11 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 10, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

பிரம்மா தாய்-தந்தைக்கு தனது பிராமணக் குழந்தைகளின் மீது இரண்டு சுப விருப்பங்கள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று உலகின் அனைத்து ஆத்மாக்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றக் கூடிய பாப்தாதா தனது ஆன்மீக சுப ஆசைகளை தீபங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். எவ்வாறு தந்தை அனைவரின் சுப ஆசைகளையும் நிறைவேற்றக் கூடியவராக இருக்கின்றாரோ, குழந்தைகளும் தந்தையின் சுப ஆசைகளை நிறைவேற்றக் கூடியவர்கள். தந்தை குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றுகின்றார், குழந்தைகள் தந்தையின் ஆசைகளை நிறைவேற்றுகின்றனர். தந்தைக்கு குழந்தைகளின் மீது எந்த ஆசை இருக்கிறது என்பதை அறிவீர்கள் அல்லவா? ஒவ்வொரு பிராமண ஆத்மா தந்தையின் ஆசை தீபமாக இருக்கின்றனர். தீபம் என்றால் சதா சுடர் விடும் ஜோதி. சதா எரிந்து கொண்டிருக்கும் தீபம் பிரியமானதாக இருக்கும். அடிக்கடி மங்களாக எரியும் தீபமாக இருந்தால் எப்படி இருக்கும்? தந்தையின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றக் கூடியவர்கள் அதாவது சதா எரிந்து கொண்டிருக்கும் தீபங்களைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்.

இன்று பாப்தாதா தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர். பாப்தாதாவின் எதிரில் சதா யார் இருக்கின்றனர்? குழந்தைகள் இருக்கின்றனர் அல்லவா! ஆக உரையாடலும் குழந்தைகளைப் பற்றித் தான் செய்வார்கள் அல்லவா! சிவதந்தை பிரம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார் – குழந்தைகளிடம் இன்று வரை ஏதாவது சுப ஆசைகள் இருக்கின்றதா? பிரம்மா பாபா கூறினார் – குழந்தைகள் வரிசைக் கிரமமாக தங்களது சக்திக்கேற்ப, கவனத்திற்கேற்ப சதா தந்தையின் சுப ஆசைகளை நிறைவேற்று வதில் அவசிம் ஈடுபட்டிருக்கின்றனர். ஒவ்வொருவரின் உள்ளத் திலும் ஊக்கம், உற்சாகம் அவசியம் இருக்கிறது. தந்தை நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி இருக் கின்றார் எனில் நாமும் தந்தையின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி காண்பிப்போம். ஆனால் செய்து காட்டுவதில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகின்றனர். நினைப்பது மற்றும் செய்து காட்டுவது – இதில் வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது. சில குழந்தைகள் நினைப்பது மற்றும் செய்து காட்டுவது – இதில் சமமாக இருக்கின்றனர். ஆனால் அனைவரும் இவ்வாறு கிடையாது. எந்த நேரத்தில் தந்தையின் அன்பு மற்றும் தந்தை எப்படிப் பட்டவராக ஆக்கியிருக்கின்றார்! மேலும் என்ன கொடுத்திருக்கின்றார் என்று தந்தையின் மூலம் அடைந்த பிராப்திகளை நினைவில் கொண்டு வருகிறார்களோ, அப்போது அன்புச் சொரூபமாக இருக்கின்ற காரணத்தினால் அதிக ஊக்கம், உற்சாகத்தில் பறக்கின்றனர் – தந்தை என்ன கூறினாரோ அதை நான் செய்து காட்டுவேன். ஆனால் சேவை மற்றும் குழுவின் தொடர்பில் வரும் போது அதாவது நடைமுறையில் காரியத்தில் செய்யும் போது சில நேரம் சங்கல்பம் மற்றும் செயல் சமமாக ஆகிவிடுகிறது அதாவது அதே ஊக்கம்-உற்சாகம் இருக்கிறது, சில நேரங்களில் காரியத்தில் வரும் போது குழுவின் சன்ஸ்காரம் அல்லது மாயை அல்லது இயற்கையின் மூலம் வரக் கூடிய சூழ்நிலைகள் என்ற பேப்பர் கஷ்டத்தின் அனுபவம் ஏற்படுத்துகிறது. ஆகையால் அன்பினால் ஏற்பட்ட ஊக்கம்-உற்சாகம் சூழ்நிலைகளின் காரணத்தினால், சன்ஸ்காரத்தின் காரணத்தினால் செய்யும் போது வித்தியாசத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிறகு இது இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கின்றனர். ஒருவேளை மற்றும் ஆனால் என்ற சக்கரத்தில் வந்து விடு கின்றனர். இப்படித் தான் நடந்திருக்க வேண்டும், ஆனால் இவ்வாறு ஆகிவிட்டது. அதனால் தான் இது நடந்தது – என்ற ஒருவேளை, ஆனால் என்ற சக்கரத்தில் வந்து விடுகின்றனர். ஆகையால் ஊக்கம், உற்சாகத்தின் சங்கல்பம் மற்றும் நடைமுறை செய-ல் வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது.

பிரம்மா பாபா குழந்தைகளின் மீது விசேஷமாக இரண்டு ஆசைகளைப் பற்றி கூறிக் கொண்டிருந்தார். ஏனெனில் பிரம்மா தன் கூடவே அழைத்து செல்ல வேண்டும் மற்றும் கூடவே இருக்கவும் வேண்டும். சிவ தந்தை கூடவே அழைத்துச் செல்லக் கூடியவர், இராஜ்யத்தில் அல்லது முழு கல்பத்தில் கூடவே இருக்கமாட்டார். இவர் சதா கூடவே இருக்கக் கூடியவர், அவர் சாட்சியாக பார்க்கக் கூடியவர். வித்தியாசம் இருக்கிறது அல்லவா! பிரம்மா பாபாவிற்கு குழந்தைகளின் மீது சதா சமம் ஆக்கக் கூடிய சுப ஆசைகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாப்தாதா இருவரும் பொறுப்பாளிகளாக இருந்தாலும், சாகாரத்தில் படைப்பவர் பிரம்மா ஆவார். ஆகையால் சாகார படைப்பிற்கு சாகார படைப்புகளின் மீது தானாகவே அன்பு இருக்கிறது. முன்பே கூறியிருந்தேன் அல்லவா – குழந்தைகள் தாய்-தந்தை இருவருக்கும் உடையவர்கள், ஆனாலும் தாயின் விசேஷ அன்பு குழந்தைகள் மீது இருக்கும். ஏனெனில் பாலனைக்கு நிமித்தமாக தாய் ஆகின்றார். தந்தைக்குச் சமமாக ஆக்குவதற்கு நிமித்தமாக தாய் இருக்கின்றார். ஆகையால் தாய்க்கு பற்று என்று கூறப்படுகிறது. இது சுத்தமான பற்றுதல் ஆகும், மோகத்தினுடையது அல்ல, விகாரத்திற்கானது அல்ல. எங்கு மோகம் இருக்கிறதோ – அதை ஆன்மீக பெருமை என்று கூறினாலும் சரி, அன்பு என்று கூறினாலும் சரி – அது இருந்தால் தாய்க்கு குழந்தைகளின் பெருமை ஏற்படுமே தவிர குழப்பம் ஏற்படாது. ஆக பிரம்மாவை தாய் என்றும் கூறலாம், தந்தை என்றும் கூறலாம் – இரண்டு ரூபத்திலும் குழந்தைகளுக்காக விசேஷமாக எந்த ஆசை வைத்திருக்கின்றார்? ஒன்று தந்தையின் மீது, மற்றொன்று பிராமண குடும்பத்தின் மீது சுப ஆசை இருக்கிறது. தந்தையின் மீது சுப ஆசை என்னவெனில் எவ்வாறு பாப்தாதா சாட்சியாகவும் இருக்கின்றார் மற்றும் துணையாகவும் இருக்கின்றார், அவ்வாறு பாப்தாதாவிற்குச் சமம் சாட்சி மற்றும் துணை – நேரத்திற்குத் தகுந்தாற் போன்று இரண்டு பாகமும் சதா நடிக்கக் கூடிய மகான் ஆத்மா ஆக வேண்டும். ஆக தந்தையின் மீது சுப ஆசை என்னவெனில் பாப்தாதாவிற்குச் சமமாக சாட்சி, துணை ஆக வேண்டும்.

ஒரு விசயத்தில் பாப்தாதா இருவரும் குழந்தைகளிடம் முழு திருப்தியாக இருக்கின்றனர். அது என்ன? ஒவ்வொரு குழந்தையும் பாப்தாதாவின் மீது நன்றாக அன்பு வைத்திருக்கின்றனர். பாப்தாதாவின் அன்பு ஒரு போதும் துண்டிக்கப்படுவது கிடையாது. மேலும் அன்பின் காரணத்தினால் தான் சக்திசா-யாக இயன்ற அளவு முன்னேறிக் கொண்டும் இருக்கிறீர்கள். பிராமண ஆத்மா என்ற முத்தாக ஆகி அன்பு என்ற நூ-ல் அவசியம் கட்டப்பட்டு இருக்கிறீர்கள். அன்பு என்ற நூல் உறுதியாக இருக்கிறது, அதை துண்டிக்க முடியாது. அன்பு மாலை நீளமாக இருக்கிறது, வெற்றி மாலை சிறியதாக இருக்கிறது. பாப்தாதாவின் அன்பிற்கு சமர்ப்பணமும் ஆகின்றனர். ஒருவர் எவ்வளவு தான் தந்தையின் அன்பிலிருந்து பிரிக்க விரும்பினாலும், பிரிக்கவே முடியாது, அந்த அளவிற்கு அன்பில் கட்டப்பட்டு இருக்கிறீர்கள். அனைவரின் உள்ளத்திலும் அன்பான என்னுடைய பாபா என்ற சப்தம் வெளிப்படுகிறது. ஆக அன்பு என்ற மாலையில் திருப்தியாக இருக்கின்றார். ஆனால் பாப்சமான் சக்திசா-, ஒருவேளை-ஆனால் என்ற சக்கரத்தி-ருந்து விடுபடுவது – இதில் சதா சக்திசா-யாக ஆவதற்குப் பதிலாக இயன்ற அளவிற்கு இருக்கிறீர்கள். இதில் பாப்தாதா பாப்சமான் சதா சக்திசா- ஆவதற்கான சுப ஆசை அனைத்து குழந்தைகளின் மீது வைக்கின்றார். எங்கு சாட்சியாக ஆக வேண்டுமோ, அங்கு சில நேரங்களில் துணையாக ஆகிவிடுகிறீர்கள். மேலும் எங்கு துணையாக இருக்க வேண்டுமோ, அங்கு சாட்சியாக ஆகி விடுகிறீர்கள். நேரத்திற்கேற்ப இரண்டையும் கடைபிடிக்க வேண்டும் – இது தான் பாப்சமான் என்று கூறப் படுகிறது. அன்பு மாலை தயாராக இருக்கிறது. ஆனால் வெற்றி மாலை அதே அளவிற்கு தயாராக வேண்டும் என்ற சுப ஆசை பாப்தாதா வைக்கின்றார். 108 மட்டுமா என்ன! பாப்தாதா திறந்த மனதுடன் கூறுகின்றார் – எவ்வளவு வெற்றி அடைய வேண்டுமோ அந்த அளவிற்கு வெற்றி மாலையை உருவாக்க முடியும். 108 என்று எல்லைக்கு உட்பட்டும் வராதீர்கள். எண்ணிக்கை 108 தான், நாம் அதில் வர முடியாது – இது போன்று விசயம் எதுவும் கிடையாது. ஆகுங்கள்.

வெற்றியாளர் ஆவதற்கு சமநிலையுடன் இருப்பது அவசியமாகும். நினைவு மற்றும் சேவையில் சமநிலை என்பது கேட்டுக் கொண்டு தான் இருக்கிறீர்கள். ஆனால் நினைவு மற்றும் சேவையில் சமநிலை விரும்பினாலும் ஏன் இருப்பது கிடையாது? புரிந்திருந்தாலும் கூட காரியத்தில் ஏன் வருவது கிடையாது? அதற்கு மற்றொரு விசயத்தில் சமநிலையுடன் இருப்பது அவசியமாக இருக்கிறது. அந்த சமநிலை தான் பிரம்மா பாபாவின் இரண்டாவது ஆசையாகும். தந்தையின் முதல் ஆசை – சமம் ஆக வேண்டும் என்பதாகும். குடும்பத்திற்கான இரண்டாவது ஆசை – ஒவ்வொரு பிராமண ஆத்மாவின் மீதும் சுப பாவணை-சுப விருப்பம் என்பது செயலில் இருக்க வேண்டும். சங்கல்பத்தின் அளவில் அல்லது விருப்பத்தின் அளவில் இருக்கக் கூடாது. விருப்பம் இருக்கிறது, சுப பாவணை வைக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றேன், ஆனால் காரியத்தில் வரும் போது மாறி விடுகிறது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கான விரிவான விளக்கம் முன்பே கூறியிருக்கின்றேன். பரிவாரத்தின் மீது சதா சுப பாவணை-சுப விருப்பம் ஏன் இருப்பது கிடையாது, இதற்கான காரணம் என்ன? எவ்வாறு தந்தையின் மீது உள்ளப்பூர்வமான அன்பு இருக்கிறதோ, ஆத்மார்த்த அன்பு இருக்கிறதோ, ஆத்மார்த்த அன்பின் அடையாளம் உறுதியாக இருப்பதாகும். தந்தையைப் பற்றி யாராவது எவ்வளவு தான் முரண்பட்ட கருத்துக்களைக் கூறினாலும் அல்லது யாராவது உங்களிடம் ஏதாவது விசயங்களைக் கூறினாலும் அல்லது சாகாரத்தில் சுயம் தந்தை சில குழந்தைகள் முன்னேறுவதற்கு ஏதாவது கட்டளை அல்லது அறிவுரைகள் கொடுத்தாலும், எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு அறிவுரை அல்லது மாற்றத்திற்கான கட்டளை ஒருபோதும் கருத்து வேறுபாடுகளை உருவாக்காது. பாபா என்ன கூறுகின்றாரோ அதில் நன்மை இருக்கிறது என்ற பாவணை சதா இருக்கும். அன்பில் ஒருபோதும் குறை ஏற்படாது. மேலும் தன்னை தந்தையின் உள்ளத்தின் நெருக்கத்தில் இருப்பதாக புரிந்து கொள்வர் – இது தன்னுடையவருக்கான அன்பாகும். இதைத் தான் உள்ளப்பூர்வமான, ஆத்மார்த்த அன்பு. இது தான் பாவணையை மாற்றி விடுகிறது. தந்தையின் மீதான அன்பின் அடையாளம் – சதா தந்தை கூறினார், நான் சரி என்று கூறினேன். அதே போன்று பிராமணப் பரிவாரத்திலும் சதா இப்படிப்பட்ட உள்ளப்பூர்வமான அன்பு இருக்க வேண்டும், பாவணையை மாற்றக் கூடிய விதி இருக்க வேண்டும், அப்போது தான் தந்தை மற்றும் பரிவாரத்தின் அன்பு சமநிலை, நினைவு மற்றும் சேவையில் சமநிலை தானாகவே நடை முறையில் தென்படும். ஆக தந்தையின் மீது அன்பு என்ற தராசுத் தட்டு எடை அதிகமாக இருக்கிறது. ஆனால் அனைத்து பிராமணப் பரிவாரத்தின் அன்பு என்ற தராசுத் தட்டின் எடை மாறிக் கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் எடையுடன், சில நேரங்களில் இலேசாகி விடுகிறது. சிலர் மீது எடையுடன், சிலர் மீது இலேசாக இருக்கிறது. இந்த தந்தை மற்றும் குழந்தைகளின் அன்பில் சமநிலையுடன் இருக்க வேண்டும் – இது பிரம்மா பாபாவின் இரண்டாவது சுப ஆசையாகும். புரிந்ததா? இதில் பாப்சமான் ஆகுங்கள்.

அன்பு என்பது அப்படிப்பட்ட உயர்ந்த நிலையாகும், இதில் நீங்கள் செய்திருந்தாலும் அல்லது மற்றவர்கள் செய்திருந்தாலும் இருவருக்கும் சமமாக குஷியின் அனுபவம் ஏற்படும். பாப்தாதா ஸ்தாபனைக்கான காரியத்திற்கு நிமித்தம் ஆனார், ஆனால் குழந்தைகளை எப்போது சேவையின் பொருட்டு துணையாக ஆக்கிக் கொண்டாரோ, ஒருவேளை நடைமுறையில் குழந்தைகள் தந்தையை விட அதிகமாக சேவை செய்கின்றனர், செய்து கொண்டிருக் கின்றனர் எனில் குழந்தைகள் சேவையில் முன்னேறுவதை அன்பின் காரணத்தினால் பாப்தாதா குஷியடைகின்றார். குழந்தைகள் சேவையின் ஏன் முன்னால் செல்ல வேண்டும்? நான் தான் நிமித்தமாக இருக்கின்றேன், நான் தான் இவரை நிமித்தமாக ஆக்கியிருக்கின்றேன் என்ற சங்கல்பம் உள்ளப்பூர்வமான அன்புடையவர்களிடம் வர முடியாது. ஒருபோதும் கனவிலும் கூட இந்த பாவணை உருவாகவில்லை. இதைத் தான் உண்மையான அன்பு, சுயநலமற்ற அன்பு, ஆன்மீக அன்பு என்று கூறப்படுகிறது. சதா குழந்தைகளை முன்நிறுத்தி நிமித்த மாக்குவதில் மகிழ்ச்சியடைந்தார். குழந்தைகள் செய்தால் என்ன!, தந்தை செய்தால் என்ன! நான் என்பது இல்லை. எனது காரியம், எனது கடமை, எனது அதிகாரம், என்னுடைய புத்தி, என்னுடைய திட்டம் – கிடையாது. அன்பு என்பது இந்த எனது என்பதை அழித்து விடுகிறது. நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால் அது நான் செய்தது போன்று, நான் செய்திருக்கின்றேன் எனில் அது நீங்கள் செய்தது போன்று என்ற இந்த சுப பாவணை அல்லது சுப விருப்பம் தான் உள்ளப்பூர்வமான அன்பு என்று கூறப்படுகிறது. அன்பில் ஒருபோதும் தனது அல்லது மற்றவர்களுடையது என்று தோன்றாது. அன்பானவர்களின் வார்த்தை சாதாரணமாகவும் இருக்கலாம், விவாதத்திற்கான வார்த்தைகளாகவும் இருக்கலாம், ஆனால் மனஅழுத்தம் ஏற்படுத்தாது. இவர் இதை ஏன் கூறினார்? என்ற மன அழுத்தம் ஏற்படாது. அன்பானவர் அன்பான ஆத்மாவின் மீது அனுமானம் செய்யமாட்டார் – இவ்வாறு இருக்கும், இது நடக்கும். அன்பானவர் மீது சதா நம்பிக்கை இருக்கின்ற காரணத்தினால் அவரது சாதாரண வார்த்தையும் இவர் ஏதோ ஒரு காரணத்தினால் தான் கூறியிருக்கின்றார் என்று தோன்றும். காரணமற்றதாக, வீணானதாகத் தோன்றாது. எங்கு அன்பு இருக்குமோ, அங்கு அவசியம் நம்பிக்கை இருக்கும். அன்பு இல்லையெனில் நம்பிக்கையும் இருக்காது. ஆக பிராமண பரிவாரத்தின் மீது அன்பு மற்றும் நம்பிக்கையுடன் இருப்பது – இது தான் பிரம்மா பாபாவின் இரண்டாவது ஆசையை நிறைவேற்றுவதாகும். தந்தையின் மீது அன்பு என்பதற்கு பாப்தாதா சான்றிதழ் கொடுத்திருக்கின்றார், அதே போன்று பிராமண பரிவாரத்தின் மீதும், அன்பிற்கான விதி கூறியது போன்று அந்த விதியை நடைமுறை காரியத்தில் கொண்டு வர வேண்டும் – இந்த சான்றிதழும் அடைய வேண்டும். இந்த சமநிலை தேவை. எந்த அளவிற்கு தந்தையின் மீது இருக்கிறதோ அந்த அளவிற்கு குழந்தைகளின் மீது இருக்க வேண்டும் – இந்த சமநிலை இல்லாத காரணத்தினால் சேவையில் முன்னேறும் போது சேவையில் மாயை வருகிறது என்று நீங்களே சுயம் கூறுகிறீர்கள். மேலும் சில நேரங்களில் சூழ்நிலைகளைப் பார்த்து சேவையை விட நினைவில் இருப்பதே நல்லது, அனைத்து சேவைகளி-ருந்தும் விடுவித்து பட்டியில் அமர்த்தி விடுங்கள் என்றும் கூறுகிறீர்கள். சில நேரங்களில் உங்களிடம் இந்த சங்கல்பம் வருகிறது.

உண்மையில் சேவை என்பது மாயாஜீத் ஆக்கக் கூடியது, மாயாவை அழைத்து வரக் கூடியது அல்ல. ஆனால் சேவையில் மாயை ஏன் வருகிறது? இதற்கு மூல காரணம் உள்ளப்பூர்வமான அன்பு இல்லை. பரிவாரம் என்ற அன்பு இருக்கிறது, ஆனால் உள்ளப்பூர்வமான அன்பு தியாக பாவணையை உருவாக்குகிறது. அது இல்லாத காரணத்தினால் அவ்வப்போது சேவை மாயையின் ரூபமாக ஆகிவிடுகிறது. மேலும் இப்படிப்பட்ட சேவையானது சேவையின் கணக்கில் சேமிப்பு செய்ய விடாது – 50-60 சென்டர் திறந்தவர்களாகவும் இருக்கலாம். ஆனால் சேவையின் கணக்கில் அல்லது பாப்தாதாவின் உள்ளத்தில் சேமிப்பின் கணக்கு சேமிப்பாவதற்கு மாயையிடமிருந்து முக்தியாக வேண்டும், யோகயுக்த் ஆக செய்ய வேண்டும். சிலரிடம் இரண்டு சென்டர் இருக்கிறது, பார்ப்பதற்கு இரண்டு சென்டருக்குப் பொறுப்பாளர் என்று தோன்றும். சிலர் 50 சென்டர்களுக்குப் பொறுப்பாளராகத் தென்படும். ஆனால் இரண்டு சேவை நிலையங்களும் தடைகளற்று இருக்கிறது, மாயை யிடமிருந்து, குழப்பங்களி-ருந்து, சுபாவ-சன்ஸ்காரங்களின் மோதல்களி-ருந்து விடுபட்டு இருக்கிறது எனில் இரண்டு சென்டர் உடையவருக்கும் 50 சேவை நிலையங்கள் உடையவரை விட அதிகமாக சேவை கணக்கில் சேமிப்பாகி விடும். என்னிடம் 30 சென்டர் இருக்கிறது, 40 சென்டர் இருக்கிறது என்பதில் குஷியடைந்து விடாதீர்கள். ஆனால் எத்தனை சென்டர் மாயையிடமிருந்து முக்தியாகி இருக்கிறது? சென்டரையும் அதிகப்படுத்திக் கொண்டே செல்லுங்கள், மாயாவையும் அதிகப்படுத்திக் கொண்டே சென்றீர்கள் என்றால் – இப்படிப்பட்ட சேவை தந்தையின் ரிஜிஸ்டரில் சேமிப்பு ஆகாது. நான் அதிக சேவை செய்து கொண்டிருக்கின்றேன், இரவு-பகல் தூங்குவதும் கிடையாது, சாப்பாடும் ஒருமுறை தயாரித்து இரவில் சாப்பிடுகின்றேன் – அந்த அளவிற்கு பிசியாக இருக்கின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சேவையின் கூடவே மாயாவிடமும் பிசியாக இல்லை தானே? இது ஏன் நடந்தது? இது எப்படி நடந்தது? இவர் ஏன் செய்தார்? நான் ஏன் செய்யவில்லை? எனது உரிமை, உனது உரிமை – எனவே தந்தையின் உரிமை எங்கு சென்றது? புரிந்ததா? சேவை என்றால் அதில் சுயம் மற்றும் அனைவருக்கும் சகயோகம் அல்லது திருப்தியின் பலன் நடைமுறையில் தென்பட வேண்டும். ஒருவேளை அனைவரின் சுபபாவணை-சுப விருப்பத்தின் சகயோகம் அல்லது திருப்தி வெளிப் படையான பலன் ரூபத்தில் கிடைக்கவில்லையெனில் சுயசோதனை செய்யுங்கள் – என்ன காரணம்? பலன் ஏன் கிடைக்கவில்லை? மேலும் விதியை சோதனை செய்து மாற்றம் கொண்டு வாருங்கள்.

இவ்வாறு உண்மையான சேவையை அதிகப்படுத்துவது தான் சேவையை அதிகப்படுத்துவதாகும். நான் மிக நன்றாக சேவை செய்து கொண்டிருக்கின்றேன் என்று தன் மனதை குஷிப்படுத்திக் கொள்ளாதீர்கள். ஆனால் தந்தையின் மனதை குஷிப்படுத்துங்கள், மேலும் பிராமணப் பரிவாரத்தின் உள்ளப்பூர்வமான ஆசிர்வாதத்தை அடையுங்கள். இது தான் உண்மையான சேவை என்று கூறப்படுகிறது. வெளிப்பகட்டிற்கான சேவை மிக பெரிதாக இருக்கிறது, ஆனால் எங்கு உள்ளத்தின் சேவை இருக்குமோ, அங்கு உள்ளப்பூர்வ அன்பான சேவை அவசியம் நடைபெறும். இதைத் தான் பரிவாரத்தின் மீது பிரம்மா பாபாவின் ஆசையை நிறைவேற்றுவதாகும். இதுவும் இன்றைய ஆன்மீக உரையாடல் ஆகும். மற்ற விசயங்களை பிறகு கூறுகின்றேன். இன்று பாரதவாசிகளுக்கு இந்த சீசனின் கடைசி வாய்ப்பாகும். ஆகையால் பாப்தாதா என்ன விரும்புகின்றார் என்பதை கூறினேன். தேர்ச்சிக்கான ஒரு சான்றிதழை அடைந்திருக்கிறீர்கள், இப்போது இரண்டாவது சான்றிதழ் அடைய வேண்டும். நல்லது. இப்போது தந்தையின் ஆசை தீபங்கள் சதா ஜொ-த்துக் கொண்டே இருக்க வேண்டும். நல்லது.

நாலாபுறமும் உள்ள அனைத்து பிராமண குல தீபங்களுக்கு, சதா பாப்தாதாவின் சுப ஆசைகளை நிறைவேற்றக் கூடியவர்களுக்கு, சதா தந்தை மற்றும் பரிவாரத்தின் உள்ளப்பூர்வமான அன்பில் சமநிலையுடன் இருக்கக் கூடியவர்களுக்கு, சதா உள்ளத்தின் சேவையின் மூலம் சேவையின் கணக்கில் சேமிப்பு அதிகமாக செய்யக் கூடியவர்களுக்கு, இவ்வாறு தந்தையின் சுப ஆசை தீபங்களுக்கு, உண்மையான உள்ளத்துடன் சேவை செய்யக் கூடிய சேவாதாரிகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

வரதானம்:-

நாடகம் என்ற கருத்தில் அனுபவிகளாக இருப்பவர்கள் சதா சாட்சி நிலையில் நிலைத்திருந்து ஏக்ரஸ், ஆடாத-அசையாத ஸ்திதியின் அனுபவம் செய்வர். நாடகம் என்ற கருத்தின் அனுபவி ஆத்மா ஒருபோதும் தீயவையிலும் தீயதைப் பார்க்காமல் நல்லதை மட்டுமே பார்ப்பார். அதாவது சுய நன்மைக்கான வழி தென்படும். நன்மையற்றவைகளின் கணக்கு அழிந்து விடும். கல்யாணகாரி தந்தையின் குழந்தை, கல்யாணகாரி யுகம் – இந்த ஞானம் மற்றும் அனுபவ அத்தாரிட்டியின் மூலம் ஆடாது, அசையாதவர்களாக ஆகுங்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top