1 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

30 June 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! யாசிப்பவரிலிருந்து இளவரசர் ஆவதற்கான ஆதாரம் தூய்மையாகும், தூய்மையாவதன் மூலம் தான் தூய உலகின் இராஜ்யம் கிடைக்கும்.

கேள்வி: -

இந்த ஆன்மீகப் பள்ளியில் கற்கும் எந்த ஒரு பாடம் உங்களை மனிதனிலிருந்து தேவதையாக ஆக்கி விடுகிறது?

பதில்:-

நீங்கள் இந்த ஆன்மீகப் பள்ளியில் நான் சரீரமல்ல, ஆத்மா என்ற பாடத்தை தினமும் படிக்கிறீர்கள். ஆத்ம அபிமானி ஆவதன் மூலம் தான் நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக, நரனிலிருந்து நாராயணனாக ஆக முடியும். இந்த நேரத்தில் அனைத்து மனிதர்களும் பூஜாரியாக அதாவது தூய்மை இழந்தவர்களாக, தேக அபிமானியாக இருக்கின்றனர், ஆகையால் தூய்மை யானவர்களாக ஆக்கக்கூடிய தந்தையை அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

ஆகாய சிம்மாசனத்தை விட்டு …..

ஓம் சாந்தி. ஓம் சாந்தி என்று கூறியது யார்? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். எந்த குழந்தை? ஓம் சாந்தி என்று யாருடைய ஆத்மா கூறியது? என்பதை குழந்தைகள் அறிவீர்கள். பரம்பிதா பரமாத்மா கூறியிருக்கிறார். மனித ஆத்மாக்கள் கூறவில்லை என்பதை குழந்தைகள் அறிவீர்கள், இதை பரம்பிதா பரமாத்மா சிவன் கூறியிருக்கின்றார். அவர் அனைவருக்கும் தந்தையானவர், உயர்ந்ததிலும் உயர்ந்தவர். பாட்டில் கேட்டீர்கள், இப்போது பாரதத்தில் மாயையின் நிழல் அதிகமாகப் பரவியிருக் கிறது. மிகவும் தூய்மையற்றவர்களாக ஆகி விட்டனர். அதனால் தான் ஹே பதீத பாவனனே! மீண்டும் தூய்மை ஆக்குவதற்கு வாருங்கள் என்று அழைக் கின்றனர். ஆத்மா தான் தனது தந்தையை அழைக் கிறது, அவர் தான் பகவான் என்று கூறப்படுகிறார். அவரைத் தான் பதீத பாவன் (தூய்மைபடுத்துபவர்) என்று கூறுகின்றனர். ஒரே ஒருவருக்குத் தான் மகிமை பாடப்படுகிறது. அவர் அனைத்து ஆத்மாக் களுக்கும் எல்லையற்ற தந்தையாவார். இங்கு அனைவரும் தூய்மை இழந்தவர்களாகிவிட்டனர் அதனால் தான் ஹே பரம்பிதா பரமாத்மா என்று அழைக்கின்றனர். அவரே ஞானக் கடலாகவும் இருக்கிறார், பதீத பாவனனாகவும் இருக்கிறார். அவரும் தந்தையாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார், ஏனெனில் ஞானக் கடலாகவும் இருக்கிறார், உலகின் சர்வ சக்திவானாகவும் இருக்கிறார். அனைத்து வேதம், சாஸ்திரம், கிரந்தங்களையும் அறிந்தவராகவும் இருக்கிறார். அவரைத் தான் ஞானம் நிறைந்தவர் என்று கூறுகின்றனர். ஆக இந்த நேரத்தில் அனைவரும் பரலௌகீகத் தந்தையை அழைக்கின்றனர், ஏனெனில் அனைவரும் துக்கமானவர்களாக இருக்கின்றனர். பரம்பிதா என்று கூறுகின்றனர். அவருக்கு பெயரும் இருக்க வேண்டும் அல்லவா! அவருக்கு சிவபாபா என்று பெயர் சூடப்பட்டிருக்கிறது. அவரே உயர்ந்ததிலும் உயர்ந்த ஞானக் கடலானவர், சுகக் கடலானவர், அமைதிக் கடலானவர் ஆவார். மனித ஆத்மா தான் தனது தந்தையை இவ்வாறு மகிமை செய்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த ஆத்மா யார்? பரம்பிதா பரமாத்மா தான். அவர் பரம் ஆக இருக்கிறார், பதீத மனிதர்களை அவரை நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் பாரதம் தூய்மையாக இருந்த போது தேவி தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அப்போது தூய்மையற்றவர்கள் யாருமில்லை. இது தமோ பிரதான உலகமாகும், அதாவது உலகிலிருக்கும் மனிதர்கள் அனைவரும் பாவ ஆத்மாக்கள். இதே பாரதம் தூய்மையாக இருந்தது, இதே பாரதம் தான் தூய்மை இழந்துவிட்டதாகிவிட்டது. இங்கு கலியுகத்தில் அனைவரும் தூய்மையற்றவர்கள். ஞானக் கடலான, பதீத பாவன் பரம்பிதா பரமாத்மா பரந்தாமத்திலிருந்து வந்து பிரம்மாவின் மூலம் நமக்கு படிப்பு கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவசியம் அவருக்கு சரீரம் வேண்டும் அல்லவா! இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங் களிலும் கிடையாது. அனைத்தையும் அறிந்த அதிகாரம் படைத்தவராக இருக்கக் கூடியவர் ஞானக் கடலானவர் அவர் தான் விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளிப்பட்டார் என்ற சித்திரம் பாரதத்தில் காண்பிக்கின்றனர், அவரது கையில் சாஸ்திரங்களைக் கொடுத்து விட்டனர். இப்போது விஷ்ணு எந்த சாஸ்திரங்களின் சாரத்தையும் கூறுவது கிடையாது. பரம்பிதா பரமாத்மா, ஞானக் கடலானவர் பிரம்மாவின் மூலம் அனைத்து சாஸ்திரங்களின் சாரத்தைப் புரிய வைக்கின்றார். பிரம்மா, விஷ்ணு, சங்கரையும் அவர் படைத்தவர் ஆவார். பிரம்மாவை அல்லது விஷ்ணுவை ஞானக் கடல் என்று கூறுவது கிடையாது. சங்கருக்கான விசயத்தையே விட்டு விடுங்கள். இப்போது ஞானக் கடல் யார்? உயர்ந்ததிலும் உயர்ந்த, நிராகார பரமாத்மா தான் பதீத பாவன் ஆவார். இந்த மகிமை அந்த ஒரு பரம்பிதா பரமாத்மாவினுடையது ஆகும். இங்கும் ஆத்மாவிற்குத் தான் மகிமை ஏற்படுகிறது. ஆத்மா தான் சரீரத்தின் மூலம் நான் ஐனாதிபதி (குடியரசுத் தலைவர்) நான் வக்கீல், நான் இந்த மந்திரியாக இருக்கிறேன் என்று கூறுகிறது. ஆத்மா தான் பதவி அடைகிறது. நான் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கிறேன் என்று சரீரத்தின் மூலம் ஆத்மா கூறுகிறது. இந்த நேரத்தில் தந்தை வந்து கூறுகின்றார் லி குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள். இந்த பாடத்தை கற்பிக்க உங்களது தந்தையாகிய நான் வந்திருக்கிறேன். மனிதனிலிருந்து தேவதை, நரனிலிருந்து நாராயணன், நாரியிலிருந்து லெட்சுமி ஆவதற்கான பள்ளிக் கூடம் இதுவாகும். ஹே பரம்பிதா பரமாத்மா…….. என்று கூறி தந்தையை அனைவரும் அழைக்கின்றனர். இப்போது நிராகார உலகிலிருந்து சாகார உலகிற்கு வாருங்கள். ரூபத்தை (உருவத்தை) மாற்றிக் கொள்ளுங்கள். நிராகார ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரத்தில் வரும் போது கர்பத்தில் வருகிறீர்கள், மறுபிறவி எடுக்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகள் கர்பத்தில் எடுத்தீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். ஒரு சரீரத்தை விடுத்து பிறகு கர்பத்தில் சென்று விடுவீர்கள். இவ்வாறு 84 பிறவிகள் எடுக்கிறீர்கள். நான் கர்பத்தில் வருவது கிடையாது. பாரதவாசிகள் உண்மையில் தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். பிறகு ஏணியில் இறங்கி வந்தீர்கள், சத்ரிய வர்ணத்தில், பிறகு வைஷ்ய, சூத்ர வர்ணத்தில் கலைகள் குறைந்து கொண்டே வந்தது. பாரதம் 16 கலைகள் நிறைந்ததாக இருந்தது, பிறகு 14 கலைகள் உடையதாக ஆனது. பாரதவாசிகள் தங்களது பிறவிகளைப் பற்றி அறியவில்லை. 84 பிறவிகள் பாரதவாசிகள் தான் எடுக்கின்றனர். வேறு எந்த தர்மத்தினர்களும் 84 பிறவிகள் எடுப்பது கிடையாது. நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக ஆகியிருக்கிறீர்கள், இது ஞான விசயமாகும். சுயதரிசன சக்கரதாரி ஆவதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தில் சக்கரவர்த்தி மகாராஜா ஆகிறீர்கள். நாம் இங்கு வந்திருப்பதே தூய்மை இல்லாதவரிலிருந்து தூய்மையானவர்களாக ஆவதற்காக என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருக்கிறீர்கள். இதுவோ அசுத்தமான உலகமாகும். பதீத பாவன், அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒரு தந்தை ஆவார். அனைவரும் அவரைத் தான் அழைக்கின்றனர். தந்தையை நினைவு செய்கின்றனரே தவிர கிருஷ்ணரை அல்ல. கிருஷ்ணர் கீதையைக் கூறவில்லை. கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தலையாயதாக விளங்குகிறது. பாரதத்தின் கீதை எந்த தர்மத்தைச் சார்ந்தது? ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தைச் சார்ந்தது. கீதையைக் கூறியது யார்? இராஜயோகம் கற்பித்தது யார்? பரம்பிதா பரமாத்மா, பதீத பாவன் தந்தை ஆவார். ஆக நிராகார மாக இருக்கும் உங்களது ஆத்மா இப்போது சாகார சரீரத்தை தாரணை செய்திருக்கிறது. சாகார மனிதர் களை ஒருபோதும் பகவான் என்று கூறுவது கிடையாது. சத்யுகத்தில் இருந்த லெட்சுமி நாராயண ரையும் பகவான் என்று கூறுவது கிடையாது. இவ்வாறு பட்டம் கொடுக்கப்படுகிறது. நியமப்படி பகவான் ஒரே ஒருவர் தான். படைப்பவர் கூட ஒரே ஒருவர் தான். மற்றபடி அவர்கள் தேவதைகள் ஆவர். 5 ஆயிரம் ஆண்டிற்கான விசயமாகும். இந்த லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது, இவர்கள் மகாராஜா, மகாராணி என்று கூறப் பட்டனர். பகவான் மகாராஜாவாக ஆவது கிடையாது. அவர் தந்தையாகவே இருக்கிறார், அவர் வந்து பாரதவாசிகளை இவ்வாறு தேவி தேவதைகளாக ஆக்குகின்றார். இப்போது தேவி தேவதா தர்மத்தினர் யாரும் கிடையாது. இது இராவண வம்சம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இராவண இராஜ்யமாக இருக்கிறது. இராவணனை ஆண்டிற்கு ஆண்டு எரித்துக் கொண்டே இருக்கின்றனர், ஏனெனில் இவர் பழைய எதிரி ஆவார். ஆனால் இதை பாரதவாசி கள் அறியவில்லை. இராவணன் யார்? என்பது சாஸ்திரங்களிலும் வர்ணிக்கப் படவில்லை. இராவணனுக்கு ஏன் 10 தலைகள் காண்பிக்கப்படுகிறது? இந்த விசயங்களை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் முற்றிலும் கல் புத்தி உடையவர்களாக இருக்கின்றனர். தங்கபுத்தி என்று இந்த லெட்சுமி நாராயணனை கூறலாம். பாரஸ்நாத், பாரஸ்நாதினியின் இராஜ்யம் இருந்தது. அரசர் எப்படியோ மக்கள் அப்படியே. பாரதம் போன்ற சுகதாமம் வேறு எந்த கண்டமும் கிடையாது. எப்போது பாரதம் சொர்க்கமாக இருந்ததோ, அப்போது எந்த நோய், துக்கம் போன்றவை இல்லை. முழு சுகம் இருந்தது. ஈஸ்வரனின் மகிமை அளவிட முடியாது என்று பாடப்படுகிறது. அதே போன்று பாரதத்தின் மகிமையும் அளவிட முடியாதது. அனைத்திற்கும் ஆதாரம் தூய்மையில் தான் இருக்கிறது. அவ்வாறு தான் அழைக்கவும் செய்கின்றனர், அனைவரும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றனர். அமைதியில்லை, சுகம் இல்லை. பாரதவாசிகளாகிய நாம் சூரியவம்ச தேவி தேவதை களாக இருந்தோம், பிறகு சிறிது சிறிதாக தூய்மையை இழந்து விட்டோம் என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொண்டீர்கள். இது மரண உலகம் என்று கூறப்படுகிறது. இது எரிந்து சாம்பல் ஆகிவிடும். இது சிவ ஞான யக்ஞமாகும், ருத்ர ஞான யக்ஞம் என்றும் கூறுகின்றனர். மனிதர்கள் பல பெயர்களை வைத்து விடுகின்றனர். எங்கெல்லாம் சிவனின் மூர்த்தியைப் பார்க்கிறார்களோ வித விதமான பல பெயர்களை வைத்து விடுகின்றனர். ஒருவருக்கு மட்டுமே பல பெயர்களின் கோயில் கட்டுகின்றனர். ஆக தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார் லி ஞானம், பக்தி, வைராக்கியம். இப்போது பக்தி முடிவடைகிறது, உங்களுக்கு பக்தியின் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. அதாவது இந்த பழைய உலகின் மீது வைராக்கியம் ஏற்படுகிறது. இந்த பழைய உலகம் விநாசம் ஆகிவிடும்.

பாபா, நாங்கள் தூய்மையற்றதிலிருந்து தூய்மையானவர்களாக ஆவது எப்படி? என்று குழந்தைகள் கேட்கின்றனர். யாராவது புதிதாக வருகின்றனர் எனில் அனுமதிக்கப்படுவது கிடையாது. கல்லூரியில் யாராவது புதிதாக சென்று அமர்ந்தால் புரியாது அல்லவா! மேலும் மனிதனிலிருந்து தேவதையாக ஆவது எப்படி? என்பது யாருக்கும் தெரியாது. தூய்மையில்லாதிருக்கும் மனிதர்கள் தான் தூய்மை யற்றவர்களாக ஆகின்றனர். இந்த நேரத்தில் பாரதம் யாசிக்கும் நாடாக இருக்கிறது. சத்யுகத்தில் பாரதம் இளவரசர் போன்று இருந்தது. ஸ்ரீகிருஷ்ணர் சத்யுகத்தின் முதல் இளவரசராக இருந்தார். அவரிடத்தில் அனைத்து குணங்களும் இருந்தன. லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் என்று தான் கூறுவர். கிருஷ்ணர் இளவரசராக இருந்தார், இராதை இளவரசியாக இருந்தார். இளவரசராகிய கிருஷ்ணருக்குத் தான் அனைத்து குணங்கள் நிறைந்தவர், 16 கலைகளிலும் முழுமை யானவர் ……. என்று மகிமை பாடப்படுகிறது. அவர் எந்த கீதையையும் கூறவில்லை. அவர் சத்யுகத்தின் இளவரசர் ஆவார். தூய்மையற்ற மனிதர்களை தூய்மைபடுத்துவதற்காக அவர் கீதை கூறினார் என்பது இருக்கவே முடியாது. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களாகும். சாஸ்திரங்களுக்கு எவ்வளவு மகிமைகள் இருக்கின்றன! சத்யுகத்தில் எந்த சாஸ்திரமோ, பக்தி மார்க்கத்தின் சித்திரங்களோ இருக்காது. அங்கு ஞானத்தின் பலன் 21 பிறவிகளுக்கு இருக்கும். மீண்டும் சத்யுகத்தின் பாக்கியத்தை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். பாரதவாசிகள் சத்யுகத்தில் 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு உலகிற்கு எஜமானர்களாக இருந்தனர். வேறு எந்த பிரிவினைகளும் கிடையாது. 5 ஆயிரம் ஆண்டிற் கான விசயமாகும். இப்போது கலியுகத்தின் இறுதி அல்லவா! விநாசம் எதிரில் இருக்கிறது. பகவான் இந்த ஞான யக்ஞம் படைத்திருக்கின்றார். பதீத கலியுகத்தை பாவன சத்யுகமாக ஆக்குவதற்கு, எனவே அவசியம் தூய்மையற்ற உலகம் விநாசம் ஆகிவிடும். பிரம்மாவின் மூலம் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை என்று பாடப்பட்டிருக்கிறது, அதை இப்போது சிவபாபா பிரம்மாவின் மூலம் செய்விக்கின்றார். அவர் (பிரம்மா) பிரஜாபிதா ஆவார், அனைவரும் அவரது வம்சத்தினர்கள். பிரம்மாவின் மூலம் தான் சொர்க்கம் ஸ்தாபனை ஆகியிருந்தது. இன்றிலிருந்து 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பும் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க நான் சங்கமத்தில் வந்திருந்தேன். கிருஷ்ணர் அல்ல, நான் தான் வந்திருந்தேன். கிருஷ்ணர் அசுத்தமான உலகில் வர முடியாது. தந்தை தான் வருகின்றார். அவர் தான் அனைவருக்கும் சத்கதி கொடுக்கும் வள்ளல் ஆவார். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதி கொடுக்க முடியாது. அனைவரும் நினைவு செய்வதும் ஒரே ஒருவரைத் தான். பரம்பிதா பரமாத்மா எங்கு இருக்கின்றார்? பரந்தாமத்தில் இருக்கின்றார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். அது பிரம்ம மகா தத்துவமாகும். அங்கு ஆத்மாக்கள் மகாத்மாக்களைப் போன்று தூய்மையாக இருக்கின்றன. இங்கும் மகான் ஆத்மா, பதீத ஆத்மா என்று கூறுகின்றனர் அல்லவா! உண்மையில் இங்கு மகான் ஆத்மா ஒருவரும் கிடையாது. ஆத்மா தான் தூய்மையாக, சதோ பிரதானமாக ஆக வேண்டும். ஞானம் மற்றும் யோகத்தினால் அன்றி தண்ணீரினால் அல்ல. ஆத்மா தான் தூய்மை இல்லாததாகியிருக்கிறது. ஆத்மாவில் தான் கறைகள் படிந்திருக்கிறது. ஆத்மா தான் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பாக ஆகிறது. இப்போது தூய்மை இல்லாமல் இருக்கின்ற ஆத்மாக்களை யார் தூய்மை யாக்குவது? பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் தூய்மையாக்க முடியாது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள், உங்களது பாவங்கள் அழிந்து விடும் என்று தந்தையே வந்து புரிய வைக் கின்றார். எந்த அளவிற்கு நினைவு செய்வீர்களோ அந்த அளவிற்கு தூய்மையற்றதிலிருந்து தூய்மை யாக ஆவீர்கள். இதில் தான் உழைப்பு இருக்கிறது. முழு ஞானமும் புத்தியில் இருக்கிறது. இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? நாம் 84 பிறவிகள் எவ்வாறு எடுக்கிறோம்? சத்யுகத்தில் எவ்வளவு காலம் இராஜ்யம் நடைபெறுகிறது? பிறகு இராவணன் எப்படி வருகிறான்? இராவணன் யார்? என்பதும் யாருக்கும் தெரியாது. எப்போதிலிருந்து இராவணனை எரித்து வருகிறோம்? என்பதும் யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு ஆண்டும் எரிக்கின்றனர். சத்யுகத்தில் எரிக்க மாட்டீர்கள். இப்போதிருப்பதோ இராவண இராஜ்யமாகும். இராம இராஜ்யத்தை யாரும் ஸ்தாபனை செய்ய முடியாது. இது தந்தையின் காரியமாகும். தூய்மை இல்லாத மனிதர்களால் செய்ய முடியாது. அவையனைத்தும் விநாசம் ஆகி விடும். தூய்மையற்ற உலகமே விநாசம் ஆக வேண்டும். ஹே பதீத பாவனனே வாருங்கள் என்று சத்யுகத்தில் ஒருவரும் கூறமாட்டார் கள். அது தூய்மையான உலகம் அல்லவா! இந்த லெட்சுமி நாராயணனை இவ்வாறு சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கியது யார்? என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். பிறகு அவர்கள் 84 பிறவிகள் எப்படி எடுத்தனர்? ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தினர் மட்டுமே 84 பிறவிகள் எடுக்கின்றனர். அவர்களே இந்த நேரத்தில் சூத்ர வம்சத்தினர்களாக ஆகியிருக் கின்றனர். இப்போது மீண்டும் பிராமண வம்சத்தினர்களாக ஆகியிருக்கின்றனர். இப்போது நீங்கள் பிராமணர்கள் குடுமி போன்று இருக்கிறீர்கள். இது உயர்ந்ததிலும் உயர்ந்த குடுமியாகும். பிரம்மா வாய்வழி வந்த பிராமண குல பூஷணர்கள். இப்போது நீங்கள் சிவபாபாவின் குழந்தையாகவும் இருக்கிறீர்கள். பேரன் பேத்திகளாகவும் இருக்கிறீர்கள். சிவவம்சி பிறகு பிரம்மா குமார்கள், குமாரிகள். தாத்தாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. என்னை நிரந்தரமாக நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். தூய்மை ஆகுங்கள், நீங்கள் என் கூடவே முக்திதாமத்திற்கு வந்து விடுவீர்கள். யார் கல்பத்திற்கு முன்பு புரிந்திருந்தார்களோ அவர்கள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும். அவர்கள் ஆயிரக்கணக்கானவர் கள் உள்ளனர். எத்தனை பி.கு, இருக்கின்றனர்? என்று சிலர் கேட்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர் என்று கூறுங்கள். இந்த தெய்வீக மரம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இப்போது மீண்டும் ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் நாற்று நடப்பட்டுக் கொண்டிருக்கிறது, ஏனெனில் தற்சமயம் தேவதா தர்மம் கிடையாது. இப்போது தங்களை இந்து என்று கூறிக் கொள்கின்றனர். மற்ற தர்மங்களில் மாற்றமாகி விட்டனர். மீண்டும் அனைவரும் வெளிப்படுவார்கள், வந்து தந்தையிடம் ஆஸ்தி அடைவார்கள். எல்லையற்ற தந்தையிடத்தில் எல்லையற்ற சுகத்தின் ஆஸ்தி அடைவதற்காக அதாவது மனிதனிலிருந்து தேவதா ஆவதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1) தூய்மை இழந்தவரிலிருந்து தூய்மை ஆவதற்காக ஞானம் மற்றும் யோகாவில் (நினைவில்) உறுதியானவர்களாக ஆக வேண்டும். ஆத்மாவில் படிந்திருக்கும் கறையை நினைவிற்கான முயற்சியின் மூலம் நீக்க வேண்டும்.

2) நாம் பிரம்மா வாய்வம்சாவளி பிராமணர்கள், குடுமி போன்றவர்கள் என்ற போதையில் இருக்க வேண்டும். பிராமணர்கள் தான் ஆஸ்திக்கு அதிகாரிகள், ஏனெனில் சிவபாபாவின் பேரன்களாக இருக்கிறோம்.

வரதானம்:-

ஆத்மாவின் அநாதியான மற்றும் ஆதி நிலையின் இரண்டு காலத்தின் உண்மையான சொரூபம் தூய்மை யாகும். தூய்மையற்ற தன்மை என்பது செயற்கையானது, சூத்ரர்களின் (மாயாவின்) பரிசாகும். சூத்ரர்களின் பொருட்களை பிராமணர்கள் பயன்படுத்த முடியாது, ஆகையால் அநாதி மற்றும் ஆதி நிலையின் உண்மையான சொரூபத்தில் நான் தூய்மையான ஆத்மாவாக இருந்துள்ளேன் என்ற இந்த ஒரு எண்ணத்தை மட்டும் சிந்தனை செய்யுங்கள். யாரை பார்த்தாலும் அவர்களின் உண்மையான சொரூபத்தை பாருங்கள், உண்மையை உணர்ந்தீர்கள் என்றால் சம்பூரண தூய்மையானவராகி முதல்தரமான மற்றும் குளிர்சாதன வசதியுள்ள டிக்கெட்டிற்கு அதிகாரி ஆகிவிடலாம்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top