08 March 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
7 March 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! அலஃப் (தந்தை) மற்றும் பே (ஆஸ்தி)யை நினைவு செய்யுங்கள். அப்போது அழகானவர்களாக ஆகிவிடுவீர்கள். பாபாவும் அழகானவர் என்பதால் அவருடைய குழந்தைகளும் அழகானவர்களாக இருக்க வேண்டும்.
கேள்வி: -
தேவதைகளின் சித்திரங்கள் மீது அனைவருக்குமே ஈர்ப்பு ஏற்படுவது ஏன்? அவர்களிடம் எந்த ஒரு விசேஷ குணம் இருக்கிறது?
பதில்:-
தேவதைகள் மிகவும் அழகாகவும் (மனதைக் கவர்பவர்களாக) பவித்திர மாகவும் இருப்பவர் கள். அழகான தோற்றத்தின் காரணத்தால் அவர்களின் சித்திரங் களிலும் கூட கவர்ச்சி உள்ளது. தேவதைகளிடம் பவித்திரதாவின் விசேஷ குணம் உள்ளது. அந்த குணத்தின் காரணத்தால் தான் அபவித்திர மனிதர்கள் அவர்கள் முன் தலை வணங்குகின்றனர். யாரிடம் அனைத்து தெய்வீக குணங்களும் உள்ளனவோ, யார் சதா குஷியாக உள்ளனரோ, அவர்கள் தான் அழகானவர்களாக ஆகின்றனர்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
கள்ளம் கபடம் இல்லாதவர், தனிப்பட்டவர்..
ஓம் சாந்தி. எப்போதும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடியவர் தந்தையாவார். ஒரு தந்தை எல்லைக்குட்பட்டவராக இருக்கிறார். அவர் தன்னுடைய 5-8 குழந்தைகளுக்கு ஆஸ்தி அளிக்கிறார். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் அனை வருக்கும் ஒரே தந்தை யாவார். லௌகீக தந்தை பலர் இருக்கிறார்கள். பல குழந்தைகள் இருக் கிறார்கள். இவர் அனைத்து குழந்தைக்கும் தந்தையாவார். பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குக் கூட தந்தை என கூற முடியாது. சங்கரரின் காரியம் தனியாகும். அவர் கொடுக்கக் கூடியவர் அல்ல. ஒரேயொரு நிராகார தந்தையாவார். அவரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. அவர் பரம தந்தை, மூலவதனத்தில் அனைத்தையும் கடந்து இருப்பவர் ஆவார். புரிய வைப்பதற்கு நிறைய யுக்திகள் வேண்டும். இனிமையான பேச்சு இருக்க வேண்டும். காமம் மிகப் பெரிய எதிரி. இதை வெற்றி அடைய வேண்டும். இப்போது கன்னியாக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். இது போன்று பல மனிதர்கள் பிரம்மச்சரியத்தில் இருப்பதை விரும்புகிறார்கள். விகார குடும்பத்தில் போக விரும்புவதில்லை. அப்படியே இருந்து விடுகிறார்கள். தடுப்பதில்லை. கன்னிப் பெண் களின் கன்னையா பாபா புகழ் வாய்ந்தவர். கிருஷ்ணர் ஒன்றும் கன்னிப் பெண்களின் தந்தை கிடையாது. இவர்களோ பிரம்மா குமாரிகள் ஆவர். கிருஷ்ண குமாரிகள் கிடையாது. கிருஷ்ணரை பிரஜாபிதா என கூற முடியாது. இந்த கன்னியர்கள், தாய்மார்கள் பொறுத்துக் கொள்ள வேண்டி யிருக்கிறது. ஆனால் மனம் சுத்தமாக இருக்க வேண்டும். புத்தியின் தொடர்பு ஒரு தந்தையிடம் நன்கு இணைந்திருக்கும் போது பலரிடமிருந்து துண்டிக்கப்படுகிறது. நாம் ஒரு தந்தையினுடையவராக வேண்டும் என்று உறுதியான நிச்சயம் வேண்டும். அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். நீங்கள் உங்கள் கணவருக்கு கூட இப்போது கிருஷ்ணபுரி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிய வையுங்கள் என பாபா புரிய வைத்திருக்கிறார். கம்சபுரியின் அழிவிற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை கிருஷ்ண புரிக்கு போக வேண்டும் என்றால், விகாரங்களை விட வேண்டியிருக்கும். கிருஷ்ண புரியில் செல்வதற்கு சம்பூரண நிர்விகாரியாக மாற வேண்டும். இப்போது நீங்கள் எனக்கும் தங்களுக்கும் நன்மை செய்ய வேண்டும். மேலும் நானும் நீங்களும் இருவரும் ஒரு பகவானின் குழந்தைகள் ஆவோம். பகவான் எங்களுடைய தந்தை என நீங்கள் கூறுகிறீர்கள். நாம் நமக்குள் சகோதரன் சகோதரி என ஆகிவிட்டோம். இப்போது விகாரத்தில் ஈடு பட முடியாது. பாரதம் தூய்மையாக இருந்தது. அனைவரும் சுகமாக இருந்தனர். இப்போது துக்கமுடையவர்களாக இருக்கிறார்கள். நரகத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு கைகளையும் கையில் கொடுங்கள். தூய்மையாகி சொர்க்கத்திற்குச் செல்லுங்கள் என பாபா கூறுகின்றார். இப்போது நாம் ஏன் 21 பிறவிகளின் ஆஸ்தியை இழக்க வேண்டும். தினமும் புரிய வைக்கும் போது எலும்பு மென்மையாகி விடும். கன்னியாக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்களுடைய சங்கம் கெட்டதாக மட்டும் இருக்க கூடாது. இந்த தூய்மை யற்ற கீழான உலகம் அழியப் போகிறது. தூய்மையானால் தூய்மையான உலகத்திற்கு அதிபதி ஆகிவிடுவீர்கள் என பாபா கூறுகின்றார். இவ்வாறு யுக்தியுடன் புரிய வைக்க வேண்டும். அழுக்கின் புழுக்களைக் கூட பூம்… பூம்… என செய்து தனக்கு சமமாக மாற்ற வேண்டும். சக்தி சேனையில் சக்தி கூட வேண்டும் அல்லவா? குழந்தைகள் போன்றவர்களைப் பாதுகாக்க வேண்டும். மற்றபடி மோகத்தில் மாட்டிக் கொள்ளக் கூடாது. புத்தியின் இணைப்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும். சித்தப்பா, மாமா போன்ற அனைவரும் நாடகத்தின் நடிகர்கள் ஆவர். இப்போது விளையாட்டு முடிவடையப் போகிறது. திரும்பிச் செல்ல வேண்டும். விகர்மங்களின் கணக்கு வழக்கை முடிக்க வேண்டும். இந்த பழைய உலகத்திலிருந்து மனதை விலக்க வேண்டும். ஒரு தந்தையை நினைக்க வேண்டும். ஸ்ரீமத்படி நடந்தால் சொர்க்கத்தின் அரசாட்சியைப் பெறலாம் என பாபா கூறுகின்றார். பகவானுடையது ஸ்ரீமத் ஆகும். இராஜயோகத்தினால் உண்மையில் இராஜாக்களுக்கு இராஜாவாக மாறுகிறீர்கள். இந்த மரண உலகம் இப்போது முடியப் போகிறது. ஏன் தந்தையிடமிருந்து 21 பிறவிகளுக்கு முழு சொத்தையும் அடையக் கூடாது. ஒரு வேளை நாம் நன்கு படித்தால் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையலாம் என மாணவர்கள் நினைக் கிறார்கள். நாம் நல்ல மதிப்பெண்ணோடு தேர்ச்சி அடைந்தால், அங்கே சொர்க்கத்தில் நல்ல மதிப்பெண் பெறலாம். இளவரசன் இளவரசியாக மாற வேண்டும் அனைவரும் மாற மாட்டார்கள். பிரஜைகளாக பலர் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். படக் கண்காட்சிகளில் மெல்ல மெல்ல நிறைய பிரபாவம் வெளிப் பட்டுக் கொண்டே இருக்கும்.
என்ன செயல்கள் நடந்துக் கொண்டு இருக்கிறதோ அவை 5000 வருடத்திற்கு முன்பும் நடந்தது என நீங்கள் அறிவீர்கள். நானும் நாடகத்தின் பந்தனத்தின் கட்டுப்பாட்டில் கட்டுபட்டிருக்கிறேன் என பாபா கூறுகிறார். நடிக்காமல் நாம் எதையும் செய்ய முடியாது. சுயதரிசன சக்கரத்தால் யாருடைய தலையையாவது வெட்டிவிடுவேன் என்பது கிடையாது. சுயதரிசன சக்கரத்தின் பொருள் கூட குழந்தை களாகிய உங்களுக்குப் புரிய வைக்கப் படுகிறது. சாஸ்திரங்களில் எண்ணற்ற கதைகள் எழுதப்பட்டிருக்கிறது. சுயதரிசனம் என்றால் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிவதாகும். சுயம் என்றால் ஆத்மாவிற்கு சிருஷ்டி சக்கரம், உண்மையில் நாம் 84 பிறவிகளை எடுக்கின்றோம் என்ற தரிசனம் கிடைத்திருக்கிறது. சூரிய வம்சம், சந்திர வம்சம்….. இப்போது சக்கரம் நிறைவடைகிறது. புதிய சக்கரம் சுழலும். இது பாரதத்தின் சக்கரம் ஆகும். ஆதியிலிருந்து கடைசி வரை பாரதவாசிகளின் பாகம் இருக்கிறது. பாரதத்தின் இரண்டு யுகங்கள் முழுமை அடைகிறது என்றால் பாதி உலகம் முடிந்து விட்டது. அதற்குத் தான் சொர்கம் என்று கூறப்படுகிறது. மற்றபடி வேறு தர்மங்கள் பிற்காலத்தில் தான் வருகிறது. உங்களுக்கு முன்பு இந்த சொர்க்கம் இருந்தது, புதிய உலகம் இருந்தது, இப்போது பழைய உலகமாக இருக்கிறது என கூறுங்கள். ஆரம்பத்தில் சூரிய வம்சத்தினர், சந்திர வம்சத்தினர் இருக்கிறார்கள் என நீங்கள் அறிகிறீர்கள். அந்த இராஜ்யம் முடிவடைந்ததும் மத்தியம் வருகிறது. புதியதுக்கும் பழையதிற்கும் இடைப்பட்டது. முதலில் அரை கல்பம் பாரதம் தான் இருந்தது. நாடகம் முழுவதும் நம்மை வைத்து தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. நாமே மிக உயர்ந்த டபுள் கிரீடம் உடைய இராஜாக்களாக இருந்தோம். நாமே கீழானவர்களாக மாறியிருக் கிறோம். பூஜைக்குரிய வரிலிருந்து பூஜாரி ஆகியிருக்கிறோம். வேறு யாரும் இந்த விஷயங் களைக் கூற முடியாது. புரிய வைப்பதற்கு எவ்வளவு எளிதான விசயம். இந்த ஆன்மீக ஞானத்தை பரமாத்மா குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என நீங்கள் அறிகிறீர்கள். நான் ஆத்மாக் களைப் படிக்க வைக்கின்றேன் என பாபா கூறுகின்றார். ஆத்மாக்களை உடன் அழைத்துச் செல்வேன் என்று கூறுவதற்கு வேறு யாருக்கும் சக்தி இல்லை. தன்னை பிரம்மா அல்லது பிரம்மா குமார் குமாரி என கூறிக் கொள்ளலாம். இவ்விடத்தினுடைய ஞானத்தைக் கூட சிறிது எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர்களால் தொடர்ந்து செல்ல முடியாது. உண்மை உண்மைதான். உண்மையை ஒரு போதும் மறைக்க முடியாது. கடைசியில் ஓ, பிரபுவே ! தாங்கள் கூறியது உண்மை மற்ற அனைத்தும் பொய் என்று நிச்சயம் கூறுவார்கள். பரம்பிதா பரமாத்மாவே உண்மையானவர். அவர் நிராகாரர். சிவராத்திரியின் பொருளைக் கூட புரிந்துக் கொள்ளவில்லை. ஒரு வேளை கிருஷ்ணரின் உடலில் வந்தால் நான் கிருஷ்ணரின் உடலில் வந்து உங்களுக்கு ஞானம் கொடுக்கிறேன் என கூறியிருக்கலாம். ஆனால் அது முடியாது. இது ஞானம் இதில் நன்கு கவனம் வைக்க வேண்டும். நாம் இறைவனின் மாணவர்கள் என்பது புத்தியில் இல்லை யென்றால், எதுவுமே புத்தியில் பதியாது. இது உங்களுடைய பல பிறவிகளின் கடைசிப் பிறவியாகும். இப்போது இந்த மரண உலகம் அழியப் போகிறது. எனவே, நான் இப்போது அமரபுரிக்கு அதிபதியாக மாற்றுவதற்காக வந்திருக்கிறேன். சத்திய நாராயணனின் கதை என்றால், நரனிலிருந்து நாராயணனாக மாறக் கூடிய ஞானம். கதை கிடையாது. கதை என்று பழையவைகளுக்குக் கூறப்படுகிறது. இது ஞானம் ஆகும். குறிக் கோள் கூட கூறுகிறார்கள். இது கல்லூரி அல்லவா? வரலாறு புவியியல் கூட பழைய கதையாகி விட்டது. இவர்கள் இராஜ்யம் செய்தனர். எனக்கும் நாடகத்தில் நடிப்பு இருக்கிறது என்று இப்போது பாபா கூறுகிறார். பிரம்மா மூலமாக ஸ்தாபனை, சங்கரர் மூலமாக அழிவு. அவர்கள் வினாசத்திற்காக இந்த வெடிகுண்டு போன்றவைகளை உருவாக்கத்தான் வேண்டும். யாதவர், கௌரவர், பாண்டவர் என்ன செய்தனர்? சாஸ்திரங்களில் இல்லாதது பொல்லாததை எல்லாம் எழுதிவிட்டனர். தன்னுடைய குலத்தை தாங்களே அழித்துக் கொண்டனர் என்று யாதவர்களுக்கு சரியாக எழுதியிருக்கின்றனர். மற்றபடி பாண்டவர் களுக்கும் கௌரவர்களுக்கும் இம்சையின் யுத்தத்தை காண்பித்துள்ளனர். அவ்வாறு நடக்க வில்லை. உங்களுடன் பரம்பிதா பரமாத்மா இருக்கிறார். அவர் தான் முக்கிய வழிகாட்டி, பதீத பாவனர் விடுவிக்கக் கூடியவராக இருக் கிறார். இராவண இராஜ்யத்திலிருந்து விடுவித்து இராம இராஜ்யத்திற்கு அழைத்துக் கொண்டு போகின்றார். இந்த இராவண இராஜ்யம் முடியப் போகிறது, ஒழியட்டும், பிறகு தூய்மையான சிரேஷ்டாச்சார சத்யுக இராஜ்யம் ஆரம்பம் ஆகப் போகின்றது என பாபா கூறுகிறார். இதை குழந்தைகளாகிய நீங்கள் தான் புரிந்துக் கொள்கின்றீர்கள். வேறு யாருக்காவது புரிய வைக்கவும் முடியும். வேறு யாரும் அறியவில்லை. பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் நிறைய அறிகிறார்கள். பக்தியினால் பகவானை அடையலாம் என நினைக்கிறார்கள். அரை கல்பம் பக்தி மார்க்கம். பக்தியின் முடிவில் ஞானக் கடலானவர் வந்து ஞானத்தின் ஊசியை போடுவார். குழந்தைகளாகிய உங்களுடையது பதீத பாவனர் இறை தந்தையின் மாணவ வாழ்க்கையாகும். பதீத பாவனர் என்றாலே சத்குரு. ஓ, காட்பாதர் என்றால் பரம்பிதா பரமாத்மா. மேலும் அவர் ஆசிரியர் ரூபத்தில் இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். எவ்வளவு எளிய விஷயமாக இருக் கின்றது. முதலில் பதீத பாவனர் என நிச்சயம் எழுத வேண்டும். குரு அனைவரையும் விட கூர்மையாக இருக்கிறார். குரு சத்கதி அளிக்கின்றார். துர்கதியிலிருந்து விடுவிக்கின்றார் என நினைக்கின்றார்கள். பாபா எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கின்றார். ஆனால் நாம் பகவானுடைய குழந்தைகள், நிச்சயமாக அவரிட மிருந்து சொத்தை அடைய வேண்டும் என்பது எவரது புத்தியிலும் இல்லை. குழந்தைகளே! நீங்கள் இராவணனை வெற்றி அடைந்தால் உலகத்தையே வெற்றி அடையலாம், என்று கூறுகின்றார். ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். எப்படி பாபா இனிமையாக இருக்கிறாரோ அப்படி குழந்தைகளும் இனிமையாக மாற வேண்டும். யுக்தியோடு புரிந்துக் கொள்ள வேண்டும். இன்னும் போகப்போக புரிந்துக் கொள்வார்கள். உங்கள் மீதும் நம்பிக்கை வைப்பார்கள். பார்ப்பார்கள், சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது ஏன் தந்தையிடமிருந்து சொத்தை அடையக் கூடாது. இப்படி சண்டைகள் நடக்கும் போது விகாரத்தின் விசயம் நினைவிற்கு வராது. வினாசம் நடப்பதற்கு முன்பாக விஷத்தின் (விகாரம்) சுவையை எடுங்கள் என யாரும் கூற மாட்டார்கள். அச்சமயம் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்யிருக்கிறது. பல பிறவிகளாக இந்த காமவிகாரத்தில் ஈடுபட்டதால் உங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. துக்கம் ஏற்பட்டிருக்கிறது. தூய்மையில் சுகம் இருக்கிறது. சன்னியாசிகள் தூய்மையாக இருக்கும் போது தான் பூஜிக்கப் படுகிறார்கள். ஆனால் இச்சமயம் உலகத்தில் ஏமாற்றுக்காரர்கள் பெருகிவிட்டனர். செல்வந்தர் கள் யாரும் இல்லை. பிரஜைகள் பிரஜைகளை ஆளுகின்றனர். சொர்க்கத்தில் லஷ்மி நாராயணனின் இராஜ்யம் நம்பர் ஒன்னாக இருந்தது. பாரதம் என்று யார் கூறவைப்பார்கள். இது அனைத்தையும் மறந்து விட்டனர். ருத்ர மாலை பிறகு விஷ்ணுவின் மாலை, பிராமணர் களின் மாலையை உருவாக்க முடியாது. ஏனென்றால், மேலும் கீழுமாக (ஸ்திதியில்) விழுந்து எழுந்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று 5-6 நம்பரில் இருக் கிறார்கள், நாளை பார்த்தால் இல்லை. சொத்திலிருந்தும், இராஜ்யத்திலிருந்தும் விலகிப் போகிறார்கள். மீதம் இருப்பது பிரஜை பதவியாகும். இங்கே இருந்துக் கொண்டே விட்டுவிட்டால் பிரஜைகளிலும் நல்ல பதவி பெற முடியாது. விகர்மம் மிகவும் வேகமாக நடக்கிறது. உங்களை பகவான் படிக்க வைக்கின்றார். எவ்வளவு அதிசயமான விஷயம் ஆகும். புதிய உலகத்திற்காக இது புதிய ஞானம் ஆகும். நீங்கள் புதிய உலகத்திற்கு அதிபதியாக இருந்தீர்கள். இப்போது பழைய உலகத்தில் கிளிஞ்சல்கள் போன்று இருக்கிறீர்கள். பாபா கிளிஞ்சல் போன்றவர்களை மீண்டும் வைரம் போல் மாற்றுகிறார். நீங்கள் முள்ளிலிருந்து மலராக மாறிக் கொண்டிருக் கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீக தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. எந்த ஒரு சம்பந்தத்திலும் பற்றில் மாட்டிக் கொள்ளக் கூடாது. உள்ளுக்குள் உண்மை மற்றும் தூய்மையினால் பந்தனமற்றவர் ஆக வேண்டும். விகர்மங்களின் கணக்கு வழக்கை முடிக்க வேண்டும்.
2. இனிமையான பேச்சு மற்றும் யுக்தி நிறைந்த பேச்சினால் சேவை செய்ய வேண்டும். முயற்சி செய்து நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வேண்டும்.
வரதானம்:-
யார் ஒரு நொடியில் கட்டுபடுத்தும் சக்தி மூலமாக தவறானதை சரியானதாக மாற்றி விட்டு விடுவார்களோ, அவர்களே சிறந்த முயற்சியாளர் ஆவார்கள். அப்படியின்றி, வீணானதை கட்டுப்படுத்தவே நினைக்கிறோம். இது தவறு என்பதும் புரிந்துள்ளோம். ஆனால் அரை மணி நேரம், அதுவே நடந்து கொண்டிருப்பது – அப்படி இருக்கக் கூடாது. இதற்கு சிறிதளவு அடிமைத்தனம் மற்றும் சிறிதளவு அதிகாரி என்பார்கள். இது சத்தியம் அல்ல, சரியில்லாதது அல்லது வீணானது என்று புரிந்திருக்கிறீர்கள் என்றால், அதே நேரத்தில் (பிரேக் போட்டு விடுவது) நிறுத்தி விடுவது – இதுவே சிறந்த புருஷார்த்தம் ஆகும். கண்ட்ரோலிங் பவர் என்பதன் பொருள் இங்கு பிரேக் போடுவது மற்றும் அங்கு பிரேக் விழுவது என்ற அர்த்தம் கிடையாது.
சுலோகன்:-
விலை மதிப்பிட முடியாத ஞான ரத்தினங்கள் (தாதிகளின் பழைய டைரியிலிருந்து)
இந்த புருஷார்த்தத்தின் நேரத்தில் ஒவ்வொருவரிடமும் அவசியம் ஏதாவது குறை இருக்கும். அதை நீக்குவதற்காக ஒவ்வொருவரும் புருஷார்த்தம் செய்கிறார்கள். ஒருவரிடம் பொறுமை யின் குணம் இல்லை. பின் மற்றொருவரிடம் சகிப்பு தன்மையின் குணம் இல்லை. மேலும் மற்ற குணங்களும் இல்லை என்றால் அவற்றை தாரணை செய்யும் பொருட்டு சுயம் எஜமானர் ஆகி அந்த குணங்களை தன்னிடம் ஈர்க்க வேண்டும். அப்படியே அந்த குணங்கள் அவர்களிடம் ஈர்க்கப்பட்டு வருவதில்லை. எஜமானத் தன்மையில் குறைவு இருக்கும் காரணத்தால் நான் யாரிடம் நட்பு கொள்வது என்று குணங்கள் கூறுகின்றன. அவைகளுக்கு எஜமானர் மீது அன்பு இருப்பதில்லை. ஆனால் யார் எஜமானர் ஆகி நின்றுள்ளார்களோ, குணங்கள் கூட அவர்களை அன்பு செய்கின்றன. ஞானிக்கோ குணங்கள் தானே பிரியமானதாக படும் அல்லவா? அந்த குணங்கள் கவரக் கூடியவையாக இருக்கும். அதன் காரணமாக எஜமானரை ஈர்க்கிறது. ஆனால் சுயம் எஜமானர் ஆகி நிலைத் திருக்கும் பொழுது குணங்கள் தானாகவே அவருக்கு அவசியம் வந்து விடுகின்றன. எனவே தனது எஜமானத் தன்மையில் முழு நிச்சயம் இருக்க வேண்டும். நான் ஆத்மா பரமாத்மாவின் குழந்தை என்ற நிச்சயம் இருந்தது என்றால் முழுமையான தெய்வீக குணங்கள் வந்து கொண்டே இருக்கும். நிச்சயத்தினால் தான் தெய்வீக குணங்கள் வருகின்றன. ஞானத்தின் பாயிண்ட்ஸ் எடுப்பது – அதில் நேரம் பிடிப்பதில்லை. ஆனால் தெய்வீக குணங்களை தாரணை செய்வதில் நேரம் பிடிக்கிறது. நல்லது. ஓம் சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!