10 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
9 June 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! ஞானக்கடலான தந்தையின் ஞான மழை நம் மீது பொழிந்து கொண்டிருக்கிறது, அதன் மூலம் நாம் தூய்மையடைந்து நம்முடைய பெரிய வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்ற போதையிலேயே எப்போதும் இருங்கள்.
கேள்வி: -
குழந்தைகளாகிய உங்களுடைய நிச்சயம் எந்த ஆதாரத்தில் இன்னும் அதிகமாக உறுதியாகிக் கொண்டே போகும்?
பதில்:-
உலகில் எந்த அளவு கலவரங்கள் அதிகரிக்குமோ, உங்களின் தெய்வீக மரத்தின் வளர்ச்சி எந்த அளவு வளர்ச்சியடையுமோ அந்த அளவு பழைய உலகத்திலிருந்து மனம் விடுபட்டு போகும் மேலும் உங்களுடைய நிச்சயம் உறுதியாகிக் கொண்டே போகும். விரிவான சேவை நடந்து கொண்டு இருக்கும், தாரணையின் மீது கவனம் கொடுத்தபடி சென்றீர்கள் என்றால் புத்தியின் ஆன்மீகத் தன்மை அதிகரித்தபடி செல்லும். எல்லையற்ற குஷியில் இருப்பீர்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
ஓம் சாந்தி. சிவபாபாவை நினைவு செய்யுங்கள் எனக் குழந்தைகளுக்கு தினம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதில்லை. நாம் சிவபாபாவின் குழந்தைகள் எனக் குழந்தைகளுக்குத் தெரியும். சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது. சிவபாபா நமக்கு இவர் மூலமாகக் கற்பிக்கிறார், இது ஞானக்கடலின் ஞான மழையாகும். ஞானக்கடலின் ஞான மழை இப்போது நம் மீது பொழிந்து கொண்டிருக்கிறது என்பது குழந்தைகளின் புத்தியில் உள்ளது. யார் வந்து பிராமணர் ஆகின்றனரோ அவர்கள் மீது நான் ஞான மழையைப் பொழிகிறேன், குழந்தைகளின் முன்னால் இருக்கிறேன். இப்போது குழந்தைகள் என் முன்னால் அமர்ந்திருக்கின்றனர். பாபா அடிக்கடி முன்னால் இருப்பதன் போதையை ஏற்றுகிறார். மாயை பிறகு போதையை இறக்கி விடுகிறது. சிலருடையதை முழுமையாக இறக்கி விடுகிறது, சிலருடையதை குறைவாக இறக்கி விடுகிறது. குழந்தைகளுக்குத் தெரியும் – நாம் புத்துணர்ச்சியடைவதற்காகக் கடலிடம் வந்திருக்கிறோம் அதாவது முரளியின் விஷயங்களை (ஞானக் கருத்துகளை) தாரணை செய்து வழிமுறைக்களைப் பெறுவதற்காக வந்துள்ளோம். நாம் அவருக்கு முன்னால் அமர்ந்திருக் கிறோம். இந்த ஞானக்கடலின் மழை ஒரு முறைதான் பொழிகிறது. தந்தை வருவதே தூய்மை யற்றவர்களைத் தூய்மையாக்கு வதற்காக. மகிமையும் அந்த மாதிரியாகச் செய்கின்றனர் – ஓ பதித பாவனா. .(தூய்மையற்றவர் களை தூய்மையாக்குபவரே வாருங்கள்) என மகிமையும் செய்கின்றோம் . சத்யுகத்தில் இப்படி அழைக்க மாட்டார்கள். அங்கே ஞானக்கடலின் ஞான மழையினால் தூய்மையடைந்தவர்களாக இருப்பார்கள், ஞானத்துடன் கூடவே பிறகு வைராக்கியமும் உள்ளது. எந்த விஷயத்தின் வைராக்கியம்? பழைய தூய்மையற்ற உலகத்தின் மீது புத்தியால் வைராக்கியம் வருகிறது. இப்போது நாம் புதிய உலகத்திற்குச் செல்கிறோம் எனக் குழந்தைகள் புத்தி மூலம் தெரிந்திருக்கின்றனர். பழைய உலகத்தை விட்டுவிட வேண்டும் – இதற்கு வைராக்கியம் என்ற வார்த்தையைச் சொல்லி விட்டனர். பாபா புதிய வீட்டை உருவாக்குகிறார்கள் என்றால் பழைய வீட்டின் மீது புத்தியின் ஈடுபாடு நீங்கி புதியதின் மீது ஏற்படுவது போல. பழையது அழிந்து விட்டால் நாம் புதிய வீட்டிற்குச் செல்லலாம் எனப் புரிந்து கொள்கின்றனர். முதன் முதலில் நாம் பிரியதர்ஷனுடன் வீட்டிற்குச் செல்வோம். இது தாய் வீடு, இது சிறியது, அது பெரிய பாபாவின் வீடு உயர்ந்த வீடாகும். அது அனைத்து ஆத்மாக்களின் வீடு என நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது, வேறு யாருடைய புத்தியிலும் இல்லை. முன்னர் இருள் சுழ்ந்து இருந்தது, இப்போது வெளிச்சம் இருக்கிறது. ஞானத்தை அனைவருமே ஏற்க மாட்டார்கள் என்பதையும் கூடப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் வீட்டுக்கு அனைவருமே கண்டிப் பாகச் செல்வோம். நாம் இப்போது நம்முடைய வீட்டுக்குச் சென்று கொண்டி ருக்கிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இருக்கிறது. ஸ்ரீமத்படி தகுதியானவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறோம். சொர்க்கத்திற்குத் தகுதி வாய்ந்தவர்களாக ஆக வேண்டும். ஒன்று – என்னை நினைவு செய்தீர்கள் என்றால் பாவ கர்மங்கள் அழியும், மற்றொன்று – சக்கரத்தை சுற்றுங்கள். சிருஷ்டி சக்கரம் எப்படிச் சுற்றுகிறது, இதன் ஆயுள் எவ்வளவு, யார் எப்போது வருகின்றனர் – இவையனைத்தையும் தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். மனிதர்கள் 84 லட்சம் பிறவிகள் எடுப்பார்கள் எனச் சொல்கின்றனர், அனைவருமே எடுக் கிறார்களா என்ன? 84 பிறவிகள் எடுக்கிறோம் அதற்கும் கணக்கு உள்ளது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். 84 பிறவிகள் கூட அனைவருமே எடுக்க மாட்டார்கள். ஆரம்பத்திலிருந்து மறுபிறவிகளில் வந்தபடி இருப்பார்கள். இறுதியில் சிலருடையது ஒன்றிரண்டு பிறவிகள் கூட இருக்கும். முதன் முதலாக யார் வருகின்றனரோ அவர்கள் 84 பிறவிகள் எடுப்பார்கள். உதாரணத்திற்கு இந்த இலட்சுமி-நாராயணரைப் போல. மனிதர்கள் இவர்களின் கோவில்களுக்குச் செல்கின்றனர், ஆனால் இவர்களைப் பற்றி எதுவும் தெரியாது. பகவான் பகவதியின் தரிசனம் காணச் செல்கிறோம் என்று மட்டும் சொல்வார்கள். ஆனால் இவர்களின் இராஜ்யம் எப்படி ஸ்தாபனை ஆனது என்பது பற்றி எதுவுமே தெரியாது. யாருடைய பூஜையைச் செய்கின்றனரோ அவர் களுடைய தொழிலைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கவில்லை என்றால் அந்தப் பூஜை எதற்கு உதவும்? ஆகையால் இது குருட்டு நம்பிக்கை எனப்படுகிறது. ஜபம், தவம், தீர்த்த யாத்திரை முதலானவைகளைச் செய்கின்றனர், இதன் மூலம் பகவானை அடையக் கூடிய வழி கிடைக்கும் எனப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் இதன் முலம் யாருக்கும் பகவான் கிடைப்பதில்லை. இங்கும் கூட யார் யாரோ வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள், ஜகதம்பாவின் கோவில் களுக்குத் தரிசனம் காண வருகிறோம் எனப் புரிந்து கொள்கின்றனர். இவர்களுடைய புத்தியில் எதுவும் பதியவில்லை எனப் பாபா புரிந்து கொள்வார். உங்களுடைய மன விருப்பங்கள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன அல்லவா. ஜகதம்பா வின் நடிப்புத் துல்லியமாக நடந்து கொண்டிருக்கிறது. ஜகதம்பாவின் நடிப்பு உயர்ந்ததாகும். முதலில் லட்சுமி பிறகு நாராயணன். இது உங்களுடைய இறுதிப் பிறவியாகும். கணக்கு வழக்கு இங்கிருந்து முடிவடைகிறது. கர்மங்களின் விளைவுகளை அனுபவித்து விட்டு விடுபட வேண்டும், மேலும் தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். உண்மையில் குழந்தைகள் ஒரு தந்தையைத்தான் நினைவு செய்ய வேண்டும். தேகதாரிகளை நினைவு செய்தால் அந்த நேரம் வீணாகிப் போகும். சிலர் நிரந்தரமாக நினைவு செய்வார்கள் என்பது நடக்காத ஒன்று. நிரந்தரமாக நினைவு செய்யக் கூடிய பொருள் எதுவும் கிடையாது. மனைவி கணவனைக் கூட நிரந்தரமாக நினைவு செய்ய முடியாது. உணவு சமைப்பார், குழந்தைகளைக் கவனித்துக் கொள்வார், அப்போது கண்டிப்பாக நினைவு வராது. இங்கேயோ நீங்கள் நிரந்தரமாக நினைவு செய்யும் பயிற்சியைச் செய்ய வேண்டும். கடைசியில் ஒருவரு டைய நினைவு மட்டுமே இருக்க வேண்டும், மிகப் பெரிய பரீட்சையாகும். 8 ரத்தினங்களின் மகிமையும் உள்ளது. யாருக்காவது கிரகச்சாரம் (கிரகத் தோசம்) பிடித்தது என்றால் 8 ரத்தினங்களாலான மோதிரத்தை அணிந்து கொள்கின்றனர். கடைசியில் ஒரு தந்தையின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும், அதுவும் புத்தியின் உள்புறம் முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும், வேறு யாருடைய நினைவும் வரக் கூடாது. அப்போது தான் மாலையின் மணியாக ஆக முடியும். நவ (ஒன்பது) ரத்தினங்களின் மகிமை மிகவும் பெரியதாகும். ஆக இப்போது நிரந்தரமாக நினைவு செய்யக் கூடிய பயிற்சியைச் செய்ய வேண்டும். இப்போது இரண்டு மூன்று மணி நேரம் கூட நினைவு செய்வது கடினமாக உள்ளது. எந்த அளவு உலகத்தில் கலவரங்கள் பெருகுமோ அந்த அளவு உங்களுக்குள் நிச்சயம் (நம்பிக்கை) பெருகிக் கொண்டே போகும், பழைய உலகத்திலிருந்து மனம் விலகியபடி செல்லும். பலர் இறந்தும் போவார்கள், புத்தியும் சொல்கிறது – மாயை மிகப் பழைய எதிரி யாகும். எதிரி இல்லாத இடமே கிடையாது.
குழந்தைகளாகிய நீங்கள் கீழானவரிலிருந்து சுத்தமானவராக ஆகிக் கொண்டிரு கிறீர்கள். தூய்மை யற்றவர்களின் கையால் சமைத்ததை நாம் சாப்பிட முடியாது என உங்களுக்கு ஞானம் உள்ளது. எண்ணம் போல் அன்னம் எனப் பாடவும் படுகிறது. யார் கெட்ட பொருளை வாங்குகின்றனரோ, யார் சமைக்கிறாரோ, யார் சாப்பிடுகின்றனரோ அவர்கள் அனைவரின் மீதும் பாவம் ஏற்பட்டு விடும். தந்தை அனைத்து வி‘யங்ளையுமே நல்ல விதமாகப் புரிய வைக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் இங்கிருந்து புத்துணர்வு அடைந்து செல்கிறீர்கள். முழு நாளும் சிருஷ்டி சக்கரம் புத்தியில் சுற்றியபடி இருக்க வேண்டும், மேலும் தம்முடைய வீடு நினைவில் இருக்க வேண்டும். இங்கிருந்து நீங்கள் உங்களுடைய லௌகிக வீட்டிற்குச் செல்கிறீர்கள் என்றால் மன நிலையில் வித்தியாசம் ஏற்பட்டு விடுகிறது, ஏனென்றால் தொடர்பு அப்படிப்பட்டதாக ஆகி விடுகிறது. இங்கே அமர்ந்திருந்தாலும் கூடச் சிலருடைய புத்தியின் தொடர்பு வெளியில் சென்று விடுகிறது, ஆகையால் முழுமை யாகத் தாரணை செய்ய முடிவதில்லை. ஆத்மாக்களாகிய உங்களுக்கு எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அமர்ந்து புரிய வைக்கிறார். நீங்கள் ஆத்மாக்களாக இருக்கிறீர்கள், நீங்கள் இந்தச் சரீரத்தின் மூலமாகக் காரியம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நாம் பாபாவிடமிருந்து உயர்ந்த வழியைப் (ஸ்ரீமத்) பெற்று நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை அடைந்து கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். எவ்வளவு குஷி இருக்க வேண்டும். அதீந்திரிய (இந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட) சுகத்தைப் பற்றிக் கோபி வல்லபரின் குழந்தைகளிடம் கேளுங்கள் என்று பாடலும் உள்ளது. எந்த அளவு அதிகமாக நிலை உருவாகுமோ மற்றும் வளர்ச்சியை அடைவீர்களோ அந்த அளவு குஷியின் எல்லையும் அதிகரித்துக் கொண்டே போகும், மேலும் நிச்சயமும் (நம்பிக்கையும்) கூட உறுதியாகிக் கொண்டே போகும். தாரணையின் மீது கவனம் வைத்துக் கொண்டே இருந்தால் உங்களுடைய புத்தியில் ஊக்கம் அதிகரித்தபடி இருக்கும். இன்னும் போகப் போக உங்களின் விரிவான சேவை அதிகரித்த படி செல்லும். யுக்திகளை வெளிப்படுத்த வேண்டும், அதன் மூலம் யாருக்கு வேண்டு மென்றாலும் நன்றாக அம்பு தைக்கும் விதமாகப் புரிய வேண்டும். முக்கியமானது தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதாகும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தையிடமிருந்து எல்லைக்கப் பாற்பட்ட ஆஸ்தி கிடைக்கிறது. ஞானக்கடலாகவும் அவர் இருக்கிறார். ஞானத்தின் மூலமே மனிதர்கள் தூய்மையடைகின்றனர். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குபவர் அந்தத் தந்தையே ஆவார். சர்வவியாபி என்ற விஷயத்தைக் கொண்டு பக்தி கூட நடக்காது என்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் நீங்கள் எடுங்கள். இந்த விஷயத்தை நல்ல விதமாகப் புரிய வைக்க வேண்டும். இவர்களின் ஞானத்தின் மூலம் வினாசம் ஏற்படும் என அந்த மனிதர்கள் சொல்கின்றனர். இந்த ருத்ர ஞான யக்ஞத்திலிருந்து வினாசத்தின் ஜுவாலை வெளிப்பட்டுள்ளது என நீங்களும் சொல்கிறீர்கள். அவர்களூம் கூட உண்மையைச் சொல் கிறாகள். ஏதாவது விஷயத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் வினாசம்தான் ஏற்படும், வேறென்ன? கல்பத்திற்கு முன்பும் கூட இந்த வினாசம் ஏற்பட்டது. பகவானுடைய மகா வாக்கியம் – ருத்ர ஞான யக்ஞத்தில் இவை யனைத்தும் ஸ்வாஹா (அர்ப்பணம்) ஆகப் போகின்றன. இவர்களின் ஞானமே இப்படித்தான் எனப் புரிந்து கொள்கின்றனர், அதனால் எதிர்க்கின்றனர். நிறையப் பக்தி செய்வதன் மூலம் பகவான் கிடைப்பார் எனப் புரிந்து கொள் கின்றனர். யார் பக்தி நிறையச் செய்தனரோ அவர்களுக்குத்தான் பகவான் கிடைத்திருக்கிறார் என நாமும் சொல்கிறோம். ஆனால் இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு மனிதர் களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. கல்பத்திற்கு முன்பும் கூடக் குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் உதவியின் மூலம் நரகத்தைச் சொர்க்கமாக ஆக்கியிருந்தீர்கள். ஆகக் கண்டிப்பாக நரகத்தின் வினாசமும் கூட நடந்திருக்கும். எப்போது நரகம் வினாசம் ஆகுமோ அப்போது சொர்க்கம் ஸ்தாபனை ஆகும். பாரதம் தூய்மையாக இருந்தது என்பதையும் கூட நீங்கள் புரிய வைக்க முடியும். சொர்க்கம் இருந்தது என்பதை எந்தத் தர்மத்தவரும் கூடச் சொல்வார்கள். பழமையான என்றால் அனைத்தையும் விடப் பழையது. அது சொர்க்கமாகத்தான் இருக்கும் அல்லவா, அது பழையதாகி விட்டது, அது மீண்டும் புதியதாக ஆக வேண்டும். இது குழந்தை களாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இந்தத் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, இப்போது இல்லை. மீண்டும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனையைச் செய்வித்துக் கொண்டிருக்கிறார். யாருடைய உதவியின் மூலம்? அவர் அனைவரின் நிராகாரமான பாபுஜி ஆவார். அனைத்து ஆத்மாக்களின் தந்தை. இந்த விஷயங்களை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் எவ்வளவு சாதாரணமாக இருக்கிறீர்கள். நானும் கூட ஏழைப்பங்காளனாக இருக்கிறேன், நீங்கள் ஏழை அல்லவா. உங்களிடம் என்ன இருக்கிறது? நீங்கள் அனைத்தையும் பாரதத்தின் மீது ஸ்வாஹா செய்திருக்கிறீர்கள், இராவணனுடன் உங்களுடையது எவ்வளவு பெரிய யுத்தமாக உள்ளது. சக்தி சேனை அல்லவா. வந்தே மாதரம் எனப் பாடப்பட்டுள்ளது. தூய்மையற்றவர்கள் தூய்மையானவர் களை வந்தனம் செய்கின்றனர். எந்த மாதா? அவர்கள் பூமியின் மாதா எனப் புரிந்து கொள் கின்றனர். ஆனால் இது பூமியின் மீது வாழக்கூடியவர்களின் விஷயமாகும். ஜகத் அம்பா இருக்கிறார் என்றால் கண்டிப்பாகக் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்தத் தில்வாலா கோவில் நினைவுச்சின்னமாக உருவாகியுள்ளது. குமாரிகள் மற்றும் அதர் குமாரிகளும் உள்ளனர். இவர்களை மாதா எனவும் சொல்லி விடுகின்றனர். பாபா நாங்கள் பி.கு. க்கள் என நீங்கள் சொல்கிறீர்கள். எங்களை மாதா எனச் சொல்லாமல் மகள் எனச் சொல்லுங்கள், நாங்கள் குமாரிகள் ஆவோம். எவ்வளவு ஆழமான புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களாக உள்ளன. ஆனால் புரிந்து கொள்ள முடிவதில்லை. பழைய, பிறவி பிறவிகளின் உணர்வு அமர்ந்திரு கிறது, அது நீங்கவே மாட்டேன் என்கிறது. பாபா நம் முன்னால் அமர்ந்திருக்கிறார் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. ஆத்மாக்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்தச் சரீரத்தில் தந்தையின் பிரவேசம் ஆகியுள்ளது. பாபா வந்து அலௌகிகமான, தெய்வீக மான காரியத்தைச் செய்கிறார். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்காகப் படிப்பிக்கிறார். முழுமையான நினைவு இருக்க வேண்டும். நம்மைப் பதித பாவன சிவபாபா படிப்பிக்கிறார். பதித பாவனர் அனைவரை விடவும் உயர்ந்தவர், பிறகு தந்தையாக, ஆசிரியராகவும் இருக்கிறார். முதன் முதலாகப் பதித பாவனர் என்ற வார்த்தை தான் வர வேண்டும். ஓ இறைத் தந்தையே! வாருங்கள் என அவரை நினைவு செய்கின்றனர். வந்து மீண்டும் எங்களுக்கு இராஜயோகம் கற்பியுங்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஞான, யோகத்தைக் கற்பித்துக் கொண்டி ருக்கிறேன் எனத் தந்தையும் சொல்கிறார், இதில் புத்தகம் முதலான வி‘யம் எதுவுமில்லை. அவர்கள் இந்தப் பெயரை வைத்து விட்டனர். இப்போது தந்தை உங்களுக்குத் தகுதி மிக்கவர்களாக ஆகக்கூடிய படிப்பை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தினமும் புதிய விஷயங் கள் கிடைக்கின்றன. மற்ற கீதைகள், கிரந்தங்கள் முதலானவைகளை உருவாக்குகின்றனர், அவற்றில் எதையும் சேர்ப்பதோ குறைப்பதோ கிடையாது, அதையே தான் சொல்கின்றனர். இங்கே சேர்க்கவும் படுகிறது, குறைக்கவும் படுகிறது. தினமும் புதிய புதிய பாய்ண்ட்கள் (விஷயங்கள்) கிடைக்கின்றன. ஞானம் மிகவும் அதிசயமானதாகும், அது வேறுஎந்த சாஸ்திரங் களிலும் கிடையாது. காமம் மிகப் பெரிய எதிரி ஆகும். பகவானுடைய மகா வாக்கியம் – தேகத்துடன் சேர்த்து அனைத்தையும் மறந்து விடுங்கள், ஒருவரை நினைவு செய்யுங்கள். நான் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் திரும்ப அழைத்துச் செல்வேன். நான் அகால மூர்த்தி, காலனுக்கும் காலன் ஆவேன். நான் குழந்தைகள் அனைவரையும் அழைத்துச் செல்ல வந்துள்ளேன் எனும்போது உங்களுக்குக் குஷி ஏற்பட வேண்டும் அல்லவா.
இப்போது நாம் வீட்டிற்குச் செல்கிறோம் என்பதை நீங்கள் அறிகிறீர்கள். விரைவில் புத்திசாலியாகி, பாபாவிடமிருந்து ஆஸ்தியை பெற்றுக் கொள்வோம். அதுவரை போர் ஏற்படாமல் இருக்க வேண்டும். பாபா சொல்கிறார் – நான் எதுவும் செய்ய முடியாது. முதலில் ஒத்திகை நடக்கும். இப்போது இராஜாக்கள் முதலானவர்கள் கூட வரவில்லை, இராஜஸ்தான் குறித்தும் கூடப் புரிய வைக்க முடியும். இராஜஸ்தான் என்ற பெயர் ஏன் ஏற்பட்டது எனத் தெரியுமா? எனக் கேளுங்கள். பாரதத்தில் இலட்சுமி – நாராயணரின் இராஜ்யம் இருந்தது அல்லவா? மீண்டும் அந்த இராஜஸ்தான் ஏற்பட வேண்டும், அது இப்போது மீண்டும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நமக்குத் தெரியும், ஆனால் புத்தியில் அது பதியும்போது குஷியின் அளவு அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் இந்தத் தேவதைகளின் கோவில்களைக் கட்டுகின்றனர். பாரதத்தில் எவ்வளவு செல்வம் இருந்தது. நாங்கள் இதனை மீண்டும் தெய்வீக இராஜஸ் தானமாக ஆக்குகிறோம். இந்த விஷயங்களை வந்து புரிந்து கொள்ளுங்கள். புரிய வைப்பதற் கான ஊக்கமும் இருக்க வேண்டும். இதுவும் கூடச் செமினார் (கருத்தரங்கம்) அல்லவா. எப்படிச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் பாபா புரிய வைத்திருக்கிறார், குமாரிகள், மாதர்கள், கோபர்கள் அனைவரும் ஒன்றாகக் கேட்கின்றனர். உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் ஒரு பகவான் ஆவார், கிருஷ்ணர் அல்ல. எனவே இராஜஸ்தான் பற்றி நீங்கள் புரிய வைக்கலாம். நிச்சயமாக இராஜஸ்தானம் இருந்தது, அவர்களுடைய கோவில்கள் உருவாகியிருந்தன, மீண்டும் நாங்கள் (இராஜஸ்தானத்தை) உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். தந்தை எங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் முயற்சி செய்யுங்கள் – அரைக் கல்பத்திற்காக. பிறகு ஒரு போதும் அழ வேண்டியிருக்காது. நாங்கள் இராமனின் ஸ்ரீமத் (உயர்ந்த வழி) படி இராவணன் மீது வெற்றி அடைந்து கொண்டிருக்கிறோம். வார்த்தையைக் கேட்டார்கள் என்றால் உள்ளுக் குள் தாக்கம் ஏற்படும். யாருக்கு அம்பு தைக்குமோ அவர்கள் புரிந்து கொள்வதற்காக வந்து விடுவார்கள். இந்த எல்லைக்கப்பாற்பட்ட செமினார் (வகுப்பு) பாபா தினம்தோறும் செய்கிறார். இது ஆத்மாக்களின் பரமாத்மாவுடனான செமினார் ஆகும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய்க் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்குத் தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. வினைபயனிலிருந்து விடுபடுவதற்காக ஒரு தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். தேகதாரியின் நினைவினால் நேரத்தை வீணாக்கக் கூடாது. புத்தியின் உள்புறத்தை மிகவும் தெளிவாக வைக்க வேண்டும்.
2. மிகவும் சுத்தமான உணவை சாப்பிட வேண்டும். எண்ணம் போல் அன்னம், ஆகையால் எந்தத் தூய்மையற்றவரின் கையால் சமைத்ததையும் உண்ணக் கூடாது. புத்தியை சுத்தமாக ஆக்க வேண்டும்.
வரதானம்:-
சேவாதாரி ஆத்மாக்களின் நெற்றியில் வெற்றித் திலகம் இடப்பட்டிருந்தாலும், எந்த இடத்தில் சேவை செய்ய வேண்டுமோ அந்த இடத்தில் முன் கூட்டியே சர்ச் லைட்டின் வெளிச்சம் கொடுக்க வேண்டும். நினைவு என்ற சர்ச் லைட் மூலம் அநேக ஆத்மாக்கள் எளிதாக நெருக்கத்தில் வந்து விடும் அளவிற்கு வாயுமண்டலம் உருவாகி விடும். பிறகு குறைவான நேரத்தில் வெற்றி ஆயிரம் மடங்கு கிடைக்கும். நான் வெற்றி இரத்தினம், ஆகையால் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி நிறைந்திருக்கிறது என்ற திட சங்கல்பம் செய்ய வேண்டும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!