20 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
19 October 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! நீங்கள் யோகபலத்தின் மூலம் இராவணன் மீது வெற்றி கொள்ள வேண்டும். மனிதரில் இருந்து தேவதை ஆவதற்காக தெய்விக குணங்களை கடைபிடிக்க செய்ய வேண்டும்.
கேள்வி: -
குழந்தைகள் அனைவருமே தந்தையின் ஸ்ரீமத் படி ஒரே மாதிரி நடப்பதில்லை. ஏன்?
பதில்:-
ஏனென்றால் தந்தை யாராக இருக்கிறார் என்பதை அனைத்துக் குழந்தைகளும் ஒரே மாதிரி அறிந்து கொள்ளவில்லை. எப்போது முழுமையாக அறிந்து கொள்கிறார்களோ, அப்போது ஸ்ரீமத் படி நடப்பார்கள். 2. மாயா என்ற விரோதி ஸ்ரீமத் படி நடக்காத படி தடுத்து நிறுத்தி விடுகின்றது. அதனால் குழந்தைகள் இடை-இடையே தங்களின் வழிப்படி நடந்து கொள்கின்றனர். பிறகு சொல்கின்றனர், பாபா, மாயாவின் புயல்கள் வருகின்றன, உங்கள் நினைவு மறந்து போகிறது என்று பாபா சொல்கிறார், குழந்தைகளே, இராவணன் என்ற மாயாவிடம் பயப்படாதீர்கள். நன்றாகப் புருஷார்த்தம் செய்யுங்கள், அப்போது மாயா களைப்படைந்து விடும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
அவர் நம்மை விட்டுப் பிரியவும் மாட்டார்….
ஓம் சாந்தி. நீங்கள் தனி ஆத்மா. ஒவ்வொருவரும் சொல்வார்கள், ஓம் சாந்தி. இவர்கள் (பாப்தாதா) இருவர். இவர்களுக்கு இரண்டு முறை ஓம் சாந்தி – ஓம் சாந்தி என்று சொல்ல வேண்டும். இப்போது பாபா அமர்ந்து புரிய வைக்கிறார்-நீங்கள் இங்கே யுத்த மைதானத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அந்த மனிதர்கள் (அஞ்ஞானி கள்) தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது போல் அல்ல. அது போல் ஒவ்வொரு வீட்டிலும் கூட சண்டை யிட்டுக் கொண்டு தான் இருக்கின்றனர். பெரும்பான்மை யானவர்கள் பற்றிய விஷயம் இங்கே சொல்லப் படுகின்றது. இதில் முதலாவதாக இருப்பது தேக அபிமானம், இரண்டாவது காம விகாரம். இப்போது நீங்கள் நினைவு பலத்தின் மூலம் 5 விகாரங்கள் என்ற இராவணன் மீது வெற்றி பெறுகிறீர்கள். நினைவின் பலம் இருக்குமானால் நீங்கள் கீழே விழ மாட்டீர்கள். உங்களுக்கு ஒரு இராவணனோடு தான் யுத்தம். அங்கோ (உலகில்) அநேக விதமான விசயங்கள் உள்ளன. இங்கோ ஒரே விசயம் தான். உங்களுடைய யுத்தமே இராவணனோடு தான். உங்களுக்குக் கற்றுத் தருபவர் யார்? பதீத பாவனர் பகவான். அவரே தூய்மையற்றதிலிருந்து தூய்மை யாக்குபவர். தூய்மை என்றால் தேவதையாக, நீங்கள் உலகத்தின் எஜமானராக ஆகிறீர்கள். இராவணனால் தான் நீங்கள் தூய்மை இழந்தவராகியிருக்கிறீர்கள் என்பதை எந்த ஒரு மனிதரும் புரிந்து கொள்ளவில்லை. பாபா புரிய வைத்துள்ளார், இச்சமயம் முழு உலகமுமே இராவண இராஜ்ய மாக உள்ளது. அது போல் சத்யுகம், திரேதாயுகத்தில் இராம ராஜ்யம் உள்ளது. அதுவும் முழு உலகத்தில் என்று தான் சொல்வார்கள். ஆனால் அங்கே இவ்வளவு மனிதர்கள் இருக்க மாட்டார்கள். நீங்கள் யோகபலத்தின் மூலம் உலகத்தின் இராஜ்யத்தை அடைந்து கொண்டிருக் கிறீர்கள். இங்கே அமர்ந்திருக்கும் போது தான் பாபாவை நினைவு செய்ய வேண்டும் அல்லது சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்ற வேண்டும் என்பதில்லை. இதுவோ ஒவ்வொரு நேரமும் புத்தியில் இருக்க வேண்டும். நாம் சொர்க்கத்தில் அரைக்கல்பம் இராஜ்யம் செய்தோம். பிறகு இராவணனின் சாபம் கிடைப்பதால் கீழே இறங்குகிறோம். இறங்குவதில் நிறைய சமயம் பிடிக்கிறது. 84 ஏணிப்படிகளில் இறங்கி வரவேண்டி உள்ளது. உயரும் கலையில் படிகளோ கிடையாது. படிகள் இருந்தால் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்று எப்படிச் சொல்ல முடியும்? உங்களுக்கு இறங்குவதில் 2500 ஆண்டுகள் பிடிக்கிறது, ஆனால் நீங்கள் சில ஆண்டுகளிலேயே உயரும் கலையில் வந்து விடுகிறீர்கள்! உங்களுடையது யோகபலம். அவர்களுடையது புஜ பலம். துவாபரயுகம் தொடங்கி இறங்குகின்றனர். பிறகு புஜபலம் ஆரம்ப மாகின்றது. சத்யுகத்தில் அடிப்பதற்கான விஷயம் இருக்க முடியாது. கிருஷ்ணரை உரலில் கட்டிய தாகக் காட்டப்பட்டுள்ளது. இது போல் எந்த ஒரு விஷயமும் இருக்க முடியாது. அங்கே குழந்தை ஒரு போதும் சஞ்சலமுள்ளதாக இருப்பதில்லை. அதுவோ சர்வகுண சம்பன்ன, 16 கலை சம்பூர்ணமாக இருக்கும். கிருஷ்ணரை எவ்வளவு நினைவு செய்தே வந்துள்ளனர்! நல்ல பொருளின் நினைவு வருகிறது இல்லையா? எப்படி உலகத்தில் 7 அதிசயங்களும் மனிதர்களுக்கு நினைவு வருகிறது, பார்ப்பதற்காகச் செல்கின்றனர். அபுவில் நல்லதிலும் நல்ல பொருள் எது, அதை மனிதர்கள் பார்ப்பதற்காக வருகின்றனர்? தர்மத்தில் நம்பிக்கையுள்ளவர்களே கோவில்களைப் பார்ப்பதற்காக வரவே செய்கின்றனர். பக்தி மார்க்கத்திலோ கோவில்கள் அநேகம் உள்ளன. சத்யுக-திரேதாயுகத்தில் கோவில்கள் எதுவும் இருக்காது. கோவில்கள், ஞாபகார்த் தத்திற்காகப் பிற்காலத்தில் கட்டப் படுகின்றன. சத்யுகத்தில் பண்டிகைகள் முதலியன கிடையாது. தீபாவளியும் இது போல் இருக்காது. ஆம், சிம்மாசனத்தில் அமர்கின்றனர் என்றால் முடிசூட்டு விழாவைக் கொண்டாடுவார்கள். அங்கோ அனைவருடைய ஜோதியும் ஒளிப்பிரகாசத்துடன் இருக்கும்.
உங்களிடம் ஒரு பாடலும் உள்ளது – நவயுகம் வந்தது……. இது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் – நாம் புது யுகம், அதாவது சத்யுகத்திற்காக, தேவி-தேவதா ஆவதற்காகப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக் கிறோம். படிப்பையோ முழுமையாகப் படிக்க வேண்டும். எது வரை உயிருடன் இருக்கிறோமோ, அது வரை ஞான அமிர்தத்தை அருந்த வேண்டும். இது ஞானம், சிருஷ்டியின் முதல்-இடை-கடை பற்றி அறிய வேண்டும். இதில் மொழி முதலிய எதுவும் கற்றுக் கொள்ளப்படுவதில்லை. தந்தையை நினைவு செய்ய வேண்டும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுற்ற வேண்டும். அவ்வளவு தான். இங்கே நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள். புத்தியில் உள்ளது – நம்முடைய 84 பிறவிகள் முடிவடைந்தது. இப்போது பழைய சரீரம், பழைய சம்மந்தத்தை விட்டு புதிதாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். விஷ்ணுபுரிக்கு எஜமானர் ஆவதற்கான புருஷார்த்தத்தை பாபா செய்வித்துக் கொண்டிருக்கிறார். உலகில் உள்ள மற்ற அனைத்துமே அசுர சம்பிரதாயங்கள். பகவான் சொல்கிறார் – இப்போது அதே கீதாவின் யுகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது ஒவ்வொரு கல்பத்தின் இறுதியில் வருகின்ற சங்கமயுகம். பாபா சொல்கிறார் – நான் இந்தக் கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறேன். நான் அதே கீதையின் பகவான். நான் இங்கே வருகிறேன், புது உலகமாகிய சொர்க்கத் தைப் படைப்பதற்காக. நான் துவாபரயுகத்தில் எப்படி வருவேன்? இது ஒரு பெரிய தவறு. சில தவறுகள் சிறியதாகவும் சில தவறுகள் பெரியதாகவும் உள்ளன. இது பெரியதிலும் பெரிய தவறாகும். புனர்ஜென்மம் இல்லாதவராகிய சிவபகவானுக்கு பதிலாக 84 பிறவிகள் எடுப்பவரின் பெயரை எழுதி விட்டனர். இப்போது நீங்கள் அறிவீர்கள், ஸ்ரீகிருஷ்ணரோ, என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள் என்று சொல்ல முடியாது.. அனைத்து தர்மங்களைச் சேர்ந்தவர்களும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நீங்கள் சிவசக்தி சேனை. சிவபாபாவிடம் நினைவால் தொடர்பு வைத்து சக்தி பெறுகிறீர்கள். இதில் ஆண்-பெண் என்ற விசயம் கிடையாது. ஆத்மாக்கள் நீங்கள் அனைவரும் சகோதரர்கள். அனைவரும் பாபாவிடமிருந்து சக்தி பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். ஆஸ்தியை பாபா தான் தருவார் இல்லையா? அந்தத் தந்தை தான் சர்வசக்திவான். இந்த லட்சுமி-நாராயணரைக் கூட சர்வ சக்திவான் எனச் சொல்வார்கள். ஏனென்றால் முழு உலகத்திற்கும் அவர்கள் எஜமானர்கள் அவர்கள் இந்த இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள்? இப்போது பாரதம் மட்டுமென்ன, முழு உலகத்திலுமே இராவண இராஜ்யம். யாரேனும் இராஜாக்கள் இப்போது இருந்தார்களானால் அவர்களுக்குத் தெரியவரும். அவர்களை விடப் பெரியவர்கள் இந்த இராஜ்யத்தை ஆண்டிருக் கிறார்கள் என்று. அந்த ஆட்சி தொடர்ந்து வந்து கொண்டுள்ளது. இவர்களோ சத்யுக ஆரம்பத்திலிருந்து ஆண்டு வந்துள்ளனர், அதனால் நிச்சயமாக முந்தைய ஜென்மத்தில் அந்த மாதிரிப் புருஷார்த்தம் செய்திருப்பார்கள். தூய்மை இல்லாத இராஜ்யம் தான-புண்ணியம் செய்வதால் கிடைக்கின்றது. இங்கோ இந்த சங்கமயுகத்தில் ஞான-யோக பலத்தினால் 21 பிறவிகளுக்கு இராஜ்யத்தை அடை கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் முழுவதும் அழிந்து விடப் போகிறது. இந்த தேகமும் கூட இருக்கப் போவதில்லை. அதனால் தன்னை ஆத்மா என உணர்ந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். பாபா-பாபா என்று சொல்வதற்குக் கற்றுக் கொள்ளுங்கள். எப்படி சரீர சம்மந்தமான குழந்தை களுக்குப் புரிய வைக்கப் படுகின்றது என்றால் அவர்கள் அந்த சரீரமுடைய தந்தையை நினைவு செய்கின்றனர். இப்போது ஆன்மிகத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்கிறார்-ஹே குழந்தைகளே, இது புது விசயம். பாபா சொல்கிறார்-இப்போது ஆன்மிகத் தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். ஏனென்றால் இப்போது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மாவோ அழியாதது, சரீரம் அழியக் கூடியது என்றால் சக்தி மிகுந்தது எது? சரீரம் ஆத்மாவின் ஆதாரத்தில் செயல்பட வேண்டும். ஆத்மா சென்று விட்டது என்றால் சரீரத்தை நெருப்பில் எரிக்க வேண்டி உள்ளது. ஆத்மாவோ அழியாதது. அது புள்ளியிலும் புள்ளியாகவே உள்ளது. அந்த ஆத்மா பற்றி யாருக்குமே தெரியாது. யாருக்காவது சாட்சாத்காரம் கிடைத்தாலும் கூட என்ன? அவர்களுக்கோ, ஆத்மா ஒரு புள்ளியாக உள்ளது என்பதோ, அதில் 84 பிறவிகளின் அழியாத பார்ட் அடங்கி யுள்ளது என்பதோ தெரியாது. இந்த விசயங்கள் உங்களுடைய புத்தியில் தான் உள்ளது. இராஜயோகம் கற்பிப் பவரே அந்தத் தந்தை தான். மற்றப்படி பாரிஸ்டர், வக்கீல், இஞ்சினியர் முதலானவர்களோ இருந்தே வந்துள்ளனர். இங்கே மனிதரில் இருந்து தேவதை ஆக வேண்டும். அவர்களும் கூட மனிதர்கள் தான். ஆனால் அவர்கள் தேவதை எனச் சொல்லப் படுகிறார்கள். தேவதை என்றால் தெய்விக குணங்களை தாரணை செய்பவர்கள். நீங்கள் புருஷார்த்தம் செய்து அப்படிப்பட்ட தெய்விக குணங்கள் உள்ளவர் களாக ஆக வேண்டும். இது உங்களது நோக்கம்-குறிக்கோள். இந்த தேவதைகளிடம் எந்த குணங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். அது போல் நாம் ஆக வேண்டும். பிரஜைகளும் இருப்பார்கள் இல்லையா? பிரஜைகள் ஏராளமாக உருவாகிறார்கள். மற்றப்படி ராஜா-ராணி ஆவதில் முயற்சி செய்ய வேண்டியுள்ளது. யார் அதிக முயற்சி செய்கின்றனரோ, அவர்கள் ராஜா-ராணி ஆவார்கள். யார் அநேகருக்கு ஞானம் கொடுக்கின்றனரோ, அவர்கள் தங்கள் மனதால் புரிந்து கொள்ள முடியும். ஆத்மா சொல்கிறது – நான் எல்லையற்ற தந்தையுடையவராக ஆகியே தீருவேன். அவர் மீது சமர்ப்பண மாவேன், பலியாவேன். என்னிடம் என்னென்ன உள்ளனவோ, அனைத்தையும் அர்ப்பணித்து விடுவேன். அதற்கு பதிலாக உங்களிடமிருந்து புதிய உடல்-மனம்-செல்வத்தைப் பெற்றுக் கொள்வேன். மனம் புதியதாக எப்படிப் பெறுவேன்? ஆத்மாவைப் புதியதாக (தூய்மையானதாக) ஆக்குவார். பிறகு சரீரமும் புதியதாகப் பெறுவேன். இராஜதானியும் பெறுவேன். இப்போது நீங்கள் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் இல்லையா? ஆத்மா சொல்கிறது-ஹே பாபா, இந்த சரீரத்தோடு கூட நான் உங்களுடையவன். பாபா, நான் உங்களைச் சரணடைகிறேன். அனைவரும் இராவண இராஜ்யத்தில் மிகவும் துக்கமடைந்துள்ளனர். அதனால் பாபா, இப்போது இதிலிருந்து விடுவித்து தங்களின் இராஜ்யத்திற்கு எங்களை அழைத்துச் செல்லுங்கள். சிவபாபாவோ கிடைத்து விட்டார் என்றால் வேறென்ன பாக்கி உள்ளது? நீங்கள் அறிவீர்கள், சிவபாபாவின் ஸ்ரீமத் மூலம் சொர்க்கம் உருவாக வேண்டும். அசுர இராவணனின் வழிமுறைப்படி நரகம் உருவாகும். இப்போது ஸ்ரீமத்படி மீண்டும் சொர்க்கம் உருவாகப் போகிறது. நிச்சயமாக கல்பத்திற்கு முன் யார் வந்திருப்பார் களோ, அவர்கள் தான் வருவார்கள். ஸ்ரீமத் மூலம் உயர்ந்தவர்களாக ஆவார்கள். இராவணனின் வழிப்படி நடப்பதால் கீழே விழுந்து விடுவார்கள். உங்களுக்கு இப்போது உயரும் கலை. மற்ற அனைவர்க்கும் இறங்கும் கலை. எவ்வளவு அநேக தர்மங்கள் உள்ளன! சத்யுகத்தில் ஒரு தேவி-தேவதா தர்மம் தான் இருந்தது. இப்போது அது மறைந்து விட்டுள்ளது. (ஆலமரத்தின் உதாரணம்).
நீங்கள் அறிவீர்கள், தேவி-தேவதா தர்மத்தின் அடையாளங்களோ உள்ளன. நிச்சயமாக தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்தது. 5 ஆயிரம் ஆண்டுகளின் விசயம். நீங்கள் உறுதிப் படுத்திச் சொல்கிறீர்கள், இது 5 ஆயிரம் ஆண்டுகளின் சக்கரம். இதில் நான்கு யுகங்கள் உள்ளன. ஒவ்வொரு யுகத்தின் ஆயுள் 1250 ஆண்டுகள். அந்த மனிதர்களோ இலட்சக் கணக்கான ஆண்டுகள் கொடுத்து விட்டனர். அதிக வேறுபாடு ஆகி விட்ட காரணத்தால் யாருடைய புத்தியிலும் பதிவதில்லை. எப்படி மற்ற-மற்ற நிறுவனங்கள் உள்ளனவோ, அது போல் இதுவும் பி.கே.க்களின் நிறுவனம் எனவும் இவர்கள் கீதையை விட்டு விடுகின்றனர் எனவும் நினைக்கின்றனர். இப்போது கீதையோ கிருஷ்ணர் பாடியதாகும். இந்த தாதாவோ நகை வியாபாரியாக இருக்கிறார். அப்போது மனிதர்கள் குழம்பிப் போவார்கள் இல்லையா? பாபா சொல்கிறார் – நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை இந்த நேரம் வரை யாருமே அறிந்து கொள்ளவில்லை. கடைசியில் நீங்கள் முழுமையாக அறிந்து கொள்வீர்கள். இது வரை நம்பர்வார் அறிந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால் தான் ஸ்ரீமத் படி நடப்பது மிகவும் கஷ்டம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். நல்ல-நல்ல குழந்தைகள் கூட ஸ்ரீமத் படி நடப்பதில்லை. இராவணன் அவர்களை நடக்க விடுவதில்லை. தன்னுடைய வழிமுறைப்படி நடந்து கொள்கின்றனர். ஸ்ரீமத் படி முழுமையாக நடப்பவர்கள் மிகச் சிலர் தான். இன்னும் போகப்போக முழுமையாக அறிந்து கொள்வார்கள், அப்போது ஸ்ரீமத் படி நடப்பார்கள். நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன் என்பதை இன்னும் சில காலம் சென்றதும் புரிந்து கொள்வார்கள். இப்போது புரிந்து கொண்டுள்ளார்கள். முழுமையாகப் புரிந்து கொண்டு விட்டால் வேறு என்ன வேண்டும்? தனது இல்லறத்தில் தான் இருந்தாக வேண்டும். ஆனால் மாயா என்ற விரோதி அப்படிப் பட்டது, அது ஸ்ரீமத்படி நடப்பதில் இருந்து தடுத்து நிறுத்தி விடுகிறது. மாயாவின் புயல்கள் அதிகம் வருவதாகச் சொல்கின்றனர். மாயா எங்கள் நினைவை மறக்கடித்து விடுகிறது எனச் சொல்கின்றனர். ஆம்., புருஷார்த்தம் தீவிரமாகச் செய்யச் செய்ய, பிறகு மாயாவும் கடைசியில் களைத்துப் போகும். மாலையும் 8 மணிகளுடையது. முக்கியமானவர்கள் 8 இரத்தினங்கள். எட்டுப் பேரோ இணையாக (ஜோடி) இருப்பவர்கள். ஒன்பதாவது இரத்தினமாக சிவபாபாவை இடையில் வைக்கின்றனர். சிலர் சிவப்பாகவும் சிலர் வெள்ளையாகவும் அமைக்கின்றனர். இப்போது சிவபாபாவோ பிந்தியாக உள்ளார். பிந்தி சிவப்பாக இருப்பதில்லை. பிந்தியோ வெள்ளையாகவே இருக்கிறது. அவர் மிக சூட்சுமமானவர். திவ்ய புத்தியாலன்றி யாராலும் பார்க்க இயலாது. டாக்டர்கள் முதலானோர் பார்ப்பதற்கு எவ்வளவு முயற்சி செய்கின்றனர்! ஆனால் பார்க்க முடியாது. ஏனென்றால் அவ்யக்தமான (புலனுக்கெட்டாத) பொருள் இல்லையா? அதனால் கேட்கப் படுகிறது – நான் ஆத்மா என்று நீங்கள் சொல்கிறீர்கள். நல்லது, ஆத்மாவை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? தன்னையே பார்க்க முடியவில்லை என்றால் தந்தையை எப்படிப் பார்க்க முடியும்? ஆத்மாவை அறிந்து கொள்ள வேண்டும் – எப்படி அதனுள் நடிப்பின் பாகம் நிரம்பியுள்ளது? இதை முற்றிலுமே யாரும் அறிந்திருக்கவில்லை. 84-க்கு பதிலாக 84 இலட்சம் எனச் சொல்லி விடுகின்றனர். பாபா வந்து குழந்தைகளுக்கு அனைத்து விசயங்களையும் புரிய வைக்கிறார். இன்றைய பாரதம் என்னவாக உள்ளது, நாளைய பாரதம் என்னவாக இருக்கும்? மகாபாரத யுத்தமும் உள்ளது. கீதையின் ஞானமும் கொடுத்துள்ளார். இது ருத்ர ஞான யக்ஞமாகவும் உள்ளது. அனைத்து தர்மங்களின் விநாசம், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது சிவபாபாவின் உணவகம். இதில் உங்களுக்கு தூய்மையான உணவு கிடைக்கின்றது. பிராமண-பிராமணிகள் தான் சமைக்கின்றனர். அதனால் இதன் மகிமை அளவற்றது. இதனால் நீங்கள் தூய்மையாகி தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகிறீர்கள். அதனால் தூய்மையான (சாத்வீக) உணவு நல்லது. நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகிக் கொண்டே செல்கிறீர்களோ, அவ்வளவு உங்களுக்கு உணவும் சுத்தமானதாகக் கிடைக்கும். யோக நிலையில் (தந்தை நினைவில்) இருந்து யாராவது உணவு சமைப்பார்களானால் அதிக பலம் கிடைத்து விடும். அதுவும் இன்னும் போனால் கிடைக்கும். சேவாதாரிக் குழந்தைகள் சென்டரில் இருக்கின்றனர் என்றால் அவர்கள் தங்களின் கையால் சமைத்து உண்பார்களானால் அதிக பலம் கிடைக்கும். எப்படி பதிவிரதையான மனைவி, கணவனைத் தவிர வேறு யாரையும் நினைப்பதில்லை. அது போல் குழந்தைகள் நீங்களும் கூட தந்தை நினைவில் இருந்து உணவைத் தயார் செய்யுங்கள், உண்ணுங்கள். அப்போது அதிக பலம் கிடைக்கும். பாபாவின் நினைவில் இருப்பதால் நீங்கள் உலகத்தின் ராஜபதவியைப் பெறுகிறீர்கள். பாபா அறிவுரை தருகிறார். ஆனால் இப்போது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. இன்னும் கொஞ்ச காலம் போனால் அது நடக்கும். சொல்வார்கள்-நாங்கள் எங்கள் கையால் யோக நிலையில் இருந்து உணவு சமைக்கிறோம் என்றால் அனைவர்க்கும் நன்மை நடைபெறும்.
தந்தை குழந்தைகளுக்கு ஒவ்வொரு விதமான அறிவுரை தருகிறார் இல்லையா? திரிமூர்த்தியின் சித்திரம் முன்னால் இருக்க வேண்டும். ஆஸ்தியை சிவபாபாவிடமிருந்து பெற வேண்டும். ஏதேனும் ஒரு யுக்தியைப் பயன்படுத்திக் கொண்டே இருங்கள். (பிரம்மா) பாபா தம்முடைய உதாரணம் சொல்கிறார் – பக்தி மார்க்கத்தில் நான் நாராயணனின் சித்திரத்தின் மீது அதிகப் பிரியம் வைத்திருந் தேன்.அவரை நினைவு செய்வதால் கண்ணீர் வந்து விடும். ஏனென்றால் அந்தச் சமயம் வைராக்கியம் இருந்தது. சிறு வயதில் வைராக்கியத்தின் உணர்வு இருந்தது. இவை பிறகு எல்லையற்ற விசயங் களாகும். பிறகும் சொல்கிறார் – மன்மனாபவ. யோகத்தில் இருப்பதால் தான் நீங்கள் தமோபிர தானத்தில் இருந்து சதோபிரதானம் ஆவீர்கள். நினைவில் இருப்பதற்கான அக்கறை வைக்க வேண்டும். ஸ்ரீமத் கிடைக்கிறது, பாபா சொல்கிறார்-நினைவு செய்யுங்கள். நான் சிருஷ்டியைப் படைப்பவர் என்றால் நீங்களும் புது உலகின் எஜமானர் ஆவீர்கள் இல்லையா? இல்லை என்றால் தண்டனையும் அடைவீர்கள், மேலும் பதவியும் தாழ்ந்ததாக ஆகி விடும். இறப்பதற்கு முன் குழந்தைகள் இந்த கவனம் வைக்க வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) தந்தையின் நினைவில் மூழ்கிய நிலையில் இருந்து தனது கையால் உணவு சமைத்து உண்ண வேண்டும். தூய்மையான உலகத்திற்குச் செல்வதற்காக சுத்தமான (சாத்வீக) பவித்திர உணவை உண்ண வேண்டும். அதில் தான் பலம் உள்ளது.
2) புதிய உடல்-மனம்-செல்வத்தை அடைவதற்காக பழையவை அனைத்தையும் பாபாவுக்கு அர்ப்பணித்து விட வேண்டும். இந்த சரீரம் முதற்கொண்டு அனைத்தையும் பாபா மீது முழுமையாக பலியாக்கி விட வேண்டும்.
வரதானம்:-
மகான் ஆத்மாக்களின் ஒவ்வொரு நடத்தை மூலமாகவும் சர்வ ஆத்மாக்களுக்கும் சுகத்தின் தானம் கிடைக்கிறது. அவர்கள் சுகம் கொடுக்கிறார்கள் மற்றும் சுகம் பெறுகிறார்கள். ஆக, சோதித்துப் பாருங்கள் — மகான் ஆத்மாவின் கணக்குப்படி நாம் அனைவர்க்கும் சுகம் கொடுத்தோமா, புண்ணிய காரியம் செய்தோமா? புண்ணியம் என்றால் யாருக்காவது அந்த மாதிரி ஒரு பொருளைக் கொடுக்க வேண்டும் — அதன் மூலம் அந்த ஆத்மாவிடமிருந்து ஆசிர்வாதம் வெளிப்பட வேண்டும். ஆக, சோதித்துப் பாருங்கள் — ஒவ்வோர் ஆத்மா விடமிருந்தும் ஆசிர்வாதம் கிடைத்துக் கொண்டிருக் கிறதா? யாருக்கும் துக்கம் கொடுக்காமல், துக்கம் பெறாமல் இருந்தோமா? அப்போது மகான் ஆத்மா எனச் சொல்வார்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!