09 May 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
8 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.
நிச்சய புத்தி வெற்றி ரத்தினங்களின்அடையாளங்கள்
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று பாப்தாதா நாலாபுறமும் உள்ள தனது நிச்சயத்துடன் வெற்றி பெறும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள நம்பிக்கைக்கான அடையாளங்களை பார்க்கின்றார். (1)எந்தளவு நம்பிக்கையோ அந்தளவு செயலிலும், சொல்லிலும் ஒவ்வொரு நேரமும் முற்றிலும் ஆன்மீக போதை தென்படும். (2) ஒவ்வொரு செயல், எண்ணம் அனைத்திலும் வெற்றி சுலபமாகவே வெளிப்படையாக அதிகாரப் பூர்வமாக அனுபவம் ஆகும். (3) தனது உன்னதமான பாக்கியம், உயர்ந்த வாழ்க்கை, பாபா மற்றும் பரிவாரத்தின் தொடர்பில் ஒரு சதவீதம் கூட எண்ணத்தின் அளவில் சிறிதும் சந்தேகம் எழாது (4) கேள்வி முடிந்து ஒவ்வொரு விசயத்திலும் புள்ளியாகி, புள்ளி வைப்பவர் ஆவர். (5) நம்பிக்கை புத்தி உள்ளவர் தன்னைத்தான கவலையில்லா இராஜாவாக எப்போதும் உணர்வார்கள். ஏனென்றால் மீண்டும் மீண்டும் நினைவு படுத்த வேண்டிய கடினம் இராது. நான் பாதுஷா இப்படி சொல்வதில் கூட கடினம் இல்லை. ஏனெனில், எப்போது மனோ நிலை என்ற உயர்ந்த ஆசனத்தில், சிம்மாசனத்தில் வீற்றிருப்பவராகின்றாரோ லௌகீக வாழ்வில் இன்னல்களுக்களுக்கேற்ப மனோ நிலை மாறுகிறது. துக்கம், சுகம் என மாறும் பொழுது அதற்கேற்ப அனுபவம் இயல்பாகிறது. மீண்டும் மீண்டும் நான் துக்கம் அடைந்துள்ளேன் சுகம் பெறுகிறேன் என்ற உணர்வுகளை வெளிப்படுத்துவது எந்த முயற்சியின்றி நடைபெறுகிறது. கவலையில்லா இராஜா என்பதற்கான மனோ நிலையும் சுலபமாகவே அனுபவம் ஆகிறது.
அஞ்ஞான வாழ்வில் இன்னல்களுக்கேற்ப நிலை அமைகிறது. ஆனால் சக்தி வாய்ந்த அலௌகீக பிராமண வாழ்வில் இன்னல்களுக்கேற்ப மனோநிலை மாறுவதில்லை. ஆனால் கவலையற்ற மனோ நிலை உன்னத நிலை பாப்தாதா மூலமாக கிடைத்த ஞானத்தின் ஒளி, சக்தி மூலமாக நினைவின் சக்தி மூலமாக அமைகிறது. ஞானம், யோகத்தின் சக்திகள் ஆஸ்தியாக பாபா மூலமாக கிடைக்கிறது. பிராமண வாழ்வில் தந்தையின் ஆஸ்தி மூலமாக சத்குருவின் வரதானம் மூலமாக பாக்கிய வள்ளல் மூலமாக பெறப்பட்ட சிரேஷ்ட பாக்கியத்தின் மூலமாக மனோ நிலை அமைகிறது. மாறாக இன்னல் களின் அடிப்படையில் மனோ நிலை அமைந்தால் சக்தி வாய்ந்தவர் யார்? இன்னல்களே சக்தி வாய்ந்த தாகிவிடுமல்லவா? அப்படி இன்னல்களுக்கேற்ப தனது நிலையை மாற்றிக் கொள்பவர் ஆடாது, அசையாது உறுதி பெற முடியாது. அஞ்ஞான வாழ்வில் நேரத்திற்கு நேரம் குஷிவந்தால் குதிப்பதும், சோகம் என்றால் துவண்டு போவதுமாக இருப்பார்கள். அலௌகீக வாழ்வில் அப்படிப்பட்ட மனோ நிலை இருக்காது. இன்னலுக்கேற்ப அல்லாமல் தனது ஆஸ்தி, வரதானம் ஆதாரத்தாலும் தனது சிரேஷ்ட நிலையிலும் இன்னலையே மாற்றியமைப்பவர் ஆவீர்கள். நம்பிக்கை புத்தி யுள்ளவர்கள் சதா கவலையற்றவராக இருக்கின்றார். ஏனெனில் ஏதேனும் குறைவோ, இல்லாமையோ இருந்தால் தானே கவலை ஏற்படும். அனைத்து பிராப்திகளும் கிடைக்கப்பெற்றவர் கள் சர்வ சக்திவானின் குழந்தை ஆகும் பொழுது கவலை எதற்காக?
(6) நம்பிக்கை என்றாலே தந்தையின் பேரில் முழு பலியாவதாகும். பலியாவது யாதெனில் அர்ப்பணித்தேன் என்ற எண்ணத்தையும் அர்ப்பணிப்பது, மறந்து விடுவது. அது தேக உணர்வுகளின் விகாரத்தின் வம்சமோ, தேக உறவுகளின் வம்சமோ, அழியும் பதார்த்தங்களின் மீதுள்ள ஆசையின் வம்சமோ இவை அனைத்தும் அதனுள் அடங்கும். அனைத்தையும் சமர்ப்பணம் செய்வது என்றாலும், தியாகம் செய்வது என்றாலும் ஒன்றே. மதுபனிலேயே அமர்ந்து விடுவதோ, சேவை நிலையத் திலேயே அமர்ந்து விடுவதோ சமர்ப்பணமாகாது. இது ஒரு படி தான். அர்ப்பண வாழ்விற்கு ஆனால் அனைத்தையும் அர்ப்பணம் செய்வது என்பது படிகளின் உன்னத முடிவாகும். ஒரு படி ஏறிவிட்டீர்கள். ஆனால் முடிவை எட்ட நம்பிக்கையின் அடையாளம் மூன்றையுமே வம்சம் உட்பட அர்ப்பணம் செய்தல். மூன்றையும் தெளிவாக தெரிந்து கொண்டீர்கள் அல்லவா! கனவிலும் நினைவிலும் அம்சமும் இல்லாத நிலையே வம்சமே முடிந்ததாகும். அம்சம் இருந்தாலும் வம்சம் வளரும். எனவே அனைத்தும் அர்ப்பணம் என்பதன் உட்பொருள் மிகவும் ஆழமானது. அதனையும் எப்போதாவது சொல்வோம். (7) நம்பிக்கை புத்தியுள்ளவர்கள் எப்போதும் கவலையற்றவராக இருப்பார்கள். ஒவ்வொரு விசயத்திலும் வெற்றி நிச்சயம் என்ற ஆன்மீக அனுபவம் செய்வர். நம்பிக்கை, கவலை யின்மை, நடந்தே தீரும் இதனை எந்த நேரமும் அனுபவம் செய்வார்கள். (8) அவர்கள் தானும் போதையில் இருப்பார்கள், அவரை பார்க்கும் பிறருக்கும் அந்த ஈஸ்வரிய போதை அனுபவம் ஆகும். தந்தையின் உதவியாலும் தனது மனோ நிலையாலும் பிறருக்கும் அந்த ஆன்மீக போதையை அனுபவம் செய்விப்பர். நம்பிக்கை புத்தி மற்றும் ஆன்மீக போதையில் இருப்பவரின் வாழ்வில் என்ன சிறப்பம்சங்கள் காணப்படும்? முதல் விசயம் எந்தளவிற்கு உன்னத போதையோ அந்தளவு நான் நிமித்தமான கருவியே என்ற நிலை ஒவ்வொரு செயலிலும் வாழ்க்கை முழுவதும் ஏற்படும். அதனால் புத்தியிலும் பணிவே தென்படும். புத்தியின் மீது கவனம் தருவது என்பது எந்தளவு பணிவான புத்தியோ அந்தளவு புத்துலகிற்கான செயலும் நடைபெறும். ஆக பணிவும் இருக்கும் புத்தாக்கமும் இருக்கும். இந்த விசேசங்கள் இருப்பதுவே நம்பிக்கையே வெற்றி என்பதாகும். நிமித்தம் (கருவி), நிர்மான் (பணிவு) நிர்மான் புத்தாக்கம்) நம்பிக்கை புத்தியின் மொழி வார்த்தை எப்படி இருக்கும். இனிமையாக பேசுவார்கள் அது பொதுவான விசயம் தான். ஆனால் பிறரை முன்னேற்றுபவராக இருப்பார்கள். தாங்கள் முதலில் என்பார்கள். நான், நான் என்பது கிடையாது. உதாரணமானவர்கள் அதாவது பிறரை முன்னால் வைப்பவர்கள். பிரம்மா பாபா எப்போதுமே தன்னை விட முன்னேற்றத் தில் இருப்பவர் மம்மா மற்றும் குழந்தைகள் என்று அவர்களையே முன்னால் வைத்தார். இதுவே உதாரணத்தின் மொழி. பிறரை முன்னால் வைக்கும் குணம் இருந்தால் தானாகவே மனம் விரும்பிய பலன் கிடைத்து விடும். அந்தளவு ஆசை என்றாலே என்னவென்று தெரியாத நிலை இருந்தால் பாபாவும், பரிவாரமும் தகுதியுணர்ந்து அவரையே முன்னால் வைப்பர். பிறரை மனதார முன்னால் வைப்பவர் ஒருபோதும் பின்தங்கியிருப்பதில்லை, மனதார பிறரை முன்னால் வைத்தால் எல்லோரும் அவரை முன்னால் வைப்பர். ஆசையிருந்தால் அது முடியாது. நம்பிக்கை புத்தி என்றாலே எப்போதும் பிறரை முன்னேற்றுபவர், திருப்தியானவர், அனைவர் பொருட்டும் நம்மை செய்பவர். அப்படி உள்ளவரே, நம்பிக்கையே வெற்றி என்பதற்கு உதாரணம் ஆவார். அனைவரும் நம்பிக்கை புத்தியுள்ளவர் தானே? ஏனெனில் நம்பிக்கையே அஸ்திவாரம்.
ஆனால் இன்னல்கள், மாயை, சம்ஸ்காரங்கள், விதவிதிமான சுபாவங்கள் எனும் புயல் வீசுகையில் தான் அஸ்திவாரம் எவ்வளவு வலிமையாக உள்ளதென தெரிய வருகிறது. இப்பழைய உலகில் விதவிதமான புயல் வருவது போன்று காற்று, கடல் இவைகளால், அது போன்று இங்கும் கூட விதவிதமான புயல் வருகிறது. புயல் என்ன செய்யும்? முதலில் பறக்கச் செய்யும் பிறகு வீசி எறிந்து விடும். அவ்வாறே இந்த புயலும் முதலில் ஆனந்தத்தில் பறக்கச் செய்யும். புத்திசாலி, நம்பிக்கை புத்தியுள்ளவர்கள் மூன்றாவது கண் கொண்டிருப்பதுடன் மூன்று காலத்தையும் பார்ப்பதால் ஒருபோதும் எமாற்றமடைய மாட்டார்கள். புயல் வரும் தருணம் நம்பிக்கை கண்டறியப்படும். புயல் வந்து மிகப் பழைய மரங்களையும் வேறுடன் சாய்த்து விடும். அவ்வாறு மாயை எனும் புயலும் நம்பிக்கையெனும் அஸ்திவாரத்தை சாய்த்து விட முயற்சி செய்யும். ஆனால் விளைவு யாதெனில் சாய்ந்து விடுபவர் குறைவு தான், அனேகர் அசைந்து விடுகின்றனர். அசைந்தாலும் அஸ்திவாரம் வலுவிழந்தே போகிறது. அது போன்ற நேரத்தில் தன் நிலையை சோதனை செய்துப் பாருங்கள். யாரையாவது நம்பிக்கை உறுதியாக உள்ளதா என கேட்டால் என்ன சொல்வார்கள்? சொற்பொழிவு மிக நன்றாக செய்வார்கள். நம்பிக்கையோடு இருப்பது நன்றாக உள்ளது. தக்க சமயத்தில் நம்பிக்கை அசைகிறது என்றால் பல பிறவிக்கு பலனிலிருந்து அசைந்து விடுவதாகும். ஆகவே புயல் வீசும் பொழுது சோதியுங்கள் லி யாரேனும் மரியாதை கௌரவம் தராத பொழுது வீண் எண்ணமான மாயை வருகிறதா, தான் விரும்பியது நடக்காதப்பொழுது சக்தி வாய்ந்த தந்தையின் சக்திசாலியான குழந்தை ஆத்மா நான் என்ற நினைவு வருகிறதா? அல்லது வீண் எண்ணம் சக்தி வாய்நதவரை வெற்றி கொள்கிறதா? அப்படி வீண் எண்ணம் வெற்றிக் கொண்டால் அஸ்திவாரமான நம்பிக்கை அசைந்து விடும். சக்திவான் என்பதற்கு பதிலாக தன்னை பலவீனமானவராக அனுபவம் செய்வர். மனமுடைந்து போவார்கள். எனவே புயல் வரும் நேரம் சோதனை செய்து எல்லைக்குட்பட்ட மரியாதை, கௌரவம், நான் என்பதெல்லாம் ஆன்மீக பெருமிதத்திலிருந்து கீழே கொண்டு வரும். எல்லைக்குட்பட்ட எந்த ஆசையும், ஆசை என்றாலே என்னவென்று தெரியாத நிலையிலிருந்து கீழே கொண்டு வரும். நான் தேகமல்ல, ஆத்மா என்பது மட்டும் நம்பிக்கையாகாது. நான் எப்படிப்பட்ட ஆத்மா, அந்த போதை, சுய மரியாதை, தக்க நேரத்தில் அனுபவம் ஆவது இதுவே நம்பிக்கையே வெற்றி என்பதாகும். சோதனையே இல்லாமல் நான் மதிப்புடன் தேர்ச்சி பெற்று விட்டேன் என்றால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? சான்றிதழ் வேண்டுமல்லவா? என்ன தான் தேர்ச்சி பெற்றுபட்டமே பெற்றாலும் சான்றிதழ் பெறாமல் மதிப்பு இராது. சோதனை வரும்போது வெற்றி பெற்று சான்றிதழ் பெற வேண்டும். பாபாவிடம் பரிவாரத்திடமிருந்து சான்றிதழ் பெறும் பொழுதே நிச்சய புத்தி வெற்றி என சொல்லக்கூடும். புரிந்ததா? அஸ்திவாரத்தையும் சோதனை செய்து கொண்டேயிருங்கள். நிச்சய புத்தியின் விசேசங்களை கேட்டீர்களா? சமயத்திற்கேற்ப ஆன்மீக போதை வாழ்வில் தென்பட வேண்டும். தான் மட்டும் மகிழ்ந்தால் போதாது. மக்களும் மகிழ வேண்டும். இவர் ஆன்மீக போதையில் உள்ளவர் என்பதை அனைவரும் அனுபவம் செய்ய வேண்டும். தனக்கு மட்டும் பிரியமான வரல்லாமல் மக்களுக்குப் பிரியமானவர், தந்தைக்குப் பிரியமானவர் என்றிருக்க வேண்டும். அதுவே வெற்றி நல்ல.து.
அயல் நாட்டவருடன் பாப்தாதாவின் சந்திப்பு: தன்னை அருகே உள்ள ரத்தினமாக அனுபவம் செய்கிறீர்களா? அருகே உள்ளவரின் அடையாளம் என்ன? அவர்கள் எப்போதும் சுலபமாக இயல்பாகவே ஞானி, யோகி, குண மூர்த்தியாக அனுபவம் செய்வார்கள். அருகே உள்ளவர்களிடம் ஒவ்வொரு அடியிலும் இந்த நான்கு சிறப்பம்சமும் அனுபவம் ஆகும். ஒன்று கூட குறையாது, ஞானத்தில் குறைவு, யோகத்தில் தெளிவு, தெய்வீக குணத்தில் பலவீனம் என்றில்லாமல் எல்லா வற்றிலும் எப்போதும் சுலபமாக அனுபவம் செய்வர். சமீபத்தில் உள்ள ரத்தினம் எந்த விதத்திலும் உழைப்பின்றி சுலபமாக வெற்றியை அனுபவம் செய்வார்கள். ஏனெனில் பாப்தாதா சங்கமயுகத்தில் குழந்தைகளை உழைப்பிலிருந்து விடுவித்து விட்டார். 63 பிறவியாக உடலாலும், மனதாலும் உழைத்தீர்கள். தந்தையை அடைய வேண்டி பலப்பல வழிகளை கையாண்டீர்கள். இது மனதின் உழைப்பு., பணத்திற்காகவும், எவ்வளவு உழைத்தீர்கள். இப்போது அரை கல்பத்திற்கு இவையனைத்திலிருந்தும் விடுதலை. லௌகீக வேலையும் இல்லை, பக்தியும் இல்லை. இரண்டிலிருந்தும் முக்தி. இப்போதும் கூட லௌகீக வேலை செய்தாலும் பிராமணன் ஆன பிறகு வேறுபாடு உள்ளதல்லவா? டபுள் லைட்டாக உடலாலும், மனதாலும் லேசாக உள்ளீர்கள்? ஏன்? ஏனெனில் லௌகீக கரியமேயானாலும் இது அலௌகீக சேவையாக செய்கிறேன் என்ற உணர்வு. தன் சுய விருப்ப மில்லை. எங்கே விரும்பி செய்வோமோ அங்கே வேதனை. இப்போது ஒரு கருவியாக செய்கிறீர்கள். ஏனெனில் தெரியும் உடல், மனம், பொருட்கள் பயன் படுத்தும் பொழுது பல மடங்கு அழியாத வங்கியில் சேமிப்பாகிக் கொண்டிருக்கிறது. பிறகு சேமிப்பை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பீர்கள். நினைவு செய்ய வேண்டும், ஞானம் கேட்க வேண்டும், சொல்ல வேண்டும் இவற்றிலிருந்து விடுதலை. சில சமயங்களில் வகுப்பு கேட்டு கேட்டு களைத்து விடுகிறீர்கள் தானே! அங்கே லௌகீக இராஜ கல்வியும் விளையாட்டாக நடைபெறும். இவ்வளவு புத்தகம் இருக்காது. அனைத்து உழைப்பும் முடிவு பெறும். சிலருக்கு படிப்பே பெரும் சுமையாக உள்ளது. சங்கமயுகத்தில் உழைப்பிலிருந்து விடுபடும் சம்ஸ்காரம் நிரப்பப்படுகிறது. மாயையின் புயலே வந்தாலும் அந்த மாயையினை வெற்றிகொள்வதும் ஒரு விளையாட்டாக புரிகிறது. உழைப்பில்லை. விளையாட்டாகிறதா? அல்லது பெரிய விசயமாக தெரிகிறதா? மாஸ்டர் சர்வ சக்திவான் என்ற நிலையில் நிலைத்திருந்தால் விளையாட்டாகும். மேலும் அரை கல்பத்திற்கு விடைபெற்று சென்று விடு என்று சவால் விடுகின்றீர்கள். எனவே முடிவு நாளை கொண்டாட வருகிறதேயன்றி சண்டை போடுவதற்காக அல்ல. வெற்றி ரத்தினம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு நேரமும் வெற்றி, வெற்றி தானே (ஆம்) அப்படியென்றால் அங்கு சென்ற பிறகும் ஆம் சொல்லுங்கள். ஆயினும் பலசாலியாகி விட்டீர்கள், முன்பெல்லாம் உடனேயே பயந்தீர்கள் இப்போது பலசாலியாகி விட்டீர்கள். இப்போது அனுபவி ஆகிவிட்டீர்கள். அனுபவத்தின் அத்தாரிட்டியும் கூடவே கண்டறியும் சக்தியும் வந்து விட்டது. எனவே பயமில்லை. அனேக முறை வெற்றியடைந்துள்ளீர்கள். இப்பவும் வெற்றி இனி எப்போதும் வெற்றியே. இதனையே எப்போதும் நினைவில் கொள்க.
விடைபெறும் நேரம்: தாதி மார்களுடன் (தாதி ஜானகி பம்பாயிலிருந்து 3லி4 தினம் வந்தார்கள்). இப்போதே சக்கரவர்த்தி ஆகிவிட்டார். நல்லது. இங்கும் சேவை அங்கும் சேவை. இங்கு இருக்கு மிடத்திலும், செல்லும் இடம் யாவும் சேவையே சேவை தான். சேவைக்கான ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் எடுத்துள்ளார். பெரிய ஒப்பந்தக்காரர் அல்லவா! சிறிய சிறிய ஒப்பந்தக்காரர்கள் அனேகர் உள்ளனர். ஆனால் பெரிய ஒப்பந்தக்காரர் பெரிய வேலை செய்ய வேண்டும். (பாபா இன்று முரளி கேட்கையில் மிகவும் ஆனந்தம் வந்தது) என்றும் ஆனந்தமே நல்லது. நீங்கள் நன்கு புரிந்து கொண்டு பிறருக்கும் புரிய வைக்கலாம். எல்லோரும் ஒரே மாதிரி புரிவதில்லை. ஜகதம்பா எப்படி முரளி நன்கு கேட்டு தெளிவு படுத்தி அனைவரையும் தாரணையும் செய்ய வைத்தார். அவ்வாறே இப்போது நிமித்தம் நீங்களே! கடைசியில் அமர்ந்தவர்களை பார்க்கவில்லை. எல்லோரையும் எதிரில் வைக்கின்றார். ஆயினும் மிக நெருக்கமானவர்கள் எதிரில் உள்ளனர். அப்போது எதிரில் இருப்பவர்களுக்காக வெளிப்படுகிறது. நீங்கள் படித்து புரிந்து கொள்வீர்கள். நல்லது.
வரதானம்:-
சங்கமயுகத்தில் பாப்தாதா மூலமாக கிடைத்த அத்தனை பொக்கிஷங்களையும் வீண்னாகாமல் மீதப்படுத்தினால் குறைந்த செலவில் அதிக இலாபம் ஈட்டுபராவீர்கள். வீணாகாமல் மீதப்படுத்துவதே சக்தி பெறுவதாகும். எங்கு சக்தியோ அங்கே வீண் என்பதே கிடையாது. மாறாக வீண் எனும் கசிவு இருந்தால் என்ன தான் முயற்சி செய்தாலும் உழைத்தாலும் சக்தி வாய்ந்தவராக முடியாது. எனவே கசிவை சோதனை செய்து முடித்துவிட்டு வீண் என்பதிலிருந்து சக்தி வாய்ந்தவராகி விடுவீர்கள்.
சுலோகன்:-
➤ Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!