27 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris
26 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இப்போது வினாசத்தின் நேரம் மிகவும் அருகாமையில் உள்ளது, ஆகையால் ஒரு தந்தையிடம் உண்மையான அன்பு வையுங்கள், எந்த தேகதாரியுடனும் அன்பு வைக்காதீர்கள்.
கேள்வி: -
எந்த குழந்தைகளின் உண்மையான அன்பு ஒரு தந்தையிடம் இருக்குமோ அந்த குழந்தைகளின் அடையாளங்கள் என்னவாக இருக்கும்?
பதில்:-
1. அவர்களுடைய புத்தியின் தொடர்பு எந்த தேகதாரியின் பக்கமும் செல்ல முடியாது. அவர்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு பிரியதர்ஷன் – பிரியதர்ஷினியாக ஆக மாட்டார்கள். 2. யாருக்கு உண்மையான அன்பு இருக்குமோ அவர்கள் எப்போதும் வெற்றியாளர்களாக ஆவார்கள். வெற்றியாளர் ஆவது என்றால் சத்யுகத்தின் மகாராஜா மகாராணி ஆவதாகும். 3. அன்பான புத்தியுள்ளவர்கள் எப்போதும் தந்தையிடம் உண்மையாக இருப்பார்கள். கொஞ்சமும் மறைக்க முடியாது. 4. தினம் தோறும் அமிர்தவேளை எழுந்து அன்புடன் தந்தையை நினைவு செய்வார்கள். 5. ததீசி முனிவரைப் போல் சேவையில் எலும்புகளைக் கொடுப்பார்கள்.(கடினமாக சேவையில் ஈடுபாடு) 6. அவர்களின் புத்தி உலகியல் விஷயங்களில் அலைய முடியாது.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
அவர் எங்களை விட்டுப் பிரியப் போவதில்லை. .
ஓம் சாந்தி. பிரம்மாவின் வாய் வழி வம்சாவளியினர், பிராமண குல பூஷணர்கள் இந்த உறுதி மொழி கொடுக்கின்றனர், ஏனெனில் அவர்களின் அன்பு ஒரு தந்தையிடம் இணைந்து விட்டுள்ளது. நீங்கள் அறிவீர்கள் – இது வினாசத்தின் சமயம். வினாசம் ஆகத்தான் வேண்டும் என தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். வினாச காலத்தில் யாருடைய அன்பு தந்தையுடன் இருக்குமோ, அவர்கள்தான் வெற்றி அடைவார்கள் அதாவது சத்யுகத்தின் எஜமான் ஆவார்கள். சிவபாபா புரிய வைத்துள்ளார் – உலகின் எஜமானாக ராஜாவாகவும் ஆகின்றனர், பிரஜைகளும் ஆகின்றனர், ஆனால் பதவியில் நிறைய வித்தியாசம் உள்ளது. எந்த அளவு தந்தையிடம் அன்பு வைப்பார்களோ, நினைவில் இருப்பார்களோ அந்த அளவு உயர் பதவியை அடைவார்கள். பாபா புரிய வைத்துள்ளார் – தந்தையின் நினைவின் மூலம்தான் உங்களுடைய பாவ கர்மங்களின் சுமை பஸ்மம் ஆகும். வினாச காலத்தில் விபரீத (அன்பற்ற) புத்தி….. என நீங்கள் எழுதிப் போட முடியும். இதை எழுதுவதில் பயப்பட வேண்டிய விசயமே இல்லை. தந்தை சொல்கிறார் – அவர்களின் வினாசம் ஏற்படும் மற்றும் அன்பான புத்தியுள்ளவருக்கு வெற்றி ஏற்படும் என நான் சொல்கிறேன். தந்தை மிகத் தெளிவாக சொல்லி விடுகிறார். இந்த உலகில் யாரிடமும் அன்பு இல்லை. உங்களிடம் மட்டுமே உள்ளது. குழந்தைகளே, பரமாத்மா மற்றும் ஸ்ரீகிருஷ்ணரின் மகிமை தனிப்பட்டது என எழுதினீர்கள் என்றால் கீதையின் பகவான் யார் என்பது நிரூபணம் ஆகும் என பாபா சொல்கிறார். இது அவசியம் அல்லவா. பாபா மற்றொன்றை புரிய வைக்கிறார் – ஞானக்கடல், பதித பாவனர் பரமபிதாவா அல்லது நீரோட்டமுள்ள நதியா? ஞான கங்கையா அல்லது நீரோடும் கங்கையா? இது மிகவும் சகஜமானதேயாகும். மற்றொரு விஷயம் – கண்காட்சி நடத்தும்போது கீதா பாடசாலையில் உள்ளவர்களை மற்றவர்களுக்கும் முன்பாக அழைக்க வேண்டும். அவர்கள் நிறைய பேர் உள்ளனர். குறிப்பாக அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். ஸ்ரீமத் பகவத் கீதையை பயிற்சி செய்பவர்களுக்கு முதலில் அழைப்பிதழ் கொடுக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள்தான் மறந்து விட்டுள்ளனர், மற்ற அனைவரையும் அழைத்தபடி இருக்கின்றனர். இப்போது வந்து தீர்மானியுங்கள், பிறகு நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்களோ அதன்படி செய்யுங்கள் என அவர்களை அழைக்க வேண்டும். இவர்கள் கீதை சம்மந்தப்பட்டவர்களை அழைக் கின்றனர், ஒரு வேளை கீதை குறித்துதான் இவர்களுடைய பிரசாரமாக இருக்கும் என மனிதர்களும் புரிந்து கொள்வார்கள். கீதையின் மூலம்தான் சொர்க்கத்தின் ஸ்தாபனை ஆகியது. கீதைக்கு மிகவும் மகிமை உள்ளது, ஆனால் பக்தி மார்க்கத்தின் கீதை அல்ல. நான் உங்களுக்கு சத்தியத்தை தான் சத்தியமாக கூறுகிறேன் என தந்தை சொல்கிறார். மனிதர்கள் கொடுக்கும் அர்த்தம் தவறான தாகும். யாரும் உண்மையை சொல்வதில்லை, நான் தான் உண்மையை உரைக்கிறேன். பரமாத் மாவை எங்கும் நிறைந்தவர் என சொல்வது உண்மையல்ல. இவர்கள் அனைவரும் வினாசத்தை அடைவார்கள் மேலும் ஒவ்வொரு கல்பத்திலும் கூட அடைவார்கள். நீங்கள் முதன் முதலாக இந்த விசயத்தைப் புரிய வைக்க வேண்டும். தந்தை சொல்கிறார் – ஐரோப்பிய யாதவர்களுடையது வினாச காலத்தில் விபரீத புத்தி. வினாசத்திற்காக நல்ல விதமாக ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கல்புத்தியானவர்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை. நீங்களும் கூட கல்புத்தியாக இருந்தீர்கள், இப்போது தங்கபுத்தியாக வேண்டும். தங்கபுத்தியாக இருந்தீர்கள், ஆனால் கல்புத்தியாக எப்படி ஆனீர்கள்! இதுவும் கூட அதிசயமாகும். தந்தை ஞானம் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர் என்றுதான் சொல்லப்படு கிறார். மற்றபடி யார் தனக்கே நன்மை செய்து கொள்ள தெரிவதில்லையோ அவர்கள் பிறருக்கு நன்மையை எப்படி செய்வார்கள்? ஞானத்தை தாரணை செய்யாதவர்கள் பதவியும் கூட அதன் அடிப்படையிலேயே அடைவார்கள், சேவை செய்பவர்கள்தான் உயர்ந்த பதவியை அடைவார்கள். அவர்கள் மீதுதான் தந்தையும் அன்பு செலுத்துவார். வரிசைக்கிரமமான முயற்சியின்படிதான் இருக்கின்றனர். ஒரு சிலர் நாம் தந்தையின் மீது அன்பு செலுத்தாவிட்டால் பதவியும் கூட கிடைக்காது என்பதைக் கூட புரிந்து கொள்வதில்லை. சொந்தக் குழந்தையானாலும் மாற்றாந்தாய் குழந்தையானாலும் வினாச காலத்தில் அன்பான புத்தி இல்லை என்றாலும், தந்தையை பின்பற்றாவிட்டாலும் அங்கு சென்று குறைந்த பதவி அடைவார்கள். தெய்வீக குணங்களும் தேவை. ஒருபோதும் பொய் சொல்லக் கூடாது. தந்தை சொல்கிறார் – நான் சத்தியத்தை உரைக்கிறேன், யார் என்னுடன் அன்பு வைக்க வில்லையோ அவர்களுக்கு பதவியும் கிடைக்காது. முயற்சி செய்து 21 பிறவிகளுக்கான முழுமை யான ஆஸ்தி எடுக்க வேண்டும். ஆக, கண்காட்சி, விழா முதலானவற்றில் கீதா பாடசாலை யினருக்கு முதன் முதலாக அழைப்பிதழ் கொடுக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் பக்தர்கள் அல்லவா. கீதையை படிப்பவர்கள் கிருஷ்ணரை கண்டிப்பாக நினைவு செய்பவர்களாக இருக்கும், ஆனால் எதையும் புரிந்து கொள்வதில்லை. கிருஷ்ணர் குழல் இசைத்தார், பிறகு ராதை எங்கே சென்றார்? சரஸ்வதிக்கு வீணையை கொடுத்து விட்டனர், பிறகு குழலை கிருஷ்ணருக்கு கொடுத்து விட்டனர். மனிதர்கள் சொல்கின்றனர் – எங்களை அல்லா பெற்றெடுத்தார். ஆனால் அல்லாவை அறியவேயில்லை. பாரதத்தின் விஷயமே ஆகும். பாரதத்தில்தான் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அவர்களின் படங்கள் கோவில்களில் பூஜிக்கப்படுகின்றன. மற்ற இராஜாக்கள் முதலானவர்களின் சிலைகளை வெளியில் வைத்து விடுகின்றனர். அவைகளின் மீது பறவைகள் முதலானவை அசிங்கப் படுத்தியபடி இருக்கின்றன. லட்சுமி- நாராயணர், ராதா-கிருஷ்ணர் முதலானவர்களை எவ்வளவு முதல் தரமான இடத்தில் அமர்த்துகின்றனர். அவர்களை மகாராஜா – மகாராணி என சொல்கின்றனர், கிங் என்பது ஆங்கில வார்த்தையாகும். எவ்வளவு லட்சக் கணக்கான ரூபாய்கள் செலவழித்து கோவில்களை கட்டுகின்றனர், ஏனென்றால் அந்த மகாராஜா தூய்மையாக இருந்தார். ராஜா ராணி போல பிரஜைகள் அனைவருமே பூஜைக்குரியவர்கள். நீங்களே பூஜைக்குரியவர்களாக இருந்து பிறகு பூஜாரிகள் ஆகிறீர்கள். ஆக, முதல் விஷயம் தந்தையை நினைவு செய்யுங்கள் என்பதாகும். தந்தையை நினைவு செய்யும் பயிற்சியின் மூலம் தாரணை ஏற்படும். அந்த ஒருவருடன் அன்பு இல்லாவிட்டால் பிறகு மற்றவர்களுடன் அன்பு ஏற்பட்டு விடுகிறது. ஒருவர் மற்றவர் மீது அவ்வளவு அன்பு செலுத்தக் கூடிய குழந்தைகளும் இருக்கின்றனர், சிவபாபாவின் மீது கூட அவ்வளவு இருப்பதில்லை. சிவபாபா கேட்கிறார் – நீங்கள் புத்தியின் தொடர்பை என்னுடன் ஈடுபடுத்த வேண்டுமா அல்லது ஒருவர் மற்றவருடன் காதலன் – காதலியாக ஆக வேண்டுமா? பிறகு என்னை முற்றிலும் மறந்து விடுகின்றனர். நீங்கள் புத்தியின் தொடர்பை என்னுடன் இணைக்க வேண்டும், இதில் முயற்சி தேவைப்படுகிறது. புத்தி விடுபடுவதே இல்லை. சிவபாபாவுக்குப் பதிலாக இரவு பகலாக ஒருவர் மற்றவரைத்தான் நினைவு செய்தபடி இருக்கின்றனர். பாபாவின் பெயரை சொன்னால் துரோகிகள் ஆகிவிடுகின்றனர், பிறகு நிந்தனை செய்வதற்கு தயங்குவதே இல்லை. இந்த பாபாவை நிந்தனை செய்தால் சட்டென சிவபாபா கேட்டு விடுவார். பிரம்மாவிடம் படிக்காவிட்டால் சிவபாபாவிடம் படிக்க முடியாது. பிரம்மா இல்லா விட்டால் சிவபாபா கூட கேட்க முடியாது. ஆகையால் சாகார தந்தையிடம் சென்று கேளுங்கள் என சொல்கிறார். பல நல்ல நல்ல குழந்தைகள் இருக்கின்றனர், அவர்கள் சாகார (பிரம்மா) தந்தையை ஒப்புக் கொள்வதில்லை.இவர் முயற்சியாளர் என புரிந்து கொள்கின்றனர். அனைவரும் முயற்சியாளர் களே, ஆனாலும் தாய்-தந்தையைத்தான் பின்பற்ற வேண்டும். சிலர் புரிய வைக்கும்போது புரிந்து கொண்டு விடுகின்றனர், சிலருடைய அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் புரிந்து கொள்வதில்லை. சேவை செய்யத் தகுந்தவராக ஆவதில்லை. ஆனால் புத்தியை ஒரு தந்தையின் மீது வைக்க வேண்டும். இன்றைய நாட்களில் நிறைய பேர் வெளிப்பட்டுள்ளனர், அவர்கள் தமக்குள் சிவபாபா வருகிறார் என சொல்கின்றனர், இதில் மிகவும் எச்சரிக்கை தேவை. மாயையின் பிரவேசம் நிறைய உள்ளது. முன்னர் ஸ்ரீ நாராயணன் யாருக்குள் வந்து கொண்டிருந் தாரோ, அவர் கூட இன்று இல்லை. பிரவேசத்தால் மட்டும் எதுவும் நடக்காது. தந்தை சொல்கிறார் – என்னை மட்டும் நினைவு செய்யுங்கள். மற்றபடி எனக்குள் இவர் வருகிறார், அவர் வருகிறார். . . இவையனைத்தும் மாயை ஆகும். என்னுடைய நினைவே இல்லை என்றால் என்ன பிராப்தி ஆகும், தந்தையுடன் நேரான நினைவின் தொடர்பு வைக்காவிட்டால் பதவி எப்படி அடைவீர்கள், தாரணை எப்படி ஏற்படும்?
நீங்கள் என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என தந்தை சொல்கிறார். பிரம்மாவின் மூலம்தான் நான் புரிய வைக்கிறேன், பிரம்மாவின் மூலம்தான் ஸ்தாபனை ஆகியது. திரிமூர்த்தியும் கண்டிப்பாக தேவை. சிலரோ பிரம்மாவின் படத்தைப் பார்த்து குழம்பி விடுகின்றனர். சிலர் பிறகு கிருஷ்ணரின் 84 பிறவிகள் பற்றி பார்த்துவிட்டு குழம்புகின்றனர். படத்தை கிழித்தும் போட்டு விடுகின்றனர். அட, தந்தை இந்த படத்தை உருவாக்கினார். ஆக, தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் – மறக்காதீர்கள், தந்தையை மட்டும் நினைவு செய்தபடி இருங்கள். பந்தனத்தில் இருப்பவர்களும் கூட தவிக்கக் கூடாது, வீட்டில் அமர்ந்தபடி தந்தையை நினைவு செய்தபடி இருங்கள். பந்தனத்தில் இருப்பவர்களுக்கு இன்னும் உயர்ந்த பதவி கிடைக்க வாய்ப்புண்டு. குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுப்பவர் ஒரே ஒரு ஞானக்கடலேயாவார். ஆன்மீக ஞானம் ஒரு தந்தையைத் தவிர வேறு யாருக்குள்ளும் இல்லை. ஞானக்கடல் ஒரு பரமபிதா பரமாத்மாவே ஆவார், அவர்தான் விடுவிப்பவர் எனப்படுகிறார், இதில் பயப்படக்கூடிய விசயம் என்ன உள்ளது? தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார், குழந்தைகள் பிறகு பிறருக்குப் புரிய வைக்க வேண்டும். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் சத்கதியை அடைவீர்கள் என தந்தை சொல்கிறார். சத்யுகத்தில் இராம இராஜ்ஜியம் இருக்கும், கலியுகத்தில் இல்லை. சத்யுகத்திலோ ஒரே இராஜ்யம் இருக்கும். இந்த அனைத்து விசயங்களும் கூட உங்களுக்குள்ளும் வரிசைக் கிரமமாக இருக்கிறது, சிலருடைய புத்தியில் தாரணை ஆகிறது, சிலருக்கு ஆவதில்லை. வினாச காலத்தில் விபரீத புத்தி என சொல்லப்படுகிறது, பதவியை அடைய முடியாது. அனைத்துமே வினாசமாக வேண்டியுள்ளது. இந்த வார்த்தை சாதாரணமானதா என்ன! வினாச காலத்தில் அன்பான புத்தியாக ஆகுங்கள் என சிவபாபா சொல்கிறார். இது உங்களுடைய இறுதிப் பிறவி யாகும். இதில் ஒருவேளை நீங்கள் அன்பு வைக்காவிட்டால் பதவியும் கூட கிடைக்காது. உண்மை யான உள்ளத்தில் தலைவன் (சாஹிப்) திருப்தி அடைகிறார். ததீசி ரிஷியைப் போல் சேவையில் எலும்புகளைக் (உடல் உழைப்பை) கொடுக்க வேண்டும். எப்போதாவது யார் மீதாவது கிரகாச்சாரம் பிடித்து விட்டது என்றால் போதையே இறங்கி விடுகிறது, பிறகு பல விதமான புயல்கள் வந்தபடி இருக்கும். இதை விட லௌகிகத்தின் பக்கமே சென்று விடலாம், இங்கே எதுவும் சந்தோஷம் கிடையாது என வாய் திறந்து சொல்லி விடுகின்றனர். அங்கே நாடகம், சினிமா போன்றவை நிறைய உள்ளன என யார் இந்த விஷயங்களில் ஓடிப்போய் விடுகின்றனரோ அவர்கள் இங்கே நிலைக்க முடியாது, மிகவும் கடினம் ஆகும். ஆம், முயற்சியால் உயர் பதவியும் அடைய முடியும், குஷியில் இருக்க வேண்டும். பாபா (பிரம்மா) சொல்கிறார் – அதிகாலை எழுந்து உட்காராவிட்டால் மகிழ்ச்சியே இருப்பதில்லை. படுத்தே இருந்தால் அவ்வப்போது கொட்டாவி வந்து விடும். எழுந்து அமர்வதன் மூலம் நல்ல (ஞான) விஷயங்கள் வெளிவரும், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
இன்னும் கொஞ்சமே நாட்கள் மீதமுள்ளது. நாம் தந்தையிடமிருந்து உலகின் இராஜ்யத்தை அடைந்துக் கொண்டிருக்கிறோம். இதை அமர்ந்து நினைவு செய்தால் கூட குஷியின் எல்லை அதிகரிக்கும். அதிகாலையில் சிந்தனை நடந்தது என்றால் முழு நாளும் கூட குஷி இருக்கும். ஒருவேளை குஷி இல்லை என்றால் தந்தையிடம் அன்பான புத்தி இல்லை என அர்த்தம். அமிர்தவேளை ஏகாந்தம் நன்றாக இருக்கும், எவ்வளவு தந்தையை நினைவு செய்வீர்களோ அவ்வளவு குஷியின் எல்லை அதிகரிக்கும். இந்த படிப்பில் கிரகாச்சாரம் அமர்ந்து விடுகிறது, ஏனென்றால் தந்தையை மறக்கின்றனர். தந்தையிடம் ஆஸ்தி எடுக்க வேண்டும் என்றால் மனம்-சொல்-செயலால் சேவை செய்ய வேண்டும். இந்த சேவையிலேயே இந்த கடைசி பிறவியின் காலத்தைக் கழிக்க வேண்டும். ஒருவேளை மற்ற உலகியல் விசயங்களில் ஈடுபட்டு விட்டீர்கள் என்றால் பிறகு இந்த சேவையை எப்போது செய்வீர்கள். நாளை நாளை என்றபடி இறந்து விடுவீர்கள். தந்தை வந்ததே சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக. இங்கேயோ சண்டையில் எவ்வளவு பேர் இறக்கின்றனர், எவ்வளவு பேருக்கு துக்கம் ஏற்படுகிறது. அங்கேயோ சண்டை முதலானவை நடக்காது. இவை அனைத்தும் கடைசிக் காலத்திற்கானது, அனைத்தும் அழிந்து விடும். இப்படி ஒன்றுமில்லாத அனாதைகளாக இறப்பார்கள், யார் தலைவனுடையவர் களாக இருப்பார்களோ, அவர்கள் இராஜ்ய பாக்கியத்தை அடைவார்கள்.
நாங்கள் எங்களுடைய வருமானத்தின் மூலம், எங்களுடைய உடல்-மனம்-பொருளால் தான் எங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம், நாங்கள் பிச்சை எடுக்க மாட்டோம், அவசியமே இல்லை என கண்காட்சிகளில் கூட புரிய வைக்க வேண்டும். அளவற்ற சகோதர-சகோதரிகள் ஒன்று கூடி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றோம். நீங்கள் கோடிக் கணக்கில் சேமித்து தம்முடைய வினாசத்தை செய்கிறீர்கள், நாங்கள் பைசா பைசாவாக சேமித்து உலகின் எஜமானர்களாக ஆகிறோம். எவ்வளவு அதிசயமான விசயம். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. அமிர்த வேளை ஏகாந்தத்தில் அமர்ந்து தந்தையை அன்புடன் நினைவு செய்ய வேண்டும். உலகியல் விஷயங்களை விட்டு விட்டு ஈஸ்வரிய சேவையில் ஈடுபட வேண்டும்.
2. தந்தையிடம் உண்மையான உள்ளத்தை ஈடுபடுத்த வேண்டும். தங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு பிரியதர்ஷன் – பிரியதர்ஷினியாக ஆகி விடக்கூடாது. அன்பை ஒரு தந்தையிடம் வைக்க வேண்டும். தேகதாரிகளிடம் அல்ல.
வரதானம்:-
தற்சமயத்தில் ஒருவர் மற்றவரிடத்தில் பற்றுதல் இருக்கிறது, ஆனால் அன்பின் அடிப்படையில் அல்ல, சுயநலத்துடன் இருக்கிறது. சுயநலத்தின் காரணத்தினால் பற்றுதல் ஏற்படுகிறது, மேலும் பற்றுதலின் காரணத்தினால் விடுப்பட்டவர் ஆக முடியவில்லை, ஆகையால் சுயநலம் என்ற வார்த்தையின் பொருளில் நிலைத்திருங்கள் அதாவது முதலில் நான் என்ற இரதத்தை சுவாஹா (தேகத்தை அர்ப்பணம்) செய்யுங்கள். இந்த சுயநலம் சென்றுவிட்டால், விடுப்பட்டவர் ஆகிவிடலாம். இந்த ஒரு வார்த்தையின் பொருளை தெரிந்துக் கொள்வதின் மூலம் சதா ஒருவருடையவராக மற்றும் ஒரே இரசனையுடைவர் ஆகி விடலாம், இவர்கள் தான் சகஜ முயற்சி யாளராக ஆவர்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!