24 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

June 23, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

(மம்மாவின் புண்ணிய நினைவு நாளன்று காலை வகுப்பில் கூறுவதற்கான மாதேஷ்வரி அவர்களின் மதுர மகாவாக்கியம்)

கர்மம்தான் சுகம் மற்றும் துக்கத்திற்கான காரணம் ஆகும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

வாழ்க்கையில் துக்கம் மற்றும் சுகமானது கர்மத்தின் ஆதாரத்தால் விதி என்ற ரூபத்தில் ஏற்படுகிறது. அவசியம் முதலில் அப்பேர்ப்பட்ட கர்மம் செய்திருக்கிறார்கள். அதனுடைய வினைப்பயனாக துக்கம் அல்லது சுகத்தின் ரூபத்தில் அனுபவிக்க வேண்டி உள்ளது. எனவே சுகம் மற்றும் துக்கத்தின் சம்பந்தம் கர்மத்துடன் ஏற்பட்டு விட்டது. கர்மத்திற்கு தலைவிதி அல்லது அதிர்ஷ்டம் என்று கூறமாட்டார்கள். சில பேர் எது அதிர்ஷ்டத்தில் இருக்குமோ என்று நினைக்கிறார்கள். எனவே துக்கம் மற்றும் சுகத்தை தலைவிதி என்று நினைத்துக் கொண்டு விடுகிறார்கள். இவ்வாறு நினைப்பது எப்படி இருக்கிறது என்றால் இந்த தலைவிதியை ஏதோ பகவான் தான் அமைத்திருக்கிறார் அல்லது வேறு யாரோ அமைத்திருக்கிறார் என்று. எனவே எது அதிர்ஷ்டத்தில் இருக்குமோ என்று கூறி விடுகிறார்கள். ஆனால் அதிர்ஷ்டத்தை கூட யார் அமைத்தார் என்பதை புரிந்து கொள்வது கூட அவசியம் ஆகும். தலைவிதியை பரமாத்மா ஒன்றும் அமைக்கவில்லை. தலைவிதி ஏதோ முன் கூட்டியே அமைக்கப்பட்டுள்ளது என்று கூட கிடையாது. இல்லை. மனிதன் இப்பொழுது அனுபவித்து கொண்டிருக்கும் துக்கம் அல்லது சுகத்தை அமைத்துக் கொள்பவனும் மனிதன் தான். ஏனெனில் கர்மம் செய்பவன் மனிதன் ஆவான். எனவே இந்த பொறுப்பு கூட அவனுடையது ஆகி விட்டது. செய்பவர் அனுபவிப்பார் என்பதோ, என்ன செய்கிறீர்களோ அதன் பலனை பெற வேண்டும் என்பதோ, ஒரு சாதாரண பழமொழி ஆகும். கீதையில் கூட ஜீவாத்மா தனக்கு தானே நண்பன் ஆவார். மேலும் தனக்கு தானே எதிரி ஆவார் என்ற வர்ணனை உள்ளது. நான் உங்களுக்கு எதிரி ஆவேன், நான் உங்களுக்கு நண்பன் ஆவேன் என்று கூறவில்லை. இல்லை. ஜீவாத்மா தனக்கு தானே எதிரி ஆவார் மற்றும் தனக்கு தானே நண்பன் ஆவார். எனவே தன்னிடம் தானே நட்பு மற்றும் தன்னிடம் தானே பகைமை, துக்கம், சுகம் அமைப்பவர் சுயம் மனிதனே ஆவான். எனவே இந்த விஷயம் அவ்வளவு தெளிவாக உள்ளது. துக்கம் சுகத்திற்கு பொறுப்பு மனிதன் சுயம் தனக்கு தானே ஆவார். எனவே எப்பொழுதாவது ஏதாவதொரு ரூபத்தில் துக்கம் வருகிறது என்றால் அதை விரட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஏதாவது சண்டைச் சச்சரவு ஏற்பட்டு விடுகிறது என்றால், அதை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். இதில் யாருக்காவது அகால மரணம் கூட ஏற்பட்டு விடுகிறது என்றால், அப்பொழுது கூட துக்கம் ஏற்பட்டு விடுகிறது. ஆக எனக்கு ஏன் இவ்வாறு ஏற்பட்டு விட்டது என்று தெரியவில்லையே என்ற நினைக்கிறார்கள். பிறகு அதே ஆவேசத்தில் வந்து பகவானுக்கு கூட வசை மொழிகள் – திட்டுக்கள் கொடுக்க முற்பட்டு விடுகிறார்கள். இப்பொழுது உங்களுக்கு முன்னால் இந்த விஷயங்கள் வந்துள்ளது என்றால், இதை செய்தது யார்? இந்த அகால மரணம் வந்துள்ளது. இது வியாதியின் ரூபத்தில் துக்கம் வந்தது – இது பகவான் செய்தாரா என்ன? இந்த சண்டை சச்சரவுகள் – உலகத்தில் துக்கத்திற்கு எத்தனை காரணங்கள் உள்ளதோ, இவை எல்லாமே பகவான் செய்தாரா என்ன? அடே, பகவானுக்கு துக்கத்தை நீக்கி, சுகத்தை அளிப்பவர் என்று கூறுகிறீர்கள். எனவே எப்பொழுதாவது ஏதாவது துக்கம் ஏற்பட்டால் அவரை நினைவு செய்கிறீர்கள். சரீரத்திற்கு நோய் ஏற்பட்டாலும் கூட ஹே பகவான் என்று கூறுகிறீர்கள். துக்கத்தில் அவரை தான் நினைவு செய்கிறீர்கள். ஒரு வேளை அவரே துக்கம் கொடுத்திருந்தார் என்றால், துக்கம் கொடுப்பவரை என்ன செய்ய வேண்டும், கூறுங்கள். இதையாவது யோசிக்க வேண்டும் அல்லவா – துக்கத்தின் பொழுது யார் நினைவிற்கு வருகிறாரோ,. அவருக்காக இவர் தான் துக்கம் கொடுத்தார் என்று கூறவும் முடியாது. இது கூடத் தான் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் ஆகும். நினைவு செய்கிறோம் என்றால் அவசியம் நம்முடன் அவருடைய சம்பந்தம் ஏதோ இன்னொரு விஷயத்திற்காக உள்ளதே அன்றி துக்கம் கொடுப்பதற்காக அல்ல. எனவே துக்கத்திற்கான காரணம் அல்லது அதற்கான பொறுப்பாளி இன்னொருவர் யாரோ ஆவார் என்பது நிரூபணமாகிறது. அதில் கூட மூன்றாமவர் என்று யாருமே கிடையாது. ஒன்று நான் இரண்டாவது எனது படைப்பு. அவ்வளவே. இரண்டே பொருட்கள் ஆகியது அல்லவா? ஒன்று நான் அவரது படைப்பு அல்லது அவரது குழந்தை என்று கூறினாலும் சரி, மேலும் இரண்டாவது தந்தை ஆவார். எனவே ஒன்று தந்தை பொறுப்பாளி ஆவார் அல்லது நான் பொறுப்பாளி ஆவேன். ஆனால் என்னிடம் துக்கம் வரும் பொழுது அந்த படைப்பவர் தான் எனக்கு துக்கத்தை கொடுத்தார் என்று எனக்கு தோன்றுகிறது. அவரோ எனக்கு சுகமளிக்கும் வள்ளல் ஆவாரே என்று உள்ளுக்குள் அப்படியும் தோன்றுகிறது. எப்படி சுகத்திற்காக ஹே பகவான் இந்த துக்கத்தை விலக்கி விடு. பகவான் எனது ஆயுளை நீண்டதாக ஆக்கி விடு என்று ஆதாரம் வேண்டுகிறார்கள். பாருங்கள் ஆயுளுக் காகவும் வேண்டுகிறார்கள். எனவே ஆயுளுக்காகவும், துக்கத்திற்காகவும், சரீரத்தின் வியாதிக் காகவும் மேலும் அமைதியின்மைக்கு காரணமாக அமையும் சண்டை சச்சரவு போன்ற வைக்கும் பகவானிடம் வேண்டுகிறார்கள். யாராவது ஒரு குழந்தை சரி இல்லை என்றாலும் கூட பகவானே இவருக்கு நல்ல புத்தி கொடு, நல்ல வழி காட்டு என்று வழியையும் அவரிடம் வேண்டுகிறார்கள். ஏதாவது ஒரு விஷயத்தின் காரணமாக ஏதாவது துக்கம் அல்லது கஷ்டம் ஏற்பட்டால், கஷ்டத்தில் அவரை தான் நினைவும் செய்கிறார்கள். அவரிடம் தான் வேண்டவும் செய்கிறார்கள். அவரிடம் தான் வேண்டுதல் செய்கிறார்கள் என்றால் அவசியம் அவர் அதை கொடுக்கக் கூடிய வள்ளலாகத்தான் இருப்பார் மேலும் அவரே நமக்கு சுகம் அளிப்பவர் ஆவார். அதாவது இந்த எல்லா விஷயங்களுக்கான நிவாரணம் அந்த ஒருவரிடம் மட்டுமே உள்ளது. சும்மாவே யாரும் அவரை நினைவு செய் வதில்லை. அவரிடம் தீர்வு இருக்கிறது. எனவே இது போல நம்மிடம் தெரிந்தோ தெரியாமலோ பழக்கங்கள் ஏற்பட்டு விட்டுள்ளன. ஆனால் பகவானை துக்கத்தின் பொழுது அவசியம் நினைவு செய்கிறார்கள். ஏதாவது ஒரு விசயம் ஏற்பட்டு விடும் பொழுது ஓ மை காட் என்று வாயிலிருந்து வெளிப்படுகிறது அந்த காட் (கடவுள்) யார்? எப்படி இருக்கிறார் என்பது தெரிந்திருக்கிறதோ இல்லையோ, ஆனால் வாயிலி ருந்து அவசியம் வெளிப்படுகிறது. எனவே கடைசியில் நாம் யாரை நினைவு செய்கிறோமோ அவருக்கு நம்முடைய இத்தனை துக்கங்களுடன் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்பது கூட புரிந்து கொள்ள வேண்டிய வி‘யம் ஆகும். அவர் துக்கத்தின் வள்ளலா இல்லை அவருடைய தொடர்பு சுகம் கொடுப்பதன் காரணமாக உள்ளதா? இதுவோ நம்முடைய நினைவின் மூலமாக நிரூபணம் ஆகிறது. அவருக்கு எந்தவொரு துக்கம் கொடுப்பதற்கான வேலையே கிடையாது. அப்படி கொடுப்பதாக இருந்தால் அவரை ஏன் நினைவு செய்ய வேண்டும். துக்கம் கொடுப் பவர்கள் மீதோ உள்ளுக்குள் கோபம் வருகிறது. இவரை என்ன செய்ய வேண்டும் என்று தெரிய வில்லை என்று யோசிப்பார்கள். ஆனால் பகவானுக்காக எப்பொழுதும் மேலும் துக்கத்தின் பொழுதோ அன்பு வருகிறது. இவர் நம்முடைய மிக பெரிய நண்பன் ஆவார் என்று உள்ளுக்குள் தோன்றுகிறது. உள்ளுக்குள் அந்த குஷி வருகிறது. எனவே அவசியம் அவருடன் நமக்கு சுகத்தின் சம்பந்தம் உள்ளது. எனவே துக்கத்தின் காரணம் அவசியம் வேறு யாரோ ஆவார். இப்பொழுது மூன்றாமவரோ வேறு யாரும் இல்லவே இல்லை. ஒன்று நான், இரண்டாவது அவர். எனவே அவசியம் நான் பொறுப்பாளி ஆகிறேன்.

எனவே எந்த பொருளுக்காக நான் நிமித்தமாக (கருவியாக) இருக்கிறேனோ, மேலும் நான் தான் துக்கம் வரும் பொழுது துக்கம் அடைகிறேன். துக்கத்தை எனக்கு நானே உருவாக்கி கொள்கிறேன் என்றால் இது எவ்வளவு ஒரு அறியாமை ஆகும். எந்த வி‘யத்திலிருந்து விடுபட விரும்புகிறேனோ, அந்த விஷயத்தை நானே எனக்காக அமைத்துக் கொள்கிறேன் – என்றால் இது ஆச்சரியத்திற்குரிய விஷயம் ஆகும் அல்லவா? மனிதன் விரும்புவதில்லை, ஆனாலும் துக்கம் அமைந்து கொண்டே போகிறது என்றால் அவசியம் ஏதோ ஒரு விஷயத்தில் அஞ்ஞானி யாக இருக்கிறார். அறிவற்றவராக இருக்கிறார். எனவே எந்த விஷயம் பற்றி தெரியாமல் இருக்கிறதோ, அதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அவசியம் எனக்கு அது பற்றி கொஞ்சம் ஞானம் இருக்க வேண்டும். எனவே இப்பேர்ப்ட்ட அந்த அறிவிற்கான ஒரு தேடல் இருக்க வேண்டும். ஆனால் ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்ன வென்றால் அப்பேர்ப்பட்ட விஷயத்தை புரிந்து கொள்வதற்காகக் கூட பாருங்கள் பாவம் நிறைய பேர் எவ்வளவு சாக்குப் போக்கு சொல் கிறார்கள். நேரமில்லை என்பார்கள். சமயமே கிடைப் பதில் என்ன செய்வது. இல்லறம் தொழில் ஆகிய இவற்றை பார்ப்பதா, இதை செய்வதா? அதை செய்வதா .. .. என்ன செய்வது .. .. எனவே அவற்றை பார்த்துக் கொண்டும், பராமரித்துக் கொண்டும் கூட அதிலும் துக்கம் உடையவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். இப்பொழுது நான் தான் எனது எனது என்று கூறி இநத துக்கத்தின் ரூபம் ஆக்கி விட்டேன். அதை துக்கத்தில் வடிவமாக ஆக்கி விட்டேன் என்றிருக்கும் பொழுது முதலில் அதற்கான தேடல் இருக்க வேண்டும். அமைப்பதற்கு முன்னால் அதனுடைய விஷயங்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும் – இந்த விஷயத்தை அமைத்து இப்பொழுது நான் துக்கம் அடைந்துள்ளேனே, அதற்கான காரணம் என்ன? நான் ஏன் துக்கம் அடைந்துள்ளேன் என்பது பற்றிய அறிவோ முதலில் வேண்டும். என்ன எங்களுக்காக சுகம் இருககவே இருக்காதா? என்பது பற்றிய விஷயங்கள் கூட தெரிந்திருக்க வேண்டும்.

இதே விஷயங்களை தெரிந்து கொள்வதற்காகத் தான் இங்கு என்ன கூறப்படுகிறது என்றால் எந்த பொருட்களை நீங்கள் எனது என்று புரிந்துள்ளீர்களோ அது தான் துக்கத்திற்கு காரணம் ஆகும். துக்கத்தை நீக்குவதற்கான நிவாரணம் என்ன என்பது கூட வாழ்வில் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆனால் தெரிந்திருந்தும் கூட என்ன செய்வது? எப்படி செய்வது? என்ன நமது இல்லற வாழ்க்கையை விட்டு விடலாமா? என்று கூறுகிறார்கள். எனவே பாருங்கள் மனிதனுடைய புத்தி அறிவு கிடைத்த பிறகு கூட தாரணை செய்ய முடிவதில்லை என்பதை பார்க்கும் பொழுது ஆச்சரியம் ஏற்படுகிறது. நாம் அனுபவம் செய்து அதே விஷயங்களை புரிந்து கொண்டு மற்றும் தாரணை செய்து இது அனுபவத்தின் விஷயங்கள் ஆகும்என்று கூறுகிறோம். அவசியம் அனுபவம் ஏற்பட்டுள்ளது. அதனால் தான்நடைமுறையில் எந்த வகையில் சுகத்தின் பிராப்தி ஏற்பட முடியும் என்பதை நாங்கள் கூறுகிறோம். வெகு காலமாக சுகத்திற்கான விருப்பம் கொண்டபடி வந்துள்ளீர்கள். இப்பொழுது அந்த சுகமளிக்கும் வள்ளல் சுயம் நமக்கு தனது அறிமுகத்தை அளித்துக் கொண்டிருக்கிறார் – ஹே குழந்தைகளே, நீங்கள் ஏன் துக்கம் அடைந்துள்ளீர்கள். காரணமோ உங்களுடையதே ஆகும். ஆனால் உங்களுக்குள் அப்பேர்ப்பட்ட எந்தவொரு விஷயம் இருக்கும் காரணத்தால் துக்கத்தை நான் ஏன் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதே உங்களுக்கு தெரியாமல் உள்ளது. உங்களுடைய கர்மமே உங்களுக்கு துக்கத்தின் காரணமாக அமைந்து கொண்டே போகிறதா? அதை வந்து புரிந்து கொள்ளுங்கள். பாருங்கள் நாங்கள் இவ்வளவு முன் வந்து கேட்கிறோம். பிறகும் ஆச்சரியம் பாருங்கள். இதை கேட்டும் கூட பாவம் இப்படி கூறுகிறார்கள்- ஒரு வேளை இப்படியே தான் நடந்து கொண்டு இருக்க வேண்டும் போலும். இதற்கு தான் அஹோ, எனது மாயையே என்று கூறப்படுகிறது. ஒரேயடியாக மாயை பிடித்து விட்டு உட்கார்ந்துள்ளது. மேலும் விரும்பினால் கூட எந்த விஷயத்திற்காக நாள் முழுவதும் தலையிலடித்து கொள் கிறார்களோ, அதே தந்தை முன்னால் வந்து கூறுகிறார் – குழந்தைகளே உங்களது சுகத்திற்கு காரணம் மற்றும் துக்கத்தின் காரணம் என்ன என்று.

நான் உங்களது அனைத்து துக்கங்களையும் நீக்கி உங்களுக்கு சுகம் அளிக்க வந்துள்ளேன் என்று சுயம் தந்தை கூறுகிறார். அதனால் தானே துக்க ஹர்த்தா என்று பாடுகிறீர்கள். ஒரு பொழுதும் இன்று துக்க கர்த்தா (துக்கம் கொடுப்பவர்), சுக ஹர்த்தா (சுகத்தை நீக்குபவர்) என்று கூறுவதில்லை. எனவே ஒவ்வொரு துக்கத்தையும் அவர் நீக்குகிறார். தந்தை கூறுகிறார் – குழந்தைகளே, நான் வந்திருப்பதே உங்களது துக்கத்தை நீக்குவதற்காக. ஆனால் அதற்காக உங்களது துக்கம் நீங்கி விடும் வகையில் அப்பேர்ப்பட்ட கர்மத்தை நான் உங்களுக்கு கற்பிப்பேன். நான் என்ன கற்பிக்கிறேனோ, புரிய வைக் கிறேனோ அதை புரிந்து கொண்டு துக்கம் நீங்கி விடுவதற்கான புருஷôர்த்தம் – முயற்சி மட்டும் செய்யுங்கள். உங்களுடையதே துக்கத்தை அழிப்பதற்கான அறிவுரை நான் அளிக்கிறேன். அதை தாரணை செய்து கொள்ளுங் கள். ஏனெனில் அது உங்களுடைய பொருள் தானே. ஆனால் நிறைய பேரோ பாவம் எப்பேர்ப் பட்ட காரணம் கூறுகிறார்கள் என்றால் ஏதோ அவர்கள் பகவான் மீது கருணை காட்டுவது போல கூறுகிறார்கள். ஒரு சிலர் பிறகு நேரம் கிடைத்து விட்டால் செய்து விடுவோம் என்பார்கள். அடே, சகோதரரே உணவூட்டுவது, பருக செய்வது – இது போன்ற இதே விஷயங் களில், அதே கர்மத்தினால் அமைக்கப்பட்ட கணக்குகளியே நீங்கள் குழம்பி உள்ளீர்கள். அதிலேயே துக்கம் அடைந்துள்ளீர்கள். ஒரு பக்கம் துக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்று கூறுகிறீர்கள். மேலும் இன்னொரு பக்கம் சுயம் தந்தை இந்த எல்லா துக்கங்களிலிருந்தும் விடுபடுவதற்கான வழியை புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் பாருங்கள் – எவரொரு வருடைய புத்தியிலும் பதிவது கடினமாக இருக்கிறது. இதே போல மாயை என்று இந்த 5 விகாரங்களுக்கு கூறப்படுகிறது. ஆனால் பிறகு பாவம் மனிதர்கள் பணம் செல்வத்தை மாயை என்று நினைத்து கொண்டு விடுகிறார்கள். ஒரு சிலர் பிறகு சரீரத்தை கூட மாயை என்று கூறி விடுகிறார்கள். அதிலிருந்து தப்பிப்பதற்கான உபாயங்களை செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் உங்கள் துக்கத்திற்கான காரணம் வேறு ஆகும் என்று தந்தை கூறுகிறார். இந்த இயற்கையோ எனது படைப்பு ஆகும். எது அனாதியோ அது ஒன்றும் துக்கத்தின் காரணம் கிடையாது. உங்களுக்குள் (எக்ஸ்ட்ரா) கூடுதலாக வேறு ஏதோ பொருள் வந்துள்ளது. அது தான் துக்கத்திற்கு காரணமாகும். அதற்குத் தான் 5 விகாரம் (மாயை) என்று கூறப் படுகிறது. விகாரம் ஒன்றும் சரீரம் கிடையாது. உலகம் விகாரம் கிடையாது. பணம், செல்வம் விகாரம் கிடையாது. விகாரம் என்பது ஒரு தனி பொருள். அது வந்ததினால் இந்த எல்லா பொருட்களும் துக்கத்தின் காரணமாக அமைந்து விட்டுள்ளது. இல்லையென்றால் இந்த அனைத்து பொருட்களும் ஆத்மாவின் சுகத்திற்கான காரணம் ஆகும். அதற்காக இந்த செல்வம், பொருட்கள் ஆகிய அனைத்தும் சுகத்தின் காரணங்கள் ஆகும். ஆனால் இந்த அனைத்து விஷயங்களின் முழுமையான ஞானம் இல்லாத காரணத்தினால் இந்த எல்லா பொருட்களும் துக்கத்தில் வந்து விட்டுள்ளன. நான் இந்த அனாதி படைப்பை படைத்துள்ளேன் – இது ஏதோ துக்கத்தின் காரணம் என்பது கூட கிடையாது. இல்லை, துக்கத்தின் காரணம் நீங்கள் ஆகி விட்டுள்ளீர்கள். உங்களுக்குள் வேறு ஏதோ தனியான பொருள் வந்து விட்டுள்ளது. அந்த தனி பொருளாவது – இந்த மாயை 5 விகாரங்கள் இப்பொழுது அதைத் தான் நீங்கள் வெளியேற்ற வேண்டும். மனிதர்கள் பிறகு இவை அனைத்தையுமே பகவான் கொடுத்துள்ளார் என்று கூறி விடுகிறார்கள். ஒரு வேளை பகவான் கொடுத்திருந்தார் என்றால் அவர் சுகத்தின் பொருட்களை கொடுத்திருக்கக் கூடும் அல்லவா? இதில் நீங்கள் விகாரத்தை போட்டு இந்த எல்லா பொருட்களையும் கெடுத்து விட்டுள்ளீர்கள். எனவே இந்த விகாரங்களை நீங்கள் நீக்கி விட்டீர்கள் என்றால் சதா காலத்திற்கு சுகமுடையவர்களாக ஆகி விடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். இந்த விஷயங்களும் புரிந்து கொள்வதற்கானது ஆகும். இதற்காக கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டி வரும். துக்கங்களை நாசம் செய்வதற்கான விதியை கற்றுக் கொள்ள வேண்டி இருக்கும். இதற்காகத் தான் அடிக்கடி வாருங்கள் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் என்று தந்தை கூறுகிறார். ஆனால் அப்படியும் கிடையாது – இங்கிருந்து கேட்டீர்கள் மேலும் வெளியில் சென்ற உடனேயே விஷயங்கள் முடிந்து விட்டது என்பதல்ல. ஒரு சிலர் பிறகு இதுவோ பெரியவர்கள் அல்லது முதியவர்களின் வேலை என்பார்கள். என்ன வாழ்க்கையை அமைத்துக் கொள்வது – இது முதியவர்களுக்குத் தான் அவசியமா என்ன? யார் தவறான – தலைகீழான ஏணியில் ஏறி விட்டு பிறகு பார்த்த பின் கீழே இறங்குகிறார்களோ, அவர்கள் தான் முதியவர்கள். அதை விட ஏன் ஏணிப்படியில் ஏறுவதற்கு முன்பேயே பாதுகாப்பாக நாம் வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்று சிந்தித்து செயல்படக் கூடாது. இதற்காக அவர்களுக்கு இந்த ஆலோசனை தருகிறோம் – இந்த விஷயங்களை புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் இருக்கும் துக்கத்திற்கான வேர் அல்லது துக்கத்திற்கான காரணங்களை நீக்குவதற் கான முழுக்க முழுக்க முயற்சி செய்ய வேண்டும்.

பகவான் தந்தையோ யார் அனைவருக்கும் தந்தையோ, அவர் மீது நமக்கு எந்த உரிமை இருக்கிறதோ அதையும் புரிந்து கொள்ள வேண்டும் மற்றும் அந்த உரிமையை எடுக்க வேண்டும். வெறுமனே அவரை தந்தை என்று மட்டும் கூறி விட்டால் போதுமா – ஆனால் அவர் மூலமாக நாம் என்ன பிராப்தி பெற வேண்டும் என்பதை கூட யாராவது வந்து கேட்க வேண்டும். மற்றும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் எல்லாருக்கும் முன் வந்து கூறி கொண்டு தான் இருப்போம். இதற்கு முன்பு கூட அழைப்பிதழ் மற்றும் செய்தியை கொடுத்துக் கொண்டு தான் இருந்திருக்கிறோம். பிறகும் கோடியில் ஒருவர் விழிப்படைகிறார். இதற்கு முன்பும் இவ்வாறே நடந்துள்ளது. அதனால் தான் கோடியில் யாராவது யாரோ சிலர் என்னை அறிந்திருக்கிறார் என்று சுயம் பகவான் கூறி உள்ளார். எனவே இங்கு வந்து இந்த விஷயங் களை புரிந்து கொண்டு கொஞ்சம் தாரணை செய்வதற்கான விஷயங்களை பேசுங்கள். ஒரே நாளில் இந்த எல்லா விஷயங்களையும் புரிய வைக்க முடியாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

வரதானம்:-

பிராமண வாழ்க்கையின் ஆனந்தம் ஜீவன் முக்த் ஸ்திதியில் இருக்கிறது. யாருக்கு தங்களது பூஜைக்குரிய சொரூபத்தின் நினைவு எப்பொழுதும் இருக்கிறதோ, அவர்களது கண்கள் தந்தையைத் தவிர வேறு எங்கும் மூழ்கிப் போக முடியாது. பூஜைக்குரிய ஆத்மாக்களுக்கு முன்னால் சுயம் அனைத்து மனிதர்கள் மற்றும் சாதனங்கள் தலை வணங்கி விடுகிறார்கள். பூஜைக்குரியவர்கள் எவரொருவருக்கு பின்னாலும் ஆகர்ஷிக்கப்பட மாட்டார்கள். தேகம், சம்பந்தம், பொருட்கள் மற்றும் சம்ஸ்காரங்களில் கூட அவர்களுடைய மனம் புத்தி அடி பணிந்து போகாது. அவர்கள் ஒரு பொழுதும் எந்தவொரு பந்தனத்திலும் கட்டுப்பட்டு இருக்க மாட்டார்கள். எப்பொழுதும் ஜீவன் முக்த் நிலையை அனுபவம் செய்வார்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top