23 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
22 April 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! தந்தையை நினைவு செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் ஆத்ம அபிமானியாக ஆகிவிடுவீர்கள், போதை மற்றும் குஷி நிலைத்திருக்கும், நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
கேள்வி: -
ஞான அமிர்தம் பருகிக் கொண்டிருந்தாலும் சில குழந்தைகள் துரோகிகளாக ஆகிவிடு கின்றனர் லி எப்படி?
பதில்:-
யார் ஒருவர் ஒருபுறம் ஞான அமிர்தம் பருகிக் கொண்டும் மற்றொரு புறம் சென்று அசுத்தம் ஆகிறார்களோ அதாவது அசுர நடத்தையினால் சேவையில் குந்தகம் செய்கிறார் களோ, ஈஸ்வரிய குழந்தையான பின்பும் தனது நடத்தைகளை மாற்றிக் கொள்ளவில்லையோ, தங்களுக்குள் மாயாவி விசயங்களைப் பேசிக் கொள்பவர்கள், ஒருவருக்கொருவர் துக்கம் கொடுப்பவர்கள் தான் துரோகிகள். பாபா கூறுகின்றார் லி குழந்தைகளே! நீங்கள் அசுரனிலிருந்து தேவதை ஆவதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள், ஆக சதா ஒருவருக்கொருவர் ஞான சம்மந்த மாக கலந்துரையாடல் செய்யுங்கள், தெய்வீக குணங்களை தாரணை செய்யுங்கள், உள்ளுக்குள் இருக்கும் அவகுணங்களை நீக்கி விடுங்கள். புத்தியை சுத்தமாகவும், தெளிவானதாகவும் ஆக்குங்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
அதிர்ஷ்டம் உருவாக்கி வந்திருக்கிறேன் ..
ஓம்சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள் மற்றும் குழந்தைகள் இதை தான் பாடியிருக் கிறீர்கள். பள்ளிக்கு யார் சென்றாலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவேன் என்ற இலட்சியம் புத்தியில் இருக்கும். புத்தியில் குறிக்கோள் மற்றும் இலட்சியத்தை அடைவதற்கான அதிர்ஷ்டத்தின் எண்ணம் இருக்கும். புது உலகிற்கான அதிர்ஷ்டத்தை தாரணை செய்து அமர்ந்திருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். புது உலகை படைக்கக் கூடிய பரம்பிதா பரமாத்மாவிடமிருந்து ஆஸ்தியடையக் கூடிய அதிர்ஷ்டத்தை உருவாக்க வந்திருக்கிறோம். எந்த ஆஸ்தி? மனிதனிலிருந்து தேவதை அல்லது நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய ஆஸ்தி. இந்த இராவணனின் கீழான இராஜ்யத்திலிருந்து அழைத்துச் செல்கிறார். இது இராவணனின் இழிவான இராஜ்யமாகும், இழிவானவர்கள் விகாரத்தின் மூலம் பிறப்பு எடுக்கின்றனர், விகாரிகள் தான் இழிவானவர்கள் என்று கூறப்படுகின்றனர். பகவானின் மகாவாக்கியம் லி காமம் மிகப் பெரிய எதிரியாகும், நீங்கள் இதை வெல்ல வேண்டும். அப்போது தான் உயர்வானவர்களாக ஆவீர்கள். பாரதம் தான் தாழ்வானதாகவும், உயர்ந்ததாகவும் ஆகிறது. தன்னை அசுத்தப்படுத்திக் கொள்பவர்கள் தான் கீழானவர்கள் என்று கூறப்படுகின்றனர். சத்யுகத் தில் கீழானவர்கள் இருக்கவேமாட்டார்கள். ஏனெனில் அங்கு மாயையின் இராஜ்யமே கிடையாது. இந்த நேரமே இராவணனின் இராஜ்யமாகும். அனைவரிடத் திலும் 5 விகாரங்கள் இருக்கின்றன. ஒருவேளை சத்யுகத்திலும் இராவண இராஜ்யம் இருந்தால் அங்கும் இராவணனை எரிப்பார்கள். அங்கு இந்த விசயங்கள் கிடையாது. அங்கு உயர்வான நடத்தை உள்ளவர்கள் இருப்பர். கீழான உலகில் யாராவது உயர்ந்த பதவியில் இருக்கின்றனர் எனில் அனைவரும் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர். சந்நியாசிகள் நல்ல நிலையில் இருப்பதால் அனைவரும் அவர்களை ஏற்றுக் கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர். அதனால் தான் அனைத்து மனிதர்களும் அவர்களை நல்லவர்கள் என்று நினைக் கின்றனர். அரசாங்கமும் அவர்களை நல்லவர்கள் என்று நினைக்கிறது. அவர்களை இராஜ்ய குருவாக ஆக்குகின்றனர். சத்யுகத்தில் குரு என்ற பெயரே இருக்காது. குரு என்றால் சத்கதி கொடுக்கக் கூடியவர். சாஸ்திரங்களில் கதைகளை உருவாக்கி விட்டனர். யாரிடத்தில் பிரம்ம ஞானம், இராஜயோக ஞானம் இல்லையோ அவரை இராஜா ஜனகர் சிறையில் அடைத்து விட்டார். எப்போது அவருக்கு இராஜயோகத்தின் ஞானம் கிடைத்ததோ அப்போது ஒரு விநாடியில் ஜீவன்முக்தி அடைந்தார். இலஞ்சம் வாங்குபவர் தான் கீழானவர் என்று பொருள் கிடையாது. எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ அனைவரும் கீழானவர்கள் என்று தந்தை கூறுகின்றார். ஏனெனில் அனைவரின் சரீரமும் விகாரத்தினால் உருவாகிறது. உங்களது சரீரமும் விகாரத்தினால் உருவாகியிருக்கிறது. ஆனால் இப்போது நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையினுடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள், தேக அபிமானத்தை விட்டு விட்டீர்கள், அதனால் தான் பரம்பிதா பரமாத்மாவின் வாய்வழி வம்சத்தினர்களாக, ஈஸ்வரிய குழந்தைகளாக இருக்கிறீர்கள். பரம்பிதா பரமாத்மா வந்து ஆத்மாக்களாகிய உங்களை தன்னுடையவராக ஆக்கியிருக்கின்றார். இது மிகவும் ஆழமான விசயமாகும். ஆத்மாக்களாகிய நாம் பரம்பிதா பரமாத்மாவின் வம்சத்தினர்களாக ஆகியிருக்கிறோம். பாபா (தந்தை) என்று ஆத்மா கூறுகிறது. சத்யுகத்தில் எந்த ஆத்மாவும் பரமாத்மாவை பாபா என்று கூறமாட்டார்கள். அங்கு ஜீவாத்மாக்கள் ஜீவாத்மாவைத் தான் பாபா என்று கூறுவர். நீங்கள் ஜீவாத்மாக்களாக இருக்கிறீர்கள். தன்னை ஆத்மா என்று நிச்சயம் செய்து பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் என்று இப்போது பாபா கூறியிருக்கின்றார். அனைவரையும் விட மிக உத்தம (உயர்ந்த) பிறப்பு பிராமணர்களாகிய உங்களுடையது ஆகும். நாங்கள் உங்களுடைய குழந்தைகளாக ஆகியிருக்கிறோம் என்று ஆத்மா கூறுகிறது. கர்பத்திலிருந்து வெளிப்பட வில்லை. பாபாவை புரிந்து கொண்டு அவருடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். சிவபாபா, நாம் உங்களுடையவர்கள் மற்றும் உங்களது வழிப்படி மட்டுமே நடப்போம். எவ்வளவு சூட்சும விசயமாகும்! பாபா கூறியிருக்கின்றார் லிஎப்போது பிரம்மா பாபாவிடம் செல்வீர்களோ அப்போது நான் சிவபாபாவின் எதிரில் அமர்ந்திருக்கிறேன் என்று நிச்சயம் செய்யுங்கள். ஆத்மாவும் நிராகார் எனில் சிவபாபாவும் நிராகாராக இருக்கின்றார். சிவபாபாவின் நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகிறது. நினைவு செய்யவில்லையெனில் கீழானவர்களாக ஆகிவிடுவீர்கள். எவ்வளவு உயர்ந்த விசயமாகும்! ஆனால் நான் ஆத்மா, பரம்பிதா பரமாத்மா வின் மடியில் அமர்ந்திருக்கிறேன் என்பதை பல குழந்தைகள் மறந்து விடுகின்றனர். மறக்கின்ற காரணத்தினால் அந்த போதை மற்றும் குஷி இருப்பது கிடையாது. பாபாவை நினைவு செய்யக் கூடிய பழக்கம் ஏற்பட்டு விட்டால் ஆத்ம அபிமானியாக ஆகிவிடுவீர்கள். அயல் நாட்டில் பல சகோதரிகள் இருக்கின்றனர், எதிரில் கிடையாது. ஆனால் பாபாவை நினைவு செய்கின்றனர். பாபாவை மிக அன்பாக நினைவு செய்ய வேண்டும். எவ்வாறு நாயகி நாயகனை எவ்வளவு அன்பாக நினைவு செய்கின்றார்! கடிதம் வரவில்லையெனில் மிகவும் குழப்பமடைந்து விடுவாள். நாயகிகளாகிய நீங்கள் ஏமாற்றம் அடைந்து அடைந்து நாயகன் கிடைத்திருக்கின்றார் எனில் நினைவு நன்றாக இருக்க வேண்டும். நடத்தையும் மிக நன்றாக இருக்க வேண்டும். அசுர நடத்தை யுடையவர்கள் துயரத்தில் திணர வேண்டியிருக்கும். நடத்தையின் மூலம் இவர் நினைவு செய்வது கிடையாது, ஆகையால் தாரணை ஏற்படுவது கிடையாது என்பதை பாபா புரிந்து கொள்வார். சேவை செய்யவில்லை யெனில் பதவியும் அடைய முடியாது. முதன் முதலில் தந்தையினுடையவர்களாக ஆக வேண்டும். பி.கு ஆக வேண்டும். பி.கு விற்கு அவசியம் சிவபாபாவின் நினைவு இருக்கும். ஏனெனில் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். நினைவில் இருப்பது தான் சிறந்த முயற்சியாகும். போக் வைக்கிறோம், அதை நாம் சாப்பிடுவதால் நமது புத்தியானது பாபாவிடம் ஈடுபட்டு விடும் என்று நினைக்காதீர்கள். இது சுத்தமான உணவாகும். ஆனால் முயற்சி செய்யவில்லை யெனில் எதுவும் கிடைக்காது. நினைவின் மூலம் தான் சிரேஷ்டமானவர்களாக ஆவீர்கள். தூய்மை தான் முதன்மையானது. ஆத்மாவை தூய்மை யாக்குவதற்கு யோக பலம் தேவை. தண்ணீரில் குளிப்பதனால் தூய்மையாகி விட முடியாது. ஏனெனில் ஆத்மா தான் அசுத்தம் ஆகிறது. நகை பொய்யானது, தங்கம் உண்மையானது என்று ஒருபோதும் கூறுவ தில்லை. ஆத்மா தூய்மையானது என்று அவர்கள் நினைக்கின்றனர். நகை (சரீரம்) பொய்யானது, அதை நாம் சுத்தப்படுத்துகிறோம். ஆனால் கிடையாது. ஆத்மா ஒருவேளை சுத்தமாக இருந்தால் சரீரமும் சத்தமாக இருக்கும். இங்கு ஒருவர் கூட சிரேஷ்டமானவர் கிடையாது. சத்யுகத்தில் இவ்வாறு கூறமாட்டார்கள். அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆவர், ஆடை விகாரியாக இருக்கும் போது பிறகு ஆத்மா எப்படி தூய்மையாக இருக்க முடியும்? தங்கம் தூய்மையாக இருந்து, நகை பொய்யானதாக எப்படி இருக்க முடியும்? இதை நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். இந்த நேரத்தில் யாரும் சிரேஷ்டமானவர்கள் கிடையாது. தந்தையையும் அறியவில்லை மற்றும் தூய்மையாகவும் கிடையாது.
ஏழைகள் தான் குப்தமான முறையில் முயற்சி செய்து இராஜ்ய பாக்கியத்தை அடைகின்றனர் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மற்றவர்கள் அனைவரும் அழிந்து விடுவர். இந்த ஞானம் பாரதத்திற்கானது. எனது பக்தர்களுக்கு இந்த ஞானம் கூறுங்கள் என்று பாபா கூறுகின்றார். அவர்கள் சிவனின் பூஜாரிகளாக இருந் தாலும் சரி அல்லது தேவதைகளின் பூஜாரிகளாக இருந்தாலும் சரி. மற்ற தர்மங்களுக்கு பலர் மாறி சென்று விட்டனர். அதிலிருந்தும் வெளிப்பட்டு வருவார்கள். இங்கு முக்கிய விசயம் தூய்மையாகும், அதனால் தான் அசுத்த மனிதர்கள் அவர்களை தங்களது குருவாக ஆக்கிக் கொண்டு தலை வணங்கு கின்றனர். பரமாத்மா சதா தூய்மையாக இருப்பவர். அவரை சம்பூர்ண நிர்விகாரி என்று கூற முடியாது. பரமாத்மாவின் மகிமை தனிப்பட்டது. சம்பூர்ண நிர்விகாரி …… என்று தேவதைகளின் மகிமை பாடப்படுகிறது. மறுபடியும் அவர்கள் அவசியம் விகாரிகளாக ஆகிவிடுவர். இந்த விசயங்களை புத்தியில் தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். யாதவர்கள் மற்றும் கௌரவர்கள்…… இராஜா, ராணியைப் போன்று அனைவரும் அழிந்து விட்டனர். மற்றபடி வெற்றியானது பாண்டவ சேனைகளுக்கு கிடைத்தது. அவர்கள் குப்தமாக இருந்தனர். பாண்டவர் கள் மலையில் சென்று மறைந்து விட்டதாக சாஸ்திரங்களில் காண்பித்திருக்கின்றனர். பிரளயம் என்ற கணக்கை உருவாக்கி விட்டனர். ஆனால் பிரளயம் ஏற்படுவது கிடையாது. நான் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன் என்று கீதையின் பகவான் கூறுகின்றார். தூய்மையான இராஜ்யத்தை உருவாக்க தூய்மையற்ற உலகில் வந்திருக் கின்றேன். இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கின்றேன். கண்காட்சிகளிலும் கூட இராஜயோகம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. புரிய வைப்பதில் தான் உங்களது முழு ஆதாரமும் இருக்கிறது. நாம் எப்படி இராஜயோகம் கற்றுக் கொள்கிறோம் என்ற சித்திரத்தை உருவாக்குங்கள் என்று பாபா கூறியிருக்கின்றார். மேலே சிவபாபாவின் சித்திரம் இருக்க வேண்டும். நாம் சிவபாபாவின் நினைவில் அமர்ந்திருக்கிறோம். அவரது வழிப்படி நடக்கிறோம். அவர் ஸ்ரீ ஸ்ரீ ருத்ரன், அவர் நம்மை சிரேஷ்ட மானவராக ஆக்குகின்றார். ஸ்ரீ ஸ்ரீ என்ற பட்டம் உண்மையில் அவருடையதாகும். இந்த பாரதம் இந்த அளவிற்கு ஏன் வீழ்ச்சியடைந்திருக்கிறது? ஒன்று ஈஸ்வரனை சர்வவியாபி என்று புரிந்து அமர்ந்திருக்கின்றனர் மற்றும் தன்னையே ஈஸ்வரன் என்று நினைக்கின்றனர்.
சத்குரு ஒரே ஒரு தந்தை தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது அவரது ஜென்ம பூமியாகும். உண்மையில் உண்மையான சத்திய நாராயணனின் கதையை தந்தை வந்து தான் கூறி படகை கரை சேர்க்கின்றார். பதீத பாவன் என்று நீங்கள் என்னைத் தான் கூறுகிறீர்கள் அல்லவா என்று தந்தை கூறுகின்றார். நான் தான் அனைவரையும் திரும்பி அழைத்துச் செல்ல வேண்டும். இது கடைசி நேரமாகும், இதில் தான் கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு நாம் திரும்பிச் செல்கிறோம். புது பாரதம், புது டெல்லி ஏற்பட வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். புது பாரதமாக சொர்க்கம் தான் இருந்தது. இப்போது நரகமாக இருக்கிறது அல்லவா! கீழானவர்களாக ஆகிக் கொண்டேயிருக்கின்றனர். இது புரிந்து கொள்ள வேண்டிய மற்றும் புரிய வைக்க வேண்டிய விசயமாகும். ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபத்தையும் யாரும் அறிய வில்லை. நான் ஆத்மா, பரமாத்மாவின் குழந்தை என்று கூறிக் கொள்ளலாம், ஆனால் ஞானம் வேண்டும் அல்லவா! தந்தையிடம் ஞானம் இருக்கிறது. ஆத்மாவிடம் ஞானம் எங்கிருக்கிறது! ஆத்மாக்களாகிய நாம் எவ்வளவு பிறவிகள் எடுக்கிறோம்? எங்கு இருக்கிறோம்! பிறகு எப்படி வருகிறோம்? ஏன் துக்கமானவர்களாக ஆகிறோம்? ……. என்று எதையும் புரிந்து கொள்வது கிடையாது. ஆத்மாக்களாகிய நம்மை தூய்மையாக்குவதற்காக பாபா வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆக அந்த தெய்வீக குணங்களும் வேண்டும். நான் தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறேன், ஆக எனக்குள் எந்த அவகுணங்களும் இருக்கக் கூடாது. இல்லையெனில் நூறு மடங்கு தண்டனை அடைய வேண்டியிருக்கும். தூய்மைக்கான உறுதிமொழி எடுத்த பின்பு யாராவது கெட்ட காரியம் செய்தால் 100 சதவிகிதம் அசுத்தமானவர் களாகவும் ஆகிவிடுகின்றனர். சேவைக்குப் பதிலாக மேலும் எளிதான காரியங்கள் செய் கின்றனர், அதனால் தான் பதவியும் குறைந்து விடுகிறது. எப்போதும் தங்களுக்குள் ஒருவருக் கொருவர் ஞான சம்மந்தமான கலந்துரையாடல் தான் செய்து கொள்ள வேண்டும். நாம் பாபாவிடம் முள்ளிலிருந்து மலராக ஆவதற்கு அதாவது மனிதனிலிருந்து தேவதை ஆவதற்காக, தந்தையிடமிருந்து சொர்க்க ஆஸ்தியடைவதற்காக பாபாவிடம் வந்திருக்கிறோம். இந்த விசயத்தை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ள வேண்டும். ஆத்மா மற்றும் பரமாத்மாவின் ரூபத்தை யாரும் அறியவில்லை. ஆத்மா பரமாத்மாவின் குழந்தை என்று கூறலாம். ஆனால் ஞானம் இருக்க வேண்டும், தாரணை இருக்க வேண்டும், யார் (மாயாவி) தவறான விசயங்களைக் கூறுகிறார்களோ, மற்றவர்களுக்கு துக்கம் கொடுக்கிறார்களோ அவர்கள் துரோகிகள் என்று கூறப்படு கின்றனர். அசுரர்களுக்கு ஞான அமிர்தம் கொடுக்கப் பட்டது, பிறகு அவர்கள் வெளியில் சென்று அசுத்தம் செய்ததாகவும் காண்பிக்கப்பட்டிருக்கிறது. பலர் ஞான அமிர்தமும் குடித்துக் கொண்டிருக் கின்றனர் மற்றும் தீங்கும் செய்து கொண்டிருக் கின்றனர். உண்மையில் நீங்கள் அனைவரும் கன்னிகைகள் ஆவீர்கள், அதர்குமாரியின் கோயிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தில்வாலா கோயில் உங்களது மிகச் சரியான நினைவுச் சின்னமாகும். உங்களிலும் கூட புத்தியில் பதிவது சிரமமாகத் தான் இருக்கிறது. புத்தி மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்போது ஈஸ்வரிய குடும்பத்தினர்களாக இருக்கிறீர்கள். ஆக எனது நடத்தை எவ்வளவு நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். இவர்களுக்கு உண்மையில் ஸ்ரீமத் கிடைக்கிறது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு உயர்ந்ததிலும் உயர்வானவராக ஆக வேண்டும், அப்போது தான் அங்கு பதவி கிடைக்கும். இங்கேயே உயர்வானவர்களாக ஆக வேண்டும். இல்லறத்தில் இருந்தாலும் இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) தூய்மையான உணவு சாப்பிட்டாலும் ஆத்மாவை தூய்மையாக்குவதற்காக நினைவிற் கான முயற்சி அவசியம் செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் மேன்மையானவர்களாக ஆக முடியும். விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும்.
2) இந்த கடைசி நேரத்தில் வீட்டிற்கு திரும்பச் செல்ல வேண்டும், ஆகையால் அனைத்து பழைய கணக்கு வழக்குகளை முடித்து விட வேண்டும். தங்களுக்குள் ஞான கலந்துரையாடல் செய்ய வேண்டும். தவறான (எதிர்மாறான) விசயங்களை பேசிக் கொள்ளக் கூடாது.
வரதானம்:-
தூய்மை என்ற இராயல்ட்டி தான் பிராமண வாழ்வின் சிறப்பு அம்சம் ஆகும். எப்படி உயர்ந்த குலத்தில் பிறந்த குழந்தையின் முகத்திலும், நடத்தையிலும் இவர் உயர்ந்த குலத்தை சார்ந்தவர் என்பது புலப்படும். அதே போன்று தூய்மையின் ஜொலிப்பு மூலம் பிராமண வாழ்க்கையினர் என்பது அறியப்பட வேண்டும். எப்பொழுது சங்கல்பத்திலும் கூட அபவித்திரம் என்பது பெயரளவு கூட வெளிப்படவில்லையோ, அப்பொழுது தான் உங்களுடைய நடத்தை மற்றும் முகத்தின் மூலம் தூய்மையின் ஜொலிப்பானது தென்படும். தூய்மை என்றால் எந்தவிதமான விகாரமோ, அசுத்தமான பிரபாவமோ இருக்கக்கூடாது. அப்பொழுது தான் சம்பூரணமான தூய்மை என்று கூறமுடியும்.
சுலோகன்:-
மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பான மகாவாக்கியம்
இந்த ஈஸ்வரிய சத்சங்கம் பொதுவான சத்சங்கம் அல்ல
நம்முடைய இந்த ஈஸ்வரிய சத்சங்கம் பொதுவான சத்சங்கம் கிடையாது. இது ஈஸ்வரிய பள்ளிக்கூடம், கல்லூரி ஆகும். இந்தக் கல்லூரியில் நாம் ரெகுலராகப் படிக்க வேண்டும். மற்றபடி, சத்சங்கம் மட்டும் செய்வதென்பது அங்கு செல்பவர்கள் கொஞ்ச சமயம் அங்கு சொல்வதைக் கேட்டு பின்பு பழையபடி எப்படி இருந்தார்களோ அப்படியே ஆகிவிடு கின்றனர். ஏனெனில், அங்கேயோ படிப்பு ரெகுலராகக் கிடைப்பதில்லை. இங்கேயோ பிராப்தி உருவாகிறது ஆகையினால், நம்முடைய சத்சங்கம் ஒன்றும் பொதுவான சத்சங்கம் அல்ல. நம்முடையதோ ஈஸ்வரிய கல்லூரி ஆகும். இங்கே பரமாத்மா நமக்குக் கற்பிக்கின்றார் மற்றும் நாம் அந்த படிப்பை முழுமையாக தாரணை செய்து உயர்ந்த பதவியை அடை கின்றோம். எவ்வாறு தினமும் பள்ளியில் மாஸ்டர், பாடம் கற்பித்து, பட்டம் கொடுக் கின்றாரோ, அவ்வாறே இங்கேயும் பரமாத்மா குரு, தந்தை, டீச்சர் ரூபத்தில் நமக்குக் கற்பித்து சர்வோத்தம தேவி, தேவதா பதவியைத் தருகின்றார். ஆகையினால், இந்தப் பள்ளியில் சேரவேண்டியது அவசியம். இங்கே எந்தமாதிரியான கல்வி கற்றுத் தரப்படுகிறது, இந்த கல்வியைப் படிப்பதன் மூலம் என்ன பிராப்தி கிடைக்கும் என்ற ஞானத்தை இங்கே வருபவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நமக்கு சுயம் பரமாத்மா வந்து பட்டத்தை தேர்ச்சி பெற வைக்கின்றார் மற்றும் பிறகு, ஒரு பிறவியிலேயே முழு படிப்பையும் படித்து முடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து கொண்டோம். யார் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை இந்த ஞானப் பாடத்தை முழுமையான முறையில் படிக்கின்றார்களோ, அவர்களே முழுமையாகத் தேர்ச்சி பெறுவார்கள். மற்றபடி யார் படிப்பில் இடையில் வருவார்களோ, அவர்கள் அந்தளவு ஞானத்தை அடைய முடியாது, அவர்கள் வருவதற்கு முன்பு என்ன பாடம் நடந்தது என்பது அவர்களுக்கு என்ன தெரியும்? ஆகையினால், இங்கே ரெகுலராகப் படிக்க வேண்டும், இந்த ஞானத்தை அறிந்துகொள்வதன் மூலமே முன்னேற முடியும். ஆகையினால், ரெகுலராகப் (தினமும்) படிக்க வேண்டும். நல்லது. ஓம் சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!