15 June 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen BK Murli Of 15 June 2021 in Tamil Murli Today | Daily Murli Online

June 14, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்ய வேண்டுமெனில் நாம் யாருடைய குழந்தையாக இருக்கிறோம் என்ற இந்த நினைவிலேயே இருங்கள், ஒரு வேளை தந்தையை மறந்து விட்டீர்கள் என்றால் அந்த சுகம் இல்லாமல் போய் விடும்.

கேள்வி: -

தந்தையின் சந்திப்பினால் நிலையான மகிழ்ச்சி எந்த குழந்தைகளுக்கு இருக்கும்?

பதில்:-

எந்தக் குழந்தைகள் ஒருவரிடம் தனது அனைத்து சம்மந்தங்களையும் இணைத்துள்ளனரோ, யார் ஒரு தந்தையின் நினைவில் இருக்கக் கூடிய முயற்சி செய் கின்றனரோ, எந்த தேகதாரியையும் நினைவு செய்வதில்லையோ அவர்களுக்குத்தான் நிலை யான மகிழ்ச்சி இருக்கும். ஒருவேளை தேகதாரியின் நினைவு இருந்தது என்றால் மிகவும் அழ வேண்டியிருக்கும். உலகின் எஜமானர் ஆகக்கூடியவர்கள் ஒரு போதும் அழுவதில்லை.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

குழந்தைப் பருவத்தினை மறந்திட வேண்டாம். . .

ஓம் சாந்தி. இனிமையான குழந்தைகளே, நாம் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையின் குழந்தைகள் என்பதை மறந்து விட வேண்டாம் என தந்தை சொல்கிறார். இதை மறந்து விட்டால் அழுவீர்கள். சீச்சீ (கீழான) உலகத்தின் மீது புத்தி சென்று விடும். தந்தையின் நினைவு இருப்பதன் மூலம் அதீந்திரிய சுகத்தின் உணர்வு இருக்கும். அந்த சுகம் தந்தையை மறந்து விட்டால் காணாமல் போய்விடும். ஒவ்வொரு மூச்சுக்கும் நாம் பாபாவின் குழந்தை கள் என்ற நினைவு இருக்க வேண்டும், இல்லை யென்றால் அழ வேண்டியதாகி விடும். அனைவரும் பகவானின் குழந்தைகள், அனைவரும் சொல் கின்றனர் – பாபா ஓ பரமபிதா பரமாத்மாவே காப்பாற்றுங்கள். ஆனால் தந்தையின் பாதுகாப்பு எப்போது கிடைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. சாது சன்னியாசிகள் முதலானவர்கள் யாருக்கும் தந்தை யிடமிருந்து முக்தி, ஜீவன்முக்தி எப்போது கிடைக்கும் என்பது தெரியாது, ஏனென்றால் பகவானையே ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறார் என சொல்லி விட்டனர். இப்போது குழந்தை களாகிய நீங்கள் எல்லைக்கப்பாற்பட்ட தந்தையை தெரிந்து கொண்டு விட்டீர்கள் மிகவும் அன்பான தந்தை, அவரை விட அன்பான பொருள் வேறு எதுவும் இல்லை. இப்படிப்பட்ட தந்தையை தெரிந்து கொள்ளாம லிருப்பது என்பது மிகப் பெரிய தவறாகும். சிவ ஜெயந்தியை ஏன் கொண்டாடுகின்றனர், அவர் யார்? என்பது கூட யாருக்கும் தெரியாது. நீங்கள் எவ்வளவு முட்டாள்களாக ஆகி விட்டீர்கள் என தந்தை சொல்கிறார். மாயையாகிய இராவணன் உங்களை என்னவாக ஆக்கிவிட்டது! இது நம்முடைய ஜென்ம பூமி என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிகிறீர்கள். நான் ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங் களுக்குப் பிறகும் வருகிறேன். பிறகு அவர்கள் 40 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு கலியுகம் முடியும்போது வருகிறார் என சொல்லி விடுகின்றனர். திரிமூர்த்தியின் படமும் காட்டப் படுகிறது. திரிமூர்த்தி மார்க்கம் என பெயரும் வைத்துள்ளனர், ஆனால் மும்மூர்த்தி களான பிரம்மா, விஷ்ணு, சங்கரரை யாருக்கும் தெரியாது. பிரம்மா என்ன செய்து விட்டுச் சென்றார்? விஷ்ணு மற்றும் சங்கர் என்ன செய்கின்றனர்? எங்கே வசிக்கின்றனர்? இது எதுவும் தெரியாது. முற்றிலுமே அடர்ந்த காரிருளில் உள்ளனர். தந்தை படைப்பவர். அவருடைய இந்த படைப்பு எவ்வளவு பெரியது! எவ்வளவு எல்லைக்கப்பாற்பட்ட நாடகம். இதில் அளவற்ற மனிதர்கள் இருக்கின்றனர். இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சத்யுகம் இருந்தது, பாரதத்தில் லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தபோது வேறு எந்த இராஜ்யமும் இருக்கவில்லை. ஸ்ரீ லட்சுமி பகவதி என்றும் ஸ்ரீ நாராயணர் பகவான் என்றும் சொல்லப்படுகின்றனர். இராமன் – சீதையையும் கூட பகவான் ராமன், பகவதி சீதை என சொல் கின்றனர். இப்போது இந்த பகவான் நாராயணர், பகவதி லட்சுமி எங்கிருந்து வந்தனர்? இராஜ்யம் செய்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்களுடைய வாழ்க்கைச் சரித்திரம் ஒருவருக்கும் தெரியாது. ஓ பகவானே துக்கத்தை நீக்கி சுகத்தைக் கொடுப்பவரே என்று மட்டும் மகிமை பாடியபடி இருக்கின்றனர். ஆனால் அவர் எப்படி துக்கத்தை நீக்கி சுகத்தை கொடுக்கிறார் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. எந்த சுகத்தை அனைவருக்கும் கொடுத்தார்? மேலும் எப்போது அனைவரின் துக்கத்தை நீக்கினார்? எதுவும் தெரியாது.

குழந்தைகளாகிய நீங்கள் இப்போது இங்கே இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் – பகவதி லட்சுமி யாகவும் பகவான் நாராயணராகவும் ஆவதற்காக. பகவதி சீதாவாகவும், பகவான் இராமனா கவும் ஆகவேண்டும் என்றும் கூட தெரிந்து கொண்டிருக்கின்றனர். 8 பிறவிகள் சத்யுகத்தில் முடித்துக் கொண்டு பிறகு ராமன்-சீதையின் இராஜ்யத்தில் வரக் கூடியவர்கள் ஆவோம். 21 பிறவிகளுக்கான எல்லைக்கப்பாற்பட்ட இராஜ்யத்தை நீங்கள் இங்கே ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பகவதி, பகவானாக சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். சொர்க்கம் ஏதோ ஆகாயத்தில் இருப்பதல்ல. இது கூட யாருக்கும் தெரியாது. முற்றிலுமே அற்ப புத்தி உள்ளவர்களாக இருக்கின்றனர். இன்னார் சொர்க்கத்திற்குச் சென்றார் என சொல்கின்றனர். ஆனால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. நல்லது, கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் அனைவரும் சொர்க்கத் திற்குச் செல்வார்களா? அவர்கள் பிற்காலத்தில் வந்து தத்தமது தர்மத்தை ஸ்தாபனை செய்கின்றனர். எனவே அவர்கள் எப்படி சொர்க்கத்திற்கு வரமுடியும்? சொர்க்கம் என எதனை சொல்லப் படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. சன்னியாசிகள் ஜோதியோடு ஜோதியாக ஐக்கியமாகி விட்டார் என சொல்கின்றனர். சிலர் பிறகு நிர்வாண தாமத்திற்குச் சென்றார் என சொல்கின்றனர். நிர்வாணத்தில் கூட உலகம் உள்ளதல்லவா. அது வசிக்கும் இடமாகும். ஜோதியில் ஜோதியாக ஐக்கியாமாகும் விஷயம் இல்லை. ஜோதியில் கலந்து விட்டால் பிறகு ஆத்மாவே முடிந்து போய் விடும். விளையாட்டே முடிந்து விடும். இந்த நாடகத்தில் இருந்து யாரும் விடுபட முடியாது. யாரும் மோட்சத்தை அடைய முடியாது. பாடலின் அர்த்தத்தையும் யாரும் புரிந்து கொள்வதில்லை. ஜீவன் முக்தியின் அர்த்தத்தையும் புரிந்து கொள்வதில்லை, ஆத்மா-பரமாத்மாவின் அர்த்தத் தையும் புரிந்து கொள்வதில்லை. உங்கள் புத்தி மனிதர்களுடையதாக உள்ளது. அதுவேதான் இந்த தேவதை களுடையதாகவும் இருந்தது என தந்தை சொல்கிறார். சத்யுகத்தின் தொடக்கத்தில் தேவதைகள் இருந்தனர். அவர்களுடைய இராஜ்யம் 2500 வருடங்கள் நடந்தது. மீதி உள்ளது 2500 வருடங்களின் விஷயம், அதில் மற்ற தர்மங்கள் வருகின்றன. 5000 வருடங்களுக்குப் பதிலாக மனிதர்கள் கல்ப மரத்தின் ஆயுளை இலட்சக் கணக்கான வருடங்கள் என சொல்லி விடுகின்றனர். ஆனால் உங்களுடைய விஷயத்தை புரிந்து கொள்வதற் காகவும் வரமாட்டார்கள். ஆம், யார் முந்தைய கல்பத்தில் புரிந்து கொண்டனரோ அவர்கள்தான் வரவும் செய்வார்கள். முதலில் புரிய வைக்க வேண்டும் – ஒன்று எல்லைக்குட்பட்ட சன்னியாசம், அந்த சன்னியாசி கள் வீடு வாசலைத் துறந்து சென்று காட்டில் வசிக்கின்றனர், முதன் முதலில் அவர்கள் சதோபிரதானமாக இருந்தார்கள். பிறகு இப்போது தமோபிரதானமாக ஆகியுள்ளனர், எனவே காட்டை விட்டுத் திரும்பி வந்து பெரிய பெரிய மாளிகைகளை உருவாக்கியுள்ளனர். இந்த சன்னியாசிகளும் கூட தூய்மையின் ஆதாரத்தில் பாரதத்தைக் கண்டிப்பாக நிலைக் கவைத்தனர். பாரதத்தின் சேவை செய்தனர். இந்த சன்னியாச தர்மம் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் பாரதம் ஒரேயடியாக விகாரங்களால் எரிந்து சாம்பலாகி தூய்மை யற்றதாக ஆகியிருக்கும். இதுவும் நாடகமாக உருவாகியுள்ளது. முதலில் அவர்களுக்குள் தூய்மை யின் சக்தி இருந்தது, அதன் மூலம் பாரதத்தை நிலைத்திருக்கச் செய்தனர். இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்தபோது பாரதம் எவ்வளவு பணக்கார தேசமாக இருந்தது. எவ்வளவு வைர வைடூரியங்களால் ஆன பெரிய பெரிய மாளிகைகள் இவர் களுடையதாக இருந்தன. இவை அனைத்தும் எங்கே போயின? அனைத்தும் கீழே போய் விட்டன. இலங்கையை மற்றும் துவாரகை யைப் பற்றி சொல்லும்போது அவை கடலுக்குக் கீழே போய் விட்டன என சொல்கின்றனர். இப்போது அவை இல்லை. தங்கத்தால் ஆன மாளிகைகள் இருந்தன அல்லவா. கோவில்கள் முதலானவை களில் வைர வைடூரியங்கள் பதிக்க முடியும்போது அங்கே எவ்வளவோ செல்வம் இருக்க முடியாதா? குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வளவு குஷி இருக்க வேண்டும். பாபா மீண்டும் வந்து விட்டார். தந்தையை நினைவு செய்யுங்கள் என சொல்கிறார். ஒருவரைத்தான் நினைவு செய்ய வேண்டும், அதன் மூலம் பாவ கர்மங்கள் அழிகின்றன. ஆனால் அவர்கள் மறந்து விடுகின்றனர், மேலும் தேகதாரிகளின் நினைவு வந்து விடுகிறது. தேகதாரிகளின் நினைவினால் எந்த லாபமும் கிடையாது, என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். எந்த தேகதாரியையும் நினைவு செய்யாதீர்கள். அம்மா இறந்தாலும் கூட அல்வா உண்ண வேண்டும். . . ஒரு தந்தையின் நினைவில்தான் வருமானம் உள்ளது. நாம் சிவ பாபாவின் குழந்தைகள், அவரிடமிருந்து ஆஸ்தியை பெற வேண்டும். இந்த சமயத்தில் தந்தையை நினைவு செய்யாவிட்டால் பின்னர் வருந்த வேண்டி யிருக்கும், அழ வேண்டியிருக்கும். உலகின் எஜமானர் ஆகக் கூடியவர்களுக்கு அழ வேண்டிய அவசியம் என்ன? நீங்கள் தந்தையை மறந்து விடு கிறீர்கள், அப்போதுதான் மாயையின் அடி விழுகிறது, ஆகையால் பாபா மீண்டும், மீண்டும் புரிய வைக்கிறார் – தந்தையை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். மரணமே இல்லாத பாபா அமரபுரியில் அமர்ந்து ஒரு பார்வதிக்கு மட்டும் கதை சொல்லியிருக்க மாட்டார். கண்டிப்பாக பலர் இருப்பார்கள். மனிதர்களாக இருக்கும் அனைவருக்கும் தந்தை புரிய வைக்கிறார் – இப்போது பதிதமாக (தூய்மையற்றவராக) ஆகாதீர்கள். இந்த கடைசி பிறவியில் தூய்மையடையுங்கள். அங்கே சொர்க்கத்தில் எந்த விகாரமும் இருக்காது. ஒருவேளை அங்கும் கூட விகாரம் இருக்கும் என்றால் பிறகு சொர்க்கம் மற்றும் நரகத்திற் கிடையில் வித்தியாசம் என்னதான் இருக்கும்? தேவதைகள் குறித்து அனைத்து குணங் களிலும் நிறைந்தவர், 16 கலைகளிலும் நிரம்பியவர்கள்…. என மகிமை பாடுகின்றனர். பகவான் வந்து பகவான் – பகவதியாகத்தான் ஆக்குவார். பகவானைத் தவிர வேறு யாராலும் ஆக்க முடியாது. பகவான் ஒருவரே ஆவார். பகவான்-பகவதியின் இராஜ்யம் என பாடவும் படுகிறது. அந்த இராஜ்யமே ராஜா ராணியைப் போல பிரஜைகள் என்ற நிலையில் இருக்கும். ஆனால் பகவான் – பகவதி என்று சொல்லப் படுவதில்லை, ஆகையால் ஆதி சனாதன தேவி தேவதா தர்மம் என சொல்லப்படுகிறது. இது யாருக்கும் தெரியாது. இவருடைய (பிரம்மாவுடைய) ஆத்மாவுக்கும் கூட தந்தை புரிய வைக்கிறார். ஒன்று தந்தை யுடையது, மற்றொன்று தாதாவுடையது என இரண்டு ஆத்மாக்கள் உள்ளன அல்லவா. ஒரு ஆத்மா 84 பிறவிகள் எடுக்கிறது, மற்றொரு ஆத்மா மறுபிற விகளற்றது. தந்தை ஒருபோதும் பிறவி எடுப்பதில்லை. ஒருமுறை மட்டுமே வந்து முழு உலகை தூய்மை யாக்குவதற்காக நமக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். தந்தை உங்களுக்கு புரிய வைக்கிறார் – நான் இவருக்குள் பிரவேசம் செய்துள்ளேன். இவர் 84 பிறவிகள் அனுபவித்து வந்தார். இப்போது இது இவருடைய கடைசி பிறவியாகும். இப்போது நான் நிராகாரமாக இருக்கிறேன் எனும்போது எப்படி வந்து குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பிப்பது? தூண்டுதலின் மூலம் எதுவும் நடக்க முடியாது. கிருஷ்ண பகவானுடைய மகா வாக்கியம் என இருக்க முடியாது. அவர் எப்படி வரமுடியும்? அவரோ சத்யுகத்தின் இளவரசன், 16 கலைகளில் நிறைந்தவர். பிறகு திரேதா யுகத்தில் 14 கலைகளில் நிறைந்தவர்கள் இருப்பார் கள், பிறகு துவாபரத்தில் கிருஷ்ணரை ஏன் கொண்டு சென்றனர்? அவர் முதலில் (சத்யுகத் தில்) வரவேண்டும். தந்தை புரிய வைக்கிறார் – முதலில் தந்தையை நினைவு செய்யுங்கள். இல்லாவிட்டால் மாயை ஒரேயடியாக அடி கொடுத்து விடும். தொட்டால் சுருங்கி என ஒரு செடி உள்ளது. கையால் தொட்டாலே இலைகள் சுருங்கி விடும். உங்களுடைய நிலையும் அப்படித்தான் உள்ளது, தந்தையை நினைவு செய்யா விட்டால் அவ்வளவுதான், முடிந்தது. குழந்தைப் பருவத்தை மறந்திட வேண்டாம் என பாடலிலும் கேட்டீர்கள். தந்தையை மறந்து விட்டால் ஏதாவதொரு சமயத்தில் மாயாவின் அடி விழுந்து விடும். தந்தை சொல்கிறார் – நீங்கள் என்னுடைய குழந்தைகள் அல்லவா. இந்த சரீரம் விஷத்தால் பிறந்தது. அவர்களுக்கு லௌகீக இதனுடைய தாய்- தந்தையர் உள்ளனர். இவர் பரலௌகிக தந்தை மற்றும் இவர் அலௌகிக தந்தை என சொல்லப்படுகிறார். இவர் (பிரம்மா) எல்லைக்குட் பட்டவராக இருந்தார், பிறகு எல்லைக்கப்பாற்பட்டவராக ஆகி விட்டார். இப்போது பாருங்கள், இந்த லௌகிக குழந்தை (நிர்மல் சாந்தா) அமர்ந்திருக்கிறார். இவர் லௌகிகமானவரும் கூட, அலௌகிகமானவரும், பரலௌகிக மானவரும் கூட ஆவார். மற்றபடி சிவபாபாவின் சகோதரன், சகோதரி என யாரும் இல்லை. லௌகிகத்திலும் இல்லை, அலௌகிகத்திலும் இல்லை, பரலௌகிகத்திலும் இல்லை. எவ்வளவு வித்தியாசம் உள்ளது. ஒரு தந்தை யுடையவராக ஆவது சித்தி வீடு போல அல்ல. இப்படிப் பட்ட தந்தையிடம் சம்மந்தத்தை இணைப்பது என்பதில் சமயம் தேவைப்படுகிறது. சிவபாபாவின் நினைவில் இருப்பது என்பது மிகவும் முயற்சிக்க வேண்டிய விஷயம். 50 வருடங்களுக்கும் மேலாக இருக்கக் கூடிய பலரும் கூட முழு நாளும் சிவபாபாவை நினைவு செய்வதில்லை, இப்படிப்பட்டவர்களும் இருக்கின்றனர். மற்ற அனைவரையும் மறந்து ஒருவரை நினைவு செய்வது என்பது மிக மிக உழைக்க வேண்டிய விஷயம். சிலர் 1 சதவிகிதம் நினைவு செய்கின்றனர், சிலர் 2 சதவிகிதம், சிலர் 1/2 சதவிகிதம் கூட நினைவு செய்வது கடினமாக உள்ளது. இது மிகப் பெரிய இலட்சியமாகும். ஆக தந்தை புரிய வைக்கிறார் – குழந்தைப் பருவத்தினை மறந்திட வேண்டாம். தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது. நாம் வாழ்ந்தபடியே இறந்து தந்தையுடையவராக வந்து ஆகியுள்ளோம் – புதிய உலகத்திற்குச் செல்வதற்காக. ஆக, உங்களுக்கு நிலையான குஷி இருக்க வேண்டும் – ஓஹோ. . . நாம் இரட்டை கிரீடதாரிகள் ஆகப் போகிறோம்! சத்யுகத்தில் இந்த தேவதைகளை 16 கலைகள் நிறைந்தவர்கள், 14 கலைகள் நிறைந்தவர்கள் என ஏன் சொல்கிறோம் என மனிதர்களுக்குத் தெரியாது. இந்த பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்கள் மீண்டும் உருவாகும். இந்த ஹடயோகம், தீர்த்த யாத்திரை முதலான அனைத்தும் மீண்டும் நடக்கும். ஆனால் இவைகளால் என்ன ஆகப் போகிறது? சொர்க்கத்திற்குப் போவார்களா என்ன? இல்லை. பலர் மந்திர தந்திரங் களின் மூலம் காரியங்கள் செய்கின்றனர். மந்திரவாதிகள் நிறைய பேர் உள்ளனர். ஆயிரக் கணக்கான மனிதர்கள் அவர்களின் பின்னால் இருக்கின்றனர். மந்திர தந்திரங்களின் மூலம் பலரும் கடிகாரம் முதலான பொருட்களை வெளிப்படுத்துகின்றனர். இவையனைத்தும் அல்ப காலத்திற் கானதாகும் என்று புரிந்து கொள்வதில்லை. இதில் மிகவும் உழைக்க வேண்டியுள்ளது. இந்த மந்திர தந்திரங்களைக் கற்பதற்காகவும் புத்தகங்கள் இருக்கின்றன. எவ்வளவு இலட்சக்கணக்கான மனிதர் கள் அவர்களுக்குப் பின்னால் ஓடுகின்றனர். நமக்கு பாபாவிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தக் கண்களால் பார்க்கக் கூடிய எதுவும் இருக்கப் போவதில்லை. நீங்கள் அசரீரியாக வந்திருந்தீர் கள், பிறகு சரீரத்துடன் நடிப்பை நடித்தீர்கள். ஒருவேளை 84 இலட்சத்தின் கணக்கு சொல்ல வேண்டும் என்றால் 12 மாதங்கள் ஆகிவிடும். சாத்தியமே இல்லை. 84 பிறவி களின் கணக்கை சொல்வது முற்றிலும் சகஜமாகும். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றியபடி இருக்கிறீர் கள். சூரிய வம்சத்தவர் இருந்தால் சந்திர வம்சத்தினர் இல்லை. சூரிய வம்சத்தின் குலம் முடிந்த பின் சந்திர வம்சம். . . இப்படி மாறி வந்தீர்கள்.

நாம் பிராமண வம்சத்தினர், பிறகு தேவதா வம்சத்தினராக ஆக வேண்டும், ஆகையால் நாம் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறோம். பிறகு ஏணியில் இறங்கி இறங்கி வைசிய, சூத்திர வம்சத்தவராக ஆகப் போகிறோம். இப்போது தனது 84 பிறவிகளின் நினைவு வந்துள்ளது. இந்த சக்கரத்தையும் நினைவு செய்ய வேண்டும். தந்தையை நினைவு செய்வதன் மூலம் எப்போதும் ஆரோக்கியமிக்கவராகவும், செல்வமிக்கவராகவும் ஆகப் போகிறோம். பாவங்கள் நீங்கி விடும். சக்கரத்தை அறிவதன் மூலம் சக்கரவர்த்தி ஆகி விடு வோம். இந்த பழைய உலகம் சுடுகாடாக ஆகப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எதுவும் இருக்கப் போவதில்லை. முடிந்து போய் விடும். இராமன் சென்றார். . . இராவணன் சென்றார். . . இராமனுடைய ஈஸ்வரிய குடும்பம் சத்யுகத்தில் எவ்வளவு சிறியதாக இருக்கும் இப்போது இராவணனின் குடும்பம் எவ்வளவு பெரியதாக உள்ளது. இந்த இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது என குழந்தைகளுக்குத் தெரியும். அனைத்து விஷயங் களிலும் முயற்சி முதலாவதாகும். குழந்தைகளே என்னை நினைவு செய்யுங்கள் என தந்தை முயற்சி செய்விக்கிறார். எந்த தந்தையிடமிருந்து அளவற்ற சொர்க்கத்தின் இராஜ்யம் கிடைக்கிறதோ, அந்த தந்தையை நினைவு செய்ய மாட்டீர்களா? நீங்கள் சொர்க்கத்தின் எஜமானாக இருந்தீர்கள் என தந்தை நினைவூட்டுகிறார். இப்போது மீண்டும் முயற்சி செய்து சொர்க்கத்தின் எஜமானர் ஆகுங்கள். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்!

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. ஒருபோதும் எந்த விஷயத்திலும் தொட்டால் சுருங்கி ஆகக் கூடாது. ஈஸ்வரிய குழந்தைப் பருவத்தை மறந்து வாடிப் போய்விடக் கூடாது. இந்த கண்களால் பார்க்கக் கூடிய அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாலும் பார்க்கக் கூடாது.

2. ஒரு தந்தையின் நினைவில்தான் வருமானம் உள்ளது ஆகையால் தேகதாரிகளை நினைவு செய்து அழக்கூடாது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து உலக இராஜ்யத்தை அடைய வேண்டும்.

வரதானம்:-

ஞானத்தின் மூலமாக நமது பலவீனமான சம்ஸ்காரங்களை பற்றி தெரிய வந்து விடு கிறது என்றாலும் கூட அந்த விசயம் பற்றிய அறிவுரை கிடைக்கும் பொழுது அந்த சம்ஸ் காரம் சிறிது நேரத்திற்கு உள்ளுக்குள்ளே அமிழ்ந்து விடுகிறது தான். ஆனால் பலவீனமான சம்ஸ்காரத்தை நீக்குவதற்கு லைட் மற்றும் மைட் – ஒளி மற்றும் சக்தியின் கூடுதலான (எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ்) பலத்தின் அவசியம் இருக்கிறது. இதற்காக மாஸ்டர் சர்வ சக்திவான், மாஸ்டர் நாலேஜ்ஃபுல் ஆவதுடன் கூடவே செக்கிங் மாஸ்டர் ஆகுங்கள். நாலேஜ் மூலமாக சுயம் உங்களுக்குள் சக்தியை நிரப்புங்கள், மனனம் (சிந்தனை) செய்யும் சக்தியை அதிகரியுங்கள். அப்பொழுது சக்திகளில் நிறைந்தவர் ஆகி விடுவீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top