26 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
25 April 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே ! உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்றால், ஞானத்தின் பெட்ரோலை நிரப்பிக் கொண்டே செல்லுங்கள். அதிகாலையில் எழுந்து தந்தையை நினையுங்கள். எந்த ஒரு தவறான நடத்தையும் நடக்க கூடாது.
கேள்வி: -
பாபா ஒவ்வொரு குழந்தையின் ஜாதகத்தை அறிந்திருந்தாலும் கூறுவதில்லை. ஏன்?
பதில்:-
ஏனென்றால் நான் ஆசிரியராக இருக்கிறேன். என்னுடைய வேலை குழந்தைகளாகிய உங்களுக்கு பாடத்தை சொல்லிக் கொடுத்து நடத்தையை திருத்துவதாகும். மற்றபடி உங்களுக்குள் என்ன இருக்கிறது என்பதை நான் கூற மாட்டேன். நான் ஆத்மாவிற்கு ஞான இன்ஜக்ஷன் போடுவதற்காக வந்திருக்கிறேன். உடலின் நோய்களை சரி செய்வதற்காக அல்ல, என்று பாபா கூறுகின்றார்.
கேள்வி: -
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது எந்த விஷயத்தைப் பார்த்து பயப்படுவதில்லை. ஏன்?
பதில்:-
இப்போது நீங்கள் இந்த பழைய உடலை விடுவதற்கு பயப்படுதில்லை. ஏனென்றால் உங்களுடைய புத்தியில் ஆத்மாக்களாகிய நாம் அழிவற்றவர்கள் என்று இருக்கிறது. மற்றபடி இந்த பழைய உடல் போனால் போகட்டும். நாம் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் அசரீரியான ஆத்மாக்கள் மற்றபடி நாம் இந்த உடலில் இருந்துக் கொண்டே பாபாவிடம் ஞான அமிர்தத்தை குடித்துக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, சதா உயிரோடு இருங்கள், சேவையாளர் ஆகுங்கள். அப்போது ஆயுள் அதிகரிக்கும் என்று பாபா கூறுகின்றார்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
குழந்தைப் பருவத்தை மறந்து விட வேண்டாம்..
ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். யாரை தாய் தந்தை என்று அழைக்கிறோமோ அவரை மறக்கக் கூடாது. யார் பாடலை எழுதினார்களோ அவர்கள் பொருளைப் புரிந்துக் கொள்ளவில்லை. நாம் அந்த பரம்பிதா பரமாத்மாவின் வாரிசு என்ற நிச்சயம் இல்லை. அந்த பரம்பிதா பரமாத்மா பதீதர்களை தூய்மை யாக்குவதற்காக வர வேண்டியிருக்கிறது. எவ்வளவு உயர்ந்த சேவைக்காக வருகிறார். அவருக்கு எந்த ஒரு அகங்காரமும் இல்லை. அவருக்கு நிர் அகங்காரி என்று கூறப்படுகிறது. அவருக்கு நிச்சய புத்தி அல்லது ஆத்ம உணர்வுடையவராக ஆகுதல் போன்ற விஷயங்கள் கிடையாது. அவர் ஒரு போதும் சந்தேகத்தில் வருவதில்லை. தேக உணர்வுடையவராக ஆவதில்லை. மனிதர்கள் தேக உணர்வடையவராகிறார்கள். எனவே, மீண்டும் ஆத்ம உணர்வுடையவராக ஆவதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்படுகிறது. தன்னை ஆத்மா என்று உணருங்கள் என்று பாபா கூறுகின்றார். மனிதர்களோ தன்னை பரமாத்மா என்று கூறிக் கொள்கிறார்கள். எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது. ஒருபுறம் பதீத பாவனர் என்று நினைக்கிறார்கள். பிறகு அனைவருக்குள்ளும் பரமாத்மா இருக்கிறார் என கூறு கின்றார்கள். அவர்களுக்குச் சென்று புரிய வைக்க வேண்டும். குழந்தைகளாகிய உங்களை திருத்துவதற்காக பாபா எங்கிருந்து வந்திருக்கிறார் பாருங்கள். யாருக்கு உறுதியான நிச்சயம் இருக்கிறதோ அவர்கள், தாங்கள் எங்களுடைய தாய், தந்தை என கூறுவார்கள். நாங்கள் உங்களுடைய ஸ்ரீமத் படி நடந்து உயர்ந்த தேவதையாக மாறுவதற்காக இங்கே வந்திருக் கின்றோம். பரமாத்மா எப்போதும் தூய்மையிலும் தூய்மை யானவர் ஆவார். பதீத உலகத்தில் வாருங்கள் என்று அவரை அழைக்கிறார்கள். எனவே, பதீத உடலில் தான் அவர் வர வேண்டி இருக்கிறது. பதீத உலகத்திலோ தூய்மையான உடல் இருக்காது. பாபாவைப் பாருங்கள், எவ்வளவு நிர் அகங்காரியாக இருக்கிறார். தூய்மையற்ற உடலில் வர வேண்டியிருக்கிறது. நாம் நம்மை சம்பூரணமானவர்கள் என்று கூற முடியாது. இப்போது மாறிக் கொண்டிக்கிறோம்.
இப்போது குழந்தைகளே, ஸ்ரீமத் படி நடங்கள் என்று எல்லையற்ற தந்தை கூறுகிறார். அதிகாலையில் எழுந்து நினைத்தால் பாவங்கள் எரிந்து சாம்பலாகி போகும் என்று ஸ்ரீமத் கொடுக்கிறார். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் விகர்மம் அழியாது. குரங்கிலும் குரங்காகவே இருந்து விடுவார்கள். நிறைய தண்டனைகள் அடைய வேண்டி இருக்கும். விலங்கு போன்ற வைகளுக்கு தண்டனை இல்லை. மனிதர்களுக்குத் தான் தண்டனை கிடைக்கிறது. எருது போன்றவைகள் யாரையாவது உதைத்து அவர்கள் இறந்து போனால் அதை யாரும் ஜெயிலில் போட மாட்டார்கள். மனிதகளை உடனடியாக ஜெயிலில் போட்டு விடுகிறார்கள். இச்சமயம் மனிதர்கள் அதை காட்டிலும் மிகவும் மோசமாக இருக்கிறார்கள் என பாபா புரிய வைக்கிறார். அவர்களை மனிதனிலிருந்து தேவதையாக மாற்ற வேண்டும். இந்த லஷ்மி நாராயணன் கூட கீதா ஞானத்தை அறியவில்லை என பாபா புரிய வைக்கிறார். அங்கே அவசியமே இல்லை. ஏனென்றால், பாபா படைக்கக் கூடியவர் ஆவார். அங்கே யாரும் மூன்று காலம் அறிந்தவர் கிடையாது. இப்போது இந்த மக்களும் மூன்று காலம் அறிந்தவர் இல்லை என்றாலும், தங்களை பகவான் என்று கூறிக் கொள்கிறார்கள். எனவே, பெரிய எழுத்துக்களில் கீதையின் பகவான் பரம்பிதா பரமாத்மாவே கிருஷ்ணர் இல்லை என்று எழுதுங்கள். முக்கியமாக இந்த ஒரு தவறே, யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. குழந்தைகளும் யாருடைய புத்தியிலும் பதிய வைப்ப தில்லை. பாரதம் சொர்க்கமாக இருந்தது. இதை மறந்து விட்டனர். கல்பத்தின் ஆயுள் லட்சக் கணக்கான வருடங்கள் என கூறிவிட்டனர். ஆகவே ஏதாவது பழைய பொருட்கள் கிடைத்தால் இது லட்சம் வருடத்தினுடையது என கூறுகிறார்கள். கிறிஸ்து வருவதற்கு 3000 வருடத்திற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது என்று எப்போதாவது ஒரு சிலர் கூறுகிறார்கள். நாம் கூட தேவதையாக இருந்தோம் என நீங்கள் அறிகிறீர்கள். மாயை முற்றிலுமாக சோழி போன்று மாற்றி விட்டது. எந்த ஒரு மதிப்பும் இல்லை. எனவே, இப்போது குழந்தைகளாகிய நீங்களும் காரிருளிலிருந்து வெளியே வர வேண்டும். ஒரு போதும் உங்களை யாரும் நீங்களும் குரங்கு தான் என்று கூறும் படியாக எந்த ஒரு காரியமும் செய்யக் கூடாது. நான் எவ்வளவு தூர தேசத்திலிருந்து உங்களுடைய அழுக்கான உடைகளைத் துவைப்பதற்காக வருகிறேன், உங்களுடைய ஆத்மா முற்றிலும் அழுக்காகி விட்டது. இப்போது என்னை நினைத்தால் உங்களுடைய ஜோதி எரிய ஆரம்பிக்கும். ஞானத்தின் பெட்ரோலை நிரப்பிக் கொண்டே செல்லுங்கள். அங்கே கூட சிறிது பதவியை அடையுங்கள். அங்கே சென்று வேலைக்காரனாக ஆகுதல் நன்றாக இல்லை. இது இராஜயோகம் என்றால், உயர்ந்த பதவியை அடைய வேண்டும். வேலைக்காரனாக மாறினீர்கள் என்றால், பகவானிடமிருந்து என்ன ஆஸ்தியை அடைந்தீர்கள்! ஒன்றும் இல்லை. பாபாவிடம் யாராவது கேட்டால் உடனடியாக பாபா தெரிவிக்க முடியும். சைகையிலேயே புரிந்துக் கொண்டு வேலையை செய்ய வேண்டும். சொல்லாமல் யார் செய்கிறார்களோ அவர்களே தேவதைகள்…… சொல்லி செய்பவர்கள் மனிதர்கள். இப்போது உங்களுக்கு தேவதையாக மாறுவதற்கான ஸ்ரீமத் கிடைத்திருக்கிறது. படக் கண்காட்சிகளில் பெரிய பெரிய எழுத்துக்களில் கிருஷ்ணன் பகவான் கிடையாது. அவர் மறுபிறவியில் வருகின்றார் என்று அனைவரின் கண்களும் திறந்துக் கொள்ளும் படி பலகைகளை வைக்க வேண்டும் என்று சிரேஷ்டமாக மாற்றக் கூடிய பாபா கூறுகின்றார். அவர்கள் கிருஷ்ணர் பிறப்பு இறப்பில் வருவதில்லை. அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் என நினைக்கிறார்கள். அனுமானின் பூஜாரி அனுமான் எல்லா இடங்களிலிலும் இருப்பதாகக் கூறுவார். இங்கேயோ ஒரேயொரு தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி அடைய வேண்டும். கீதையின் பகவான் வைரம் போன்று மாற்றுகின்றார். அவருடைய பெயரை மாற்றியதால் பாரதம் இந்த நிலையை அடைந்து விட்டது. இந்த விஷயங்களை இப்போதும் இவ்வளவு நம்பிக்கை வைத்து புரிந்துக் கொள்ளவில்லை. ஞானக் கடல் ஒருவரே ஆவார். அவரே பதீத பாவனர் ! அவர்களோ கங்கையை பதீத பாவனி என்கிறார்கள். இப்போது கடலில் இருந்து கங்கை வருகிறது என்றால் ஏன் கடலில் சென்று நீராடக் கூடாது. அவர்களுக்குப் புரிய வைப்பதற்கு குழந்தைகளுக்குள் சொர்க்கத்தின் குணங்கள் வேண்டும். நாம் அப்பாவின் மகிமையை செய்கின்றோம் என அனைவருக்கும் புரிய வைக்கின்றோம். நிராகார் பரமாத்மாவை அனைவரும் ஏற்றுக் கொள் கிறார்கள். ஆனால் சர்வ வியாபி என்று மட்டும் கூறி விடுகிறார்கள். ஓ, இராம், பரமாத்மா ! என்று கூறுகிறார்கள். மாலையை உருட்டுகிறார்கள். மேலே பூ இருக்கிறது. அதனுடைய பொருளையும் புரிந்துக் கொள்ளவில்லை. பூ மற்றும் ஜோடியாக மணிகள் உள்ளன. தாய் தந்தை என்றால் இல்லற மார்க்கம் அல்லவா? படைப்புகளை படைக்கிறார்கள் என்றால் நிச்சய மாக தாய் தந்தை வேண்டும். எனவே, இவர் மூலமாக தகுதி அடைய வைக்கின்றார். பிறகு மாலை உருட்டப்படுகிறது. பரமாத்மா, ஆத்மாவின் ரூபம் என்ன? அதையும் அறியவில்லை. நீங்கள் புது விஷயங்களைக் கேட்கிறீர்கள். பரமாத்மா ஒரு சிறிய புள்ளியாக இருக்கிறார். இவ்வளவு சிறிய புள்ளியை யாராவது ஞானக்கடல் என ஒத்துக் கொள்வார்களா? அதிசயம் அல்லவா. மனிதர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மனிதர்களுக்கு மனிதர்கள் மூலமாக அந்த ஞானம் கிடைக்கிறது அதனால் துர்கதி தான் ஏற்பட்டிருக்கிறது. இங்கேயோ பகவானே வந்து ஞானத்தைக் கொடுத்து சத்கதி அளிக்கிறார். அதாவது இராஜாக்களுக்கு இராஜாவாக மாற்றுகிறார். நீங்கள் அதிசயப் படுகிறீர்கள். ஆத்மா சிறிய புள்ளியாக இருக்கிறது. மிகவும் சூட்சுமமாக இருக்கிறது. எனவே, பாபாவும் இப்படி தான் இருப்பார் அல்லவா? எவ்வளவு பெரிய அத்தாரிட்டி இருக்கிறது. பதீதமான உலகத்தில் பதீதமான உடலில் வந்து எப்படி படிக்க வைக்கிறார். இந்த விஷயங்களைப் பற்றி மனிதர்களுக்கு என்ன தெரியும். அவர்கள் தலைகீழாக மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய வழிப்படி நடந்தால் சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுவேன் என்று இப்போது பாபா கட்டளை இடுகிறார். இதில் பயப்படக் கூடிய விஷயம் எதுவும் இல்லை. ஆத்மாக்களாகிய நாம் அசரீரி ஆவோம். இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். நான் அழிவற்ற ஆத்மா. மற்றபடி இந்த பழைய உடல் போகட்டும். ஆம், ஞான அமிர்தத்தை அருந்த வைக்கிறார். ஆகையால் உயிரோடு இருக்கிறேன். அதுவும் யார் சேவை செய்பவராக இருக்கிறாரோ அவர்களின் ஆயுள் அதிகரிக்கும். படக்கண்காட்சிகளில் நிறைய சேவை செய்ய வேண்டும். நிறைய முன்னேற்றம் ஏற்படும். கிருஷ்ணரின் மகிமை மற்றும் பரமாத்மாவின் மகிமையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் சொர்க்கத்தில் தூய்மையாக இருந்தீர்கள் என பாபா கூறுகின்றார். இப்போது எப்படி பதீதமானீர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் இல்லையா ! தந்தை வந்து கல் புத்தியை பாரஸ் (இரும்பைத் தங்கமாக்கும் கல்) ஆக உடையவரை தங்கமாக மாற்றுகிறார்.
ஈஸ்வரிய வாரிசுகள் ஒரு போதும் யாருக்கும் எண்ணம், சொல், செயலில் துக்கம் அளிக்கக் கூடாது துக்கம் கொடுத்தீர்கள் என்றால், அதிக துக்கம் அடைந்து இறந்து விடுவீர்கள். எப்பொழுதும் அனைவருக்கும் சுகத்தை அளிக்க வேண்டும்.. வீட்டில் விருந்தினர்களுக்கு மிகவும் நன்கு சேவை செய்வார்கள். இது பழைய உடல் ஆகும். அனுபவித்துத் தான் ஆக வேண்டும். கணக்கு வழக்குகளை முடிக்க வேண்டும். இதில் பயப்படக் கூடாது. இல்லை என்றால் நிறைய தண்டனை அடைய வேண்டியிருக்கும். மிகவும் இனிமையாக மாற வேண்டும். பாபா எவ்வளவு அன்போடு புரிய வைக்கின்றார். படிப்பில் ஒரு போதும் கொட்டாவி, தூக்கம் வரக் கூடாது. என்னை நினைவு செய்தால் நீங்கள் சதா நோயற்றவராகி விடலாம் என்று பாபா கூறுகின்றார். உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருக் கிறேன். எனவே எந்த ஒரு கெட்ட கர்மமும் செய்யாதீர்கள். இந்த பொருளை எடுத்து சாப்பிட்டு விடலாமா, இவரை கட்டி அணைக்கலாமா? என்று பல எண்ணங்கள் வரலாம். அட, பாபா குழந்தைகளின் ஜாதகத்தை அறிவார். ஆகையால் நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். நான் அனைவரின் ஜாதகத்தை அறிவேன் என பாபா கூறுகிறார். ஆனால் உங்களுக் குள்ளே என்ன இருக்கிறது என்று ஒவ்வொரு வருடையதும் கூறுவேனா? என்னுடைய வேலை கற்பிப்பதாகும். நான் ஆசிரியராக இருக்கிறேன். பாபாவிற்குத் தெரியும் எங்களுடைய மருந்தை அவரே அனுப்பிவிடுவார் என்பதெல்லாம் கிடையாது. நோய் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள் என்று தான் பாபா கூறுவார். ஆம், அனைத்தையும் விட நல்ல மருந்து யோகா ஆகும். மற்றபடி மருந்து கொடுப்பதற்கு நான் ஒன்றும் டாக்டர் கிடையாது. ஆம், நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தால் எப்போதாவது கொடுப்பேன். மற்றபடி உங்களுடைய ஆத்மாவிற்கு இன்ஜக்ஷன் போடுவதற்கு வந்திருக்கிறேன். நாடகத்தில் இருந்தால் எப்போதாவது மருந்து கொடுக்கிறேன். மற்றபடி சக்திசாலி, எங்களுடைய நோயை ஏன் விடுவிக்க முடியாது என்ப தெல்லாம் கிடையாது. பகவான் என்ன விரும்பினாலும் செய்யலாம். அப்படி கிடையாது. தந்தை தூய்மையற்றவர்களை தூய்மையாக மாற்றுவதற்காகவே வந்திருக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. எண்ணம், சொல், செயல் மூலம் யாருக்கும் ஒரு போதும் துக்கம் கொடுக்கக் கூடாது. கர்ம போகத்தைப் பார்த்து பயப்படக் கூடாது. குஷி குஷியோடு பழைய கணக்கு வழக்கை முடிக்க வேண்டும்.
2. எண்ணங்களுக்கு வசமாகி எந்த ஒரு கெட்ட கர்மத்தையும் செய்யக் கூடாது. நல்ல பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். தேவதையாவதற்கு ஒவ்வொரு விஷயத்தையும் சைகையினாலேயே புரிந்துக் கொள்ள வேண்டும். சொல்லத்தான் வேண்டும் என்பதில்லை
வரதானம்:-
நிகழ்காலத்தில் குழந்தைகளாகிய நீங்கள் எப்பேர்ப்பட்ட சிறந்த முழுமையான அதிகாரி ஆகிறீர்கள் என்றால் சுயம் (ஆல்மைட்டி அத்தாரிட்டி) சர்வ சக்திவான் மீது உங்களுடைய அதிகாரம் (உரிமை) இருக்கிறது. பரமாத்ம அதிகாரி குழந்தைகள் சர்வ சம்பந்தங்களின் மற்றும் அனைத்து செல்வங்களின் அதிகாரத்தை பெற்றுக் கொண்டு விடுகிறார்கள். இச்சமயத்தில் தான் தந்தை மூலமாக சர்வசிரேஷ்ட செல்வந்தர் ஆவீர்களாக என்ற வரதானம் கிடைக்கிறது. உங்களிடம் அனைத்து குணங்களின், அனைத்து சக்திகளின் மற்றும் சிறந்த ஞானத்தின் அழியாத செல்வம் இருக்கிறது. எனவே உங்களை போன்ற செல்வந்தர் வேறு யாரும் கிடையாது.
சுலோகன்:-
மாதேஷ்வரி அவர்களின் விலைமதிப்பிட முடியாத மகாவாக்கியம் – பரமாத்மா பற்றிய அநேக மனிதர்களின் அபிப்ராயங்களின் இறுதி தீர்ப்பு.
பரமாத்மா ஒருவரே என்பதை இப்பொழுதோ முழு உலகம் அறிந்துள்ளது. அந்த பரமாத்மாவைத் தான் ஒரு சிலர் சக்தி என்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர் இயற்கை என்று கூறுகிறார்கள். அதாவது ஏதாவதொரு ரூபத்தில் அவசியம் ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே எந்தப் பொருளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவசியம் அந்த ஒரு பொருள் எதுவாக இருந்தாலும், அதனால் தான் அந்த பொருளுக்கு பெயர் வைக்கிறார்கள். ஆனால் அந்த ஒரு பொருள் பற்றி இந்த உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனை அபிப்பிரா யங்கள் உள்ளன. ஆனால் பொருள் பிறகும் கூட ஒன்று தான். அதில் முக்கியமாக நான்கு அபிப்பிராயங்கள் கூறுகிறார்கள். ஒரு சிலர் இறைவன் எங்கும் நிறைந்தவர் என்று கூறுகிறார் கள். ஒரு சிலர் பிரம்மமே எங்கும் வியாபித்துள்ளது என்கிறார்கள். ஒரு சிலர் இறைவன் சத்தியம் மாயை (மித்யம்) பொய் என்கிறார்கள். ஒரு சிலர் இறைவன் என்று யாரும் இல்லவே இல்லை, இயற்கையே இயற்கை தான் என்கிறார்கள். அவர்கள் பிறகு இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை. இப்பொழுது இத்தனை அபிப்பிராயங்கள் உள்ளன. அவர்களோ உலகம் இயற்கையானது மற்றும் எதுவுமே இல்லை என்று நினைக்கிறார்கள். இப்பொழுது பாருங்கள் உலகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் எந்த பரமாத்மா உலகத்தை படைத்தாரோ அந்த உலகத்தின் அதிபதியை ஏற்றுக் கொள்வதில்லை. உலகத்தில் எத்தனை அநேக மனிதர்கள் இருக்கிறார்களோ, அவர்களுடையது இத்தனை அபிப்பிராயங்கள். கடைசியில் கூட இந்த அனைத்து அபிப்பிராயங்களின் தீர்ப்பு சுயம் பரமாத்மா வந்து கொடுக்கிறார். இந்த முழு உலகத்தின் தீர்ப்பு பரமாத்மா வந்து செய்கிறார். அதாவது யார் சர்வோத்தம சக்திவானாக இருப்பாரோ, அவரே தனது படைப்பின் முடிவு பற்றி விரிவாக புரிய வைப்பார். அவரே நமக்கு படைப்பவர் பற்றிய அறிமுகத்தையும் கொடுக்கிறார். மற்றும் பின் தனது படைப்பின் அறிமுகத்தையும் கொடுக்கிறார். நல்லது. ஓம் சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!