13 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
12 August 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! சொர்க்கத்தின் எஜமான் ஆக வேண்டும் என்றால் தந்தையிடம் வாக்குறுதி கொடுங்கள் - நாங்கள் தூய்மையடைந்து அவசியம் உங்களின் உதவியாளராக ஆவோம். நல்ல குழந்தைகளாக ஆகிக் காட்டுவோம்.
கேள்வி: -
யாருடைய கணக்கு வழக்குகளை முடிப்பதற்காக இறுதியில் நீதி விசாரணைக் குழு அமரும்?
பதில்:-
கோபம் கொண்டு அணு குண்டுகள் மூலம் இவ்வளவு பேருக்கு மரணத்தை விளைவிக் கின்றவர்கள் மீது யார் வழக்கு போட முடியும்? ஆகையால் அவர்களுக்காக இறுதியில் விசாரணைக் குழு அமரும். அனை வரும் தம்முடைய கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்வார்கள்.
கேள்வி: -
விஷ்ணுபுரிக்கு செல்வதற்குத் தகுதியானவர்களாக யார் ஆகின்றனர்?
பதில்:-
யார் இந்த பழைய உலகத்தில் வசித்துக் கொண்டிருந்தாலும் இதன் மீது தன்மனதை ஈடுபடுத்துவ தில்லையோ, அவர்களுடைய புத்தியில் நாம் இப்போது புது உலகிற்கு செல்ல வேண்டு மென்பதால் கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும் என்பது இருக்கும். 2. படிப்புதான் விஷ்ணு புரிக்குச் செல்வதற்காக தகுதி வாய்ந்தவராக ஆக்குகிறது. நீங்கள் இந்த பிறவியில் தான் படிக்கிறீர்கள். படிப்பிற்கான பதவி அடுத்த பிறவியில் கிடைக்கும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
தாயும் நீயே, தந்தையும் நீயே.
ஓம் சாந்தி. எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் மகிமையை பாடுகின்றனர், ஏனென்றால் எல்லைக்கப் பாற்பட்ட தந்தை நிரந்தர அமைதி மற்றும் அளவற்ற சுகத்தின் ஆஸ்தியை கொடுக்கிறார். பக்தி மார்க்கத்தில் அழைக்கவும் செய்கின்றனர் – பாபா வாருங்கள், வந்து எங்களுக்கு சுகம் மற்றும் அமைதியை தாருங்கள். பாரதவாசிகள் 21 பிறவிகளுக்கு சுகதாமத்தில் இருக்கின்றனர். மற்ற ஆத்மாக் கள் சாந்தி தாமத்தில் இருக்கின்றனர். ஆக, தந்தையின் இரண்டு ஆஸ்திகள் சுகதாமம் மற்றும் சாந்திதாமம் ஆகும். இந்த சமயத்தில் அமைதியும் இல்லை, சுகமும் இல்லை, ஏனென்றால் கீழான உலகமாகும். எனவே துக்கதாமத்திலிருந்து சுகதாமத்திற்கு அழைத்து செல்பவர் யாராவது கண்டிப்பாகத் தேவை. தந்தையை படகோட்டி எனவும் சொல்கின்றனர். விஷக்கடலிலிருந்து பாற் கடலுக்கு அழைத்து செல்பவர் ஆவார். தந்தைதான் முதலில் சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வார், ஏனென்றால் இப்போது நேரம் முடிந்து விட்டது என குழந்தைகளுக்குத் தெரியும். இது எல்லைக்கப்பாற்பட்ட (முடிவில்லாத) விளையாட்டு ஆகும். இதில் உயர்ந்தவரிலும் உயர்ந்த முக்கியமான படைப்பவர், டைரக்டர், முக்கியமான நடிகர் யார்? உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். அவர் அனைவரின் தந்தை என சொல்லப்படுகிறார். அவர் சொர்க்கத்தைப் படைப்பவர் ஆவார், பிறகு மனிதர்கள் துக்கம் மிக்கவர்களாக ஆகும் போது விடுவிக்கவும் செய்கிறார். ஆன்மீக வழிகாட்டியாகவும் இருக்கிறார். அனைத்து ஆத்மாக்களையும் சாந்தி தாமத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கே அனைத்து ஆத்மாக்களும் இருக்கின்றனர். இந்த கர்மேந்திரியங்கள் இங்கே கிடைக்கின்றன, அதன் மூலம் ஆத்மா பேசுகிறது. ஆத்மா தானே சொல்கிறது – நான் சுகதாமத்தில் இருந்த போது சரீரம் சதோபிரதானமாக இருந்தது. ஆத்மாவாகிய நான் 84 பிறவிகளை அனுபவிக் கிறேன். சத்யுகத்தில் 8 பிறவிகள், திரேதாவில் 12 பிறவிகள் முடித்துக் கொண்டு பிறகு முதல் நம்பரில் செல்ல வேண்டும். தந்தை தான் வந்து தூய்மையாக்குகிறார். ஆத்மாக்களிடம் பேசுகிறார். ஆத்மா சரீரத்திலிருந்து பிரிந்து விட்டது என்றால் எதுவும் பேச முடியாது – இரவில் சரீரத்திலிருந்து தனியாக பிரிந்து செல்வது போல. நான் இந்த சரீரத்தின் மூலம் காரியங்கள் செய்து களைத்துப் போயிருக்கிறேன், இப்போது ஓய்வு எடுக்கிறேன் என ஆத்மா சொல்கிறது. ஆத்மா மற்றும் சரீரம் இரண்டும் வேறு வேறு விசயங்கள் ஆகும். இந்த சரீரம் இப்போது பழையதாக உள்ளது. இது பதீதமான (தூய்மையற்ற) உலகமாக உள்ளது. பாரதம் புதியதாக இருந்த போது சொர்க்கம் என சொல்லப்பட்டது. இப்போது நரகமாக உள்ளது. அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாக உள்ளனர். இந்த குழந்தைகளின் மூலம் உங்களுக்கு சொர்க்க வாசல் கிடைக்கும் என தந்தை வந்து சொல்கிறார். தூய்மையடைந்து சொர்க்கத்தின் எஜமானனாக ஆகுங்கள் என தந்தை அறிவுரை கூறுகிறார். தூய்மையற்றவர்களாக ஆகியதால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். இங்கே 5 விகாரங்களின் தானம் வாங்கப்படுகிறது. பாபா நீங்கள் எங்களை சொர்க்கத்தின் எஜமானனாக ஆக்குகிறீர்கள் என ஆத்மா சொல்கிறது. நாங்கள் தூய்மையடைந்து உங்களின் உதவியாளர்களாக கண்டிப்பாக ஆவோம் என நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். தந்தையின் குழந்தைகள் யார் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றனரோ அவர்கள் நல்ல குழந்தைகள் எனப்படுகின்றனர். கெட்ட குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்க முடியாது. நிராகார பகவானுடைய குழந்தைகள் நிராகார (உடலற்ற) ஆத்மாக்கள் என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். பிறகு பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளாக ஆகும் போது சகோதர – சகோதரியாக ஆகி விடுகின்றனர். இது ஈஸ்வரிய வீடு போலாகும், வேறு எந்த சம்மந்தங்களும் கிடையாது. வீட்டில் நண்பர்கள் – உறவினர்களைப் பார்க்கிறோம் ஆனால் நாம் பாப்தாதாவுடையவர்களாக ஆகியுள்ளோம் என புத்தியில் உள்ளது. அந்த தந்தை, இந்த தாதா (பெரிய அண்ணார்) அமர்ந்திருக்கின்றனர். இங்கே கர்ப்பச் சிறையில் தண்டனைகளை அனுபவிக்கின்றனர். சத்யுகத்தில் சிறை இருக்காது. அங்கே பாவமே ஏற்படுவதில்லை, ஏனென்றால் இராவணனே இல்லை, ஆகையால் அங்கே கர்ப்பம் மாளிகை என சொல்லப்படுகிறது – ஆலிலை மீது கிருஷ்ணரை காட்டுவது போல. அந்த கர்ப்பம் கூட பாற்கடல் போன்றதாகும். சத்யுகத்தில் கர்ப்பச் சிறையும் இருக்காது, அந்தச் சிறைச்சாலையும் இருக்காது. அரைக் கல்பம் புதிய உலகமாகும். அங்கே சுகம் இருக்கிறது, வீடு முதலில் புதியதாக இருக்கிறது, பிறகு பழையதாக ஆகிறது. அது போல சத்யுகம் புதிய உலகமாகும், கலியுகம் பழைய உலகமாகும். கலியுகத்திலிருந்து பிறகு சத்யுகமாக கண்டிப்பாக ஆக வேண்டும். சக்கரம் திரும்பத் திரும்ப சுற்றிக் கொண்டிருக்கும். இது முடிவு என்பதே இல்லாத சக்கரம் ஆகும், இதனுடைய ஞானத்தை தந்தைதான் புரிய வைக்கிறார். தந்தை தான் ஞானம் நிறைந்தவர் ஆவார். இவருடைய ஆத்மா கூட புரிய வைக்க முடியாது. இவர் முதலில் தூய்மையாக இருந்தார், பிறகு 84 பிறவிகள் எடுத்து தூய்மையற்ற வராக ஆகியிருக்கிறார். உங்களுடைய ஆத்மாவும் கூட தூய்மையாக இருந்தது, பிறகு தூய்மையற்றதாக ஆகியுள்ளது.
நான் இந்த தூய்மையில்லாத உலகின் பிரயாணியாக உள்ளேன். ஏனென்றால் தூய்மை இழந்தவர்கள், வந்து தூய்மையாக்குங்கள் என அழைக்கின்றனர். நான் என்னுடைய பரம்தாமத்தை விட்டு தூய்மையற்ற உலகில் தூய்மையற்ற சரீரத்தில் வர வேண்டியுள்ளது. இது தூய்மையான சரீரம் அல்ல. யார் நல்ல கர்மங்கள் செய்கின்றனரோ அவர்கள் நல்ல குலத்தில் பிறக்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். தீய கர்மங்கள் செய்பவர்கள் தாழ்ந்த குலத்தில் பிறக்கின்றனர். இப்போது நீங்கள் தூய்மையடைந்து கொண்டிருக்கிறீர்கள். முதன் முதலில் நீங்கள் விஷ்ணு குலத்தில் பிறவி எடுப்பீர்கள். நீங்கள் மனிதரிலிருந்து தேவதையாக ஆகிறீர்கள். ஆதி சனாதன தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் சாஸ்திரங்களில் 5 ஆயிரம் வருடத்தின் சக்கரத்திற்கு இலட்சக்கணக்கான வருடங்களைக் கொடுத்து விட்டார்கள். இதே பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்போது நரகமாக உள்ளது. இப்போது யார் தந்தையின் மூலம் பிராமணராக ஆகின்றனரோ அவர்கள் தேவதையாக ஆவார்கள். சொர்க்கத்தின் வாசலை பார்க்க முடியும். சொர்க்கம் எனும் பெயரே எவ்வளவு நன்றாக இருக்கிறது. தேவி தேவதைகள் வாம மார்க்கத்தில் வரும்போது பூஜாரிகளாக ஆகின்றனர். சோம்நாதர் கோவிலை யார் கட்டியது? அனைத்திலும் பெரியது இந்த சோம்நாதர் கோவில் ஆகும். யார் அனைவரை விடவும் செல்வந்தராக இருந்தாரோ அவர்தான் கட்டியிருப்பார். அவர்கள் சத்யுகத்தில் மகாராஜா, மகாராணியாக இலட்சுமி நாராயணராக இருந்தனர். அவர்கள்தான் பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரியாக ஆகின்றனர், அப்போது யார் உலகின் எஜமானனாக ஆக்கினாரோ அந்த சிவபாபாவின் கோவிலை உருவாக்குகின்றனர். அவர்கள் எவ்வளவு செல்வந்தர்களாக இருந்திருந்தால், இவ்வளவு பெரிய கோவிலை கட்டியிருப்பார்கள்! அதனை முகம்மது கஜினி கொள்ளையடித்தார். அனைத்தையும் விட பெரிய கோவில் சிவபாபாவுடையது ஆகும். அவர் சொர்க்கத்தைப் படைப்பவர். தான் எஜமானாக ஆவதில்லை. தந்தை செய்யும் சேவை தன்னலமற்ற சேவை என சொல்லப்படுகிறது. குழந்தைகளை சொர்க்கத்தின் எஜமானனாக ஆக்குகிறார், தான் ஆவது கிடையாது. தான் நிர்வாண தாமத்தில் அமர்ந்து விடுகிறார் – மனிதர்கள் 60 வருடங்கள் ஆன பிறகு வானபிரஸ்தத்தில் செல்வது போல. சத்சங்கம் முதலானவைகளுக்கு சென்றபடி இருக்கின்றனர். நாம் பகவானிடம் சென்று சந்திப்போம் என முயற்சி செய்கின்றனர். ஆனால் யாரும் என்னை சந்திப்பதில்லை. அனைவரையும் விடுவிப்பவர், வழிகாட்டி ஒரு பாபாவே ஆவார். மற்ற அனைவரும் ஸ்தூலமான யாத்திரை செய்விப்பவர்கள் ஆவார்கள். பலவிதமான யாத்திரைகள் செய்கின்றனர். இது ஆன்மீக யாத்திரை ஆகும். தந்தை அனைத்து ஆத்மாக்களையும் தன்னுடைய சாந்தி தாமத்திற்கு அழைத்து செல்கிறார். இப்போது தந்தை குழந்தைகளாகிய உங்களை விஷ்ணுபுரிக்குச் செல்ல தகுதி வாய்ந்தவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். தந்தை வருவதே சேவை செய்வதற்காக. இந்த பழைய உலகத்தில் யார் மீதும் மனதை ஈடுபடுத்தாதீர்கள் என தந்தை சொல்கிறார். இப்போது புதிய உலகிற்கு செல்ல வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சகோதரர்கள் ஆவீர்கள். இதில் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. சத்யுகத்தில் நீங்கள் தூய்மை யாக இருந்தீர்கள், அது தூய்மையான உலகம் என்று தான் சொல்லப்படுகிறது. இங்கே 5-7 குழந்தை களை வயிற்றைக் கிழித்தாவது எடுக்கின்றனர். சத்யுகத்தில் சட்டம் இயற்றப்பட்டிருந்தது, நேரம் வரும்போது இருவருக்குமே இப்போது குழந்தை பிறக்கவுள்ளது என காட்சி தெரியும். அது யோக பலம் எனப்படுகிறது, நேரம் கனியும்போது குழந்தை பிறந்து விடும். எந்த கஷ்டமும் கிடையாது. அழுகுரல் இருக்காது. இன்றைய நாட்களில் எவ்வளவு கஷ்டங்களுடன் குழந்தை பிறக்கிறது. இது துக்க தாமம் ஆகும். சத்யுகம் சுகதாமம் ஆகும். நீங்கள் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறீர்கள் – சுக தாமத்தின் எஜமான் ஆவதற்காக. அந்தப் படிப்பின் பலனை இதே பிறவியில் அனுபவிக்கின்றனர். நீங்கள் இந்தப் படிப்பின் பலனை அடுத்த பிறவியில் அடைகிறீர்கள்.
நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குகிறேன், உங்களை பகவான், பகவதி என சொல்கின்றனர் என தந்தை சொல்கிறார். இலட்சுமி பகவதி ஆவார், நாராயணர் பகவான் ஆவார். கலியுகத்தின் கடைசியில் எதுவுமே இல்லாதவராக இருந்த போது சத்யுகத்தில் யார் அவர்களை அவ்வாறு உருவாக்கியது? பாரதத்தைப் பாருங்கள், எவ்வளவு ஏழையாக இருக்கிறது. நான்தான் அனைவருக்கும் சத்கதியை கொடுக்க வருகிறேன். சத்யுகம், திரேதாவில் நீங்கள் எப்போதும் சுகம் நிறைந்தவர்களாக இருக்கிறீர்கள். தந்தை அந்த அளவு சுகத்தைக் கொடுக்கிறார், பக்தி மார்க்கத்திலும் அவரை நினைவு செய்கின்றனர். குழந்தை இறந்து விட்டால் கூட சொல்கின்றனர் – ஓ பகவானே எங்களுடைய குழந்தையை கொன்று விட்டீர்களே (அழைத்துக் கொண்டீர்களே). தந்தை சொல்கிறார் – அனைத்துமே ஈஸ்வரன் கொடுத்தது என நீங்கள் சொல்கிறீர்கள், அவரேதான் எடுத்துக் கொண்டார், அப்படியிருக்க அழுவது ஏன்? ஏன் பற்றுதலை வைக்கிறீர்கள்? அங்கே சரீரம் விடக்கூடிய நேரம் வரும்போது விடுவார்கள். பெண் ஒரு போதும் விதவை ஆவது கிடையாது. நேரம் நெருங்கும் போது முதுமைப் பருவம் வரும்போது இப்போது சென்று குழந்தையாக ஆகப் போகிறோம் என புரிந்து கொள்கின்றனர். அப்போது சரீரத்தை விடுகின்றனர். பாம்பின் உதாரணம். இந்த கலியுகத்தின் உடல் மிகவும் பழையதாகும். ஆத்மாவும் தூய்மையற்றிருக்கிறது, சரீரமும் தூய்மையற்றதாக உள்ளது. இப்போது தந்தையுடன் நினைவின் தொடர்பை ஈடுபடுத்தி தூய்மையடைய வேண்டும். இது பாரதத்தின் பழமையான இராஜயோகமாகும். சன்னியாசிகளுடையது ஹடயோகம் ஆகும். சிவபாபா சொல்கிறார் – நான் இந்த தாய்மார்களின் மூலம் சொர்க்கத்தின் வாசலை திறக்கிறேன். மாதா குருவின்றி யாருக்கும் முன்னேற்றம் கிடையாது. தந்தைதான் வந்து அனைவருக்கும் சத்கதி கொடுக்கிறார், உங்களுக்கும் கற்பிக்கிறார், பிறகு நீங்கள் மாஸ்டர் சத்கதி வழங்கும் வள்ளல் ஆகி விடு கிறீர்கள். மரணம் முன்னால் நின்றிருக்கிறது, தந்தையை நினைவு செய்யுங்கள் என அனைவருக்கும் சொல்கிறீர்கள். அனைத்துமே முடிந்து போகவுள்ளது. அணுகுண்டுகளை தயார் செய்பவர்களும் இதன் மூலம் வினாசம் ஏற்படவுள்ளது என ஒப்புக் கொள்கின்றனர், ஆனால் என்னை யார் தூண்டுகிறார்கள் என்றே தெரியவில்லை என சொல்கின்றனர். ஒரு குண்டு போட்டாலே அனைத்தும் அழிந்து விடும் என புரிந்து கொண்டுள்ளனர். இன்னும் சிறிது காலமே இருக்கிறது, அதற்குள் முள்ளிலிருந்து மலர்களாக ஆகி விடுங்கள். இது முட்களின் உலகமாகும். பாரதம்தான் மலர்களின் உலகமாக இருந்தது. இப்போது விகாரிகளின் உலகமாக உள்ளது, பிறகு சிவாலயமாக ஆகப் போகிறது, சிவனின் மூலம் ஸ்தாபனை செய்யப்பட்ட சொர்க்கம். பகவான் ஒரே ஒரு நிராகாரமானவர் ஆவார். மனிதர்களை பகவான் என சொல்ல முடியாது. துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவர் ஒரே ஒரு தந்தை ஆவார். பகவானுடைய மகாவாக்கியம் – நான் உங்களை நரனிலிருந்து நாராயணனாக ஆக்குகிறேன். இந்த பழைய தூய்மையற்ற உலகம் இப்போது அழியப் போகிறது. நான் தூய்மையற்ற வரிலிருந்து தூய்மையான தேவதைகளாக ஆக்குகிறேன். பிறகு நீங்கள் உங்களுடைய வீட்டுக்குச் சென்று விடுவீர்கள். நாடகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் பாருங்கள், மனிதர் களிடம் எவ்வளவு கோபம் உள்ளது. குரங்குகளை விடவும் மோசமாக இருக்கின்றனர். கோபம் வருகிறது என்றால் எப்படி அணுகுண்டுகளால் அனைவரையும் கொன்று விடுகின்றனர். இப்போது இவர்கள் மீது யார் வழக்கு தொடுப்பது? இவர்களுக்காக கடைசி நேரத்தில் நீதி விசாரணைக் குழு அமரும். அனைவரின் கணக்கு வழக்குகளையும் முடித்து விடுவார்கள். இவையனைத்தும் புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் ஆகும். ஓ ஆத்மாக்களே! நான் உங்களுடைய தந்தை வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். நீங்கள் என்னுடைய ஸ்ரீமத்படி நடந்தீர்கள் என்றால் உயர்வான சொர்க்கத்தின் எஜமானாக ஆகி விடுவீர்கள். அந்த மனிதர்கள் மனிதர்களின் வழிகாட்டிகளாக ஆகின்றனர். தந்தை அனைத்து ஆத்மாக்களின் வழிகாட்டியாக ஆகிறார். ஓ பதீத பாவனா என ஆத்மாதான் சொல்கிறது. இப்போது தந்தை நம்மை புண்ணிய ஆத்மாவாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். சொர்க்கத்தில் ஆன்மீகத் தந்தை இருக்க மாட்டார். அங்கே பலன் தான் இருக்கும். இது பல்கலைக்கழகம் ஆகும் – இராஜயோகத்தை தந்தையைத் தவிர வேறு யாரும் கற்பிக்க முடியாது. நான் இந்த சரீரத்தை கடனாக எடுத்து வருகிறேன் என தந்தை சொல்கிறார். ஆத்மா வேறொரு சரீரத்தில் வர முடியும் அல்லவா. இது நாடகத்தின் பதிவாகும். இது சுற்றி வருவதற்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு இலையிலும் இறைவன் இருக்கிறார், இலை அசைகிறது, இதற்குள் ஆத்மா இருக்கிறது என சொல்கின்றனர். ஆனால் அப்படி கிடையாது. இது காற்றின் மூலம் அசைகிறது. நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு அமர்வீர்கள். இப்போது தந்தை யிடமிருந்து ஆஸ்தியை எடுத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் பிறகு ஒருபோதும் எடுக்க முடியாது. இந்த சமயத்தில்தான் உயர்ந்த வருமானத்தை செய்ய முடியும். பிறகு முழு கல்பத்திலும் இப்படிப்பட்ட உயர்ந்த வருமானம் இருக்க முடியாது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது, ஆகையால் முள்ளிலிருந்து மலர் ஆகி அனைவரையும் மலர்களாக்க வேண்டும். சாந்தி தாமம் மற்றும் சுக தாமத்திற்கு வழி காட்ட வேண்டும்.
2. வைஷ்ணவ குலத்தில் செல்வதற்காக நல்ல கர்மங்களைச் செய்ய வேண்டும். கண்டிப்பாக தூய்மையடைய வேண்டும். எப்போதும் ஆன்மீக யாத்திரை செய்து மற்றவர் களையும் செய்விக்க வேண்டும்.
வரதானம்:-
வள்ளலுடைய குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் வள்ளல் ஆவீர்கள். ஒருவரிடமிருந்து எதையாவது பெற்று பிறகு கொடுப்பது என்பது கொடுப்பது ஆகாது. பெறப்பட்டது மற்றும் கொடுக்கப் பட்டது என்றால் அது வியாபாரம் ஆகிவிட்டது. வள்ளலின் குழந்தைகள் பரந்த உள்ளம் உடையவராகி கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். அளவிட முடியாத பொக்கிஷம் உள்ளது. யாருக்கு என்ன தேவையோ, அதைக் கொடுத்து நிறைத்துக் கொண்டே செல்லுங்கள். சிலருக்கு குஷி தேவை, அன்பு தேவை, சாந்தி தேவை, அதைக் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். இது அனைவருக்கும் பொது வான திறந்த கணக்காகும், கணக்கு வழக்கிற்கான கணக்கு அல்ல. வள்ளலின் தர்பாரில் இந்த சமயம் அனைத்தும் திறந்திருக்கிறது. ஆகையினால், யாருக்கு எவ்வளவு வேண்டுமோ, அவ்வளவு கொடுங்கள். இதில் கஞ்சத்தனமாக .இருக்காதீர்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!