27 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
26 January 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே, உங்களுடைய சுகமான நாட்கள் இப்பொழுது வந்துகொண்டிருக்கின்றன. உலகாய கௌரவம், கலியுக குல வழக்கங்களை விடுத்து இப்பொழுது நீங்கள் வருமானம் செய்யுங்கள், தந்தையிடமிருந்து முழுமையான ஆஸ்தியைப் பெறுங்கள்.
கேள்வி: -
எந்த முயற்சியின் மூலம் (அந்த் மதி சோ கதி) இறுதி கால எண்ணத்திற்கேற்ற நற்கதி ஏற்படும்?
பதில்:-
பாபா கூறுகின்றார், குழந்தைகளே, நீங்கள் இதுவரை என்னவெல்லாம் கற்றிருக் கிறீர்களோ, அவற்றை மறந்து ஒரு விஷயத்தை மட்டும் நினைவு செய்யுங்கள் – மௌனமாக இருங்கள். தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்யுங்கள், தந்தை குழந்தைகளுக்கு எந்தக் கஷ்டமும் கொடுப்பதில்லை. ஆனால், வீண் அலைச்சலிருந்து காப்பாற்றுகின்றார். ஏழைக் குழந்தைகள் திருமணம் போன்ற வற்றிற்காக கடன் வாங்குகிறார்கள், பாபா அதிலிருந்தும் விடுவிக்கின்றார். குழந்தைகளே, நீங்கள் தூய்மை ஆனீர்கள் என்றால் கடைசி நேரத்தின் நற்கதி ஏற்பட்டுவிடும் என்று பாபா கூறுகின்றார்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
பொறுமையாக இருங்கள் மனிதரே….
ஓம்சாந்தி. இது பக்தி மார்க்கத்தின் பாடல் ஆகும். இதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்திருக்க வில்லை. குழந்தைகள் மட்டும் தான் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது நமது சுகமான நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்காகவே நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எவ்வளவு முயற்சி செய்வீர்களோ அவ்வளவு சுகம் கிடைக்கும். ஸ்ரீமத்படி பையை நிறைக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தை பிரம்மாவின் இரவு என்று சொல்லப்படுகிறது. பதீத பாவனர் தந்தை எப்பொழுது வருவார் என்பது அவர்களுக்குத் தெரியாது. கலியுகத்தின் இறுதி மற்றும் சத்யுகத்தின் ஆதியைத் தான் சங்கமயுகம் என்று சொல்லப்படுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் அவர்களை கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழிப்படையச் செய்கிறீர்கள். ஒரு பதீத பாவனரை, ஞானக்கடல் தந்தையை மனிதர்கள் நினைவு செய்கின்றனர். தண்ணீர் நதிகளை உருவாக்கும் அந்தக் கடலை நினைவு செய்வ தில்லை. அங்கோ நதிகளின் சங்கமம் நடக்கிறது, கடல் மற்றும் நதிகளின் சங்கமம் நடப்ப தில்லை. கடல் (தந்தை) மற்றும் நதிகளின் (குழந்தைகள்) சந்திப்பில் தான் சிறப்பு உள்ளது. கடல் அவசியம் வேண்டும் அல்லவா! சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக்கூடிய சத்தியத் தந்தை, நரனிலிருந்து நாராயணர் ஆவதற்கான சத்தியக் கதையைக் கூறுகின்றார். ஹே! பதீத பாவனரே வாருங்கள் என்று அவரைத் தான் நினைக்கின்றனர். எப்பொழுது பரமாத்மா வருகின்றாரோ, அப்பொழுதே ஆத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் சந்திப்பு சங்கமயுகத்தில் நடைபெறுகிறது என்று கூறமுடியும். இது உண்மையிலும் உண்மையான மேளா (திருவிழா) ஆகும். இந்த ஒரு புருஷோத்தம சங்கமயுகத்தில் தான் ஆத்மா மற்றும் பரமாத்மாவின் சந்திப்புத் திருவிழா நடைபெறுகிறது, இதன் மூலம் பதீத உலகம் அவசியம் தூய்மையாக மாறு கிறது என்று நீங்கள் எழுத முடியும். அது தூய்மையான உலகம், இது தூய்மையற்ற உலகம். இந்த உண்மையான சந்திப்புத் திருவிழாவின் போதே பதீத பாவனர் (தூய்மை ஆக்குபவர்) தந்தை வந்து தூய்மையற்ற ஆத்மாக்களை தூய்மை ஆக்கி உடன் அழைத்துச் செல்கின்றார். பரமாத்மா மற்றும் ஆத்மாக்களின் சந்திப்பானது தூய்மையற்ற உலகை தூய்மை ஆக்குவதற்காகவே நடை பெறுகிறது. எனவே, இதனுடைய சித்திரத்தையும் உருவாக்க வேண்டும். பாபா இவை அனைத்தைப் பற்றியும் முன்கூட்டியே புரிய வைக்கின்றார். திரிவேணி சங்கமத்திற்குப் பெரும்பாலும் சிவராத்திரியின் பொழுதே செல்கின்றனர். இவை அனைத்தையும் புரிய வைப் பதற்கான போதை அதிகரிக்க வேண்டும். யார் நல்ல முறையில் புரிய வைக்க வல்லவரோ, அவர் யுக்தியுடன் (திறமையாக) புரிய வைப்பார். இல்லையென்றால், திணறிக் கொண்டிருப்பார். கும்பமேளாவானது உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை நிரூபிக்க வேண்டும். இது பதீத உலகமானது பாவன உலகமாகும் சங்கமம் ஆகும். எனவே, உண்மையிலும் உண்மையான மேளா இது. அவர்கள் கும்பகர்ண அஞ்ஞான உறக்கத்தில் தூங்கிக் கொண்டிருக் கிறார்கள். பரமாத்மாவை சர்வவியாபி என்று சொல்லிவிட்டனர். அவரோ பதீத பாவனர், பாவனம் ஆக்குவதற்காக அவர் வரவேண்டும். ஏறும் கலையில் செல்வதற்கான ஒரே புருஷோத்தம சங்கமயுகம் இதுவே ஆகும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்திற்குப் பின்னர் கீழே இறங்கித்தான் ஆக வேண்டும். கடந்த காலத்தை முடிந்து விட்டது என்று கூறுவார்கள். பழமை ஆகி ஆகி முற்றிலும் பழமையானதாக ஆகிவிடும். உங்களுடைய சுவஸ்திக் சின்னம் கூட அவ்வாறே உருவாக்கப்பட்டுள்ளது. சதோபிரதானம், சதோ, ரஜோ, தமோ நாம் இப்பொழுது தந்தையிடமிருந்து சதா சுகத்திற்கான ஆஸ்தியை அடைவதற்கான முயற்சி செய்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா மிக எளிமையாக முயற்சி செய்விக் கின்றார். எந்தக் கஷ்டமும் இல்லை. மேலும் வீண் அலைச்ச-லிருந்து காப்பாற்றுகின்றார். திருமணம் போன்றவற்றில் எவ்வளவு செலவாகிறது, ஏழ்மையானவர்கள் கடன் வாங்கியாவது திருமணம் செய்து வைக்க வேண்டியதாக உள்ளது. பாபா இந்தக் கடன் போன்றவற்றில் இருந் தெல்லாம் விடுவிக்கின்றார். நரகத்தில் விழுவதிலிருந்து காப்பாற்றுகின்றார், செலவுகளிலிருந் தும் விடுவிக்கின்றார். ஆகையினால் இங்கு ஏழ்மையானவர்கள் அதிகம் வருகின்றனர். எவ்வளவு நல்ல நல்ல கன்னிகைகள் வந்தனர். திடீரென்று காமத்தின் புயல் வீசியது, நிச்சயம் செய்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்த பின் மிகப்பெரிய தவறு நடந்து விட்டது என்று வருந்துகின்றனர். காலம் உணர்த்துகின்றது அல்லவா. எனவே, காப்பாற்று வதற்காக தந்தை எவ்வளவு முயற்சி செய்கின்றார்! செல்வந்தர்களோ வரமுடியாது. அவர்கள் தானும் ஆஸ்தி பெறுவதில்லை, படைப்பையும் உண்மையான வருமானம் செய்ய விடுவ தில்லை. ஏழைகளிடத்திலும் மிக மோசமான பழக்கவழக்கங்கள் உள்ளன. உலகாய கௌரவம், குல வழக்கம் தாழ்த்திவிடுகிறது. சில ஆண், பெண் குழந்தைகள் சரியாகப் படிக்கவில்லை என்றால், நரகத்தில் சென்று விடுகின்றனர். தந்தை நரகத்திலிருந்து விடுவிப்பதற்காக வந்திருக்கின்றார். யாரும் விடுபடுவதில்லை. மூக்கில் கயிறை (முக்கணாங்கயிறு) போட்டு காப்பாற்றுவதற்கு (நீங்கள்) மிருகம் அல்லவே. புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். தந்தை குழந்தைகளின் படைப்பாளராக இருக்கும் காரணத்தினால், குழந்தைகளே, நீங்கள் உண்மையான வருமானம் செய்யுங்கள், குழந்தைகளையும் செய்ய வையுங்கள், என்று புரிய வைக்கின்றார். ஆனாலும் எவ்வளவு பிரச்சனை வருகிறது! மனைவி வந்தால் கணவன் வருவதில்லை, கணவன் வந்தால் மகன் வருவதில்லை, ஆகவே பிரச்சனை வருகிறது. நல்ல முறையில் புரிய வைக்கின்றார். தூய்மையே முக்கிய மான விசயம் ஆகும்.
பாபா, கோபம் வந்துவிட்டது என்று குழந்தைகள் எழுதுகின்றனர். நீங்கள் குழந்தைகள் மீது ஏன் கோபம் கொள்கிறீர்கள்? சேஷ்டை செய்தால் பெரிய அறையில் போட்டு பூட்டிவிடுங்கள்; கை, காலை கட்டிப் போடுங்கள் அல்லது உணவு கொடுக்காதீர்கள் என்று புரிய வைக்கப்படுகிறது. யசோதை கிருஷ்ணரின் கையைக் கட்டி உரலில் கட்டி போட்டுவிட்டதாகக் காண்பிக்கிறார்கள். ஆனால், அத்தகைய விசயம் எதுவும் கிடையாது. அங்கேயோ மரியாதைபடி நடக்கும் உத்தமர்களாக (மரியாதா புருஷோத்தம்), மிக இரமணீகரமான (அழகான) குழந்தைகளே இருப்பார்கள். இங்கே கூட சில குழந்தைகள் மிக நன்றாக இருக்கிறார்கள். பேசும் விதம் மிக மேன்மையாக இருக்கும். இங்கு அனேகக் குழந்தைகள் உள்ளனர். சிலரோ ஸ்ரீமத்படி நடப்பதே இல்லை, நியமப்படி நடப்பது இல்லை. நியமங்களும் உள்ளன அல்லவா. இராணுவத்தில் வேலை செய்பவர்கள் அங்கு சாப்பிட வேண்டியதாக உள்ளது பாபா, என்ன செய்வது? என்று கேட்கின்றனர். சுத்தமான உணவை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். வேறு வழியில்லாத நிலைமையில் திருஷ்டி கொடுத்துவிட்டு உண்ணுங்கள், வேறு என்ன செய்வது என்று பாபா கூறுகின்றார். இரண்டு ரொட்டி கிடைக்கப் பெறமுடியும். தேன், வெண்ணெய், உருளைக்கிழங்கு பெற்றுக் கொள்ள முடியும். இந்த பொருட்களை உண்ணும் பழக்கம் ஏற்பட்டுவிட்டால் பிறகு அது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் கேட்க வேண்டும். பாபா மிக எளிதாக ஆக்கிவிடுகிறார். தூய்மை ஆவதே அனைத்தையும் விட நல்லது ஆகும். வீட்டையே விற்றுவிடும் சில குழந்தைகளும் இருக்கிறார்கள். தந்தையின் ஆஸ்தியை செலவழித்து பெயரை அவப்பெயர் ஆக்கிவிடுகின்றனர். நம்முடைய சுகமான நாட்கள் வந்து கொண்டிருக் கின்றன என்றால் ஏன் நாம் முயற்சி செய்து உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை அடையக் கூடாது என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் உள்ளது. முயற்சியின் மூலம் தான் பதவி கிடைக்கும். மம்மா பாபா சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர்கள் ஆகின்றார்கள். ஞான ஞானேஷ்வரி பின்னர் இராஜ இராஜேஷ்வரி ஆகப் போகிறார்கள். உங்களுக்கும் கூட ஈஸ்வரன் ஞானம் அளிக்கின்றார். எனவே, நீங்களும் இந்த ஞானத்தைப் பெற்று பிறகு தனக்கு சமமாக ஆக்கினீர்கள் என்றால் இராஜ இராஜேஷ்வரி ஆவீர்கள். தாய் தந்தையை பின்பற்ற வேண்டும். இதில் மூட நம்பிக்கைக்கான விசயம் எதுவும் இல்லை. சந்நியாசிகளுடைய சீடர்கள் ஆகின்றார்கள், ஆனால் அவர்களை பின்பற்றுவதில்லை. யார் சந்நியாச தர்மத்திற்குச் செல்ல வேண்டுமோ அவர் வீட்டில் நிலைத்திருக்கமாட்டார். சந்நியாசி ஆவதற்கான முயற்சியை அவர் அவசியம் செய்வார். நாடகத்தின் அனுசாரமாகவே பக்தி மார்க்கம் ஆரம்ப மானது. சதோ, ரஜோ, தமோ நிலைக்கு அனைவரும் வந்துதான் ஆகவேண்டும். அனைவரையும் விட முதலில் ஸ்ரீகிருஷ்ணரைப் பாருங்கள், அவரும் கூட 84 பிறவிகள் அவசியம் எடுக்க வேண்டும். இப்பொழுது இறுதிப்பிறவியில் இருந்தால் தானே பிறகு துவக்கத்தில் வருவார். இலட்சுமி நாராயணர் முதல் எண்ணில் இருந்து பிறகு கடைசியில் இருக்கிறார்கள், பின்னர், முதல் எண்ணில் வருவார்கள். அவர்களை ஜெகத்நாதனாக (உலகின் தலைவராக) யார் ஆக்கியது? எப்பொழுது ஆஸ்தி கிடைத்தது? சங்கமயுகத்தில் அவர்களுக்கு இந்த ஆஸ்தி கிடைத்திருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். முழு இராஜ்யம் ஸ்தாபனை ஆகவேண்டும். பிராமணர்கள் 84 பிறவிகள் எடுத்திருக்கிறார்கள், இப்பொழுது நடிப்பு நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் புரிந்து கொள்வதற்கான விசயங்கள் ஆகும். ஆனால், சிலர் ஒன்றை தாரணை செய்கிறார்கள், சிலர் வேறு ஒன்றை செய்கிறார்கள் இதில் தான் முயற்சிக்கான விசயம் உள்ளது. நான் வந்திருக்கின்றேன், என்னை நினைவு செய்தீர்க ளென்றால் யோகத்தின் மூலம் உங்களுடைய விகர்மங்கள் (பாவ கர்மங்கள்) வினாசம் ஆகி விடும் என்று தந்தை பிரஜாபிதா பிரம்மாவின் வாய் மூலம் எதிரில் இருந்து கூறுகின்றார். ஆத்மா கூறுகிறது – ஆம் பாபா, நான் இந்தக் காதுகள் மூலம் கேட்கின்றேன். சரீரம் இல்லாமல் நீங்கள் எவ்வாறு இராஜயோகம் கற்பிப்பீர்கள்? சிவஜெயந்தி கூட அவசியம் கொண்டாடப் படுகிறது. நான் வருகின்றேன் ஆனால் யாருக்கும் தெரிவதில்லை.
நான் கல்ப கல்பமாக 84 பிறவிகள் எடுக்கும் பிரம்மாவின் உடலில் தான் வருகின்றேன், இதில் மாற்றம் ஏற்படமுடியாது என்று பாபா புரிய வைக்கின்றார். இவர் இராஜ இராஜேஷ்வரராக இருந்தார் பிறகு இப்பொழுது ஞான ஞானேஷ்வர் ஆகி பிறகு மீண்டும் இராஜ இராஜேஷ்வரர் ஆகவேண்டும். இது உருவான உருவாக்கப்பட்ட நாடகம் ஆகும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் என்று புகழ் பாடப்படுகிறது. பிரஜாபிதா என்று பிரம்மாவைத் தான் சொல்லமுடியும். விஷ்ணுவையோ அல்லது சங்கரரையோ சொல்ல முடியாது. பிரஜை என்றால் மனிதர். மனிதரைத் தான் தேவதை ஆக்குகின்றேன், புதியதாக எந்த படைப்பும் செய்வதில்லை என்று கூறுகின்றார். குழந்தைகளே, இப்பொழுது சொர்க்கம் செல்வீர்களா? பலி ஆவீர்களா? என்று பாபா கேட்கின்றார். நான் வந்திருக்கின்றேன், இப்பொழுது என்னை நினைவு செய்யுங்கள். எவ்வளவு முடியுமோ தேகதாரிகளின் நினைவைக் குறைத்துக் கொண்டே செல்லுங்கள். ஆம், நீங்கள் கர்மயோகி ஆவீர்கள், பகலில் அனைத்தும் செய்யுங்கள், ஆனால் கூடவே கடைசியில் கூட எனது நினைவு இருக்கும் படியாக நினைவில் இருங்கள். இல்லையென்றால், யாரிடம் அன்பு இருக்குமோ, அங்கு பிறப்பு எடுக்க வேண்டியதாகி விடும். இல்லறத்தில் இருந்தாலும் தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டியுள்ளது. தந்தை கூறுகின்றார் இரவு கண்விழியுங்கள். உங்களுடைய உடல் நிலை மோசம் ஆகாது. நினைவின் மூலம் மேலும் பலம் கிடைக்கும். சுயதரிசன சக்கரதாரியாகி சக்கரத்தை சுழற்றுங்கள். ஹே தூக்கத்தை வெல்லக்கூடிய செல்லக் குழந்தையே என்று யாருடைய ரதத்தை எடுத்திருக்கின்றாரோ, அவரைக் (பிரம்மா பாபா) கூறுகின்றார்.
இராஜ இராஜேஷ்வரராகவும் இவரே ஆகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, தூக்கத்தை வெல்ல வேண்டும். பகலில் சேவை செய்ய வேண்டும். மற்றபடி இரவில் தான் வருமானம் செய்ய வேண்டும். பக்தர்கள் அதிகாலையில் எழுகிறார்கள். குருக்கள் அவர்களை மாலை உருட்டச் சொல்கிறார்கள். தொழில் செய்யும்பொழுது உருட்ட முடியாது. சிலரோ பையின் உள்ளே மாலையை வைத்து உருட்டுகிறார்கள். எனவே, அதிகாலையில் எழுந்து நினைவு செய்ய வேண்டும். ஞானத்தை ஆழ்ந்து சிந்தனை (விசார் சாகர் மந்தன்) செய்ய வேண்டும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் வினாசம் ஆகும். எப்பொழுதும் ஆரோக்கிய மானவர் ஆகவேண்டும் என்றால் எப்பொழுதும் நினைவு செய்ய வேண்டும். அப்பொழுது அந்த் மதி சோ கதி ஏற்படும். மிக உயர்ந்த பதவி கிடைத்துவிடும். இதில் நஷ்டம் ஏற்படுவதற்கான விசயம் கிடையாது. மௌனமாக இருக்க வேண்டும் மற்றும் படிக்க வேண்டும். பாக்கி என்னவெல்லாம் கற்றிருக்கிறீர்களோ, அவற்றை மறந்து விடவேண்டும். குழந்தைகளே, தன்னை ஆத்மா எனப் புரிந்து தந்தையை நினைவு செய்ய வேண்டும். ஆத்மா தான் சரீரத்தின் மூலம் காரியம் செய்விக்கிறது. செய்விப்பது ஆத்மா ஆகும். பரமபிதா பரமாத்மா வந்து இவர் மூலம் காரியம் செய்கின்றார். ஆத்மாவும் கூட செய்கிறது மற்றும் செய்விக்கிறது. இந்த அனைத்து கருத்து களையும் நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும், அப்பொழுதே தகுதியானவர் ஆக முடியும். யார் புரிந்து பின்னர் பிறருக்கும் புரிய வைக்கின்றனரோ, அவர்களை பாபா தகுதியானவர் என்று புரிந்து கொள்கின்றார். சொர்க்கத்தில் உயர்ந்த பதவியை அடைவதற்கு அவர்கள் தகுதியானவர்கள் ஆகிறார்கள். யார் புரிய வைப்பதே இல்லையோ, அவர்களை உயர்ந்த பதவி அடைவதற்குத் தகுதி அற்றவர்கள் என்று (பாபா) புரிந்து கொள்கிறார். இராஜா, இராணி ஆவதற்குத் தகுதியானவர் ஆகுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அவரைத் தான் நல்ல குழந்தை என்று சொல்லப்படுகிறது. இவை புரிந்து கொள்வதற்கான விசயங்கள் ஆகும், வேறு எதுவும் செய்ய வேண்டிய தில்லை. அனைத்து விசயங்களிலிருந்தும் பாபா விடுவிக்கின்றார், ஒரு விசயத்தை மட்டும் நினைவு செய்ய வேண்டும். இறுதி நேரத்தில் யார் மனைவியை நினைக்கிறார்களோ.
யார் சேவாதாரி குழந்தைகளாக இருப்பார்களோ, அவர்கள் பாபாவின் முரளியிலிருந்து உடனடியாக சித்திரம் (கார்ட்டூன்) உருவாக்கிவிடுவார்கள். சிந்தனைக் கடலைக் கடைவார்கள். குழந்தைகள் சேவை செய்ய வேண்டும். சேவை செய்யும் குழந்தைகள் மீது தந்தையின் ஆசீர்வாதம் உள்ளது. ஆசீர்வாதம் கூட வரிசைக் கிரமமாகக் கிடைக்கிறது. இந்த எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அனைவருக்கும் கூறுகின்றார். தாய் தந்தையைப் பின்பற்றுங்கள், என்று இவரோ சிவபாபாவிடம் இருந்து ஞானத்தைப் பெறுகிறார். பிரம்மா உயர்ந்த பதவி அடைகிறார், உங்களால் ஏன் முடியாது? இப்பொழுது பின்பற்றினீர்கள் என்றால் கல்ப கல்பத்திற்கும் உயர்ந்த பதவியை அடைவீர்கள். இப்பொழுது தோல்வி அடைந்தால் கல்ப கல்பத்திற்கும் தோல்வி அடைவீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தந்தையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக சேவாதாரி ஆகவேண்டும். தனக்கு சமமாக ஆக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும். இப்பொழுது ஞான ஞானேஷ்வரி ஆகி பிறகு இராஜ இராஜேஷ்வரி ஆகவேண்டும்.
2. ஒரு தந்தையின் நினைவில் இருப்பதற்கான முயற்சி செய்ய வேண்டும். எந்த தேகதாரியிடமும் பற்று வைக்கக்கூடாது. தூக்கத்தை வென்றவர் ஆகி இரவில் வருமானத்தை சேமிப்பு செய்ய வேண்டும்.
வரதானம்:-
அன்பிற்கான பிரதிபலனாக வரத்தை அளிக்கும் வள்ளலான தந்தை குழந்தைகளுக்கு இந்த ஆசீர்வாதங்களை தருகிறார் – சதா ஒவ்வொரு நேரமும், ஒவ்வொரு ஆத்மாவிடமும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் அன்பின் திரு வுருவம் ஆக இருங்கள், ஒருபொழுதும் தனது அன்பு நிறைந்த உருவத்தை, அன்பான முகத்தை, அன்பாக நடந்துக்கொள்வதை, அன்போடு சம்மந்தம் மற்றும் தொடர்பை பராமரிப்பதில் மறந்துவிட வேண்டாம். எப்படிப்பட்ட மனிதனாக இருந்தாலும், இயற்கையாக இருந்தாலும், மாயாவின் பயங்கரமான ரூபத்தை, எரிமலை சொரூபத்தை தாரணை செய்து முன்னால் வந்தாலும் அவர்களிடம் சதா அன்பின் சீதளத்தன்மை மூலம் மாற்றம் செய்துக் கொண்டேயிருக்க வேண்டும். அன்பான பார்வை, உள்ளுணர்வு மற்றும் செயலின் மூலம் அன்பான உலகத்தை உருவாக்க வேண்டும்.
சுலோகன்:-
அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.
அன்பான மனநிலையில் இருக்கக்கூடிய சமமாக இருக்கக்கூடிய ஆத்மாக்கள் சதா யோகியாக இருக்கிறார்கள். நினைவு செய்பவர்களாக அல்ல, அன்பில் மூழ்கியிருப்பார்கள். தனித்தே இல்லாமல் இருக்கும் பொழுது நினைவு என்ன செய்வார்கள், நினைவு தானாகவே இருக்கும். எங்கு துனையாக இருக்கிறோமோ, நினைவும் தானாகவே இருக்கும். எனவே சமமான ஆத்மாக்களின் மனநிலை கூடவே இருப்பதாகவும்? மூழ்கிய நிலையிலும் இருக்கும்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!