30 April 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
29 April 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! நீங்கள் பாபாவின் முன்பாக அமர்ந்து அவர் மூலம் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சத்யுக இராஜபதவிக்குத் தகுதியுள்ளவர் ஆவதற்காக அவசியம் தூய்மையாக ஆக வேண்டும்.
கேள்வி: -
பாபாவின் எந்த தொழிலை (வேலை) குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே அறிந்திருக் கிறீர்கள்?
பதில்:-
நம்முடைய தந்தை, தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் சத்குருவாகவும் உள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தந்தை கல்பத்தின் சங்கமயுகத்தில் வருகிறார், பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குவதற்காக. ஓர் ஆதி சனாதன தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக. தந்தை இப்போது குழந்தைகள் நமக்கு மனிதரிலிருந்து தேவதை ஆவதற் கான படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். அவருடைய இந்த தொழிலை குழந்தை களாகிய நம்மைத் தவிர வேறு யாரும் அறிந்து கொள்ளவில்லை.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
கள்ளங்கபடமற்ற தன்மையினால் தனிப்பட்டவர்……..
ஓம் சாந்தி. ஓம் சாந்தி என்பதன் அர்த்தமோ குழந்தைகளுக்கு அடிக்கடி புரிய வைக்கப்பட்டுள்ளது. ஓம் என்றால் நான் ஆத்மா. மேலும் இது எனது சரீரம். சரீரமும் கூட சொல்ல முடியும்-இது எனது ஆத்மா என்று. எப்படி சிவபாபா சொல்கிறார், நீங்கள் என்னுடையவர்கள். குழந்தைகள் சொல்கின்றனர், பாபா, தாங்கள் எங்களுடையவர். அதுபோல் ஆத்மாவும் சொல்கிறது, இது என்னுடைய சரீரம். சரீரம் கூட சொல்லும்-எனது ஆத்மா என்று. இப்போது ஆத்மா அறிந்து கொண்டுள்ளது, நான் அவிநாசி. ஆத்மா இல்லாமல் சரீரத்தினால் எதுவும் செய்ய இயலாது. சரீரமோ உள்ளது, சொல்கின்றனர், எனது ஆத்மாவுக்குக் கஷ்டம் தரக் கூடாது என்று. எனது ஆத்மா பாவாத்மாவா அல்லது புண்ணியாத்மாவா? நீங்கள் அறிவீர்கள், எனது ஆத்மா சத்யுகத்தில் புண்ணியாத்மாவாக இருந்தது. ஆத்மா சுயம் சொல்லும் – நான் சத்யுகத்தில் சதோபிரதானமாக அல்லது உண்மையான தங்கமாக இருந்தேன். இது ஓர் உதாரணமாக தங்கம் என்று சொல்லப் படுகின்றது. நமது ஆத்மா பவித்திரமாக இருந்தது, தங்கயுகத்தில் (சத்யுகம்) இருந்தது. இப்போது சொல்கின்றனர், நான் தூய்மையற்று இருக்கிறேன். உலகத்தினருக்கு இது தெரியாது. உங்களுக்கோ ஸ்ரீமத் கிடைக்கிறது. நீங்கள் அறிவீர்கள், நமது ஆத்மா சதோபிரதானமாக இருந்தது, இப்போது தமோபிரதானமாக ஆகியுள்ளது. ஒவ்வொரு பொருளும் இதுபோல் ஆகின்றது. குழந்தை, இளைஞன், முதியவர்…….. ஒவ்வொரு பொருளும் புதியதில் இருந்து பழையதாக நிச்சயமாக ஆகின்றது. உலகமும் கூட முதலில் சத்யுகத்தில் சதோபிரதானமாக இருந்தது. பிறகு தமோபிர தான மாக இரும்பு யுகத்தில் (க-யுகம்) உள்ளது. அதனால் தான் துக்கத்தில் உள்ளது. சதோபிரதானம் என்றால் சீர்திருந்தியது, தமோபிரதானம் என்றால் சீர்கெட்டுப் போனது. பாடலிலும் சொல்கின்றனர் – சீர்கெட்டுப் போனவர்களை சீர்திருத்துபவர்…… பழைய உலகம் கெட்டுப் போய் உள்ளது. ஏனென்றால் இராவண இராஜ்யம், அனைவரும் தூய்மை இழந்துள்ளனர். சத்யுகத்தில் அனைவரும் தூய்மையாக இருந்தனர். அது புதிய நிர்விகாரி உலகம் எனச் சொல்லப்படுகின்றது. இது பழைய விகாரி உலகம். இப்போது கலியுகம் அயர்ன் ஏஜ்டு உலகமாக உள்ளது. இந்த அனைத்து விஷயங் களும் எந்த ஒரு பள்ளிக் கூடத்திலோ கல்லூரியிலோ கற்றுத் தரப் படுவதில்லை. பகவான் வந்து கற்றுத் தருகிறார், மேலும் இராஜயோகம் கற்பிக்கிறார். கீதையில் எழுதப்பட்டுள்ளது, மன்மனாபவ – ஸ்ரீமத் பகவத் கீதா. ஸ்ரீமத் என்றால் சிரேஷ்ட வழிமுறை. சிரேஷ்டத்திலும் சிரேஷ்டமான, உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான். அவரது மிகச் சரியான பெயர் சிவன் என்பதாகும். ருத்ர ஜெயந்தி அல்லது ருத்ர இராத்திரி என்று ஒருபோதும் கேட்டிருக்கமாட்டீர்கள். சிவராத்திரி என்று சொல்கின்றனர். சிவனோ நிராகார் (கண்ணால் பார்க்கக்கூடிய உருவம் இல்லாதவர்). இப்போது நிராகாரருக்கு ஜெயந்தி எப்படிக் கொண்டாடுவது? கிருஷ்ணரின் ஜெயந்தி என்பதோ சரி தான். இன்னாரின் குழந்தை, அவருக்கு தேதி, கிழமை இன்னதெனச் சொல்கின்றனர். சிவனைப் பற்றியோ யாரும் அறிந்திருக்கவில்லை – எப்போது பிறந்தார் என்று. இதையோ அறிந்துக் கொள்ள வேண்டும் இல்லையா? இப்போது உங்களுக்குப் புரிதல் (ஞானம்) கிடைத்துள்ளது, கிருஷ்ணர் சத்யுக ஆரம்பத்தில் எப்படி ஜென்மம் எடுத்தார் என்று. நீங்கள் சொல்வீர்கள், அதுவோ 5000 ஆண்டுகள் ஆகிறது என்று. அவர்களும் சொல்கின்றனர், கிறிஸ்துவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது. இஸ்லாமியருக்கு முன் சந்திரவம்சி, அவர்களுக்கு முன் சூரியவம்சி இருந்தனர். சாஸ்திரங்களில் சத்யுகத்திற்கு இலட்சக் கணக்கான வருடங் கள் கொடுத்துள்ளனர். கீதை தான் முக்கியமானதாகும். கீதை மூலம் தான் தேவி-தேவதா தர்மம் ஸ்தாபனை ஆயிற்று. அது சத்யுக-திரேதா வரை நடந்தது, அதாவது கீதை சாஸ்திரத்தின் மூலம் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனையை பரமபிதா பரமாத்மா செய்தார். பிறகோ அரைக் கல்பத்திற்கு எந்த ஒரு சாஸ்திரமும் கிடையாது, எந்தவொரு தர்ம ஸ்தாபகரும் கிடையாது. பாபா வந்து பிராமணர்களை தேவதா-சத்திரியராக ஆக்கினார். அதாவது பாபா 3 தர்மங்களை ஸ்தாபனை செய்கிறார். இது லீப் (சங்கமயுக பிராமண) தர்மம். இதன் ஆயுள் சிறியதாக உள்ளது. ஆக, சர்வ சாஸ்திரங்களின் தாயாகிய கீதையை பகவான் பாடியுள்ளார். பாபா புனர்ஜென்மத்தில் வருவதில்லை. ஜென்மம் உள்ளது, ஆனால் பாபா சொல்கிறார், நான் கர்பத்தில் வருவ தில்லை. எனக்கு வளர்ப்பு என்பது கிடையாது. சத்யுகத்தில் கூட குழந்தைகள் கர்ப மாளிகையில் இருப்பார்கள். இராவண இராஜ்யத்தில் கர்ப ஜெயிலில் வர வேண்டியுள்ளது. கர்பத்தில் உறுதி செய்கின்றனர், நான் பாவம் செய்யமாட்டேன் என்று. ஆனால் இதுவே பாவ ஆத்மாக்களின் உலகம். வெளியில் வந்ததுமே மீண்டும் பாவம் செய்யத் தொடங்கி விடுகின்றனர். முதலில் இருந்தது போலவே ஆகிவிடுகின்றனர்……. இங்கேயும் அதிக உறுதி மொழிகள் எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள் பாவம் செய்யமாட்டோம். ஒருவர் மற்றவர் மீது காமக் கட்டாரியை செலுத்தமாட்டோம். ஏனென்றால் இந்த விகாரம் முதல்- இடை-கடை முழுவதும் துக்கம் தருவது. சத்யுகத்தில் விஷம் (விகாரம்) கிடையாது. அதனால் மனிதர்கள் அங்கே முதல்-இடை-கடை வரை துக்கம் அனுபவிப் பதில்லை. ஏனெனில் இராம இராஜ்யம். அதனுடைய ஸ்தாபனையை பாபா இப்போது மீண்டும் செய்துக் கொண்டிருக்கிறார். சங்கமயுகத்தில் தான் ஸ்தாபனை நடைபெறும் இல்லையா? தர்ம ஸ்தாபனை செய்வதற்காக வருகிறவர்கள் யாருமே பாவம் செய்யமாட்டார்கள். பாதி சமயம் புண்ணிய ஆத்மா, பிறகு பாதி சமயத்திற்குப் பின் பாவாத்மா ஆகின்றனர். நீங்கள் சத்யுக-திரேதாவில் புண்ணியாத்மாவாக இருக்கிறீர்கள். அதன் பிறகு பாவாத்மா ஆகிறீர்கள். சதோபிரதான ஆத்மா மேலிருந்து வரும்போது தண்டனை அனுபவிப் பதில்லை. கிறிஸ்துவின் ஆத்மா தர்ம ஸ்தாபனை செய்வதற்காக வந்தது என்றால் அதற்கு தண்டனை எதுவும் கிடைக்காது. சொல் கின்றனர் – கிறிஸ்துவை சிலுவையில் ஏற்றினர், ஆனால் அவருடைய ஆத்மா எந்தவொரு விகர்மமும் செய்யவில்லை. அவர் யாருடைய சரீரத்தில் பிரவேசமாகி இருக்கிறாரோ, அவருக்கு துக்கம் ஏற்படுகின்றது. அவர் சகித்துக் கொள்கிறார். எப்படி இவருக்குள் சிவபாபா வந்திருக்கிறார், அவரோ சதோபிரதானமாக இருப்பவர். எந்தவொரு துக்கமோ கஷ்டமோ இவருடைய (பிரம்மா) ஆத்மாவுக்கு இருக்கும், சிவபாபாவுக்கு இருக்காது. அவரோ சதா சுகம்-சாந்தியில் இருக்கிறார். சதா சதோபிரதானமாக இருக்கிறார். ஆனால் வருவதோ பழைய சரீரத்தில் இல்லையா? அதேபோல் கிறிஸ்துவின் ஆத்மா துக்கத்தை அனுபவிக்க முடியாது. ஏனென்றால் சதோ-ரஜோ-தமோவில் வருகிறது. புதுப்புது ஆத்மாக்கள் வரத்தான் செய் கின்றன இல்லையா? அவர்கள் முதலில் அவசியம் சுகம் அனுபவிக்க வேண்டியிருக்கும் துக்கம் அனுபவிக்க முடியாது. சட்டம் அதுபோல் சொல்லவில்லை. இவருக்குள் பாபா அமர்ந்துள்ளார், எந்தவொரு கஷ்டமும் இவருக்கு (தாதாவுக்கு) ஏற்படுகிறதே தவிர சிவபாபாவுக்கு அல்ல. ஆனால் இவ்விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். வேறு யாருக்கும் இது பற்றித் தெரியாது.
இந்த அனைத்து இரகசியங்களையும் இப்போது பாபா வந்துப் புரிய வைக்கிறார். இந்த சகஜ இராஜ யோகத்தினால் தான் ஸ்தாபனை நடைபெற்றது. பிறகு பக்தி மார்க்கத் தில் இதே விஷயங்கள் பாடப்படுகின்றன. இந்த சங்கமயுகத்தில் என்னென்ன நடை பெறுகிறதோ, அது பிறகு பாடப்படு கின்றது. பக்தி மார்க்கம் ஆரம்பமாகிவிட்டால் பிறகு சிவபாபாவுக்குப் பூஜை நடைபெறுகின்றது. முதன்-முதலில் பக்தி யார் செய்கிறார்கள்? அங்கே இலட்சுமி-நாரயணர் இராஜ்யம் செய்த போது அவர்கள் பூஜைக்குரியவர்களாக இருந்தனர். பிறகு வாம (விகார) மார்க்கத்தில் வந்துவிடுகின்றனர் என்றால் பிறகு பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரி ஆகிவிடுகின்றனர். பாபா புரிய வைக்கிறார், குழந்தைகளாகிய உங்களுக்கு முதன்-முதலில் புத்தியில் வர வேண்டும், நிராகார் பரமபிதா பரமாத்மா இவர் மூலமாக நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். இதுபோல் முழு உலகத்திலும் வேறு எந்த இடத்திலும் இப்படிப் புரிய வைப்பது நடைபெற முடியாது. பாபா தான் வந்து பாரதத்திற்கு மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தி தருகிறார். திரிமூர்த்திக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது – தெய்விக உலக சாம்ராஜ்யம் உங்களுக்கு இறைத் தந்தையினால் கிடைக்கும் பிறப்புரிமை சிவபாபா வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு சொர்க்கத்தின் இராஜபதவியின் ஆஸ்தியைத் தந்துக் கொண்டிருக்கிறார். அதற்கு தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார் என்பதை நாம் தூய்மை இழந்துவிட்டிருந்தோம் அல்லவா? பாவனமாகிவிடுவோம், பிறகு இந்த சரீரம் இருக்காது. இராவணனால் நாம் தூய்மையற்றவராகியிருக்கிறோம். பிறகு பரமபிதா பரமாத்மா தூய்மையாக்கி தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆக்குகிறார். அவர் தான் ஞானக்கடல் மற்றும் பதீத பாவனர் ஆவார். நிராகார் பாபா நமக்குப் படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார். அனைவருமோ ஒன்றாகச் சேர்ந்து படிக்க முடியாது. பாபாவுக்கு முன்பாக நீங்கள் கொஞ்சம் பேர் அமர்ந்திருக் கிறீர்கள். மற்றக் குழந்தைகள் அனைவரும் அறிவார்கள் – இப்போது சிவபாபா பிரம்மாவின் உடலில் அமர்ந்து சிருஷ்டியின் முதல்- இடை-கடை பற்றிய ஞானத்தைச் சொல்லிக் கொண்டிருப் பார். அந்த முரளி எழுதப்பட்டு நமக்கு வரும். மற்ற சத்சங்கங்களில் இதுபோல் புரிய வைக்க மாட்டார்கள். தற்போது டேப் பிளேயர் வெளிப்பட்டுள்ளன. அதனால் ஒ-நாடாவில் நிரப்பி அனுப்பிவிடு கின்றனர். அவர்கள் சொல்வார்கள், இன்ன பெயருள்ள குரு பேசுகிறார் என்று. அவர்களின் புத்தியில் மனிதர்கள் தான் உள்ளனர். இங்கோ அந்த விஷயம் கிடையாது. இவரோ நிராகார் தந்தை ஞானம் நிறைந்தவர். மனிதர் ஞானம் நிறைந்தவர்கள் எனச் சொல்லப்படு வதில்லை. பாடுகின்றனர் – இறைவனாகிய தந்தை ஞானம் நிறைந்தவர், அமைதி நிறைந்தவர், ஆனந்தம் நிறைந்தவர் எனும்போது அவருடைய ஆஸ்தியும் கூட வேண்டும் தானே? அவரிடம் என்ன குணங்கள் உள்ளனவோ, அவை குழந்தை களுக்குக் கிடைக்க வேண்டும். இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன. குணங்களை தாரணை செய்து நாம் இதுபோன்ற இலட்சுமி-நாராயணராக ஆகிக் கொண்டிருக்கிறோம். அனைவருமோ இராஜா-ராணி ஆகமாட்டார்கள். இராஜா-ராணி மந்திரி…….. எனப் பாடப்படுகின்றது. அங்கே மந்திரியும் கூட இருப்பதில்லை. மகாராஜா-மகாராணியிடம் சக்தி உள்ளது. எப்போது விகாரி ஆகின்றனரோ, அப்போது மந்திரி முதலானோர் இருப்பார்கள். முன்பு மந்திரி முதலானவர்கள் இருந்ததில்லை. அங்கோ ஒரு இராஜா- ராணியின் இராஜ்யம் நடைபெற்றது. அவர்களுக்கு மந்திரியின் அவசியம் என்ன உள்ளது? அவர்களே எஜமானராக இருக்கும்போது அறிவுரை பெறுவதற்கான தேவை கிடையாது. இது சரித்திர-பூகோளமாகும். ஆனால் முதல்-முதலிலோ அமரும்போதும் எழும்போதும் இது புத்தியில் வர வேண்டும் – நமக்கு பாபா படிப்பு சொல்லித் தருகிறார், யோகம் கற்பிக்கிறார். நினைவு யாத்திரை யில் இருக்க வேண்டும். இப்போது நாடகம் முடிவடை கின்றது. நாம் முற்றிலும் தூய்மை இழந்து விட்டோம். ஏனென்றால் விகாரத்தில் செல் கின்றனர். அதனால் பாவாத்மா எனச் சொல்லப் படுகின்றனர். சத்யுகத்தில் பாவாத்மாக்கள் இருக்கமாட்டார்கள். அங்கே இருப்பவர்கள் புண்ணியாத் மாக்கள். அது பிராலப்தம் (பலன்). அதற்காக இப்போது புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடையது நினைவு யாத்திரை, அதை பாரதத்தின் யோகம் எனச் சொல்கின்றனர். ஆனால் அர்த்தத்தையோ புரிந்துக் கொள்ளவில்லை. யோகம் என்றால் நினைவு. இதன் மூலம் விகர்மங்கள் விநாச மாகின்றன. பிறகு அவர்கள் சரீரத்தை விட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். அது இனிமையான வீடு எனச் சொல்லப்படுகின்றது. ஆத்மா சொல்கிறது, நான் அந்த சாந்திதாம நிவாசி. நான் அங்கிருந்து அசரீரியாக வந்தேன். இங்கே பார்ட்டை நடிப்பதற்காக சரீரத்தை எடுத்துள்ளேன். இதுவும் புரிய வைக்கப்பட்டுள்ளது – மாயா எனச் சொல்லப்படுவது 5 விகாரங்கள். இவை ஐந்து பூதங்கள். காமம் என்ற பூதம், கோபம் என்ற பூதம், நம்பர் ஒன் தேக-அபிமானம் என்ற பூதம். பாபா புரிய வைக்கிறார் – சத்யுகத்தில் இந்த விகாரங்கள் இருப்பதில்லை. அது நிர்விகாரி உலகம் எனச் சொல்லப்படுகின்றது. விகாரி உலகத்தை நிர்விகாரி ஆக்குவது என்பதோ தந்தையின் காரியம். அவர் தான் சர்வசக்திவான் ஞானக் கடல், பதீத-பாவனர் எனச் சொல்லப்படுகிறார். இச்சமயம் அனைவரும் பிரஷ்டாச் சாரத்தினால் (விகாரம்) பிறவி எடுக்கின்றனர். சத்யுகத்தில் தான் விகாரமற்ற உலகம் இருக்கும். பாபா சொல்கிறார், இப்போது நீங்கள் விகாரியிலிருந்து நிர்விகாரி யாக ஆக வேண்டும். இந்த விகாரம் இல்லாமல் குழந்தைகள் எப்படிப் பிறக்கும் எனக் கேட் கின்றனர். பாபா புரிய வைக்கிறார், இப்போது இது உங்களுக்கு இறுதிப் பிறவி. மரண உலகமே அழிந்துவிடப் போகிறது. இதன் பிறகு விகாரி மனிதர்கள் இருக்கமாட்டார்கள். அதனால் பாபா விடம் தூய்மை ஆவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சொல்கின்றனர், பாபா, நாங்கள் உங்களிடமிருந்து ஆஸ்தியை அவசியம் பெற்றுக் கொள்வோம். அந்த மனிதர்கள் பொய்யான உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். யாருடைய பெயரில் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனரோ, அந்தக் கடவுளைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அவர் எப்போது எப்படி வருகிறார், அவருடைய பெயர்-வடிவம்-தேசம்-காலம் என்ன – எதுவுமே தெரியாது. பாபா வந்து தமது அறிமுகம் கொடுக்கிறார். இப்போது உங்களுக்கு அறிமுகம் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. உலகம் முழுவதிலும் யாருமே இறைவனாகிய தந்தையைப் பற்றி அறிந்திருக்க வில்லை. அழைக்கவும் செய்கின்றனர், பூஜையும் செய்கின்றனர். ஆனால் அவரது தொழில் (கடமை) பற்றித் தெரியாது. இப்போது நீங்கள் அறிவீர்கள் – பரமபிதா பரமாத்மா நம்முடைய தந்தை. ஆசிரியர் மற்றும் சத்குருவாக உள்ளார். பாபா தாமே இந்த அறிமுகம் கொடுத்திருக்கிறார் – அதாவது நான் உங்களுடைய தந்தை. நான் இந்த சரீரத்தில் பிரவேசமாகி இருக்கிறேன். பிரஜாபிதா பிரம்மா மூலம் ஸ்தாபனை நடைபெறுகின்றது. யாருடைய ஸ்தாபனை? பிராமணர் களின் ஸ்தாபனை. பிறகு பிராமணர்கள் நீங்கள் படித்து தேவதை ஆகிறீர்கள். நான் வந்து உங்களை சூத்திரரி-ருந்து பிராமணன் ஆக்குகிறேன். பாபா சொல்கிறார், நான் வருவதே கல்பத்தின் சங்கமயுகத்தில். கல்பம் என்பது 5000 ஆண்டுகள் கொண்டது. இந்த சிருஷ்டிச் சக்கரமோ சுற்றிக் கொண்டே உள்ளது. நான் பழைய உலகத்தைப் புதியதாக ஆக்குவதற்காக வருகிறேன். பழைய தர்மங்களை விநாசம் செய்வதற்காக வருகிறேன், மீண்டும் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்கிறேன். குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருகிறேன். பிறகு நீங்கள் படித்து 21 பிறவிகளுக்கு மனிதரி-ருந்து தேவதை ஆகிவிடுகிறீர்கள். தேவதைகளோ, சூரியவம்சி, சந்திரவம்சி, மற்றும் பிரஜைகள் அனைவருமே தான். மற்றபடி புருஷார்த்தத்தின் அனுசாரம் உயர்ந்த பதவி பெறுவார்கள். இப்போது யார் எவ்வளவு புருஷார்த்தம் செய்கிறார்களோ, அது தான் கல்ப-கல்பமாக நடைபெறும். கல்ப-கல்பமாக இதுபோல் புருஷார்த்தம் செய்கிறோம், அதற்கேற்ப அங்கு சென்று பதவி பெறுவோம் எனப் புரிந்துக் கொள்கின்றனர். இது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது, அதாவது நமக்கு நிராகார் பகவான் கற்பிக்கிறார். அவரை நினைவு செய்வதன் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும். நினைவு செய்யாமல் விகர்மங்கள் விநாசமாக முடியாது. மனிதர்களுக்கு இதுவும் கூடத் தெரியாது-நாம் எத்தனை ஜென்மங்கள் எடுக்கிறோம்? சாஸ்திரங்களில் சிலர் பொய்யை எழுதி வைத்து விட்டுள்ளனர் – 84 லட்சம் பிறவிகள் என்பதாக. இது கடைசிப் பிறவி. பிறகு நாம் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். முதலில் மூலவதனத்திற்குச் சென்றுவிட்டுப் பிறகு சொர்க்கத்திற்கு வருவீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக் கண்டெடுக்கப்பட்ட செல்லமானக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. பாபாவிடம் செய்து கொண்டுள்ள பவித்திரமாவதற்கான வாக்குறுதியில் உறுதியாக இருக்க வேண்டும். காமம், கோபம் முதலிய பூதங்கள் மீது அவசியம் வெற்றி பெற வேண்டும்.
2. நடமாடும்போதும் சுற்றி வரும்போதும் ஒவ்வொரு காரியம் செய்யும்போதும் பாடம் கற்பிக்கும் பாபாவை நினைவில் வைக்க வேண்டும். இப்போது நாடகம் முடிவடைந்து கொண்டிருக்கிறது. அதனால் இந்த கடைசிப் பிறவியில் அவசியம் பவித்திரமாக வேண்டும்.
வரதானம்:-
சதா ஒரு தந்தையிடம் ஈடுபாடு, தந்தையின் காரியத்தில் அந்த அளவிற்கு மூழ்கி யிருக்க வேண்டும் அதாவது உலகின் எந்த ஒரு பொருள் அல்லது மனிதன் இருக் கின்றனர் என்ற அனுபவமே இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு ஒரே ஈடுபாடு, ஒரே நம்பிக்கை, ஏக்ரஸ் ஸ்திதியில் இருக்கக் கூடிய குழந்தைகள் சதா தடையற்றவர்களாக ஆகி முன்னேறும் கலையின் அனுபவம் செய்கின்றனர். அவர்கள் காரணத்தை மாற்றி நிவாரண ரூபமாக ஆக்கி விடுவர். காரணத்தைப் பார்த்து பலவீனமாக ஆகமாட்டார்கள், நிவாரண சொரூபமாக ஆகிவிடுவர்.
சுலோகன்:-
➤ Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!