4 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
3 August 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே ! நீங்கள் தந்தைக்குச் சமமாக ரூப்-பஸந்த் ஆக (ஞான யோகம் உடையவர்) வேண்டும். ஞான யோகத்தை தாரணை செய்து பின்னர் நபரை பார்த்து தானம் செய்ய வேண்டும்.
கேள்வி: -
துவாபர முதல் நடந்து வரும் எந்தவொரு பழக்கத்தை சங்கமத்தில் தந்தை நிறுத்தச் செய்து விடுகிறார்?
பதில்:-
துவாபர முதல் கால்களில் விழுந்து வணங்குவதற்கான பழக்கம் நடந்து வருகிறது. இங்கு நீங்கள் யாருடைய கால்களிலும் விழுந்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாபா கூறுகிறார். நானோ அபோக்தா, அகர்த்தா, அஸோச்தா எதையும் அனுபவிக்காதவன், செய்யாதவன், சிந்திக்காதவன் ஆவேன். குழந்தைகளாகிய நீங்களோ தந்தையை விடவும் பெரியவர்கள் ஆவீர்கள். ஏனெனில், குழந்தை தந்தையினுடைய முழு சொத்திற்கும் எஜமானர் ஆகிறார். எனவே எஜமானர் களை தந்தையாகிய நான் வணங்குகிறேன். நீங்கள் கால்களில் விழ வேண்டிய அவசியமில்லை. ஆம். சிறியவர்கள் பெரியவர்களுக்கு மதிப்போ வைக்கத் தான் வேண்டியிருக்கிறது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
யார் தலைவனுடன் கூட இருக்கிறார்களோ..
ஓம் சாந்தி. மழையோ ஒவ்வொரு வருடமும் பெய்கிறது. அது தண்ணீரின் மழை. இது ஞான மழையாகும். இது கல்ப கல்பமாக நிகழ்கிறது. இது தூய்மையற்ற (பதீதமான) உலகம், நரகம் ஆகும். இதற்கு (விஷக்கடல்) விகாரக் கடல் என்றும் கூறப்படுகிறது. அந்த விஷம் அதாவது காமத்தீயினால் பாரதம் கருப்பாக ஆகி விட்டது. ஞானக்கடலான நான் ஞான மழையைப் பொழிந்து வெண்மையாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகிறார். இந்த இராவண இராஜ்யத்தில் எல்லோரும் கருப்பாக ஆகி விட்டுள்ளார்கள். அனைவரையும் மீண்டும் தூய்மையாக ஆக்கி விடுகிறேன். மூலவதனத்தில் எந்தவொரு பதீதமான (தூய்மையற்ற) ஆத்மாவும் இருப்ப தில்லை. சத்யுகத்தில் கூட பதீதமானவர்கள் யாரும் இருப்பதில்லை. இப்பொழுது இது பதீதமான உலகமாகும். எனவே அனைவர் மீதும் ஞான மழை பொழிய வேண்டியதாக உள்ளது. ஞான மழையினால் தான் பின் முழு உலகமும் தூய்மையாக ஆகிறது. நாம் கருப்பாக பதீதமாக ஆகி விட்டுள்ளோம் என்பது உலகத்தினருக்கு தெரிவதில்லை. சத்யுகத்தில் யாரும் பதீதமானவர் இருப்பதில்லை. முழு உலகமே தூய்மையாக இருக்கும். அங்கு தூய்மையற்றவரின் பெயர் அடையாளம் கூட இருப்பதில்லை. எனவே விஷ்ணுவை பாற்கடலில் காண்பிக்கிறார்கள். அதனுடைய பொருள் கூட மனிதர்கள் அறியாமல் உள்ளார்கள். விஷ்ணு வினுடையது இரண்டு ரூபம். இந்த இலட்சுமி நாராயணர் தான் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். அங்கு நெய்யாறு பாய்கிறது என்று கூறுகிறார்கள். எனவே அவசியம் பாற்கடல் வேண்டும். மனிதர்களோ விஷ்ணு பகவான் என்று கூறி விடுகிறார்கள். நீங்கள் விஷ்ணுவை பகவான் என்று கூற மாட்டீர்கள். விஷ்ணு தேவதாய நமஹ, பிரம்மா தேவதாய நமஹ என்று கூறுகிறார்கள். விஷ்ணுவிற்கு பகவான் நமஹ என்று கூறுவதில்லை. சிவ பரமாத்மாய நமஹ என்பது அழகாக உள்ளது. இப்பொழுது உங்களுக்கு வெளிச்சம் (தெளிவு) கிடைத்துள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தது ஸ்ரீ ஸ்ரீ 108 ருத்ர மாலை என்று கூறப்படுகிறது. மேலே இருப்பது பூ. பிறகு மேரு மணிகள் ஜோடி என்று இலட்சுமி நாராயணருக்கு கூறப்படுகிறது. பிரம்மா சரஸ்வதிக்கு ஜோடி என்று கூறப்படுவதில்லை. இந்த மாலை தூய்மையானது அல்லவா! மேரு என்று பின் இலட்சுமி நாராயணருக்குக் கூறப்படுகிறது. இல்லற மார்க்கம் ஆகும் அல்லவா? விஷ்ணு என்றால் இலட்சுமி நாராயணரின் பரம்பரை. இலட்சுமி நாராயணர் என்று மட்டும் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய சந்ததியினரும் கூட இருப்பார்கள் அல்லவா? இது யாருக்கும் தெரியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் விகாரக் கடலிலிருந்து வெளியேறி உள்ளீர்கள். அதற்கு காளிதஹ (காளிங்கன் என்ற விஷபாம்பு வாழும் குளம்) என்றும் கூறப்படுகிறது. சத்யுகத்திலோ எதுவும் நடப்பதில்லை. பாம்பின் மீது நடனம் ஆடினார், இது செய்தார். இவை எல்லாமே கட்டுக்கதைகள் ஆகும். குருட்டு நம்பிக்கை யுடன் பொம்மைகளின் பூஜை செய்து கொண்டே இருக்கிறார்கள். தேவிகளின் விக்கிரகங்கள் நிறைய தயாரிக் கிறார்கள். இலட்சக்கணக் கான மற்றும் கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவு செய்து தேவிகளை அலங்கரிக்கிறார்கள். ஒரு சிலரோ உண்மையான தங்கத்தினுடைய நகைகள் ஆகியவையும் அணிவிக்கிறார்கள். ஏனெனில் பிராமணர் களுக்கு தானம் செய்ய வேண்டி இருக்கும். பூஜை செய்ய வைக்கும் பிராமணர்கள் நிறைய செலவு செய்விப்பார்கள். தேவிகளின் ஊர்வலம் மிக விமரிசையாக எடுப்பார்கள். தேவிகளை உருவாக்கி பாலனை செய்து பிறகு அவைகளை அலங்கரித்து, மூழ்கடித்து விடுகிறார்கள். இதற்கு பொம்மைகளின் பூஜை என்று கூறப்படுகிறது. இது எப்படி குருட்டு நம்பிக்கையின் பூஜையாகும் என்பதை நீங்கள் சொற்பொழிவில் புரிய வைக்கலாம். விநாயகரைக் கூட மிகவும் நன்றாக அமைத்து தயாரிக் கிறார்கள். இப்பொழுது எந்தவொரு மனிதனும் துதிக்கை(அ) தும்பிக்கை கொண்டவனாகவோ இருக்க முடியாது. எவ்வளவு படங்கள் தயாரிக்கிறார்கள். பணம் செலவு செய்கிறார்கள்.
நான் உங்களை எவ்வளவு செல்வந்தர்களாக ஒரேயடியாக உலகத்திற்கு அதிபதியாக ஆக்குகிறேன் என்று தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். இதனை பரமாத்மா வந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். யார் முந்தைய கல்பத்தில் படித்தார்களோ மற்றும் ஸ்ரீமத் படி நடந்தார்களோ அவர்களே நடப்பார்கள் என்பதையும் அறிந்துள்ளீர்கள். படிப்பதில்லை, சுற்றுவார்கள், உலாவுவார்கள் என்றால், மோசமாக ஆகி விடுவார்கள். உயர்ந்த பதவி அடைய முடியாது. தாசர்கள் தாசிகளாக (வேலைக் காரர்களாக) குறைந்த பதவி அடைவார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களை அழியாத ஞானரத்தினங்களால் எவ்வளவு செல்வந்தர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். அவர்களோ சிவன் மற்றும் சங்கரனுடைய அர்த்தம் புரியாமல் இருக்கிறார்கள். சங்கரனுக்கு முன்னால் சென்று பையை நிரப்பி விடுங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் சங்கரனோ பையை நிரப்புவதில்லை. இப்பொழுது குழந்தைகளுக்கு தந்தை அழியாத ஞான ரத்தினங்களை அளிக்கிறார். அதை தாரணை செய்ய வேண்டும். ஒவ்வொரு இரத்தினமும் இலட்சக்கணக்கான ரூபாய்களினுடையதாகும். எனவே நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும் மற்றும் தாரணை செய்விக்க வேண்டும். தானம் செய்ய வேண்டி உள்ளது. தானம் கூட நபரை பார்த்துச் செய்யுங்கள் என்று பாபா புரிய வைத்துள்ளார். யாருக்கு கேட்பதற்கே மனம் இல்லையோ, அவர்களுக்கு பின்னால் நேரத்தை வீணடிக்காதீர்கள். சிவனுடைய பூசாரிகளாக இருப்பவர்கள் அல்லது தேவதை களின் பூசாரியாக இருப்பவர்கள் – இப்பேர்பட்ட வர்களுக்கு முயற்சி செய்து தானம் கொடுக்க வேண்டும். அப்பொழுது உங்களுடைய நேரம் வீணாகிப் போகாது. நீங்கள் ஒவ்வொருவரும் ரூப் பஸந்த் (ஞான யோகம் நிறைந்தவர்களாக) கூட ஆக வேண்டும் அல்லவா? பாபாவும் ரூப் பஸந்த் ஆவார் அல்லவா? அவருடைய ரூபம் ஜோதிர்லிங்கம் அல்ல. நட்சத்திரம் போல் இருக்கிறார். பரமபிதா பரம ஆத்மா பரந்தாமத்தில் இருப்பவர் ஆவார். பரந்தாமம் (பரே ஸே பரே) மிகவும் அப்பாற்பட்டு இருக்கிறது அல்லவா? ஆத்மாக்களுக்கோ பரமாத்மா என்று கூற மாட்டார்கள். அவர் பரம ஆத்மா ஆவார். இங்கு இருக்கும் துக்கமான ஆத்மாக்கள் பரமபிதாவை அழைக்கிறார்கள். அவருக்கு சுப்ரீம் ஆத்மா என்று கூறுவார்கள். அவர் புள்ளி வடிவமாக இருக்கிறார். அப்படி யின்றி அவருக்கு எந்தவொரு பெயர் ரூபம் கூட கிடையாது என்பதல்ல. ஞானக் கடல் ஆவார். பதீதபாவனர் ஆவார். உலகமோ அறியாமல் உள்ளது. பரமபிதா பரமாத்மா எங்கே இருக்கிறார் என்று கேட்டுப் பாருங்கள். சர்வவியாபி (எங்கும் நிறைந்தவர்) என்பார்கள். அட நீங்கள் அவரை பதீத பாவனர் என்று கூறுகிறீர்கள். எனவே எப்படி பாவனமாக ஆக்குகிறார்? எதுவும் புரியாமல் உள்ளார்கள். இதற்கு இருண்ட நகரம் என்று கூறப்படுகிறது. உங்களையோ பாபா ஒவ்வொரு விஷயத்திலிருந்தும் விடுவித்து விட்டுள்ளார். பாபா (அபோக்தா, அகர்த்தா மற்றும் அஸோச்தா) அனுபவிக்காதவர், செய்யாதவர், யோசிக்காதவர் ஆவார். ஒரு பொழுதும் கால்களில் விழுந்து வணங்க அனுமதிப்பதில்லை. ஆனால் துவாபரத்திலிருந்து இந்த வழக்கம் உருவாகி வந்துள்ளது. சிறியவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு வைக்கிறார்கள். உண்மையில் குழந்தைகள் தந்தையின் சொத்துக்கு வாரிசு ஆகிறார்கள். என்னுடைய சொத்துக்கு இவர் எஜமானர் ஆவார் என்று தந்தை கூறுகிறார். எஜமானருக்கு வணக்கம் தெரிவிக்கிறார். தந்தை எஜமானர் தான் என்றாலும் கூட குழந்தை தான் முழு ஆஸ்திக்கும் உண்மையான அதிபதி ஆகிறார். எனவே உங்களை காலில் விழுங்கள், இப்படி செய்யுங்கள் என்று கூறுவாரா என்ன? இல்லை. குழந்தைகள் சந்திக்க வருகிறார்கள் என்றாலும் கூட சிவபாபாவை நினைவு செய்து பிறகு சந்திக்க வாருங்கள் என்று பாபா கூறுகிறார். நான் சிவபாபாவின் மடியில் செல்கிறேன் என்று ஆத்மா கூறுகிறது. மனிதர்கள் இந்த விஷயங்களில் குழம்புகிறார்கள். சிவபாபா இந்த பிரம்மா மூலமாக குழந்தைகளைத் தத்து எடுக்கிறார். எனவே இவர் தாயாகி விடுகிறார் அல்லவா? நாம் தாய் தந்தையை சந்திக்க வந்துள்ளோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். நினைவு சிவபாபாவைச் செய்ய வேண்டும். எனவே இவர் முதல் தாயாகி விட்டார். ஆஸ்தி உங்களுக்கு சிவபாபாவிடமிருந்து கிடைக்கிறது. இவர் கூட அவருடைய நினைவில் இருக்கிறார். தந்தை புரிய வைப்பதை தாரணை செய்ய வேண்டும். ரூப்-பஸந்த் ஆக (ஞானயோகம் உடையவர்கள்) வேண்டும். யோகத்தில் இருந்தீர்கள், ஞானத்தை தாரணை செய்தீர்கள் மற்றும் செய்வித்தீர்கள் என்றால், எனக்கு சமமாக ரூப்-பஸந்த் ஆகி விடுவீர்கள். பிறகு என்னுடன் கூட வந்து விடுவீர்கள் . இப்பொழுது உங்களுடைய புத்தியில் ஞானம் உள்ளது. பிறகு சொர்க்கத்தில் வரும் பொழுது ஞானம் முடிந்து போய் விடும். பிறகு பிராப்தி ஆரம்பமாகி விடும். பிறகு ஞானத்தின் பாகம் முடிவடைந்து விடும். இந்த மிகவும் ஆழமான விஷயங்களை ஒரு சிலர் தான் புரிந்து கொள்கிறார்கள். ஒருவரை மட்டுமே நினைவு செய்யுங்கள், இரண்டாவது என்று யாருமில்லை என்று கிழவிகளுக்கும் தந்தை புரிய வைக்கிறார். அப்பொழுது தந்தையிடம் போய் பிறகு கிருஷ்ணபுரிக்குச் சென்று விடுவீர்கள். இது கம்சபுரி ஆகும். அப்படியின்றி கிருஷ்ண புரியில் கம்சனும் இருந்தான்.. என்பதெல்லாம் கட்டுக்கதைகள் ஆகும். கிருஷ்ணரின் அம்மாவிற்கு 8 குழந்தைகள் என்கிறார்கள். இது நிந்தனை செய்வதாகிறது. கிருஷ்ணரைக் கூடையில் வைத்து யமுனா நதியை கடந்து எடுத்து சென்றார்கள். பிறகு யமுனை கீழே சென்று விட்டது என்ற இந்த விசயங்கள் எல்லாம் அங்கு இருப்ப தில்லை. இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தெளிவு (வெளிச்சம்) கிடைத்துள்ளது. இதற்கு முன்பு கேட்டிருக்கும் அனைத்தையும் மறந்து விடுங்கள். இந்த வேள்வி, தவம் ஆகியவை செய்வதால் என்னை யாரும் அடைய முடியாது என்று தந்தை கூறுகின்றார். ஆத்மா தமோபிரதானமாக ஆகும் பொழுது அதன் சிறகுகள் உடைந்து போகின்றன. இப்பொழுது இந்த முழு உலகத்திற்கு நெருப்பு பிடிக்கப் போகிறது. ஹோலிகா என்று ஹோலி பண்டிகையின் பொழுது நெருப்பில் கோக்கி (கோதுமைப் பண்டம்) என்ற பண்டத்தைச் சுடுகிறார்கள். இது ஆத்மா மற்றும் சரீரத்தினுடைய விசயமாகும். எல்லோருடைய உடல்கள் எரிந்து போய் விடுகின்றன. மற்றும் ஆத்மாக்கள் அமரர் ஆகி விடுகின்றன. சத்யுகத்தில் இத்தனை மனிதர்கள், இத்தனை தர்மங்கள் இருப்பதில்லை என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஒரேயொரு ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் மட்டும் இருக்கும். பாரதம் தான் எல்லாவற்றையும் விட பெரியதிலும் பெரிய தீர்த்த ஸ்தானம் ஆகும். காசியில் நிறைய பேர் போய் அமர்ந்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது காசி வாசம் செய்வோம், அவ்வளவே என்று நினைக்கிறார்கள். எங்கு சிவன் இருக்கிறாரோ அங்கேயே நாம் சரீரத்தை விடுவோம். நிறைய சாதுக்கள் போய் அங்கு உட்காருகிறார்கள். நாள் முழுவதும் ஜெய் விஷ்வ நாத் கங்கா என்று இதே கீதம் பாடிக் கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது சிவன் மூலமாக தண்ணீரின் கங்கையோ வெளிப்பட முடியாது. சிவனின் வாசலில் இறப்பதை விரும்புகிறார்கள். இப்பொழுதோ நீங்கள் நடைமுறையில் வாசலில் இருக்கிறீர்கள். எங்கு இருந்தாலும் சரி, ஆனால் சிவபாபாவை நினைவு செய்து கொண்டே இருங்கள். சிவபாபா நமது தந்தை ஆவார். நாம் அவரை நினைவு செய்து செய்து அவரிடம் சென்று விடுவோம் என்பதை அறிந்துள்ளீர்கள். எனவே சிவபாபா மீது அந்த அளவிற்கு அன்பு இருக்க வேண்டும் அல்லவா? அவருக்கென்று தந்தை இல்லை. ஆசிரியர் இல்லை. மற்ற எல்லோருக்கும் இருக்கவே இருக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சங்கரனினுடைய படைப்புகர்த்தா அந்த தந்தையே ஆவார் அல்லவா? படைப்பிடமிருந்து படைப்பிற்கு (அது யாராக இருந்தாலும் சரி) ஆஸ்தி கிடைக்க முடியாது. ஆஸ்தி எப்பொழுதும் குழந்தைகளுக்கு தந்தையிட மிருந்து கிடைக்கிறது. நாம் ஞானக் கடலான தந்தையிடம் வந்துள்ளோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது ஞான மழை பொழிந்து கொண்டிருக்கிறார். இப்பொழுது நீங்கள் பாவனமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மற்றவர்களோ அனைவரும் அவரவர் கணக்கு வழக்குகள் முடித்து அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விடுவார்கள். மூலவதனத்தில் ஆத்மாக்களின் விருட்சம் இருக்கிறது. இங்கு கூட சாகாரி விருட்சம் இருக்கிறது. அங்கு இருப்பது ருத்ர மாலை, இங்கு இருப்பது விஷ்ணுவின் மாலை. பிறகு சிறு சிறு கிளைகள் வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது. கிளைகள் வெளிப்பட்டு வெளிப்பட்டு விருட்சம் பெரியதாகி விடுகிறது. இப்பொழுது மீண்டும் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். பிறகு தேவி தேவதா தர்மத்தினர் ஆட்சி புரிய வேண்டி உள்ளது. இப்பொழுது நீங்கள் மனிதனிலிருந்து தேவதை உலகிற்கு அதிபதியாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே பகவான் நமக்கு படிப்பிக்கிறார் என்று உங்களுக்கு மிகுந்த குஷி இருக்க வேண்டும். இராஜயோகம் மற்றும் ஞானத்தினால் இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக ஆக்குகிறார். நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து இலட்சுமியாக ஆக்குகிறார். சூரிய வம்சத்தினர் பிறகு சந்திரவம்சத்தில் கூட வருவார்கள். பாபா தினமும் புரிய வைத்து, வெளிச்சத்தை (தெளிவு) கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
மேகங்களாகிய நீங்கள் நிரம்புவதற்காக கடலிடம் வருகிறீர்கள். நிரம்பிய பிறகு போய் மழையாகப் பொழிய வேண்டும். நிரப்பவில்லை என்றால் இராஜ்ய பதவியை அடைய மாட்டீர்கள். பிரஜையில் சென்று விடுவீர்கள். முயற்சி செய்து கூடுமானவரை தந்தையை நினைவு செய்ய வேண்டும். இங்கோ ஒருவர் யாரையோ, இன்னொருவர் யாரையோ நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். ஏராளமான பெயர்கள் உள்ளன. தந்தை வந்து வந்தே மாதரம் என்று கூறுகிறார். திரௌபதியின் பாதங்களை அமுக்கினார் என்று காண்பிக்கவும் செய்கிறார்கள். பாபாவிடம் கிழவிகள் வருகிறார்கள். ஆக குழந்தைகளே களைப்படைந்து விட்டீர்களா என்று பாபா அவர்களுக்குக் கூறுகிறார். இப்பொழுது சிறிதளவு நாட்களே மீதமுள்ளன. நீங்கள் வீட்டில் அமர்ந்தபடியே சிவபாபாவையும் மற்றும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு விகர்மங்களை வென்றவராக ஆகி விடுவீர்கள். தங்களுக்குச் சமமாக மற்றவர்களை ஆக்கவில்லை என்றால் பிரஜைகள் எப்படி உருவாகுவார்கள். நிறைய உழைப்பு செய்ய வேண்டும். தாரணை செய்து பின் மற்றவர்களையும் தனக்கு சமமாக ஆக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. ஒவ்வொரு விஷயத்திலும் தங்களது நேரத்தைப் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். தானம் கூட பாத்திரத்தைப் பார்த்து செய்ய வேண்டும். யார் கேட்க விரும்புவதில்லையோ அவர்களுக்கு பின்னால் நேரத்தை வீணடிக்கக் கூடாது. தந்தையினுடைய மற்றும் தேவதைகளினுடைய பக்தர்களுக்கு ஞானம் கொடுக்க வேண்டும்.
2. அழியாத ஞான இரத்தினங்களை தாரணை செய்து செல்வந்தர் ஆக வேண்டும். படிப்பை அவசியம் படிக்க வேண்டும். ஒவ்வொரு இரத்தினமும் இலட்சக்கணக்கான மதிப்பு டையதாகும். எனவே இதை தாரணை செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.
வரதானம்:-
அனைத்தையும் விட எளிதான மற்றும் நிரந்தர நினைவிற்கான சாதனம் – சதா பாபாவின் துணையை அனுபவம் செய்வதாகும். துணையின் (நண்பன்) அனுபவம் நினைவு செய்வதற்கான உழைப்பிலிருந்து விடுவிக்கிறது. துணையாக இருந்தால் நினைவு இருந்துக் கொண்டேயிருக்கும். ஆனால் கூடவே அமர்ந்திருப்பது மட்டும் துணை என்று கிடையாது. ஆனால் துணைவன் என்றாலே உதவியாளராக இருப்பதாகும். கூட இருப்பவரை ஒருபொழுது மறக்க வாய்ப்பிருக்கிறது, ஆனால் நண்பனை மறக்க முடியாது. எனவே ஒவ்வொரு கடினமான காரியத்தையும் பாபாவின் துணை எளிதாக மாறிவிடும். அப்படிப்பட்ட துணைவனின் துணை எப்பொழுதும் அனுபவம் ஆகிக்கொண்டேயிருந்தால் வெற்றி சொரூபம் ஆகிவிடலாம்.
சுலோகன்:-
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பற்ற மகாவாக்கியங்கள்
நாம் என்னவெல்லாம் இந்த கண்கள் மூலம் பார்க்கிறோமோ, தெரிந்திருக்கிறோம்- இப்பொழுது கலியுகத்தின் கடைசி நேரமாக இருக்கிறது, மற்றும் சத்யுக தெய்வீக உலகத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்முடைய பார்வையில் கலியுகம் முடிந்தே விட்டது. கீதையில் பகவானின் மகாவாக்கியம் – குழந்தைகளே, இந்த குருமார்கள் முதலியானவர்களை பார்க்கிறோம், அவர்கள் அனைவருமே இறந்துவிட்டனர். அதுபோல இந்த மனித குலத்தை சேர்ந்த அனைவருமே இரும்பு யுகத்தில் இருக்கின்றனர் என்று புரிந்திருக்கிறோம். அது தான் பரமாத்மாவின் மகா வாக்கியமாக இருக்கிறது. நான் இந்த அசுர உலகத்தின் விநாசம் செய்து தெய்வீக உலகத்தை ஸ்தாபனை செய்கிறேன்.அதனால் அனைவருமே இறந்துவிட்டனர் என்று நாம் சொல்ல முடியும். எனவே இந்த உலகத்தோடு நமக்கு எந்த தொடர்பும் கிடையாது. பழைய உலகத்தில் வாழாதீர்கள். புது உலகத்திற்காக 7 நாள் கோர்ஸ் படியுங்கள். ஏனெனில் புது உலகத்தின் ஸ்தாபனை ஏற்படும் அதாவது வெற்றி அடையுங்கள். நமக்கு இந்த உலகமே (கலியுகம்) கிடையாது. நாம் நல்ல காரியம் செய்கிறோம் தானம், புண்ணியம் செய்கிறோம் என்றால்,மிண்டும் வந்து இந்த உலகத்தில் அதை அனுபவிப்போம் என்று மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள்.ஆனால் இந்த உலகம் இப்போது அழியப் போகிறது என்று நாம் அறிந்து கொண்டோம். எனவே இந்த அழியக்கூடிய உலகத்தின் பிராப்தியும் அழியக் கூடியது.அவை பிறவி பிறவியாக கூட வராது.இப்போது நமது பார்வைக்கும், உலகத்தின் பார்வைக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது.எப்போது நமக்கு படிப்பிப்பவர் யார், என்ற நிச்சயம் இருக்குமோ, அப்போது தான் இந்த நிச்சயமும் ஏற்பட முடியும்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!