24 June 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
23 June 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
மாதேஸ்வரி ஜெகதாம்பாளின் நினைவு நாளன்று வகுப்பில் வாசிக்கப்பட வேண்டிய இனிய, பெறுமதிமிக்க மேன்மையான வாசகங்கள்
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
உலகத்துடனான அனைத்து உறவுமுறைகளையும் துண்டித்துக் கொள்ளுங்கள்….
உலகத்துடனான உறவுமுறைகள் அனைத்தையும் நாம் துண்டித்துக் கொள்ளவோமாயின், இவ் உலகம் எதற்காக? இவ் உலகிலுள்ள உறவுமுறைகள் அனைத்தையும் நாம்; துண்டித்துக் கொள்ள வேண்டியதே விடயமாயின், பின் எதற்காக இவ் உறவுமுறைகள் உருவாக்கப்பட்டன? கணவன் மனைவி, தந்தை மகன், அரசன் பிரஜைகள் என அனைத்து உறவுமுறைகளும் கடவுளால் உருவாக்கப்பட்;டன. இவ்வாறே மக்கள் கூறுகின்றார்கள், அப்படித்தானே? கடவுளால் இவை உருவாக்கப்பட்டிருந்தால், அவற்றை நாங்கள் துண்டிக்க வேண்டும் என அவர்கள் ஏன் கூறுகின்றார்கள்? இல்லாவிடின், இப்பாடல் பிழையாகும்.
எந்த உலகை கடவுள் உருவாக்கினார்? கடவுளால் உருவாக்கப்பட்ட உலகை, நீங்கள் “ஜெக்” (உலகம், ஜக் என உச்சரிக்கப்படுகின்றது) அல்லது, “துனியா” (உலகம்) என அழைத்தாலும்;, நீங்கள் பின்னர் விட்டுவிட்டுச் செல்லவேண்டிய அத்தகையதோர் உலகை கடவுள் உருவாக்கியிருக்க மாட்டார். இப்பொழுதுள்ள உறவுமுறைகள் அனைத்தும் உருவாக்கப்படவில்லை. இவ் உலகிலுள்ள உங்கள் உறவுமுறைகள், எவ்வாறாகியுள்ளன எனப் பாருங்கள்! உங்கள் செயல்களால் நீங்கள் தமோபிரதான் ஆகினீர்கள், இப்பொழுது நீங்கள் எவ்வாறு ஆகியுள்ளீர்கள் எனப் பாருங்கள்! கர்ம பந்தனங்களினால் தொடர்ந்தும் அவர்கள் ஒருவரை ஒருவர் பிரித்துக்கொள்கின்றார்கள். இந்தக் கர்ம செயற்பாட்டில், சகல உறவுமுறைகளும் தமோபிரதான் ஆகியுள்ளன, மக்கள் தொடர்ந்தும் ஒருவருக்கு ஒருவர் துன்பத்தைக் கொடுத்து, துன்பத்தை எடுத்துக் கொள்கின்றார்கள். கடவுளே கூறுகின்றார்: துன்பமான உங்கள் உறவுமுறைகளை நான் உருவாக்கவில்லை. நான் உங்களுக்காக உருவாக்கிய உறவுமுறை (சம்பந்தம்) பந்தனம் அற்றது. நான் உங்களுடன் மேன்மையான உறவுமுறையையே இணைத்தேன், அந்த உறவுமுறையில் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருந்தீர்கள். உங்கள் உறவுமுறைகள் அனைத்தும் மிகவும் சுத்தமாக இருந்ததாலேயே நீங்கள் நினைவுசெய்தீர்கள்: அரசர் இராமர், இராம பிரஜா (இராமருக்கு சொந்தமான அனைத்து மக்கள்). இராமர் செல்வந்தராக இருந்தார், முழு இராச்சியமும் அருள்பவரான இராமரின் கீழ் வாழ்ந்தார்கள், அது தர்மம் நிறைந்த இராச்சியமாக இருந்தது. அது தர்மம் நிறைந்த இல்லறம் என அறியப்பட்டது. தர்ம பதியும், தர்ம பத்தினியும் (கணவனும் மனைவியும்) அனைத்தும் தர்மத்தின் பெயரிலேயே இருந்தது, அத்தகைய தர்மம் நிறைந்த உறவுமுறை இப்பொழுது இல்லை. அந்த நடைமுறை வாழ்க்கை இப்பொழுது இல்லை. ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் சொந்தமாக்கியுள்ள உங்கள் உலகில், உறவுமுறைகள் அனைத்தும் இப்பொழுது பாழாகி உள்ளன. நான் உருவாக்கிய உலகில் உறவுமுறைகள் அனைத்தும் மிகச் சிறப்பானதும், அன்பானதுமாகும். அவர்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷத்தையே கொடுத்தார்கள். அங்கும் நிச்சயமாக உறவுமுறைகள் இருந்தன: கடவுள் உறவுமுறைகளை உருவாக்கவில்லை என்றில்லை. உறவுமுறைகள் இருந்தன ஆனால் அந்த உறவுமுறைகள் கர்ம பந்தனங்கள் எதுவும் அற்றவையாக இருந்தன. ஆகையாலேயே மக்கள் ஜீவன் முக்தி அடைந்தவர்கள் என அழைக்கப்பட்டார்கள். வாழ்க்கையில் அவர்கள் கர்ம பந்தனங்கள் (துன்பம்) அனைத்திலிருந்தும் விடுபட்டிருந்தார்கள். ஆகையாலேயே அவர்கள் ஜீவன்முக்தி அடைந்தவர்கள் எனப்பட்டார்கள். இப்பொழுது, உங்கள் உறவுமுறைகள் பந்தன வாழ்க்கையில் இருப்பதாலேயே அவர்கள் வினவுகின்றார்கள்: இதிலிருந்து நாங்கள் எவ்வாறு விடுதலை அடைவது? தந்தை கூறுகின்றார்: அவர்களிடமிருந்து அனைத்து உறவுமுறைகளையும் துண்டித்து உங்களை என்னுடன் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடைசி வாழ்வை எனக்குக் கொடுங்கள். ‘உங்களை என்னிடம் கொடுங்கள்’ என்றால் ஒரு மனைவி தன்னை கணவனிடமும், ஒரு கணவன் தன்னை மனைவியிடமும் கொடுப்பதைப் போன்றதாகும். ஒரு தந்தை தன்னை மகனிடமும், ஒரு மகன் தன்னை தந்தையிடமும் கொடுப்பதை போன்றதாகும். நீங்கள் இதனை மிக நன்றாக பயிற்சி செய்தீர்கள். நான் உங்களுக்கு புதிதாக எதனையும் கூறவில்லை. ‘இதனை நான் எவ்வாறு செய்வது?” ‘நான் என்ன செய்வது?” நீங்கள் இவ்வாறான கேள்விகளை கேட்க முடியாது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் ஒருவருக்கொருவர் கொடுத்தீர்கள். உங்கள் வாழ்க்கையை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கவில்லையா? உங்களிடம் உள்ள அனைத்தையும் – உங்கள் சரீரம், மனம், செல்வம் அனைத்தையும் அவர்களுக்காக வைத்திருக்கின்றீர்கள். அப்படித்தானே? நீங்கள் கூறுகின்றீர்கள்: ‘அவை அனைத்தும் உங்களுக்கே’ அப்படித்தானே? உங்கள் முழு வாழ்க்கையையும் அவர்களுக்காகவே செலவழிக்கின்றீர்கள். எனவே நான் புதிதாக எதனையும் கூறவில்லை, அவர் கூறுகின்றார்: அவை அனைத்தையும் என்னிடம் கொடுங்கள், இன்றுவரையில் நீங்கள் ஒருவருக் கொருவர் என்ன செய்தீர்களோ, நானும் அதனையே கூறுகின்றேன்: எனக்கு உரியவராக ஆகுங்கள். எனக்கு உரியவராகிய பின்னர், ஒரு நம்பிக்கை பொறுப்பாளராக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். பக்தி மார்க்கத்திலும் நீங்கள் கூறினீர்கள்: கடவுளே, இவை அனைத்தும் உங்களுடையது. நான் உங்களுடையவன். ஆனால் நீங்கள் உண்மையிலேயே உங்களை அவரிடம் கொடுக்கவில்லை. வெறுமனே அவ்வாறு கூறினீர்கள். உங்களுடையது என்னுடையது, என்னுடையதும் என்னுடையதே. இதனையே அனைவரும் செய்து வந்தார்கள். ஆனால் இப்போது அந்த ஏமாற்றுதல் தொடர்ந்தும் இடம்பெற முடியாது. உங்களுடையது என்னுடையது, என்னுடையதும் என்னுடையதே. இல்லை. இப்பொழுது நீங்கள் ‘இந்த என்னுடையது, உங்களுடையது’ என்ற அனைத்தையும் முடித்துவிட வேண்டும். நான் இப்பொழுது உங்களுக்குரியவன், ஆகவே அதில் அனைத்தும் அடங்கியுள்ளது. அவ்வளவே, நான் உங்களுடையவன். எவ்வாறாயினும், அவருடையது அனைத்தும் என்னுடையது, என்னுடையதும் என்னுடையதே என்றிருக்கக் கூடாது. அவ்வாறான ஏமாற்றுதலினால் என்ன பயன் உள்ளது? அவ்வாறாயின், நாங்கள் எங்களையே ஏமாற்றிக்கொள்கின்றோம். கடவுளை எவராலும் ஏமாற்ற முடியாது. முன்னர் நாங்கள் அவரை அதிகளவு ஏமாற்றினோம். ஆனால், அவ்வாறாக ஏமாற்றிய போதெல்லாம் அந்த ஏமாற்றுதலில் நாங்கள் எங்களுக்கே துன்பத்தையும் அமைதியின்மையையும் விளைவித்துக் கொண்டோம். ஏனெனில் நாங்களே ஏமாற்றப்பட்டோம். ஆகையாலேயே தந்தை இப்பொழுது கூறுகின்றார்: அவை அனைத்தையும் முடித்து (துறந்து) விடுங்கள். உங்கள் சரீரம் உட்பட உங்கள் புத்தியை அனைத்து உறவுமுறைகளிலிருந்தும் அகற்றிவிட்டு, உங்களை என்னோடு மட்டும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது எதுவும் உங்களுக்கு சொந்தமானது என்ற உணர்வு இருக்க மாட்டாது.
இன்று வரையில், ‘என்னுடையது என்னுடையது’ எனக் கூறியதால், நீங்கள் துன்பத்தையே உங்களுக்கு விளைவித்தீர்கள். அதன் பின்னர் உங்கள் புத்தி அங்கே திசை திரும்பியதும் நீங்கள் கூறுகின்றீர்கள்: நான் என்ன செய்வது? நான் எவ்வாறு இதை செய்வது? நீங்கள் இன்னொருவரில் தொங்கிக் கொண்டிருந்தால், அதன் விளைவு என்னவாக இருக்கும்? நீங்கள் பற்றினால் சந்தோஷமற்றவர் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: இந்த உலகின் சகல உறவுமுறைகளையும் துண்டித்து, இப்பொழுது எனக்குரியவர் ஆகுங்கள். உங்கள் சரீரத்தினால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கிய அனைத்து பந்தனங்கள் – அவை அனைத்திலிருந்தும் துண்டித்து, இப்பொழுது எனக்குரியவர் ஆகுங்கள். நான் பிறவி பிறவியாக உங்களுடன் இருக்கப் போவதில்லை. இல்லை. இப்பொழுது மட்டுமே என்னால் உங்களுடன் எதையும் செய்ய முடியும். அவ்வளவே. அதன் பின்னர் ஆத்மாக்களாகிய நீங்கள் என்றென்றும் ஒருவருக்கொருவர் சந்தோஷத்தைக் கொடுப்பதற்குள் சென்று விடுவீர்கள். நான் உங்களுடைய துன்ப பந்தனத்தை துண்டித்து, உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கின்ற உறவுமுறையை உருவாக்குகின்றேன். அதன் பின்னர் நீங்கள் ஒருவருக்கொருவர் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் இப்பொழுது அதிகளவு சீரழிந்திருப்பதாலேயே தொடர்ந்தும் துன்பத்தை அனுபவம் செய்கிறீர்கள். சீரழிந்த உங்களுடைய அனைத்;தையும் நான் சீராக்குகிறேன். அதன் பின்னர் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். பிறவி பிறவியாக நான் உங்களுடன் இருக்கப் போவதில்லை. சீரழிந்த உங்களுடைய அனைத்தையும் சீராக்குங்கள் என்றே நான் உங்களிடம் கூறுகின்றேன்: இப்பொழுது எனக்குரியவர் ஆகுங்கள். நான் ஏன் இதனை உங்களுக்குக் கூறுகின்றேன்? ஏனெனில் எனது கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் பின்பற்றினால், உங்களுக்கு அனைத்துமே இலகுவாகிவிடும். நான் உங்களுக்கு இந்த இலகுவான வழிமுறையை காட்டுகின்றேன். நடைமுறை ரீதியில் எனக்கு உரியவர் ஆகுங்கள். இதற்கு வழிமுறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, ஒரு குழந்தை தத்தெடுக்கப்படும் போது, அவர் தொடர்ந்தும் அப்பெயரிலியே நடைமுறையில் இருக்கின்றார். அப்படித்தானே? அவ்வாறே, எனக்குரியவர் ஆகி, அவ் வழிமுறையில் செல்வதனால் உங்கள் பாக்கியம் உருவாக்கப்படுகின்றது. தந்தை ஒளிவுமறைவின்றி நேரடியாக இலகுவான, மிக மிக எளிமையான ஒன்றையே உங்களுக்குக் கூறுகின்றார். இதிலும், பல மில்லியன் கணக்கானோரில் ஒரு கைப்பிடி அளவினரே இதனைப் பின்பற்றுவதற்காகத் தோன்றுவார்கள்.
தந்தை கூறுகின்றார்: நான் உங்களுடைய உலகிற்கு, இந்த பௌதீக உலகிற்கு, ஒரு குறுகிய காலமான சங்கமயுகத்தில் உங்களுக்காகவே வந்திருக்கின்றேன். எனவே, குறைந்த பட்சம், எஞ்சியுள்ள இந்த நேரத்தில், என்னை பற்றி சிந்தியுங்கள். இப்பொழுது நீங்கள் பாபாவிற்கு உரியவர் ஆகியுள்ளதால், குறைந்தபட்சம் இந்நேரத்தில் தூய்மையாகுங்கள். அவ்வாறாயின், நீங்கள் அந்த உலகில் சற்றேனும் கடினமாக உழைக்க வேண்டிய ஏற்படாத அளவிற்கு, உங்களுக்கான அத்தகைய வெகுமதியை நீங்கள் சேமித்து கொள்வீர்கள். இப்பொழுது சற்று கடினமாக உழைக்க வேண்டியுள்ளது, எனவே எவ்வளவு சாத்தியமோ, மரணிக்கவே நேர்ந்தாலும், தூய்மையாக இருப்பதற்கான சத்தியத்தை செய்யுங்கள். திடசங்கற்பம் கொண்டிருங்கள். உங்களுடைய தாரணையை கடைபிடிப்பதில் முழுமையாக முயற்சியை செய்யுங்கள். தந்தை உங்களுக்கு மிகத் தெளிவாகக் கூறுகின்றார்: இந்த குறுகிய நேரத்தில் இந்த சிறிய முயற்சியை செய்யுங்கள். நான் உங்களுக்கு எந்த மேலதிக கடினமான வேலையையும் கொடுக்கவில்லை. நீங்கள் பெற்றுக் கொள்வதுடன் ஒப்பிடும் போது, இந்த கடின உழைப்பு எதுவுமே இல்லை.
ஒரு கூற்று உள்ளது: நெய் பானைகள் தயாரிக்காதீர் (கற்பனை கதைகள்). ‘நான் இதைச் இதைச் செய்வேன்…..’ ‘உலகம் என்ன சொல்லும?’ ‘இன்ன இன்னார் என்ன சொல்வார்கள்?’ ‘ஓ! உலகம் என்ன சொல்லுமோ?’ அவை அனைத்தையும் மறந்திடுங்கள். இப்பொழுது இந்த உலகமுமே முடிவடைய உள்ளது. ஆனால் அந்த ஆதரவற்ற ஏழை மக்களுக்கு இது தெரியாது என்பதாலேயே தந்தை கூறுகின்றார்: அதனை பற்றி சிந்திக்காதீர்கள். மரணம் சற்று முன்னிலையிலேயே உள்ளது. இன்றுவரை, முன்கூட்டி நீங்கள் சிந்தித்தவை அனைத்தும் வீணானதே. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: அந்த வீணானதை சேமியுங்கள். உங்கள் சரீர வாழ்வாதாரத்திற்காக செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்யுங்கள். எவ்வாறாயினும் நீங்கள் உருவாக்கிய படைப்போடு எந்தளவிற்கு உங்களுக்கு கர்மகணக்கு உள்ளதோ, செய்ய வேண்டியதை எல்லாம் செய்யுங்கள். எந்தளவிற்கு நான் அவற்றை கவனித்துக் கொள்ளப் போகின்றேன்? நீங்கள் அவற்றை கவனித்துக் கொள்ளவே வேண்டும். தேவையானவற்றை நீங்கள் செய்வதற்கு நான் உங்களுக்கு அனுமதியளிக்கின்றேன், ஆனால், மேலதிகமாக நீங்கள் உருவாக்குவதை இட்டே, அதனை செய்யாதீர்கள் என நான் கூறுகின்றேன், ஏனெனில் அவை அனைத்தும் விழுவதற்கு உள்ளன. எனவே உங்கள் நேரத்தை நீங்கள் ஏன் அநாவசியமாக வீணாக்குகின்றீர்கள்? அந்த அநாவசியமான குழப்பங்களினாலேயே நீங்கள் சந்தோஷம் அற்றவர்கள் ஆகினீர்கள். எனவே, அந்த குழப்பங்கள் அனைத்திலிருந்தும் நீங்கள் எவ்வாறு விடுதலை அடையலாம் என நான் இப்பொழுது உங்களுக்குக் கூறுகின்றேன். ஆகவே நீங்கள் அமர்ந்த பின்னர் சாக்குபோக்குகள் கூறுங்கள்: இது எவ்வகையான வழிமுறை? தந்தை மேலும் கூறுகின்றார்: கவனமாக இருங்கள், உங்கள் விரலை நீங்கள் நேரடியாக எனக்குத் தராது விட்டால், உங்கள் கரத்தை நீங்கள் என்னிடம் கொடுக்காது விட்டால், உங்கள் மூக்கை பிடித்து, உங்களை அப்பால் இழுத்துச் செல்வேன். உங்கள் மூக்கை பிடித்து அவர் இழுக்கும் போது நீங்கள் மூச்சுத் திணறி நீங்கள் சந்தோஷம் அற்றவர் ஆகுவதுடன், தண்டனையையும் இருக்கும். ஆகையாலேயே அவர் கூறுகின்றார்: இப்பொழுது உங்கள் கரத்தை என் கரத்துடன் இணைத்து, நேராக என்னுடன் நடக்க வேண்டிய நேரம் இதுவாகும். நீங்கள் நேரடியாக வர முடியாத நிலைமையாயில், உங்கள் மூக்கு என் பிடிக்குள் இருக்கும் – எனவே வந்துவிடுங்கள்! அந்த நேரத்தில் எதுவும் செய்ய முடியாது. உங்களால் அப்பொழுது எதுவும் செய்ய முடியாது. எனவேதான் தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது எனக்கு உரியவர் ஆகுங்கள். என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு சொல்வதை கேளுங்கள், இருப்பினும் நீங்கள் எதனையும் செய்யாது விட்டால், அத்தகைய குழந்தைகளுக்கான தண்டனை மிகவும் தீவிரமானதாக இருக்கும். ஆகையாலேயே இவ்விடயங்களை அறிந்து, செவிமடுத்து, தவறு செய்கின்றவர்களோடு ஒப்பிடும்; போது, இவ் விடயங்கள் எதனையும் அறியாத அந்த ஏழை ஆதரவற்ற குழந்தைகளின் விடயம் வேறுபட்டதாகும். அவர்களுக்காக எதனையும் செய்ய முடியாது. பத்து மடங்கு நன்மை இருப்பதை போன்றே, பத்து மடங்கு இழப்பும் உள்ளது. ஆகையாலேயே உங்களுடைய பாதிப்புகளையும் இழப்புகளையும் கவனமாக பார்க்குமாறு கேட்கப்படுகின்றது. உங்கள் புத்தியை விசாலமாகத் திறந்து கொள்ளுங்கள். உங்கள் புத்தியின் யோகத்தை தந்தையுடன் இணைத்தால், நீங்கள் பலத்தை பெறுவீர்கள். எனவே, இவ்;விடயங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளுங்கள். அவற்றை மறந்து விடாதீர்கள்.
இப்பொழுது கடந்து செல்லும் நேரத்தை இனங்காணுங்கள். உங்கள் கண்களை திறந்திடுங்கள். உங்கள் புத்தியை திறந்து இந்த நேரத்தின் முழுப் பலனையும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் முழு பாக்கியத்தையும் விழித்தெழச் செய்யுங்கள். கூறப்பட்டுள்ளது: நீங்கள் கொண்டிருக்கும் சகவாசம் எதுவோ அவ்வாறே நிறம் தீட்டப்படுகின்றீர்கள். ஆகையாலேயே முழுமையான தாரணையை கொண்டிருக்காதவர்கள், மாயையின் சகவாசத்தினால் நிறந்தீட்டப்படுகின்றார்கள். ஆகையாலேயே கூறப்படுகின்றது: தீயதை கேட்காதீர்கள், தீயதை பார்க்காதீர்கள், தீயதை பேசாதீர்கள். பிறரை வெறுமனே இருக்க விடாத, அத்தகைய தீய ஆவிகள் இங்கு இருக்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் தங்கள் ஒவ்வொருவரது சகவாசத்தினாலும் செல்வாக்கு செலுத்தப்படுகின்றார்கள். ஆகையாலே அத்தகைய சகவாசத்திடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என உங்களிடம் கூறப்படுகின்றது. சகவாசத்தின் ஆதிக்கம் வெளியில் உள்ளவர்களால் தான் இங்குள்ளவர்களால் அல்ல என நினைக்காதீர்கள், இல்லை. இங்கும் அவர்கள் தொடர்ந்தும் அலைந்திரிகின்றார்கள். ஏனெனில் இது அவர்களின் இராச்சியமாகும். அப்படித்தானே? ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: உங்கள் கேடயத்தை கவனமாக அணிந்திருங்கள். கேடயத்தை நீங்கள் அணிந்திருந்தால், குண்டு உங்களைத் துளைக்காது. யோகம் என்ற கேடயமும், ஞானம் என்ற வாளும் உள்ளது. இவ் ஆயுதங்கள் அனைத்தையும் உங்களுடன் மிக நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.
கூறப்படுகின்றது: யார் எதனை செய்தாலும் அதற்கான வெகுமதியை பெறுகின்றார்கள். இங்கே, இது உங்கள் எதிர்கால பாக்கியத்தை உருவாக்குவதற்கான விடயமாகும். வெகுமதியை நீங்கள் இங்கே அனுபவம் செய்யப் போவதில்லை. இங்கே நீங்கள் ஒரு குருவை போன்று அமர்ந்திருக்கக் கூடாது. ஆகவே இங்கே எந்தத் தவறான புரிந்துணர்வும் இருத்தல் ஆகாது. இவை அனைத்தும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால் இவ்விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தி, உங்களை பாதுகாப்பாக வைத்திருங்கள். எந்தச் செலவைப் பற்றிய கலந்தாலோசனைகளும் இங்கு இருக்கக் கூடாது. பிறருக்கு நன்மை செய்யவற்காக மட்டுமே அனைத்தும் செலவீனங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு சதமும் இப் பணிக்காக மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். அச்சா
இரண்டாவது முரளி:
ஏறும் ஸ்திதியில் செல்ல வேண்டுமாயின், உங்கள் வாழ்வின் பொறுப்புக்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படையுங்கள்.
பலரிடமும் உள்ள கேள்வியானது: இவ்வளவு ஞானத்தைக் கேட்ட பின்னரும், எங்கள் ஸ்திதியில் நாங்கள் ஏன் ஒரு முன்னேற்றத்தையும் பார்க்காதிருக்கின்றோம்? முன்னேறிச் செல்வதற்கு ஒரு தடை இருப்பதேன்? இந்தப் பாதையை பின்பற்றுவதற்காக ஒரு அடி எடுத்து வைத்தவர்களுக்கே இவை விளங்கப்படுத்தப்படுகின்றன. எவ்வாறாயினும் உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து அவருக்கு உரியவர்கள் ஆகினால் மாத்திரமே அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய முடியும். இது இறை சட்டமாகும். நீங்கள் இப்பொழுது அவரின் ஆதரவை பெற்றுள்ளதால், உங்கள் இதயத்தினால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் அவரிடம் அர்ப்பணிக்க வேண்டும். அதாவது நீங்கள் முழுமையான வாரிசு ஆகி, உங்கள் ஆஸ்தியை பெற வேண்டும். இந்த போதையை நீங்கள் பேணிக் கொள்வதால், உங்கள் ஸ்திதி முழு உற்சாகத்துடன் இருக்கும். அதன் பின்னர் நீங்கள் இந்த ஞானத்தைக் கிரகிப்பதால், பிறரையும் உங்களுக்கு சமமாக ஆக்குவதற்கான வலிமையை விருத்தி செய்வீர்கள். எவ்வாறாயினும், உங்கள் மனதில் உங்களை அவரிடம் அர்ப்பணித்துவிட்டீர்கள் என நினைத்துவிடாதீர்கள். இல்லை, அது உங்களை நீங்கள் ஏமாற்றுவதே ஆகும். பாபா இப்பொழுது நடைமுறை ரீதியாகவே இங்கு வந்திருப்பதால், நீங்களும் நடைமுறை ரீதியாகவே அவரின் குழந்தை ஆக வேண்டும். பின்னர், குழந்தையின் ஜாதகத்தை அவர் அறிந்து கொள்வதன் மூலம், அதற்கேற்ப பாபா அவருக்கு வழிகாட்டல்களைக் கொடுத்து அவரை முன்னேறச் செய்வார். இதன் போது, ஆரம்பத்தில் நீங்கள் மூச்சுத் திணறுவதை போல் உணர்வீர்கள். இறுதியில் அது உங்கள் ஏறும் ஸ்திதிக்கானதே என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே, உங்கள் வாழ்க்கையின் சகல பொறுப்புகளையும் அவரிடம் அர்ப்பணிக்க வேண்டும். எவ்வாறாயினும், ஒரு குருவின் பின் குருவாக அவரின் கதியில் அமர்பவராக ஆகக் கூடாது. இப்பொழுது இவ்விடயங்கள் அனைத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருந்தால் மாத்திரமே உங்கள் ஸ்திதி உயரும். நீங்கள் உயர்வடையாது விட்டால், நிச்சயமாக உங்கள் இதயத்திலோ அல்லது தாரணையிலோ எதுவோ சரியானதாக இல்லை. உங்களுக்கு புரிகின்றதா? இனிய குழந்தைகளுக்கு, அன்பும் நினைவும், காலைவந்தனங்களும்.
வரதானம்:-
நட்சத்திர விண்மீனில், (கூட்டம்) விசேடமான நட்சத்திரங்களின் பிரகாசம் தொலைவிலேயே அழகாகவும் தனியாகவும் தெரியும். அவ்வாறே, சாதாரண ஆத்மாக்களின் ஒன்றுகூடலின் மத்தியில், நட்சத்திரங்களான நீங்கள் விசேட ஆத்மாக்களாக தெரிய வேண்டும். உங்கள் சாதாரண வடிவில் நீங்கள் இருந்த போதும், உங்கள் ஸ்திதி அசாதாரணமாகவும் அலௌகீகமாகவும் இருக்கட்டும், அப்பொழுது நீங்கள் ஒரு ஒன்றுகூடலிலே கடவுளுக்கு உரிய மக்களாகத் தென்படுவீர்கள். இதற்கு, புறநோக்கிற்கு வருவதற்கு முன்னர், அகநோக்குடையராக இருப்பதற்கு பயிற்சி செய்யுங்கள். எப்பொழுதும் மேன்மையான வடிவத்திலும், போதையிலும் ஸ்திரமாக இருப்பதுடன் சக்திமிக்கவர்களாகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும் இருந்து, அதன் பின்னர் ஞானத்தைக் கொடுங்கள். அப்போது நீங்கள்;, பல ஆத்மாக்களை இந்த அனுபவத்தைப் பெறச்செய்வீர்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!