27 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

26 June 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே! இந்த சரீரம் என்ற இரதத்தில் வீற்றிருக்கும் ஆத்மா இரதியாகும். இரதி (இரதத்தை செலுத்துபவன்) என உணர்ந்து கர்மம் செய்வீர்களானால் தேக அபிமானம் விட்டுப் போகும்.

கேள்வி: -

பாபா பேசுகின்ற விதமானது, மனிதர்கள் பேசும் விதத்திலிருந்து முற்றிலும் வேறு பட்டது, எப்படி?

பதில்:-

பாபா இந்த இரதத்தில் இரதி ஆகி அமர்ந்து பேசுகிறார். மேலும் ஆத்மாக்களோடு தான் பேசுகிறார். சரீரங்களைப் பார்ப்பதில்லை. மனிதர்கள் தங்களை ஆத்மா எனப் புரிந்து கொள்வ தும் இல்லை, ஆத்மாக்களோடு பேசுவதும் இல்லை. குழந்தைகள் நீங்கள் இப்போது இந்த அப்பியாசம் செய்ய வேண்டும். எந்த ஓர் ஆகாரி (சரிரமற்ற) அல்லது சாகாரி (சரிரமுள்ள) உருவத்தைப் பார்த்தாலும் பார்க்காதிருங்கள். ஆத்மாவைப் பாருங்கள், மற்றும் ஒரு விதேகியை (அசரீரியை) நினைவு செய்யுங்கள்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

நீங்கள் தான் தாயும் தந்தையும்

ஓம் சாந்தி. குழந்தைகளுக்கு ஓம் சாந்தி என்பதன் அர்த்தமோ முற்றிலும் சகஜமாகப் புரிய வைக்கப்படுகிறது. ஒவ்வொரு விஷயமும் சகஜமானது. சகஜமாக இராஜ்யத்தை அடைய வேண்டும். எங்குள்ள இராஜ்யம்? சத்யுக இராஜ்யம். அது ஜீவன்முக்தி எனச் சொல்லப்படு கின்றது. அங்கே இராவணனின் இந்த பூதங்கள் இருப்பதில்லை. யாருக்காவது கோபம் வந்தால் உங்களிடம் இந்த பூதம் உள்ளது எனச் சொல்லப் படுகின்றது. யோகத்தின் அர்த்தம் – தன்னை ஆத்மா என உணர்ந்து பரமாத்மாவை நினைவு செய்வது. நான் ஆத்மா, இது எனது சரீரம். ஒவ்வொருவரின் சரீரமாகிய இரதத்தில் ஆத்மாவாகிய இரதி அமர்ந்துள்ளது. ஆத்மாவின் சக்தி யினால் இந்த இரதம் செல்கின்றது. ஆத்மா இந்த சரீரத்தை அவ்வப்போது எடுத்துக் கொள்ள வும் விட்டுவிடவும் வேண்டியுள்ளது. இதையோ குழந்தை கள் அறிவார்கள், பாரதம் இப்போது துக்கதாமமாக உள்ளது. கொஞ்ச காலத்திற்கு முன் சுகதாமமாக இருந்தது. சர்வசக்தி வாய்ந்த (ஆல்மைட்டி) அரசு இருந்தது. ஏனென்றால் ஆல்மைட்டி அத்தாரிட்டி பாரதத்தில் தேவதை களின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்திருந்தார். அங்கே ஒரு தர்மம் இருந்தது. இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு நிச்சயமாக இலட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அந்த இராஜ்யத்தை ஸ்தாபனை செய்பவராக பாபா தான் இருப்பார். பாபாவிடம் இருந்து அவர்களுக்கு ஆஸ்தி கிடைத்திருக்கும். அவர்களின் ஆத்மா 84 பிறவிகளின் சக்கரத்தில் சுற்றி வந்துள்ளது. பாரதவாசிகள் தான் இந்த வர்ணங்களில் (வம்சங்களில்) வருகின்றனர். சூத்திர வர்ணத்திற்குப் பிறகு சர்வோத்தம பிராமண வர்ணம் வருகின்றது. பிராமண வர்ணம் என்றால் பிரம்மாவின் முகவம்சாவளி. அந்த (வெளியுலக) பிராமணர்கள் குகவம்சாவளி (விகாரத்தில் பிறப்பவர்கள்). நாங்கள் பிரம்மா முகவம்சாவளி என்று அவர்கள் சொல்ல முடியாது. பிரஜாபிதா பிரம்மாவுக்கு நிச்சயமாகத் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள். குழந்தைகள் அறிவார்கள், இந்த பாரதம் பூஜைக்குரியதாக இருந்தது. இப்போது பூஜாரியாக உள்ளது. பாபாவோ சதா பூஜைக் குரியவராகவே உள்ளார். அவர் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவதற்காக நிச்சயமாக இங்கே வருகிறார். சத்யுகம் என்பது தூய்மையான உலகம். சத்யுகத்தில் பதீத்-பாவனி கங்கை என்ற இந்தப் பெயரே இருக்காது. ஏனென்றால் அதுவே தூய்மையான உலகம். அங்கிருப் பவர்கள் அனைவரும் புண்ணிய ஆத்மாக்கள். பாவாத்மா யாருமே இருக்க மாட்டார்கள். கலியுகத்தில் பிறகு ஒரு புண்ணியாத்மா கூட இல்லை. அனைவரும் பாவாத்மாக்கள். தூய்மை யானவர்கள் புண்ணியாத்மாக்கள் எனச் சொல்லப்படுகின்றனர். பாரதத்தில் தான் அதிக தான-புண்ணியம் செய்கின்றனர். இச்சமயம் பாபா வருகிறார் என்றால் அவர் மீது பலி ஆகின்றனர். சந்நியாசிகளோ வீடு-வாசலை விட்டுச் சென்று விடுகின்றனர். இங்கோ சொல்கின்றனர், பாபா, எங்களிடமுள்ள இவை அனைத்தும் உங்களுடையவை. தாங்கள் சத்யுகத்தில் அளவற்ற செல்வத்தைக் கொடுத்திருந்தீர்கள். பிறகு மாயா சோழி போல் ஆக்கி விட்டது. இப்போது இந்த ஆத்மாவும் கூட தூய்மையயை இழந்து விட்டது. உடல்-மனம்-செல்வம் அனைத்தும் தூய்மை யற்றது.. ஆத்மா முதல்-முதலில் தூய்மையாக உள்ளது, பிறகு பிறவி சக்கரம் சுற்றி வந்து கடைசியில் தமோபிரதானமான, பொய்யான நகை போல ஆகி விட்டுள்ளது. பார்ட் நடித்து-நடித்து தூய்மையற்றவராகி விடுகிறது.. கோல்டன், சில்வர் இந்த நிலைகளில் மனிதர்கள் வந்தாக வேண்டும். பாடவும் செய்கின்றனர், நீங்கள் தான் தாய்-தந்தை, நீங்கள் தான் லட்சுமி-நாராயணரின் முன்னாலும் போய் இந்த மகிமை செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கோ ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை இருக்கும். இராஜா-ராணிக்கு எப்படி சுகமோ, அப்படியே குழந்தைகளுக்கும் உள்ளது. அனைவருக்கும் அளவற்ற சுகம் உள்ளது. இப்போதோ 84-வது கடைசிப் பிறவியில் அளவற்ற துக்கம். பாபா சொல்கிறார், இப்போது மீண்டும் நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது – இந்த இரதத்தில் இரதி என்கிற ஆத்மா அமர்ந்துள்ளது. இந்த இரதி முதலில் 16 கலை சம்பூர்ணமாக இருந்தது. இப்போது கலை எதுவும் இல்லை. சொல்லவும் செய்கின்றனர், குணமற்ற என்னிடம் எந்த ஒரு நற்குணமும் இல்லை, நீங்கள் தான் இரக்கம் கொள்ள வேண்டும் என்று. யாரிடமும் நற்குணம் கிடையாது. தூய்மை இழந்து உள்ளனர், அதனால் தான் கங்கையில் போய்ப் பாவத்தைக் கழுவச் செல்கின்றனர். சத்யுகத்தில் இது போல் செல்வதில்லை. நதியோ அதே தான் இல்லையா? மற்றப்படி ஆம், இது போல் சொல்வார்கள் – அந்தச் சமயம் ஒவ்வொரு பொருளும் சதோபிர தானமாக இருக்கும். சத்யுகத்தில் நதிகளும் கூட மிகத் தெளிவாக, சுத்தமாக இருக்கும். நதிகளில் குப்பை முதலியவை எதுவும் இருக்காது. இங்கோ பாருங்கள், குப்பைகள் அதிகம் சேர்ந்து கொண்டே உள்ளன. அனைத்து அசுத்தங்களும் கடலுக்குச் செல்கின்றன. சத்யுகத்தில் இது போல் இருக்க முடியாது. எதையும் அங்கே அசுத்தமாக ஆக்குவதற்குச் சட்டமே கிடையாது. அனைத்துப் பொருள்களும் சுத்தமாக இருக்கும். ஆக, பாபா புரிய வைக்கிறார், இப்போது அனைவருக்கும் இது கடைசிப் பிறவி. விளையாட்டு முடிவடைகிறது. இந்த விளை யாட்டின் கால அளவு 5000 ஆண்டுகள். இதை நிராகார் சிவபாபா புரிய வைக்கிறார். அவர் நிராகார், அனைத்திலும் உயர்ந்த பரந்தாமத்தில் வசிப்பவர். பரந்தாமத்தில் இருந்து தான் நாம் அனைவரும் வருகிறோம். இப்போது கலியுகக் கடைசியில் டிராமா முடிவடைந்து மீண்டும் சரித்திர-பூகோளம் ரிப்பீட் ஆகிறது. மனிதர்கள் படிக்கிற இந்த கீதை முதலான சாஸ்திரங்கள் அனைத்தும் துவாபர யுகத்தில் இருந்து உருவாகியுள்ளன. இந்த ஞானம் மறைந்து விடுகிறது. இராஜயோகத்தை வேறு யாராலும் கற்றுத்தர இயலாது. அவர்களின் ஞாபகார்த்தமாகப் புத்தகங் களை மட்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களோ தாங்களே தர்ம ஸ்தாபனை செய்து புனர்ஜென் மத்தில் வந்தனர். அவர்களின் ஞாபகார்த்தமாகப் புத்தகங்கள் உருவாயின. இப்போது சங்கம யுகத்தில் தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை நடைபெறுகிறது. பாபா வந்து இந்த இரதத்தில் அமர்கிறார். குதிரைவண்டியின் விஷயம் கிடையாது. இந்த சாதாரண வயோதிகரின் இரதத்தில் பிரவேசமாகிறார். அவர் இரதி. பாடவும் படுகிறது, பிரம்மா முகவம்சா வளி பிரம்மாகுமார் குமாரிகள் என்று. இந்த பிரம்மாவும் தத்தெடுக்கப்பட்டவர். பாபா தாமே சொல்கிறார், நான் வந்து இந்த இரதத்தின் இரதி ஆகிறேன். இவருக்கு ஞானம் கொடுக் கிறேன். இவரிடமிருந்து ஆரம்பிக்கிறேன். மாதாக்களுக்குக் கலசத்தைக் கொடுக்கிறேன். இவரும் கூட மாதா தான். முதல்-முதலில் இவர் கேட்கிறார், பிறகு நீங்கள். இவர் சரீரத்தில் அவர் வீற்றிருக் கிறார். ஆனால் யாருக்கு முன்பாக இருந்து சொல்வார்? பிறகு ஆத்மாக்களோடு அமர்ந்து பேசுகிறார். இது போல் ஆத்மாக்களோடு பேசுபவர் வேறு எந்த ஒரு வித்வானும் இருக்க மாட்டார். நான் உங்களுடைய தந்தை. ஆத்மாக்கள் நீங்கள் நிராகார். நானும் கூட நிராகார். நான் ஞானக்கடல், சொர்க்கத்தைப் படைப்பவன். நான் நரகத்தைப் படைப்ப தில்லை. மாயா தான் நரகமாக ஆக்குகிறது. பாபா சொல்கிறார், நானோ படைப்பவன் என்றால் சொர்க்கத்தைத் தான் படைப்பேன். நீங்கள் பாரதவாசிகள் சொர்க்கவாசிகளாக இருந்தீர்கள். இப்போது நரகவாசிகளாக ஆகியிருக்கிறீர்கள். நரகவாசி ஆக்கியது இராவணன். ஏனென்றால் ஆத்மா இராவணனின் வழிப்படி நடக்கிறது. இச்சமயம் ஆத்மாக்கள் நீங்கள் இராம் சிவபாபா ஸ்ரீஸ்ரீயின் வழிப்படி நடக்கிறீர்கள். பாபா புரிய வைக்கிறார், இப்போது அனைவரின் பார்ட்டும் முடிந்து விட்டது. எப்போது ஆத்மாக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்கிறார்களோ, மேலிருந்து அனை வரும் வந்து விடுகிறார்களோ, அப்போது திரும்ப செல்வது ஆரம்பமாகும். பாரதத்தில் இப்போது அநேக தர்மங்கள் உள்ளன. ஒரே ஓர் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மட்டும் இல்லை. யாருமே தங்களை தேவி-தேவதா எனச் சொல்லிக் கொள்வதில்லை. தேவதைகளின் மகிமை பாடுகின்றனர்….. சர்வகுண சம்பன்ன பிறகு தங்களை பாவி, கீழ்தரமானவர்கள் எனச் சொல்லிக் கொள்வார்கள். துவாபர யுகத்தில் இருந்து இராவண இராஜ்யம் ஆரம்பமாகின்றது. இராம ராஜ்யம் என்பது பிரம்மாவின் பகல், இராவண இராஜ்யம் என்பது பிரம்மாவின் இரவு. இப்போது பாபா எப்போது வருவார்? எப்போது பிரம்மாவின் இரவு முடிவடைகிறதோ, அப்போது வருவார் இல்லையா? மேலும் இந்த பிரம்மாவின் உடலில் வருவாரென்றால் அப்போது அவரது வாயின் மூலம் பிராமணர்கள் பிறவி எடுப்பார்கள். அந்த பிராமணர்களுக்குத் தான் இராஜயோகம் கற்பிக்கிறார். பாபா சொல்கிறார், ஆகாரி, சாகாரி, நிராகாரி சித்திரங்கள் என்னென்ன சித்திரங்கள் உள்ளனவோ, அவற்றை நீங்கள் நினைவு செய்யக் கூடாது. உங்களுக்கோ இலட்சியம் தரப்படு கின்றது. மனிதர்களோ, சித்திரங்களைப் பார்த்து நினைவு செய்கின்றனர். பாபா, இப்போது சித்திரங்களைப் பார்ப்பதை நிறுத்தி விடுங்கள் என்று சொல்கிறார். இது பக்தி மார்க்கம். இப்போதோ ஆத்மாக்கள் நீங்கள் திரும்பவும் என்னிடம் வர வேண்டும். பாவங்களின் சுமை தலை மீது உள்ளது. பாவாத்மா ஆகத் தான் வேண்டும். கர்ப்ப ஜெயிலில் ஒவ்வொரு பிறவியின் பாவங்கள் முடிந்து போகும் என்பது கிடையாது. கொஞ்சம் முடிந்து போகும், கொஞ்சம் மிஞ்சியிருக்கும். நான் இப்போது வழிகாட்டி ஆகி வந்திருக் கிறேன். இச்சமயம் ஆத்மாக்கள் அனைவரும் மாயாவின் வழிப்படி நடக்கின்றனர். பாபா சொல்கிறார், நானோ பதீத-பாவனராக, சொர்க்கத்தின் படைப்பாளராக இருக்கிறேன். என்னுடைய வேலையே நரகத்தை சொர்க்கமாக ஆக்குவது தான். சொர்க்கத்தில் இருப்பதோ ஒரே தர்மம், ஒரே இராஜ்யம். அங்கே எந்த ஒரு பிரிவினையும் கிடையாது. பாபா சொல்கிறார், நான் உலகத்தின் எஜமானன ஆவதில்லை. உங்களைத் தான் ஆக்குகிறேன். பிறகு இராவணன் வந்து உங்களிடமிருந்து இராஜ்யத்தை அபகரிக்கிறான். இப்போது அனைவருமே தமோபிரதானம், கல்புத்தியினர். சங்கமயுகத்தில் நீங்கள் தங்க புத்தி உள்ளவ ராக ஆகிறீர்கள். பாபா சொல்கிறார், என்னை மட்டுமே நினைவு செய்யுங்கள், புத்தியோகத்தை மேலே நிலைத்திருக்க வையுங்கள். எங்கே செல்ல வேண்டுமோ, அதைத் தான் நினைவு செய்ய வேண்டும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் கிடையாது. அவர் தான் உண்மை யான சக்கரவர்த்தி, உண்மையைச் சொல்பவர். ஆக, எந்த ஒரு சித்திரத்தையும் நினைவு செய்ய வேண்டாம். இந்த சிவனுடைய உருவத்தையும் தியானம் செய்ய வேண்டாம். ஏனென்றால் சிவனோ இது போல் இல்லை. எப்படி நாம் ஆத்மா புருவமத்தியில் இருக்கிறோமோ, அது போல் பாபாவும் சொல்கிறார், நான் ஒரு சிறு இடத்தை எடுத்துக் கொண்டு இந்த (பிரம்மாவின்) ஆத்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து விடுகிறேன். இரதி ஆகி இவருக்கு அமர்ந்து ஞானம் தருகிறேன். இவருடைய ஆத்மாவிலும் கூட ஞானம் இருந்த தில்லை. எப்படி இவருடைய ஆத்மா இரதி சரீரத்தின் மூலம் பேசுகிறதோ, அதே போல் நானும் இந்த உறுப்புகள் மூலம் பேசுகிறேன். இல்லையென்றால் எப்படிப் புரிய வைப்பேன்? பிராமணர் களைப் படைப்பதற்காக அவசியம் பிரம்மா வேண்டும். இந்த பிரம்மா தான் பிறகு நாராயணன் ஆவார். இப்போது நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். பிறகு சூரியவம்சி ஸ்ரீ நாராயணனின் குலத்தில் வருவீர்கள். இப்போதோ முற்றிலும் ஏழையாகி விட்டீர்கள். சண்டை-சச்சரவு செய்து கொண்டே இருக்கிறீர்கள். குரங்கை விடவும் மோசமாக ஆகி விட்டீர்கள். குரங்கினிடம் 5 விகாரங்கள் மிகக் கடுமையானவையாக உள்ளன. காம, கோபம்…. அனைத்து விகாரங்களும் குரங்கினிடம் அந்த மாதிரி உள்ளன, கேட்கவே வேண்டாம். குட்டி இறந்து போனால் அதன் எலும்புகளையும் கூட விடுவதில்லை. மனிதர்களும் தற்போது அது போல் உள்ளனர். குழந்தை இறந்து விட்டால் 6-8 மாதங்கள் வரை அழுது கொண்டே இருப்பார்கள். சத்யுகத்திலோ அகால மரணம் கிடையாது. யாரும் அழுது புரளுவதும் கிடையாது. அங்கே எந்த ஒரு சைத்தானும் இல்லை.

பாபா இச்சமயம் குழந்தைகளாகிய உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். வீடு- வாசலையும் கூட பராமரியுங்கள். அதில் இருந்தவாறே சந்நியாசிகள் கூடச் செய்ய முடியாத அத்தகைய ஓர் அற்புதம் செய்து காட்டுங்கள். இந்த சதோபிரதான சந்நியாசத்தைப் பரமாத்மா தான் கற்றுத் தருகிறார். அவர் சொல்கிறார், இந்தப் பழைய உலகம் இப்போது முடிந்துவிடப் போகிறது. அதனால் இதன் மீது வைத்த மோகத்தை விட்டு விடுங்கள். அனைவரும் திரும்பிச் சென்றாக வேண்டும். தேகத்துடன் கூடவே பழைய பொருள்கள் என்னென்ன உள்ளனவோ, அவற்றை மறந்து விடுங்கள். 5 விகாரங்களை என்னிடம் கொடுத்து விடுங்கள். தூய்மையிழந்தீர்களானால் தூய்மையான உலகத்திற்கு வர முடியாது. பாபாவிடம் உறுதிமொழி கொடுங்கள், இந்தக் கடைசிப் பிறவிக்காக. அதன் பிறகு தூய்மைத் தன்மை நிலையானதாக ஆகி விடும். 63 பிறவி களாக விஷயத்திலேயே மூழ்கி எழுந்தீர்கள். முற்றிலும் அசுத்தமாகி விட்டீர்கள். தங்களின் தர்மம், கர்மத்தை மறந்து விட்டீர்கள். இந்து தர்மம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். பாபா சொல்கிறார், பாரதம் சொர்க்கமாக இருந்தது, நாம் தான் தேவதையாக இருந்தோம் என்பதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேனென்கிறீர்கள்? நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்தேன். நீங்கள் பிறகு சொல்கிறீர்கள், கிருஷ்ணர் கற்பித்தார் என்று! கிருஷ்ணர் என்ன அனைவரின் தந்தையா, சொர்க்கத்தைப் படைப்பவரா? பாபாவோ நிராகார், அனைத்து ஆத்மாக் களின் தந்தை. பிறகு அவரை சர்வவியாபி எனச் சொல்கிறீர்கள். சிவனையும் சங்கரையும் கூட ஒன்றாக்கி விடுகிறீர்கள். சிவனோ பரமாத்மா. பரமாத்மா சொல்கிறார், நான் தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வருகிறேன். அதை இப்போது ஸ்தாபனை செய்கிறேன், பிறகு விஷ்ணுவின் இரண்டு ரூபங்களாகிய இலட்சுமி-நாராயணர் இராஜ்யம் செய்வார்கள். விஷ்ணுவில் இருந்து தான் வைஷ்ணவர் என்ற சொல் வெளிப்பட்டுள்ளது.

தற்சமயமோ அனைவரும் பாவாத்மாக்கள். அங்கே இந்தக் காமக் கட்டாரி செலுத்தி ஒருவர் மற்றவரைச் சாகடிப்பதில்லை. உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்பவர் ஒரே ஒரு சத்குரு மட்டுமே. மற்ற அனைவரும் மூழ்கடிப்பவர்கள். சங்கமம் மற்றும் சொர்க்கம் ஒன்றுக் கொன்று அருகில் இருக்கும் காரணத்தால் நரகத்தின் விஷயத்தை சொர்க்கத்திற்குக் கொண்டு சென்று விட்டனர். உண்மையில் கம்சன், இராவணன் முதலான அனைவரும் தற்சமயத்தில் தான் உள்ளனர். அங்கே இவர்கள் இருக்க முடியாது. ஆக, இரதத்தின் மீது இரதியைக் காட்டு கின்றனர் – உண்மையில் இரதம் இவர் தான் (பிரம்மா). இவர் நந்திகணம், பாகீரதம் என்றும் சொல்லப்படுகிறார். நீங்கள் அனைவரும் அர்ஜுனர்கள். உங்களுக்குச் சொல்கிறார் – இந்த இரதத்தில் வந்துள்ளேன்- யுத்த மைதானத்தில் உங்களை மாயா மீது வெற்றி கொள்ள வைப்பதற்காக. சத்யுகத்தில் இராவணன் இருப்பதில்லை, அவனை எரிப்பதும் இல்லை. இப்போதோ விநாசம் ஆகாத வரையிலும் இராவணனை எரித்துக் கொண்டே தான் இருப்பார் கள். எவ்வளவு தான் ஆபத்துகள் வந்தாலும், தசராவின் போது இராவணனை எரிப்பார்கள். பிறகு கடைசியில் இந்த இராவண சம்பிரதாயம் முடிந்து போகும். சத்கதி அளிக்கும் வள்ளலோ ஒருவர் தான். மனிதர்கள் மனிதர்களுக்கு சத்கதி அளிக்க முடியாது. இந்த தேவதைகளின் இராஜ்யம் இருந்த போது முழு உலகத்தின் மீதும் இவர்களின் இராஜ்யம் மட்டுமே இருந்தது. மற்ற தர்மங்கள் எதுவும் அப்போது கிடையாது. இப்போது மற்ற தர்மங்கள் அனைத்தும் உள்ளன, தேவதைகளின் தர்மம் இல்லை. அதனுடைய ஸ்தாபனை இப்போது நடைபெற்றுக் கொண்டுள்ளது. தேவதா தர்மத்தினர் தான் வந்து சூத்திரரில் இருந்து பிராமணர் ஆவார்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. சதோபிரதான சந்நியாசம் செய்ய வேண்டும். இந்தப் பழைய உலகில் இருந்தவாறே இதன் மீதுள்ள பற்றை விட்டுவிட வேண்டும். தேகத்துடன் கூடவே அனைத்துப் பழைய பொருள்களையும் மறந்துவிட வேண்டும்.

2. தனது புத்தியோகத்தை மேலே நிலையாக ஈடுபடுத்த வேண்டும். எந்த ஓர் உருவம் அல்லது தேகமுடையவரையும் நினைவு செய்யக் கூடாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.

வரதானம்:-

சங்கமயுகத்தில் சிரேஷ்ட பாக்கியசாலி ஆத்மாக்களாகிய உங்களுக்கு பரமாத்மா விடமிருந்து என்ன ஸ்ரீமத் கிடைத்து கொண்டிருக்கிறது – இந்த உயர்ந்த ஸ்ரீமத் தான் உயர்ந்த பாலணை (ஊட்டமளிப்பது) ஆகும். ஸ்ரீமத் இன்றி அதாவது பாலனை இல்லாமல் ஒரு அடிக்கூட எடுத்து வைக்க முடியாது. அப்படிப்பட்ட பாலனை சத்யுகத்திலும் கிடைக்காது. எங்களை வளர்க்கக் கூடியவர் சுயம் பகவான் என்று நடைமுறையில் அனுபவத்தோடு இப்பொழுது கூறமுடியும். இந்த நஷா (போதை) சதா இமர்ஜாகி (வெளிப்படுதல்) எல்லைக்கு அப்பாற்பட்ட பொக்கிஷங்களினால் நிறைந்தவராகி தன்னை அழிவற்ற ஆஸ்திக்கு அதிகாரியாக அனுபவம் செய்வீர்கள்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top