31 July 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 30, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சரியான சார்ட்டிற்கான பொருள் - முன்னேற்றம் மற்றும் மாற்றம்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று பாப்தாதா தனது உலகத்தை புதியதாக மாற்றக்கூடிய குழந்தைகளை பார்த்துக் கொண்டி ருக்கிறார். இன்றைய நாள் புது வருடத்தின்ஆரம்பத்தை உலகத்தில் நாலாபக்கமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் புது வருடத்தைகொண்டாடு கிறார்கள், மேலும் பிராமணஆத்மாக்களாகிய நீங்கள் புதுமையான சங்கமயுகத்தில் ஒவ்வொரு நாளையும் புதியதாக புரிந்து கொண்டு கொண்டாடிக் கொண்டேயிருக்கிறீர்கள். அவர்கள் ஒரு நாளை மட்டும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளையும் புதிது என அனுபவம் செய்து கொண்டே இருக்கிறீர்கள். அது எல்லைக்குட்பட்ட வருடத்தின் சக்கரம் ஆகும், மேலும் இது எல்லைக்கு அப்பாற்பட்ட சிருஷ்டி சக்கரத்தின் புது சங்கமயுகமாகும். சங்கமயுகம் முழு யுகத்தில் அனைத்து விதமான புதுமை தன்மையை கொண்டு வரக்கூடியயுகமாகும். சங்கம யுகம் பிராமண வாழ்க்கையின் புது வாழ்க்கையாக இருக்கிறது என்பதை நீங்கள் அனுபவம் செய்திருக்கிறீர்கள். புது விதமான ஞானத்தின் மூலம் புதிய உள்ளுணர்வு, புதிய திருஷ்டி மற்றும் புதிய உலகத்தில் வந்து விட்டீர்கள். பகல்-இரவு, ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு நொடியும் புதியதாக தோன்றுகிறது. சம்பந்தமும் கூட மிகவும் புதியதாக மாறிவிட்டது. பழைய சம்மந்தம் மற்றும் பிராமண சம்மந்தத்தில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறது. பழைய சம்மந்தங் களின் பட்டியலை நினைவில் கொண்டு வந்தால் எவ்வளவு நீண்டதாக இருக்கிறது. ஆனால் சங்கமயுகத்தின் புதிய யுகத்தின் புது சம்மந்தம் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? நீண்டதாக இருக்கிறதா என்ன? பாப்தாதா மற்றும் சகோதரன்-சகோதரி, மேலும் சுயநலமில்லாத அன்பான சம்மந்தமாக இருக்கிறது. அந்த உலகத்தில் பலவிதமான சுயநலம் நிறைந்த சமமந்தங்கள். எனவே புது யுகம், சின்னஞ்சிறிய புதுமையான பிராமண உலகமே மிகவும் அன்பானதாக இருக்கிறது.

உலகத்தினர் ஒரே ஒரு நாள் ஒருவர் மற்றவருக்குவாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள், மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? பாப்தாதா என்ன செய்கிறார்? ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு ஆத்மாவிற்காகசுபபாவணை (நல்ல உணர்வுகள்), சுபகாமனா (நல்ல விருப்பங்களின்) வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். எப்பொழுதெல்லாம் யாருக்காவது, ஏதாவது விசேஷ காலங்களில் வாழ்த்துக்களை தெரிவிக்கிறீர்கள் என்றால் என்ன சொல்கிறீர்கள்? குஷியாக (மகிழ்ச்சியாக) இருங்கள், சுகமுடையவராக இருங்கள், சக்திசாலியானவராக இருங்கள், ஆரோக்கியமானவராக இருங்கள், எனவே நீங்கள் ஒவ்வொரு நேரமும் என்ன சேவை செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஆத்மாக்களுக்கு புது வாழ்க்கை கொடுக்கிறீர்கள். உங்கள் அனை வருக்கும் கூட பாப்தாதா புது வாழ்க்கை கொடுத்து இருக்கிறார் அல்லவா. மேலும் இந்த புது வாழ்க்கையில் அனைவருக்கும்வாழ்த்துக்கள் என்றென்றும் கிடைத்து விடுகிறது. உங்களை போன்ற பாக்கியசாலியான, குஷியின் பொக்கிஷங்களினால் நிறைந்த, சதா சுகம் நிறைந்தவர்களாக வேறு யாராவது ஆக முடியுமா. இந்த புது வாழ்க்கையின் சிறப்பம்சம் உங்களுக்கு தேவதை வாழ்க்கையில் இருக்காது. எனவே ஒவ்வொருநேரமும் தானாகவே பாப்தாதாவின் மூலம் வாழ்த்துக்கள் நிறைந்த மகிழ்ச்சி, நல்லாசிகள்கிடைத்துக் கொண்டே இருக்கிறது. உலகத்தினர்கள் நடனம் ஆடுகின்றனர், பாடல் பாடுகின்றனர் மேலும் ஏதாவது சாப்பிடுகிறார்கள். மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு நொடியும் நடனமாடு கிறார்கள் மேலும் பாடிக்கொண்டேயிருக்கிறார்கள், மேலும் ஒவ்வொரு நாளும் பிரம்மா போஜன் சாப்பிடுகிறோம். உலகத்தினர் பொதுவாக பார்ட்டி (விருந்தினர் குழு) ஏற்பாடுகள் செய்கின்றனர். மேலும் நீங்கள் எப்பொழுதுமேகுழுவாகவிருந்தாளியாக தான் இருக்கிறீர்கள். விருந்தினர் ஒன்றினைந்து சந்தித்துக் கொள்கிறார்கள். பிராமணர்களாகிய நீங்கள் அமிர்த வேளையிலிருந்து உங்கள் பார்ட் (நடிப்பு) தொடங்குகிறது. முதலில் பாப்தாதா வோடு கொண்டாடுகிறீர்கள். ஒருவரிடத்தில் பலவித தொடர்புகள் மற்றும் சொரூபத்தில் கொண்டாடு கிறீர்கள். பிறகு பிராமணர்களாகியஉங்களுக்குள்ஞான வகுப்பு எடுக்கிறீர்கள் என்றால் குழுவாக சந்திப்பை கொண்டாடுகிறார்கள் அல்லவா, மேலும் முரளி கேட்க கேட்க (ஞான) நடனம் ஆடுகிறார்கள். (குணங்களை) பாடுகிறார்கள். மேலும் ஒவ்வொரு நேரமும் உற்சாகம் நிறைந்த வாழ்க்கையில் பறந்துக்கொண்டேயிருக்கிறீர்கள். பிராமண வாழ்க்கையின் சுவாசமே உற்சாகம் ஆகும். ஒருவேளை உற்சாகம் குறைந்து விடுகிறது என்றால் பிராமண வாழ்க்கையை வாழ்வதற்கான மகிழ்ச்சி உருவாவதில்லை. உடலிலும் மூச்சு காற்று முறையாக யதார்த்தமாக (சரியாக) செயல்படுகிறது என்றால் நல்ல ஆரோக்கியம் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒருவேளை சிலநேரங்களில் மிக வேகமாகவும், சில நேரங்களில் மிக மெதுவாக ஆகிவிடுகிறது என்றால் ஆரோக்கியமானவர் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை அல்லவா. பிராமண வாழ்க்கை என்றால் உற்சாகம் நிறைந்ததாகும், ஏமாற்றம், விரக்தியடைவதில்லை. அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றக்கூடிய பாபாவினுடையவராகி விட்டால் ஏமாற்றம் எங்கிருந்து வரும்? உங்களுடைய தொழிலே நம்பிக்கை இல்லாதவர்களை நம்பிக்கை யுடைவராக மாற்றுவதாகும். இதுவும் சேவை தான் அல்லவா. இவை அனைத்தும் உலகத்தின் எல்லைக்குட் பட்ட விஷயங்களுக்கு தகுந்தப்படி நீங்களும் பகல் பொழுதை (தினம்) மகத்துவம் கொடுக் கிறீர்கள். ஆனால் உண்மையில் பிராமண ஆத்மாக்களாகிய உங்களுக்கு சங்கம யுகமே புதுமைத் தன்மையுடைய யுகமாக இருக்கிறது. புது உலகமும் கூட இந்த நேரத்தில் தான் உருவாகிறது. புது உலகத்திற்கான ஞானம் இந்த நேரத்தில் தான் ஆத்மாக்களாகிய உங்களுக்கு கிடைக்கிறது. அங்கு புது உலகத்தில் புது – பழையவற்றின் ஞானம் இல்லை. புது யுகத்தில் புது உலகத் திற்கான ஸ்தாபனை செய்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அனைவரும் தபஸ்யா வருடத்தில்தபஸ்யாவின் மூலம் தன்னிடத்தில்அலௌகீகமான முறையில் புதுமைத் தன்மையை கொண்டு வந்துள்ளீர்களா? அல்லது அதே பழைய நடத்தை (பழக்கவழக்கங்கள்) தான் இருக் கின்றனவா? பழைய பழக்க வழக்கம் என்னவாக இருக்கிறது? யோகாவும் நன்றாக இருக்கிறது, அனுபவமும் நன்றாக இருக்கிறது, முன்னேற்றமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, தாரணையிலும் மிகவும் வித்தியாசம் இருக்கிறது, கவனமும் நன்றாக இருக்கிறது, சேவையிலும் வளர்ச்சி நன்றாக இருக்கிறது, … ஆனால், ஆனால் என்ற வாலும் இருக்கிறது. சில நேரங்களில், அப்படியும் ஆகிவிடுகிறது. இந்த அவ்வபொழுது (சில நேரங்கள்) என்ற வால் எப்பொழுது சமாப்தி (முடிவுக்கு) கொண்டு வருவீர்கள்? தபஸ்யா வருடத்தில் இந்த புதுமைத் தன்மையை கொண்டு வாருங்கள். முயற்சி அல்லது சேவையின் வெற்றியின், திருப்தியின் சதவீகிதம் சில நேரங்களில் மிக உயர்ந்ததாகவும், சில நேரங்களில் குறைவாகவும் – இதில் எப்பொழுதும் உயர்ந்த சதவிகிதத்தின் புதுமைத் தன்மையை கொண்டு வாருங்கள். இன்றைய காலங்களில் மருத்துவர்கள் அதிகமாக எதை சோதனை செய்கிறார்கள்? அனைத்தையும் விட அதிகமாக இரத்த கொதிப்பை அதிகமாக சோதனை செய்கிறார்கள். ஒருவேளை இரத்த கொதிப்பு சில நேரங்களில் மிக அதிகமாகவும், சில நேரங்களில் குறைவாக இருக்கிறது என்றால் என்ன ஆகும்? எனவே பாப்தாதா முயற்சியின் அழுத்தம் (ப்ரசரை) பார்க்கிறார், மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் சிலநேரங்களில் குதித்து (எகிறி) விடுகிறது. இந்த அவ்வபொழுது (சிலநேரங்களில்) என்ற வார்த்தையை முடித்து விடுங்கள். இப்பொழுது அனைவரும் பரிசை பெறுவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா? இந்த முழு சபையில் (குழுவில்) நாங்கள் பரிசை பெறுவதற்கு உரியவர்கள் என்று யார் புரிந்திருக் கிறீர்கள்? சில நேரங்களில் என்று சொல்பவர்கள்பரிசைபெறுவார்களா?

பரிசைபெறுவதற்கு முன்னால் இந்த 6மாதத்திற்குள் மூன்று விதமான திருப்தியை அடைந்திருக்கிறீர்களா என்ற விசேஷத்தன்மையை பாருங்கள் (சோதனை)? முதலாவது – தன்னை தானே சாட்சியாக இருந்து சோதனை செய்யுங்கள் – தன்னுடைய சார்ட்டினால், தனது உண்மையான மனத்தினால், உண்மையான மனதோடு திருப்தியாக இருக்கிறீர்களா? இரண்டாவது – எப்படிப்பட்ட விதிப்படிபாப்தாதா நினைவிற்கான சார்ட்டை விரும்புகிறாரோ, அந்த விதிப்படி மனம், சொல், செயல் மற்றும் தொடர்பில் முழுமையான சார்ட்இருக்கிறதா? அதாவது பாபாவும் திருப்தியாக இருக்கிறாரா? மூன்றாவதாக – பிராமண குடும்பம் என்பது நம்முடைய உயர்ந்த யோகி வாழ்க்கையினால் திருப்தியாக இருக்கிறீர்களா? எனவே மூன்று விதத்திலும் திருப்தியை அனுபவம் செய்வது என்றாலே பரிசுக்கு உரியவர் (தகுதியுடையவர்) ஆவதாகும். விதிப்படி கட்டளைக்கு கீழ்படிந்தவராகி சார்ட்வைப்பதற்கான கட்டளையை பின்பற்றுகிறீர்களா? எனவே கட்டளைக்கு கீழ்படிந்தவர்களுக்கும் கூட மதிப்பெண் கிடைக் கும். ஆனால் யார் கட்டளைக்கு கீழ்படிந்தவராகி சார்ட் வைப்பதன் கூடவே முயற்சியின் விதி மற்றும் வளர்ச்சிக்கான மதிப்பெண் பெறுகிறார்களோ, அவர்களுக்கு தான் முழுமையான மதிப் பெண் கிடைக்கிறது. யார் இந்த நியமத்தை பின்பற்றுகிறார்களோ, யார் சரியான முறையில் சார்ட் எழுதுகிறார்களோ, அவர்களும் பாப்தாதாவின் மூலம், பிராமண குடும்பத்தின் மூலம் வாழ்த்துக்களை பெறுவதற்கு உரியவர் ஆகிறார்கள். ஆனால் அனைவரிடமிருந்தும் திருப்தியின் வாழ்த்துக்களை பெறக்கூடியவர்கள் தான் பரிசை (வெகுமதியை) பெறுவதற்கு தகுதியுடைவர் ஆகிறார்கள். யதார்த்தமான (சரியான) தபஸ்யாவின் அடையாளம் செயல், சம்மந்தம் மற்றும் சம்ஸ்காரம் – மூன்றிலும் புதுமைத் தன்மையின் விசேஷசத் தன்மையை தனக்குள் அனுபவம் செய்வது மற்றவர்களையும் அனுபவம் செய்ய வைப்பதாகும். யதார்த்த மான சார்ட் என்றால் ஒவ்வொரு பாடத்திலும் முன்னேற்றத்தின் அனுபவம் செய்வது, மாற்றத்தை அனுபவம் செய்வதாகும். பிரச்சனைகள் என்பது மனிதர்களினால் அல்லது இயற்கையினால் அல்லது மாயாவின் மூலம் வருவது, இவை பிராமண வாழ்க்கையில் வந்தே தீர வேண்டும். ஆனால் தனது மனநிலையின் சக்தியானது பிரச்சனைகளின் (சூழ் நிலைகளின்) தாக்கத்தை அப்படியே முடித்துவிடுகிறது, அது மனோரஞ்சன் (மிக இரம்மியமான) காட்சி முன்னால் வந்து சென்றது போன்று இருக்கும். எண்ணத்தில் பிரச்சனைகளின் குழப்பம் உணரக்கூடாது. நினைவு யாத்திரை எளிதாகவும் சக்திசாலியானதாகவும் இருக்க வேண்டும். சக்திசாலியான நினைவு ஒரே நேரத்தில் இரட்டிப்பு அனுபவம் செய்ய வைக்கிறது. ஒரு பக்கம் நினைவின் அக்னி ஆகி சாம்பலாக்குவதற்கான செயலை செய்கிறது. மாற்றத்தை ஏற்படுத்து வதற்கான காரியத்தை செய்கிறது. இரண்டாவதாக குஷி மற்றும் இலேசான நிலையின் அனுபவத்தை செய்ய வைக்கிறது. அதுபோன்ற முறைப்படியான சக்திசாலியான நினைவைத் தான் யதார்த்தமான நினைவு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் பாப்தாதா குழந்தைகளின் ஊக்கம் மற்றும் ஈடுபாட்டை பார்த்து குஷியடைகிறார். பலருக்கு இலட்சியம் நன்றாக புத்தியில் இருக்கிறது. நினைவில் நல்ல நம்பரை பெறுகிறார்கள். நினைவின் கூடவே சக்திசாலியான நிலை என்பதில் தான் நம்பர்வார் இருக்கிறது. நினைவு மற்றும் சக்திசாலி யான நிலை, இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும் – இவர்களைத்தான் நம்பர் ஓன் பரிசை பெறுவதற்கு தகுதியுடையவர் என்று சொல்லப்படுகிறது. புரிந்ததா. சரியான சார்ட் வைக்கக் கூடியவர்களின் பெயர்களின் மாலை உருவாக்கப்படுகிறது. இப்பொழுதும் கூட பல காலம் இல்லை என்றாலும் சில காலம் மிச்சமிருக்கிறது, இந்த சிறிய காலத்திலும் விதிப்படி முயற்சியை அதிகப்படுத்தி தனது மனம், புத்தி, செயல் மற்றும் தொடர்பை எப்பொழுதும் உறுதியாக உருவாக்கினீர்கள் என்றால் இந்த சிறிய காலக்கட்டத்தில் உறுதி யான மனநிலையின் முயற்சி வரும் காலங் களில் மிகவும் காரியங்களுக்கும் பயன்படும், மற்றும் வெற்றி யின் குஷி தனக்கும் அனுபவமாகும், மேலும் மற்றவர்களின் மூலம் திருப்தியின் ஆசீர்வாதங்களை பெற்றுக் கொண்டே இருப்பீர்கள். ஆகையால் காலம் கடந்து விட்டது என்று நினைக்காதீர்கள். ஆனால் இப்பொழுதும் தற்சமயத்திலும் எதிர்காலத்திலும் உயர்ந்ததாக மாற்ற முடியும்.

இப்பொழுதும் விசேஷ நினைவு செய்யும் மாதத்திற்கான அதிகப்படியான ஆசீர்வாதத்தை பெறுவதற்கான மாதமாக இருக்கிறது. தபஸ்யா வருடத்திற்கான வாய்ப்பு கிடைத்தது, அதுபோல நினைவு செய்யும் மாதத்திற்கான விசேஷமான வாய்ப்பும் இருக்கிறது. இந்த மாதத்தின் 30 நாட்களும் ஒருவேளை எளிதாக, இயல்பானதாக, சக்திசாலியானதாக, வெற்றி பெறும் ஆத்மாவின் அனுபவம் செய்தீர்கள் என்றால், இதுவும் என்றென்றும் இயல்பான சம்ஸ்காரமாக உருவாக்குவதற்கான வெகுமதி அடைய முடியும். எது வந்தாலும், எது சென்றாலும், பிரச்சனைகள் என்ற பெரியதிலும் பெரிய மலையே வந்தாலும், சம்ஸ்கார மோதல் ஏற்படும் படி மேக கூட்டங்கள் வந்தாலும், இயற்கையே பேப்பராக (பிரச்சனை) வந்தாலும், ஆனால் அங்கதனை போன்று மனம்-புத்தி என்ற கால்கள் அசையக் கூடாது. உறுதியாக இருக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது பிரச்சனை (குழப்பம்) கடந்தக் காலத்தில் நடந்திருந் தாலும், அதை எண்ணத்திலும் கூட நினைவில் கொண்டு வரக்கூடாது. முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும். தற்சமயத்தில் பாபாவை போன்று உயர்ந்தவராகவும், எளிதாக உருவாக்க வேண்டும். மேலும் எதிர்காலத்தை சதா வெற்றியின் அதிகாரத்தோடு பார்ப்பது. இந்த விதியின் மூலம் வெற்றியை அடைய வேண்டும். நாளையிலிருந்து அல்ல, இன்றே செய்ய வேண்டும். நினைவு செய்யும் மாதமான இந்த சிறிய சமயத்தை வெகுகாலத்திற்கான சம்ஸ்காரமாக உருவாக்குங்கள். இந்த விசேஷ வரதானம் விதிப்படி அடைய வேண்டும். கவனக்குறைவாக இருப்பது என்பது ஆசீர்வாதத்தின் பொருள் கிடையாது. நல்லது.

குமாரிகளின் குழு அமர்ந்திருக்கிறார்கள். முன்னால் அமர்வதற்கான வாய்ப்பு ஏன் கிடைத்தது? என்றென்றும் முன்னால் இருக்க வேண்டும், ஆகையால் இங்கு முன்னால் அமருவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. புரிந்ததா. பழம் பழுத்த பிறகு தான் பறிக்கப் படுகிறது. பழுக்காத (சுவையில்லாத) பழங்களை பறிப்பதில்லை. அனைவரும் படிப்பை முடித்து விட்டு சென்டருக்கு செல்வீர்களா? அல்லது வீட்டிற்கு செல்வீர்களா? ஒருவேளை தாய் தந்தையர் வீட்டிற்கு வாருங்கள் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை தன்னிடம் தைரியம் இருந்தால் யாரும் நிறுத்தி வைக்க முடியாது. சிறிதளவு ஈர்ப்பு இருக்கிறது என்றால் நிறுத்தி வைக்கக்கூடியவர் நிறுத்தி வைத்துவிடுவார்கள். நல்லது. புது வருடத்தை கொண்டாடுவதற்காக அனைவரும் ஒடோடிவந்துள்ளீர்கள். புது வருடம் கொண்டாடுவது என்றாலே ஒவ்வொரு நேரமும் புதியதாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நேரத்திலும் தனக்குள் ஆன்மீக புதுமைத்தன்மையை கொண்டு வர வேண்டும். நல்லது.

நாலாபக்கத்திலுமுள்ள அனைத்து அன்பான மற்றும் சகயோகி (உதவி செய்யும்) குழந்தைகளும் இன்றைய நாளின் மகத்துவத்தை தெரிந்துக்கொண்டு விசேஷமாக மனதின் மூலம், கடிதங்களின் மூலம் அல்லது கார்ட் (வாழ்த்து மடல்) மூலம் விசேஷமாக நினைவு செய்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் பாப்தாதாவிற்கு தபால் செய்வதற்கு முன்னதாகவே சென்று விடுகிறது. எழுதுவதற்கு முன்னதாகவே சென்றடைந்து விடுகிறது. எண்ணத்தை உருவாக்கி னோம், சென்றடைந்துவிட்டது. ஆகையால் பல குழந்தைகளின் வாழ்த்து மடல்கள் அனைத்தும் பின்னால் தான் சென்றடைகிறது, ஆனால் பாப்தாதா முன்னதாகவே அனைவருக்கும் புது யுகத்தின் புது நாளை கொண்டாடுவதற்கான வாழ்த்துக்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். எப்படி ஏதாவது விசேஷமான நிகழ்ச்சி (ப்ரோகிராம்) நடக்கிற தல்லவா, அதனால் இன்றைய காலத்தை சேர்ந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? தனது டி.வி (தொலைகாட்சி) திறந்து வைத்துக்கொண்டு அமர்ந்து விடுகிறார்கள். அதனால் அனைத்து ஆன்மீக குழந்தைகளும் தனது புத்தி என்ற தொலைநோக்கு பார்வை என்ற ஸ்வீட்சைஆன் செய்து அமர்ந்துவிடுகிறார்கள். பாப்தாதா நாலாபக்கத்திலுமுள்ள வாழ்த்துக்களுக்கு உரியவரான குழந்தைகளை ஒவ்வொரு நொடியும் வாழ்த்துக் களின் ஆசீர்வாதங்களை பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு நேரத்தின் நினைவு மற்றும் அன்பு, இது தான் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் மனதிற்கான ஊக்கம் – உற்சாகத்தை அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. எனவே எப்பொழுதும் தன்னை சகஜ முயற்சியாளர் மற்றும் சதா முயற்சியாளர், சதா விதிப்படி (முறைப்படி) வளர்ச்சியை அடையக் கூடிய தகுதியுடைய ஆத்மாக்களாக மாறி பறந்துக்கொண்டேயிருங்கள். அப்படிப்பட்ட சதா தற்சமயத்தில் பாபாவிற்கு சமமாக உருவாக்கக்கூடிய மற்றும் எதிர் காலத்தை வெற்றியின் சொரூபமாக உருவாக்கக்கூடிய சிரேஷ்ட வாழ்த்துக்களுக்கு உரிய ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:-

தன்னுடைய பொறுப்பு என்று புரிந்து கொள்ளும் பொழுது தான் தலை பாரமாகி விடுகிறது. பொறுப்பு பாபாவுடையது, நான் நிமித்தமாக இருக்கிறேன். இந்த ஒரு நினைவு இலேசாக்கி விடுகிறது. ஆகையால் தனது முயற்சியின் சுமை, சேவைகளின் சுமை, சம்மந்தம் மற்றும் தொடர்பை கவனித்துக் கொள்ளக்கூடிய சுமை இவை அனைத்து சிறிய – பெரிய சுமைகளை பாபாவிடம் ஒப்படைத்துவிட்டு இலேசாக இருந்து விடுங்கள். ஒருவேளை நான் தான் செய்ய வேண்டியிருக்கிறது, என்னால் செய்ய முடியும், என்று சிறிதளவு எண்ணம் தோன்றுகிறது என்றாலும் இந்த நான் என்பது சுமையாக்கிவிடுகிறது மேலும் பணிவுத்தன்மையும் கூட இருக்காது. நிமித்தம் எனப் புரிந்து கொள்வதின் மூலம் பணிவு என்ற குணம் இயல்பாகவே வந்துவிடும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top