற சொற்களை வாயிலிருந்து வெளிப்படுத்தக் கூடாது. நீங்களோ மனதிற்குள்ளாகவே இனிமையான பாபாவை அன்போடு நினைவு செய்ய வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

அதிர்ஷ்டத்தை எழுப்பிக் கொண்டு வந்துள்ளேன்….

ஓம் சாந்தி. சுகம் மற்றும் சாந்தியின் அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்காக ஒவ்வொரு மனிதரும் முயற்சி செய்கின்றனர். சாது-சந்நியாசிகள் முதலானவர்கள் சொல்கின்றனர், எங்களுக்கு சாந்தி வேண்டும். துக்கத்தைப் போக்கி சுகம் கொடுங்கள் என்று. பகவான் தான் மனிதர்கள் அனைவரின் துக்கத்தைப் போக்கி சுகம் தருபவர் எனப் புரிந்து கொண்டுள்ளனர். இப்போது பகவானை மனிதர்கள் அறிந்து கொள்ளவே இல்லை. நீங்களோ சிவபாபா எனச் சொல்கிறீர்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரை பாபா எனச் சொல்ல மாட்டார்கள். அவர்களோ தேவதைகள். பகவானைத் தான் பாபா எனச் சொல்வார்கள். அவர் நிராகார், அவருக்குப் பூஜை செய்கின்றனர். சிவபாபா அனைவருக்கும் உரியவர் என்பதை அறிந்துள்ளனர். ஆனால் நாம் பாபா என்று ஏன் சொல்கிறோம் என்ற சிந்தனை வருவதில்லை. லௌகீகத்திலும் பாபா ஒருவர் உள்ளார். அவர் பிறகு எந்தத் தந்தை? இதை ஆத்மா சொல்கிறது, அவர் நிராகார் தந்தை. அவரும் நிராகார், ஆத்மாக் கள் நாமும் கூட நிராகார். சாகார் பாபா இருந்த போதிலும் ஆத்மா அந்தத் தந்தையை மறப்ப தில்லை. காட் ஃபாதர் உள்ளார், நாம் அவருடைய குழந்தைகள். இங்கே பரமபிதா எனச் சொல் கின்றனர். ஆங்கிலத்தில் சொல்கின்றனர் – காட் ஃபாதர், சுப்ரீம் ஸோல், அனைவரையும் விட உயர்ந்தவர். லௌகிக் தந்தையோ சரீரத்தைப் படைப்பவர். அவரோ பரலௌகிகத் தந்தை. தந்தை தான் வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். தந்தையை நினைவு செய்கின்றனர், ஏனென்றால் தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கின்றது. நீங்கள் தந்தையிடம் வந்திருப்பதே ஆஸ்தி பெறுவதற் காக. துக்கத்தைப் போக்கி சுகமளிக்கும் தந்தை தான் வந்து சுகத்திற்கான வழி சொல்கிறார். பிறகு அங்கே துக்கத்தின் பெயர் அடையாளம் எதுவும் இருக்காது. இங்கோ மிகுந்த துக்கம் இல்லையா? அனைவருமே அழைக்கின்றனர். இப்போதோ உலகத்தில் அதிக துக்கம் வரப் போகிறது. யாராவது இறந்து விட்டால் எவ்வளவு துக்கம் அடைகின்றனர்! ஐயோ பகவானே என்று அழுகின்றனர். அவர் தான் கல்யாண்காரியாகிய தந்தையின் புகழ் பாடுகிறீர்கள் என்றால் நிச்சயமாக துக்கத்தைப் போக்கியிருக்கிறார், சுகம் கொடுத்திருக்கிறார் இல்லையா? பாபா வந்து புரிய வைக்கிறார் – குழந்தைகளே, நீங்கள் கல்ப-கல்பமாக எப்போது அதிக துக்கம் அடைந்து, தூய்மை இல்லாத வர்களாக ஆகி விடுகிறீர்களோ, அப்போது அழைக்கிறீர்கள், ஹே பாபா வாருங்கள் என்று. நான் கல்ப-கல்பமாக வரத் தான் செய்கிறேன், சங்கமயுகத்தில். தூய்மையான உலகத்தின் ஆரம்பம் மற்றும் தூய்மை இல்லாத உலகத்தின் கடைசி சமயம் சங்கமயுகம் எனச் சொல்லப் படுகின்றது. இந்த ஒரு சங்கமயுகம் தான் பாடப்படுகின்றது. பாபா வருகிறார், அனைவரின் (ஆத்ம) ஜோதியை எழுப்புவதற்காக, துக்கத்தைப் போக்கி சுகம் தருவதற்காக. நீங்கள் அறிவீர்கள், நாம் பரலௌகிகத் தந்தையிடம் வந்துள்ளோம். அந்த பாபா இவருக்குள் பிரவேசமாகி வந்துள்ளார். அவர் தாமே சொல்கிறார், நான் இவருக்குள் (பிரம்மாவிற்குள்) பிரவேசமாகி இவரது பெயரை பிரம்மா என வைக்கிறேன். நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார் மற்றும் குமாரிகள். உங்களுக்கு இந்த நிச்சயம் உள்ளது-நாம் பிரம்மாவின் குழந்தைகளாக ஆகியிருக்கிறோம் – பாபாவிடமிருந்து சுகத்தின் ஆஸ்தி பெறுவதற்காக. குழந்தைகளாகிய உங்களுக்குத் தான் சுகம் இருந்தது அப்போது இந்த லட்சுமி- நாராயணரின் இராஜ்யம் இருந்தது. இப்போது கலியுகம், துக்கதாமம். அதற்குப் பிறகு சத்யுகம் வரும். உலகத்தின் சரித்திர-பூகோளம் திரும்பவும் அதே போல் நடைபெறுகிறது இல்லையா? சத்யுகத்தில் பிறகு இந்த லட்சுமி- நாராயணரின் இராஜ்யம் தான் இருக்க வேண்டும். இந்தச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பாபா புரிய வைத்துள்ளார், நீங்கள் நரகவாசி ஆகியிருக்கிறீர்கள். இப்போது சொர்க்கவாசி ஆக வேண்டும். தேவி- தேவதாக்களாகிய உங்களுடைய மிகச்சிறிய மரம் இருந்தது. இப்போது உங்களுக்கு நினைவு வந்து விட்டது. நாம் 84 பிறவிகள் எடுத்துள்ளோம். நாம் முழு உலகத்தின் எஜமானர்களாக இருந்தோம். பிறகு மறுபிறவி எடுத்தே வந்துள்ளோம். இப்போது உங்களுடைய 84 பிறவிகளின் கடைசியிலும் கடைசி. உலகம் புதியதிருந்து நிச்சயமாகப் பழையதாகும். புது உலகம் தூய்மையாக இருந்தது. இப்போது பழைய தூய்மையற்ற உலகம். எவ்வளவு துக்கம் மற்றும் ஏழ்மையில் உள்ளனர்! பாரதம் மிகவும் செல்வம் நிறைந்த தேசமாக இருந்தது. தூய்மையான கிரஹஸ்த (இல்லற) ஆசிரமம் இருந்தது. தூய்மையான இல்லற மார்க்கம் இருந்தது. சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தனர். சர்வகுண சம்பன்னமாக, 16 கலை சம்பூர்ணமாக இருந்தனர். இந்த விசயங்கள் சாஸ்திரங்களில் கிடையாது. சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்திற்கானவை. பக்தியின் பழக்க-வழக்கங்கள் தான் அவற்றில் உள்ளன. தந்தையுடன் சந்திப்பதற்கான வழி சாஸ்திரங்களில் கிடைக்காது. புரிந்து கொண்டும் உள்ளனர் – பகவானோ இங்கே வந்தாக வேண்டும், பிறகு அங்கே சென்று சேர்வதற்கான விசயமோ இல்லை. யக்ஞம், தவம் முதலியன செய்வது ஒன்றும் வழிமுறை கிடையாது. பகவானை அழைக்கவே செய்கின்றனர் – வாருங்கள், வந்து வழி சொல்லுங்கள் என்று. ஆத்மாக்கள் நாங்கள் தமோபிர தானமாக ஆகி விட்டுள்ளோம். இதன் காரணத்தால் தான் பறக்க முடியவில்லை. அதாவது தந்தையிடம் செல்ல முடியவில்லை. ஆத்மாவோ ஒரு சரீரம் விட்டு வேறொன்றை எடுக்கின்றது. எங்கேயாவது சென்று விடுகிறது. அமெரிக்காவுக்கும் கூட செல்ல முடியும். யாருக்காவது யாருடனாவது சம்மந்தம் இருக்குமானால் ஆத்மா உடனே அங்கே பறந்து விடும், ஒரு விநாடியில். மற்றப்படி பறந்து திரும்பவும் தனது வீட்டுக்குச் செல்வது என்பது நடக்க முடியாது. தூய்மையற்ற ஆத்மா அங்கே செல்ல முடியாது. அதனால் ஹே பதீத பாவனா வாருங்கள் என அழைக்கின்றனர். தந்தை இப்போது வருகிறார், வந்து புரிய வைக்கிறார் – எப்போது முழு உலகமும் தூய்மை இல்லாததாக உள்ளதோ, அப்போது தான் நான் வருகிறேன். தூய்மையற்ற உலகத்தில் தூய்மை யானவர் ஒருவர் கூடக் கிடையாது. கங்கை பதீத பாவனி என நினைக்கின்றனர். அதனால் அதில் குளிப்பதற்காகச் செல்கின்றனர். ஆளால் தணணீரினாலோ யாரும் தூய்மையாக முடியாது. பழைய உலகமே தூய்மையற்றதாகிவிட்டது. புது உலகம் தூய்மையானது. இப்போது நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் ஆஸ்தி பெறுவதற்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் புண்ணிய ஆத்மா ஆக வேண்டும். ஆத்மா நீங்கள் சதோபிரதானமாக இருந்தீர்கள். இப்போது நீங்களே தமோபிரதானமாக இருக்கிறீர் கள். பிறகு கங்கா ஸ்நானத்தினால் ஒன்றும் சதோபிரதானமாக ஆக முடியாது. தூய்மையற்றவர் களைப் தூய்மையாக்குவதோ தந்தையின் காரியமாகும். மற்றப்படி அந்தத் தண்ணீரின் நதியோ எல்லா இடங்களிலும் உள்ளது. மேகங்களில் இருந்து மழை பொழிகின்றது. அனைவருக்கும் கிடைக்கின்றது. தண்ணீரின் நதி தூய்மை யாக்கும் என்றால் பிறகு அனைவரையும் தூய்மையாக்கி விடும். தூய்மையாவதற்கான யுக்தியை பாபா தான் வந்து இவர் மூலமாக (பிரம்மா) சொல்கிறார். இவருக்குத் தம்முடைய ஆத்மா உள்ளது. பாபா சொல்கிறார் – எனக்கு எனது சரீரம் என்பது கிடையாது. கல்ப-கல்பமாக இவருக்குள் தான் வருகிறேன், உங்களுக்குப் புரிய வைப்பதற்காக. நீங்கள் தங்களுடைய பிறவிகள் பற்றி அறிய மாட்டீர்கள். கல்பத்தின் ஆயுளை இலட்சக் கணக்கான வருடங்கள் எனச் சொல்லி விட்டனர்.

பாபா சொல்கிறார் – இது 84 பிறவிகளின் சக்கரம். 5000 ஆண்டுகளில் 84 இலட்சம் பிறவிகளை யாரும் எடுக்க முடியாது. ஆக, பாபா புரிய வைக்கிறார் – சொர்க்கத்தில் நீங்கள் 16 கலை சம்பூர்ண மாக இருந்தீர்கள். பிறகு 2 கலைகள் குறைந்தன. பிறகு கொஞ்சம்-கொஞ்சமாகக் கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன. புது உலகம் தான் பிறகு பழைய உலகமாக ஆகிறது. துவாபர-கலியுகம் தூய்மையில்லாத உலகம் என அழைக்கப் படுகின்றது. இந்த விசயங்கள் எந்த ஒரு சாஸ்திரத்திலும் கிடையாது. என்னைத் தான் ஞானக்கடல் எனச் சொல்கின்றனர். நான் ஏதாவது சாஸ்திரம் படிக்கிறேனா என்ன? நான் இந்த சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிந்துள்ளேன். பக்தி மார்க்கத்தினருக்கு இந்த ஞானம் இருக்க முடியாது. அவர்களிடமுள்ள அனைத்தும் பக்தி மார்க்கத்தின் ஞானம். பாடவும் செய்கின்றனர், நாங்கள் பாவிகள், நீசர்கள், எங்களிடம் எந்த நற்குணமும் இல்லை. தாங்கள்தான் எங்கள் மீது இரக்கம் வையுங்கள்……… இவர்கள் மீது இரக்கம் வைக்கப் பட்டது. அதனால் தான் மனிதரில் இருந்து தேவதை ஆகியுள்ளனர். இது உயர்ந்ததிலும் உயர்ந்த அதிர்ஷ்டம் எனச் சொல்லப்படுகின்றது. பள்ளிக் கூடத்திற்கு அதிர்ஷ்டத்தை அமைத்துக் கொள்வதற்காகச் செல்கின்றனர். சிலர் ஜட்ஜாகவும், சிலர் இஞ்சினீயராகவும் ஆகின்றனர். அது விகாரி உலக அதிர்ஷ்டம். உங்களுக்கு இது ஈஸ்வரன் மூலமாக உருவாகும் அதிர்ஷ்டம். அதனால் அழைக்கின்றனர், துக்கத்தைப் போக்கி சுகம் தருபவரே என்று. தேவதை ஆவதற்காக பாபாவைத் தவிர வேறு யாராலும் கற்பிக்க முடியாது. பாபா ஆத்மாக்களோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். ஆத்மா சொல்கின்றது – இது எனது சரீரம். சரீரமோ சொல்லாது, எனது ஆத்மா என்று. சரீரத்தினுள் ஆத்மா உள்ளது. அது சொல்கிறது-இது எனது சரீரம். மனிதர்கள் சொல்கின்றனர், எனது ஆத்மாவை துக்கப் படுத்தாதீர்கள். ஆத்மா சரீரத்தில் இல்லை என்றால் பேசவும் முடியாது. ஆத்மா சொல்கிறது, நான் ஒரு சரீரத்தை விட்டு வேறொன்றை எடுக்கிறேன். நாம் நிச்சயமாக 84 பிறவிகளை எடுத்துள்ளோம், நரகவாசி ஆகியிருக் கிறோம். இப்போது நீங்கள் மீண்டும் சொர்க்கவாசி ஆவதற்கான முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். சொர்க்கவாசியாகவோ பாபா தான் ஆக்குவார். சொர்க்கம் எனச் சொல்லப் படுவது சத்யுகம். இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று பொய் சொல்கின்றனர். இதுவோ நரகம். யாராவது இறந்தால் சொர்க்கத்திற்குச் சென்று விட்டதாகச் சொல்கின்றனர். பிறகு நரகத்திற்கு வந்து உணவு உண்ணுமாறு அவர்களை ஏன் அழைக்கின்றனர்? சொர்க்கத்திலோ அவர்களுக்கு அநேக வைபவங்கள் (வசதி, வாய்ப்புகள்) கிடைக்கின்றன. பிறகு நீங்கள் ஏன் நரகத்திற்கு வரச் சொல்லி அழைக்கிறீர்கள்? மனிதர்களிடம் இவ்வளவு அறிந்து கொள்ளும் சக்தி கூட இல்லை. பாபா அமர்ந்து புரிய வைக்கிறார்-இப்போது இந்தக் கலியுகம் முடிவடையப் போகிறது. இதை நெருப்பு பற்றிக் கொள்ளும். இவை அனைத்தும் அழிந்து போகும். குழந்தைகள் நீங்கள் பாபாவிடம் அடையும் ஆஸ்தியினால் சத்யுகத்தில் வந்து இராஜ்யம் செய்வீர்கள். இந்த லட்சுமி-நாராயணருக்கு இந்த ஆஸ்தியை யார் கொடுத்தார்? பாபா கொடுத்தார். நீங்கள் இப்போது பாபாவின் மூலம் தகுதியுள்ளவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் நரகவாசியில் இருந்து சொர்க்கவாசி ஆகிக் கொண்டிருக் கிறோம். பாபா சொல்கிறார் – நான் சொர்க்கவாசி ஆவதில்லை. நானோ பரந்தாமத்தில் இருக்கிறேன். நரகவாசி- சொர்க்கவாசியாக நீங்கள் ஆகிறீர்கள். ஆத்மாவின் வசிப்பிடம் சாந்திதாமம். பிறகு நீங்கள் சுகதாமத்திற்கு வருகிறீர்கள். இதுவோ துக்கதாமம். இது இப்போது விநாசமாகப் போகிறது. இது யாருக்குமே தெரியாது – பகவான் பிரம்மாவின் உடலில் வந்து இராஜயோகம் கற்பிக்கிறார். அவர்கள் நினைக்கின்றனர், கிருஷ்ணர் வந்தார் என்று. கிருஷ்ணரின் உடலில் என்று கூடச் சொல்வதில்லை. கிருஷ்ணரை பகவான் எனச் சொல்ல முடியாது. அவரோ உலகத்தின் எஜமானராக இருந்தார். துன்பத்தி-ருந்து விடுவிப்பவர் (லிபரேட்டர்) அனைவருக்கும் ஒருவரே! அவர் சுப்ரீம் ஆத்மா, பரம-ஆத்மா (மிக மேலான ஆத்மா). நாம் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி பெறுகிறோம் என்று புரிந்து கொள்கிற வகையில் உலகத்தில் எந்த ஒரு சத்சங்கமும் நடைபெறுவதில்லை. தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மையாக்குபவரோ ஒரே ஒரு தந்தை தான். பாபா சொல்கிறார் – நான் உங்களுடைய உண்மையான குரு, உங்களை தூய்மையாக்குகிறேன். மற்றப்படி கங்கையின் நீர் தூய்மையாக்க முடியாது. இதுவே பாவாத்மாக்களின் உலகம். என்ன தான் செய்தாலும் ஏணிப்படியில் கீழே இறங்கித் தான் ஆக வேண்டும். சதோபிரதானில் இருந்து தமோபிரதான் ஆகித் தான் தீர வேண்டும். நீங்கள் பக்தி செய்வதில்லை. ஐயோ ராமா என்றும் சொல்ல மாட்டீர்கள். இவரோ உங்கள் தந்தை, உங்களுக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். ஹே பகவானே வாருங்கள், ஹே ராம் என்று கூட சொல்லக் கூடாது. ஆனால் அநேகரிடம் இது பழக்கமாகி விட்டுள்ளது. அதனால் வார்த்தை வெளிப்படுகின்றது. உங்களுக்கு பாபா சொல்கிறார்-என்னை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். மேலும் நீங்கள் என்னிடத்தில் வந்து விடுவீர்கள். ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.

பாபா சொல்கிறார் – இது உங்கள் கடைசிப் பிறவி. இப்போது ஆஸ்தியைப் பெற்றால் தான் பெற்றதாகும். இல்லையென்றால் பிறகு ஒரு போதும் பெற முடியாது. பாபா புரிய வைத்துள்ளார், தங்களை இந்து எனச் சொல்லிக் கொள்பவர்கள் உண்மையில் தேவி-தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள். கிறிஸ்தவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு போதும் பெயரை மாற்றுவதில்லை. அவர்கள் தமோபிரதானமாகத் தான் உள்ளனர் என்ற போதிலும் கிறிஸ்தவ தர்மத்தில் தான் உள்ளனர். நீங்கள் தேவி-தேவதைகள், ஆனால் தூய்மையில்லாம-ருக்கும் காரணத்தால் இந்து எனச் சொல்லிக் கொள்கிறீர்கள். தங்களை தேவதா எனச் சொல்ல முடியாது. இதை மறந்து விட்டிருக்கிறீர்கள், அதாவது நாம் அசலில் தேவி-தேவதைகளாக இருந்தவர்கள். தங்களை தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று யாரும் சொல்லிக் கொள்வதில்லை. ஏனென்றால் விகாரிகளாக உள்ளனர். இது தேக அபிமானமாகும். குழந்தைகளுக்கு மிக நன்றாகப் புரிய வைக்கப் படுகின்றது. இங்கே சாது-சந்நியாசிகள் யாரும் கிடையாது. நான் வியாபாரி, இன்னார் – இப்படி சொல்வ தனைத்தும் தேக அபிமானம். இப்போது நீங்கள் தேகி (ஆத்ம) அபிமானி ஆக வேண்டும். தேகி அபிமானி ஆவதில் தான் முயற்சி உள்ளது. நீங்கள் பாபாவிட மிருந்து ஆஸ்தி பெற வேண்டு மானால் பாபாவை நினைவு செய்ய வேண்டும். கைகள் காரியமாற்றிக் கொண்டிருந் தாலும் மனதில் பாபா நினைவு இருந்து கொண்டே இருக்க வேண்டும்……… ஒரே ஒரு நாயகனின் நாயகிகள் நீங்கள். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் ஒரு நாயகன். அனைவருக்கும் எப்போது சத்கதி கிடைக்க வேண்டுமோ, அப்போது தான் அவர் வருகிறார். சொர்க்கத்தின் ஸ்தாபனை நடைபெறு கின்றது. துக்கத்தின் பெயர் அடையாளம் மறைந்து விடுகின்றது. இப்போது குழந்தைகள் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள், எல்லையற்ற தந்தையிடமிருந்து சொர்க்கத்தின், 21 பிறவிகளுக்கான, சதா சுகத்திற்கான ஆஸ்தி பெறுவதற்காக. வேறு எந்த ஒரு மனிதரும் யாரையும் சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்க முடியாது. சிவபாபா பாரதத்தில் தான் வந்து பாரதத்தை சொர்க்கமாக ஆக்குகிறார். சிவஜெயந்தியும் கொண்டாடுகின்றனர். ஆனால் பாபாவிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை மறந்து விட்டுள்ளனர். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) படிப்பின் ஆதாரத்தில் தனது அதிர்ஷ்டத்தை உயர்ந்ததாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டும். தூய்மையாகி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பிறகு புது உலகத்தில் வர வேண்டும்.

2 கைகளால் காரியம் செய்து கொண்டே, ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். எந்த ஒரு தலைகீழான விசயத்தையும் கேட்கவும் கூடாது, சொல்லவும் கூடாது.

வரதானம்:-

அன்பான புத்தி என்றால் புத்தியின் ஈடுபாடு ஒரே ஓர் அன்பரிடம் மட்டுமே இருக்க வேண்டும். யாருக்கு ஒருவரிடம் மட்டுமே அன்பு உள்ளதோ, அவருக்கு வேறு எந்த ஒரு மனிதர் அல்லது வைபவத்தோடு அன்பானது இணைந்திருக்க முடியாது. அவர்கள் சதா பாப்தாதாவைத் தங்கள் முன்னிலையில் இருப்பதாக அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு மனதிலும் கூட ஸ்ரீமத்துக்கு விரோதமாக வீண் சங்கல்பம் அல்லது விகல்பம் வர முடியாது. அவர்களின் வாயிலிருந்து அல்லது மனதிலிருந்து இதே பேச்சு தான் வெளிப்படும் — அதாவது, உங்களோடு தான் உண்பேன், உங்களோடு தான் அமர்ந்திருப்பேன் உங்களோடு அனைத்து சம்மந்தங்களையும் வைப்பேன் இது போல் சதா அன்பான புத்தி உள்ளவர்கள் தாம் வெற்றி ரத்தினம் ஆகிறார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top