21 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

21 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

20 April 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! பாபாவின் நினைவில் இருப்பது என்பது மிக இனிப்பான மிட்டாயாகும். இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்துக் கொண்டே இருங்கள். அதாவது தந்தை மற்றும் ஆஸ்தியின் அறிமுகம் கொடுத்துக் கொண்டே இருங்கள்.

கேள்வி: -

நிலையான நினைவில் இருப்பதற்கான சகஜ விதி என்ன?

பதில்:-

நிலையாக நினைவில் இருக்க வேண்டுமானால் தேகம் முதற் கொண்டு அனைத்து சம்மந்தங்களையும் மறந்து விடுங்கள். நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் அமரும் போதும் எழுந்திருக்கும் போதும் நினைவில் இருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள். யோகத்தில் அமர்ந்திருக்கும் போது சிவப்பு ஒளி தரும் விளக்கும் கூட நினைவு வந்ததென்றால் யோகம் விடுபட்டு போகும். நிலையான நினைவு இருக்க முடியாது. குறிப்பாக யாராவது அமர்ந்து தான் யோகம் செய்ய வைக்க வேண்டும் என சொன்னால் அவர்களின் யோகமும் நிலையாக இருக்காது.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

இரவு நேரப்பயணிகளே களைத்துப் போகாதீர்கள்..

ஓம் சாந்தி. இது இப்போது யோகத்தின் (நினைவு யாத்திரை) விஷயமாகிறது. ஏனென்றால் இப்போது இரவு நேரம். இரவு என்று சொல்லப் படுவது கலியுகம். பகல் எனச் சொல்லப் படுவது சத்யுகம். நீங்கள் இப்போது கலியுகம் என்ற இரவில் இருந்து சத்யுகம் என்ற பகலுக்குச் செல்கிறீர்கள். அதனால் இரவை மறந்து பகலை நினைவு செய்யுங்கள். நரகத்தில் இருந்து புத்தியை விலக்க வேண்டும். புத்தி சொல்கிறது, நிச்சயமாக இது நரகம் தான். வேறு யாருடைய புத்தியும் இப்படி சொல்லாது. புத்தி இருப்பது ஆத்மா வில். ஆத்மா இப்போது அறிந்து கொண்டு விட்டது, பாபா இரவிலிருந்து நம்மைப் பகலுக்குக் கொண்டு செல்வதற்காக வந்துள்ளார். பாபா சொல்கிறார், ஆத்மாக்கள் நீங்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் முதலில் சாந்திதாமம் சென்று பிறகு சொர்க்கத்தில் வர வேண்டும். அதாவது நீங்கள் யோகி ஆகிறீர்கள், முதலில் வீட்டுக்குச் செல்ல, பிறகு இராஜதானிக்கு செல்லக் கூடிய நினைவு. இப்போது மரண உலகம், அதாவது இரவு முடிந்து விடப் போகிறது. இப்போது பகலுக்குச் செல்ல வேண்டும். இது ஈஸ்வரிய யோகம் எனச் சொல்லப் படுகிறது. ஈஸ்வரன் நிராகார் நமக்கு யோகம் கற்றுத் தருகிறார் அல்லது ஆத்மாக்களாகிய நமக்கு நிச்சயதார்த்தம் செய்விக்கிறார். இது ஆன்மிக யோகம். அது சரீர சம்மந்தமானது. குழந்தைகள் நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்து யோகம் செய்யக் கூடாது. அதுவோ மனிதர்கள் எப்படி தாங்கள் அமர் கின்றனரோ, அது போல் அனைவருக்கும் அமரக் கற்றுத் தருகின்றனர். இங்கே உங்களுக்கு எப்படி அமர வேண்டுமென்று கற்றுத் தரப்படுவதில்லை. ஆம், சபையில் விதிமுறைப் படி அமர வேண்டும். மற்றப்படி யோகத்திலோ எப்படி வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு, நடமாடும் போதும் சுற்றிவரும் போதும் தூங்கும் போதும் கூட யோகம் செய்ய முடியும். சிவபாபாவிடம் யோகம் (தொடர்பு) வைக்கின்றனர் என்றால் அவரது சித்திரத்தை உருவாக்குகின்றனர். இவர் நம்முடைய பாபா, நிராகாரி உலகமாகிய பரந்தாமத்தில் வசிக்கிறார் என்பதை அறிந்துள்ளனர். நாமும் அங்கே வசிப்பவர்கள் தான். ஆத்மாக்கள் நாம் அங்கே செல்ல வேண்டும் என்பது புத்தியில் நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். என்னைத் தபஸ்யாவில் அமர்த்தி வையுங்கள் என்று இருக்கக் கூடாது. யோகம் செய்ய வையுங்கள் என்று சொல்வதே தவறாகும். புத்தியற்றவர்கள் இது போல் சொல்வார்கள். குழந்தைகள் லௌகிக் தந்தையை, குறிப்பாக அமர்ந்து நினைவு செய்வார்களா என்ன? பாபா-பாபா எனச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒரு போதும் மறப்பதே இல்லை. சிறு குழந்தைகள் இன்னும் கூட அதிகம் நினைவு செய்கின்றனர். வாயிலிருந்து அந்த வார்த்தை வந்து கொண்டே இருக்கும். இங்கே பரலௌகிக் தந்தை ஏன் மறந்து போகிறது? புத்தியோகம் ஏன் விட்டுப் போகிறது? வாயினால் பாபா-பாபா என்று சொல்லவும் வேண்டாம். பாபாவை நினைவு செய்ய வேண்டும் என ஆத்மா அறிந்துள்ளது. குறிப்பாக அமர்ந்து செய்வதற்கான பழக்கம் இருக்குமானால் யோகம் (நினை வில்) வெற்றி அடையாது . இந்த ஈஸ்வரிய யோகம் உங்களுக்கு சுயம் ஈஸ்வரனே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். யோகேஷ்வர் எனச் சொல்கிறீர்கள் இல்லையா? உங்களுக்கு ஈஸ்வரன் யோகம் கற்றுத் தந்துள்ளார் – தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். எப்போது என்னை தீதி (ஆன்மிகப் பொறுப்பு சகோதரி) யோகத்தில் அமர்த்தி வைக்கிறாரோ, அப்போது தான் மஜா வருகிறது என்று இருக்கக் கூடாது. அப்படி செய்பவரது யோகம் ஒரு போதும் நிலையானதாக இருக்காது. ஹார்ட் ஃபெயிலாகின்ற கஷ்டம் ஏற்பட்டு விட்டால் அப்போது யாராவது யோகத்தில் அமர்த்தி வைப்பார்களா என்ன? இதுவோ புத்தி மூலம் நினைவு செய்வதாகும். மனிதர்கள் என்னென்ன யோக முறைகளை கற்றுத் தருகிறார்களோ, அவை தவறானவை. யோகி என்று இந்த உலகத்தில் யாருமே இல்லை. அப்படியானால் யாரை நினைவு செய்தாலும் அது யோகம் என்றாகிறது. மாம்பழம் நன்றாக இருக்கிறது என்றால் அதன் மீது யோகம் (ஈடுபாடு) ஆகி விடுகிறது. சிகப்பு ஒளி விளக்கில் நினைவு செய்தால் நன்றாக இருக்கிறது என்றால் அதுதான் நினைவு வரும். அப்போது அதன் மீதும் கூட யோகம் (நினைவு) ஆகி விடுகிறது. ஆனால் இங்கோ தேகத்தோடு கூடவே என்னென்ன சம்மந்தங்கள் உள்ளதோ, அவை அனைத்தையும் மறந்து என் ஒருவரிடம் யோகம் (நினைவின் தொடர்பை) வைப்பீர்களானால் உங்களுக்கு நன்மை ஏற்படும். மேலும் நீங்கள் விகர்மாஜீத் ஆகி விடுவீர்கள். பாபா தான் வந்து சத்கதிக்கான வழி சொல்கிறார். பாபாவைத் தவிர யாரும் சத்கதி அளிக்க முடியாது. மற்ற அனைவரும் துர்கதிக்கான வழி சொல்பவர்கள். சத்கதி தான் சொர்க்கம் எனச் சொல்லப்படுகிறது. மற்றப்படி முக்திதாமத்தில் ஆத்மாக்கள் உள்ளனர். அது வீடாகும். இச்சமயம் அனைவரையும் துர்கதியில் கொண்டு சேர்ப்பது – மனிதர்களின் வழிமுறை. நிராகார் தந்தை வந்து சத்கதி தருகிறார். பிறகு அரைக்கல்பம் நாம் சத்கதியில் இருக்கிறோம். அங்கே பகவானோடு சந்திப்பதற்கோ, முக்தி ஜீவன் முக்தி அடைவதற்கோ ஒவ்வோரிடமாக அலைவதில்லை. எப்போது இராவண இராஜ்யம் ஆரம்பிக்கிறதோ, அப்போது ஒவ்வொரு வாசலாகப் போய்த் தேடுவது ஆரம்பமாகிறது. ஏனென்றால் நாம் கீழே இறங்கி விடுகிறோம். பக்தியும் ஆரம்பமாகத் தான் வேண்டும். நீங்கள் அறிவீர்கள், இப்போது நாம் சரீரத்தை விட்டுப் பிறகு சிவாலயத்திற்குச் செல்வோம். சத்யுகம் என்பது எல்லையற்ற சிவாலயம். இச்சமயம் இருப்பது (விகார உலகம்) வைஷ்யாலயம். இந்த விசயங்களை நினைவு செய்ய வேண்டி யுள்ளது. சிவபாபாவை நினைவு செய்யவில்லை என்றால் அவர்கள் யோகி அல்ல. போகி ஆகிறார்கள். நீங்கள் யாரையாவது கேட்கச் சொல்கிறீர்கள் என்றால் நாங்கள் இரண்டு வார்த்தைகள் மட்டும் கேட்போம் என்பார்கள். இப்போது இரண்டு வார்த்தைகளோ மிகவும் புகழ் பெற்றவை. என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். இந்த இரண்டு வார்த்தைகளால் தான் ஜீவன்முக்தி கிடைக்கிறது. பாபா சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் நோயற்றவராக ஆகி விடுவீர்கள் மற்றும் சக்கரத்தை நினைவு செய்வீர் களானால் தனவான் ஆகி விடுவீர்கள். இரண்டு வார்த்தைகளால் நீங்கள் சதா ஆரோக்கிய மானவர்களாகவும் சதா செல்வந்தர்களாகவும் ஆகி விடுவீர்கள். சரியான விசயம் என்றால் அதன் படி நடக்க வேண்டும். இல்லையென்றால் புத்தியற்றவர் எனப் புரிந்து கொள்வார்கள். தந்தை (அலஃப்) மற்றும் ஆஸ்தி(பே) – இவை தாம் இரண்டு வார்த்தைகள். அலஃப் என்றால் அல்லா, பே என்பது படைப்பு. பாபா அலஃப், பே என்பது இராஜதானி. உங்களில் யாருக்காவது இராஜ்யம் கிடைக் கிறது. மேலும் சிலர் பிரஜையில் சென்று விடுகின்றனர். குழந்தைகள் நீங்கள் சார்ட் வைக்க வேண்டும் – நாள் முழுவதிலும் எவ்வளவு நேரம் பாபா மற்றும் ஆஸ்தியை நினைவு செய்தோம்? இந்த ஸ்ரீமத்தை பாபா தான் தருகிறார். ஆத்மாக்களுக்குத் தந்தை கற்பிக் கிறார். மனிதர்கள் பணத்துக்காக எவ்வளவு துன்பங்களை அடைகின்றனர். செல்வமோ பிரம்மா விடம் நிறைய இருந்தது. அலஃப்- தந்தையிடமிருந்து இராஜ்யம் கிடைக்கிறது என்பதைப் பார்த்தார், அப்போது இந்த செல்வம் என்ன செய்யும்? ஏன் அனைத்தையும் தந்தையிடம் அளித்து விட்டு அதற்கு பதிலாக இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது? பாபா இதைப் பற்றி ஒரு பாடலும் உருவாக்கியுள்ளார். அலஃபுக்கு (ஆதி தேவ் அதாவது பிரம்மா பாபா) அல்லா (பரமாத்மா) கிடைத்தார் பே-வுக்கு (பார்ட்னருக்கு பைசா) இராஜ்யம் கிடைத்தது… அதே சமயம் புத்தியில் வந்தது, நாமோ விஷ்ணு சதுர்புஜம் ஆக வேண்டும். நாம் இந்த செல்வத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம்? அவ்வளவு தான், பாபா புத்தியின் பூட்டைத் திறந்து விட்டார். இந்த (சாகார்) பாபாவோ செல்வம் சேர்ப்பதில் பிஸியாக இருந்தார். இராஜ்யம் கிடைக்கிறது எனும் போது அற்பமான காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? பிறகு பாபா பட்டினியாலோ சாகவில்லை. பாபாவிடம் யார் வருகிறார்களோ, அவர்களுக்கு மிக நல்ல பாலனை கிடைக் கின்றது. வீட்டில் பட்டினியால் இறந்திருப்பார்கள். இங்கே யார் ஸ்ரீமத் படி நடக்கின்றனரோ, அவர்களுக்கு பாபாவும் கூட மிக நல்ல உதவி புரிவார். பாபா சொல்கிறார், அனைவருக்கும் வழி சொல்லுங்கள் – எல்லையற்ற தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் சக்கரத்தின் ஞானத்தை நினைவு செய்வீர்களானால் உங்கள் துன்பம் விலகி விடும். படகோட்டி வந்துள்ளார், படகை அக்கரை சேர்ப்பதற்காக. அதனால் தான் பதீத-பாவனா, படகோட்டி என்று பாடு கின்றனர். ஆனால் யாரை நினைவு செய்ய வேண்டும் என்பது யாருக்குமே தெரியவில்லை. ஏனென்றால் சர்வவியாபி என சொல்லி விட்டுள்ளனர். ஒரு சிவனுடைய சித்திரத்தைத் தான் பகவான் என சொல்கின்றனர். பிறகு லட்சுமி-நாராயணர் அல்லது பிரம்மா, விஷ்ணு, சங்கரை பகவான் என்று ஏன் சொல்கின்றனர்? அனைவருமே தந்தையாகி விட்டால் ஆஸ்தியை யார் கொடுப்பார்? சர்வவியாபி என்று சொல்வதாலோ கொடுப்பவரும் இல்லை, பெறுபவரும் இல்லை. பிரம்மா மூலம் ஸ்தாபனை என்று எழுதப் பட்டுள்ளது. மேலே சிவன் நின்று கொண்டுள்ளார். சிவபாபா பிரம்மா மூலம் தேவதை ஆக்குகிறார் என்றால் பிரம்மாவும் தேவதை ஆவார். இந்தக் காரியம் ஒரு பாபாவுடையதாகும். அவருக்குத் தான் மகிமை – ஏக் ஓங்கார்.. அகால மூரத் . ஆத்மா அகால மூரத்தாக (அழியாததாக) உள்ளது. அதைக் காலன் விழுங்க மாட்டான். ஆக, பாபாவும் அகால மூரத். சரீரமோ, அனைவருடையதும் அழிந்து போகும். ஆத்மாவை ஒரு போதும் காலன் விழுங்குவதில்லை. அங்கே அகால மரணம் ஒரு போதும் நடப்பதில்லை. நாம் ஒரு சரீரம் விட்டு வேறொன்றை எடுக்க வேண்டும் எனப் புரிந்து கொண்டுள்ளனர். சொர்க்கத்தில் உள்ளனர் என்றால் நிச்சயமாகப் புனர்ஜென்மமும் சொர்க்கத்தில் தான் எடுப்பார்கள். இங்கோ அனைவரும் நரகவாசியாக உள்ளனர். சொல் கின்றனர், இன்னார் சொர்க்கத்திற்குச் சென்று விட்டனர் . அப்படியானால் நிச்சயமாக முதலில் நரகத்தில் தான் இருந்தனர் என்று அர்த்தம். இவ்வளவு சுலபமான விஷயம் கூடப் புரிந்து கொள்வதில்லை. சந்நியாசிகளுக்குக் கூடத் தெரியாது. அவர்களோ ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகி விட்டதாக சொல்லி விடுகின்றனர். பாரதவாசி பக்தர்கள் பகவானை நினைவு செய்கின்றனர். இல்லறவாசிகள் பக்தர்கள். ஏனென்றால் பக்தி இல்லறவாசிகளுக்காகவே உள்ளது. அவர்களோ (சந்நியாசிகள்) தத்துவ ஞானிகள். தாம் தத்துவத்திடம் யோகம் (நினைவால் தொடர்பு) வைத்து அதில் ஐக்கியமாகி விடுவோம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். அதன்படி அவர்கள் ஆத்மாவையும் அழியக்கூடியது என ஏற்றுக் கொண்டுள்ளனர். சத்தியத்தை ஒருபோதும் பேச மாட்டார்கள். சத்தியமானவர் ஒரு பரமாத்மா மட்டுமே. உங்களுக்கு இப்போது சத்தியத்துடன் தொடர்பு உள்ளது. ஆக, மற்ற அனைத்தும் பொய்யானவை. கலியுகத்தில் சத்தியத்தை சொல்லக்கூடிய மனிதர்கள் கிடையாது. படைப்பவர் மற்றும் படைப்பினைப் பற்றி யாருமே சத்தியம் பேசுவதில்லை. பாபா சொல்கிறார், இப்போது நான் உங்களுக்கு அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைச் சொல்கிறேன். முக்கியமான கீதையில் கூட பரமாத்மாவுக்கு பதிலாக மனிதரின் பெயரைப் போட்டு விட்டுள்ளனர். கிருஷ்ணர் இப்போது கருப்பாக (தூய்மை யற்றவராக) உள்ளார். இப்போது கிருஷ்ணருக்கும் இது போல் சித்திரத்தை உருவாக்க வேண்டும். அதை வைத்து மனிதர்கள் புரிந்து கொள்வார்கள். இரண்டு வண்ணம் கொடுக்க வேண்டும். ஒரு பக்கம் கருப்பு வண்ணம் இன்னொரு பக்கம் வெள்ளை வண்ணம் பிறகு அதைப் பற்றிப் புரிய வைக்க வேண்டும்-காமசிதையில் அமர்வதன் மூலம் கருப்பாகி விடுகின்றனர். பிறகு ஞான சிதையில் அமர்வதால் வெள்ளையாகி விடுகின்றனர். துறவற மற்றும் இல்லற மார்க்கம் இரண்டையும் காட்ட வேண்டும். இரும்பு யுகம் பிறகு தங்க யுகமாக ஆகிறது. தங்கத்திற்குப் பிறகு வெள்ளி, செம்பு யுகம் வருகிறது. ஆத்மா சொல்கிறது, முதலில் நான் காமசிதையில் இருந்தேன். இப்போது நான் ஞான சிதையில் அமர்ந்துள்ளேன். இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், நாம் தூய்மை இல்லாமலிருந்து இப்போது பரிஸ்தா (தேவதை) ஆகிக் கொண்டிருக்கிறோம். யோகத்தில் பாபா நினைவில் அமர்ந்து நீங்கள் எந்த ஒரு பொருளை செய்தாலும் அது ஒரு போதும் கெட்டுப் போகாது. புத்தி சரியாக இருக்குமானால் உதவி கிடைக்கும். ஆனால் இது கஷ்டம். (பிரம்மா) பாபா சொல்கிறார், நானும் மறந்து போகிறேன். மிகவும் கடினமான பந்தயம் போன்றது இது. மிக நன்றாக அப்பியாசம் செய்ய வேண்டும். நிலையான நினைவு இருக்க முடிவதில்லை. நடமாடும் போதும் சுற்றி வரும் போதும் நினைவில் இருப்பதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும். கழிவறையில் இருக்கும் போதும் கூட நினைவு செய்ய முடியும். நினைவினால் பலம் கிடைக்கிறது. இச்சமயம் உண்மை யான நினைவு பற்றி யாருக்கும் தெரியாது. பாபாவைத் தவிர யாரெல்லாம் யோகம் செய்வதற்குக் கற்பிக்கின்றனரோ, அது தவறாகும். பகவான் எப்போது யோகம் கற்பித்தாரோ, அப்போது சொர்க்கம் உருவானது. மனிதர்கள் எப்போது யோகம் கற்றுத்தரத் தொடங்கினரோ, அப்போது சொர்க்கம் நரகமாக ஆகி விட்டது. யாராவது தலைகீழான நடத்தை கொஞ்சம் நடக்கின்றனர் என்றால் புத்தியின் பூட்டு பூட்டப்பட்டு விடுகிறது. 10-15 நிமிடங்கள் கூட நினைவில் இருக்க முடிவதில்லை. இல்லையென்றால் வயதானவர்களுக்கு, குழந்தைகளுக்கு, நோயாளிகளுக்கும் கூட மிகவும் சுலபம்.இது மிக நல்ல இனிப்பு. ஊமையாக இருந்தாலும் கூட அவர்களும் ஜாடையால் புரிந்து கொள்ள முடியும். பாபாவை நினைவு செய்வீர்களானால் இந்த ஆஸ்தி கிடைக்கும். யாராவது வந்தால் சொல்லுங்கள், நாங்கள் உங்களுக்கு வழி சொல்கிறோம்- எல்லையற்ற தந்தை, சொர்க்கத்தைப் படைப்பவரிடம் இருந்து சொர்க்கத்தின் சதா சுகத்திற்கான ஆஸ்தி எப்படிக் கிடைக்கிறது . இந்தச் சின்னச் சின்னத் துண்டறிக்கைகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும். மனதில் அதிக ஊக்கம் இருக்க வேண்டும். எந்த ஒரு தர்மத்தைச் சேர்ந்தவர்கள் வந்தாலும் நாம் இது போல் புரிய வைக்க வேண்டும். பாபா சொல்கிறார், இந்த தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டு விடுங்கள். என்னை நினைவு செய்வீர்களானால் விகர்மங்கள் விநாசமாகும். நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள். அவ்வளவு தான், இது அனைத்திலும் நல்ல முதல் தரமான விஷயமாகும். இரண்டே வார்த்தைகள் – அலஃப்(தந்தை) மற்றும் பே(ஆஸ்தி). நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தன்னிடமுள்ள அனைத்தையும் அலஃப்-தந்தையிடம் ஒப்படைத்து ஆஸ்தியாகிய இராஜ்யத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பாபா மற்றும் ஆஸ்தியின் நினைவு எவ்வளவு நேரம் இருந்தது? இந்த கணக்கு (சார்ட்) வைக்க வேண்டும்.

2. எந்த ஒரு தலைகீழான நடத்தையும் இருக்கக் கூடாது. நிலையாக நினைவில் இருப்பதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும்.

வரதானம்:-

ஒருவேளை உள்ளுக்குள் ஏதாவது குறை இருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை புரிந்துக் கொண்டு நிவாரணம் (தீர்வு) செய்யுங்கள். ஏனெனில் என்ன பலவீனம் நம்மிடம் இருக்கிறதோ, அந்த பலவீனத்தின் மூலம் மாயா நம்மை மாயாவை வென்றவர் ஆகவிடாது என்பது மாயாவின் நியமமாக இருக்கிறது. மாயா அந்த பலவீனத்தின் இலாபத்தை எடுத்துக் கொள் கிறது, மேலும் கடைசி நேரத்திலும் அதே பலவீனம் ஏமாற்றம் அளித்து விடுகிறது. ஆகையால் அனைத்து சக்திகளின் ஸ்டாக்கை சேமிப்பு செய்யுங்கள். சக்திசாலியான ஆத்மாவாக ஆகுங்கள். மேலும் யோகத்தின் பிரோயகம் (பயன்படுத்துதல்) மூலம் ஒவ்வொரு பலவீனத்தையும் முடித்து விட்டு, முழுமையானவர் ஆகிவிடுங்கள். இப்பொழுது இல்லையேல் எப்பொழுதும் இல்லை என்ற சுலோகனை நினைவில் வையுங்கள்.

சுலோகன்:-

மாதேஸ்வரி அவர்களின் விலைமதிப்பு நிறைந்த மகாவாக்கியங்க:ள் – தனது உண்மையான இலட்சியம் என்னவாக இருக்கிறது?

தனது உண்மையான இலட்சியம் என்ன என்பதை முதலில் தெரிந்திருக்க வேண்டும். அதையும் நல்ல முறையில் புத்தியில் தாரணை செய்ய வேண்டும், அப்பொழுது தான் முழுமையாக அந்த இலட்சியத்தில் நிலைத்திருக்க முடியும். தனது உண்மையான இலட்சியம் – நான் ஆத்மா அந்த பரமாத்மாவின் வாரிசாக இருக்கிறேன். உண்மையாக கர்மாதீத் நிலையில் இருக்கிறேன், அதன் பிறகு நம்மை நாமே மறந்த காரணத்தினால் கர்மபந்தனத்தில் வந்துவிட்டோம். இப்பொழுது மீண்டும் அந்த நினைவு வருவதின் மூலம், இந்த ஈஸ்வரிய யோகத்தில் இருப்பதினால் நாம் செய்துள்ள விகர்மங்கள் அழிந்துக் கொண்டிருக்கிறது. எனவே நம்முடைய இலட்சியம் ஆகிவிட்டது நான் ஆத்மா பரமாத்மாவின் வாரிசாக இருக்கிறேன். மற்றப்படி வேறு யாராவது தன்னை நாம் தான் தேவதை எனப்புரிந்து அந்த இலட்சியத்தில் நிலைத்திருந்தால் பரமாத்மா வின் சக்தி கிடைக்காது. பிறகு நம்முடைய விகர்மங்கள் விநாசம் ஆக முடியாது. இப்பொழுது இந்த ஞானம் நம்மிடம் முழுமையாக இருக்கிறது. நான் ஆத்மா பரமாத்மாவின் வாரிசாக கர்மாதீத் நிலையை அடைந்திருக்கிறேன். எதிர்காலத்திற்கு சென்று ஜீவன்முக்தியான தேவி தேவதை பதவியை அடைகிறேன். இந்த இலட்சியத்தில் இருப்பதினால் தான் அவரிடமிருந்து சக்தி கிடைக்கிறது. எனவே இப்பொழுது மனிதர்கள் சுகம், சாந்தி, தூய்மையாக இருக்க வேண்டும் என்று மனிதர்கள் விரும்புகிறார்கள். அதுவும் முழுமையாக யோகம் இருக்கும் பொழுது தான் அடைய முடியும் மற்றப்படி தேவதை பதவி என்பது தனது எதிர்காலத்தின் பாக்கியமாகும். தனது முயற்சி என்பது தனிப்பட்டது, தனது பாக்கியம் தனிப்பட்டதாகும். எனவே இந்த இலட்சியம் தனிப்பட்டதாக இருக்கிறது, நான் தூய்மையான ஆத்மாவாக இருக்கிறேன், நான் பரமாத்மா ஆக போகிறேன் என்ற இந்த இலட்சியத்தில் தன்னை கொண்டு வரவேண்டாம். ஆனால் நமக்கு பரமாத்மாவோடு நினைவு ஏற்படுத்தி தூய்மையான ஆத்மா ஆக வேண்டும், மற்றப்படி ஆத்மாவை பரமாத்மா என்று சொல்ல முடியாது. நல்லது- ஒம்சாந்தி.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Scroll to Top