30 July 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
29 July 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இந்தப் பழைய உலகில், பழைய சரீரத்தில், எந்த ஆனந்தமும் கிடையாது. ஆகையால் இதில் உயிருடன் இருந்து கொண்டே இறந்து, தந்தையினுடையவராக ஆகிவிடுங்கள், உண்மையான விட்டில் பூச்சி ஆகுங்கள்.
கேள்வி: -
சங்கமயுகத்தின் ஃபேஷன் எது?
பதில்:-
இந்த சங்கமயுகத்தில் தான், குழந்தைகளாகிய நீங்கள் இங்கு அமர்ந்து கொண்டே தனது மாமனார் வீடாகிய வைகுண்டத்தைச் சுற்றிப் பார்த்து வருகிறீர்கள். இது சங்கமயுகத்தின் ஃபேஷன் ஆகும். சூட்சும வதனத்தின் இரகசியமும் இப்போது தான் வெளிப்படுகிறது.
கேள்வி: -
எந்த விதியின் மூலம் ஏழ்மை அல்லது துக்கத்தை எளிதாக மறந்து விட முடியும்?
பதில்:-
அசரீரி ஆவதற்கான பயிற்சி செய்தால், ஏழ்மை அல்லது துக்கம் அனைத்தையும் மறந்து விடுவீர்கள். செல்வந்தர்களாக ஆக்குவதற்காகவே ஏழைக் குழந்தைகளிடம் தந்தை வரு கின்றார். ஏழைக் குழந்தைகள் தான் தந்தையின் மடியில் அமர்கிறார்கள்
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
விட்டில் பூச்சிகளின் கூட்டத்தில் தீபம் …
ஓம்சாந்தி. தனது பரலௌகீகத் தந்தையாகிய பரம்பிதா பரமாத்மாவின் மீது ஆத்மாவிற்கு அன்பு ஏற்படுகிறது. பாபா, நம்மை இங்கிருந்து அழைத்து செல்வார் என்பதை அறிவீர்கள். ஏதாவது ஒரு ஆத்மா சரீரத்தை விடுத்து செல்கிறது எனில், அப்போது கஷ்டப்படுகிறது. சாவித்திரி, சத்யவானின் கதை கூறுகின்றனர். மீண்டும் அந்த ஆத்மா சரீரத்தில் வந்து விட வேண்டும் என்பதற்காக, அந்த ஆத்மாவின் பின்னால் எவ்வளவு (சாவித்திரி) கஷ்டப்பட வேண்டியிருந்தது. ஆனால் அவர்களிடத்தில் ஞானம் இல்லை. உங்களிடம் ஞானம் இருக்கிறது, நம் ஒவ்வொரு வரின் அன்பும் அந்த பரம்பிதா பரமாத்மாவின் மீது இருக்கிறது. ஏன் அன்பு ஏற்படுகிறது? இறப் பதற்காக. தந்தையின் மீது வைத்திருக்கும் இந்த அன்பு மிகவும் நல்லது. தனது சாந்திதாம வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, ஆத்மாக்கள் அரைக் கல்பம் பக்தி மார்க்கத்தில் ஏமாற்றம் அடைந்தது. உண்மையும் அதுவே. அசரீரி ஆகுங்கள், இறந்து விடுங்கள் என்று தந்தையும் கூறுகின்றார். ஆத்மா சரீரத்திலிருந்து விலகி விடும் போது, அது இறப்பு என்று கூறப்படுகிறது. குழந்தைகளே! இந்த உலகம் அதாவது, இந்த பந்தனத்திலிருந்து இறந்து விடுங்கள். அதாவது என்னுடையவராக ஆகி விடுங்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். இந்த பழைய உலகம், பழைய சரீரத்தில் எந்த போதையும் கிடையாது. இது மிகவும் சீ சீ உலகம். கொடூர நரகமாகும். இப்போது என்னுடையவராக ஆகிவிடுங்கள் என்று குழந்தை களாகிய உங்களுக்குக் கூறுகிறேன். சுகதாமம் அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன். அங்கு துக்கத்தின் பெயர் இருக்காது. ஆகையால் இந்த தீபத்தில் குஷியுடன் பலியாகும் விட்டில் பூச்சி ஆகிவிடுங்கள். விட்டில் பூச்சி மகிழ்ச்சியுடன் ஓடி, ஓடி வரும் அல்லவா. சில விட்டில் பூச்சிகள் தீபம் எரிந்து கொண்டிருந்தால் சுற்றி வரும், தீபம் அணைந்து விட்டால் இறந்து விடும். தீபாவளி யன்று பல சிறிய, சிறிய விட்டில் பூச்சிகள் ஒவ்வொரு வர்ணங்களில் இருக்கும். தீபத்திடம் பலியாகிவிடும். தீபம் அணைந்து விட்டால் இறந்து விடும். இவர் மிகப் பெரிய தீபம் ஆவார். நீங்களும் விட்டில் பூச்சி போன்று பலியாகி விடுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் சைத்தன்ய (உணர்வுள்ள) மனிதர்கள், தேக பந்தனங்கள் அனைத்தையும் உயிருடன் இருக்கும் போதே விட்டு விடுங்கள். தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு என்னிடத்தில் தொடர்பு வையுங்கள். குஷியாக இருந்தால், இந்த சரீர உணர்வு நீங்கி விடும். ஆத்மாக்களாகிய நாம் இந்த உலகை விட்டு, விட்டு நமது வீட்டிற்குச் செல்கிறோம். இந்த உலகம் இப்போது எந்த காரியத்திற்கும் உதவாது. இதில் உள்ளத்தை ஈடுபடுத்தாதீர்கள். இந்த உலகில் ஏழைகள் அதிகம் இருக்கின்றனர். ஏழைகள் தான் துக்கமடைகின்றனர்.
குழந்தைகளே! இப்போது அசரீரி ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாக் களாகிய நாம், அங்கு சாந்திதாமத்தில் வசிக்கக் கூடியவர்கள். இப்போது தூய்மையாகாத வரை அந்த சாந்திதாமத்திற்கு யாரும் போக முடியாது. இப்போது அனைவரின் சிறகுகளும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. தன்னை பகவான் என்று கூறிக் கொள்பவர்களின் சிறகுகள் தான், மிகவும் அதிகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பிறகு அவர்கள் எங்கு அழைத்துச் செல்ல முடியும்? தானே செல்ல முடியாது எனும் போது உங்களுக்கு எப்படி சத்கதி செய் வார்கள்? ஆகையால், இந்த சாதுக் களையும் நான் முன்னேற்றுகிறேன் என்று பகவான் கூறியிருக்கின்றார். கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் சிவ பகவானின் மகாவாக்கிய மாகும். சிவனோ, அசரீரியாக இருக்கின்றார். எனவே அவசியம் பிரஜாபிதா பிரம்மாவின் வாயின் மூலம் தான் புரிய வைப்பார். மனித படைப்புகள் பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தான் ஏற்படுகிறது. இதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். தந்தை குழந்தைகளை ஏன் படைக்கின்றார்? என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் உணர வேண்டும். ஆஸ்தி கொடுப்ப தற்காகத் தான் தந்தை படைக்கின்றார். பிரம்மாவின் மூலம் பிராமணர்களை படைக்கின்றார். தந்தை நமக்கு கற்பிக்கின்றார், சொர்கத் திற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உலகை மாற்றுவதற்காக, நரகத்தை சொர்கமாக்கு வதற்காக, மனித சிருஷ்டியை தெய்வீக சிருஷ்டியாக ஆக்குவதற்காக தந்தை வருகின்றார். சுகம் கொடுப்பதற்கு அவரே வருவார் அல்லவா! இங்கு மனிதர்கள் மிகவும் செல்வந்தர்களாக இருக்கலாம், மாட மாளிகை களுடன் இருக்கலாம். ஆனால், நீங்கள் என்ன படிப்பு படிக்கிறீர்களோ அதன் மூலம் நீங்கள், அவர்களை விட உயர்ந்த பதவியடைகிறீர்கள். உலகீயப் படிப்பு படிக்கின்றவர்கள், நாம் வழக்கறிஞர்களாக ஆவோம் என்று நினைப்பர். நாம் ஐ.பி.எஸ் ஆவோம். சிவபாபா நம்மை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குவதற்காக கற்பிக்கின்றார் என்பது உங்களது புத்தியில் இருக்கிறது. எவ்வளவு உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியாகும்! அதுவும் 21 பிறவி களுக்கு ஒருபோதும் நோயாளிகளாக மாட்டீர்கள். அகால மரணம் ஏற்படாது. ஆனால் யாருக்கு? எந்த விட்டில் பூச்சியானது தந்தையை தன்னுடைய வராக ஆக்கிக் கொள் கிறார்களோ! தந்தையின் மடியில் வருகிறார்களோ அவர்களுக்கு! செல்வந்தர்கள் ஏழைகளின் மடியில் வரமாட்டார்கள். ஏழைகளின் குழந்தைகள் செல்வந்தர்களின் மடியில் வருவார்கள். இப்போது அனைவரும் முற்றிலும் ஏழைகளாக இருக்கின்றனர். இந்த மாட மாளிகைகள் அனைத்தும் அழிந்து விடும், மண்ணோடு மண்ணாகி விடும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் தான் உலகிற்கு எஜமானர்களாக ஆகக் கூடியவர்கள். எஜமானர்களாக இருந்தோம், இப்போது கிடையாது, மீண்டும் எஜமானர்களாக ஆவோம். முழு சிருஷ்டிக்கும் எஜமானர்களாக வேறு யாரும் ஆவது கிடையாது.
நீங்கள் 21 பிறவிகளுக்கு முழு சிருஷ்டிக்கும் எஜமானர்களாக ஆகிறீர்கள். அனைவரும் சுகமாக இருப்பர். இங்கு குறைந்த வயதுடையவர்களும் இறந்து விடுகின்றனர். அரச குடும்பத்தில் பிறப்பு எடுத்ததும் இறப்பவர்களும் பலர் இருக்கின்றனர். பிறப்பு எடுக்கின்ற வரை மட்டுமே இராஜ்யம் கிடைக்கிறது. எல்லையற்ற தந்தையின் முன் நாம் அமர்ந்திருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆத்மா சரீரத்தை தாரணை செய்து நடிப்பு நடித்துக் கொண்டே இருக்கிறது. நமது ஆத்மாவின் தந்தை வந்திருக்கின்றார் என்பதை இப்போது அறிவீர்கள். பழைய பந்தனத்திலிருந்து விடுவித்து, புது சம்பந்தத்தை ஏற்படுத்து கின்றார். நீங்கள் சூட்சுமவதனம், வைகுண்டம் போன்ற இடங்களுக்குச் செல்கிறீர்கள், சந்திப்பு செய்கிறீர்கள். உங்களது தொடர்பு எல்லை யற்றதாக ஆகிவிட்டது. இது நல்ல ஃபேஷனாக ஆகிவிட்டது. தனது மாமியார் வீட்டிற்குச் செல்ல முடியும். மீராவிற்கும் வைகுண்டம் மாமியார் வீடாக இருந்தது அல்லவா! மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். இது மாமியார் வீடு கிடையாது. இங்கு முற்றிலும் ஏழையாக இருக்கின்றனர். எதுவும் உங்களிடம் கிடையாது. நமது பாரதம் மிகவும் உயர்ந்த தேசமாக இருந்தது. தங்க பாரதமாக இருந்தது. இப்போது கிடையாது. எப்போது இருந்ததோ, அதை இப்போது மகிமை செய்கின்றனர். இப்போது தங்கத்தின் நிலை என்னவாகி விட்டது! நகை போன்ற அனைத்தையும் எடுத்துச் சென்று விடுகின்றனர். திருடன், திருடி விடக் கூடாது என்பதற்காக மறைத்து வைக்கின்றனர். அங்கு அளவற்ற தங்கம் இருக்கும். அடையாளங்களும் உள்ளன. சோமநாத கோயிலிலும் அடையாளங்கள் உள்ளன. மணி போன்றவைகளை முஸ்லீம்கள் மசூதிகளுக்கு எடுத்துச் சென்று வைத்து விட்டனர். ஆங்கிலேயர்களும் எடுத்துச் சென்றனர். அடையாளங்கள் உள்ளன எனும்போது, பாரதம் எவ்வளவு செல்வந்த நாடாக இருந்தது! இப்போது பாரதத்தின் நிலையைப் பாருங்கள்! இப்போது தந்தையினுடையவராக ஆகியிருக்கிறோம். சொர்கத்திற்கு எஜமானர் களாக ஆவதற்கு என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபா வந்திருக்கின்றார். முன்பும் வந்திருந்தார். சிவராத்திரி கொண்டாடுகின்றோம். இப்போது கிருஷ்ணருக்கும் இராத்திரி என்று கூறுகின்றனர். சிவனின் இராத்திரி என்றும் கூறுகின்றனர். சிறிது தான் வேறுபாடு இருக்கிறது. இந்த விசயங்களை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள், கிருஷ்ணரின் பிறப்பு பகலில் ஏற்பட்டால் என்ன? அல்லது இரவில் ஏற்பட்டால் என்ன? இதில் என்ன இருக்கிறது? இரவில் கிருஷ்ணரைக் கொண்டாடுவது உண்மையில் தவறாகும். சிவனுக்குத் தான் இராத்திரியாகும். ஆனால் இது எல்லையற்ற விசயமாகும். மேலும், சிவபகவானின் மகாவாக்கியமாகும். அவர்கள் சிவனை மறந்து விட்டு, கிருஷ்ண ராத்திரி என்று எழுதி வைத்து விட்டனர். எப்போது இரவு முடிவடைகிறதோ, அப்போது தான் பகல் ஆரம்ப மாகும். எல்லையற்ற பகல் உருவாக்கவே தந்தை வருகின்றார். பிரம்மாவின் பகல், பிரம்மா வின் இரவு. பிரம்மா எங்கிருந்து வந்தார்? கர்ப்பத்திலிருந்து வரவில்லை. பிரம்மாவின் தாய், தந்தை யார்? எவ்வளவு ஆச்சரியமான விசயமாகும்! தந்தை தத்தெடுக் கின்றார். இவரைத் தாயாகவும் ஆக்குகின்றார், குழந்தையாகவும் ஆக்குகின்றார். தாய் தான் தத்தெடுக்கின்றார். அதனால் தான் நீங்களே தாய், தந்தை ……. என்றும் பாடப்பட்டிருக்கிறது. ஆத்மாக்கள் நாங்கள் அனைவரும் உங்களது குழந்தைகள். ஆத்மா தான் படிக்கிறது, இந்த கர்மேந்திரியங்களின் மூலம் கேட்கிறது. குழந்தைகள் இந்த நினைவை மறந்து விடு கிறீர்கள். தேக அபிமானத்தில் வந்து விடுகிறீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள், அழிவற்றவர்கள் என்பதை தந்தை புரிய வைக் கின்றார். சரீரம் அழியக் கூடியது. என்னை நினைவு செய்யுங்கள். இது உங்களது கடைசிப் பிறவியாகும், இது வைரத்திற்குச் சமமானது. யார் தந்தையினுடையவர்களாக ஆகிறார்களோ அவர்களுக்குத் தான் வைரத்திற்கு சமமான பிறப்பாகும். உங்களது ஆத்மா சரீரத்துடனேயே பரம்பிதா பரமாத்மாவினுடையவர்களாக ஆகியிருக்கிறது. இப்போது ஆத்மா வைரம் போன்று ஆகிறது. அதாவது 24 கேரட் சுத்த தங்கமாக ஆகிறது. இப்போது எந்த கேரட்டும் கிடையாது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் எதிரில் அமர்ந்து கேட்கும் பொழுது மதுவனத்தின் உணர்வு ஏற்படுகிறது. இங்கு தான் முரளி வாசிக்கப்படுகிறது. பாபா எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், ஆனால் இந்த அளவிற்கு மஜா (மகிழ்ச்சி) வருவது கிடையாது. ஏனெனில் முரளி கேட்ட பின்பு உற்றார், உறவினர்கள் போன்ற மாயையின் இராஜ்யத்திற்குச் சென்று விடு கிறீர்கள். இங்கு பட்டியில் இருக்கிறீர்கள். இங்கு இராஜ்ய பிராப்தி அடைவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது நீங்கள் வசிப்பதற்கான ஹாஸ்டல் ஆகும். வீடாகவும் இருக்கிறது, மேலும் வெளியிலிருந்து எத்தனையோ பேர் வந்து தங்குகின்றனர். இங்கு நீங்கள் பள்ளியில் அமர்ந்திருக்கிறீர்கள். தொழில், வேலை போன்ற எதுவும் கிடையாது. தங்களுக்குள்ளேயே உரையாடல் செய்து கொள்கிறீர்கள். ஒருபுறம் முழு உலகம், மற்றொரு புறம் நீங்கள் இருக்கிறீர்கள்.
ஆத்மாக்களாகிய உங்களது அன்பர் (ப்ரீதம்) ஒரே ஒருவர் தான் என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆத்மா தான் அவரை நினைவு செய்கிறது. பக்தியில் நிராகாரத் தந்தையை சந்திப்பதற்கு எவ்வளவு அலைகின்றனர்! ஏனெனில், துக்கமானவர்களாக இருக்கின்றனர். சத்யுகத்தில் அலைவது கிடையாது. இப்போது எவ்வளவு சிலைகளை உருவாக்கி யிருக்கின்றனர்! யாருக்கு என்ன தோன்றுகிறதோ, அதை சிலையாக உருவாக்கு கின்றனர். குருக்களுக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது! எப்படி அங்கு குருமார்கள் உள்ளனரோ, அதே போன்று இங்கும் இவர் குரு ஆவார். சாது வாஸ்வானி முன்பு ஆசிரியராக இருந்தார் அல்லவா! பின்பு சாதுவாக ஆனார். ஏழைகளுக்கு சேவை செய்தார். இப்போது அவரிடத்தில் இலட்சக் கணக்கில் பணம் வருகிறது. எப்படி மற்ற ஆசிரமங்கள் உள்ளனவோ, அதே போன்று இதுவும் ஆசிரமம் ஆகும் என்று மனிதர்கள் நினைக்கின்றனர். ஆனால் இங்கு தந்தை பிரம்மாவின் உடலில் வருகின்றார் என்பதை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். அவசியம் பிரம்மா குமார், குமாரிகள் தேவை. ருத்ர ஞான யக்ஞத்தை உருவாக்க பிரம்மாவின் வாய்வழி வம்சத்தினர்கள் தேவை அல்லவா! இது ருத்ரனாகிய சிவபாபாவின் யக்ஞமாகும். இப்போது ஒரே ஒருவரை தான் நினைவு செய்ய வேண்டும். இங்கு மனிதன் தேவதை யாவதற்கான விசயமாகும். வேறு எந்த சத்சங்கத் திலும், மனிதன் தேவதையாவதற்கான விசயம் கிடையாது. உங்களுக்குத் தான் சொர்க்க இராஜ்யம் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமாகும் என்று மனிதர்கள் உங்களது விசயத்தைக் கேட்டு சிரிக்கின்றனர். முழுமையாக புரிந்து கொண்ட பிறகு, சரியான விசயம் தான் என்று கூறுகின்றனர். உண்மையில் பகவான் தந்தை அல்லவா! தந்தையிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. நாம் உலகிற்கு எஜமானர்களாக இருந்தோம். இப்போது என்ன நிலை ஆகிவிட்டது என்பதைப் பாருங்கள்!. யாராக இருந் தாலும் அவர் தந்தை ஆவார், சொர்க்கத்தைப் படைக்கின்றார் எனில், பிறகு ஏன் நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவது கிடையாது? நரகத்தில் ஏன் அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கேளுங்கள். இப்போது இராவண இராஜ்யமாகும், சத்யுகத்தில் இராவணன் இருக்கவே இருக்காது. அகிம்சையே உயர்ந்த தர்மமாக இருக்கும். அதை விஷ்ணுபுரி என்று கூறுகிறோம். ஆனால் விஷ்ணுபுரி என்றால் சொர்க்கபுரி என்பதைப் புரிந்து கொள்வது கிடையாது. விஷ்ணுபுரிக்கு அழைத்துச் செல்ல தந்தை வந்து கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று கூறுகின்றார். பரம்பிதா பரமாத்மா வந்து பிரம்மா, விஷ்ணு, சங்கர் மூலமாக தனது காரியங்களை செய்விக்கின்றார். தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரி என்றாலும், கிருஷ்ணபுரி என்றாலும் விசயம் ஒன்று தான். லெட்சுமி, நாராயணன் சிறு வயதில் இராதை, கிருஷ்ணராக இருந்தனர். இந்த பிரஜாபிதா பிரம்மா சாகாரத்தில் இருக்கிறார் அல்லவா! சூட்சும வதனத்தில் பிரஜாபிதா என்று கூறமாட்டீர்கள் அல்லவா! பிரஜாபிதாவின் மூலம் தத்தெடுக் கின்றார். தந்தை தன்னுடையவர்களாக ஆக்குகின்றார். எவ்வளவு எளிய விசய மாகும்! திரிமூர்த்தி சித்திரத்தை மட்டுமே தன்னுடைய வீட்டில் வைத்துக் கொண்டால் போதும். அதில் எழுதப்பட்டிருக்கவும் வேண்டும். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை என்றும் பாடுகின்றனர். ஆனால் திரிமூர்த்தி பிரம்மா என்று கூறி தந்தையாகிய சிவனை மறைத்து விட்டனர். அவர் நிராகார பரம்பிதா பரமாத்மா, இவர் பிரஜாபிதா பிரம்மா என்பதை இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பிரம்மாவை தேவதை என்றும் கூறுவர். எப்போது சம்பூர்ண பரிஸ்தா ஆகிவிடு கிறாரோ, அப்போது தான் தேவதை என்று கூற முடியும். உங்களை இப்போது தேவதை என்றும் கூற முடியாது. தேவதைகள் சத்யுகத்தில் இருப்பர். உங்களுடையது தெய்வீக தர்மம். பிரம்மா, விஷ்ணு, சங்கரரை தேவதாய நமஹ என்று கூறுகின்றனரே தவிர, பிரம்மா பரமாத்மாய நமஹ என்று கூறுவது கிடையாது. இவர்களையே தேவதை என்று கூறும் போது, பிறகு தன்னை பரமாத்மா என்று ஏன் கூறிக் கொள் கின்றனர்? அனைவரும் பரமாத்மாவின் ரூபமாக எப்படி இருக்க முடியும்? இதுவும் நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. அவர்களது குற்றமும் கிடையாது. இப்போது அவர்களுக்கு எப்படி வழி கூறுவது? பக்தர்கள் அனைவரும் மறந்து விட்டனர். வித விதமாக அளவிட முடியாத வழிகளைக் கூறுகின்றனர். மரணம் எதிரில் இருக்கிறது என்பதை இப்போது தந்தை புரிய வைக்கின்றார். ஆஸ்தி அடைய வேண்டுமெனில், பிரம்மா இன்றி சிவபாபாவின் ஆஸ்தியை அடைய முடியாது. அனைவரும் அந்த ஒரு நாயகனை (அன்பானவரை) அழைக்கின்றனர். நான் கல்ப, கல்பம் சங்கமத்தில் வருகிறேன். நானோ பிந்துவாக இருக்கிறேன். எப்படி வேறுபடுத்தி கூறுகின்றார்கள் என்பதைப் பாருங்கள்! எவ்வளவு சிறிய ஆத்மாவில் அழிவற்ற பாகம் இருக்கிறது! இது இயற்கையானது. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு உள்ளப்பூர்வமான அன்பை, ஒரு தந்தையின் மீது செலுத்த வேண்டும். இந்த உலகம் எந்த காரியத்திற்கும் பயன்படாது, ஆகையால் இதை புத்தியினால் மறந்து விட வேண்டும்.
2) தனது வாழ்க்கையை வைரம் போன்று ஆக்கிக் கொள்வதற்காக, ஒரு தந்தையிடத்தில் முழுமையிலும், முழுமையாக பலியாகி விட வேண்டும். எனக்கு ஒரு பாபாவைத் தவிர வேறு யாருமில்லை என்ற பாடத்தை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.
வரதானம்:-
சமயத்தின் வேகம் அதிவிரைவாக சதா முன்னேறிக் கொண்டே இருக்கிறது. சமயம் ஒருபொழுதும் நிற்பதில்லை, ஒருவேளை யாராவது அதை நிறுத்த விரும்பினாலும் நிற்காது. சமயமோ படைப்பு, நீங்கள் படைப்பாளர் ஆவீர்கள். ஆகையினால், எப்பேற்பட்ட சூழ்நிலை அதாவது பிரச்சனைகள் என்ற மலை கூட வரட்டும், ஆனாலும், பறக்கக்கூடியவர்கள் ஒருபொழுதும் நிற்கமாட்டார்கள். ஒருவேளை, பறக்கக்கூடிய பொருள் இலக்கை சென்றடை யாமல் இடையில் நின்றுவிட்டால் விபத்து ஏற்பட்டுவிடும். எனவே, குழந்தை களாகிய நீங்களும் கூட தீவிர முயற்சியாளர் ஆகி பறக்கும் கலையில் பறந்துக்கொண்டே இருங்கள், ஒருபொழுதும் களைப்படையவோ மற்றும் நிற்கவோ கூடாது.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!