16 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
15 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
புதிய வருடம் - தந்தைக்கு நிகராக மாறவேண்டிய வருடம்
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று திருமூர்த்தி தந்தை மூன்று சங்கமத்தை முக்கூடலை பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒன்று தந்தை மற்றும் குழந்தைகளின் சங்கமம் இரண்டாவது யுகத்தின் சங்கமம், மூன்றாவது வருடத்தின் சங்கமம். மூன்று சங்கமமும் தனக்கே உரிய தனித்தன்மைகளை பெற்றது. ஒவ்வொரு சங்கமமும் மாற்றத்திற்கான அறிவுரை தருகிறது. சங்கமயுகம் உலக மாற்றத்திற்கான அறிவுரை தருகிறது. தந்தை மற்றும் குழந்தைகளின் சங்கமம் மிக உன்னதமான பாக்யம் மற்றும் உன்னத மான பிராப்திகளையும் செய்ய வைக்கிறது. வருடத்தின் சங்கமம் புதுமைக்கான அறிவுரை தருகிறது. மூன்று சங்கமமும் ஆனதற்கே உரிய பொருளுடன் மகிமை வாய்ந்தது. இன்று உள்நாடு வெளிநாட்டின் குழந்தைகள் விசேசமாக பழைய உலகில் புதிய ஆண்டை கொண்டாட வந்துள்ளார் கள். பாப்தாதா உடலாலும் (சாகாரம்) மனதாலும் (ஆகாரம்) புத்தி எனும் விமானத்தில் வந்துள்ள குழந்தைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் புத்தாண்டை கொண்டாட முகமாக வைரத்தையொத்த வாழ்த்துக்களையும் தருகின்றார். ஏனெனில் குழந்தைகள் அனைவரும் வைரத்திற்குச் சமமான வாழ்வை அடைந்துள்ளார்கள். இரட்டை கதாநாயகனாகி உள்ளீர்களா? ஒன்று தந்தையின் விலைமதிப்பற்ற இரத்தினம் வைரமாகி உள்ளீர்கள் மற்றொன்று நடிகனமாகி உள்ளீர்கள். எனவே பாப்தாதா ஒவ்வொரு நொடிக்கும், ஒவ்வொரு எண்ணத்திற்கும், ஒவ்வொரு பிறவிக்கும் அழிவிலாத வாழ்த்துக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றார். சிரேஸ்ட பாக்கியம், சிரேஷ்ட பிராப்தியின் ஆத்மக்களாகிய உங்களுக்கு இன்றைய நாள் மட்டும் வாழ்த்துக்குறிய நாள் அல்ல. ஆனால் ஒவ்வொரு நேரமும் காரணத்தால் பாபாவிற்கு குழந்தைகளும் குழந்தைகள் பாபாவிற்கும் வாழ்த்துக்களை வழங்கிய வண்ணம் எப்போதும் பறக்கும் கலையில் அழைத்து சென்று கொண்டிருக்கின்றது. இந்த புதிய வருடத்தின் இந்த புதுமையை வாழ்வில் அனுபவம் செய்யுங்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு எண்ணத்தாலும் தந்தைக்கு வாழ்த்து தெரிவிக் கின்றீர்கள் இருப்பினும் பிராமண ஆத்மாக்கள் தங்களுக்குள்ளும், அறிந்தவரோ, அறியாதவரோ தொடர்பில் வருபவர் எவராயினும் ஞானமேயில்லாதவராயினும் தந்தையைப் போன்று ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு ஆத்மாவிற்காகவும் உள்ளத்திலிருந்து மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக் கள் வந்த வண்ணம் இருக்கட்டும், ஒருவர் எப்படிப்பட்டவராகயிருப்பினும் உங்களது மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துக்கள் அவர்களுக்கும் மகிழ்ச்சியினை அனுபவம் செய்ய வைக்கட்டும். வாழ்த்து தெரிவிப்பது மகிழ்வை பரிமாறிக் கொள்வதாகும். எப்போதேனும் எவருக் கேனும் வாழ்த்து தெரிவிப்பீர்களெனில் அது மகிழ்வை வழங்கு வதாகும். துக்கமான தருணத்தில் வாழ்த்து தருவதில்லை. எனவே ஒவ்வொரு ஆத்மாவையும் பார்த்து மகிழ்வது, மகிழ்வை தருவது. இதுவே உளப்பூர்வமான வாழ்த்தாகும். பிறர் உங்களுடன் எப்படி நடந்து கொண்டாலும் பாப்தாதாவிடமிருந்து ஒவ்வொரு நேரமும் வாழ்த்தை பெற்றுக் கொண்டிருக்கும் உன்னதமான ஆத்மாக்கள் நீங்கள் எப்போதும் எல்லோர் பொருட்டும் மகிழ்வையே வழங்குங்கள். பிறர் உங்களுக்கு முள்ளையே கொடுத்தாலும் அதற்கு கைமாறாக ஆன்மீக ரோஜா மலரையே வழங்குங்கள். அவர்கள் துக்கமே கொடுத்தாலும் சுகவள்ளலின் குழந்தைகள் நீங்கள் சுகமே வழங்குங்கள். அவர்களைப்போன்றே நீங்களும் மாறிவிடக்கூடாது. ஞானமில்லாத வருடன் நீங்களும் ஞானமில்லாதவராக (அஞ்ஞானி) ஆகிவிடக்கூடாது. சமஸ்காரத்திற்கோ, சுபாவத்திற்கோ வசமாயிருக்கும் வசிபூத் ஆத்மாக்களுடன் நீங்களும் வசமாகி விடக்கூடாது.
சிரேஸ்ட ஆத்மாக்களான உங்களுடைய ஒவ்வொரு எண்ணத்திலும் அனைவரது நன்மைக்கும், உயர்ந்த மாற்றத்திற்கும் வசியத்தில் இருப்பவர்களை சுதந்திரமடையச் செய்வதற்கான ஆசிர்வாதமும் மகிழ்வு நிறைந்த வாழ்த்துக்களும் இயல்பாகவே தென்படவேண்டும். ஏனெனில் நீங்கள் அனைவரும் வள்ளல் என்றால் தேவதை கள், வழங்குபவர்கள். எனவே இந்த புதிய வருடத்தில் விசேசமாக மகிழ்வு நிறைந்த வாழ்த்துக்களை வழங்கிய வண்ணம் இருங்கள். இன்றும் நாளையும் வழியில் பார்ப்பவருக்கெல்லாம் வாய் மூலம் வாழ்த்து சொல்வதல்ல. மனதார சொல்லுங்கள். முழு வருடமும் சொல்லுங்கள் இரண்டு நாட்கள் மட்டுமல்ல. மனமுவந்து வாழ்த்து கூறுகையில் வாழ்த்து பெறுபவர் மனமகிழ்ந்து போவார். அப்பொழுது ஒவ்வொரு நேரமும் தில்குஷ் மிட்டாய் வழங்கியவராவீர்கள். ஒருநாள் மட்டுமல்ல. நாளைய தினம் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு தானும் உண்டு பிறருக்கும் இனிப்பு வழங்குங்கள். இப்படி ஒவ்வொரு நாளும் செய்தால் எவ்வளவு மகிழ்வாயிரக்கும், இப்போதெல்லாம் இனிப்பு என்றாலே சாப்பிட யோசிக்கிறார்கள், பயப்படுகிறார்கள். ஆனால் இந்த தில்குஷ் மனதை மகிழ்விக்கும் வார்த்தைகள் எனும் இனிப்பு எவ்வளவு வேண்டுமாயினும் சாப்பிடலாம் பிறருக்கும் வழங்கலாம், நோய் வராது ஏனெனில் பாப்தாதா குழந்தைகளை தன்னைப் போல் மாற்றுகிறார். முக்கியமாக இந்த வருடம் பாப்சமான் ஆக வேண்டும். இந்த ஒரு விசேசத்தன்மையினையே உலகிற்கும் பிராமண பரிவாரத்திற்கு முன்பாகவும் காண்பியுங்கள். எப்படி ஒவ்வொரு ஆத்மாவும் பாபா எனும் பொழுதே இனிமையை, குஷியை அனுபவம் செய்கிறார்கள். ஆஹா பாபா என்றவுடனேயே வாய் இனிப்பாகிறது ஏனெனில் பிராப்தி கிடைக்கிறது. அவ்வாறே ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் யாரேனும் ஒரு பிராமணனின் பெயரை உச்சரித்த மாத்திரமே இனிமை அனுபவம் ஆக வேண்டும். ஏனெனில் நீங்கள் அனைவரும் பாபாவிடம் கிடைக்கப்பெற்ற பிராப்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறுபவர்கள் அல்லவா. ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கி முன்னேற்றம் தருகிறீர்கள். வாழ்க்கைத் துணையாகாதீர்கள் ஆனால் செய்யும் செயலில் துணையாயிருங்கள், ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கு கிடைத்த சிறப்பம்சங்களால் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வழங்கு கிறீர்கள். இவ்வாறே சதாகாலமும் செய்துக் கொண்டு இருங்கள். எப்படி பாபா என்று நினைத்த மாத்திரமே குஷியில் நடனமாடுகிறார்கள் அவ்வாறே ஒவ்வொரு பிராமண ஆத்மாவையும் நினைத்த கனமே குஷி அனுபவம் ஆக வேண்டும். உலகாயத குஷி அல்ல. ஒவ்வொரு நேரமும் தந்தையிடமிருந்து பெற்ற பிராப்திகளையெல்லாம் நிஜவாழ்வில் நிமித்தமாக அனுபவம் செய்யட்டும். இதனையே ஒவ்வொரு நேரமும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து என சொல்லப்படும். அனைவருக்கும் பாப்சமான் ஆக வேண்டும் என்ற ஒரே இலட்சியமே உள்ளது. ஏனெனில் சமமாகாமல் தந்தையுடன் இணைந்து இராஜியத்திலும் வரமுடியாது. யார் பாப்தாதாவுடன் தமது வீடு செல்வார்களோ அவர்களே பிரம்மாவுடன் ராஜ்ஜியத்தில் வருவார்கள். மேலிருந்து கீழே இறங்குவார்கள் அல்லவா. உடன் செல்வது மட்டுமல்ல உடன் வருவார்கள். பூஜைக்குரிய வராகவும் பூஜாரியாகவும் பிரம்மா பாபாவுடனேயே வருவார்கள். அனேக பிறவிகளுக்கு இணைந்தே வருவார்கள். ஆனால் அதற்கு ஆதாரம் இப்போது பாப்சமான் ஆகி இணைந்தே செல்ல வேண்டும்.
இந்த வருடத்தின் சிறப்பம்சம் பாருங்கள். எண்ணும் 8, 8 அல்லவா. 8க்கு எவ்வளவு மதிப்பு உள்ளது. தமது பூஜைக்குரிய ரூபத்தை பார்த்தாலும் எட்டுகரங்கள், எட்டு சக்திகளையே நினைவு செய்யப் படுகிறது. அஸ்டரத்தினம், அஸ்ட ராஜதானியம் 8க்கு விதவிதமான வகையில் மகிமை உள்ளது. எனவே இந்த ஆண்டினை பாப்சமான் ஆகியே தீரவேண்டும் என்ற திட எண்ணத்துடன் கொண்டாடுங்கள். எந்த செயலும் தந்தையைப் போலவே செய்யுங்கள். நினைத்தாலும், பேசினாலும், தொடர்பில் வந்தாலும் பாப்சமான் பிரம்மா பாபாவிற்கு நிகராக மாறுவது சுலபம் தானே ஏனெனில் மனித உருவில் உள்ளார் 84 பிறவி எடுப்பவர். பூஜாரியோ பூஜைக்குரியவரோ அனைத்திலும் அனுபவம் வாய்ந்தவர், பழைய உலகம், பழைய சம்ஸ்காரம், பழைய கணக்கு.வழக்கு குழுவில் வாழ்வது அரவணைத்து செல்வது அனைத்திலும் அனுபவம் வாய்ந்த வரை பின்பற்றுவது கடினமில்லையே, மேலும் பாபா சொல்வது என்னவென்றால் பிரம்மா பாபா வின் ஒவ்வொரு அடிமீதும் அடிவைத்து செல்லுங்கள். புதிய வழியை உருவாக்க வேண்டாம். அடிமீது அடிவைத்தால் போதும். பிரம்மாவை காப்பி செய்யுங்கள், அந்தளவிற்கு புத்தி உள்ளது தானே, இணைந்து சென்றாலே போதும், ஏனெனில் பாப்தாதா இருவரும் உங்களுடன் செல்லவே காத்திருக்கிறார்கள். நிராகார தந்தை பரந்தாமவாசி தான் ஆயினும் சங்கம யுகத்தில் மனிதர் மூலமாக நடிக்க வேண்டியுள்ளது. எனவே இந்த கல்பத்தில் உங்களது நடிப்பு முடிவடைவது போலவே பாப்தாதா இருவர் நடிப்பும் முடிவடையும் நேரமிது. பிறகு கல்பம் மீண்டும் ஆரம்ப மாகும், ஆகவே நிராகார தந்தையும் உங்களுடன் நடிப்பில் கட்டுப்பட்டுள்ளார். இது சுபமான பந்தனமே. நடிப்பிற்கான பந்தனம் உள்ளது. சினேக பந்தனம், சேவையின் பந்தனம் ஆனால் இனிமையான பந்தனம். கர்மவினை என்ற கடுமையான பந்தனம் அல்ல.
புதிய வருடம் எப்போதுமே வாழ்த்துக்குரிய வருடமாகும். புதிய வருடம் எப்போதுமே பாப்சமான் ஆவதற்கான வருடமாகும். புதிய வருடம் பாபாவை பின்பறுவதற்கான வருடமாகும். புதிய வருடம் தந்தையுடன் இனிமையான வீட்டிலும் இராஜாங்கத்திலும் உடன் இருப்பதற்கான வரதானம் பெறும் ஆண்டாகும். ஏனெனில் இப்போதிருந்தே எப்போதும் உடனிருப்பீர்கள். இப்போது உடன் இருப்பதே எப்போதும் உடன் இருப்பதற்கான வரதானமாகும். இல்லையேல் நெருங்கிய உறவுக்கு பதிலாக ரத்து சம்பந்தத்திலேயே வரநேரிடும். எப்போதாவது சந்திப்பீர்கள். எப்போதாவது சந்திப்பவர் அல்லவே நீங்கள் முதல் பிறவியில் முதல் இராஜயத்தின் சுகம் முதல் நம்பரில் இராஜ்ய அதிகாரி விவ மகாராஜா விஷ்வ மகாராணியுடனான இராயல் சம்பந்தம் அதனுடைய பொலிவின் தெளிவே வேறுபட்டது. இரண்டாம் நம்பரில் விஷ்வ மகாராஜா மகாராணியின் ராயல் குடும்பத்தில் வந்தாலும் அந்த சம்பந்தமே வேறுதான். ஒரு பிறவியேனும் வித்தியாசம் காணப் படும். இதனையும் உடனிருப்பவர் என சொல்ல முடியாது எந்த ஒரு புதிய பொருளேயாயினும் ஒருமுறை பயன்படுத்திவிட்டாலும் ஒருமுறை பயன்படுத்திய பொருள் என்று தானே சொல்வோம். புதியது என்று சொல்லமாட்டோமே. உடன் செல்வது, உடன் வருவது, முதல் பிறவி யில் ராஜாவின் ராயல் குடும்பத்திலும் வரவேண்டும். இதுவே சமநிலை என்று சொல்லப்படும். என்ன செய்ய வேண்டும், சமநிலை பெறவேண்டும் ஊர்வலத்தில் எங்கோ ஒருவராக வர வேண்டுமா!
பாப்தாதா ஞானிகள் அஞ்ஞானிகள் (ஞானமில்லாதவர்கள்) இவர்களுக்கிடையே ஒரு வித்தியாயசத்தைக் கண்டார். ஒரு காட்சியாக கண்டார். தந்தையின் குழந்தைகள் யார் அஞ்ஞானி யார் இன்றைய உலகில் விகாரி ஆத்மாக்கள் எப்படியிருக்கின்றார்கள் மிகப் பெரிய தொழிற்சாலைகளில் புகைக் கூண்டு சதா புகையை வெளியிட்டுக் கொண்டே இருக்கும் அதுபோலவே இன்றைய மனிதர்கள் விகாரிகளான காரணத்தால் எண்ணம் மற்றும் சொற் களால் பொறாமை வெறுப்பு போன்று ஏதேனும் ஒர விகார புகையை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கண்களிலிருந்தம் விகார புகை வெளிவந்த வண்ணம் உள்ளது. ஞானி குழந்தை களின் எண்ணம் மற்றும் சொற்களால் பரிஸ்தாவிற்கான ஆசிகளே வெளிப்படுகின்றது. அவர்களிட மிருந்து சதா விகாரப் புகை மற்றும் உங்களிடமிருந்து சதா பரிஸ்தாவிற்கான விகாரத்தின் வசமாகி விகார அக்னியின் புகை வெளியிடக்கூடாது. சதா ஆசியே வெளிவரட்டும். சோதனை செய்ய எப்போதாவது ஆசிக்குமாறாக விகாரப்புகை வெளியாகிறதா? பரிஸ்தாக் கள் என்றாலே ஆசீர்வாதங்களின் சொரூபம் ஆவீர்கள். அப்படி ஒரு சமயம் எண்ணமோ சொல்லோ அவ்வாறு வெளிபட்டால் தான் பரிஸ்தாவிலிருந்து மாறிவிடவில்லையே என பாருங்கள். வீண் எண்ணங் களும் ஒரு வித புகையே. அது எரியும் நெருப்பின் புகை, இது பாதி நெருப்பின் புகை. நெருப்பு முழுமையாக எரியாதபொழுதும் புகை வரும் அல்லவா எனவே நீங்கள் எப்போதும் பரிஸ்தா ரூபத்தில் ஆசிகளையே வெளியிடுங்கள். அப்படிப் பட்டவர்களே கருணையுள்ளம், இரக்க மன முள்ளவர் ஆவார்கள். இப்போது இவ்வாறு நடியுங்கள். தன் மீதும் பிறர் மீதும் கருணை காண்பியுங்கள். பார்த்ததை, கேட்டதை வர்ணனையும் செய்யாதீர்கள், சிந்திக்கவும் செய்யாதீர்கள், வீணானதை சிந்திக்காது, பார்க்காது இருப்பதே தன் மீது செய்யும் கருணையாகும். மேலும் யார் அப்படி செய்தார்களோ அவர்கள் பொருட்டும் இரக்கம் காண்பியுங்கள் அதாவது வீணானவற்றை பேசியவர், பார்த்தவர் மீதும் சுபபாவனை வைப்பதும் ஒரு வித கருணையேயாகும். மாறாக பார்த்த கேட்ட வீண் விசயங்களை வர்ணனை செய்வது விதையை மரமாக வளர்ப்பதாகும், வாயு மண்டலத்தில் பரப்புவதாகும். அது மரமாகிறது ஏனெனில் கேட்ட பார்த்த வீண் விசயத்தை தன் மனதில் வைக்கமுடியாதது ஒன்று, பிறருக்கு சொல்வது வர்ணனை செய்வது. ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு செல்லும் போது என்னவாகும் ஒன்று பலவாகும் அல்லவா. ஒன்றோடு ஒன்று மற்றொன்று என சேர சேர மாலையாகும். மேலும் அதை செய்தவர் வீண் விசயத்தை தெளிவு படுத்துவதில் உறுதியாகிவிடுவார். அப்போது வாயுமண்டலத்தில் என்ன பரவும் வீண் விசயம்தான் பரவும் அல்லவா. இது புகை போட்டதாகும். இது ஆசியா புகையா ஒருவரிலிருந்து பலருக்கு தெரிய வருகிறது. எனவே வீணானவற்றை பார்த்தாலும் கேட்டாலும் அன்புடன் சுபபாவனையுடன் உள்ளடக்கி விடுங்கள், விரிவு படுத்தாதீர்கள். இதுவே நீங்கள் பிறர்மீது காட்டும் கருணை மற்றும் ஆசியாகும் தனக்கு சமமாக மாற்றி தன்னுடன் இருப்பதற்கும் செல்வதற்குமாக தயார் செய்யுங் கள். இல்லையேல் சற்று இருக்க விரும்புகிறீர்களா, சற்று இருக்க விரும்பினாலும் பாப்சமான் ஆனபிறது இருக்கலாமே. அப்படியே இருந்து விடாதீர்கள் பாப்சமான் ஆனபிறகே பொருத்திருங் கள்.அனுமதி தரப்படுகிறது. நீங்கள் எவரெடிதானே சேவையோ, டிராமாவோ காலதாமதப் படுத்தலாம் அதுவேறு விசயம் ஆனால் காலதாமதத்திற்கு நீங்கள் காரணம் ஏற்படுத்துபவர் அல்ல தானே. கர்மங்களின் கணக்கு வழக்கின், கணக்கேடு தெள்ளத்தெளிவாக இருக்க வேண்டும். புரிந்ததா, நல்லது.
இரட்டை அயல்நாட்டவருடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:- எப்போதும் தன்னை சங்கமயுகத்தின் சிரேஷ்ட ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா சிரேட ஆத்மாக்களின் ஒவ்வொரு எண்ணமும், சொல்லும், செயலும் இயல்பாகவே சிரேஷ்டமானதாகும். ஒவ்வொரு செயலும் உயர்வாகி உள்ளதா ஒருவர் எப்படிப்பட்டவரோ அவரது செயலும் சிரேஷ்டமாகத்தானே இருக்கும். எப்படி நினைவோ அப்படியே மனோநிலை. உயர்ந்த மனோநிலை என்பது இயற்கை யானது, ஏனெனில் நீங்களே விசே ஆத்மாக்கள். உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை யின் குழந்தைகள் தந்தையைப் போன்றே குழந்தைகளும் உயர்ந்தவர்களே. தந்தையைப் போல் பிள்ளை என சொல்வதுண்டு. நீங்கள் அப்படிதானே உங்கள் அனைவர் உள்ளத்திலும் இருப்பவர் யார் உள்ளத்தில் உறைந்திருப்பவரே புத்தியிலும், சொல்லிலும், எண்ணத்திலும் இருப்பாரல்லவா. நீங்களும் வாழ்த்து அட்டைகளை இதய வடிவில் கொண்டு வருகிறீர்கள். பரிசாகவும் இதய வடிவத்தையே வழங்குகிறீர்கள். தனது மனோநிலையை படமாக பிடித்து அனுப்புகிறீர்கள். தந்தையின் உள்ளத்தில் இருக்கும் ஒருவர் பேசுவது, செய்வது யாவும் எப்போதும் பாப்சமானாகவே இருக்கும். பாப்சமானாவது கடினமல்லவே ஒரு புள்ளியை நினைவு செய்தாலே கடினம் இல்லை யென்றாகிவிடும். ஒரு டாட் நினைத்தால் பிரச்சனை நாட் ஆகிவிடும். புள்ளியை மறப்பதால் தொல்லை மறப்பதில்லை. புள்ளி வைப்பது எவ்வளவு சகஜம். முழு ஞானமும் ஒரு புள்ளியில் தான் அடங்கி உள்ளது. நீங்களும் புள்ளி பாபாவும் புள்ளி, முடிந்தவற்றிற்கும் வைக்கவேண்டியது புள்ளி. அவ்வளவு தான். சின்னஞ்சிறு குழந்தை கூட எழுத ஆரம்பிக்கும் பொழுது பென்சில் பேப்பர் கையில் கொடுத்து பென்சிலை வைத்தவுடனேயே புள்ளி விழுந்துவிடும். புள்ளி விழுமல்லவா? இதுவும் குழந்தைகளின் விளையாட்டே. இந்த ஞானப் படிப்பு முழுவதுமே விளையாட்டு தான். கடினமான வேலை தரவில்லை. வேலையும் சுலபமே நீங்கள் சகஜயோகி தான். பெயர் பலகையில் கூட சகஜ ராஜயோகம் என எழுதப்பட்டுள்ளது. ஆகவே சகஜ மாகவே அனுபவம் செய்யுங்கள். இதுவே ஞானம் என்று சொல்லப்படும். ஞானம் நிறைந்தவர் இயல்பாகவே சக்தி நிறைந்தவராகவும் இருப்பார். ஏனெனில் ஞானத்தை ஒளியும் சக்தியுமாக சொல்லப்படும். ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் சுலபமாகவே பவர்புல்லாக இருப்பதால் அனைத்து விசயத்திலும் சுலப மாகவே முன்னேறிச் செல்வார்கள். இந்தக் குழுவில் அனைவரும் சகஜயோகிகளே. இப்படியே எப்போதும் சகஜயோகியாகவே இருங்கள். நல்லது.
வரதானம்:-
ஒருபோதும் நான் தோல்வியடைந்து விடுவேனோ என்று தெரியவில்லையே என முன்னதாகவே சந்தேகத்திற்குரிய எண்ணங்களை உருவாக்காதீர்கள். சந்தேகம் வந்தாலே தோல்வியே வந்து சேரும். எனவே எப்போதும் வெற்றி அடைந்தே தீருவேன் என்ற எண்ணம் வையுங்கள். வெற்றி எனது பிறப்புரிமை, இப்படி அதிகாரி ஆகி செயல்படடுவதால் வெற்றிக்கான அதிகாரம் கிடைத்தே தீரும். இதனாலேயே வெற்றி ரத்தின மாவீர்கள். எனவே ஞானக்கடலின் குழந்தைகைள் வாயிலிருந்து தெரியவில்லையே என்ற வார்த்தையே வெளிவரக் கூடாது.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!