26 April 2021 TAMIL Murli Today – Brahma Kumaris
25 April 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Malayalam. This is the Official Murli blog to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! தேவதையாக ஆக வேண்டுமெனில் அமிர்தம் (ஞானம்) குடிக்க வேண்டும் மற்றும் குடிக்க வைக்க வேண்டும், அமிர்தம் குடிப்பவர்கள் தான் சிரேஷ்டாச்சாரிகளாக ஆகின்றனர்.
கேள்வி: -
இந்த நேரத்தில் சத்யுக பிரஜைகள் எதன் ஆதாரத்தில் தயாராகிக் கொண்டிருக் கின்றனர்?
பதில்:-
யார் இந்த ஞானத்தின் பிரபாவத்தில் வருகிறார்களோ, அதாவது மிக நன்றாக இருக்கிறது, மிக நன்றாக இருக்கிறது என்று கூறுவர், ஆனால் படிப்பு படிப்பது கிடையாது, முயற்சி செய்வது கிடையாது, இப்படிப்பட்டவர்கள் பிரஜைகளாக ஆகிவிடுவர். பிரபாவத் தில் வருவது என்றால் பிரஜையாக ஆவதாகும். சூரியவம்சி இராஜா, இராணி ஆக வேண்டுமெனில் முயற்சி தேவை. படிப்பின் மீது முழு கவனம் இருக்க வேண்டும். தானும் நினைவு செய்வது மற்றவர்களையும் நினைவு செய்ய வைப்பார்கள் எனில் உயர்ந்த பதவி அடைய முடியும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
நீங்கள் இரவெல்லாம் தூங்கிக் கழித்தீர்கள் ……
ஓம் சாந்தி. குழந்தைகள் பாடல் கேட்டீர்கள், நமது வாழ்க்கை வைரம் போன்று இருந்தது, இப்பொழுது சோழி போன்று (மதிப்பற்றதாக) ஆகிவிட்டது. இது பொதுவான விஷயமாகும். சிறு குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். பாபா மிகவும் எளிய முறையில் புரிய வைக்கின்றார். இதை சிறிய குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். சத்திய நாராயணனின் கதையை கூறு கின்றனர் எனில் சிறு சிறு குழந்தைகளும் அமர்ந்து விடுகின்றனர். ஆனால் அந்த சத்சங்கம் போன்றவைகளில் என்ன கூறுகிறார்களோ அவையனைத்தும் கதைகளாகும். கதை என்பது ஞானம் கிடையாது, ஏற்கனவே உருவாக்கப் பட்ட கதைகளாகும். கீதையின் கதை, இராமாயணக் கதை போன்று வித விதமான சாஸ்திரங்கள் உள்ளன. இதன் கதைகளை அமர்ந்து கூறுகின்றனர். அவை அனைத்தும் கதைகளாகும். கதைகளினால் ஏதாவது நன்மை ஏற்படுமா என்ன? இது சத்திய நாராயணனின் அதாவது நரனிலிருந்து நாராயணன் ஆகக் கூடிய சத்தியமான கதை யாகும். இதை நீங்கள் கேட்பதன் மூலம் நீங்கள் நரனிலிருந்து நாராயணனாக ஆகிவிடு வீர்கள். இது அமரக்கதையாகவும் இருக்கிறது. உங்களுக்கு அமரக் கதையை கூறுகிறோம், இதை கேட்டால் நீங்கள் அமரலோகத்திற்குச் சென்றுவிடுவீர்கள் என்று நீங்கள் அழைப்பு கொடுக்கிறீர்கள். இருப்பினும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. சாஸ்திரங்களின் கதைகளைக் கேட்டு வரு கின்றனர். பலனாக அடைவது எதுவும் கிடையாது. இலக்ஷ்மி நாராயணனின் கோயிலுக்கு செல்வர், சென்று தரிசனம் செய்துவிட்டு வரலாம். மகாத்மாவை தரிசித்து வரலாம். இந்த ஒரு வழக்கம் நடைபெற்று வருகிறது. ரிஷி, முனி போன்று இருந்துவிட்டு சென்றவர்களை தலை வணங்கி வருகின்றனர். படைப்பவர் மற்றும் படைப்பின் கதை தெரியுமா? என்று கேளுங்கள். இல்லை என்று கூறுவர். படைப்பவர் மற்றும் படைப்பின் இந்த கதை மிகவும் எளிதானது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். தந்தை மற்றும் ஆஸ்திக்கான கதை யாகும். கண்காட்சி போன்றவைகளில் வருபவர்கள் கதையை சரியான முறையில் கேட்கின்றனர், ஆனால் தூய்மையாக ஆவது கிடையாது. விகாரத்தில் செல்லக் கூடிய வழக்கமும் அநாதியானது (வழக்கமானது) என்று நினைக்கின்றனர். கோயிலில் தேவதைகளின் முன் சென்று நீங்கள் அனைத்து குணங்களும் நிறைந்தவர்கள் ……. என்று பாடுகின்றனர். பிறகு வெளியில் வந்து விகாரத்தில் செல்வது அநாதி (தொன்று தொட்டு வருவது) என்று கூறுகின்றனர். இது இல்லாமல் உலகம் எப்படி இயங்கும்? இலக்ஷ்மி நாராயணன் போன்றவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர் அல்லவா! இவ்வாறு சொல்பவர்களை என்னவென்று கூறுவது? மனிதனுக்கான பதவியும் கொடுக்க முடியாது. தேவதைகளும் மனிதர்கள் தான், இலக்ஷ்மி நாராயணனின் இராஜ்யத்தில் எவ்வளவு சுகமானவர்களாக இருந்தனர்! குழந்தைகளாகிய உங்களுக்கு பாபா மிக எளிய விஷயங்களை கூறுகின்றார். உண்மையில் இந்த பாரதத்தில் தான் சொர்க்கம் இருந்தது. இலக்ஷ்மி நாராயணனின் இராஜ்யம் இருந்தது. சிலைகளும் இருக்கிறது, சத்யுகத்தில் இவர்களது இராஜ்யம் இருந்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வர். அங்கு எந்த துக்கமும் கிடையாது. சம்பூர்ண நிர்விகாரி களாக இருந்தனர். அவர்களது கோயில்களும் பெரிது பெரிதாக கட்டினர். அது நடந்து 5 ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று. இப்பொழுது அவர்கள் கிடையாது. இது கலியுகத்தின் கடைசியாகும். மனிதர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகவான் மேலேயே, நிர்வாண தாமத்தில் இருக்கின்றார். உண்மையில் ஆத்மாக்களாகிய நாமும் அங்கு தான் இருந்தோம், இங்கு நடிப்பு நடிப்பதற்காக வந்தோம். முதலில் நாம் இலக்ஷ்மி நாராயணனின் இராஜ்யத்தில் இருந்தோம். அங்கு அதிக சுகம், ஆனந்தம் இருந்தது, பிறகு நாம் 84 பிறவிகள் எடுக்க வேண்டியிருந்தது. 84 பிறவிச் சக்கரம் என்றும் பாடப்பட்டிருக்கிறது. நாம் சூரியவம்சத்தில் 1250 ஆண்டுகள் இராஜ்யம் செய் தோம். அங்கு அளவற்ற சுகம் இருந்தது, சம்பூர்ண நிர்விகாரிகளாக இருந்தோம், தங்க, வைர மாளிகை இருந்தது. நாம் தான் இராஜ்யம் செய்தோம், பிறகு 84 பிறவிகளில் வர வேண்டியிருந்தது. உலகத்தின் இந்த சரித்திர, பூகோளம் சுற்றிக் கொண்டே இருக்கும். அரைக் கல்பம் சுகம் இருந்தது, இராம இராஜ்யத்தில் இருந்தோம், பிறகு மனிதர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே சென்றது. சத்யுகத்தில் 9 இலட்சம் பேர் இருந்தனர். சத்யுகத்தின் கடைசியில் அதிகரித்து 9 இலட்சத்திலிருந்து 2 கோடியாக ஆகிவிட்டது, பிறகு 12 பிறவிகள் அதாவது திரேதாவில் மிகுந்த சுகத்துடன், அமைதியுடன் இருந்தோம். ஒரே ஒரு தர்மம் இருந்தது. பிறகு என்ன நடந்தது? பிறகு இராவண இராஜ்யம் ஆரம்ப மானது. இராம இராஜ்யம் மற்றும் இராவண இராஜ்யத்தை ஒப்பிட்டு பாருங்கள், மிக எளிய முறையில் புரிய வைக்கிறேன். சிறிய சிறிய குழந்தைகளுக்கும் இவ்வாறு கூற வேண்டும் லி பிறகு என்ன நடந்தது? பெரிய பெரிய தங்கம் மற்றும் வைர மாளிகைகள் பூகம்பத்தின் பொழுது அடியில் சென்றுவிட்டது. பாரதவாசிகள் விகாரிகளாக ஆனதால் தான் பூகம்பம் ஏற்பட்டது. பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பமானது. தூய்மை நிலையிலிருந்து அசுத்தமாக ஆகி விட்டீர்கள். தங்கமான இலங்கை அடியில் சென்றுவிட்டது என்றும் கூறுகின்றனர். சிறிதாவது தப்பித்து இருக்கும் அல்லவா! அதன் மூலம் கோயில் போன்றவைகளை கட்டியிருப்பர். பக்தி மார்க்கம் ஆரம்பமானது, மனிதர்கள் விகாரிகளாக ஆக ஆரம்பித்தனர். பிறகு இராவண இராஜ்யம் நடைபெற்று வந்தது, ஆயுளும் குறைந்து விட்டது. நாம் விகாரமற்ற யோகியிலிலிருந்து விகாரி போகிகளாக ஆகிவிட்டோம். இராஜா இராணி எப்படியோ அப்படி தான் பிரஜைகள் அனைவரும் விகாரிகளாக ஆகிவிட்டனர். இந்த கதை எவ்வளவு எளிதாக இருக்கிறது. சிறிய சிறிய குழந்தை களும் இந்த கதையைக் கூறுகின்றபொழுது பெரிய பெரிய மனிதர்களுக்கு தலைக் குனிவு ஏற்படும். இப்பொழுது தந்தை அமர்ந்து கூறுகின்றார், அவர் தான் ஞானக் கடலானவர், பதீத பாவன் ஆவார். துவாபர யுகத்தில் பதீதமாகவும், போகிகளாகவும் ஆகிவிட்டீர்கள், பிறகு மற்ற தர்மங்களும் வர ஆரம்பித்துவிட்டன. அமிர்தத்தின் போதை அழிந்து போய்விட்டது. சண்டை, சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. துவாபரத் திலிருந்து நாம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தோம், கலியுகத்தில் நாம் மேலும் விகாரிகளாக ஆகி விட்டோம். கற்களால் ஆன மூர்த்திகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். ஹனுமான், பிள்ளையார் …… கல் புத்தி ஆன காரணத்தினால் தான் கற்களை பூஜை செய்ய ஆரம்பித்து விட்டோம். பகவான் கல், முள்ளில் இருப்பதாக நினைக்கின்றனர். இவ்வாறு செய்து செய்து பாரதத்தின் நிலை இவ்வாறு ஆகிவிட்டது. இப்பொழுது விஷத்தை விட்டு விட்டு அமிர்தம் குடித்து தூய்மை யாக ஆகுங்கள் மற்றும் இராஜ்யம் அடையுங்கள் என்று தந்தை கூறுகின்றார். விஷத்தை விட்டு விட்டால் நீங்கள் மனிதனிலிருந்து தேவதையாக ஆகிவிடுவீர்கள். ஆனால் விஷத்தை விடுவதே கிடையாது. விஷத்திற்காக எவ்வளவு அடிக்கிறார்கள், தொந்தரவு செய்கிறார்கள், அதனால் தான் திரௌபதி அழைத்தார் அல்லவா! அமிர்தம் குடிக்காமல் நாம் தேவதைகளாக எப்படி ஆக முடியும்? என்று நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். சத்யுகத்தில் இராவணன் கிடையவே கிடையாது. எதுவரை சிரேஷ்டமானவர்களாக ஆகவில்லையோ அதுவரை சொர்க்கத் திற்கு வர முடியாது என்று தந்தை கூறுகின்றார். யார் சிரேஷ்ட மானவர்களாக இருந்தார்களோ அவர்களே இப்போது கீழானவர்களாக ஆகிவிட்டார்கள். மீண்டும் இப்பொழுது அமிர்தம் குடித்து சிரேஷ்டமானவர்களாக ஆக வேண்டும். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். கீதையை மறந்து விட்டீர்களா என்ன? நான் தான் கீதை கூறியிருக்கிறேன், ஆனால் கிருஷ்ணரின் பெயர் கொடுத்துவிட்டீர்கள். இந்த இலக்ஷ்மி நாராயணனுக்கு இந்த இராஜ்யம் கொடுத்தது யார்? அவசியம் பகவான் தான் கொடுத்திருப்பார். முந்தைய பிறப்பில் பகவான் இராஜ யோகம் கற்பித்திருந்தார், கிருஷ்ணரின் பெயர் கொடுத்துவிட்டனர். ஆக புரிய வைப்பதற்கான பயிற்சி செய்ய வேண்டும். மிக எளிய கதையாகும். பாபாவிற்கு எவ்வளவு காலம் ஏற்பட்டது? அரை மணி நேரத்தில் இவ்வளவு எளிய விஷயத்தையும் புரிந்து கொள்ள முடியாது, ஆகையால் ஒரு சிறிய கதை போன்று அமர்ந்து மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள் என்று தந்தை கூறு கின்றார். கையில் சித்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். சத்யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராஜ்யம், பிறகு திரேதாவில் இராமர், சீதையின் இராஜ்யம்…… பிறகு துவாபரத்தில் இராவணனின் இராஜ்யம் ஏற்பட்டது. எவ்வளவு எளிய கதையாகும்! உண்மையில் நாம் தேவதைகளாக இருந்தோம், பிறகு சத்திரியர், வைஷ்யர், சூத்திரர்களாக ஆனோம். இப்பொழுது தன்னை தேவதை என்று புரிந்து கொள்ளாத காரணத்தினால் இந்து என்று கூறிவிட்டனர். சிரேஷ்ட தர்மம் மற்றும் சிரேஷ்ட செயல்கள் என்ற நிலையிலிருந்து கீழான தர்மம், கீழ்தரமான செயல் செய்பவர் களாக ஆகிவிட்டீர்கள். இவ்வாறு சிறிய சிறிய பெண் குழந்தைகள் சொற்பொழிவு செய்தால் முழு சபையும் முழு கவனத்துடன் கேட்பார்கள்.
பாபா அனைத்து சென்டர்களிலும் உள்ளவர்களுக்கு கூறிக் கொண்டிருக்கின்றார். இப்போது இந்த பெரிய பெரிய மனிதர்கள் கற்றுக் கொள்ளவில்லையெனில் சிறிய சிறிய குமாரிகளுக்கு கற்றுக் கொடுங்கள். குமாரிகளுக்கு புகழும் இருக்கிறது. டெல்லி, மும்பையில் மிக நல்ல நல்ல குமாரிகள் இருக்கின்றனர். படித்தவர்களாகவும் இருக் கின்றனர். அவர்கள் எழுந்து நிற்க (உயர்ந்தவர்களாக) வேண்டும். எவ்வளவு காரியங்கள் செய்து விட முடியும்! ஒருவேளை குமாரிகள் நிமிர்ந்து நின்றுவிட்டால் பெயர் வெளிப் பட்டு விடும். செல்வந்தர் வீட்டில் உள்ளவர்கள் தைரியம் வைப்பது மிகவும் கடினமாகும். செல்வந்தருக்கான போதை இருக்கிறது. வட்டி போன்றவைகள் கிடைத்தால் போதும். குமாரிகளை திருமணம் செய்வித்து முகத்தை கருப்பாக்கி விடுகின்றனர், மேலும் அனை வரின் முன்பும் தலை குனிய வேண்டியிருக்கிறது. ஆக தந்தை எவ்வளவு எளிதாக புரிய வைக்கின்றார்! ஆனால் தங்கப்புத்தி ஆக வேண்டும் என்ற எண்ணமே வருவது கிடையாது. படிக்காதவர்களும் கூட இன்றைய நாட்களில் எம்.பி., எம்.எல்.ஏ ஆகிவிடு கின்றனர். படிப்பின் மூலம் என்ன என்ன ஆக முடியும்? இந்த படிப்பு மிகவும் எளிதாகும். சென்று மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். ஆனால் ஸ்ரீமத் படி நடக்கவில்லை யெனில் படிப்பதும் கிடையாது. மிகவும் நல்ல நல்ல குமாரிகள் இருக்கின்றனர், ஆனால் தனது (தான் என்ற) போதையிலேயே இருக் கின்றனர். சிறிது காரியம் செய்ததும் தான் பெரிய காரியம் செய்துவிட்டதாக நினைக்கின்றனர். இப்போது மேலும் அதிக காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. இன்றைய நாட்களில் குமாரிகள் எவ்வளவு ஆடம்பரத்தில் இருக்கின்றனர்! அங்கு இயற்கையான அலங்காரம் இருக்கும். இங்கு செயற்கையாக எவ்வளவு அலங்காரம் செய்து கொள்கின்றனர்! முடி வளர்ப்பதில் எவ்வளவு செலவு செய்கின்றனர்! இது தான் மாயையின் வெளிப்பாடு ஆகும். மாயையின், இராவண இராஜ்யத்தின் வீழ்ச்சியாகும். பிறகு இராம இராஜ்யம் ஏற்படும். இப்பொழுது இராம இராஜ்யம் ஸ்தாபனை ஆகிறது. ஆனால் நீங்கள் முயற்சி செய்யுங்களேன்! நீங்கள் என்ன ஆவீர்கள்? ஒருவேளை படிக்கவில்லையெனில் அங்கு சென்று ஒன்றுமே இல்லாத பிரஜைகளாக ஆவீர்கள். இன்றைய நாட்களின் பெரிய பெரிய மனிதர்கள் அனைவரும் அங்கு பிரஜைகளாக வந்துவிடுவர். செல்வந்தர்கள் நன்றாக இருக்கிறது, நன்றாக இருக்கிறது என்று மட்டுமே கூறிவிட்டு தங்களது தொழிலில் ஈடுபட்டு விடுகின்றனர். மிகவும் நல்ல தாக்கம் ஏற்படுகிறது, பிறகு அதனால் என்ன ஆகிறது! கடைசியில் என்ன நடக்கும்? அங்கு சென்று பிரஜைகளாக ஆவார்கள். பிரபாவத்தில் வருவது என்றால் பிரஜை ஆவதாகும். யார் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் இராம இராஜ்யத்தில் வந்துவிடுவார்கள். புரிய வைப்பது மிகவும் எளிதாகும். இந்த கதையின் போதையில் யாராவது இருந்தால் கவலைகள் எல்லாம் தூரமாகிவிடும். நாம் சாந்தி தாமத்திற்குச் செல்வோம், பிறகு சுகதாமத்திற்கு வருவோம். அவ்வளவு தான், நினைவு செய்து மற்றும் செய்வித்துக் கொண்டே இருக்க வேண்டும், அப்போது தான் உயர்ந்த பதவி அடைவீர்கள். படிப்பின் மீது கவனம் கொடுக்க வேண்டும். சித்திரங்கள் கையில் இருக்க வேண்டும். பிரம்மா பாபா இலக்ஷ்மி நாராயணனின் பூஜை செய்யும்பொழுது பையில் சித்திரத்தையும் வைத்திருந்தார். சித்திரம் சிறிய தாகவும் இருக்கிறது, கழுத்து செயினாகவும் மாட்டிக் கொள்ளலாம். அதை வைத்து புரிய வைக்க வேண்டும். இவர் பாபா, அவர் மூலம் ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது தூய்மையாக ஆகுங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள். இந்த பேட்ஜில் எவ்வளவு ஞானம் இருக்கிறது! இதில் முழு ஞானமும் இருக்கிறது. இதை வைத்து புரிய வைப்பது மிகவும் எளிதாகும். விநாடியில் தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஜீவன்முக்திக்கான ஆஸ்தி. யார் புரிய வைத்தாலும் ஜீவன்முக்திக்கான பதவிக்கு அதிகாரிகளாக ஆகிவிடுவார்கள். மற்றபடி படிப்பின் ஆதாரத்தில் உயர்ந்த பதவி அடைவீர்கள். சொர்க்கத்திற்கு வருவீர்கள் அல்லவா! கடைசியிலும் வருவார்கள் அல்லவா! வளர்ச்சி ஏற்பட வேண்டும். தேவி தேவதா தர்மம் உயர்ந்தது, அவ்வாறும் ஆவார்கள் அல்லவா! இலட்சக்கணக்கில் பிரஜை கள் உருவாவார்கள். சூரியவம்சி ஆவதில் முயற்சி இருக்கிறது. சேவை செய்பவர்கள் தான் நல்ல பதவி அடைவார்கள். அவர்களது பெயரும் வெளிப்படும் லி குமாரகா (பிரகாஷ் மணி தாதி), ஜனக் (தாதி ஜானகி) போன்றவர்கள் நன்றாக சென்டர் நடத்திக் கொண்டிருக் கின்றனர். எந்த பிரச்சனையும் கிடையாது.
தீயதை பார்க்காதீர்கள், தீயதை பேசாதீர்கள் என்று தந்தை கூறுகின்றார், இருப்பினும் இப்படிப்பட்ட பேச்சுகளை பேசிக் கொண்டே தான் இருக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் சென்று என்ன நிலை அடைவார்கள்! இவ்வளவு எளிய சேவையும் செய்வது கிடையாது. சிறிய சிறிய பெண் குழந்தைகளும் இதை புரிய வைக்க முடியும், கூற முடியும். குரங்குப் படை மிகவும் பிரபலமானது. இராவணனின் சிறையில் இருக்கும் சீதைகளை விடுவிக்க வேண்டும். என்ன என்ன கதைகளை உருவாக்கிவிட்டனர்! இப்படியெல்லாம் யாராவது சொற்பொழிவு செய்ய வேண்டும். மற்றவர்கள் இன்னாருக்கு மிகவும் பிரபாவம் ஏற்பட்டது என்று மட்டுமே மற்றவர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன ஆக விரும்பு கிறீர்கள்? என்று கேளுங்கள். இவர்களது ஞானம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று மற்றவர்களுக்கு மட்டுமே கூறுவீர்களா? சுயம் எதையும் புரிந்து கொள்வது கிடையாது, இதனால் என்ன பயன்? நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தங்கப்புத்தி ஆவதற்காக படிப்பின் மீது முழுமையிலும் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். ஸ்ரீமத் படி படிக்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும். எல்லைக்குட்பட்ட செல்வந்தருக்கான போதை, ஆடம்பரம் போன்றவைகளை விட்டு விட்டு இந்த எல்லையற்ற சேவையில் ஈடுபட்டு விட வேண்டும்.
2. தீயவைகளை கேட்காதீர்கள், தீயவைகளை பார்க்காதீர்கள் …… எந்த வீண் விஷயங்களும் பேசாதீர்கள். யாருடைய பிரபாவத்திலும் வரக் (வசப்படக்) கூடாது. அனைவருக்கும் சத்திய நாராயணனின் சிறிய கதையை கூற வேண்டும்.
வரதானம்:-
எந்த குழந்தைகள் ஞானத்தின் ஒளி மற்றும் சக்தியின் மூலம் முதல்-இடை-கடைசி நிலையை தெரிந்துக் கொண்டு முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் அவசியம் வெற்றி அடைகிறார்கள். வெற்றி அடைவது கூட அதிர்ஷ்டத்தின் அடையாளமாக இருக்கிறது. ஞானம் நிறைந்தவர் ஆவது என்றால் அதிர்ஷ்டத்தை எழுப்புவதற்கான சாதனமாகும். ஞானம் என்பது படைப்பவர் மற்றும் படைப்பைப் பற்றி தெரிந்துக் கொள்வது அல்ல, ஆனால் ஞானம் நிறைந்தவர் என்றால் ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வார்த்தை மற்றும் ஒவ்வொரு செயலிலும் ஞானம் சொரூபமாக இருக்கும் பொழுது வெற்றி மூர்த்தி ஆகி விடலாம். ஒருவேளை முயற்சி சரியாக இருந்தாலும் கூட வெற்றி தென்படவில்லை என்றால் இது தோல்வி அல்ல, பரிபக்குவநிலையை அடைவதற்கான சாதனம் என்று புரிந்துக் கொள்ளவேண்டும்.
சுலோகன்:-
➤ Daily Murlis in Tamil: Brahma Kumaris Murli Today in Tamil
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!