28 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris
27 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! தந்தையின் மூலம் நீங்கள் அடைந்திருக்கும் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் புத்தியில் வைத்திருக்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சுயதரிசன சக்கரதாரி ஆவீர்கள்.
கேள்வி: -
ஆத்மாவை தூய்மையாக்குவதற்காக ஆன்மீகத் தந்தை எந்த ஒரு ஊசி (இன்ஜக்சன்) போடுகின்றார்?
பதில்:-
மன்மனாபவ என்ற ஊசி. இந்த ஊசி ஆன்மீகத் தந்தையைத் தவிர வேறு யாரும் போட முடியாது. தந்தை கூறுகின்றார் – இனிய குழந்தைகளே! நீங்கள் என்னை நினைவு செய்தால் போதும், நினைவின் மூலம் தான் ஆத்மா தூய்மை ஆகும். இதற்கு சமஸ்கிருதம் போன்றவைகள் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தந்தை ஹிந்தியில் எளிமையான சொற்களில் கூறுகின்றார். ஆன்மீகத் தந்தை நம்மை தூய்மை ஆக்குவதற்கான யுக்தி கூறிக் கொண்டிருக்கின்றார் என்ற நம்பிக்கை ஆத்மாவிற்கு எப்போது ஏற்பட்டு விடுகிறதோ அப்போது விகாரங்களை விட ஆரம்பித்து விடும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
ஓம் சாந்தி. ஓம்சாந்தி என்பதன் பொருளை குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆத்மா தனது அறிமுகத்தை கொடுக்கிறது. எனது சொரூபம் அமைதியாகும், மேலும் நான் இருக்கக் கூடிய இருப்பிடம் சாந்திதாமம் ஆகும், அதை பரந்தாமம், நிர்வாணதாம் என்றும் கூறப்படு கிறது. தேக அபிமானத்தை விடுத்து ஆத்ம அபிமானியாக ஆகுங்கள், தந்தையை நினைவு செய்யுங் கள் என்று தந்தையும் கூறுகின்றார். அவர் பதீத பாவன் ஆவார். நான் ஆத்மா, இங்கு நடிப்பு நடிப்பதற்காக வந்திருக்கிறேன், இப்போது நாடகம் முடிவடைகிறது, திரும்பிச் செல்ல வேண்டும் என்பதை யாரும் அறியவில்லை. அதனால் தான் என்னை நினைவு செய்யுங்கள், உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும் என்று கூறுகின்றார். இதைத் தான் (சமஸ்கிருதத்தில் சுருக்கமாக) மன்மனாபவ என்று கூறப்படுகிறது. தந்தை சமஸ்கிருதத்தில் கூறவில்லை. தந்தை இந்த ஹிந்தி மொழியில் தான் புரிய வைக்கின்றார். ஒரே ஒரு ஹிந்தி மொழி மட்டுமே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. உண்மையில் தந்தையும் ஹிந்தி மொழியில் தான் புரிய வைக்கின்றார். ஆனால் இந்த நேரத்தில் பல தர்மங்கள், மடங்கள், சாதிகள் இருக்கின்ற காரணத் தினால் மொழிகளும் பலவிதமாக ஆகி விட்டன. இங்கு எத்தனை மொழிகள் இருக்கிறதோ அத்தனை மொழிகள் சத்யுகத்தில் இருக்காது. குஜராத்தில் இருப்பவர்களின் மொழி தனி. யார், எந்த ஊரில் இருக்கிறார்களோ, அவர்கள் அங்கிருக்கும் மொழியை அறிந்திருக்கின்றனர். பல மனிதர்கள் உள்ளனர், பல மொழிகள் உள்ளன. சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம், ஒரே ஒரு மொழி இருந்தது. இப்போது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் இருக்கிறது. இது எந்த சாஸ்திரத்திலும் கிடையாது. இந்த ஞானம் அடங்கிய சாஸ்திரம் எதுவும் கிடையாது. கல்பத்தின் ஆயுளும் எழுதப்படவில்லை, யாருக்கும் தெரியாது. உலகம் ஒன்று தான். உலகச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. புதியதி-ருந்து பழையதாக, பழையதி-ருந்து புதியதாக ஆகிறது. இது தான் சுயதரிசன சக்கரம் என்று கூறப்படுகிறது. யாரிடத்தில் இந்த சக்கரத் தின் ஞானம் இருக்கிறதோ அவர்கள் சுயதரிசன சக்கரதாரிகள் என்று கூறப்படுகின்றனர். ஆத்மா விடம் ஞானம் இருக்கிறது. இந்த சிருஷ்டிச் சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? இதையே அவர்கள் கிருஷ்ணருக்கு, விஷ்ணுவிற்கு சுயதரிசன சக்கரம் கொடுத்து விட்டனர். இப்போது தந்தை புரிய வைக்கின்றார் – அவர்களிடத்தில் ஞானமே கிடையாது. சிருஷ்டியின் முதல், இடை, கடை ஞானத்தை தந்தை தான் கொடுக்கின்றார். இது சுயதரிசன சக்கரமாகும். மற்றபடி கழுத்தை துண்டிக்கும் இம்சைக்கான விசயம் கிடையாது. இவ்வாறு பொய்யாக எழுதி வைத்து விட்டனர். இந்த ஞானம் தந்தையைத் தவிர வேறு எந்த மனிதனும் கொடுக்க முடியாது. மனிதர்களை ஒருபோதும் பகவான் என்று கூற முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரும் தேவதைகள் என்று தான் கூறப்படுகின்றனர். தந்தையின் மகிமை எதுவோ அது தேவதைகளுக்கும் இருக்க முடியாது. தந்தை இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். தந்தையின் மகிமை எதுவோ அதுவே குழந்தைகளின் மகிமை என்றும் கூற முடியாது. குழந்தைகள் பிறப்பு, இறப்பில் வருகிறீர்கள். தந்தை பிறப்பு, இறப்பில் வருவது கிடையாது. குழந்தைகள் தந்தையை நினைவு செய்கின்றனர். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான், அவர் சதா தூய்மையாக இருக்கின்றார். குழந்தைகள் தூய்மையாகி பிறகு தூய்மை இல்லாமல் ஆகின்றனர். தந்தையோ எப்போதும் தூய்மையாகத் தான் இருக்கின்றார். தந்தையின் ஆஸ்தியும் குழந்தைகளுக்கு அவசியம் வேண்டும். ஒன்று முக்தி வேண்டும், மற்றொன்று ஜீவன்முக்தி வேண்டும். சாந்திதாமம் முக்தி என்றும், சுகதாமம் ஜீவன்முக்தி என்றும் கூறப்படுகிறது. முக்தி அனைவருக்கும் கிடைக்கிறது. யார் படிக்கிறார்களோ அவர்களுக்கு ஜீவன்முக்தி கிடைக்கும். பாரதத்தில் ஜீவன்முக்தி இருந்தது, மற்ற அனைவரும் முக்திதாமத்தில் இருந்தனர். சத்யுகத்தில் ஒரே ஒரு பாரத கண்டம் மட்டுமே இருந்தது. லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. அனைத்தையும் விட லெட்சுமி நாராயணன் கோயில் தான் அதிகம் உருவாக்குகின்றனர் என்பதை பாபா புரிய வைத்திருக்கின்றார். பிர்லா கோயில் உருவாக்குகின்றார் எனில் லெட்சுமி நாராயணனுக்கு இராஜ்யம் எங்கிருந்து கிடைத்தது? எவ்வளவு காலம் இராஜ்யம் செய்தனர்? என்பது அவருக்கு தெரியாது. பிறகு எங்கு சென்று விட்டது? என்று எதுவும் தெரியாது. ஆக பொம்மை பூஜை ஆகிவிடுகிறது அல்லவா! இது தான் பக்தி என்று கூறப்படுகிறது. நீங்களே பூஜைக்குரியவர்களாகவும், நீங்களே பூஜாரிகளாகவும் ஆகிறீர்கள். பூஜைக்குரிய நிலை மற்றும் பூஜாரி நிலை இரண்டிற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளன. அதற்கும் பொருள் இருக்கும் அல்லவா! யார் விகாரிகளாக இருக்கிறார்களோ அவர்கள் தான் பதீதமானவர் கள் என்று கூறப்படுகின்றனர். கோபப்படுபவர்களை பதீதம் என்று கூறுவது கிடையாது. யார் விகாரத்தில் செல்கிறார்களோ அவர்கள் தான் பதீதமானவர்கள் என்று கூறப்படுகின்றனர். இந்த நேரத்தில் உங்களுக்கு ஞான அமிர்தம் கிடைக்கிறது. ஞானக் கடலானவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இந்த பாரதம் தான் சதோ பிரதானமாக, உயர்ந்ததிலும் உயர்ந்ததாக இருந்தது, இப்போது தமோ பிரதானமாக இருக்கிறது, இது உங்களது புத்தியில் இருக்கிறது என்பதை தந்தை தான் புரிய வைத்திருக்கின்றார். இங்கு எந்த இராஜ்யமும் கிடையாது. இங்கு பிரஜைகளின் மீது பிரஜைகளின் இராஜ்யமாகும். சத்யுகத்தில் மிகவும் குறைவானவர்கள் தான் இருப்பார்கள், இப்போது எத்தனை பேர் இருக்கின்றனர்! விநாசத்திற்கான ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறது. டெல்- (பரிஸ்தானாக) தேவதைகள் வாழும் இடமாக ஆகியே தீர வேண்டும். ஆனால் இதை யாரும் அறியவில்லை. இது புதுடெல்- என்று அவர்கள் நினைக்கின்றனர். இந்த பழைய உலகை மாற்றக் கூடியவர் யார்? என்பது யாருக்கும் தெரியாது. எந்த சாஸ்திரத்திலும் கிடையாது. புரிய வைக்கக் கூடியவர் ஒரே ஒரு தந்தை ஆவார். இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புது உலகிற்கான ஏற்பாடு செய்து கொண்டிருக் கிறீர்கள். சோழியி-ருந்து வைரம் போன்று ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். பாரதம் எவ்வளவு செல்வ மிக்கதாக இருந்தது! வேறு எந்த தர்மமும் கிடையாது. இப்போது பல தர்மங்கள் உள்ளன. இப்போது கருணை உள்ளமுடைய தந்தையை நினைவு செய்கின்றனர். பாரதம் சுகதாமமாக இருந்தது என்பதை மறந்து விட்டனர். இப்போது பாரதத்தின் நிலை எப்படி இருக்கிறது! இல்லையெனில் பாரதம் சொர்க்கமாக இருந்திருக்கும்! தந்தையின் ஜென்மபூமி அல்லவா! ஆக நாடகப்படி அவருக்கு கருணை ஏற்பட்டு விடுகிறது. பாரதம் பழமையான தேசமாகும். கிறிஸ்து பிறப்பதற்கு 3 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு பாரதம் சொர்க்கமாக இருந்தது, வேறு எந்த தர்மமும் கிடையாது என்று கூறவும் செய்கின்றனர். இப்போது இந்த பாரதம் தலைகீழாக இருக்கிறது. நமது தேசம் பாரதம் அனைத்தை யும் விட உயர்ந்ததாக இருந்தது என்று பாடுகின்றனர். பெயரே சொர்க்கம் என்று இருந்தது. பாரதத்தின் மகிமையும் யாருக்கும் தெரியாது. தந்தை வந்து தான் பாரதத்தின் கதையை கூறுகின்றார். பாரதத்தின் கதை என்றால் உலகத்தின் கதையாகும், இது சத்திய நாராயணனின் கதை என்று கூறப்படுகிறது. முழு 5 ஆயிரம் ஆண்டிற்கு முன்பு பாரதத்தில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் இருந்தது, அவர்களது சிலைகளும் இருக்கின்றன என்பதை தந்தை தான் அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆனால் அவர்களுக்கு இந்த இராஜ்யம் எப்படி கிடைத்தது? சத்யுகத் திற்கு முன்பு என்ன இருந்தது? சங்கமத்திற்கு முன்பு என்ன இருந்தது? க-யுகம். இது சங்கமயுகமாகும். இதில் தான் தந்தை வர வேண்டியிருக்கிறது. ஏனெனில் பழைய உலகை புதிதாக ஆக்க வேண்டும் என்பதற்காக, பதீத உலகை பாவனம் ஆக்குவதற்காக நான் வர வேண்டியிருக் கிறது. பிறகு என்னை சர்வவியாபி என்று கூறிவிட்டீர்கள். யுகத்திற்கு யுகம் வருகின்றார் என்று கூறியதால் மனிதர்கள் குழப்பமடைந்து விட்டனர். சங்கமயுகத்தை நீங்கள் மட்டுமே அறிவீர்கள். நீங்கள் யார்? என்பதை பலகையில் எழுதியிருக்கிறீர்கள் – பிரஜாபிதா பிரம்மா குமார், குமாரிகள் என்று. பிரம்மாவின் தந்தை யார்? சிவன், உயர்ந்ததிலும் உயர்ந்தவர். இரண்டாவது பிரம்மா, பிறகு பிரம்மாவின் மூலம் படைப்புகள் படைக்கப்படுகின்றனர். பிரஜாபிதா என்று அவசியம் பிரம்மா தான் கூறப்படுகின்றார். சிவனை பிரஜாபிதா என்று கூறுவது கிடையாது. அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையானவர் நிராகாரமான சிவன் ஆவார். பிறகு இங்கு வந்து பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் தத்தெடுக்கின்றார். நான் இவரிடத்தில் பிரவேசமாகியிருக்கிறேன் என்று தந்தை புரிய வைத்திருக்கின்றார். அவர் மூலமாக நீங்கள் வாய்வழி பிராமணர்களாக ஆகியிருக் கிறீர்கள். பிரம்மாவின் மூலம் தான் உங்களை பிராமணர்களாக ஆக்கி பிறகு தேவதைகளாக ஆக்குகிறேன். இப்போது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள். பிரம்மா யாருடைய குழந்தை? பிரம்மாவின் தந்தைக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா? அவர் நிராகாரமான தந்தை சிவன். அவர் வந்து இவரிடத்தில் பிரவேசம் செய்து தத்தெடுக்கின்றார், வாய் வழி வம்சத் தினர்களை உருவாக்குகின்றார். நான் இவரது பல பிறவிகளின் கடைசியில் பிரவேசம் செய்கிறேன் என்று தந்தை கூறுகின்றார். இவர் என்னுடையவராக ஆகிவிடுகின்றார், சந்நியாசம் செய்கிறார். எதை சந்நியாசம் செய்கிறார்? 5 விகாரங்களை. வீடு வாசலை விட வேண்டிய அவசியமில்லை. இல்லற மார்கத்தில் இருந்து கொண்டே தூய்மையாக இருக்க வேண்டும். என் ஒருவனை நினைவு செய்தால் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். இது தான் யோகா, இதன் மூலம் கறைகள் நீங்கி விடுகிறது. மேலும் நீங்கள் சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள். பக்தியில் எவ்வளவு தான் கங்கையில் குளித்தாலும், ஜபம், தவம் செய்தாலும் அவசியம் கீழே இறங்கியே ஆக வேண்டும். சதோ பிரதானமாக இருந்தீர்கள், இப்போது தமோ பிரதானமாக இருக்கிறீர்கள். மீண்டும் சதோ பிரதானமாக எப்படி ஆவீர்கள்? தந்தையைத் தவிர வேறு யாரும் வழி காண்பிக்க முடியாது. தந்தை முற்றிலும் எளிய முறையில் கூறுகின்றார் – என் ஒருவனை நினைவு செய்யுங்கள். இவர் ஆத்மாக்களிடத்தில் பேசுகின்றார். எந்த குஜராத்தியிடமோ அல்லது சிந்திக்காரர்களிடமோ பேச வில்லை. இது ஆன்மீக ஞானமாகும். சாஸ்திரங்களில் உலகாய ஞானம் உள்ளது. ஆத்மாவிற்குத் தான் ஞானம் தேவைப்படுகிறது. ஆத்மா தான் தூய்மை இழந்துவிட்டிருக்கிறது, அதற்குத் தான் ஆன்மீக ஊசி தேவைப்படுகிறது. தந்தை தான் ஆன்மீக அழிவற்ற சர்ஜன் என்ற கூறப்படுகின்றார். நான் உங்களது ஆன்மீக சர்ஜன் என்று அவரே வந்து தனது அறிமுகத்தை கொடுக்கின்றார். உங்களது ஆத்மா தூய்மை இழந்து விட்ட காரணத்தினால் சரீரமும் நோயுடையதாக ஆகிவிட்டது. இந்த நேரத்தில் பாரதவாசிகள் மற்றும் முழு உலகவாசிகளும் நரகவாசிகளாக இருக்கின்றனர். பிறகு சொர்க்கவாசிகளாக எப்படி ஆக முடியும்? என்பதை தந்தை புரிய வைக்கின்றார். நான் வந்து தான் அனைத்து குழந்தைகளையும் சொர்க்கவாசிகளாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். உண்மையில் நாம் நரகவாசிகளாக இருந்தோம் என்பதை நீங்களும் புரிந்திருக்கிறீர்கள். க-யுகம் நரகம் என்று கூறப்படுகிறது. இப்போது நரகமும் கடைசி கட்டத்தில் இருக்கிறது. பாரதவாசிகள் இந்த நேரத்தில் பயங்கரமான நரகத்தில் இருக்கின்றனர், இதை இராஜ்யம் என்றும் கூற முடியாது. சண்டையிட்டுக் கொண்டே இருக்கின்றனர். சொர்க்கம் அழைத்துச் செல்ல தகுதியானவர்களாக தந்தை ஆக்குகின்றார், ஆக அவர் கூறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா! தங்களது தர்ம சாஸ்திரத்தையும் அறியாமல் இருக்கின்றனர், தந்தையையும் அறியாமல் இருக்கின்றனர்.
நான் தான் தூய்மை இழந்திருந்த உங்களை தூய்மையானவர்களாக ஆக்கியிருந்தேனே தவிர ஸ்ரீகிருஷ்ணர் அல்ல என்று தந்தை கூறுகின்றார். கிருஷ்ணர் பாவனமாகவும், நம்பர் ஒன் ஆகவும் இருந்தார். அவரை சியாம் சுந்தர் என்றும் கூறுகின்றனர். கிருஷ்ணரின் ஆத்மா பிறப்பு இறப்பில் வந்து வந்து இப்போது கருப்பாக (அசுத்தமாக) ஆகிவிட்டது. காமச் சிதையில் அமர்ந்து கருப்பாகி விட்டது. ஜெகதம்பாவை ஏன் கருப்பாக காண்பிக்கின்றனர்? என்பதை யாரும் அறியவில்லை. எவ்வாறு கிருஷ்ணரை கருப்பாக காண்பித்திருக்கிறார்களோ, அதே போன்று ஜெகதம்பாவையும் கருப்பாக காண்பிக்கின்றனர். இப்போது நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள், பிறகு சுந்தராக (அழகானவர்களாக) ஆகிறீர்கள். பாரதம் மிகவும் அழகாக இருந்தது என்று நீங்கள் புரிய வைக்க முடியும். அழகைப் பார்க்க வேண்டுமெனில் அஜ்மீரைப் (தங்க துவாரகை) பாருங்கள். சொர்க்கத்தில் தங்க, வைரத்தின் மாளிகை இருந்தது. இப்போது கற்களினால் இருக்கிறது, அனைத்தும் தமோ பிரதானமாக இருக்கிறது. ஆக சிவபாபா, பிரம்மா தாதா இருவரும் இணைந்து இருக்கின்றனர் என்பதை குழந்தைகள் அறிவீர்கள். அதனால் தான் பாப்தாதா என்று கூறுகிறோம். சிவபாபா விடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது. ஒருவேளை தாதாவிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்று கூறினால் பிறகு சிவனிடத்தில் என்ன இருக்கிறது? சிவபாபாவின் ஆஸ்தி பிரம்மாவின் மூலம் கிடைக்கிறது. பிரம்மாவின் மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை. இப்போது இராவண இராஜ்ய மாகும், உங்களைத் தவிர அனைவரும் நரகவாசிகள் ஆவர். நீங்கள் இப்போது சங்கமத்தில் இருக்கிறீர்கள். இப்போது தூய்மையற்றதி-ருந்து தூய்மையானவர்களாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். பிறகு உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். இது எந்த மனிதனும் கற்றுக் கொடுப்பது கிடையாது. உங்களுக்கு முரளி கூறுவது யார்? சிவபாபா. பரந்தாமத்தி-ருந்து பழைய உலகில், பழைய சரீரத்தில் வருகின்றார். யாருக்காவது நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் தந்தையை சந்திக்காமல் இருக்கவே முடியாது. முத-ல் எல்லையற்ற தந்தையை சந்திக்க வேண்டும் என்று கூறுவார்கள், சும்மா இருக்க முடியாது. எந்த எல்லையற்ற தந்தை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றாரோ அவரிடம் எங்களை உடனே அழைத்துச் செல்லுங்கள் என்று கூறுவர். சிவபாபாவின் ரதம் யார்? என்பதை பார்க்க வேண்டும். அவர்களும் கூட குதிரையை அலங்கரிக்கின்றனர். அடையாளமாக இடுப்புப் பட்டை வைக்கின்றனர். அது முகமதுவின் ரதமாகும். அவர் தான் தர்மத்தை ஸ்தாபனை செய்திருந்தார். பாரதவாசிகள் காளைக்கு (நந்தி) திலகமிடுகின்றனர், கோயி-ல் வைக்கின்றனர். இதன் மீது சிவன் சவாரி செய்தார் என்று நினைக்கின்றனர். உண்மையில் காளையின் மீது சிவனோ அல்லது சங்கரோ சவாரி செய்வது கிடையாது. எதையும் புரிந்து கொள்வது கிடையாது. சிவன் நிராகாராக இருக்கின்றார், அவர் எப்படி சவாரி செய்ய முடியும்? காளையின் மீது அமருவதற்கு கால்கள் தேவை. இது தான் குருட்டு நம்பிக்கை ஆகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) தந்தையிடமிருந்து அடையும் ஞான அமிர்தத்தைப் பருக வேண்டும் மற்றவர்களையும் அருந்த வைக்க வேண்டும். பூஜாரியி-ருந்து பூஜ்ய நிலை அடைவதற்கு விகாரங்களை தியாகம் செய்ய வேண்டும்.
2) சொர்கம் செல்வதற்கு தகுதியானவர்களாக ஆக்கக் கூடிய தந்தையின் ஒவ்வொரு விசயத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், முழு நிச்சயபுத்தியுடையவர்களாக ஆக வேண்டும்.
வரதானம்:-
தனது சம்பூரண நிலை மற்றும் சம்பூரண சொரூபத்தை அழைத்தீர்கள் என்றால் அந்த சொரூபத்தை சதா நினைவில் இருக்கும், சில சமயம் உயர்ந்த ஸ்திதி, சில நேரங்களில் கீழான ஸ்திதியில் வந்துச் செல்வதற்கான (போக்குவரத்து) நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி நினைவு மற்றும் மறதியின் சக்கரத்தில் வருகிறீர்கள், இந்த சக்கரத்திலிருந்து விடுபட்டு விடுகிறீர்கள். அந்த உலகத்தில் ஜென்ம மரணத்தின் சக்கரத்திலிருந்து விடுபட விரும்புகிறார்கள், மேலும் நீங்களூம் வீணான விசயங்களிலிருந்து விடுபட்டு ஜொலித்துக் கொண்டிருக்கும் அதிர்ஷ்ட நட்சத்திரம் ஆகிவிடலாம்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!