01 October 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

30 September 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! நீங்கள் மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

கேள்வி: -

எந்தவொரு விஷயத்திற்கு இந்த படிப்போடு சம்பந்தம் கிடையாது?

பதில்:-

ஆடை முதலியவற்றின் சம்பந்தம் இந்த படிப்போடு கிடையாது. இதில் ஆடை எதுவும் மாற்று வதற்கான விஷயம் இல்லை. தந்தையோ ஆத்மாக்களுக்கு கற்பிக்கிறார். இது பழைய பதீதமான சரீரம் என்று ஆத்மா அறிந்திருக்கிறது. இதற்கு எத்தகைய குறைவான தரமுடைய ஆடையை அணிவித்தாலும் பரவாயில்லை. சரீரம் மற்றும் ஆத்மா இரண்டுமே கருப்பாக உள்ளது. தந்தை கருமை நிறத்தைத் தான் வெண்மை ஆக்குகின்றார்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

ஓம் சாந்தி. ஆன்மிக பாடசாலையில் ஆன்மிகத் தந்தைக்கு எதிரில் ஆன்மிகக் குழந்தைகள் அமர்ந்திருக்கிறீர்கள். இது உலகீய பாடசாலை அல்ல. ஆன்மிக பாடசாலையில் ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தை வந்து இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். நாம் மீண்டும் நரனிலிருந்து நாராயணராக அதாவது தேவி தேவதை பதவியை பிராப்தியாக அடைவதற்காக ஆன்மிகத் தந்தையிடம் அமர்ந்திருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இது புதிய விஷயமாகும்.இலட்சுமி நாராணயருடைய இராஜ்யம் நடந்தது. அவர்கள் இரட்டை கிரீடதாரிகளாக இருந்தார்கள், ஒளி கிரீடம் மற்றும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ஆகிய இரண்டும் இருந்தன என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஒளி கிரீடம் முதன் முதலில் இருந்தது. யார் வாழ்ந்துவிட்டுச் சென்றார்களோ அவர்களே வெண்மையான ஒளியைக் காண்பிக்கின்றார்கள். இது தூய்மையின் அடையாளமாகும். தூய்மையற்றவர்களுக்கு ஒரு பொழுதும் (பின்புற தலையில்) ஒளியைக் காண்பிக்க மாட்டார்கள். உங்களுடைய புகைப்படம் எடுத்தாலும் ஒளியைக் காண்பிக்க இயலாது. தூய்மையின் அடையாளமாக இதை காண்பிக் கிறார்கள். ஒளி மற்றும் இருள். பிரம்மாவின் பகல் ஒளி, பிரம்மாவின் இரவு இருள். இருள் என்றால் ஒளி இல்லை என்பதாகும். தந்தை தான் வந்து இத்தனை பதீதமானவர்களை அதாவது மிகவும் கருமையே கருமையானவர்களை பாவனம் ஆக்குகின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். தூய்மையான இராஜ்யம் இப்பொழுது இல்லை. சத்யுகத்தில் இருந்தது. இராஜா, இராணி போலவே பிரஜைகளும் இருந்தனர். அதாவது அனைவரும் தூய்மையாக இருந்தனர். இந்த இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் நடந்தது. குழந்தைகளாகிய நீங்கள் இந்தச் சித்திரங்களைப் பற்றி மிக நல்ல முறையில் புரிய வைக்க வேண்டும். இது உங்களுடைய இலட்சியம் ஆகும். புரியவைப்பதற்காக இன்னும் நல்ல சித்திரங்கள் உள்ளன. ஆகையினால் இத்தனை சித்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நாம் இந்த நினைவு யாத்திரையின் மூலம் தமோபிரதானத்திலிருந்து, சதோபிரதானம் ஆவோம், பிறகு முக்தி மற்றும் ஜீவன்முக்திக்குச் சென்றுவிடுவோம் என்று மனிதர்கள் எவரும் சீக்கிரத்தில் புரிந்து கொள்வதில்லை. ஜீவன்முக்தி என்று அழைக்கப்படுவது எது என்பது உலகத்தில் எவருக்கும் தெரியாது. இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் எப்பொழுது நடந்தது என்பதும் எவருக்கும் தெரியாது. நாம் தந்தை யிடமிருந்து தூய்மையான தெய்வீக சுயராஜ்யத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சித்திரங்களை வைத்து நீங்கள் நல்ல முறையில் புரிய வைக்க இயலும். பாரதத்தில் தான் இரட்டை கிரீடம் அணிந்தவர்களுக்கு பூஜை செய்கின்றார்கள். அத்தகைய சித்திரம் கூட ஏணிப்படியில் உள்ளது. அந்த கிரீடம் உள்ளது, எனினும், ஒளிக் கிரீடம் இல்லை. தூய்மையானவர்களுக்குத் தான் பூஜை நடக்கிறது. ஒளியானது தூய்மையின் அடையாளம் ஆகும். மற்றபடி ஒருவர் சிம்மாசனத்தில் அமர்ந்த உடனேயே ஒளி வந்துவிடுகிறது என்பது அல்ல. இது தூய்மையின் அடையாளமாகும். நீங்கள் இப்பொழுது முயற்சியாளர்களாக இருக்கிறீர்கள். ஆகையினால், உங்களுக்கும் ஒளியைக் (கிரீடம்) காண்பிக்க இயலாது. தேவி, தேவதைகளின் ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டும் தூய்மையாக உள்ளன. இங்கோ எவருக்கும் தூய சரீரம் கிடையாது. ஆகையினால், ஒளியைக் காண்பிக்க இயலாது. உங்களில் சிலர் முழுமையாக தூய்மையாக இருக்கிறார்கள்.சிலர் பாதி தூய்மையாக இருக்கிறார்கள். மாயாவின் புயல் அதிகம் வருகின்றது என்றால் அவர்களை பாதி தூய்மையானவர்கள் என்றே சொல்லலாம். சிலரோ முற்றிலுமாக பதீதம் ஆகிவிடுகின்றனர். நாம் பதீதம் ஆகிவிட்டோம் என்று அவர்களே புரிந்து கொள்கின்றார்கள். ஆத்மா தான் பதீதம் ஆகிறது, அதற்கு ஒளிக் காண்பிக்க இயலாது.

குழந்தைகளாகிய நீங்கள், நாம் உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள் என்பதை மறக்கக்கூடாது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையின் குழந்தைகள் என்றால் எவ்வளவு கம்பீரம் (ராயல்டி) இருக்க வேண்டும். ஒரு துப்புரவு தொழிலாளர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் எம்.எல்.ஏ அல்லது எம்.பி ஆகிவிடுகிறார் அதாவது படித்து ஏதாவது பதவியைப் பெற்றுவிடுகிறார் என்றால் டிப்டாப் ஆகிவிடுகின்றார். அத்தகையோர் அனேகம் பேர் ஆகி விட்டனர். ஜாதியோ அதே தான், ஆனால் பதவி கிடைத்ததால் போதை ஏறிவிடுகிறது. பின்னர், ஆடை முதலியவை கூட அதற்கேற்றார் போல் அணிவார்கள். அவ்வாறே, இப்பொழுது நீங்களும் பதீதத்திலிருந்து பாவனம் ஆவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களும் படிப்பின் மூலம் டாக்டர், வக்கீல் முதலியோராக ஆகின்றார்கள். ஆனாலும், பதீதமானவர்களாகத் தானே இருக்கிறார்கள்! ஏனெனில், அவர்களுடைய படிப்பு பாவனம் ஆவதற்காக அல்ல. நாம் எதிர்காலத்தில் தூய தேவி, தேவதை ஆகின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்றால் சூத்திரத்தன்மையின் பழக்கங்கள் அழிந்து போய் விடும். நம்மை பரமபிதா பரமாத்மா இரட்டை கிரீடதாரி ஆக்குகின்றார் என்ற இந்த போதை உள்ளுக்குள் இருக்க வேண்டும். நாம் சூத்திரனிலிருந்து பிராமணர் ஆகின்றோம், பிறகு, தேவதை ஆவோம் எனில், பின்னர் அந்த அசுத்தமான விகாரி பழக்கங்கள் அழிந்துவிடும். அசுர விஷயங்கள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும். துப்புரவுவாளர்களி-ருந்து எம்.பி. ஆகிவிடுகின்றனர் என்றால் வாழ்க்கை முறை, வீடு ஆகிய அனைத்தும் முதல் தரமானதாக ஆகிவிடுகிறது. அவர்களுடையதோ இந்த சமயத்திற் கானது ஆகும். நாம் எதிர்காலத்தில் என்னவாக ஆகக்கூடியவர்கள் என்பதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். தன்னோடு இவ்வாறு பேச வேண்டும். நாம் என்னவாக இருந்தோம், இப்பொழுது என்னவாக ஆகியிருக்கிறோம்? நீங்களும் சூத்திர ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது விஷ்வத்தின் எஜமானர் ஆகிறீர்கள். ஒருவர் உயர்ந்த பதவியை அடையும் பொழுது அதன் கர்வம் ஏற்படும். நீங்களும் என்னவாக இருந்தீர்கள்? (பதீதமானவர்களாக இருந்தோம்). சீ, சீ-யாக இருந்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு பகவான் படிப்பித்து, விஷ்வத்தின் எஜமானர் ஆக்குகிறார். பரமபிதா பரமாத்மா அவசியம் இங்கு வந்து தான் இராஜயோகத்தைக் கற்பிப்பார் என்பதையும் நீங்கள் புரிந்திருக் கிறீர்கள். மூலவதனத்திலோ அல்லது சூட்சுமவதனத்திலோ கற்பிக்கமாட்டார். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் தூரதேசத்தில் இருக்கக்கூடியவர்கள், இங்கு தான் நடிப்பு நடிக்கிறீர்கள். 84 பிறவிகளின் நடிப்பு நடித்துதான் ஆகவேண்டும்.அவர்களோ 84 லட்ச பிறவிகள் என்று கூறுகின்றனர். எவ்வளவு காரிருளில் இருக்கிறார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நாம் தேவி, தேவதைகளாக இருந்தோம், இப்பொழுது பதீதம் ஆகிவிட்டோம் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். ஹே! பதீத பாவனரே வாருங்கள், எங்களை பாவனம் ஆக்குங்கள் என்று பாடவும் செய்கிறார்கள். ஆனாலும், புரிந்துகொள்ளவில்லை. இப்பொழுது சுயம் தந்தை பாவனம் ஆக்குவதற்கு வந்திருக்கின்றார். இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார். படிக்காமல் ஒருவர் உயர்பதவி அடைய முடியாது. பாபா நமக்குக் கற்பித்து நரனிலிருந்து நாராயணர் ஆக்குகின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இலட்சியம் எதிரில் உள்ளது. பிரஜை பதவியானது இலட்சியம் அல்ல. சித்திரம் கூட இலட்சுமி நாராயணருடையது தான் உள்ளது. அத்தகைய சித்திரத்தை எங்கேயாவது வைத்து கற்பித்திருக் கின்றீர்களா? உங்களுடைய புத்தியில் முழுஞானம் உள்ளது. நாம் 84 பிறவிகள் எடுத்து பதீதம் ஆகிவிட்டோம். ஏணிப்படி சித்திரம் மிக நல்ல சித்திரமாகும். இது பதீத உலகம் அல்லவா! இதில் சாது, சந்நியாசி அனைவரும் வந்துவிடுகின்றனர். பதீத பாவனரே வாருங்கள் என்று அவர்களும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். பதீத உலகை பாவன உலகம் என்று சொல்வதில்லை. புது உலகமே பாவன உலகம் ஆகும். பழைய பதீத உலகில் பாவனமான எவரும் இருக்க முடியாது. எனவே, குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு போதை இருக்க வேண்டும். நாம் இறைதந்தையின் மாணவர்கள் ஆவோம். ஈஸ்வரன் நமக்குக் கற்பிக்கின்றார். ஏழ்மை யானவர் களுக்குத் தான் தந்தை வந்து கற்பிக்கின்றார். ஏழ்மையானவர்களின் ஆடை முதலியவை அழுக்காக இருக்கும் அல்லவா! உங்களுடைய ஆத்மாவானது படிக்கிறது! இது பழைய சரீரம் என்று ஆத்மா அறிந்திருக்கிறது. இதற்கு சாதாரணமான எந்த ஆடை அணிவித்தாலும் பரவாயில்லை.ஆடை முதலியவை மாற்றுவதற்கான விஷயமோ அல்லது பகட்டைவெளிப்படுத்துவதற்கான விஷயமோ இதில் இல்லை.ஆடையோடு எந்த சம்பந்தமும் கிடையாது.தந்தையோ ஆத்மாக் களுக்குக் கற்பிக்கின்றார். சரீரமோ பதீதமாக உள்ளது. இதன் மீது எவ்வளவு தான் நல்ல ஆடை அணிந்தாலும் ஆத்மா மற்றும் சரீரம் பதீதமாக உள்ளது அல்லவா! கிருஷ்ணரை கருப்பாக காண்பிக்கின்றார்கள். அவருடைய ஆத்மா மற்றும் சரீரம் இரண்டுமே கருப்பாக இருந்தது. கிராமத்துச் சிறுவனாக இருந்தார். நீங்கள் அனைவரும் கிராமத்துச் சிறுவர்களாக இருந்தீர்கள். உலகத்தில் மனிதர்கள் ஏழைகளாக இருக்கின்றார்கள். தந்தையை அறியவே இல்லை. எல்லைக்குட்பட்ட தந்தையோ அனைவருக்கும் இருக்கிறார். எல்லையற்ற தந்தை பிராமணர் களாகிய உங்களுக்குத் தான் கிடைத்திருக்கின்றார். இப்பொழுது எல்லையற்ற தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். பக்தி மற்றும் ஞானம். எப்பொழுது பக்தியின் இறுதிநேரம் ஆகுமோ அப்பொழுது தந்தை வந்து ஞானம் கொடுப்பார். இப்பொழுது இறுதி நேரமாகும். சத்யுகத்தில் இது எதுவும் இருக்காது. இப்பொழுது பழைய உலகத்தின் வினாசம் வந்துவிட்டது. தூய்மையான உலகை சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. சித்திரங்களில் எவ்வளவு தெளிவாகப் புரிய வைக்கப்படுகிறது! இராதை, கிருஷ்ணர் தான் பின்னர் இலட்சுமி நாராயணர் ஆகின்றார்கள். இதுவும் யாருக்கும் தெரியாது. இரு வரும் வெவ்வேறு இராஜ்யத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் சொர்க்கத்தின் சுயம்வரத்தையும் பார்த்திருக்கிறீர்கள். பாகிஸ்தானில் குழந்தைகளாகிய உங்களை மகிழ்விப் பதற்காக அனைத்து சாதனங்களும் இருந்தன. அனைத்து காட்சிகளும் உங்களுக்குக் கிடைத்தது.

நாம் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இதை மறக்கக்கூடாது. சமையல் வேலை செய்வதாலும் அல்லது பாத்திரம் தேய்த்தாலும் கற்பது அனைவருடைய ஆத்மா தான் அல்லவா! இங்கு அனைவரும் வந்து அமர்கின்றனர். ஆனால், பெரிய பெரிய மனிதர்கள் வருவ தில்லை. இங்கு அனைவரும் ஏழைகளாகத் தான் இருக்கிறார்கள் என்று நினைப்பதால் வெட்கம் வருகிறது. தந்தையோ ஏழைப்பங்காளராக இருக்கின்றார். சில சில சென்டர்களுக்கு துப்புரவு தொழிலாளர்களும் வருகிறார்கள். இஸ்லாமியர் சிலரும் வருகின்றார் கள். தேகத்தின் அனைத்து தர்மங்களையும் விட்டுவிடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நாங்கள் குஜராத்திகள், நாங்கள் இன்னார்- இவையனைத்தும் தேக அபிமானமாகும். இங்கோ ஆத்மாக்களுக்கு பரமாத்மா கற்பிக்கின்றார்.நான் வந்திருப்பதே சாதாரண உடலில் தான் என்று தந்தை கூறுகின்றார். எனவே, சாதாரணமானவரிடம் சாதாரணமானவர்கள் தான் வருவார்கள். இவர் இரத்தின வியாபாரியாக இருந்தார் என்று நினைக்கின்றார்கள். நான் சாதாரண வயோதிக உடலில் வருகின்றேன். அனேக பிறவிகளுடைய இறுதியிலும் இறுதிப்பிறப்பில் நான் பிரவேசம் செய்கின்றேன் என்று நான் கல்பத்திற்கு முன்பும் கூறி இருந்தேன் என்பதை தந்தை நினைவுபடுத்துகின்றார். நீங்கள் தன்னுடைய பிறவிகளைப் பற்றி அறியவில்லை என்று இவரிடம் (பிரம்மா) கூறுகின்றார். ஒரு அர்ஜுனருக்கு மட்டும் குதிரை இரதத்தில் அமர்ந்து ஞானம் கொடுக்க வில்லை அல்லவா! அதை பாடசாலை என்று சொல்ல முடியாது! இது யுத்த மைதானம் அல்ல, இது கல்வி யாகும். குழந்தைகள் படிப்பின் மீது முழுமையான கவனம் கொடுக்க வேண்டும். நாம் முழுமையாகப் படித்து இரட்டை கீரிடதாரி ஆகவேண்டும். இப்பொழுது எந்த கிரீடமும் இல்லை. எதிர்காலத்தில் இரட்டை கிரீடதாரி ஆகவேண்டும். துவாபரயுகத்தில் இருந்து ஒளி மறைந்து விடுகிறது. எனவே, பிறகு ஒரு கிரீடம் இருக்கிறது. ஒரு கிரீடம் அணிந்தவர்கள் இரட்டை கிரீடம் அணிந்தவர்களைப் பூஜிக்கின்றனர். இந்த அடையாளமும் அவசியம் இருக்க வேண்டும். பாபா சித்திரங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டிக் கொண்டே இருக்கின்றார் என்றால், சித்திரங்களை உருவாக்குபவர்கள் முரளியில் மிகுந்த கவனம் கொடுக்க வேண்டும். யாருக்கும் சித்திரங்களை வைத்து புரிய வைப்பது மிக எளிதாக இருக்கும். எவ்வாறு கல்லுôரியில் வரைபடம் வைத்து காண்பிக்கும்பொழுது ஜரோப்பா அந்தப் பக்கம் உள்ளது, தீவு உள்ளது, லண்டன் அந்தப் பக்கம் உள்ளது என்பது புத்தியில் பதிந்துவிடும். வரைபடத்தையே பார்க்கவில்லை என்றால் ஜரோப்பா எங்குள்ளது என்று அவர்களுக்கு என்ன தெரியும்? வரைபடத்தை பார்த்தவுடன் புத்தியில் வந்துவிடும்.பூஜைக்குரிய இரட்டை கிரீடதாரி தேவி, தேவதைகள் மேலே இருக்கின்றார்கள், பிறகு, கீழே வரும்பொழுது பூஜாரி ஆகின்றார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஏணிப்படியில் இறங்குகிறார்கள் அல்லவா! இந்த ஏணிப்படி மிக எளிதானதாகும். யார் வேண்டு மானாலும் இதைப் புரிந்து கொள்ள இயலும். ஆனால், சிலரது புத்தியில் எதுவுமே தங்குவதில்லை. அதிர்ஷ்டமே அவ்வாறு உள்ளது. பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் முயற்சி கூட செய்யமாட்டார்கள், நோயாளி ஆகிவிடுவார்கள். படிக்க இயலாது போய்விடும். சிலரோ முழுவதுமாக படிக்கிறார்கள். ஆனாலும், அது உலகாயக்கல்வி, இது ஆன்மிகக் கல்வியாகும். இதற்காக தங்க புத்தி வேண்டும். சதா தூய்மையான, பொன்னான தந்தையை நினைவு செய்வதன் மூலம் உங்களுடைய ஆத்மா பொன்னாகிவிடும். இவர் முற்றிலும் கல்புத்தி உடையவராய் இருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. அங்கு அவ்வாறு சொல்வதில்லை. அதுவோ சொர்க்கமாக இருந்தது. பாரதம் சொர்க்க மாக இருந்தது என்பதை மறந்துவிட்டனர். இதையும் படவிளக்கக் கண்காட்சியில் புரிய வைக்க இயலும். பின்னர், திரும்பிச் சொல்ல வைக்க இயலும். புரொஜெக்டரில் (டழ்ர்த்ங்ஸ்ரீற்ர்ழ்) இதைச் செய்ய இயலாது. முதன்முதலில் இந்த திருமூர்த்தி, இலட்சுமி, நாராயணர் மற்றும் ஏணிப்படி சித்திரம் மிக அவசியமானது ஆகும். இந்த இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தில் முழு 84 பிறவிகளின் ஞானம் வந்துவிடுகிறது. குழந்தைகளுக்கு முழுநாளும் இந்தச் சிந்தனை ஓட வேண்டும். ஒவ்வொரு சென்டரிலும் முக்கியமான சித்திரத்தை அவசியம் வைக்க வேண்டும். சித்திரங்களைப் பார்த்து நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். பிரம்மா மூலம் இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் பிரம்மாகுமாரர், குமாரிகள் ஆவோம். முன்பு நாம் சூத்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தோம். இப்பொழுது நாம் பிராமணகுலத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியிருக்கிறோம். பிறகு, தேவதை ஆகவேண்டும். சிவபாபா நம்மை சூத்திரனிலிருந்து பிராமணர் ஆக்குகின்றார். நமது இலட்சியம் எதிரில் உள்ளது. இந்த இலட்சுமி, நாராயணர் சொர்க்கத்தின் எஜமானர்களாக இருந்தார்கள். பின்னர், இந்த ஏணிப்படியில் எவ்வாறு இறங்குகிறார்கள்? எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வந்துவிட்டார் கள்? முற்றிலும் புத்தியற்றவர்கள் ஆகிவிட்டார்கள். இந்த இலட்சுமி, நாராயணர் பாரதத்தில் இராஜ்யம் செய்தனர். இது பாரதவாசிகளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! பிறகு, என்ன ஆனது? எங்கு சென்றுவிட்டார்கள்? இவர்களை யாராவது வென்றார்களா என்ன? அவர்கள் யுத்தத்தில் யாரையாவது தோல்வி அடையச் செய்தார்களா? யாரையும் வெல்லவும் இல்லை, தோற்கவும் இல்லை. இது முழுவதும் மாயையின் விஷயமாகும். இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆனது. மேலும், 5 விகாரங்களில் விழுந்து இராஜ்யத்தை இழந்தார்கள். பின்னர், 5 விகாரங்களை வெற்றி அடைவதன் மூலம் இலட்சுமி, நாராயணர் ஆகின்றார்கள். இப்பொழுது இராவண இராஜ்யத்தின் பகட்டு உள்ளது. நாம் மறைமுகமான முறையில் நமது இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் எவ்வளவு சாதாரணமானவர்கள். கற்பிக்கக்கூடியவர் எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்தவர்! மேலும், நிராகார தந்தை பதீத சரீரத்தில் வந்து குழந்தை களை அத்தகையவர்களாக (இலட்சுமி, நாராயணர்) ஆக்குகின்றார். தூரதேசத்திலிருந்து பதீத உலகில், பதீத சரீரத்தில் வருகின்றார். அதுவும் தன்னை இலட்சுமி, நாராயணர் ஆக்கவில்லை, குழந்தைகளாகிய உங்களை ஆக்குகின்றார். ஆனால், ஆவதற்கான முழுமையான முயற்சியை நீங்கள் செய்வதில்லை. இரவு பகலாக கற்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும். பாபா நாளுக்குநாள் மிக எளிய யுக்திகளைப் புரிய வைத்துக் கொண்டிருக் கிறார். இலட்சுமி, நாராயணரிடமிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் 84 பிறவிகள் எவ்வாறு எடுத்தார்கள்? பின்னர், கடைசி பிறவியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர், அவர்களுடைய வம்சம் உருவாகிறது. எவ்வளவு புரிய வைப்பதற்கான விஷயங்கள் இவை! சித்திரங்களுக்காக தந்தை வழி காட்டுகின்றார். ஏதாவது ஒரு சித்திரத்தை தயார் செய்துவிட்ட உடன் பாபாவிடம் ஓடி வர வேண்டும். பாபா அதில் திருத்தம் செய்து அனைத்து வழிமுறையும் கூறுவார்.

பாபா கூறுகின்றார் – நான் எஜமானராக (சாவல்ஷா) இருக்கின்றேன், உண்டியல் நிறைந்துவிடும். எந்த விஷயத்தின் கவலையும் இல்லை. இவ்வளவு நிறைய குழந்தைகள் உள்ளனர். யார் மூலம் உண்டியலை நிர்ப்ப முடியும் என்று பாபா அறிந்திருக்கின்றார். ஜெய்ப்பூரை வலிமையோடு உயர்த்த வேண்டும் என்பது பாபாவின் எண்ணம் ஆகும். அங்கே தான் ஹடயோகிகளின் அருட்காட்சியகம் (மியூசியம்) உள்ளது. யார் வேண்டுமானாலும் வந்து பார்க்கும்படியாக, உங்களுடைய இராஜயோகத்தின் மியூசியம் மிக நன்றாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. தூய ஞானத்தை புத்தியில் தாரணை செய்வதற்காக தனது புத்தி என்ற பாத்திரத்தை தங்கமாக ஆக்க வேண்டும். நினைவின் மூலம் தான் பாத்திரம் தங்கம் ஆகும்.

2. இப்பொழுது பிராமணர்கள் ஆகியிருக்கிறீர்கள். ஆகையால், சூத்திரத்தன்மையின் அனைத்து பழக்கங்களையும் அழித்து விட வேண்டும். மிகுந்த ராயல்டியோடு இருக்க வேண்டும். நாம் விஷ்வத்தின் எஜமானர் ஆகிக்கொண்டிருக்கிறோம் என்ற இந்த போதையில் இருக்க வேண்டும்.

வரதானம்:-

தனது விருத்தியின் மாற்றத்தின் மூலம் திருஷ்டியை தெய்வீகமானதாக ஆக்கும் போது திருஷ்டியின் மூலம் அநேக ஆத்மாக்கள் தங்களது யதார்த்த ரூபம், யதார்த்த வீடு மற்றும் யதார்த்தமான இராஜ்யத்தைப் பார்ப்பார்கள். இவ்வாறு யதார்த்தமாக சாட்சாத்காரம் செய்விப்பதற் காக விருத்தியின் துளியளவும் தேக அபிமானத்தின் சஞ்சலம் இருக்கக் கூடாது. ஆக விருத்தியில் மாற்றத்தின் மூலம் திருஷ்டியை தெய்வீகம் ஆக்கும் போது இந்த சிருஷ்டி மாறி விடும். பார்க்கக் கூடியவர்கள் இது கண்கள் அல்ல, இது மந்திர சக்திகள் நிறைந்த பெட்டகம் என்று அனுபவம் செய்வார்கள். இந்த கண்கள் சாட்சாத்காரத்திற்கான சாதனம் ஆகிவிடும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top