28 March 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
27 March 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! மனிதர்களின் வழிப்படியே நீங்கள் அரைக்கல்பமாக நடந்து வருகிறீர்கள். இப்போது நீங்கள் எனது ஸ்ரீமத் படி நடந்து தூய்மையானவர்களானால் தூய்மையான உலகின் அதிபதி ஆகி விடுவீர்கள்.
கேள்வி: -
எல்லையற்ற தந்தை குழந்தைகளுக்கு எந்த ஒரு ஆசிர்வாதம் தருகிறார், அந்த ஆசிர்வாதம் யாருக்குக் கிடைக்கிறது?
பதில்:-
தந்தை ஆசிர்வாதம் தருகிறார் – குழந்தைகளே, நீங்கள் 21 பிறவிகளுக்கு சதா சுகமாக இருப்பீர்கள். அமராக இருப்பீர்கள். உங்களை ஒரு போதும் காலன் விழுங்க மாட்டான். அகால மரணம் ஏற்படாது. காமதேனு மாதா உங்கள் மனதின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பார். ஆனால் நீங்கள் இந்த விஷத்தை (விகாரத்தை) விட்டுவிட வேண்டும். யார் ஸ்ரீமத் படி இந்தக் கடைசிப் பிறவியில் தூய்மை ஆகிறார்களோ, மற்றும் ஆக்குகிறார்களோ, அவர்களுக்குத் தான் இந்த ஆசிர்வாதம் கிடைக்கும். பாபா சொல்கிறார், குழந்தைகளே, உலகம் மாறிக் கொண்டி ருக்கிறது. அதனால் நீங்கள் கண்டிப்பாக தூய்மையாக வேண்டும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
ஓம் நமோ சிவாய.
ஓம் சாந்தி. பகவானின் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். பகவானின் குழந்தைகளோ அனைவரும் தான். மனிதர்கள் அனைவருமே பகவானை பாபா (தந்தை) என்று அழைக் கின்றனர். அவர் அனைவருக்கும் ஒரே தந்தை ஆவார். லௌகிக் தந்தையை அனைவரின் தந்தை எனச் சொல்ல மாட்டார்கள். எல்லையற்ற தந்தை தான் அனைவருக்குமே தந்தை ஆவார். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் அவர். வேறு யாருக்கும் இந்த மகிமை இருக்க முடியாது. அனைவரும் இந்த நிராகார் தந்தையைத் தான் நினைவு செய்கின்றனர். உங்களுடைய ஆத்மாவும் நிராகார் என்றால் தந்தையும் நிராகார். அவருடைய மகிமையைத் தான் நீங்கள் கேட்டீர்கள். பரமபிதா பரமாத்மா சிவபாபா, தாங்கள் உயர்ந்தவரிலும் உயர்ந்த வராக இருக்கிறீர்கள். அனைவருக்கும் சத்கதி அளிப்பவர் நீங்கள். அனைவருக்கும் சத்கதி அளிக்கிறீர்கள் என்றால் அவர்கள் சொர்க்கத்தின் எஜமானர் தேவி-தேவதை ஆகி விடுகின்றனர். மனிதர்கள், மனிதர்களுக்கு சத்கதி அளிக்க முடியாது. மனிதர்களுக்கு எந்த ஒரு மகிமையும் கிடையாது. இப்போது குழந்தைகள் உங்களுக்கு எல்லையற்ற தந்தை மூலம் ஆஸ்தி கிடைக்கிறது. அரைக்கல்பமாக நீங்கள் அதன் பலனை அனுபவிக்கிறீர்கள். அது இராம ராஜ்யம் எனச் சொல்லப் படுகின்றது. பிறகு துவாபர யுகத்திலிருந்து இராவண ராஜ்யம் ஆரம்பமாகிறது. 5 விகாரங்கள் என்ற பூதங்கள் பிரவேசமாகின்றன. எப்படி அந்த பூதம் (அசுத்த ஆத்மா) யாருக்குள் பிரவேசிக்கிறதோ, அவர்கள் (வேதாளம் போல்) பைத்தியமாகி விடுகின்றனர். அது போல் இந்த பூதங்களுக்குள் நம்பர் ஒன் பூதம் காமம் என்ற மிகப் பெரும் வியாதியாகும். அரைக்கல்பத்திற்கு இந்த பூதம் உங்களை மிகுந்த துக்கத்திற்குள்ளாக்கி விடுகிறது. இப்போது இதன் மீது வெற்றி பெற்று தூய்மையாவீர்களானால் தூய்மையான உலகின் எஜமானர் ஆகி விடுவீர்கள். பாபா தான் அனைவரிடமும் உறுதிமொழி எடுக்க வைக்கிறார். பாபா சொல்கிறார், நீங்கள் தூய்மை ஆவதற்கான ராக்கியை அணிந்து கொள்வீர்களானால் 21 பிறவிகளுக்கு சொர்க்கமாகிய தூய்மையான உலகின் எஜமானர்களாக நீங்கள் ஆகி விடுவீர்கள். நான் தூய்மை இழந்தவர்களை தூய்மை படுத்துவதற்காக வந்துள்ளேன். தேவி-தேவதைகளின் இராஜ்யம் இருந்த போது பாரதம் தூய்மையாக இருந்தது. பெயரே சுகதாமம் என இருந்தது. துக்க தாமத்தில் ஒன்று, காமக்கட்டாரி செலுத்துகின்றனர். இரண்டாவது, சண்டை-சச்சரவு செய்து கொண்டே இருக்கின்றனர். பாருங்கள், எவ்வளவு துக்கம்! பாபா வருவதே சங்கமயுகத்தில். இது நன்மை பயக்கும் சங்கமயுகம். குழந்தைகள் நீங்கள் சுகதாமத்தில் செல்வதற்காகத் தங்களுக்கு நன்மை செய்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், இப்போது என்னுடைய ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள். மனிதர்களின் வழிப்படியோ நீங்கள் அரைக்கல்பமாக நடந்தே வந்திருக்கிறீர்கள். சத்கதி அளிக்கும் வள்ளலோ ஒரு தந்தை தான். அவருடைய ஸ்ரீமத் மூலம் தான் நீங்கள் சொர்க்கத்தின் எஜமானர் ஆகி விடுகிறீர்கள். மற்றப்படி இந்த சாஸ்திரங்களையோ படித்துப் படித்து இப்போது கலியுகத்தின் கடைசி வந்து விட்டது. தமோபிரதானமாக ஆகி விட்டுள்ளனர். தன்னை ஈஸ்வரன் எனச் சொல்லிக் கொண்டு தனக்குத் தானே அமர்ந்து பூஜை செய்விக்கின்றனர். சாஸ்திரங்களில் பிரகலாதன் விஷயம் காட்டப்படுகிறது. தூணுக்குள்ளிருந்து நரசிம்ம பகவான் வெளிப்பட்டார், அவர் வந்து ஹிரண்யகஸ்யப்பைக் கொன்றார் எனக் காட்டுகின்றனர். இப்போது தூணுக்குள்ளிருந்தோ யாரும் வெளிப்படுவதில்லை. மற்றப்படி அனைவரின் விநாசமோ நடைபெறத் தான் போகிறது. பாபா சொல்கிறார், இந்த சாது-சந்நியாசிகள், மகாத்மாக்கள், அஜாமில் போன்ற பாவிகளுக்கும் நான் தான் வந்து விமோசனம் அளிக்கிறேன்.
பாபா வந்து ஞான அமிர்தத்தின் கலசத்தை மாதாக்களின் மீது வைக்கிறார். மாதா குரு இல்லாமல் யாருக்கும் சத்கதி கிடைக்க முடியாது. ஜெகதம்பா காமதேனுவாக உள்ளார், அனைவரின் மனதின் ஆசைகளை நிறைவேற்றுபவர். அவருடைய குழந்தைகள் நீங்கள். இப்போது பாபா சொல்கிறார், எந்த ஒரு மனிதரின் பேச்சையும் கேட்காதீர்கள். தூய்மையற்றவர் களைப் தூய்மை ஆக்குபவர் ஒரு பாபா மட்டுமே. ஆக, நிச்சயமாக யாரோ தூய்மை இல்லாமல் ஆக்குபவரும் இருப்பார். இராவணராஜ்யத்தில் அனைவரும் தூய்மை இல்லாதவர்கள். இப்போது பதீத-பாவனர் பாபா சொர்க்கத்தின் ஆஸ்தியைத் தருவதற்காக வந்துள்ளார். 21 பிறவிகளுக்கு நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்று அவர் சொல்கிறார். ஆசிர்வாதம் தருகிறார் இல்லையா? லௌகிக் தாய்-தந்தையும் கூட ஆசிர்வாதம் செய்கின்றனர். அது அல்பகால சுகத்திற்காக. இவர் எல்லையற்ற தாய்-தந்தை. குழந்தைகளே, நீங்கள் எப்போதும் அமரராக இருங்கள் என்று சொல்கிறார். அங்கே உங்களைக் காலன் விழுங்க மாட்டான். அகால மரணம் ஏற்படாது. சதா சுகமாக இருப்பீர்கள். காமதேனு மாதா உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவாள். விஷத்தை மட்டும் விட வேண்டியதிருக்கும். ஏனென்றால் தூய்மை இல்லாத வர்கள் அங்கே செல்ல முடியாது. பாபா சொல்கிறார், நான் உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். தூய்மையாக மட்டும் ஆகுங்கள். குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதல்ல. தானும் தூய்மை இல்லாமல் ஆகக் கூடாது, மற்றவர் களையும் தூய்மை இழக்கவிடக் கூடாது. இந்த மரண உலகத்தில் கடைசிப் பிறவி அவசியம் தூய்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் அமரலோகம் செல்வீர்கள். பாபா அமர்ந்து ஆத்மாக்களுக்குப் புரிய வைக்கிறார். ஆத்மா தான் தாரணை செய்கிறது. பாபா சொல்கிறார், நீங்கள் என்னுடைய குழந்தைகள். நீங்கள் ஆத்மாக்கள் பரந்தாமத்தில் இருந்தீர்கள். இப்போது மீண்டும் அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். யார் தூய்மை ஆகின்றனரோ, அவர்களை உடன் அழைத்துச் செல்வேன். பிறகு அங்கிருந்து உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். மீராவும் கூட விஷத்தைத் தியாகம் செய்தார். அதனால் அவரது பெயர் எவ்வளவு புகழ் பெற்றது! பாபா சொல்கிறார், குழந்தைகளே, இப்போது பழைய உலகம் மாறிப் புதியதாக ஆகப் போகிறது. புது உலகத்தில் தேவதைகள் இராஜ்யம் செய்தனர். நான் பிரம்மா மூலம் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். மிக உயர்வான தேவதை ஆவதற்காக உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கிறேன். கிருஷ்ணபுரிக்குச் செல்ல வேண்டும். ஸ்ரீகிருஷ்ணருக்குப் பாருங்கள், எவ்வளவு மகிமை! அவர் சர்வகுண சம்பன்னமானவர். என்னுடைய வழிமுறைப்படி நடப்பீர் களானால் இது போல் லட்சுமி-நாராயணராவீர்கள். யார் கல்பத்திற்கு முன் ஆஸ்தி பெற்றிருப் பார்களோ, அவர்கள் ஸ்ரீமத் படி நடப்பார்கள். இல்லையென்றால் மனதின் அசுர வழிப்படி நடந்து கொண்டே இருப்பார்கள். இந்த (பிரம்மா) பாபாவும் கூட அந்த நிராகார் சிவ பாபாவிடம் இருந்து தான் வழிமுறை பெற்றுக் கொள்கிறார். சிவபாபா பிரம்மாவின் உடலில் பிரவேசமாகி உங்களுக்கு வழிமுறை தருகிறார். பாபா சொல்கிறார், நீங்கள் அனைவரும் நாயகிகள் அல்லது பக்தைகள். ஒருவர் நாயகன் அல்லது பகவான். மனிதர்களை ஒரு போதும் பகவான் எனச் சொல்ல முடியாது. இந்தத் தலை கீழான வழிமுறை உங்களுக்குக் கிடைத்துள்ளது. அதனால் உங்களுக்கு இது போல் துர்கதி நேர்ந்துள்ளது. நான் ஒருவன் மட்டுமே அக்கரை கொண்டு சேர்ப்பவன். இந்த குருமார் எனது இருப்பிடத்தைக் கூட அறிந்து கொள்ளவில்லை என்றால் என்னிடம் எப்படி அழைத்து வருவார்கள்? மனிதர்களோ எங்கே சென்றாலும் தலை வணங்கு வார்கள். அதனால் நான் சுயம் உங்களை அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். பிறகு உங்களை சொர்க்க தாமத்திற்கு அனுப்பி வைப்பேன். அது விஷ்ணுபுரி, சூரியவம்சி. திரேதாயுகம் இராம ராஜ்யம் எனச் சொல்லப்படுகின்றது. அதன் பிறகு இராவண ராஜ்யம் துவாபர யுகத்தில் இருந்து ஆரம்பமாகிறது. ஆக, பாரதம் சிவாலயத்தில் இருந்து வேஷ்யாலயமாக (விகாரி உலகம்) மாறி விடுகிறது. இதே பாரதம் சம்பூர்ண நிர்விகாரியாக இருந்தது. இதே பாரதம் தான் பூர்ண விகாரி ஆகி விட்டுள்ளது. இப்போது குழந்தைகள் நீங்கள் இராஜயோகத்தைக் கற்று முழு உலகின் மீது வெற்றி பெறுகிறீர்கள். இரண்டு குரங்குகளின் கதை. அவை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. உலகம் என்ற வெண்ணெய் உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் சிவபாபா மற்றும் சொர்க்கத்தை மட்டுமே நினைவு செய்யுங்கள். வீட்டில் இல்லறத்தில் இருந்த வாறே தூய்மை ஆவீர்களானால் தூய்மையான உலகத்தின் எஜமானர் ஆகி விடுவீர்கள். தூய்மையாக இருக்க விரும்புவதால் தான் கொடுமைகள் நடைபெறு கின்றன. கல்பத்திற்கு முன்பும் கூட நடந்துள்ளன. இப்போதும் நிச்சயமாக நடக்கும். ஏனென்றால் நீங்கள் இப்போது விஷத்தைக் கொடுப்பதில்லை. பாடப்பட்டும் உள்ளது – அமிர்தத்தை விட்டு விஷத்தை ஏன் அருந்த வேண்டும்? அமிர்தத்தை அருந்தி-அருந்தியே நீங்கள் மனிதரில் இருந்து தேவதை ஆகி விடுகிறீர்கள். யார் பக்கா பிராமணர்களாக உள்ளனரோ, அவர்கள் சொல்வார்கள் – என்ன நடந்தாலும் சரி, நாங்கள் விஷத்தைக் கொடுக்க மாட்டோம். அந்த அளவு சகித்துக் கொள்ளவும் செய்கின்றனர்! அதனால் தான் உயர்ந்த பதவி பெறு கின்றனர். சிவபாபாவை நினைவு செய்து-செய்தே உயிரையும் விட்டு விடுகின்றனர். சிவபாபாவின் கட்டளையாகும். கட்டளையோ அனைவருக்கும் உள்ளது தான். அதனால் சொல்கிறார், என்னை நினைவு செய்வீர்களானால் என்னிடம் பரந்தாமத்திற்கு வந்து விடுவீர்கள். சிவபாபா இந்த பிரம்மா வாயின் மூலம் ஆத்மாக்களாகிய உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறார். இவரும் (பிரம்மா) மனிதர் தான். மனிதர் ஒரு போதும் மனிதரைப் பாவனமாக்க முடியாது. பாபாவை அழைக்கின்றனர் – தூய்மையற்றவர்களை வந்து தூய்மையாக்குங்கள். ஆகவே நான் அவசியமாக இந்த அசுத்தமான உலகத்தில் தான் வர வேண்டியுள்ளது. ஏனென்றால் இங்கே யாருமே தூய்மையானவர் இல்லை. இப்போது பாபா சொல்கிறார் – நான் உங்களை இந்த ஸ்ரீகிருஷ்ணரைப் போல் சொர்க்கத்தின் எஜமானர் ஆக்குகிறேன். யாராவது நான் பந்தனத்தில் இருக்கிறேன் எனச் சொல்வார்களானால் பாபா என்ன செய்வார்? உங்களுக்கோ ஞானம் கிடைக் கிறது – இல்லற விவகாரங்களில் இருந்து கொண்டே ஸ்ரீமத்படி நடப்பீர்களானால் நீங்கள் உயர்ந்தவர்களாக ஆகி விடுவீர்கள். நீங்கள் அனைவரும் ஈஸ்வரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சிவபாபா, பிரம்மா தாதா, பிராமணர்-பிராமணிகளாகிய நீங்கள் பேரன்-பேத்திகள். உங்கள் அனைவருக்கும் சொர்க்கத்தின் ஆஸ்தி, இராஜ்யம் கிடைக்கிறது. பாபா சொர்க்கத்தின் ஆஸ்தி தருகிறார் என்றால் நாம் பாபாவுக்கு வாரிசாகிறோம். ஆக, நிச்சயமாக நாம் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். பிறகு நாம் இப்போது ஏன் நரகத்தில் இருக்கிறோம்? பாபா புரிய வைக்கிறார்- இராவண ராஜ்யத்தின் காரணத்தால் நீங்கள் நரகத்தில் இருக்கிறீர்கள். இப்போது நான் வந்துள்ளேன், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக. பாபா படகோட்டியாக உள்ளார், அனைவரையும் அந்தக் கரைக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீகிருஷ்ணர் ஒன்றும் அனைவரின் தந்தை கிடையாது. ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும். அநேகரை நினைவு செய்வது என்றால் அது பக்தி மார்க்கமாகும். ஒரு பாபாவை நினைவு செய்வீர் களானால் அந்த் மதி ஸோ கதி ஆகி விடும். ஒரு பாபாவினுடையது தான் ஸ்ரீமத் எனப் பாடப்பட்டுள்ளது. அநேக குரு கோஸாயிகளினுடையதல்ல. அவர்களோ, பகவான் பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்டவர் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் பெயர்-வடிவத்திற்கு அப்பாற்பட்ட பொருள் என்று எதுவும் கிடையாது. ஆகாயம், போலார் என்றாலும் கூட பெயரோ உள்ளது இல்லையா? இப்போது இந்த பாரதம் எவ்வளவு ஏழையாக உள்ளது! திவாலாகி விட்டுள்ளது. பாபா சொல்கிறார், எப்போது இது போன்ற நிலைமை ஏற்பட்டு விடுகிறதோ, அப்போது நான் வந்து பாரதத்தைத் தங்கக் குருவியாக ஆக்கி விடுகிறேன். வைக்கோற் போரை நெருப்புப் பற்றிக் கொள்ளத் தான் போகிறது. பழைய உலகம் முழுவதும் அழிந்து புதியதாக ஆகும்.
குழந்தைகள் நீங்கள் ஸ்ரீமத்படி சொர்க்கத்தின் இராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். இது ஈஸ்வரியப் படிப்பாகும். மற்ற அனைத்தும் அசுரப் படிப்பு. இந்தப் படிப்பின் மூலம் நீங்கள் சொர்க்கவாசி ஆகிறீர்கள். அந்தப் படிப்பினால் நீங்கள் நரகவாசி ஆகிறீர்கள். இப்போது தெய்விக மரமானது நாளுக்கு நாள் பெரியதாகிக் கொண்டே போகிறது. மாயாவின் புயல்களும் அதிகம் வருகின்றன. அதனால் பாபா சொல்கிறார், இது துக்க தாமம். இப்போது நீங்கள் என்னை நினைவு செய்யுங்கள், பரந்தாமத்தை நினைவு செய்யுங்கள், சுகதாமத்தை நினைவு செய்யுங்கள். அப்போது துன்பங்கள் விலகிப் போய்விடும். பாபா வருகிறார், துக்கதாமத்தில் இருந்து சாந்தி தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக. பிறகு சுகதாமத்திற்கு அனுப்பி வைப்பார். இப்போது துக்கதாமத்தை மறந்து கொண்டே செல்லுங்கள். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. ஞானம் மற்றும் யோகத்தினால் தன்னுடைய பந்தனங்களைத் துண்டிக்க வேண்டும். இந்த துக்கதாமத்தை மறந்து சாந்தி தாமம் மற்றும் சுகதாமத்தை நினைவு செய்ய வேண்டும்.
2. கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டி இருக்கும். உயிரையும் கூடத் தியாகம் செய்ய வேண்டி வந்தாலும் கூட பாபா தூய்மையாவதற்கான கட்டளையாக என்ன கொடுத்துள்ளாரோ, அதன் படி நடக்கத் தான் வேண்டும். ஒரு போதும் தூய்மை இழந்தவர் ஆகக் கூடாது.
வரதானம்:-
சங்கமயுகத்தில் பிராமணர்களுக்கு பிராமண நிலையிலிருந்து ஃபரிஸ்தா ஆவது, ஃபரிஸ்தா என்றாலே அவர்களுக்கு பழைய உலகத்தின், பழைய சம்ஸ்காரத்தின், பழைய தேகத்தைப்பற்றிய எந்தவிதத்திலும் கவர்ச்சி யின் தொடர்பு இருக்காது. மூன்றிலிருந்தும் விடுப்பட்ட நிலை, ஆகையால் நாடத்தில் முதலில் முக்திக்கான ஆஸ்தி கிடைக்கிறது, அதன் பிறகு ஜீவன் முக்தி என்ற ஆஸ்தி. எனவே ஃபரிஸ்தா என்றாலே முக்தி மற்றும் ஃபரிஸ்தாவிலிருந்து விடுப்பட்டு இருப்பது தான் விடுபட்ட ஃபரிஸ்தா தான் ஜீவன்முக்தியான தேவதை ஆக முடியும். அப்படிப்பட்ட பிராமணர்கள் அனைத்து கவர்ச்சியிலிருந்து விடுபட்ட ஃபரிஸ்தாவிலிருந்து தேவதை ஆகும்பொழுது இயற்கையும் கூட மனதார மற்றும் உயிரினும் மேலான, அன்பான உங்கள் அனைவருக்கும் சேவை புரியும்.
சுலோகன்:-
மாதேஷ்வரி அவர்களின் விலை மதிப்பிட முடியாத மகா வாக்கியம் – பரமாத்மா செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். எப்படி?
இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அனாதி அமைந்த அமைக்கப்பட்ட சிருஷ்டி நாடகத்தை பரமாத்மா தான் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று நிறைய மனிதர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே மனிதனின் கையில் எதுவுமில்லை (கரன் கராவன்ஹார் சுவாமி …. ..) செய்பவர் செய்விப்பவரான தெய்வம் .. .. .. எல்லாமே பரமாத்மா தான் செய்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். சுகம் துக்கம் இரண்டு பாகங்களையும் பரமாத்மா தான் அமைத் துள்ளார் என்று கூறுகிறார்கள். இப்பொழுது இப்பேர்ப்பட்ட புத்தி உடையவர்களுக்கு எந்த புத்தி என்று கூறப்படும்? பரமாத்மா இப்பொழுது அமைக்கும் இந்த அனாதி அமைந்த அமைக்கப்பட்ட சிருஷ்டியின் நாடகம் தான் அவ்வாறே நடக்கிறது என்பதை முதன் முதலில் அவர்கள் அவசியம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு தான் இந்த அமைந்த அமைக்கப்பட்ட நாடகம் (ஆட்டோமேட்டிக்) தானாகவே நடந்து கொண்டே தான் இருக்கும் என்று நாம் கூறுகிறோம். எனவே பிறகு பரமாத்மாவிற்கு கூட இவை எல்லாமே பரமாத்மா தான் செய்கிறார் என்று கூறப்படுகிறது. பரமாத்மாவிற்கு செய்பவரும் செய்விப்பவரும் ஆவார் என்று கூறுகிறார்கள். அப்படியானால் இந்த பெயர் பின் எந்தவொரு பெரியவர் மீது இடப்பட்டுள்ளது? இப்பொழுது இந்த விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இந்த சிருஷ்டியின் அனாதி நியமம் அமைந்தது தான் அமைக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி பரமாத்மா கூட அனாதி ஆவார், மாயை கூட அனாதி ஆகும். மேலும் இந்த சக்கரம் கூட ஆரம்ப முதல் கடைசி வரை அனாதி அவினாஷி அமைந்த அமைக்கப்பட்டது ஆகும். எப்படி விதையில் விருட்சத்தின் ஞானம் இருக்கவே இருக்கிறது என்பது தெரிந்த விஷயம் தான் அல்லவா? மேலும் விருட்சத்தில் விதை உள்ளது என்பதும் தெரிந்த விஷயம். இரண்டுமே இணைந்துள்ளது. இரண்டுமே அவினாஷி ஆகும். மற்றபடி விதையின் வேலை என்ன? விதை விதைக்கப் படுகிறது. மரம் வெளிப்படுகிறது. விதை விதைக்கவில்லை என்றால் மரத்தின் உற்பத்தி ஏற்படுவதில்லை. எனவே பரமாத்மா கூட சுயம் இந்த முழு சிருஷ்டியின் விதை ரூபம் ஆவார். மேலும் பரமாத்மாவின் (பார்ட்) பாகமே விதை விதைப்பது. பரமாத்மாவே கூறுகிறார், நான் விதை விதைப்பதால் தான் பரமாத்மாவாக இருக்கிறேன். விதை விதைக்கவில்லை என்றால் விருட்சம் எப்படி வெளிப்படும். எனது காரியம் பரம (உயர்ந்த) காரியம் ஆகும் பொழுது தான் என் பெயர் பரமாத்மா எனப்படுகிறது. எனது காரியமே என்ன வென்றால் சுயம் நான் பாகம் ஏற்று நடிப்பவனாகி விதை விதைக்கிறேன். சிருஷ்டியை ஆரம்பிக்கவும் செய்கிறேன், முடிக்கவும் செய்கிறேன். நான் செய்பவனாக ஆகி விதையை விதைக்கிறேன். விதை விதைப்பதற்கான பொருளாவது படைப்பை படைப்பது. பழைய சிருஷ்டியை முடித்து விடுவது. மேலும் புதிய சிருஷ்டியை ஆரம்பித்து வைப்பது. இதற்கு தான் பரமாத்மா எல்லாமே செய்கிறார் என்று கூறுகிறார்கள்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!