18 May 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

17 May 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் உண்மையிலும் உண்மையான நாயகி ஆகி ஒரே நாயகனாகிய என்னை நினைவு செய்வீர்களானால் உங்கள் ஆயுள் அதிகரித்து விடும். யோகம் மற்றும் படிப்பின் மூலம் தான் நீங்கள் உயர்ந்த பதவி பெற முடியும்.

கேள்வி: -

பாரதத்தை சொர்க்கமாக மாற்றுவதற்கு பாபா குழந்தைகளிடம் எந்த ஓர் உதவியை வேண்டுகிறார்?

பதில்:-

குழந்தைகளே, எனக்கு தூய்மைக்கான உதவி வேண்டும். உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள் – நாங்கள் காம விகாரத்தை எட்டி உதைத்து விட்டு, அவசியம் தூய்மையாக ஆவோம். அதிகாலை எழுந்து தனக்குத்தான் உரையாடுங்கள் – இனிமையான பாபா, நாங்கள் உங்களுக்கு உதவி புரிவதற்காகத் தயாராக உள்ளோம். நாங்கள் தூய்மையாகி பாரதத்தை அவசியம் தூய்மையாக மாற்றுவோம். நாங்கள் உங்கள் அறிவுரைப் படி நிச்சயமாக நடப்போம். எந்த ஒரு பாவ காரியத்தையும் செய்ய மாட்டோம். கனவில் கூட எண்ண வில்லை- நாங்கள் உலகின் எஜமானர் ஆவோம் என்று. பாபா, இது உங்களுடைய அற்புதம்.! தாங்கள் எங்களை எதிலிருந்து என்னவாக உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்!

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

உங்களை அழைப்பதற்கு மனம் விரும்புகிறது

ஓம் சாந்தி. செல்லக் குழந்தைகள் இதை அறிவார்கள், நாம் ஆத்மாக்கள் அந்த ஒரே ஒரு நாயகனாகிய தந்தைக்கு நாயகிகள். குழந்தைகள் அறிவார்கள், நாயகி-நாயகன் சம்மந்தம் எவ்வளவு சிறந்ததாக உள்ளது என்று ! அந்த உடல் சம்மந்தப்பட்ட நாயகிகள் சரீரத்தின் மீது பற்று வைத்த நாயகி ஆகிறார்கள். விகாரத்திற்காக அல்ல. குழந்தைகளுக்குத் தெரியும், ஏதாவது திருமணம் நடைபெறுகிறது என்றால் அவர்கள் ஆண்-பெண் (கணவன்- மனைவி) எனச் சொல்லிக் கொண்டாலும் அவர்களும் நாயகி-நாயகன் ஒருவரை ஒருவர் தூய்மை இழக்கச் செய்பவர்கள். முதலில் இருந்தே அவர்களுக்குத் தெரியும், அறிந்துள்ளனர், நாம் தூய்மையை இழந்து விடுவோம் என்று. இப்போது குழந்தைகள் நீங்கள் அனைத்து ஆத்மாக்களின் ஒரே ஒரு நாயகனுக்கு நாயகிகளாக ஆகியிருக்கிறீர்கள். அனைவரும் அந்த ஒருவரின் நாயகிகள். அனை வரும் பகவானின் பக்த பிரியதரிசினிகள். ஆனால் பக்தர்களுக்கு பகவான் பற்றித் தெரியாது. பகவானை அறிந்திராத காரணத்தால் எந்த ஒரு சக்தி முதலியவற்றையும் அவரிட மிருந்து பெற முடியாது. சாது-சந்நியாசிகள் முதலானோர் தூய்மையாக உள்ளனர் என்றால் அவர் களுக்கு ஏதேனும் அல்பகாலத்திற்குக் கிடைக்கிறது. நீங்களோ, ஒரு நாயகனை நினைவு செய் கிறீர்கள். அவர் மீது புத்தியோகம் ஈடுபடுத்தப் படுகின்றது. யார் தந்தையாகவும், ஆசிரிய ராகவும் இருக்கிறாரோ, அவர் பதீத-பாவனர் சர்வசக்திவானாக உள்ளார். அந்தத் தந்தையிடம் நீங்கள் யோகம் வைத்து சக்தி பெறுகிறீர்கள். உங்களுடைய ஞானமே தனிப்பட்டது. மாயா மீது வெற்றி கொள்வதற்காக சக்தி பெறுகிறீர்கள். அப்படி யார் உலகத்தின் எஜமானராக ஆக்குபவராகிய நாயகனோ, அவர் எவ்வளவு இனிமையானவர்! யார் தந்தையைத் தம்முடையவராக ஆக்கி யிருக்கின்றனரோ, அவர்கள் அறிவார்கள், எவ்வளவு நல்ல ஒரு நாயகன்! அவரை அரைக் கல்பமாக நினைவு செய்கிறோம். அந்த சரீர சம்மந்தமான நாயகி-நாயகன் ஒரு பிறவிக்கு மட்டுமே உள்ளனர். நீங்களோ அரைக்கல்பமாக நினைவு செய்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் தந்தையை அறிந்து கொண்டு விட்டீர்கள். அதனால் உங்களுக்கு மிகுந்த சக்தி கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஸ்ரீமத் படி நடந்து சொர்க்கத்தின் உயர்ந்ததிலும் உயர்வான எஜமானர் ஆகிறீர்கள். நாயகி ஆவது ஆத்மா, காரியத்தை ஆத்மா செய்கிறது – கர்மேந்திரியங்கள் மூலமாக. இப்போது குழந்தைகள் உங்களுக்கு பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெற வேண்டும். என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது- விஷத்தின் கொடுக்கல்-வாங்கலுக்காகக் கட்டப்படுகிற கங்கணத்தை பாபா வந்து இப்போது ரத்து செய்து விட்டார். பாபா சொல்கிறார், இந்த அனைத்து விஷயங்களையும் விட்டுவிட்டு இப்போது என்னை நினைவு செய்யுங்கள். சரீர சம்மந்தமான நாயகிக்கும் கூட ஒவ்வொரு சமயம் உண்ணும் போதும் அருந்தும் போதும், அமரும் போதும், எழும் போதும் நாயகனின் நினைவு இருக்கும் இல்லையா? அவர்களிடம் தீய நோக்கம் இருப்பதில்லை. விகாரத்தின் விஷயம் இல்லை. இப்போது நீங்கள் ஒருவரையே நினைவு செய்கிறீர்கள். நினைவின் முயற்சியின் அனுசாரம் நீங்கள் உங்களுடைய ஆயுளை அதிகரிக்க முடியும். யாராவது பிராமணர் சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள் – உங்கள் ஆயுள் 50 ஆண்டுகள் என்று ஆனால் பாபா சொல்கிறார், நீங்கள் இப்போது யோகபலத்தின் மூலம் தங்கள் ஆயுளை அதிகப்படுத்த முடியும். எவ்வளவு யோகத்தில் அதிகமாக இருக்கிறீர் களோ, அவ்வளவு ஆயுள் அதிகரிக்கும். பிறகு வருங்கால ஜென்ம-ஜென்மாந்தரமாக நீண்ட ஆயுள் உள்ளவர்களாக ஆகி விடுவீர்கள். யோகம் இல்லை யென்றால் தண்டனை பெற நேரிடும். பிறகு பதவியும் குறைந்து விடும். ஆனால் யோகம் மற்றும் படிப்பினால் அனைவருமே சுகமாக இருப்பார்கள், வித்தியாசம் அனைத்தும் பதவியில் உள்ளது இல்லையா? எவ்வளவு புருஷார்த்தமோ அவ்வளவு உயர்ந்த பதவி.! செல்வமோ நம்பர்வார் இருக்கும் இல்லையா? ஒருவரைப் போல் அனைவரும் செல்வந்தராக முடியாது. ஆக, பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளே, எவ்வளவு முடியுமோ, என் அறிவுரைப்படி நடந்து செல்லுங்கள். அரைக் கல்பம் நீங்கள் அசுர வழிப்படி நடக்கிறீர்கள். இதனால் உங்கள் ஆயுள் குறைந்து கொண்டே போய்விட்டது. எவ்வளவு தான் பெரிய மனிதராகவும் இருக்கலாம். இன்று பிறவி எடுத்தார். நாளை இறந்து விடுகிறார். தான-புண்ணியம் செய்வதால் பெரிய வீட்டில் ஜென்மம் கிடைக்கிறது இல்லையா? இப்போது பாபா உங்களுக்கு அழியாத ஞான இரத்தினங்களின் தானம் செய்து பையை நிரப்பிக் கொண்டிருக்கிறார். நீங்கள் எவ்வளவு செல்வந்தர்களாக ஆகிறீர்கள்! இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் தானம் எனச் சொல்லலாம், அல்லது ஆஸ்தி எனச் சொல்லலாம், பாபாவிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் பாபாவிடமிருந்து ஆஸ்தி பெறுகிறீர்கள் என்றால் நீங்கள் பிறகு மற்றவர்களுக்கு ஆஸ்தி பெறக் கூடிய வழி சொல்ல வேண்டும். நாம் பகவானுடைய குழந்தைகள் என்றால் நிச்சயமாக பகவான்-பகவதி பதவி கிடைக்க வேண்டும். பாரதத்தில் பாடப்படுகிறது – பகவதி லட்சுமி, பகவான் நாராயணன் என்று. புது உலகத்தில் காட்-காடெஸ் (பகவான்-பகவதி) தான் இராஜ்யம் செய்கின்றனர். ஏனென்றால் இறைவன் மூலமாகப் பதவி கிடைத்துள்ளது. ஆனால் பாபா புரிய வைக்கிறார், அவர்களை காட்-காடெஸ் எனச் சொல்வீர்களானால் இராஜா-இராணி எப்படியோ அப்படியே பிரஜைகளையும் கூட காட்-காடெஸ் எனச் சொல்ல வேண்டும். அதனால் தேவி-தேவதா எனச் சொல்லப்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், நாம் பாரதத்தை சொர்க்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். பரமபிதா பரமாத்மாவின் ஸ்ரீமத் மூலம் நாம் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக் கிறோம். பிறகு இராஜ்ய பாக்கியத்தைப் பெறுவோம். பரமாத்மா தான் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்கிறார். அதனால் நிச்சயமாக நரகத்தில் வர வேண்டும், அப்போது தான் நரகத்தை சொர்க்கமாக மாற்றுவார். யார் கல்பத்திற்கு முன்பு ஆகியிருந்தார்களோ, அவர்கள் தான் மீண்டும் ஆவார்கள். அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நம்பர்வார் முயற்சி செய்கின்றனர். தற்காலத்திலோ குழந்தைகள் தைரியம் வைத்து உறுதிமொழி தருகின்றனர்- பாபா, இன்ன குழந்தைக்கு அதிகம் அடி விழுகிறது, நான் அவரைக் காப்பாற்றுவதற்காக யுகல் ஆக்கிக் கொள்கிறேன். நல்லது, இதுவோ சரி தான். ஆனால் பிறகு ஞானத்தின் சக்தி வேண்டும். தாரணை வேண்டும். எவ்வளவு வாரிசு மற்றும் பிரஜைகளை உருவாக்குகிறீர்களோ, முள்ளை மலராக்கும் சேவை செய் கிறீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவி பெறுவீர்கள். எவ்வளவு கடின முயற்சி செய்ய வேண்டியுள்ளது! இது போல் அநேகர் வெளிநாடுகளிலும் கூட உள்ளனர். ஒருவருக்கொருவர் (துணைவர்) ஆகி இருக் கின்றனர். தூய்மையாக இருக்கின்றனர். பிறகு சொத்துகள் அனைத்தையும் மனைவிக்குக் கொடுத்து விடுகின்றனர். அல்லது தர்ம காரியத்திற்குக் கொடுத்து விடுகின்றனர். இப்போது குழந்தைகளாகிய உங்களுக்குப் பரமபிதா பரமாத்மா நாயகன் கிடைத்துள்ளார். அவர் உங்களை உலகத்தின் எஜமானர் ஆக்குகிறார் என்றால் அவருடைய நினைவு எவ்வளவு இருக்க வேண்டும்! அப்படிப்பட்ட தந்தையையோ அதிகம் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் தான் தந்தையை அறிவீர்கள். மற்ற சாது-சந்நியாசிகள் முதலானோர் தந்தையைப் பற்றி அறிய மாட்டார்கள். இங்கே தந்தை குழந்தைகளின் முன்னிலையில் அமர்ந்துள்ளார். இச்சமயம் சிலர் தூய்மையாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளாகிய உங்களுக்குப் பதீத-பாவனர் தந்தையிடம் இருந்து எந்தளவு கிடைக் கிறதோ, அந்த அளவு. அவர்களுக்கு தூய்மையின் பலம் கிடைக்க முடியாது – ஏனென்றால் அவர்கள் தந்தையைப் பற்றி அறிந்து கொள்ளவில்லை. ஆத்மாவே தான் பரமாத்மா அல்லது பிரம்மம் தான் பரமாத்மா – என்று இது போல் சொல்லி விடுகின்றனர். அநேக விதமான வழிமுறைகள் உள்ளன. இங்கே உங்கள் அனைவருக்கும் ஒரே (அத்வைத) பிரிவில்லாத வழிமுறை. மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கான வழிமுறை பாபாவின் மூலம் கிடைக்கிறது. நிச்சயமாக மனிதரில் இருந்து தேவதை ஆவதற்கு கால தாமதம் ஆவதில்லை. அழுக்காகி விட்ட மனிதர்களை வந்து தூய்மையாக்குகிறார். மகிமையோ உள்ளது இல்லையா? மற்றப்படி சாஸ்திரங்களை நிறைய கேட்டும் படித்தும் வந்துள்ளனர். ஆனால் அவற்றால் எந்த ஒரு பயனும் கிடைப்பதில்லை. இப்போது பாபா வந்துள்ளார் என்றால் அவருடைய உண்மையிலும் உண்மையான நாயகி ஆக வேண்டும். புத்தியோகம் வேறு எங்கும் அலையக் கூடாது. இல்லற விவகாரங்களில் வேண்டுமானால் இருங்கள்- ஆனால் தாமரை மலருக்குச் சமமாக இருக்க வேண்டும். பக்தி மார்க்கத்திலோ சிலர் அனுமானை, சிலர் கணேஷை, இன்னும் சிலர் யாரையோ வழிபட்டுக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் ஒன்றும் பகவான் கிடையாது. சிவபாபாவின் பெயர் கூட நினைவில் உள்ளது. ஆனால் புரிந்து கொள்வதில்லை. பரமாத்மாவைக் கல்லிலும் மண்ணிலும் இருப்பதாகச் சொல்லி விட்டனர். எல்லாமே நூல் சிக்கலாகி விட்டதுபோல குழப்பமாகி விட்டது. பாபாவைத் தவிர வேறு யாராலும் இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியாது. பகவான் யாருக்கும் கிடைக்க மாட்டார். சுயம் பகவானே சொல்கிறார், எப்போது பக்தி முடிவடைகிறதோ, அப்போது நான் வருவேன் என்று. அரைக்கல்பம் பக்தி மார்க்கம் நடைபெறுகிறது – பகல் மற்றும் இரவு. ஆரம்பத்திலும் கூட முதல்-முதலில் பிரவேசம் நடைபெற்ற போது (பிரம்மா பாபா) சுவர்களில் அப்படி-இப்படி சிறு குழந்தைகள் போல் சக்கரத்தை வரைந்து கொண்டே இருந்தார். எதுவும் பிடிபடவில்லை. நானும் நீங்களும் அனைவரும் சிறு குழந்தைகளாக இருந்தோம். பிறகு கொஞ்சம்-கொஞ்சமாக புத்தியில் வந்தது. இப்போது நீங்கள் படித்து சாமர்த்தியசாலி ஆகியிருக்கிறீர்கள் என்றால் முற்றிலும் எளிய முறையில் புரிய வைக்க முடியும். இவர்கள் மிகவும் பழைய குழந்தைகள், அதனால் நம்மை விட சாமர்த்தியசாலிகள் எனப் புரிந்து கொள்ளக் கூடாது. நாமோ இவ்வளவு படிக்க முடியாது என நினைக்கக் கூடாது. பாபா சொல்கிறார்-கடைசியில் வரக்கூடியவர்கள் மிகவும் முன்னேறிச் செல்ல முடியும். தாமதமாக வருபவர்கள் இன்னும் கூட பகலும் இரவும் யோகத்தில் மூழ்கியிருப்பார்கள். நாளுக்கு நாள் மிக நல்ல- நல்ல பாயின்ட்டுகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. பரமபிதா பரமாத்மா சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால் அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்க வேண்டும் இல்லையா? சத்யுகத்தில் இருந்தது. இப்போது இல்லை. அதனால் தான் பாபா மீண்டும் தருவதற்காக வந்துள்ளார். குழந்தைகள் கொஞ்சமாவது புரிந்து கொள்ள வேண்டும், யோகத்தில் ஈடுபட வேண்டும் என்பதற்காக எவ்வளவு உபாயங்கள் உருவாக்கப்படுகின்றன! சிலர் சொல்கின்றனர், எங்களுக்கு நேரம் இல்லை என்று. இந்த நினைவினால் தான் நீங்கள் சதா காலத்திற்கும் நோயற்றவர்களாக ஆகிறீர்கள். ஆக, அந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும் இல்லையா? இதில் ஸ்தூலமாக எதுவும் செய்ய வேண்டும் என்பதில்லை. லௌகிக் தந்தையின் நினைவு இருக்க முடிகிறது. பரலௌகிக் தந்தையின் நினைவை ஏன் மறந்து போகிறீர்கள்? பாபா சொல்கிறார், பாரதவாசிகளாகிய உங்களுக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பும் கூட ஆஸ்தி கொடுத்திருந்தேன் இல்லையா? நீங்கள் உலகத்தின் எஜமானர்களாக இருந்தீர்கள் இல்லையா? இதை மறந்து விட்டீர்களா என்ன? நீங்கள் சூரியவம்சியாக இருந்தீர்கள், பிறகு சந்திரவம்சி, வைசியவம்சியாக ஆனீர்கள். இப்போது மீண்டும் பிராமண வம்சியாக்குவதற்காக வந்துள்ளேன். பிராமணர் ஆனால் தான் யக்ஞத்தைப் பராமரிக்க முடியும். பிராமணர் ஒரு போதும் விகாரி ஆக முடியாது. கடைசி வரை தூய்மையாக இருந்தேயாக வேண்டும். அப்போது தான் புது உலகின் எஜமானர் ஆக முடியும். எவ்வளவு பெரிய பிராப்தி! நீங்கள் பாபாவை நினைவு செய்வ தில்லையா? குழந்தை ஆகி விட்டு தந்தையை நினைவு செய்வதில்லை, அது போல் ஒரு போதும் இருக்க முடியாது. தந்தையை மறந்து விடுவீர்களானால் ஆஸ்தி எப்படிக் கிடைக்கும்? இதுவோ வருமானம் இல்லையா? சாது-சந்நியாசிகளிடமிருந்து பிராப்தி எதுவுமே கிடையாது. பவித்திரதாவின் பலம் மட்டுமே அங்கே உள்ளது. ஈஸ்வரனின் பலம் இல்லை. ஈஸ்வரனைப் பற்றி அறிந்து கொள்ளவே இல்லை என்றால் பலம் எப்படிக் கிடைக்கும்? பலம் உங்களுக்குக் கிடைத்துள்ளது. பாபா தாமே சொல்கிறார், நான் உங்களை சொர்க்கத்தின் மாலிக் ஆக்குவதற் காக வந்துள்ளேன். நீங்கள் கொஞ்ச சமயத்திற்காகப் தூய்மையாக இருக்க முடியாதா? கோபம் என்பது இரண்டாம் நம்பர் பூதம். பெரியதிலும் பெரிய பூதம் காமத் தினுடையது. சத்யுகத்தில் பாரதம் நிர்விகாரியாக இருந்தது. எவ்வளவு சுகமாக இருந்தது! விகாரி ஆகி விட்டதென்றால் இப்போது பாரதத்தின் நிலை என்னவாக ஆகி விட்டுள்ளது! பாபா மீண்டும் பாரதத்தை நிர்விகாரி ஆக்குவதற்காக வந்துள்ளார் என்றால் அப்படிப்பட்ட தந்தையை நீங்கள் மறந்து விடுகிறீர்களா? மாயா உடனடியாக விகர்மம் செய்ய வைத்து விடுகின்றது. குறிக்கோள் மிகவும் உயர்வானது. நீங்கள் அப்படிப்பட்ட தந்தையின் ஸ்ரீமத்படி நடப்பதில்லையா? அத்தகைய தந்தையிடம் அன்பு இல்லையா? மறந்து விடுகிறோம் எனச் சொல்கின்றனர். நல்லது, ஒரு மணி நேரம், அரை மணி நேரம். குறைந்தது இவ்வள வாவது முயற்சி செய்யுங்கள், அப்போது கடைசி யில் பாபாவின் நினைவு இருக்கும். இது கடைசிக் காலம் இல்லையா? கடைசிக் காலத்தில் யார் நாராயணனை நினைவு செய் கின்றனரோ…. நான் நாராயணன் ஆகிறேன். நீங்களும் ஆகிறீர்கள் தானே. பாபா சொல்கிறார், முழுமையான நாயகியாகவும் ஆகுங்களேன். பாபாவோ கொடுக்கின்ற வள்ளல். உங்களிடம் எதையாவது பெற்றுக் கொள்கிறாரா என்ன? நீங்கள் என்னென்ன செய்கிறீர்களோ, எல்லாம் உங்களுக் காகவே செய்கிறீர்கள். நானோ உலகத்தின் எஜமானராகக் கூட ஆவதில்லை. நாம் சிவபாபாவுக்கு தானம் கொடுக்கிறோம் என ஒரு போதும் நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது. சிவபாபாவிடம் இருந்து ஆஸ்தி பெறுகிறோம். இறக்கும் தருவாயில் தானம் செய் விக்கின்றனர் இல்லையா? சுடுகாட்டின் வெட்டியானுக்கு அனைத்தையும் தருகின்றனர். உங்களிடம் என்ன தான் உள்ளது? கல்லையும், ஓட்டையும் பரமாத்மாவுக்கு தானம் செய் கிறீர்கள். உங்களுடைய இந்த அனைத்தும் முடிந்து போகப்போகிறது. இறப்பதற்கு பயப் படவோ இல்லை தானே? பாபா சொல்கிறார், இந்த மோசமான உலகத்திலிருந்து இறந்து விடுவது நல்லது. 5000 ஆண்டு களுக்கு முன்பும் கூட கொசுக்கூட்டம் போல் அனைவரையும் அழைத்துச் சென்றேன். நான் உங்களுடைய காலனுக் கெல்லாம் மேலான காலன் தந்தையும் கூட. உங்களை அரைக்கல்பத்திற்கு காலனின் பிடியில் இருந்து விடுவிக்கிறேன். அங்கோ ஆத்மா சுதந்திரமாக இருக்கும். எப்போது சரீரம் பழையதாக ஆகிறதோ, அப்போது அதை விட்டுவிட்டுப் புதியதை எடுத்துக் கொள்ளும். இப்போதும் கூட புரிந்து கொள்கின்றனர், பாபாவிடம் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை எழுந்து பாபாவோடு ஆன்மிக உரையாடல் செய்யுங்கள். பாபா நீங்கள் செய்ததோ அற்புதம். கனவில் கூட இருந்த தில்லை-நீங்கள் வந்து எங்களை சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குவீர்கள் என்று. நாங்களோ முற்றிலும் பயங்கர இருளில் இருந்தோம். பாபா, இது உங்களுடைய அற்புதம். உங்கள் அறிவுரைப் படி நிச்சயமாக நடப்போம். எந்த ஒரு பாவ காரியத்தையும் செய்ய மாட்டோம். காமத்தின் பூதத்தை முதலில் எட்டி உதைப்போம். தூய்மையின் உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பாபா. இனிமையான பாபா, நாங்கள் உங்களுக்கு உதவி செய்வதற் காக முன் வந்துள்ளோம்.. இப்படி-இப்படி உரையாட வேண்டும். எப்படி பாபா புருஷார்த்தம் செய்கிறார், அதைக் குழந்தைகளுக்குச் சொல்கிறார். பாபா, நாங்கள் அசரீரியாக வந்தோம், இப்போது நினைவு வந்து விட்டது. இந்தப் பழைய உலகத்தை மறப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். சிவபாபாவுக்கு இவ்வளவு ஏராளமான குழந்தைகள்! அக்கரையோ இருக்கும் இல்லையா? பிரம்மாவுக்கும் கூட அக்கரை இருக்கும் இல்லையா? எவ்வளவு ஏராளமான குழந்தைகள்! எவ்வளவு பராமரிப்பு நடைபெறுகின்றது! குழந்தைகள் முற்றிலும் ஓய்வாக இருக்க வேண்டும். இங்கே நீங்கள் ஈஸ்வரிய வீட்டில் இருக்கிறீர்கள் இல்லையா? எந்த ஒரு சங்கதோஷமும் இல்லை. பாபா முன்னிலையில் அமர்ந்துள்ளார். உங்களோடு உண்போம், அமர்வோம்…. நீங்கள் அறிவீர்கள், சிவபாபா இவருக்குள் வந்து குழந்தாய்- குழந்தாய் என அழைக்கிறார். பாபா சொல்கிறார், என்னுடைய செல்லக் குழந்தைகளே, உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்-விகாரத்தில் ஒரு போதும் செல்ல மாட்டோம். தூய்மை படுத்துவதற்கான உதவியை எனக்குச் செய்வீர்களானால் பாரதத்தைப் தூய்மையாக்குவேன். தைரியம் வைத்தால் தந்தை உதவி செய்வார். நினைவு வருவதில்லை. கல்ப-கல்பமாக நாம் இதே தொழிலைச் செய்கிறோம். பாரதத்தை சொர்க்கமாக்குகிறோம். யார் முயற்சி செய்கின்றனரோ, அவர்கள் சொர்க்கத்திற்கு எஜமானர் ஆவார்கள். காங்கிரஸ்காரர்கள் பாபுஜிக்கு (காந்திஜிக்கு) எவ்வளவு உதவி செய்தனர்! இப்போது பாருங்கள், சுய இராஜ்யம் கிடைத்தது. ஆனால் இராமராஜ்யமோ உருவாகவில்லை. நாளுக்கு நாள் இன்னும் தமோபிரதானமாக ஆகிக் கொண்டே செல்கிறது. பாபா வந்து சுகதாமத்திற்கு எஜமானராக்கிக் கொண்டிருக்கிறார். அரைக்கல்பம் நீங்கள் சுகமாக இருக்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) உண்மையிலும் உண்மையான நாயகி ஆக வேண்டும். புத்தியோகத்தை ஒரு நாயகனிடம் ஈடுபடுத்த வேண்டும். புத்தி இங்குமங்கும் அலையாமல் இருப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

2) ஆஸ்தியை முன்னால் வைத்து பாபாவை நிரந்தரமாக நினைவு செய்ய வேண்டும். தூய்மையாக அவசியம் ஆக வேண்டும். பாரதத்தை சொர்க்கமாக உருவாக்குகிற சேவை செய்ய வேண்டும்.

வரதானம்:-

யார் மகாவீராக இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு போதும் இந்தச் சாக்குப்போக்கு சொல்ல மாட்டார்கள் – அதாவது சூழ்நிலை அது போல் இருந்தது, பிரச்சினை அந்த மாதிரி இருந்தது – அதனால் தோல்வி ஏற்பட்டு விட்டது. மகாவீர் என்றால் சதா பயமற்ற வராகி, வெற்றியாளர் ஆத்மாக்கள் ஒவ்வோரடியிலும் உடலால், மனதால் குஷியாக இருப்பார்கள். அவர்கள் ஒரு போதும் வருத்தமுற மாட்டார்கள். அவர்களிடம் துக்கத்தின் அலை கனவில் கூட வர முடியாது.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top