22 June 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
22 June 2021 Read and Listen today’s Gyan Murli in Tamil
21 June 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இந்த உலகில் தன்னலமற்ற சேவை ஒரு தந்தை மட்டுமே செய்கிறார், மற்றபடி நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
கேள்வி: -
நாடகத்தின்படி எந்த விஷயம் 100 சதவிகிதம் நிச்சயமானது, அதனுடைய குஷி குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்கிறது? |
பதில்:-
புதிய இராஜ்யம் ஸ்தாபனை ஆகவே வேண்டும் என்பது நாடகத்தின்படி நிச்சயமான ஒன்றாகும். ஸ்ரீமத்படி நாம் நமக்காக நம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறோம். இந்த பழைய உலகின் வினாசம் ஆகத்தான் வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் எந்த அளவு முயற்சி செய்கிறீர்களோ, அந்தளவு உயர்ந்த பதவி பலனாக கிடைக்கும். |
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
உங்களை அடைந்து நாங்கள் உலகை அடைந்தோம்.
ஓம் சாந்தி. குழந்தைகள் என்ன சொல்கின்றனரோ தந்தையும் கூட அதையேதான் சொல்கிறார். பாபா நாங்கள் உங்களை அடைந்து நாங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகிறோம் என குழந்தைகள் சொல்கின்றனர். தந்தையும் சொல்கிறார் – மன்மனாபவ. விஷயம் ஒன்றுதான் ஆகும். பிரம்மா குமார், குமாரிகளுக்கு இந்த சத்சங்கத்திற்குச் செல்வதால் என்ன கிடைக்கிறது? என மனிதர்கள் அனைவரும் கேட்பார்கள். அப்போது, நாங்கள் பாப்தாதாவின் மூலம் உலகின் எஜமானர் ஆகிறோம் என பிரம்மாகுமார், குமாரிகள் சொல்கின்றனர். உலகிம் எஜமானர்களாக வேறுயாரும் ஆக முடியாது. உலகின் எஜமானர்கள் இந்த லட்சுமி நாராயணர்தான் ஆவர், சிவபாபா உலகின் எஜமானராக ஆக முடியாது. குழந்தைகளாகிய நீங்கள் உலகின் எஜமானர்களாக ஆகிறீர்கள். உங்களுடைய தந்தை உலகின் எஜமானராக ஆவதில்லை. இப்படிப்பட்ட சுயநலமற்ற சேவை செய்யக்கூடியவர்கள் வேறு யாரும் கிடையாது. அனைவருக்கும் தம்முடைய சேவையின் பலன் கண்டிப்பாகக் கிடைக்கிறது. பக்தி மார்க்கத்தில் மற்றும் யார் ஒருவர் ஏதோ ஒரு விதத்தில் சேவையின் காரியம் செய்கிறார்களோ. . . சமூக சேவகர்களுக்கும் கூட சேவைக்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும். அரசாங்கத்திடம் சம்பளம் கிடைக்கும். தந்தை சொல்கிறார் – நான் ஒருவன் தான் சுயநலமற்ற சேவை செய்கிறேன், குழந்தைகளை உலகின் எஜமானாக ஆக்கு கிறேன், நான் ஆவதில்லை. குழந்தைகளை சுகம் மிக்கவர்களாக ஆக்கி, சுகதாமத்தின் எஜமானர் களாக ஆக்கி 21 பிறவிகளுக்கு சுகம் கொடுத்துவிட்டு நான் என்னுடைய நிர்வாண தாமத்தில் அதாவது வானபிரஸ்த நிலையில் சென்று அமர்ந்து விடுகிறேன். வானபிரஸ்தம் என மூலவதனத் தைத்தான் சொல்வோம். மனிதர்கள் வானபிரஸ்தத்தை அடைகின்றனர். குழந்தைகளுக்கு அனைத்தையும் கொடுத்து விட்டுச் சென்று சத்சங்கம் முதலானவற்றில் கலந்து கொள்கின்றனர். இவர் முக்திக்கான வழி கொடுப்பார் என ஒரு குருவை பின்பற்றுகின்றனர். முக்தி ஜீவன் முக்திக்கான வழியை எந்த மனிதர்களாலும் ஒருபோதும் யாருக்கும் காட்ட முடியாது என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டு விட்டீர்கள். அவர்கள் யாருக்கும் சத்கதியை வழங்க முடியாது. தனக்கும் கூட கொடுத்துக் கொள்ள முடியாது. தனக்கு கொடுக்க முடிந்தால் பிறகு மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். தந்தை வருவதே பரமதாமத்திலிருந்து. அவர் அங்கே வசிக்கக் கூடியவர், குழந்தைகளாகிய நீங்களும் அங்கே வசிக்கக் கூடியவர்கள். நீங்கள் இந்த கர்ம சேத்திரத்தில் நடிப்பை நடிக்க வேண்டும். பாபாவும் கூட சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கும்போது குழந்தை களாகிய உங்களுக்காக ஒரு முறை இங்கே வர வேண்டி யிருக்கிறது எனும்போது கண்டிப்பாக நரகம் வினாசம் ஆகத்தான் வேண்டியுள்ளது.
சிவபாபா பிரம்மாவின் மூலம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார் என இப்போது நீங்கள் தெரிந்து கொண்டுள்ளீர்கள். நாம் மீண்டும் மனிதரி லிருந்து தேவதையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் நாம் வந்து மீண்டும் பிரம்மாவின் மூலம் சிவபாபாவின் குழந்தைகளாக ஆகிறோம் – ஆஸ்தியை அடைவதற்காக, என குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. பதித பாவனர் என அவர் சொல்லப்படுகிறார். ஞானம் நிறைந்தவர், ஞானக் கடலும் ஆவார். யோகம் அதாவது நினைவைக் கற்பிக்கிறார், ஆனால் நிராகாரமானவர் (உடலற்றவர்) எப்படி புரிய வைக்க முடியும், ஆகையால் பிரம்மாவின் மூலம் மனிதரிலிருந்து தேவதை ஆக்குகிறேன் அதாவது தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்விக்கிறேன் என சொல்கிறார். இப்போது அந்த தர்மம் இல்லை, மீண்டும் உருவாக்க வேண்டும். இப்போது மீண்டும் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்து மற்ற அனைவரையும் முக்தி தாமத்திற்கு அழைத்துச் செல்கிறேன். பாரதம் பழமையான கண்டமாகும், ஆகையால் பாரதத்தின் மக்கள் தொகை மற்ற கண்டங் களையும் விட உண்மையில் அதிகமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட விஷயங்கள் வேறு யாருடைய புத்தியிலும் வருவதில்லை. ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் அனைத்தையும் விட மிகவும் பெரியதாக இருக்க வேண்டும். 5 ஆயிரம் வருடங்களாக அதன் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மற்றவர்கள் வருவதே 2500 வருடங்களுக்குப் பிறகு. இஸ்லாமியர்களின் மக்கள் தொகை குறைவாக இருக்க வேண்டும், பிறகு கொஞ்ச காலத்திற்குப் பிறகு பௌத்த தர்மத்தவர்கள் வருகின்றனர், ஆகையால் அவர்களில் கொஞ்சம் வித்தியாசம் இருக்க வேண்டும். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் முதலானவர்கள் முதலில் சதோபிரதானமாக இருப்பர், பிறகு மெது மெதுவாக தமோபிரதானம் ஆகின்றனர். இதுவும் கூட கணக்கு ஆகும். ஈடுபாடுள்ள, புத்திசாலி களான குழந்தைகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்றைய நாட்களில் சீனர்கள் அனைவரை விடவும் அதிக அளவில் உள்ளனர் என எழுதுகின்றனர். ஆனால் அவர்களுக்கு சிருஷ்டி சக்கரத்தின் ஞானம் கிடையாது. இந்த அனைத்து ரகசியங்களும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு விரிவாகப் புரிய வைக்க வேண்டும். தேவி தேவதா தர்மத்தவர்களுக்கு 5 ஆயிரம் வருடங்கள் ஆகின்றன. அப்போது இந்த சமயத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும். ஆனால் தேவி தேவதா தர்மத்தவர்கள் வேறு வேறு தர்மங்களில் மாறிச் சென்று விட்டனர். முதன் முதலில் நிறைய பேர் முஸ்லிம்களாக ஆனார்கள், பின்னர் பௌத்த சமயத்தவர் களும் அதிக அளவில் ஆனார்கள். இங்கும் கூட பௌத்தர்கள் நிறைய உள்ளனர், கிறிஸ்தவர்களோ அதிக அளவில் உள்ளனர். தேவதா தர்மத்தின் பெயரே இல்லை. ஒருவேளை நாம் பிராமண தர்மம் என்று சொன்னால் கூட இந்துக்களின் வரிசையில் போட்டு விடுவார்கள். ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் பிராமணர்களாகிய நம் மூலம் ஸ்ரீமத்படி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். இந்த விழிப்புணர்வும் இருக்க வேண்டும். தர்மம் மகிமை பாடப்படுகிறது அல்லவா. இங்குள்ள மனிதர்கள் தம்மை இந்துக்களின் வரிசையில் வகுப்பில் சேர்த்து வருகின்றனர். இந்து என்பது ஆரிய தர்மம், அனைத்தினும் பழமையானது என சொல்வார்கள். பாரதவாசிகள் முதன் முதலில் ஆரியர்களாக இருந்தனர், மிகவும் செல்வந்தர் களாக இருந்தனர், இப்போது அதி-ருந்து விலகிய வர்களாக ஆகி விட்டனர். புத்திசாலித்தனம் எதுவும் இல்லை, யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதை தர்மத்தின் பெயராக வைத்து விடுகின்றனர். மரத்தில் இருந்து சிறு சிறு இலைகள், கிளைகள் தோன்றுகின்றன. புதியவற்றிற்கு சிறிது மதிப்பு இருக்கவே செய்கிறது.
நாம் பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக்கிறோம் என இப்போது குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். ஆக இப்படிப்பட்ட ஆஸ்தியை கொடுக்கக் கூடிய தந்தையை எவ்வளவு நினைவு செய்ய வேண்டும். நீங்கள் நினைவு செய்த அளவுக்கு ஒன்று – ஆஸ்தி கிடைக்கும், பிறகு நீங்கள் தூய்மையும் அடைவீர்கள். லௌகிக தந்தையிடமிருந்து செல்வத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. கூடவே பிறகு தூய்மை இழப்ப தற்கான ஆஸ்தியும் கிடைக்கிறது. இவர் லௌகீக தந்தை, அவர் பரலௌகிக தந்தை மற்றும் இடையில் இவர் (பிரம்மா) அலௌகிக தந்தை ஆவார். இவருக்கு இடையில் இரு பக்கங்களிலிருந்தும் நிந்தனை கொடுக்கப் படுகிறது. சிவபாபாவுக்கு எதுவும் கஷ்டம் ஏற்படுவதில்லை, இவர் (பிரம்மா) எவ்வளவு நிந்தனை களை அடைய வேண்டியிருக்கிறது. உண்மையில் கிருஷ்ணருக்கு நிந்தனைகள் ஏற்படுவதில்லை. இடையில் சிக்கியவர் இவர்தான். வழியில் செல்லும்போது பிராமணர் சிக்கிக் கொண்டார் என சொல்கின்றனர் அல்லவா. நிந்தனைகளை வாங்கு வதற்காக இவர் மாட்டிக்கொண்டார். அலௌகிக தந்தை தான் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. சிவபாபா இவருக்குள் பிரவேசமாகி வந்து தூய்மையற்றவர்களை தூய்மையாக்குகிறார் என்பது யாருக்கும் தெரியாது. தூய்மையடைவதில் தான் அடி வாங்குகின்றனர். நான் அனைவரையும் திரும்ப அழைத்துக் கொண்டு செல்வதற்காக வந்துள்ளேன் என தந்தை சொல்கிறார். மரணம் முன்னால் நின்றுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். வினாசம் கண்டிப்பாக ஆக வேண்டியுள்ளது. வினாசம் ஆகாமல் சுகமும் அமைதியும் எப்படி ஏற்படும்? ஏதாவது சண்டை முதலானது நடந்தது என்றால் சண்டை ஓய்வதற்காக மனிதர் கள் யக்ஞம் முதலானவற்றை உருவாக்கு கின்றனர். வினாசம் கண்டிப்பாக நடக்கும் என பிராமண குல பூஷணர்களாகிய உங்களுக்குத் தெரியும். இல்லா விட்டால் சொர்க்கத்தின் கதவுகள் எப்படி திறக்கும்? அனைவரும் சொர்க்கத்தில் வரப் போவதில்லை. முயற்சி செய்பவர்கள்தான் செல்வார் கள், மற்றவர்கள் முக்தி தாமத்திற்குச் செல்வார்கள். இது யாருக்கும் தெரியாத காரணத்தால் எவ்வளவு பயப்படுகின்றனர். அமைதிக்காக எவ்வளவு அடி வாங்குகின்றனர். மாநாடு நடத்திக் கொண்டிருக்கின்றனர். சுகதாமம், சாந்திதாமம் எப்படி ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கிறது என பிராமணர்களாகிய நீங்கள் மட்டும்தான் அறிவீர்கள். வினாசம் ஆகாமல் ஸ்தாபனை ஆக வாய்ப்பில்லை. நீங்கள் இப்போது மூன்று காலத்தையும் அறிந்துள்ளீர்கள். மூன்றாவது கண்ணின் ஞானம் கிடைத்துள்ளது. அமைதி எவ்வாறு ஏற்படும் என்று சொல்கின்றனர். அதாவது சண்டை நடக்கக் கூடாது. ஒற்றுமை ஓங்கட்டும் என அனைவரும் சொல் கின்றனர். நாம் அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகள் சகோதர – சகோதரன் என்ற தந்தையின் ஒரே வழியை ஏற்றோம் என்றால் ஒற்றுமை ஏற்பட்டு விடும். ஒரு தந்தையின் குழந்தைகள் என்றால் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அது சத்யுகத்தில்தான் அம்மாதிரி இருந்தது. அங்கே யாரும் தங்களுக்குள் சண்டையிடுவது கிடையாது. அது சத்யுகத்தின் விஷயமாகி விட்டது. இங்கே கலியுகமாக இருக்கிறது. சத்யுகத்தில் தேவதைகள் இருந்தனர், மற்ற அனைத்து ஆத்மாக்களும் எங்கிருந்தனர் என்பது தெரிவதில்லை. ஒரு இராஜ்யம் சத்யுகத்தில் மட்டுமே இருந்தது என நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். அங்கே சுகம் அமைதி அனைத்தும் இருந்தது. இந்த அனைத்து விஷயங்களும் வரிசைக்கிரமமான முயற்சிக்குத் தகுந்தாற்போல் உங்கள் புத்தியில் உள்ளது. நாம் சத்யுகத்தில் இராஜ்யம் செய்து கொண்டிருந்தோம், மிகவும் சுகம் இருந்தது என புரிந்து கொள் கின்றனர். அத்வைத (பிரிவினை இல்லாத) ஒரே தர்மம் இருந்தது. இந்த ஞானம் யாருக்கும் கிடையாது. இந்த சமயத்தில் நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக ஆகிறீர்கள். தந்தை உங்களை தமக்குச் சமமாக ஆக்குகிறார். தந்தையின் மகிமை என்னவோ அதுவாக நீங்கள் ஆக வேண்டும். திவ்ய திருஷ்டியின் (தெய்வீகப் பார்வையின்) சாவி தந்தையிடம் மட்டுமே இருக்கிறது. தந்தை சொல்லியிருக்கிறார் – பக்தி மார்க்கத்தில் நான் வேலை கடமை செய்ய வேண்டியிருக்கிறது, யார் யாருக்கு பூஜை செய்கின்றனரோ அவர்களின் மன விருப்பங் களை நிறைவேற்றுகிறேன். இங்கும் கூட திவ்ய திருஷ்டியின் நடிப்பு நடக்கிறது. அர்ஜுனன் வினாசத்தின் காட்சியை பார்த்தார் என சொல்கின்றனர் அல்லவா. வினாசமும் கண்டிப்பாக ஆக வேண்டும். விஷ்ணுபுரியும் கண்டிப்பாக ஸ்தாபனை ஆக வேண்டும். தந்தை கல்பத்திற்கு முன்பு புரிய வைத்தது போலவே புரிய வைக்கிறார். பாபா நம்மை மனிதரிலிருந்து தேவதையாக ஆக்குகிறார். தேவதையாகும் போது அசுர சிருஷ்டியின் வினாசம் கண்டிப்பாக ஆகும். நாலாபுறமும் ஐயோ என்ற அவலக்குரல் ஒலிக்கும். புத்தியால் புரிந்து கொள்ள முடியும், இயற்கையின் சீற்றம் ஏற்படவுள்ளது. ஆயுதங் களின் மழையும் பொழியப் போகிறது. இவை அனைத்தின் வினாசம் ஏற்படும்போது சத்யுகத்தின் ஸ்தாபனை ஏற்படும். 5 தத்துவங்களின் எரு (உரம்) கிடைத்துவிடும். இந்த பூமிக்கு எருவைப் பாருங்கள் எவ்வளவு கிடைக்கிறது. இந்த ருத்ர ஞான யக்ஞத்தில் இவையனைத்தும் ஸ்வாஹா ஆகி விடும். பக்தி மார்க்கத்தில் பாருங்கள், ருத்ர யக்ஞத்தை எப்படி ஏற்பாடு செய்கின்றனர் என்று. சிவபாபாவின் லிங்கத்தையும் சிறிய சிறிய சாலிக்கிராமங்களையும் நிறைய உருவாக்கி பூஜை செய்துவிட்டு பிறகு அழித்து விடுகின்றனர், பிறகு தினம்தோறும் உருவாக்குகின்றனர். பூஜை செய்து பிறகு உடைத்து விடு கின்றனர். சிவபாபாவுடன் யாரெல்லாம் சேவை செய்தார்களோ அவர்களுடைய நிலையையும் இப்படி ஆக்கு கின்றனர். ஒவ்வொரு வருடமும் இராவணனுடைய உருவத்தை உருவாக்கி, எரிக்கின்றனர். எதிரியின் உருவத்தை உருவாக்கி ஓரிரு முறை எரிப்பார்கள், வருடா வருடம் எரிக்கக் கூடிய முறையை ஏற்படுத்துவதில்லை. ஒரே முறை கோபத்தை தணித்துக் கொள்வார்கள். இராவணனையோ ஒவ்வொரு வருடமும் எரிக்கின்றனர். இதன் அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்வதில்லை. பிறகு இராவணன் சீதையை கடத்தினார் என்று சொல்கின்றனர், அர்த்தத்தை கொஞ்சமும் புரிந்து கொள்வதில்லை. அயல் நாட்டினர் என்ன புரிந்து கொள்வார்கள், எதுவுமில்லை. நாளுக்கு நாள் இராவணனை பெரியதாக்கிக் கொண்டே செல்கின்றனர், ஏனெனில் இராவணன் மிகவும் துக்கம் கொடுப்பவன். இப்போது நீங்கள் இதன் மீது வெற்றி அடைகிறீர்கள். சத்யுகத்தில் இருக்கவே போவதில்லை. இந்த கர்மத்தின் விளைவை அனுபவிப்பது, நோய் முதலானவை ஏற்படுவது இவைகளின் காரணம் இராவணன். இராவணனின் பிரவேசம் ஆனதால் மனிதர்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் விகர்மம் ஆகி விடுகின்றன. சுகம் துக்கத்தின் விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரலாறு புவியியலைப் பற்றி யாருக்கும் தெரியாது. லட்சுமி நாராயணருக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? யாருக்கும் தெரியாது. சின்னஞ்சிறு குழந்தைகளாகிய நீங்கள் புரிய வைக்கிறீர்கள் – இந்த லட்சுமி நாராயணர் சத்யுகத்தில் இராஜ்யம் செய்து கொண்டிருந்தனர், சங்கமத்தில் இந்த இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு இந்த பதவியை அடைந்தனர். பிர்லாவுக்கும் கூட சிறு சிறு குழந்தைகள் சென்று இவர்கள் இந்த இராஜ்யத்தை எப்படி அடைந்தனர் என புரிய வைக்க வேண்டும். இப்போது கலியுகம், இது சத்யுகம் என சொல்லப்படுவதில்லை. இராஜ்யம் இப்போது இல்லை. இராஜாக் களின் கிரீடத்தை நீக்கி விட்டார்கள். தர்ம சாஸ்திரங்கள் 4 மட்டுமே ஆகும். கீதை தர்ம சாஸ்திரம் ஆகும், அதிலிருந்து 3 தர்மங்கள் இப்போது ஸ்தாபனை ஆகின்றன, சத்யுகத்தில் அல்ல. லட்சுமி நாராயணரோ அல்லது ராமனோ ஏதும் தர்மத்தை ஸ்தாபனை செய்தார்கள் என்பதல்ல. இந்த தர்மத்தை இப்போது ஸ்தாபனை செய்து கொண்டிருக் கிறார், பிறகு இஸ்லாம், பௌத்த மற்றும் கிறிஸ்தவ தர்மங்களின் ஸ்தாபனை. கிறிஸ்தவர்களின் ஒரே தர்ம சாஸ்திரம் பைபிள், அவ்வளவு தான். பிறகு வளர்ச்சியடைந்தபடி செல்கிறது. ஆதி சனாதன தேவதா தர்மம்தான் இப்போது மீண்டும் தேவி தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்கிறோம். நீங்கள் நாடகத்தின் ரகசியத்தை நல்ல விதமாகப் புரிந்து கொண்டீர்கள். குஷியும் இருக்கிறது. நாம் மீண்டும் நம்முடைய இராஜ்ய பாக்கியத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு 100 சதவிகிதம் நிச்சயம் உள்ளது. இதில் சண்டை முதலான விஷயம் எதுவுமே இல்லை. இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது, இது நிச்சயம். மரணம் எப்படி நிச்சய மான ஒன்றோ அப்படி இது நிச்சயமான ஒன்று. நாம் மீண்டும் இராஜ்ய பாக்கியத்தை எடுக் கிறோம் என்று நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு கல்பமும் தந்தையிடமிருந்து ஆஸ்தி எடுக்கிறோம். எவ்வளவு முயற்சி செய்கிறீர்களோ அந்தளவு உயர்ந்த பதவி அடைவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தந்தையின் மகிமையை தனக்குள் கொண்டு வரவேண்டும். தந்தைக்குச் சமமாக மகிமைக்குகந்தவர்களாக ஆக வேண்டும். பரலௌகிக தந்தையிடமிருந்து தூய்மையின் ஆஸ்தியை எடுக்க வேண்டும். தூய்மையாக ஆவதன் மூலமே சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கும்.
2. ஸ்ரீமத் படி தமது உடல்-மனம்-செல்வத்தின் மூலம் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும்.
வரதானம்:-
மாஸ்டர் திரிகாலதரிசி ஆகி எண்ணத்தை செயலில் எடுத்து வரும் பொழுது எந்தவொரு செயலும் வீண் போகாது. இந்த வ்யர்த் – வீணானதை மாற்றி ஸமர்த் – சக்திசாலி சங்கல்பம் மற்றும் ஸமர்த் – சக்திசாலி செயல் செய்வது – இதற்கு தான் சம்பூர்ண நிலை (ஸ்டேஜ்) என்று கூறுவார் கள். தங்களது வீண் சங்கல்பங்கள் மற்றும் விகர்மங்களை மட்டும் சாம்பலாக்குவது அல்ல. ஆனால் சக்தி ரூபம் ஆகி முழு உலகத்தின் விகர்மங்களின் சுமையை லேசாக ஆக்குவது மற்றும் அநேக ஆத்மாக்களின் வீண் சங்கல்பங்களை நீக்குவதற்கான (மெஷினரி) யந்திரத்தை தீவிரப் படுத்துங்கள். அப்பொழுது தான் விஷ்வ கல்யாணகாரி என்று கூறப்படுவீர்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!