12 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris

11 May 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! எப்போது நீங்கள் சம்பூர்ண முழுமையாக தூய்மையாகிறீர்களோ, அப்போது தான் பாபா உங்களின் (பலி) சமர்ப்பணத்தை அங்கீகாரம் செய்வார். தனது மனதைக் கேளுங்கள், நாம் எந்தளவு தூய்மையாகி இருக்கிறோம்?

கேள்வி: -

குழந்தைகள் நீங்கள் இப்போது குஷி-குஷியுடன் பாபா மீது பலியாகிறீர்கள். ஏன்?

பதில்:-

ஏனென்றால் நீங்கள் அறிவீர்கள், இப்போது (பலி) சமர்ப்பணம் ஆவோமானால் பாபா 21 பிறவி களுக்கு சமர்ப்பணம் ஆகிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு இதுவும் தெரியும், இப்போது இந்த அவிநாசி ருத்ர ஞான யக்ஞத்தில் மனிதர்கள் அனைவருமே அர்ப்பணம் (ப- பொருளாக) ஆக வேண்டும். ஏனென்றால் நீங்கள் முதலிலேயே குஷி-குஷியுடன் தங்களின் உடல்-மனம்-செல்வம் அனைத்தையும் அர்ப்பணம் செய்து பயனுள்ளதாக ஆக்கிக் கொள்கிறீர்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

முகத்தைப் பார்த்துக் கொள் பிராணி……

ஓம் சாந்தி. சிவபகவான் வாக்கு. நிச்சயமாக தம்முடைய குழந்தைகளுக்குத் தான் ஞானம் கற்றுத் தருகிறார் அதாவது ஸ்ரீமத் தருகிறார் – ஏ ! குழந்தைகளே, அல்லது ஏ ! பிராணிகளே, சரீரத்திலிருந்து பிராணன் வெளியேறி விடுகிறது அல்லது ஆத்மா வெளியேறி விடுகிறது – இரண்டும் ஒரே விசயம் தான். ஏ !பிராணி, அல்லது ஏ! குழந்தாய், நீ பார்த்திருக்கிறாய், எனது வாழ்க்கையில் எவ்வளவு பாவங்கள் இருந்தன மற்றும் எவ்வளவு புண்ணியங்கள் இருந்தன? கணக்கோ சொல்லப்பட்டுள்ளது – உங்கள் வாழ்க்கையில் அரைக் கல்பம் புண்ணியம், அரைக்கல்பம் பாவம் நடைபெறுகின்றது. புண்ணியத்தின் ஆஸ்தி பாபாவிடமிருந்து கிடைக்கின்றது. அவரை ராம் என்று சொல்கின்றனர். ராம் என்று நிராகார் தான் சொல்லப் படுகிறார். சீதையின் ராமரைச் சொல்வதில்லை. ஆக, இப்போது இங்கு வந்து பிரம்மா முகவம்சாவளி பிராமணர் ஆகியிருக்கிற குழந்தைகள் உங்களுடைய புத்தியில் வந்துள்ளது, நிச்சயமாக அரைக்கல்பமாக நாம் புண்ணிய ஆத்மாவாகவே இருந்தோம். பிறகு அரைக் கல்பம் பாவாத்மா ஆனோம். இப்போது புண்ணியாத்மாவாக ஆக வேண்டும். எந்தளவு புண்ணியாத் மாவாக ஆகியிருக்கிறோம் என்று ஒவ்வொருவரும் தங்களின் மனதைக் கேட்க வேண்டும். பாவாத் மாவிலிருந்து புண்ணியாத்மாவாக எப்படி ஆவோம்?…………. அதையும் பாபா புரிய வைத்துள்ளார். யக்ஞம், தவம் முதலியவற்றினால் நீங்கள் புண்ணியாத்மா ஆக மாட்டீர்கள். அது பக்தி மார்க்கம், இதனால் எந்த ஒரு மனிதரும் புண்ணியாத்மா ஆவதில்லை. இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள், நாம் புண்ணியாத்மா ஆகிக் கொண்டிருக்கிறோம். அசுர வழிமுறையினால் பாவாத்மா ஆகி-ஆகியே ஏணிப்படியில் இறங்கியே வந்துள்ளோம். எத்தனை முறை நாம் புண்ணியாத்மா ஆகிறோம் மற்றும் சுகத்தின் ஆஸ்தி பெறுகிறோம் – இது யாருக்கும் தெரியாது. அந்தத் தந்தையை அனைவரும் நினைவு செய்கின்றனர். அவரைத் தான் பரமபிதா பரமாத்மா எனச் சொல்கின்றனர். பிரம்மா-விஷ்ணு-சங்கரைப் பரமாத்மா எனச் சொல்ல மாட்டார்கள். வேறு யாரையும் பரமாத்மா எனச் சொல்ல முடியாது. இச்சமயம் நீங்கள் பிரஜாபிதா பிரம்மா எனச் சொல்கிறீர்கள். ஆனால் பிரஜா பிதாவை ஒரு போதும் பக்தியில் நினைவு செய்வதில்லை. அனைவருமே நிராகார் தந்தையைத் தான் நினைவு செய்கின்றனர் – ஓ ! காட் ஃபாதர், ஓ ! பகவான் என்ற சொல்லைத் தான் வெளிப்படுத்து கின்றனர். ஒருவரை மட்டுமே நினைவு செய்கின்றனர். மனிதர்கள் தங்களை காட் ஃபாதர் எனச் சொல்லிக் கொள்ள முடியாது. பிரம்மா-விஷ்ணு-சங்கரும் கூட தங்களை காட் ஃபாதர் எனச் சொல்லிக் கொள்ள முடியாது. அவர்களுக்கு சரீரத்தின் பெயரோ உள்ளது தானே? ஒரே ஒரு காட் ஃபாதருக்கு மட்டுமே தம்முடைய சரீரம் என்பது கிடையாது. பக்தி மார்க்கத்திலும் கூட சிவனுக்கு அதிகம் பூஜை செய்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள் – சிவபாபா இந்த சரீரத்தின் மூலம் நம்மோடு பேசிக் கொண்டிருக்கிறார். ஹே குழந்தைகளே, எவ்வளவு அன்போடு சொல்கிறார், புரிந்து கொண்டிருக்கிறார், நான் அனைவருக்கும் தூய்மை ஆக்குபவராக சத்கதி அளிக்கும் வள்ளலாக உள்ளேன். மனிதர்கள் பாபாவுக்கு மகிமை செய்கின்றனர் இல்லையா? ஆனால் அவர்களுக்கு இது தெரியாது – 5000 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வருகிறார். நிச்சயமாக எப்போது கலியுகத்தின் கடைசி சமயமோ அப்போது தான் வருவார். இப்போது கலியுகத்தின் கடைசி என்பதால் நிச்சயமாக அவர் வந்துள்ளார். உங்களுக்குக் கிருஷ்ணர் கற்பிக்கவில்லை. ஸ்ரீமத் கிடைக்கின்றது ஆனால் ஸ்ரீமத் ஒன்றும் கிருஷ்ணருடையதல்ல. கிருஷ்ணரின் ஆத்மாவும் கூட ஸ்ரீமத் மூலம் மீண்டும் தேவதை ஆகியிருந்தது. பிறகு 84 பிறவிகள் எடுத்து இப்போது நீங்கள் அசுர வழியில் செல்பவர்களாக ஆகியிருக் கிறீர்கள். பாபா சொல்கிறார் – எப்போது உங்களுடைய (84 பிறவியின்) சக்கரம் முடிவடைகின்றதோ, அப்போது தான் நான் வருகிறேன். நீங்கள் ஆரம்பத்தில் வந்தீர்கள், இப்போது கடைசி இற்றுப் போன நிலையில் இருக்கிறீர்கள். மரம் முழுமையாக இற்றுப்போய் விடுகின்றது என்றால் முழு மரமும் அப்படியே ஆகி விடுகின்றது. பாபா புரிய வைக்கிறார் – நீங்கள் தமோபிரதான் ஆவதால் அனைவரும் தமோபிரதான் ஆகி விட்டுள்ளனர். இது மனித சிருஷ்டியின், பலவித தர்மங்களின் மரமாகும். இதைத் தலைகீழான மரம் எனச் சொல்கின்றனர். இதன் விதைமேலே உள்ளது. இந்த விதையில் இருந்து தான் முழு மரமும் வெளிப்படுகின்றது. மனிதர்கள் சொல்லவும் செய்கின்றனர்-காட் ஃபாதர் என்று. ஆத்மா சொல்கிறது, ஆத்மாவின் பெயர் ஆத்மா தான். ஆத்மா சரீரத்தில் வருகின்றது என்றால் சரீரத்திற்குப் பெயர் வைக்கப்படுகின்றது, விளையாட்டு நடைபெறுகின்றது. ஆத்மாக்களின் உலகத்தில் விளையாட்டு நடைபெறுவதில்லை. விளையாட்டிற்கான இடமே இது தான் (ஸ்தூல உலகம்). நாடகத்தில் ஒளி முதலிய அனைத்தும் இருக்கும். மற்றப்படி எங்கே ஆத்மாக்கள் வசிக் கின்றனரோ, அங்கே சூரியன், சந்திரன் கிடையாது, அங்கே டிராமாவின் விளையாட்டு நடைபெறு வதில்லை. இரவு-பகல் இங்கே தான் இருக்கும். சூட்சுமவதனம் அல்லது மூலவதனத்தில் இரவு-பகல் என்பது கிடையாது. கர்மசேத்திரம் இது தான். இதில் மனிதர்கள் நல்ல கர்மமும் செய்கின்றனர், கெட்ட கர்மமும் செய்கின்றனர். சத்யுக-திரேதாவில் நல்ல கர்மங்கள் இருக்கும். ஏனென்றால் அங்கே 5 விகாரங்கள் என்ற இராவணனின் இராஜ்யமே கிடையாது. பாபா வந்து கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியத்தைச் சொல்கிறார். கர்மமோ செய்யத் தான் வேண்டும். இது கர்ம சேத்திரம். சத்யுகத்தில் மனிதர்கள் என்ன கர்மம் செய்கின்றனரோ, அது அகர்மம் ஆகின்றது. அங்கே இராவண இராஜ்யமே கிடையாது. அது சொர்க்கம் எனச் சொல்லப்படுகின்றது. இந்தச் சமயம் சொர்க்கம் கிடையாது. சத்யுகத்தில் ஒரு பாரதம் மட்டுமே இருந்தது. வேறு எந்த ஒரு கண்டமும் கிடையாது. ஹெவன்லி காட்ஃபாதர் எனச் சொல்கின்றனர் என்றால் தந்தை நிச்சயமாக சொர்க்கத்தைத் தான் படைப்பார். இதை அனைத்து தேசத்தைச் சேர்ந்தவர்களும் அறிவார்கள், பாரதம் புராதன தேசம் என்று. முதல்-முதலில் பாரதம் மட்டுமே இருந்தது. இதை யாரும் அறிந்திருக்கவில்லை. இப்போதோ இல்லை அல்லவா? இது 5000 ஆண்டுகளின் விசயம் தான். சொல்லவும் செய்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன் பாரதம் சொர்க்கமாக இருந்தது. படைப்பவர் நிச்சயமாக படைப்புகளைப் படைப்பார். தமோபிர தான புத்தி இருக்கிற காரணத்தால் இவ்வளவு கூடப் புரிந்து கொள்வதில்லை. பாரதம் தான் அனைத்திலும் உயர்ந்த கண்டம். மனித சிருஷ்டியின் முதல் வம்சாவளி. இதுவும் உருவாக்கப் பட்டுள்ள டிராமா. பணக்காரர்கள் ஏழைகளுக்கு உதவுகின்றனர். இதுவும் நடைபெற்று வந்துள்ளது.. பக்தி மார்க்கத்திலும் கூட பணக்காரர்கள் ஏழைகளுக்கு தானம் செய்கின்றனர். ஆனால் இது தூய்மை யற்ற உலகமாகவே உள்ளது. யார் என்ன தானம் செய்தாலும் தூய்மையற்றவர்கள் தான் செய் கின்றனர். யாருக்கு தானம் செய்கின்றனரோ, அவர்களும் தூய்மை இல்லாதவர்கள். தூய்மையில்லாத வர்கள் தூய்மையற்றவர்களுக்கு தானம் செய்கின்றனர், அதன் பலனாக என்ன பெறுவார்கள்? எவ்வளவு தான் தான-புண்ணியம் செய்து வந்திருந்த போதிலும் பிறகும் கீழே இறங்கியே வந்துள்ளனர். பாரதம் போன்ற தானம் செய்யும் கண்டம் வேறு எதுவும் கிடையாது. இச்சமயம் உங்களிடம் உள்ள உடல், மனம், செல்வம் அனைத்தையும் இதில் அர்ப்பணம் செய்கிறீர்கள். இது ராஜஸ்வ அஸ்வமேத அவிநாசி ஞான யக்ஞம் எனச் சொல்லப்படுகின்றது. ஆத்மா சொல்கின்றது, இந்தப் பழைய சரீரத்தையும் கூட இங்கே ப-பொருளாக அர்ப்பணம் செய்துவிட வேண்டும். ஏனென்றால் நீங்கள் அறிவீர்கள் – முழு உலகத்தின் மனிதர்கள் அனைவருமே இதில் அர்ப்பணமாகி விடுகின்றனர். அதனால் நாம் ஏன் குஷியுடன் பாபா மீது பலியாகக் கூடாது? ஆத்மா அறிந்துள்ளது – நாம் பாபாவை நினைவு செய்கிறோம். சொல்லியும் வந்துள்ளோம், பாபா, நீங்கள் எப்போது வருகிறீர்களோ, நாங்கள் சமர்ப்பணம் ஆகி விடுவோம். ஏனென்றால் நாங்கள் சமர்ப்பணம் ஆவதால் தாங்கள் பிறகு 21 பிறவிகளுக்கு சமர்ப்பணமாகி விடுவீர்கள். இது வியாபாரமாகும். நாங்கள் உங்கள் மீது சமர்ப்பணம் ஆகிறோம் என்றால் தாங்களும் கூட 21 தடவை சமர்ப்பணம் ஆகி விடுகிறீர்கள். பாபா சொல்கிறார் – எது வரை நீங்கள் ஆத்மா தூய்மையாகவில்லையோ, அது வரை நான் உங்கள் பலியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

பாபா சொல்கிறார் – என்னை மட்டுமே நினைவு செய்வீர்களானால் ஆத்மா தூய்மையாகி விடும். பாபாவை மறந்ததால் நீங்கள் எவ்வளவு தூய்மையில்லாமல் மற்றும் துக்கம் நிறைந்தவர்களாக ஆகி விட்டீர்கள்! எனவே என்னிடம் சரணடைகிறீர்கள் இப்போது இராவணன் மூலம் 63 பிறவிகளின் துக்கமுடையவர்களாகி விட்டீர்கள். ஒரு சீதையின் விசயமல்ல. மனிதர்கள் அனைவருமே சீதைகள். இராமாயணத்திலோ கதை எழுதி வைத்துள்ளனர். சீதையை இராவணன் சோகவனத்தில் வைத்தான். உண்மையில் இந்த விஷயமெல்லாம் இப்போதைய சமயத்தினுடையதாகும். அனைவரும் இராவணன், அதாவது 5 விகாரங்கள் என்ற சிறையில் உள்ளனர். அதனால் துக்கத்தில் அழைக் கின்றனர் – எங்களை இதிலிருந்து விடுவியுங்கள். ஒருவருடைய விஷயம் கிடையாது. பாபா புரிய வைக்கிறார், முழு உலகமும் இராவணனின் சிறையில் உள்ளது. இராவண இராஜ்யம் அல்லவா? இராமராஜ்யம் வேண்டும் எனச் சொல்லவும் செய்கின்றனர். காந்தியும் கூட சொன்னார். இராமராஜ்யம் வேண்டும் என்று சந்நியாசிகள் ஒரு போதும் இது போல் சொல்ல மாட்டார்கள். இச்சமயம் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மட்டும் இல்லை, மற்றக் கிளைகள் உள்ளன. சத்யுகம் இருந்தது. ஒரே ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. இப்போது அந்தப் பெயரே மாறி விட்டுள்ளது. தங்களின் தர்மத்தை மறந்து பிறகு மற்ற-மற்ற தர்மங்களில் மாறிக் கொண்டே உள்ளனர். முஸ்லிம்கள் வந்து எவ்வளவு இந்துக்களைத் தங்கள் தர்மத்தில் மாற்றி விட்டுள்ளனர்! கிறிஸ்தவ தர்மத்திலும் கூட அநேகர் மாறி விட்டுள்ளனர். அதனால் பாரதவாசிகளின் ஜனத்தொகை குறைந்து விட்டுள்ளது. இல்லையென்றால் பாரதவாசிகளின் மக்கள் தொகை அனைவரைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும். அநேக தர்மங்களில் மாறி விட்டுள்ளனர். பாபா சொல்கிறார், உங்களுடைய ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் அனைத்திலும் உயர்ந்ததாகும். சதோபிரதானமாக இருந்தவர் கள் தான் இப்போது மாற்றமடைந்து பிறகு தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளனர். இப்போது குழந்தைகள் நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் – ஞானக்கடல், பதீத-பாவனர் என யாரை அழைக்கின்றனரோ, அவரே நம் முன் அமர்ந்து பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். அவர் ஞானக்கடல், அன்புக் கடலாக உள்ளார். கிறிஸ்துவுக்கு இது போல் மகிமை செய்ய மாட்டார்கள். கிருஷ்ணர் ஞானக்கடல், பதீத-பாவனர் எனச் சொல்லப் படுவதில்லை. கடல் ஒன்று தான் இருக்கும். நாலாபுறமும் சுற்றிலும் கடல் தான் உள்ளது. இது மனித சிருஷ்டியின் நாடகம், இதில் அனைவருக்கும் அவரவரின் பார்ட் உள்ளது. பாபா சொல்கிறார், எனது காரியம் அனைத்திலிருந்தும் தனிப்பட்டது. நான் ஞானக்கடலாக இருக்கிறேன். என்னைத் தான் நீங்கள் அழைக்கிறீர்கள், பதீத-பாவனா என்று. பிறகு சொல்கிறீர்கள், லிபரேட்டர் (துன்பத்திலிருந்து விடுவிப்பவர்). எதிலிருந்து விடுவிக்கிறார்? இதையும் யாரும் அறிந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், நாம் சத்யுக-திரோதாவில் மிகுந்த சுகத்துடன் இருந்தோம். அது சொர்க்கம் எனச் சொல்லப்பட்டது. இப்போதோ நரகமாக உள்ளது. அதனால் அழைக்கின்றனர் – துக்கத்திலிருந்து விடுவித்து சுகதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். சந்நியாசிகள் ஒரு போதும் சொல்ல மாட்டார்கள், இன்னார் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று. அவர்கள் பிறகு சொல்கின்றனர், (பூ உலகிற்கு) அப்பால் நிர்வாணத்திற்குச் சென்று விட்டார் என்று. வெளிநாடுகளிலும் சொல்கின்றனர், லெஃப்ட் ஃபார் ஹெவன்லி அபோட் (சொர்க்க லோகத்திற்குச் சென்று விட்டார்). காட் ஃபாதரிடம் சென்று விட்டதாக நினைக்கின்றனர். ஹெவன்லி காட் ஃபாதர் எனச் சொல்கின்றனர். நிச்சயமாக சொர்க்கம் இருந்தது. இப்போது இல்லை. நரகத்திற்குப் பிறகு சொர்க்கம் வர வேண்டும். காட் ஃபாதர் இங்கே வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வேண்டி உள்ளது. சூட்சுமவதனம், மூலவதனம் ஒன்றும் சொர்க்கம் கிடையாது. நிச்சயமாக பாபா தான் வர வேண்டி உள்ளது.

பாபா சொல்கிறார் – நான் வந்து இயற்கையின் ஆதாரத்தை எடுத்துக் கொள்கிறேன். எனது ஜென்மம் மனிதர்களுடையது போல் கிடையாது. நான் கர்ப்பத்தில் வருவது கிடையாது. நீங்கள் அனைவரும் கர்ப்பத்தில் வருகிறீர்கள். சத்யுகத்தில் கர்ப்ப மாளிகை இருக்கும். ஏனென்றால் அங்கே எந்த விகர்மமும் நடப்பதில்லை, தண்டனை பெறுவதற்கு. அதனால் அது கர்ப்ப மாளிகை எனச் சொல்லப் படுகின்றது. இங்கே விகர்மம் செய்கின்றனர், அதற்காக தண்டனை பெற வேண்டி உள்ளது. அதனால் கர்ப்ப ஜெயில் எனச் சொல்லப் படுகின்றது. இங்கே இராவண இராஜ்யத்தில் மனிதர்கள் பாவம் செய்து கொண்டே இருக்கின்றனர். இதுவே பாவாத்மாக்களின் உலகம். அது புண்ணியாத்மாக்களின் உலகம் – சொர்க்கம், அதனால் தான் கிருஷ்ணர் ஆலிலை மீது வந்ததாகச் சொல்லப்படுகின்றது. இதைக் கிருஷ்ணரின் மகிமையாகக் காட்டுகின்றனர். சத்யுகத்தில் கர்ப்பத்தில் துக்கம் ஏற்படுவதில்லை. பாபா கர்மம், அகர்மம், விகர்மத்தின் கதியைப் புரிய வைக்கிறார். இதைப் பற்றிய சாஸ்திரமாகப் பிறகு கீதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் சிவபகவான் வாக்கு என்பதற்கு பதிலாக கிருஷ்ணரின் பெயரைப் போட்டு விட்டுள்ளனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், நாம் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி அடைகிறோம். இப்போது பாரதம் இராவணனால் சாபமிடப் பட்டுள்ளது. அதனால் துர்கதி ஏற்பட்டுள்ளது. இந்தப் பெரிய சாபமும் கூட டிராமாவில் விதிக்கப் பட்டுள்ளது. பாபா வந்து வரம் தருகிறார் – ஆயுஸ்வான் பவ, புத்திரவான் பவ, சம்பத்திவான் பவ……… அனைத்து சுகங்களின் ஆஸ்தி தருகிறார். உங்களுக்கு வந்து படிப்பு சொல்லித் தருகிறார். அந்தப் படிப்பின் மூலம் நீங்கள் தேவதை ஆகிறீர்கள். இந்தப் புதிய படைப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரம்மா மூலமாக உங்களை பாபா தம்முடையவர்களாக ஆக்குகிறார். பிரஜாபிதா பிரம்மா என்று பாடவும் படுகிறது. நீங்கள் அவருடைய குழந்தைகள் பிரம்மாகுமார்-குமாரிகளாக ஆகியிருக்கிறீர்கள். தாத்தாவிடமிருந்து ஆஸ்தியைத் தந்தை மூலமாகப் பெறுகிறீர்கள். இதற்கு முன்பும் கூடப் பெற்றிருக் கிறீர்கள். இப்போது மீண்டும் பாபா வந்திருக்கிறார். தந்தையின் குழந்தைகளோ பிறகு தந்தையிடம் செல்ல வேண்டும். ஆனால் பாடப் பட்டுள்ளது, பிரஜாபிதா பிரம்மா மூலம் மனித சிருஷ்டியின் ஸ்தாபனை நடைபெறுகின்றது. ஆக, அது இங்கே தான் நடைபெறும் அல்லவா? ஆத்மாவின் சம்மந்தத்தில் நாம் சகோதர-சகோதரர்கள் எனச் சொல்வார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவதால் சகோதர- சகோதரிகள் ஆகிறீர்கள். நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றிருந்தீர்கள். இப்போதும் கூட தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். சிவபாபா சொல்கிறார்-என்னை நினைவு செய்யுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். நினைவு செய்வதன் மூலம் தான் நீங்கள் தூய்மையாவீர்கள், வேறு எந்த ஓர் உபாயமும் கிடையாது. தூய்மையாகாமல் நீங்கள் முக்திதாமத்திற்குச் செல்லவும் முடியாது. ஜீவன் முக்திதாமத்தில் முதல்-முதலில் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் இருந்தது. பிறகு வரிசைக்கிரமமாக மற்ற-மற்ற தர்மங்கள் வந்தன. பாபா கடைசியில் வந்து அனைவரையும் துக்கங்களில் இருந்து விடுவிக்கிறார். அவர் லிபரேட்டர் என்றே சொல்லப்படுகிறார். பாபா சொல்கிறார் – நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்வீர்களானால் உங்கள் பாவங்கள் பஸ்மமாகி விடும். அழைக்கவும் செய்கிறீர்கள் – பாபா, வாருங்கள், எங்களை தூய்மையில்லாத நிலையிலிருந்து தூய்மையாக்குங்கள் என்று. ஆசிரியரோ படிப்பு சொல்லித் தருகிறார். இதில் வித்தை ஏதும் செய்கிறாரா என்ன? தந்தையாகிய ஞானக்கடல் தான் வந்து ஞானத்தைத் தருகிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் கதியை (விளைவை) அறிந்து கொண்டு, இப்போது எந்த ஒரு விகர்மத்தையும் செய்யாமல் இருக்க வேண்டும். கர்ம சேத்திரத்தில் கர்மம் செய்து கொண்டே விகாரங்களைத் தியாகம் செய்வது தான் விகர்மங்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதாகும்.

2) நமது சமர்ப்பணத்தை பாபா ஏற்றுக் கொள்ள வேண்டுமளவிற்கு முழு தூய்மையாக வேண்டும் தூய்மை அடைந்து தூய்மையான உலகத்திற்குச் செல்ல வேண்டும். உடல்-மனம்-செல்வம் அனைத்தையும் இந்த யக்ஞத்தில் அர்ப்பணம் செய்து பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வரதானம்:-

தற்சமயம் மாயாவின் யுத்தம் சோம்பலின் ரூபத்தில் பல்வேறு வழிகளில் நடைபெறுகிறது. இந்தச் சோம்பலும் கூட ஒரு விசேஷ விகாரம் தான். இதை முடித்து வைப்பதற்கு சதா உற்சாகத்தில் இருங்கள். வருமானத்தைச் சம்பாதிப்பதற்கான உற்சாகம் இருக்குமானால் சோம்பல் முடிந்து போகும். அதனால் ஒரு போதும் உற்சாகத்தைக் குறைக்கக் கூடாது. யோசிக்கிறோம், செய்கிறோம், செய்யத் தானே போகிறோம், ஆகி விடும் இவை அனைத்தும் சோம்பலின் அடையாளங்கள். அத்தகைய சோம்பலுடன் கூடிய பலமற்ற சங்கல்பங்களை முடித்து விட்டு, இதையே யோசியுங்கள் — அதாவது எதைச் செய்ய வேண்டுமோ, எவ்வளவு செய்ய வேண்டுமோ, அதை இப்போதே செய்ய வேண்டும் — அப்போது உங்களைத் தீவிரப் புருஷார்த்தி எனச் சொல்வார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top