13 April 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
12 April 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இல்லற விவகாரங்களில் இருந்தபடியே அற்புதம் செய்து காண்பிக்க வேண்டும். (சிரேஷ்டாச்சாரி) சிறந்த தேவதைகளாக ஆவதற்கும் மற்றும் ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.
கேள்வி: -
இராஜ்யத்தினுடைய ஆஸ்தியின் அதிகாரம் எந்த குழந்தைகளுக்கு (பிராப்தி) கிடைக் கிறது?
பதில்:-
யார் தந்தையின் நெருங்கிய சம்பந்தத்தில் வருகிறார்களோ, தங்களது நடத்தை மற்றும் வருவாய் பற்றிய முழுமையான சமாசாரத்தை தந்தைக்கு அளிக்கிறார்களோ, அப்பேர்ப்பட்ட நேரிடையான குழந்தைகள் தான் இராஜ்யத்தின் ஆஸ்தியினுடைய அதிகாரத்தைப் பெறுகிறார் கள். யார் தந்தைக்கு முன்னால் வருவதே இல்லையோ, தங்களது சமாசாரத்தைக் கூறுவதே இல்லையோ, அவர்களுக்கு இராஜ்யத்தின் ஆஸ்தி கிடைக்க முடியாது. அவர்கள் மாற்றான் தாய் குழந்தைகள் ஆவார்கள். குழந்தைகளே தங்களுடைய முழுமையான சமாசாரத்தை கொடுத்தீர்கள் என்றால், இவர்கள் என்ன சேவை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பாபா புரிந்து கொள்வார் என்று பாபா கூறுகிறார். பாபா குழந்தைகளை ஒவ்வொரு நிலைமையிலும் உயர்ந்த பதவியை அடைவதற்கான முயற்சி செய்விக்கிறார்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
யார் இன்று என் மன வாசலுக்கு வந்தார் ..
ஓம் சாந்தி. பரமபிதா பரமாத்மா சிவனுடன் நமக்கு என்ன சம்மந்தம் உள்ளது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். பரமபிதா என்றே கூறுகிறார்கள். பதீத பாவனர் என்ற வார்த்தை யும் போட்டு விடுங்கள். பதீத பாவன பரமபிதா பரமாத்மா சிவனுடன் நமது சம்பந்தம் தந்தை யினுடையது ஆகும் என்பது மனதில் உள்ளது. நான் குழந்தைகளுக்கு முன்னால் வெளிப் படுகிறேன் என்று தந்தை கூறுகிறார். தந்தை குழந்தைகளிடம் தான் ஆன்மீக உரையாடல் நிகழ்த்துகிறார், சந்திக்கிறார். என்ன விஷயங்கள் புரிய வைக்கப்படுகிறதோ, அவற்றைப் பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். இப்பொழுது நீங்கள் ஜகதம்பா மற்றும் ஜகத்பிதாவையும் அறிந்துள்ளீர்கள். சிவனுக்கு ஜகத்பிதா என்று கூற மாட்டார்கள். ஏனெனில் ஜகத்தில் இருப்பவர்கள் பிரஜைகள். எனவே பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகத் அம்பா என்று கூறப்படுகிறது. முழு ஜகத்திற்கும் அம்பா. இதிலிருந்து அவர் (சிவபாபா) படைப்புகர்த்தா ஆவார் என்பது நிரூபணம் ஆகியது. இதுவும் அறிதல் வேண்டும். மனிதர்கள் எல்லோரும் பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். ஆனால் அறியாமல் உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது பரமபிதா பரமாத்மாவை, ஜகதம்பாவை, பிரஜாபிதா பிரம்மாவை அறிந்துள்ளீர்கள். அவர்களுக்கு குழந்தைகளாக ஆகி உள்ளீர்கள். லௌகீக தாய் தந்தை எல்லோருக்கும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜகத் அம்பா, ஜகத் பிதா என்று கூறமாட்டார்கள். ஜகத் அம்பா, ஜகத் பிதா வாழ்ந்து சென்றுள்ளார்கள். இச்சமயம் மீண்டும் நீங்கள் வந்து அவர்களுடையவராகி உள்ளீர்கள். மீண்டும் சரித்திரம், பூகோளம் (ரிபீட்) திரும்ப நடைபெற்று கொண்டிருக் கிறது. நாம் இப்பொழுது தந்தையிடமிருந்து ஆஸ்தியை எடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் ஆவார். சொர்க்கத்தில் இலட்சுமி நாராயணரின் ஆட்சி இருந்தது. உங்களுக்குக் கூட அரசாட்சி கிடைத்திருந்தது. இப்பொழுது மீண்டும் நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே பரமபிதா பரமாத்மாவை அறிந்திருக்கிறீர்களா என்று நீங்கள் கேட்க வேண்டும். இந்த விஷயம் எப்பேர்ப்பட்டது என்றால் புரிந்திருந்தும் கூட மறந்து விடுகிறார்கள். தன்னை தானே மறந்து, தாய் தந்தையை மறந்து, ஆஸ்தியை இழந்து விடு கிறார்கள். இது இருப்பதே போர்க்களமாக. நீங்கள் இச்சமயத்தில் மாயை மீது வெற்றி அடைவதற்காக யுத்த களத்தில் நின்றுள்ளீர்கள். முடிவு வராதவரை யுத்தம் நடந்து கொண்டே இருக்கும். நாங்கள் நினைத்தால் ஒரு நொடியில் எல்லோரையுமே இல்லாமல் செய்து விடுவோம் என்று அந்த போர்ப் படையினரும் நினைக்கிறார்கள். இப்பொழுது ஒருவருக் கொருவர் ஆயுதங்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கடன் வழங்கி கொண்டே இருக்கிறார்கள். யாராவது கொன்று விட்டார்கள் என்றால், கடன் முடிந்து போய் விடும். பாபா கூட பத்திரிகைகளைப் படிக்கிறார். குழந்தைகள் கூட பத்திரிகைகளை படித்து அதன் மூலம் சேவை செய்ய வேண்டும். பாபா நீங்கள் எஜமானர் ஆவீர்கள். பின் நீங்கள் ஏன் ரேடியோ கேட்கிறீர்கள் என்று பாபாவிடம் கேட்க வேண்டும். இப்பொழுது குழந்தைகளே, எஜமானர் சிவ பாபா ஆவார். வாயு மண்டலம் என்னவாக இருக்கிறது. எதுவரை சண்டை ஆகியவற்றின் அறிகுறிகள் உள்ளன என்பது எனக்கு எப்படித் தெரிய வரும். இச்சமயத்தில் பொய் நிறைய பேசு கிறார்கள். நல்லொழுக்க குழு ஆகியவை அமைக்கிறார்கள். இந்த உலகமே (பிரஷ்ட்டாச் சாரி) இழிந்த நிலையில் உள்ளது என்று அவர்களுக்கு எழுத வேண்டும். நல்லொழுக்கமானவர் என்று யார் எப்படி இருக்க முடியும்? பிரஷ்ட்டாச்சாரி என்று விகாரி களுக்குக் கூறப்படுகிறது. இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளிலும் கூட வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். பரமபிதா பரமாத்மாவுடன் உங்களுக்கு என்ன சம்மந்தம் உள்ளது என்று நீங்கள் எல்லோரையும் கேளுங்கள். எப்படி கிறிஸ்து குறிப்பிட்ட இந்த காலத்தில் பிறந்தார் என்பதை கிறித்தவர்கள் அறிந்துள்ளார்கள். நல்லது. அதற்கு முன்பு யார் இருந்தார்கள்? இலட்சுமி நாராயணர் ஆட்சி புரிந்து எவ்வளவு காலம் ஆகி உள்ளது? இச்சமயத்தில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினரே தர்மம் கெட்டு, கர்மம் செய்வதிலும் தாழ்ந்தவர்களாக ஆகி விட்டுள்ளார்கள். சாஸ்திரங்களில் தான் இலட்சக்கணக்கான வருடங்கள் என்று கூறி விட்டுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் விழித்துக் கொண்டு விட்டுள்ளீர்கள். பின் மற்றவர்களையும் விழிப்படையச் செய்ய வேண்டும்.
சிவன் நமது தந்தை ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பிரஜாபிதா பிரம்மா மற்றும் ஜகதம்பா கூட நமது மம்மா பாபா ஆவார்கள். பிறகு இலட்சுமி நாராயணருக்கு சத்யுகத்தின் ஆஸ்தி எங்கிருந்து கிடைத்தது என்று கேட்கப்படுகிறது. 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டுள்ளது. ஆஸ்தி கிடைத்திருந்தது. இப்பொழுது இல்லை. இப்பொழுது கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது சரித்திரம் திரும்ப நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது எல்லோருக்கும் தந்தையின் செய்தியை எப்படி அளிப்பது? வீட்டுக்கு வீடு தண்டோரா அடிக்கலாமா? நல்லது. விளம்பர பலகை கூட வைக்கலாம். ஏனெனில், நீங்கள் மாஸ்டர் அவினாஷி சர்ஜன் (மருத்துவர்) ஆவீர்கள். பரமபிதா பரமாத்மா நிராகாரமானவர் ஆவார். இப்பொழுது சிவபாபா யாருடைய சரீரத்தில் ஜென்மம் எடுத்தார் என்பது யாருக்குமே தெரியாது. கிருஷ்ணருடைய சரீரத்தில் பிரவேசம் செய்து ஜென்மம் எடுத்தார் என்று கூட கூற முடியாது. அவர் நமது பரமபிதாவும் ஆவார். பின் நமது ஆசிரியரும் ஆவார் என்பதை நீங்கள் வரிசைக்கிரமமாக அறிந்துள்ளீர்கள். நமக்கும் மிகவும் நல்ல கல்வியை அளித்துக் கொண்டிருக் கிறார். பாபா மீண்டும் கல்பத்திற்குப் பின்னர் வந்து சந்தித்துள்ளார். மிக உறுதியான பக்குவமான நிச்சயம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். வீட்டிற்குச் சென்ற பிறகு உடனேயே அந்த போதை மறந்து போய் விடுகிறது. இல்லறத்தில் இருக்கையிலும், தொழில் ஆகியவை செய்யும் பொழுதும் கூட எதுவரை போதை இருக்கிறது என்பதை அவசியம் தந்தைக்கு எழுத வேண்டும். ஆனால் குழந்தைகள் தந்தைக்கு முழுமையான சமாசாரம் கொடுப்பதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை முழுமையாக அறிந்துள்ளீர்கள். எனவே தந்தைக்கு கூட உங்களைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். அவர் உங்களது பாட்டனார் ஆவார். எனவே அவருக்கு உங்களுடைய நடத்தை மற்றும் வருவாய் பற்றி முழுக்க முழுக்க தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுது தானே ஆலோசனை வழங்குவார். சிவபாபா (அந்தர்யாமி) அனைத்தும் அறிந்தவர் என்று நீங்கள் கூறலாம். ஆனால் இந்த பிரம்மா எப்படி தெரிந்து கொள்வது. ஒரு சிலர் பாபாவிற்கு முன்னால் வருவதே இல்லை. எனவே இவர் மாற்றாந்தாய் குழந்தை ஆவார் என்றாகிறது. ஆக இராஜ்யத்தில் ஆஸ்தியை அவர்களால் பெற முடியாது. ஸ்ரீமத்படி நடக்க வேண்டும் என்றால் முழுமையான சமாசாரம் கொடுக்க வேண்டும். குழந்தைகள் கூட தந்தையினுடைய அனைத்தையும் தெரிந்து கொண்டு விடுகிறார்கள். தந்தைக்குக் கூட சமாசாரம் கொடுக்க வேண்டும். இது நம்முடைய ஆன்மீக இல்லற விவகாரத்தின் சம்மந்தமாகும்.
இது ஆன்மீக ஈசுவரிய குடும்பமாகும். சுப்ரீம் ஆத்மா உடன் அனைத்து ஆத்மாக்களின் சம்மந்தம் உள்ளது அல்லவா? நீங்கள் இந்த இலட்சுமி நாராயணரை அறிந்திருக்கிறீர்களா? என்று எல்லோரிடமும் இந்த கேள்வியைக் கேளுங்கள். நீங்கள் சத்யுகத்தின் (சிரேஷ்டாச்சாரி) சிறந்த தேவி தேவதைகளை அறிந்துள்ளீர்களா? இந்த எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்வதால் நீங்கள் சிரேஷ்டாச்சாரியாக ஆக முடியும் என்று நீங்கள் எழுதலாம். இல்லை என்றால் ஒரு பொழுதும் ஆக முடியாது. இப்படி இப்படி எல்லாம் வேலை செய்வதால் நீங்கள் உயர்ந்த பதவியை அடைய முடியும். ப்ரஷ்டாச்சாரியை (இழிந்தவர்களை) சிரேஷ்டாச்சாரியாக (சிறந்தவர்களாக) ஆக்குவது இது உங்களுடைய தொழிலாகும். பின் ஏன் நீங்கள் விளம்பரப் பலகை வைப்பதில்லை. கணவன் மனைவி இருவரும் இந்த சேவையில் உள்ளார்கள். பாபா டைரக்ஷன் (உத்தரவு) கொடுக்கிறார். ஆனால் குழந்தைகள் பின் மறந்து விடுகிறார்கள். தங்களுடைய தொழிலிலேயே ஈடுபட்டு விடுகிறார்கள். செய்ய வேண்டிய சேவையை செய்வதே இல்லை. முழுமையாக சமாசாரம் கொடுப்பதும் இல்லை. பலகையும் வைப்ப தில்லை. (போர்டு) பலகை வைக்கவில்லை. சேவை செய்யவில்லை என்றால் தேக அபிமானம் நிறைய உள்ளது என்று நினைப்பார். முரளியை எல்லோரும் கேட்கிறார்கள். பாபா என்ன கூறுகிறார். அநேக ஆலோசனைகள் கிடைக்கின்றன. கண்காட்சிக்காக பாபா கூறுகிறார். குழந்தைகளே வெப்பம் இருக்கிறது என்றால் மலைகளுக்கு போய் ஏற்பாடு செய்யுங்கள். இப்பொழுது பாபா எங்களால் இந்த ஏற்பாடு செய்ய முடியும் என்று எங்கிருந்தாவது சமாசாரம் வருகிறதா என்று பார்ப்போம். விவரங்கள் தெரிந்தது என்றால் போய் மண்டபம் அல்லது சத்திரம் எடுத்து ஏற்பாடு செய்ய வேண்டும். அப்பொழுது அநேகருக்கு செய்தி கிடைக்கும். இங்கும் பலகை வைக்கப் பட்டிருக்க வேண்டும் – ஞானக் கடல் பதீத பாவனர் நிராகார பரமாத்மா உடன் உங்களுக்கு என்ன சம்மந்தம் உள்ளது? பின் ஜகதம்பா மற்றும் ஜகத் பிதா உடன் உங்களுக்கு என்ன சம்மந்தம் உள்ளது. அவர்கள் என்ன கொடுப்பார்கள்? அவசியம் உலகிற்கு அதிபதியாக ஆக்குவார்கள். உண்மையில் நீங்கள் இப்பொழுது ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். முந்தைய கல்பத்திலும் ஆகி இருந்தீர்கள். நீங்கள் இந்த பலகையில் எழுதி விடுங்கள். அப்போது மற்ற எல்லா கேள்விகளும் முடிந்து போய் விடும். இலட்சுமி நாராயணருக்கு இந்த உலக அதிபதி என்ற அதிகாரத்தின் ஆஸ்தி எப்படி கிடைத்தது? கேள்வி கேட்பவரோ அவசியம் அறிந்திருக்கக் கூடும். இந்த அளவிற்கு சேவை செய்யவில்லை என்றால், சிம்மாசனத்தின் மீது எப்படி அமருவீர்கள். இது நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான இராஜயோகம் ஆகும். பிரஜை ஆவதற்கானது அல்ல. நீங்கள் இங்கு பிரஜையாக ஆக வந்துள்ளீர்களா என்ன? பாபாவிடம் சமாசாரம் வந்தது என்றால், இவர்கள் சேவை செய்து கொண்டிருக் கிறார்கள் என்று பாபா புரிந்து கொள்வார். வீட்டின் சமாசாரமும் கொடுப்பதில்லை, சேவையின் சமாசாரம் கூட கொடுப்பதில்லை என்றால், இவர்கள் வெற்றி மாலையில் வருவார்களா என்று எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? நிச்சயபுத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள். சந்தேக புத்தி உடையவர்கள் அழிந்து விடுவார்கள்.
இப்பொழுது நம்முடைய இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அந்த இராஜதானியில் உயர்ந்த பதவியை அடைவதற்காக குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். ஆனால் ஒருவருடைய அதிர்ஷ்டத்தில் இல்லையென்றால் ஆசிரியர் என்ன செய்ய முடியும்? நீங்கள் தான் இது போன்ற தவறான கர்மம் செய்துள்ளீர்கள். எனவே நீங்கள் அவற்றை அனுபவிக்க வேண்டி உள்ளது. மம்மா நல்ல கர்மம் செய்துள்ளார். ஆக எவ்வளவு நல்ல கவனத்துடன் மம்மா உயர்ந்த பதவியை அடைந்தார். குழந்தைகளாகிய நீங்கள் எப்பேர்ப்பட்ட நிலைமையிலும் நிறைய முயற்சி செய்ய வேண்டும். (போர்டு) பலகை அமைத்து வைக்க வேண்டும். மேலும் சிறு சிறு துண்டு பிரசுரங்கள் தயாரித்து பகிர்ந்து கொடுத்து விநியோகிக்க வேண்டும் என்று பாபா ஆலோசனை அளித்துள்ளார். இந்த இலட்சுமி நாராயணரை அறிந்து கொள்வதால் நீங்கள் இந்த சிரேஷ்டாச்சாரி தேவதை ஆகி விடுவீர்கள் என்று துண்டு பிரசுரங்களில் அச்சடிக்க வேண்டும். சுபமான காரியத்தில் தாமதம் செய்யக் கூடாது. இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் நிறைய சேவை செய்ய வேண்டும். இல்லற விவகாரங்களில் இருந்தபடியே அற்புதம் செய்து காண்பிக்க வேண்டும். ஒரு பொழுதும் விட்டு விடுவதற்கான எண்ணம் வரக் கூடாது. பாபா நமக்கு பிரம்மா மூலமாக கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சிவபாபா பாரதத்தில் வந்திருக்கிறார் என்றால் நிராகாரமானவர் வந்தாரா என்ன? எப்படி வந்தார்? என்ன செய்தார்? யாருக்குமே தெரியவே தெரியாது, சிவராத்திரி கொண்டாடு கிறார்கள். சிறிதளவு கூட தெரியாது. பரமாத்மா வருவதே தூய்மையாக ஆக்குவதற்கு.
ஏதாவதொரு விஷயத்தில் குழம்புகிறீர்கள் என்றால் பாபா எங்களுக்கு இந்த விஷயம் புரிவதில்லை என்று கேளுங்கள் என்று பாபா கூறுகிறார். 84 பிறவிகளின் இரகசியம் கூட புரிய வைத்துள்ளார். வர்ணங்களில் கூட வர வேண்டி உள்ளது. நீங்கள் இதை தாரணை செய்கிறீர்கள். உண்மையில் நாம் இது போல 84 பிறவிகள் எடுத்துள்ளோம். இப்பொழுது மீண்டும் நாம் சூரிய வம்சத்தினர் ஆகிறோம். யார் எந்த அளவிற்கு முயற்சி செய்கிறார்களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவார்கள். எவ்வளவு சுலபமான விஷயம் ஆகும். பிறகும் புத்தியில் பதிவதில்லை என்றால் வந்து கேளுங்கள் – பாபா நாங்கள் இந்த விளக்கங்கள் பற்றி குழம்புகிறோம். முதன் முதலில் அல்ஃப் – தந்தை பற்றிய அறிமுகம் கொடுக்க வேண்டும். இந்த பலகையை எல்லோரும் போட வேண்டும் – இந்த ஞானத்தின் மூலமாக நீங்கள் சதா சுகமுடையவர்களாக சிரேஷ்டாச்சாரியாக ஆகி விடுகிறீர்கள். எனவே இது நல்லது ஆகும் அல்லவா? நாம் ஏன் இப்பேர்ப்பட்ட விஷயத்தைப் புரிந்து கொள்ள கூடாது என்ற தூண்டுதல் ஏற்படும். யார் யார் நல்ல குழந்தைகள் ஆவார்கள் என்பதை பாபா சேவை மூலம் புரிந்து கொண்டு விடுவார். யார் கவனம் கொடுக்கிறார்களோ அவர்களே மாலையின் மணி ஆகிறார்கள். செய்து காண்பிக்க வேண்டும். நீங்கள் நடைமுறையில் முன்னால் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். மற்ற குழந்தைகள் முரளி மூலமாக கேட்பார்கள். இவை எல்லாமே புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும். பரமாத்மா தந்தையும் ஆவார். மீண்டும் பதீத (தூய்மையற்ற) நிலையிலிருந்து பாவனமாக ஆக்கி அழைத்துச் செல்கிறார். எனவே, குரு ஆகி விடுகிறார். சிருஷ்டியினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானத்தை ஆசிரியராகி கற்பிக்கிறார். எனவே மூவருமாக ஆகி விட்டுள்ளார் அல்லவா? ஆனால் நிறைய குழந்தைகள் மறந்து விடுகிறார்கள். புத்தியிலிருந்து அந்த போதை வெளியேறி விடுகிறது. இல்லையென்றால் நிலையான குஷி இருக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. வெற்றிமாலையின் மணி ஆக வேண்டும் என்றால் தங்கள் மீது முழுமையான கவனம் வைக்க வேண்டும். (சிரேஷ்டாச்சாரி) சிறந்தவர்களாக ஆவதற்கும் மற்றும் ஆக்குவதற் கான சேவை செய்ய வேண்டும்
2. தண்டனை அனுபவிக்கும் வகையில் அப்பேர்ப்பட்ட எந்த ஒரு தவறான செயலையும் செய்யக் கூடாது. தந்தையின் ஆலோசனை படி ஒவ்வொரு அடியிலும் நடக்க வேண்டும்.
வரதானம்:-
சேவையில் விருத்தி ஏற்படவில்லை அல்லது (ஞானம்) கேட்பவர்கள் கிடைக்கவில்லை என்று ஆன்மிக சேவாதாரி ஒரு போதும் யோசிக்க முடியாது. கேட்பதற்கு அநேகர் உள்ளனர். நீங்கள் உங்கள் ஸ்திதியை மட்டும் ஆன்மிகக் கவர்ச்சி மயமாக ஆக்குங்கள். காந்தம் தன் பக்கமாகக் கவர்ந்திழுக்க முடிகிறது என்றால் உங்களது ஆன்மிக சக்தி ஆத்மாக்களைக் கவர்ந்திழுக்க முடியாதா என்ன? ஆக, ஆன்மிகக் கவர்ச்சி செய்யக்கூடிய காந்தம் ஆகுங்கள். இதன் மூலம் ஆத்மாக்கள் தாமாகவே கவரப் பட்டு உங்கள் முன்பாக வந்து விட வேண்டும். இதுவே ஆன்மிகக் குழந்தைகளாகிய உங்களுடைய சேவையாகும்.
சுலோகன்:-
மாதேஸ்வரி அவர்களின் விலை மதிக்க முடியாத மகாவாக்கியம் பரமாத்மா ஒருவரே. மற்ற அனைவரும் மனித ஆத்மாக்கள்
இப்போது இதையோ உலகம் முழுவதுமே அறிந்துள்ளது — அதாவது பரமாத்மா ஒருவர். அவர் சர்வசக்திவான், அனைத்தும் அறிந்தவர். இது போல் முழு உலகமும் தானே சொல்கிறது — நாம் அனைவரும் பரமாத்மாவின் குழந்தைகள் என்பதாக. பரமாத்மா ஒருவர். எந்த தர்மத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பரமாத்மாவைத் தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களும் தங்களை, பரமாத்மாவினால் அனுப்பப்பட்ட இறைசெய்தியாளர்கள் (தூதுவர்) எனப் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறே செய்தியைக் கொண்டு வந்து அவரவர் தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனர். எப்படி குருநானக் கூட ஏக் ஓங்கார் சத்நாம் என்று பரமாத்மாவுக்கு இவ்வளவு உயர்ந்த மகிமை செய்தார். ஏக் ஓங்கார் என்றால் பரமாத்மா ஒருவரே என்று பொருள். சத் நாம் என்றால் அவரது பெயர் சத்தியமானது. அதாவது பரமாத்மா பெயர்-வடிவம் உள்ளவர். அவர் அவிநாசி (அழியாதவர்) அகால மூரத் (மரணமற்றவர்). ஆக, பிறகு கர்த்தா புருஷ் – ஆத்மாவும் தான். சுயம் அகர்த்தாவாக (கர்மம் செய்யாதவராக) இருந்தாலும் எப்படி பிரம்மா உடல் மூலம் கர்த்தா ஆத்மாவாக ஆகிறார். இப்போது இந்த மகிமை முழுவதும் ஒரு பரமாத்மாவிற்குரியது. இப்போது மனிதர்கள் இவ்வளவு புரிந்து கொண்டிருந்த போதிலும் ஈஸ்வரன் எங்கும் இருக்கிறார் எனச் சொல்கிறார்கள். நான் (அகம்) ஆத்மாவே தான் பரமாத்மா என்கிறார்கள். அனைவரும் பரமாத்மா என்றால் பிறகு ஏக் ஓங்கார் இந்த மகிமையை எந்தப் பரமாத்மாவுக்குச் செய்கின்றனர்? இதிலிருந்து உறுதியாகத் தெரிவது — பரமாத்மா ஒருவரே! நல்லது. ஓம் சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!