26 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
26 January 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! சங்கமத்தில் உங்களுக்கு எல்லைக்கப்பால் உள்ள தந்தை கிடைத்திருக்கின்றார். நீங்கள் ஒருவருக்கொருவர் சகோதர, சகோதரிகள் ஆவீர்கள், நீங்கள் தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும்.
கேள்வி: -
தந்தையின் எந்த ஸ்ரீமத் மூலம் ஒவ்வொரு பொருளையும் கல்லிலிருந்து தங்கமாக மாற்றி விட முடியும்?
பதில்:-
தந்தையின் ஸ்ரீமத் லி குழந்தைகளே! உங்களிடம் எதுவெல்லாம் இருக்கிறதோ அதை ஈஸ்வரிய வங்கியில் சேமித்து விடுங்கள், அது கல்லிலிருந்து தங்கமாக மாறிவிடும். பாபா கொடுக்கக் கூடியவர் ஆவார், அவர் உங்களிடமிருந்து எதைவும் பெறுவது கிடையாது. ஆனால் உங்களிடத்தில் எதுவெல்லாம் அதிகபட்சமாக இருக்கிறதோ அதை பயனுடையதாக ஆக்குங் கள். யாரிடத்திலும் கடன் வாங்கக் கூடாது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
நீங்கள் இரவை தூங்கிக் கழித்தீர்கள் …..
ஓம்சாந்தி. பாட்டு கேட்டீர்கள். நல்ல நல்ல பாட்டுக்களை சென்டர்களில் வைத்திருக்க வேண்டும். இது பாபா உருவாக்கியிருக்கின்றார். உங்களது புத்தியில் வேறு எந்த சாஸ்திரமும் கிடையாது. நீங்கள் அனைத்தையும் படித்திருக்கிறீர்கள், அறிந்திருக்கிறீர்கள். ஆனால் இப்போது அவை எதுவும் புத்தியில் கிடையாது. படித்த அனைத்தும் மறந்து விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார், நீங்கள் இறந்து விட்டால் உலகம் இறந்து விடும். நான் ஆத்மா, நான் எனது வீட்டிற்கு இப்போது செல்கிறேன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிறகு இந்த சாஸ்திரங்களின் படிப்பை நாம் ஏன் படிக்க வேண்டும்? வேத சாஸ்திரங்கள் கூடவே வரப் போவது கிடையாது. ஆம், இந்த படிப்பு கூடவே வரும். இது அமரலோகத்திற்கான அமர படிப்பாகும். நமது பாபாவும் அமர்நாத் ஆவார். நாம் அனைவரும் பார்வதிகள். சிவபாபாவின் மூலம் அமரக் கதை கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்தவர், சிவபாபா அமர்நாத் ஆவார். அமர்நாத்தில் பனி லிங்கத்தை உருவாக்குகின்றனர், அதை பூஜிக்கின்றனர். நிராகாராமான வருக்கு பூஜை செய்ய முடியாது. தானாகவே சிவலிங்கம் ஏற்பட்டு விடுவதும் கிடையாது. சுயம் உருவாக்குகின்றனர். பிறகு பொய்யான பல தகவல்களை கூறுகின்றனர். அமர்நாத் அதாவது சங்கர், பார்வதி எங்கிருந்து அங்கு வருவார்கள்? அது மான சரோவரும் கிடையாது. உண்மையிலும் உண்மையான மான சரோவர் இவர் (பிரம்மா) ஆவார். நிராகார சிவபாபா ஞானக் கடலானவர், அவர் எதுவரை இவரிடத்தில் பிரவேசிப்பதில்லையோ அதுவரை மான சரோவராக எப்படி ஆக முடியும்? ஆத்மாவில் ஞானம் இருக்கிறது, ஆனால் எதுவரை மனித சரீரம் எடுக்கவில்லையோ அதை எப்படி வெளிப்படுத்தும்? ஆக நீங்கள் அனைவரும் ஞான மான சரோவாக இருக்கிறீர்கள். ஆனால் வரிசைக் கிரமமான முயற்சியின் படி இருக்கிறீர்கள். சிலர் பெரிய நதியாக இருக்கின்றனர், சிலர் கால்வாயாக இருக்கின்றனர், சிலர் குளமாக இருக்கின்றனர். இதை பாபா அமர்ந்து புரிய வைக்கின்றார். நாம் பிரம்மா குமார் மற்றும் பிரம்மா குமாரிகள் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பிரம்மாவின் தந்தை சிவன். நாம் சிவபாபா வின் பேரன், பேத்திகள் என்பது புத்தியில் இருக்கிறது அல்லவா! சிவபாபாவின் குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள், ஆனால் இப்போது சரீரத்தில் வந்திருக்கின்றார். அவர் நிராகாரமானவர், ஆகையால் அவரது பேரன், பேத்திகள் பிரம்மாவின் குழந்தைகள் ஆவர். ஆக நாம் சகோதரன், சகோதரிகளாக ஆகிவிடுகிறோம். அனைவருக்கும் தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள், நாம் பிரம்மா குமார், குமாரிகள் என்பதை அறிவீர்கள். சிவபாபா நமது தாத்தா ஆவார். இவ்வாறு யார் நம்பிக்கை வைக்கிறார்களோ அவர்கள் ஈஸ்வரிய வம்சத்தினர்கள் என்று கூறப்படுகின்றனர். நாம் ஈஸ்வரிய குலத்தைச் சார்ந்தவர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஈஸ்வரனிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக் கிறோம். சகோதரன், சகோதரி ஆன காரணத்தினால் நாம் விகாரத்தில் செல்ல முடியாது. இல்லையெனில் அது குற்றமாகி விடும். அது மிகவும் கெட்டது என்று கூறப்படுகிறது. அதனால் தான் குழந்தைகளே! எச்சரிக்கை யுடன் இருங்கள் என்று பாபா கூறுகின்றார். சகோதரன், சகோதரி என்று கூறிக் கொண்டு ஒருவேளை விகாரத்தில் சென்றால் மிகக் கடுமையான தண்டனை அடைய வேண்டியிருக்கும். சத்குருவாகிய தந்தையை நிந்திப்பவர்கள் நிலைத் திருக்க முடியாது. அந்த குருமார்கள் பலர் உள்ளனர். சத்குருவான இவரை ஒரே ஒரு முறை தான் சந்திக்கிறோம். இவர் எல்லையற்ற தந்தை ஆவார். சத்யுகத்தில் தெய்வீக தந்தைகள் கிடைப்பர். இப்போது சங்கமத்தில் நீங்கள் ஈஸ்வரிய குழந்தைகள். சிவபாபா பிரம்மாவின் மூலம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நமக்கு இறைவன் ஞானம் கொடுத்திருக்கின்றார் என்று கூறுகிறீர்கள். மம்மா கல்வியின் (தேவியாக) கடவுளாக இருக்கிறார். ஆக குழந்தைகளும் நாமும் கல்விக் கடவுள் என்ற கூறுவீர்கள். தாய், தந்தை சிருஷ்டிச் சக்கரத்தின் ஞானம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். பிரம்மாவை கடவுள் என்று கூறுவது கிடையாது. கடவுள் ஒரே ஒருவர் தான், மற்றவர்கள் அவரது குழந்தைகள், பிரம்மா மற்றும் பிரம்மா குமார், குமாரிகள். இப்போது இவர் (பிரம்மா) குப்தமாக இருக்கிறார், மம்மா கல்விக் கடவுளாக பிரத்யட்சமாக இருக்கின்றார். உண்மையில் நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாக இருக்கிறீர்கள் அல்லவா! அவர் கல்விக் கடவுள் என்று கூறப்படுகின்றார். சிவனிடமிருந்து தான் அவருக்கு ஞானம் கிடைக்கிறது. இருப்பினும் பிரம்மாவை கடவுள் என்று கூற முடியாது. கடவுள் ஒருவர் தான். கல்பத்திற்கு முன்பும் பரம்பிதா பரமாத்மா பிரம்மாவின் மூலம் உலகை படைத்திருப்பார் எனில் அவசியம் முதன் முதலில் பிராமணர்கள் தான் இருந்திருப்பார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எந்த யாகமும் ஆண்டு கணக்கில் நடைபெறுவது கிடையாது. அதிகபட்சமாக 7 நாட்கள் நடைபெறும். இந்த யாகம் அழிவற்ற யக்ஞம் அதாவது அதிக காலம் நடைபெறக் கூடிய ருத்ர ஞான யக்ஞம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு காலம் நடைபெறும் என்பது யாருக்கும் தெரியாது. கடைசி வரை நடைபெற்றே ஆக வேண்டும். இந்த பழைய உலகின் பொருட்கள் அனைத்தும் அர்ப்பணம் (சுவாஹா) ஆகிவிடப் போகிறது, மேலும் வேறு யாரும் இந்த மாதிரியான ருத்ர ஞான யக்ஞம் உருவாக்க முடியாது. பக்தி மார்க்கத்தில் பிறகு இந்த பெயரில் சிறிய சிறிய யக்ஞத்தை உருவாக்குகின்றனர். சிலர் ருத்ர யக்ஞம் என்றும் கூறுகின்றனர். ருத்ர யக்ஞம் உருவாக்குகின்றனர் எனில் அங்கு கீதையின் சொற்பொழிவு அல்லது வேத சாஸ்திரங்களைக் கூறுவர். ருத்ரன் கீதையை கூறியிருக் கின்றார், ஆனால் மறந்து விட்டனர். கிருஷ்ணர் என்று கூறிவிட்டனர். ருத்ர ஞான யக்ஞத்தின் மூலம் சூரிய வம்சி, சந்திரவம்சி இராஜ்யம் உருவானது என்பதை அறியவில்லை.
இப்போது நீங்கள் முன்பாக அமர்ந்திருக்கிறீர்கள். அவசியம் சிவபாபா, பிரம்மா பாபாவின் நினைவு ஏற்படும். அந்த பிராமணர்கள் நாம் பிரம்மாவின் வம்சத்தினர்கள் என்று பெயரளவிற்கு கூறி விடுகின்றனர். தேவதைகளின் வம்சத்தினர்கள் தேவதைகளாக இருப்பர். சத்ரியர்களின் வம்சத்தினர் சத்ரியர்களாக இருப்பர். வர்ணங்கள் இருக்கிறது அல்லவா! இவரை யாரும் அறிய வில்லை. யாருக்காவது புரிய வைக்கிறீர்கள் எனில் நீங்களும் பி.கு தான் என்று கூறுங்கள். பிரஜாபிதா என்ற பெயர் இருக்கிறது அல்லவா! எது கடந்து முடிந்ததோ அது மீண்டும் அவசியம் திரும்பவும் நடைபெறும் அல்லவா! பரம்பிதா பரமாத்மா பிரம்மா கமல வாயின் மூலம் பிராமணன் மற்றும் சூரியவம்சம், சந்திரவம்சத்தின் தர்மத்தை ஸ்தாபனை செய்கிறார் என்றும் பாடப் பட்டிருக்கிறது. இல்லையெனில் பிரஜாபிதா பிரம்மா இருந்தார் அவர் இப்போது எங்கு சென்றார்? என்று கேட்க வேண்டும். உலகை படைத்திருக்கிறார் எனில் முதன் முதலில் பிரம்மா வாய்வழி வம்சத்தின் பிராமணர்கள் இருப்பர். நாம் பிரம்மா வாய்வழி வம்சத்தினர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மம்மா, பாபா என்று கூறுகிறீர்கள், கடிதம் எழுதுகிறீர்கள். பலகையும் (போர்ட்) எழுதப்பட்டிருக்கிறது. இந்த சிவபாபா உங்களுக்கு என்ன ஆகிறார்? என்பதை நீங்கள் புரிய வைக்க முடியும். சர்வவியாபி என்ற கூற முடியாது. தந்தையை ஒருபோதும் சர்வவியாபி என்று கூற முடியாது. நல்லது, பிரம்மா உங்களுக்கு என்னவாகிறார்? அவசியம் இவர் (வாழ்ந்து) இருந்து விட்டு சென்றிருக்கிறார், அதனால் தான் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்போது மீண்டும் படைப்புகளை படைத்துக் கொண்டிருக்கிறார். ஆக நமது தந்தை பிரம்மா ஆவார். பரம்பிதா பரமாத்மா பிரம்மாவின் கமல வாயின் மூலம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். நாம் அவர் மூலம் இராஜயோகம் கற்கிறோம், நீங்களும் கற்றுக் கொண்டால் 21 பிறவிகளுக்கு தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவீர்கள். இல்லையெனில் அடையமாட்டீர்கள். கோடியிலும் சிலர் தான் வந்து ஞானம் கேட்பார்கள். அவர்கள் தான் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு பிரம்மாவின் வம்சத்தினர்களாக ஆகியிருப்பர். சூரியவம்சி, சந்திர வம்ச பதவி அடைந்தார்கள் அவர்கள் தான் மீண்டும் அடைவார்கள். இப்போது கிடையாது அல்லவா! தூய்மை இல்லாமலிருந்து தூய்மை ஆக்குவதற்காக, மனிதனை தேவதை ஆக்கு வதற்காக தந்தை வந்திருக்கின்றார். இருப்பினும் பிரம்மா அவசியம் தேவை. பி.கு வாகிய நாம் இப்போது ஈஸ்வரிய வம்சத்தினர்களாக இருக்கிறோம். யக்ஞம் படைத்திருக்கிறார், பிராமணர்களாக அவசியம் ஆவார்கள். பிராமணர்கள் குடுமி போன்றவர்கள் அல்லவா! ஆனால் நீங்கள் சதா சுகத்திற்கான ஆஸ்தி அடைந்திருக்க மாட்டீர்கள், அதனால் தான் ஏற்றுக் கொள்வது கிடையாது. இவ்வளவு பி.கு இருக்கிறார்கள், வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இப்போது நீங்கள் பாப்தாதாவின் நினைவில், பரம்பிதா பரமாத்மாவின் எதிரில் அமர்ந்திருக்கிறீர்கள். இது தான் சர்வவியாபி என்ற கூறப்படுகிறது. இறைவன் இப்போது எதிரில் இருக்கிறார் அல்லவா! என்ன செய்கிறார்? அவசியம் காரியம் செய்திருக்க வேண்டும். கர்மம், அகர்மம், விகர்மத்தின் ரகசியங்களை எதிரில் புரிய வைத்துக் கொண்டிருக்கிறார். பரமாத்மா தான் மனித சிருஷ்டியின் விதையானவர், அவரிடம் முழு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் இருக்கிறது, அவர் ஞானம் நிறைந்தவர் ஆவார். அதற்காக ஒவ்வொரு மனிதனின் புத்தியில் என்ன இருக்கிறது என்பதை அறிவார் என்பது கிடையாது. நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் மற்றும் ஞானம் கற்பிக்கிறேன், இந்த யோகத்தின் மூலம் நீங்கள் தூய்மையாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார். மேலும் இந்த சிருஷ்டி சக்கரத்தைப் புரிந்து கொள்வதன் மூலம் தூய்மைக்கான கிரீடம் மற்றும் ரத்தின கிரீடம் வந்து விடும், இதை அழிவற்ற ஞான ரத்தினம் என்று கூறுகிறோம். தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆரோக்கியம், ஞானத்தின் மூலம் செல்வம் கிடைக்கிறது. ஆரோக்கியம், செல்வம் இருந்தால் சந்தோஷமும் இருக்கும். உங்களுக்கு ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தும் கிடைக்கிறது. நினைவின் மூலம் விகர்மங்கள் அழிந்து விடும் மற்றும் ஒளிக் கிரீடம் வந்து விடும். தேவதைகள் சதா ஆரோக்கியமானவர்களாக, செல்வந்தர்களாக இருப்பர். சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகிறீர்கள் மற்றும் ஞான இரத்தினங்களை தாரணை செய்கிறீர்கள், இதன் மூலம் நீங்கள் செல்வந்தர்களாக ஆகி விடுவீர்கள். இது தான் இயற்கை வைத்தியம் என்று கூறப்படுகிறது. ஆத்மா தூய்மையாக ஆகி விடுகிறது எனில் பிறகு சரீரமும் தூய்மையானதாக கிடைக்கும், அது தான் தேவதை என்று கூறப்படுகிறது. தூய்மை இருக்கிறது எனில் செல்வமும் இருக்கும், ஆரோக்கியமும் இருக்கும். சத்யுகத்தில் பாரதவாசிகளின் ஆயுள் 150 ஆக இருந்தது. இப்போது போகிகளாக ஆகி விட்டீர்கள், ஆகவே திடீர் மரணம் ஏற்பட்டு விடுகிறது, அது தூய்மையான உலகம் ஆகும். இது அசுத்த உலகமாகும்.
எப்போது தர்ம நிந்தனை ஏற்படுகிறதோ அப்போது நான் வருகிறேன் என்ற தந்தை கூறுகின்றார். தன்னை விட பெரியவர்களுக்கு நிந்தனை செய்வது பாரதத்தில் தான் நடை பெறுகிறது. யதா யதாஹி தர்மஸ்ய ……. இங்கிருக்கும் விசயமாகும். மாயை முற்றிலும் தீயவர் களாக ஆக்கி விட்டது என்று தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். தீயவர்கள் தான் இழி வானவர்கள் என்று கூறப்படுகின்றனர். பிறகு மேன்மையானவர்களாக ஆக்குவது யார்? புது உலகம் உயர்வானதாகும். புதியதிலிருந்து பழையதாக அவசியம் ஆக வேண்டும். பழையது அவசியம் இற்றுப் (உபயோகமற்ற) போய் விடுகிறது. ஒவ்வொரு பொருளும் இவ்வாறு ஏற்படுகிறது. அனைத்தும் அவசியம் அழிந்தே ஆக வேண்டும். இந்த சரீரத்தையும் நீங்கள் பாதுகாக்க வேண்டும், கூடவே இந்த படிப்பும் படிக்க வேண்டும். இல்லறத்தில் இருந்து கொண்டே, காரியங்கள் (வேலை முதலானவை) செய்து கொண்டே உயர்ந்த பதவி அடைவதற்காக முழுமையாக ஸ்ரீமத் படி நடக்கக் கூடியவர்கள் பலர் இருக்கின்றனர். பாபா விற்கு தெரிய வரும் போது இந்த சூழலில் இவ்வாறு செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார். பாபா என்னிடம் இதுவெல்லாம் இருக்கிறது என்று கூறுவர். நல்லது கட்டடம் கட்டுங்கள் என்று பாபா கூறுவார். குழந்தைகள் இல்லையெனில் பிறகு கட்டடம் எதற்காக? பரவாயில்லை, சென்டர் திறந்து விடுங்கள் என்று கூறுவார். பலருக்கு நன்மை ஏற்பட்டு விடும். ஞானம் கொடுப்பதற்கு ஒரு அறை வைத்துக் கொள்ளுங்கள். சொத்து உங்களுடையதாகவே இருக்கும். சேவையின் பொருட்டு அதை கொடுத்து விடுங்கள். வாடகையும் வாடகைக்கும் எடுத்துக் கொள்ளுங் கள். வீட்டு எஜமான் வாடகைக்கு இருப்பவர்களுக்கு ஒருபோதும் தொந்தரவு (இடையூறு) செய்யமாட்டார். இவ்வாறு சென்டர் திறந்து கொண்டே செல்லுங்கள். முதலில் சென்டரை முழுமையாக கவனிக்க வேண்டும். பிறகு சிறது சேமிப்பு இருக்கிறது எனில் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும். இருக்கிறது எனில் கொடுக்க முடியும். சென்டருக்கு உதவி செய்வதன் மூலமும் உங்களது எதிர்காலம் உருவாகிறது. அதிகப்படியாக இருக்கிறது எனில் அதை வெற்றியாக்க வேண்டும். இல்லையெனில் அழிந்து விடும். மனிதர்கள் தானம் செய்கின்றனர் எனில் அடுத்த பிறவியில் அதற்கான பலன் கிடைக்கும். இதையும் சேவையின் பொருட்டு செய்கிறீர்கள் எனில் எதிர்காலத்தில் 21 பிறவிகளுக்கு கிடைத்து விடும். மற்றபடி குழந்தைகள் ஒருபோதும் எந்த கடனும் வாங்க கூடாது. கடன் வாங்கியவர்களுக்கு அதிக கவலை இருக்கும். கடன் திரும்பி கொடுக்க வில்லையெனில் மானம் போய் விடுகிறது. மனிதர்கள் அதிக கடன் வாங்குகின்றனர். திருமணத்திற்காக, தீர்த்த யாத்திரைகளில் அதிக செலவு செய்கின்றனர். மற்றபடி வயிற்றிற்காக ரொட்டிக்கான அதிக செலவு ஏற்படுவது கிடையாது. வீண் செலவு அதிகம் செய்கின்றனர். திருமணத்தினால் வீணாகி விடுகிறது. ஏழைகள் சிறிது பணத்தினால் வேலை முடித்து விடுகின்றனர். நீங்களும் தந்தையிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டே செல்லுங்கள். எந்த கெட்ட பழக்கமும் அதாவது அதிகமாக டீ குடிப்பது, சிகரெட் குடிப்பது போன்ற எந்த பழக்கமும் இருக்கக் கூடாது. ஸ்ரீமத் படி நடக்க வேண்டும். மனிதர்கள் பணத்தை சேமிக்கின்றனர். இது உங்களது நம்பர் ஒன் வங்கியாகும். இதில் 4 அணா போடும் போது எதிர்காலம் வைரம் போன்று ஆகிவிடும். கல்லிலிருந்து வைர மாக ஆகிவிடுகிறது. உங்களது ஒவ்வொரு பொருளையும் தங்கமாக ஆக்கி விடுகிறது. சிவபாபா வின் பண்டகசாலை (பண்டாரா) எப்போதும் நிறைந்திருக்கும். அதிக குழந்தைகள் உள்ளனர். பண்டக சாலை எப்படி குறையும்? முடியாதது. யாரிடத்திலும் வாங்கக் கூடாது. மாளிகைகள் கட்ட வேண்டியதில்லை. பாபா கொடுக்கக் கூடியவர். காரியத்திற்கு தேவையெனில் எடுத்துக் கொள்வார். இல்லையெனில் ஏன் ஏற்றுக் கொள்வார்? பிறகு கொடுக்க வேண்டியிருக்கும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) எந்த கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. ஸ்ரீமத் மூலம் தனது ஒவ்வொரு பைசாவையும் பயனுள்ளதாக்கி எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.
2) ஈஸ்வரிய குலத்தினராகி எந்த அசுர காரியமும் செய்யக் கூடாது. சத்குருவை நிந்திப்பவர்களாக ஒருபோதும் ஆகக் கூடாது.
வரதானம்:-
லௌகிக சம்பந்தங்களில் சேவை செய்யும் போது சதா இதே நினைவு இருக்க வேண்டும் லி இவர்கள் என்னுடையவர்கள் அல்ல. அனைவரும் பாபாவின் குழந்தைகள். பாபா இவர்களின் சேவைக்காக என்னை நிமித்தமாக்கியிருக்கிறார். வீட்டில் இருக்கவில்லை, ஆனால் சேவா ஸ்தானத்தில் இருக்கிறேன். என்னுடைய அனைத்தும் உன்னுடையதாகி விட்டது. சரீரமும் கூட என்னுடையதில்லை. என்னுடையதில் தான் கவர்ச்சி உள்ளது. எப்போது என்னுடையது முடிந்து விடுகிறதோ, அப்போது மனம் புத்தியை யாரும் (வேறு எதுவும் கூஅ) கவர்ந்திழுக்க முடியாது. பிராமண வாழ்க்கையில் எனது என்பதை உனது என மாற்றுபவர்கள் தாம் டபுள் லைட்டாக இருக்க முடியும்.
சுலோகன்:-
அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.
எந்த விˆயத்திலும் விஸ்தாரத்தில் செல்லாமல், விஸ்தாரத்திற்குப் புள்ளி வைத்து, புள்ளியில் கலத்து விடுங்கள், புள்ளி ஆகி விடுங்கள், புள்ளி வைத்து விடுங்கள், புள்ளியில் மூழ்கி விடுங்கள். அப்போது விஸ்தாரம் முழுவதும், வலை முழுவதும் ஒரு விநாடியில் சுருங்கி விடும். சமயம் மிச்சமாகும். கடின உழைப்பிலிருந்து விடுபட்டு விடுவீர்கள். புள்ளியாகி, புள்ளியில் மூழ்கி விடுவீர்கள். எந்த ஒரு காரியம் செய்தாலும் பாபாவின் நினைவில் மூழ்கி இருங்கள்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!
✳️🌐🙏 OMMMMMMMMMMMMMMMMMM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA OM SHANTI SHANTI SHANTI 👁️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🇲🇰🗻