28 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
27 July 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இது புருஷார்த்தம் (உத்தமர்களாக) ஆவதற்கான சங்கமயுகம். இதில் எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது.
கேள்வி: -
சங்கமயுகத்தில் குழந்தைகள் நீங்கள் அனைத்திலும் புண்ணிய காரியமாக எதைச் செய்கிறீர்கள்?
பதில்:-
தன்னை பாபாவிடம் ஒப்படைத்து விடுவது, அதாவது சம்பூர்ண ஸ்வாஹா (முழுமையாக பலி) ஆகி விடுவது என்பது அனைத்திலும் பெரிய புண்ணியம். இப்போது நீங்கள் மோகத்தை விட்டு விடு கிறீர்கள். குழந்தை-குட்டிகள், வீடு-வாசல் அனைத்தையும் மறக்கிறீர்கள். இது தான் உங்களுடைய விரதம். நீங்கள் இறந்தால் உலகமும் இறந்து விட்டது. இப்போது நீங்கள் விகாரி சம்மந்தங்களில் இருந்து விடுபடுகிறீர்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
விட்டில் பூச்சிகள் ஏன் எரியவில்லை….
ஓம் சாந்தி. இவை அனைத்தும் பக்தி மார்க்கத்தில் தந்தையின் மகிமை செய்வதாகும். இது விட்டில் பூச்சிகள் ஜோதிக்குச் செய்யும் மகிமை ஆகும். தந்தை வந்துள்ளார் எனும் போது உயிருடன் இருந்து கொண்டே அவருடைய வர்களாக ஏன் ஆகக் கூடாது? உயிருடன் இருந்து கொண்டே என்று சொல்லப் படுவதே தத்தெடுப்பவர்களுக்காகத் தான். முதலில் நீங்கள் அசுரப் பரிவாரத்தினராக இருந்தீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரியப் பரிவாரத்தினராக ஆகியிருக்கிறீர்கள். உயிருடன் இருக்கும் போதே ஈஸ்வரன் வந்து உங்களைத் தத்தெடுத் துள்ளார். அது பிறகு சரணாகதி எனச் சொல்லப்படுகின்றது. பாடுகின்றனர் இல்லையா, நான் உங்கள் முன் சரணடைந்தேன்…….. இப்போது பிரபு எப்போது இங்கே வருகிறாரோ, தமது சக்தியை, சிறப்பைக் காட்டுகிறாரோ, அப்போது தான் அவர் முன் சரணடைவோம். அவர் தான் சர்வசக்திவான் இல்லையா? நிச்சயமாக அவரிடம் கவர்ச்சியும் உள்ளது இல்லையா? அனைத்தையும் விலகச் செய்து விடுகிறார். நிச்சயமாக யார் பாபாவின் குழந்தைகளாக ஆகின்றனரோ, அவர்கள் அசுர சம்பிரதாயத்தினரின் சம்மந்தத்தில் சலிப்படைந்து விடுகின்றனர். பாபா, எப்போது இந்த சம்மந்தங்கள் விட்டுப் போகும் என்று கேட்கின்றனர். இங்கே இந்தப் பழைய சம்மந்தங்களை மறக்க வேண்டி உள்ளது. ஆத்மா தேகத்திலிருந்து தனியாக ஆகி விடும் போது பந்தனங்கள் முடிந்து போகும். இச்சமயம் நீங்கள் அறிவீர்கள், அனைவருக்காகவும் மரணம் காத்திருக் கிறது. மேலும் இந்த பந்தனங்கள் உள்ளன என்றால் அவை விகாரி பந்தனங்கள். இப்போது குழந்தை கள் நிர்விகாரி சம்மந்தத்தை விரும்புகின்றனர். நிர்விகாரி சம்மந்தத்தில் இருந்தோம். பிறகு விகாரி சம்மந்தத்தில் வந்தோம். மீண்டும் நமக்கு நிர்விகாரி சம்மந்தம் இருக்கும். குழந்தைகள் அறிவார்கள், நாம் அசுர பந்தனத்தில் இருந்து விடுபடுவதற்கான புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு பாபாவிடம் நினைவு மூலம் இணைய வைக்கப் படுகின்றது. அந்தப் பக்கம் இருப்பது ஓர் இராவணன். இந்தப் பக்கம் ஓர் இராமர். இவ்விசயங்களை உலகம் அறிந்திருக்கவில்லை. இராம இராஜ்யம் வேண்டும் எனச் சொல்லவும் செய்கின்றனர். ஆனால் முழு உலகமும் இராவண இராஜ்யத்தில் உள்ளது. இதை யாரும் புரிந்து கொள்வதில்லை. இராம ராஜ்யத்திலோ தூய்மை, சுகம், சாந்தி இருந்தது. அது இப்போது இல்லை. ஆனால் என்ன சொல்கின்றனரோ, அதை உணர்வதில்லை. பாடவும் படுகின்றது- இந்த ஆத்மாக்கள் அனைவரும் சீதைகள். ஒரு சீதையின் விசயம் இல்லை. ஓர் அர்ஜுனனின் விசயமும் கிடையாது. ஒரு திரௌபதியின் விஷயமும் கிடையாது. இதுவோ அநேகரின் விசயமாகும். உதாரணமாக ஒருவருக்கு விளக்கம் தரப்படுகின்றது. உங்களுக்கும் சொல்லப்படுகின்றது- நீங்கள் அனைவரும் அர்ஜுனன் போன்றவர்கள். நீங்கள் சொல்வீர்கள், அர்ஜுனனோ இந்த பாகீரதம் (பிரம்மா பாபா) தான்.. பாபா சொல்கிறார் – நான் சாதாரண வயோதிகர் சரீரமாகிய இந்த ரதத்தை எடுத்துக் கொள்கிறேன். அவர்கள் பிறகு சித்திரங்களில் குதிரை வண்டியைக் காட்டியுள்ளனர். இது அஞ்ஞானம் எனச் சொல்லப் படுகின்றது. குழந்தைகள் புரிந்து கொண்டுள்ளனர், இந்த சாஸ்திரங்கள் முதலிய என்னவெல்லாம் உள்ளனவோ, அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. இவ்விசயங்களை யாரும் புரிந்துக் கொள்ள முடியாது- 7 நாள் புரிந்துக் கொள்வதற்கான கோர்ஸ் எடுத்துக் கொள்ளாத வரை. பக்தி தனிப்பட்டது. ஞானம், பக்தி, வைராக்கியம் எனச் சொல் கின்றனர். உண்மையில் சந்நியாசிகளின் வைராக்கியம் ஒன்றும் உண்மையானதல்ல. அவர்களோ காட்டுக்குச் சென்று விட்டுப் பிறகு நகரத்தினுள் வந்து இருந்து கொண்டு பெரிய-பெரிய மாளிகைகள் முதலியவற்றை உருவாக்குகின்றனர். வீடு-வாசலை விட்டு விட்டோம் என்று வெறுமனே சொல்கின்றனர். உங்களுடையது முழுப் பழைய உலகத்தின் வைராக்கியம். யதார்த்த மான விசயம் இது தான். அது எல்லைக்குட்பட்ட விசயம். அதனால் அது ஹட யோகம், எல்லைக்குட்பட்ட வைராக்கியம் எனச் சொல்லப்படுகின்றது.
குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இந்தப் பழைய உலகம் இப்போது அழியப் போகிறது. அதனால் கண்டிப்பாக இதன் மீது வைராக்கியம் வர வேண்டும். புத்தியும் சொல்கிறது, புது வீடு உருவாகிறது என்றால் பழைய வீடு இடிக்கப்படுகின்றது. நீங்கள் அறிவீர்கள், இப்போது ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கலியுகத்திற்குப் பின் சத்யுகம் மீண்டும் நிச்சயமாக வரும். இது புருúˆôத்தம யுகம் எனச் சொல்லப்படுகின்றது. புருஷோத்தம மாதமும் உள்ளது. உங்களுடையது புருஷோத்தம யுகம். புருஷார்த்தம மாதத்தில் தான-புண்ணியம் முதலியவற்றைச் செய்கின்றனர். நீங்கள் இந்தப் புருúˆôத்தம யுகத்தில் அனைத்தையும் ஸ்வாஹா (அர்ப்பணம்) செய்து விடுகிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், இந்த முழு உலகமும் ஸ்வாஹா ஆகப் போகிறது. ஆக, முழு உலகமும் முழுமையாக ஸ்வாஹா ஆவதற்கு முன்பாக நம்மை நாம் ஏன் ஸ்வாஹா செய்யக் கூடாது? அதனால் உங்களுக்கு எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்! அது எல்லைக்குட்பட்ட புருஷார்த்தம மாதம். இதுவோ எல்லை யற்ற விஷயம். புருஷார்த்தம மாதத்தில் அதிகம் கதைகளைக் கேட்பார்கள். விரத நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள். உங்களுடையதோ மிகப் பெரிய விரதம். உங்களுக்கு வீடு, குழந்தை- குட்டிகள் இருந்தாலும் கூட மனதால் மோகத்தை விட்டு விட்டீர்கள். நீங்கள் இறந்தால் உலகம் இறந்து விட்டது போலதான். நீங்கள் அறிவீர்கள், இவை அனைத்தும் அழிந்து போகும். நாம் பாபாவுடையவர்களாக ஆகியிருக்கிறோம் – புருஷார்த்தம் ஆவதற்காக. அனைத்து புருஷ், அதாவது மனிதர்களுக்குள் உத்தம புருஷ் இந்த லட்சுமி-நாராயணர் முன்னால் நின்று கொண்டுள்ளனர். இவர்களை விட உத்தம மானவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. லட்சுமி-நாராயணர் உலகத்தின் எஜமானர்களாக இருந்தனர். அவர்களைப் போல் புருஷார்த்தமர்களாக ஆவதற்காக நீங்கள் வந்திருக் கிறீர்கள்.. மனிதர்கள் அனைவருமே சத்கதி அடைகின்றனர். மனிதர்களின் ஆத்மா புருúˆôத்தமர்களாக ஆகி விடுகின்றது என்றால் பிறகு அது வசிப்பதற்கான இருப்பிடமும் கூட அது போல் உத்தமமானதாக இருக்க வேண்டும். எப்படி குடியரசுத் தலைவர் அனைவரைக் காட்டிலும் உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்றால் அவர் வசிப்பதற்காக ராஷ்டிரபதி பவன் கிடைத்துள்ளது. எவ்வளவு பெரிய மாளிகை, மலர் தோட்டம் எல்லாம் உள்ளது! இது இங்கே உள்ள விஷயம். இராம ராஜ்யத்தைப் பற்றியோ நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சத்யுகத்தின் புருஷோத்தமர்களாக ஆகிறீர்கள். பிறகு இந்தக் கலியுகத்தில் புருஷோத்தமர்களாக இருக்க மாட்டார்கள். நீங்கள் சத்யுகப் புருஷோத்தமர்களாக ஆவதற்காகப் புருஷார்த்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், நமது மாளிகை எப்படி உருவாகியிருக்கும்! நாளை (சத்யுகம்) இராம ராஜ்யம் இருக்கும். நீங்கள் ராமராஜ்யத்தில் புருஷார்த்த மர்களாக இருப்பீர்கள். நீங்கள் சவால் விடுகிறீர்கள், நாங்கள் இராவண இராஜ்யத்தை மாற்றி இராம இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வோம். இப்போது சவால் விட்டிருக் கிறீர்கள் என்றால் ஒருவர் மற்றவரை புருஷோத்தமர்களாக ஆக்க வேண்டும்- 21 பிறவிகளுக்காக. தேவதைகளின் மகிமை பாடுகின்றனர், சர்வகுண சம்பன்ன…… அஹிம்சா பரமோ தேவி-தேவதா தர்மம். நீங்கள் அறிவீர்கள், வேறு எந்த மனிதருக்கும் தெரியாது. நீங்கள் அடுத்த ஜென்மத்தில் புருஷோத்தமர்களாகிறீர்கள். பிறகு இந்த இராவண இராஜ்யத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். இப்போது உங்களுக்கு முழு ஞானமும் உள்ளது. இப்போது இராவண இராஜ்யமே அழிந்துவிடப் போகிறது. இப்போதோ சமயத்தைப் பற்றியும் எந்த ஒரு நம்பிக்கையும் கிடையாது. அகால மரணம் நடந்து விடுகிறது. யாருடனாவது விரோதம் ஏற்பட்டால் உடனே அவர்களை அழித்து விடு கின்றனர். உங்களையோ யாராலும் அழிக்க முடியாது. நீங்கள் அவிநாசி புருஷோத்தமர்கள். இவர்கள் விநாசி, அதுவும் இராவண இராஜ்யத்தில். இவர்களுக்கு உங்களுடைய தெய்வீக இராஜ்யத்தைப் பற்றித் தெரியாது. நீங்கள் அறிவீர்கள், நாம் நம்முடைய தெய்விக சுயராஜ்யத்தை ஸ்ரீமத் படி ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். யாருக்குப் பூஜை நடைபெறுகிறதோ, அவர்கள் நிச்சயமாக நல்ல காரியம் செய்து விட்டுச் சென்றுள்ளனர். இதை நீங்கள் அறிவீர்கள். பாருங்கள், ஜெகதம்பாவுக்கு எவ்வளவு பூஜைகள் நடைபெறுகின்றன! இப்போது இவர் ஞான- ஞானேஸ்வரி. நீங்கள் ஜெகதம்பாவின் குழந்தைகள், ஞான-ஞானேஸ்வரி மற்றும் ராஜ-ராஜேஸ்வரி. இருவரிலும் உத்தமமானவர் யார்? ஞான-ஞானேஸ்வரியிடம் சென்று அநேக விதமான மனதின் ஆசைகளைச் சொல்கின்றனர். அநேகப் பொருட்களைக் கேட்கின்றனர். ஜெகதம்பாவின் கோவில் மற்றும் லட்சுமி-நாராயணரின் கோவிலுக்கிடையில் அதிக வேறுபாடு உள்ளது. ஜெகதம்பா வின் கோவில் மிகவும் சிறியது. சிறிய இடத்தில் பெரிய கூட்டம் இருப்பது மனிதர்களுக்குப் பிடித்துள்ளது. ஸ்ரீநாத்தின் கோவிலிலும் கூட அதிகக் கூட்டம் இருக்கும். கூட்டத்தைக் கட்டுப் படுத்து வதற்காக மரக் கம்புகளால் தடுப்பு ஏற்படுத்திக் கொள்கின்றனர் கல்கத்தாவில் காளி கோவில் எவ்வளவு சிறியதாக உள்ளது! உள்ளே (தரையில்) அதிகம் எண்ணெய் மற்றும் தண்ணீர் உள்ளது. உள்ளே மிகவும் கவனமாகச் செல்ல வேண்டியுள்ளது. அதிகக் கூட்டம் இருக்கும். லட்சுமி-நாராயணரின் கோவிலோ மிகப் பெரியதாக உள்ளது. ஜெகதம்பாவுக்கு சிறியதாக இருப்பது ஏன்? ஏழை இல்லையா? ஆக, கோவிலும் ஏழ்மை நிலையில் உள்ளது. அவர் பணக்காரர் என்றால் கோவிலில் ஒரு போதும் திருவிழா நடைபெறு வதில்லை. ஜெகதம்பாவின் கோவிலில் அதிகம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. வெளி யிலிருந்து அதிகமாக மக்கள் வருகின்றனர். மகாலட்சுமியின் கோவிலும் உள்ளது. இதையும் நீங்கள் அறிவீர்கள், இதில் லட்சுமியும் இருக்கிறார் என்றால் நாராயணரும் இருக்கிறார். அவரிடம் செல்வம் மட்டும் கேட்கின்றனர். ஏனென்றால் அவர் தனவான் ஆகியிருக்கிறார் இல்லையா? இங்கே இருப்பதோ அவிநாசி ஞான ரத்தினங்கள். செல்வத்திற்காக லட்சுமியிடம் செல்கின்றனர். மற்றப்படி அநேக ஆசைகளை வைத்துக் கொண்டு ஜெகதம்பாவிடம் செல்கின்றனர். நீங்கள் ஜெகதம்பாவின் குழந்தைகள். அனைவரின் மனதின் ஆசைகளையும் 21 பிறவிகளுக்கு நீங்கள் நிறைவேற்றுகிறீர்கள். ஒரே ஒரு மகாமந்திரத்தினால் அனைத்து மன ஆசைகளும் 21 பிறவிகளுக்கு நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. வேறு யாரெல்லாம் மந்திரம் முதலியவற்றைக் கொடுக் கின்றனரோ, அவற்றில் அர்த்தம் எதுவும் இருக்காது. பாபா புரிய வைக்கிறார், இந்த மந்திரமும் கூட உங்களுக்கு ஏன் கொடுக்கிறேன்? ஏனென்றால் நீங்கள் தூய்மை இழந்தவர் களாக இருக்கிறீர்கள். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். அப்போது தான் தூய்மையாவீர்கள். இதை ஆத்மாக்களுக்கு ஒரு தந்தையைத் தவிர யாராலும் சொல்ல முடியாது. இதனால் தெளிவாகிறது இந்த சகஜ இராஜயோகம் ஒரு தந்தை மட்டுமே கற்பிக்கிறார். மந்திரமும் அவரே தருகிறார். 5000 ஆண்டுகளுக்கு முன்பும் மந்திரம் கொடுத்திருந்தார். இந்த நினைவு வந்துள்ளது. இப்போது நீங்கள் முன்பாக அமர்ந்திருக்கிறீர்கள். கிறிஸ்து இருந்து சென்றுள்ளார். அவருடைய பைபிளைப் படித்துக் கொண்டே இருக்கின்றனர். அவர் என்ன செய்து விட்டுச் சென்றுள்ளார்? கிறிஸ்து தர்மத்தை ஸ்தாபனை செய்து விட்டு சென்று விட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள், சிவபாபா என்ன செய்து விட்டுச் சென்றிருக்கிறார் என்று. கிருஷ்ணர் என்ன செய்து விட்டுச் சென்றார்? கிருஷ்ணரோ சத்யுகத்தின் இளவரசராக இருந்தார். அவர் தான் பிறகு நாராயணராக ஆனார். பிறகு புனர்ஜென்மம் எடுத்தே வந்துள்ளார். சிவபாபாவும் ஏதோ செய்து விட்டுச் சென்றுள்ளார். அதனால் தான் அவருக்கு இவ்வளவு பூஜை முதலியன நடைபெறுகின்றன. இப்போது நீங்கள் அறிவீர்கள், இராஜயோகம் கற்பித்து விட்டுச் சென்றுள்ளார், பாரதத்தை சொர்க்கமாக ஆக்கி விட்டுச் சென்றுள்ளார். அந்த சொர்க்கத்தின் முதல் நம்பர் எஜமானராக ஆவர் ஆவதில்லை. எஜமானராக கிருஷ்ணர் தான் ஆனார். நிச்சயமாக கிருஷ்ணரின் ஆத்மாவுக்குக் கற்பித்தார், நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர் கள். கிருஷ்ணரின் வம்சாவளியாக நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். இராஜா-ராணியை தாய்-தந்தை என்றும் உணவளிக்கும் வள்ளல் என்றும் சொல்கின்றனர். இராஜஸ்தானிலும் கூட இராஜாவை உணவளிக்கும் வள்ளல் எனச் சொல்கின்றனர். இராஜாக்களுக்கு எவ்வளவு மரியாதை உள்ளது! முன்பு அனைத்துப் புகார்களும் இராஜாவிடம் வந்தன. தர்பார் கூட்டப்பட்டது. ஏதாவது தவறு செய்திருந்தால் மிகவும் பச்சாத்தாபப் பட்டனர். தற்சமயமோ சிறைப்பறவைகள் அநேகர் உள்ளனர். அடிக்கடி சிறைக்குச் செல்கின்றனர். இப்போது குழந்தைகள் நீங்கள் கர்ப்ப ஜெயிலுக்குள் செல்ல மாட்டீர்கள். நீங்களோ கர்ப்ப மாளிகையில் வர வேண்டும். அதனால் பாபாவை நினைவு செய்யுங்கள். அப்போது விகர்மங்கள் விநாசமாகும். பிறகு ஒரு போதும் கர்ப்ப ஜெயிலில் போக மாட்டீர்கள். அங்கே பாவம் நடைபெறுவதில்லை. அனைவரும் கர்ப்ப மாளிகையில் இருப்பார்கள். குறைந்த புருஷர்தத்தின் காரணத்தால் தான் குறைந்த பதவி பெறுவார்கள். உயர்ந்த பதவி அடைகிறவர்களுக்கு சுகமும் அதிகம் இருக்கும். இங்கோ வெறும் 5 ஆண்டுகளுக்கு மட்டும் கவர்னர், பிரசிடென்ட் ஆகியோரை நியமிக்கின்றனர். நீங்கள் புரிய வைக்க முடியும்-பாரதம் தான் தெய்விக ராஜஸ்தானாக ஆயிற்று. இப்போதோ ராஜஸ்தானும் இல்லை, ராஜா-ராணியும் இல்லை. முன்பு யாராவது அரசாங்கத்திற்குப் பணம் கொடுத்தார்கள் என்றால் மகாராஜா-மகாராணி என்ற டைட்டில் கிடைத்து வந்தது. இங்கே உங்களுடையதோ படிப்பு. இராஜா-ராணியாக ஒரு போதும் படிப்பினால் ஆவதில்லை. உங்களுடைய நோக்கம்-குறிக்கோள், இந்தப் படிப்பினால் நீங்கள் உலகத்தின் மகாராஜா- மகாராணி ஆகிறீர்கள். இராஜா ராணியும் கூட இல்லை. இராஜா-ராணியின் டைட்டில் திரேதா யுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது.
நீங்கள் இப்போது ஞான-ஞானேஸ்வரி ஆகிறீர்கள். பிறகு இராஜ-ராஜேஸ்வரி ஆவீர்கள். யார் ஆக்குவார்? ஈஸ்வரன். எப்படி? ராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம். இராஜ்யத்திற்காக பாபாவை நினைவு செய்ய வேண்டும். பாபா உங்களை சொர்க்கத்தின் அதிகாரி ஆக்குகிறார். இதுவோ மிகவும் சுலபம் இல்லையா? சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் தான் காட்ஃபாதர். சொர்க்கத்திலோ சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய மாட்டார். நிச்சயமாக அவர்களுக்கு சங்கம யுகத்தில் பதவி கிடைக் கிறது. அதனால் இது அழகான, கல்யாண்காரி சங்கமயுகம் என்று சொல்லப் படுகிறது. பாபா குழந்தை களுக்கு எவ்வளவு நன்மை செய்கிறார்! சொர்க்கத்திற்கே அதிகாரி ஆக்குகிறார். சொல்லவும் செய்கின்றனர், பரமபிதா பரமாத்மா புது உலகைப் படைக்கிறார். ஆனால் அதில் யார் இராஜ்யம் செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. இராம இராஜ்யம் எனச் சொல்லப்படுவது எது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அவர்களோ இராம இராஜ்யத்திற்கு லட்சம் வருடங்கள் கொடுத்து விட்டுள்ளனர். கலியுகத்திற்கு 40 ஆயிரம் வருடங்கள் கொடுத்து விட்டுள்ளனர். பாபா சொல்கிறார்-நான் வருவது சங்கமயுகத்தில் தான். வந்து பிரம்மா மூலம் விஷ்ணுபுரியின் ஸ்தாபனை செய்கிறேன். சத்திய நாராயணனின் கதையும் இது தான். அவர்கள் சாஸ்திரங்களின் கதைகளைப் படித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அதனால் எந்த ஒரு இராஜ்யமும் கிடைக்காது. மனிதர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மரம் நிச்சமாகப் பழையதாக ஆகும். வளர்ச்சி அடைந்து-அடைந்து பழையதாக ஆகி விடும். சத்யுகத்தில் நீங்கள் லட்சுமி-நாராயண் சர்வகுண சம்பன்னமாக……… ஆகிறீர்கள். பிறகு கலைகள் குறைந்து கொண்டே செல்கின்றன. ஸ்தாபனை ஆகும் போது தான் புதிய மரம் என்று சொல்லப்படுகின்றது. புது வீடு கட்டப்படுகின்றது என்றால் புதியது எனச் சொல்வார்கள். நீங்களும் சத்யுகத்தில் வருவீர்களானால் புது இராஜதானி இருக்கும். பிறகு கலைகள் குறைந்து கொண்டே போகும். ஸ்தாபனை இங்கே நடைபெறு கின்றது. இந்த அற்புதமான விஷயங்கள் யாருடைய புத்தியிலும் இல்லை. ஆக, பாபா புரிய வைத்துள்ளார்-அனைத்து ஆத்மாக்களுக்காகவும் இது புருபுருஷோத்தமர்களாக ஆவதற்கான யுகம் ஆகும். ஜீவன்முக்தி நிலையில் இருப்பவர் புருஷோத்தமர்கள் எனச் சொல்லப் படுகின்றார். ஜீவன் பந்தனத்தில் இருப்பவர் புருஷோத்தமர்கள் எனச் சொல்லப் படுவதில்லை. இச்சமயம் அனைவரும் ஜீவன் பந்தனத்தில் உள்ளனர். பாபா வந்து அனைவரையும் ஜீவன் முக்த் ஆக்குகிறார். நீங்கள் அரைக்கல்பம் ஜீவன் முக்த் நிலையில் இருப்பீர்கள். பிறகு ஜீவன் பந்தன நிலை. இதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உங்களின் விரத நியமம் என்ன? பாபா வந்து விரதம் இருக்கச் செய்துள்ளார். உணவு- பானத்தின் விˆயம் கிடையாது. அனைத்தையும் செய்யுங்கள். முக்கியமானது, பாபாவை நினைவு செய்யுங்கள் மற்றும் தூய்மையாக ஆகுங்கள். புருஷோத்தம மாதத்தில் முக்கியமாக, பவித்திரமாகவும் இருப்பார்கள். உண்மையில் இந்தப் புருஷாத்தம யுகத்திற்கு மதிப்பு உள்ளது என்றால் உங்களுக்கு எவ்வளவு குஷி, எவ்வளவு நஷா இருக்க வேண்டும்! இப்போது உங்களால் எந்த ஒரு பாவ கர்மமும் நடைபெறக் கூடாது. ஏனென்றால் நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) இந்தப் புரு புருஷோத்தம யுகத்தில் ஜீவன்முக்த் (சொர்க்கவாசி) ஆவதற்காக புண்ணிய கர்மம் செய்ய வேண்டும். தூய்மையாக அவசியம் ஆக வேண்டும். வீடு-வாசல் முதலிய அனைத்தும் இருந்தாலும் மனதால் மோகத்தை அகற்றிவிட வேண்டும்.
2) ஸ்ரீமத் படி தன்னுடைய உடல்-மனம்-செல்வத்தால் தெய்விக ராஜ்யத்தை ஸ்தாபனை செய்ய வேண்டும். மற்றவர்களைப் புருஷோத்தமர்களாக ஆக்குவதற்கான சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:-
நாம் அனைவரை விடவும் சிரேஷ்டமான ஆல்மைட்டி பாபாவின் அத்தாரிட்டி மூலம் காரியம் செய்பவர்கள். இது யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு ஆடாத நிச்சயமாக இருக்க வேண்டும். இதனால் எவ்வளவு தான் பெரிய காரியத்தை யாராவது செய்தாலும் மிகவும் சகஜமானதாக அனுபவம் செய்வார்கள். தற்சமயம் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சகஜமாகக் கிடைக்கிற விதமாக, விஞ்ஞானம் அந்த மாதிரி மெஷினரியைத் (தொழில் நுட்பங்கள்) தயார் செய்துள்ளது. புத்தியைப் பயன்படுத்துவதில் இருந்து விடுபட்டு விடுகிறார்கள். அது போல் அல்மைட்டி அத்தாரிட்டியை முன்னால் வைப்பீர் களானால் அனைத்துக் கேள்விகளுக்குமான பதில் சகஜமாகக் கிடைத்து விடும். மேலும் சகஜ மார்க்கமும் அனுபவமாகும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!