23 May 2021 TAMIL Murali Today – Brahma Kumaris
22 May 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
உள்ளத்தின் ஞானி மற்றும் சினேகி ஆகுங்கள் மற்றும் லீக்கேஜ்ஜை (கசிவை) நிறுத்துங்கள்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
இன்று அன்புக்கடல் பாப்தாதா தன்னுடைய அன்பான குழந்தைகளை சந்திப்பதற்காக வந்திருக் கின்றார்கள். இது ஆன்மிக அன்பு, பரமாத்ம அன்பு, சுயநலமற்ற உண்மையான அன்பாகும். உண்மை யான உள்ளத்தின் அன்பு ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் முழு கல்பத்தின் சினேகி ஆக்கிவிடுகிறது. ஏனெனில், பரமாத்ம அன்பு, ஆன்மிக அன்பு, அழிவற்ற அன்பு ஆகும். இந்த ஆன்மிக அன்பு பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரம் ஆகும். ஆன்மிக அன்பின் அனுபவம் இல்லை என்றால் பிராமண வாழ்வின் உண்மையான ஆனந்தம் இல்லை. பரமாத்ம அன்பானது எப்பேற்பட்ட பதீத ஆத்மாவையும் மாற்றம் செய்யவல்ல காந்தம் ஆகும், மாறுவதற்கான எளிய சாதனம் ஆகும். அன்பானது அதிகாரி ஆக்குவதற்கான, ஆன்மிக போதையின் அனுபவம் செய்விப் பதற்கான ஆதாரமாகும். அன்பு உள்ளதென்றால் களிப்பான பிராமண வாழ்வு உள்ளது என்பதாகும். அன்பு இல்லையென்றால் பிராமண வாழ்க்கை என்பது வறண்டதும் (சுவையற்றதும்) உழைப்பு நிறைந்ததும் ஆகும். பரமாத்ம அன்பு உள்ளத்தின் அன்பு ஆகும். லௌகீக அன்பானது உள்ளத்தை துண்டு துண்டாக ஆக்கிவிடுகிறது. ஏனெனில் பங்கிடப்பட்டுவிடுகிறது. அனேகரிடம் அன்பு பாராட்ட வேண்டியதாக உள்ளது. அலௌகீக அன்பு உள்ளத்தின் அனேக துண்டுகளை இணைக்கக் கூடிய தாகும். ஒரு தந்தையிடம் அன்பு செலுத்தினால், அனைவருக்கும் சகயோகியாக தானாகவே ஆகிவிடுகின்றார்கள். ஏனெனில், தந்தை விதை ஆவார். எனவே, விதைக்கு தண்ணீர் ஊற்றுவதால் ஒவ்வொரு இலைக்கும் தானாகவே தண்ணீர் கிடைத்துவிடுகிறது. இலை இலைக்கும் தண்ணீர் ஊற்றுவதற்கான அவசியம் இருக்காது. இதுபோன்று ஆன்மிக தந்தையிடம் அன்பு செலுத்துவது என்றால் அனைவருடைய சினேகி ஆகுவதாகும். ஆகையினால், உள்ளம் துண்டு துண்டாக நொறுங்குவதில்லை, அன்பானது ஒவ்வொரு காரியத்தையும் எளிதாக்கிவிடுகிறது அதாவது உழைப்பிலிருந்து விடுவித்துவிடுகின்றது. எங்கு அன்பு உள்ளதோ, அங்கு நினைவு தானாக, சகஜமாக வருகிறது. அன்பிற்குரியவர்களை மறப்பது கடினமாக இருக்கும், நினைவு செய்வது கடினமாக இருக்காது. ஞானம் அதாவது அறிவு எவ்வளவு தான் புத்தியில் இருந்தாலும் சரி, ஆனால், யதார்த்தமான ஞானம் அதாவது அன்பு நிறைந்த ஞானம் இருக்க வேண்டும். ஒருவேளை, ஞானம் உள்ளது மற்றும் அன்பு இல்லை என்றால் அது வறட்சியான ஞானமாகும். அன்பானது சர்வ சம்பந்தங்களை உள்ளப்பூர்வமாக அனுபவம் செய்விக்கிறது. ஞானியாக மட்டும் இருப்பவர் கள் புத்தியால் நினைவு செய்கின்றார்கள். மற்றும் அன்பானவர்கள் உள்ளத்தால் நினைவு செய்கின்றார்கள். புத்தியால் நினைவு செய்பவர்களுக்கு நினைவில், சேவையில், தாரணையில் உழைப்பு செய்ய வேண்டியது இருக்கும். இவர்கள் உழைப்பின் பலனை (பழத்தை) சாப்பிடுவார்கள் மற்றும் அவர்கள் அன்பின் பலனை சாப்பிடுவார்கள். அன்பு இல்லாமல் வெறும் அறிவு சார்ந்த ஞானம் மட்டும் உள்ளது எனில், ஞானத்தின் விசயங்களில் கூட ஏன், என்ன, எப்படி. என்று புத்தி சண்டையிட்டுக் கொண்டேயிருக்கும் மற்றும் தனக்குள் சச்சரவு ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். அதிகமான வீண் எண்ணங்கள் வரும். எங்கு ஏன், ஏன் என்பது இருக்குமோ, அங்கு ஏன் என்பதன் வரிசை உருவாகிவிடும். எங்கு அன்பு உள்ளதோ, அங்கு யுத்தம் ஏற்படாது, ஆனால், அன்பில் மூழ்கிய நிலை (லவ்லீன்), கலந்திருக்கும் நிலை இருக்கும். எவரிடமாவது உள்ளத்தின் அன்பு உள்ளது எனில், அன்பின் விசயத்தில் ஏன், என்ன என்பது எழாது. எவ்வாறு விட்டில் பூச்சி விளக்கின் மீதுள்ள அன்பினால் ஏன், என்ன என்று கேட்பதில்லையோ, பலியாகிவிடுகிறதோ அவ்வாறு பரமாத்ம சிநேகி ஆத்மாக்கள் அன்பில் மூழ்கி இருப்பார்கள்.
சில குழந்தைகள், தந்தையுடன் உரையாடல் செய்யும்பொழுது, ஞானமோ புத்தியில் உள்ளது, பிராமணராகவும் ஆகிவிட்டேன், ஆத்மாவைப் பற்றியும் அறிந்துகொண்டேன், தந்தையையும் முழுமையான அறிமுகத்துடன் தெரிந்துகொண்டேன், சம்பந்தங்களைப் பற்றியும் தெரிந்துவிட்டது, சக்கரத்தைப் பற்றிய ஞானம் உள்ளது, படைப்பாளர் மற்றும் படைப்பின் முழு ஞானம் உள்ளது, பிறகும் கூட நினைவு ஏன் சகஜமாக இருப்பதில்லை? ஆனந்தத்தினுடைய, சக்தியினுடைய, சாந்தி யினுடைய அனுபவம் எப்பொழுதும் ஏன் ஏற்படுவதில்லை? ஏன் அதிகமாக முயற்சித்தால் மட்டும் நினைவு வருகிறது, ஏன் நினைவு நிரந்தரமாக இருப்பதில்லை? அடிக்கடி நினைவு ஏன் மறந்து போகிறது? என்று புகார் செய்கின்றார்கள். இதற்கான காரணம் என்னவென்றால் ஞானமானது புத்தி வரை மட்டும் உள்ளது, ஞானத்தின் கூடவே உள்ளத்தின் அன்பு குறைவாக உ.ள்ளது. அறிவுப்பூர்வமான அன்பு உள்ளது. நான் குழந்தை, அவர் தந்தை, வள்ளல், விதாதா என்ற அறிவுப் பூர்வமான ஞானம் உள்ளது. ஆனால். இதே ஞானம் எப்பொழுது உள்ளத்தில் கலந்துவிடுகிறதோ, அப்பொழுது அன்பின் அடையாளமாக என்ன காண்பிக்கின்றனர்? உள்ளம் (இதயம்). அதாவது ஞானம் மற்றும் அன்பு கலந்துவிடுகிறது. ஞானம் என்பது விதையாகும், ஆனால், தண்ணீர் அன்பாகும். ஒருவேளை, விதைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் பலன் கொடுக்காது. அதுபோன்று, ஞானம் உள்ளது, ஆனால், உள்ளத்தின் அன்பு இல்லை என்றால் பிராப்தியின் பலன் கிடைக்காது, ஆதலால், உழைக்க வேண்டியுள்ளது. அன்பு என்றால் அனைத்து பிராப்திகளுடைய, அனைத்து அனுபவங்களுடைய கட-ல் கலந்திருப்பதாகும். லௌகீக உலகில் கூட பாருங்கள், சின்ன பரிசு அன்போடு கொடுக்கப்படும்போது, எவ்வளவு பிராப்தியின் அனுபவம் செய்விக்கிறது! ஆனால், சம்பந்தத்தில் சுயநலத்துடன் கொடுக்கல் வாங்கல் நடைபெறுகிறது எனில், கோடி பணம் கொடுங்கள், ஆனால், கோடி பணம் கிடைத்தபோதிலும் கூட திருப்தி ஏற்படாது, ஆனால் இது இருக்க வேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று ஏதாவது குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். தற்காலத்தில் எவ்வளவு செலவு செய்கின்றார்கள், எவ்வளவு பகட்டு காண்பிக்கின்றார்கள்! ஆனாலும் கூட அன்பு நெருக்கத்தில் கொண்டு வருகிறதா அல்லது தூரமாக்குகிறதா? கோடி பணத்தின் கொடுக்கல் வாங்கல் அந்தளவு சுகத்தின் அனுபவம் செய்விப்பதில்லை, ஆனால், உள்ளத்தின் அன்பு நிறைந்த ஒரு சிறிய பொருள் கூட எவ்வளவு சுகத்தின் அனுபவம் செய்விக் கிறது! ஏனெனில், உள்ளத்தின் அன்பானது கணக்கு வழக்கை கூட முடிவடையச் செய்துவிடுகிறது. எனவே, ஞானத்தின் கூடவே உள்ளத்தின் அன்பு உள்ளதா? உள்ளத்தில் லீக்கேஜ் (கசிவு) இல்லை தானே? என்று தன்னைத்தானே கேளுங்கள். எங்கு கசிவு இருக்கிறதோ அங்கு என்னவாகும்? ஒருவேளை. ஒரு தந்தையைத் தவிர வேறு யாரிடமாவது எண்ணத்தளவில் அன்பு உள்ளது, அது மனிதரிடமோ, பொருளிடமோ, மனிதரிடம் கூட சரீரத்தின் மீது அன்பு இருக்கலாம், அவரது விசேஷத்தன்மை மீது இருக்கலாம், எல்லைக்குட்பட்ட பிராப்தியின் ஆதாரத்தில் இருக்கலாம், ஆனால், விசேஷத்தன்மையை கொடுத்திருப்பவர் யார்? பிராப்தி செய்விக்கக் கூடியவர் யார்?
எவ்விதமான அன்பு அதாவது பற்று, எண்ணத்தளவில், பேச்சளவில் அல்லது செயலில் உள்ளது என்றால், இதையே கசிவு என்று கூறப்படுகிறது. சில குழந்தைகள் மிகவும் வெகுளித்தனமாக, பற்று இல்லை ஆனால் பிடிக்கிறது, விரும்பவில்லை ஆனால் நினைவு வருகிறது, என்று கூறுகின்றனர். எனவே, எண்ணம், சொல் மற்றும் செய-ல் அடிபணிந்திருப்பது பற்றின் அடையாளம் ஆகும். ஆகையினால், லீக்கேஜ் இருக்கும் காரணத்தால் சக்தி அதிகரிப்பதில்லை. மேலும், சக்திசா-யாக இல்லாத காரணத்தால் தந்தையை நினைவு செய்வதற்கு உழைப்பு தேவைப்படுகிறது. மேலும், உழைக்க வேண்டியிருக்கும் காரணத்தால் திருப்தி இருப்பதில்லை. எங்கு திருப்தி இல்லையோ, அங்கு இந்த சமயம் நினைவின் அனுபவத்தினால் போதையில் சந்தோˆமாக இருப்பார்கள், பிறகு, அடுத்த கொஞ்ச நேரத்தில் மனம் உடைந்து வருத்தமுற்று இருப்பார்கள். ஏனெனில், லீக்கேஜ் இருக்கும் காரணத்தால் சக்தியானது கொஞ்ச நேரத்திற்கு நிறைகிறது. எப்பொழுதும் இருப்ப தில்லை, ஆகையினால், சகஜமான நிரந்தர யோகி ஆகமுடிவதில்லை. எந்த மனிதன் மற்றும் பொருள் மீது பற்று இல்லை தானே அதாவது லீக்கேஜ் இல்லை தானே? என்று சோதனை செய்யுங்கள். இந்த லீக்கேஜ் லவ்லீன் ஸ்திதியின் அனுபவம் செய்யவிடாது. பொருட்களை பயன்படுத்துங்கள், ஆனால், யோகியாகி பயன்படுத்துங்கள். எதை நீங்கள் ஓய்வுக்கான சாதனம் எனப் புரிந்து இருக்கின்றீர்களோ, அது மனோநிலையை ஒய்வற்ற நிலையை அடையச் செய்யும்படியாக ஆகிவிடக்கூடாது. ஏனெனில், சில குழந்தைகள் பொருட்களுக்கு வசமாகியும் மனதின் பற்றை அறிந்து கொள்ள முடிவதில்லை. இராயல் மொழியில் ஹடயோகி அல்ல, சகஜயோகி நாங்கள் என்றே கூறுகின்றீர்கள். சகஜயோகி ஆகுவது நல்லதே ஆனால், யோகியாக ஆகியிருக்கின்றீர்களா? யார் தந்தையினுடைய நினைவை கலைக்கின்றார்களோ அதாவது தன் பக்கம் கவர்ச்சி செய்கின்றார்களோ, அடிபணியச் செய்கின்றார்களோ, அவர்களை யோகியாகி பிரயோகம் செய்பவர்கள் (செய-ல் ஈடுபடுத்துபவர்கள்) என்று கூற முடியாது. ஏனெனில், தந்தை யினுடையவர் ஆகியிருக்கும் காரணத்தால் அவ்வப்போது இயற்கை பணிப்பெண் அதாவது பொருட்களின் சாதனங்களின் பிராப்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்பொழுது 18, 19 வருடங்களுக்குள் எவ்வளவு பிராப்தி கிடைத்துக் கொண்டு இருக்கிறது! ஓய்வுக்கான சாதனங்கள் அனைத்தும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், இந்தப் பிராப்திகள் தந்தை யினுடையவர் ஆனதன் பலன் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. எனவே, பழத்தை சாப்பிட்டுக் கொண்டு விதையை மறந்து விடவேண்டாம். இந்த சாதனங்கள் சிறிது காலத்திற்கு அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆனால், ஓய்வில் வந்து இராமரை மறந்து விடவேண்டாம் உண்மையான சீதையாக இருக்க வேண்டும். மரியாதை (நியமம்) என்ற கோட்டி-ருந்து எண்ணம் என்ற விரலைக்கூட வெளியே கொண்டு வரக்கூடாது. ஏனெனில், இந்த சாதனங்களை, சாதனா (தவவ-மை, ஆன்மிக முயற்சி) இல்லாமல் பயன்படுத்தினீர்கள் என்றால் அது பொன் மானாக வேலை செய்யும். ஆகையினால், மனிதன் மற்றும் பொருட்களின் மீது பற்று மற்றும் அடிபணிந்து போவதி-ருந்து எப்பொழுதும் தன்னை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், தந்தைக்கு சிநேகி ஆகுவதற்கு பதிலாக, சகஜயோகி ஆகுவதற்கு பதிலாக அவ்வப்போது சகயோகி, அவ்வப்போது சகஜயோகி; அவ்வப்போது பிரிவு ஆகிய இரண்டு அனுபவங்களையும் செய்து கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது நினைவு, அவ்வப்போது முறையீடு செய்தல் என்ற இந்த அனுபவத்தில் செல்வார்கள் மற்றும் முறையீடு கூட ஒருபோதும் முடிவடையாது.
மனிதன் மற்றும் பொருளிடம் அடிபணிந்திருப்பதன் அடையாளமாக அவ்வப்போது சகஜயோகி, அவ்வப்போது யோகி, அவ்வப்போது முறையிடுதல் என்ற ஒன்று சொல்லப்பட்டது. இரண்டாவது விசயம் என்னவென்றால் அத்தகைய ஆத்மாவிற்கு பிராப்திகள் அனைத்தும் இருக்கும், அது சாதனமோ, சகயோகமோ அல்லது அன்போ, ஆனால், லீக்கேஜ் உள்ள ஆத்மா பிராப்தி கிடைத்திருந்த போதிலும் ஒருபோதும் திருப்தி அடையமாட்டார்கள். அவர்களுடைய வாயி-ருந்து எப்பொழுதும் ஏதாவது விதத்தில் அதிருப்தியான வார்த்தை அவர்கள் விரும்பாமலேயே வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். இவருக்கு நிறைய கிடைக்கிறது, இவரைப் போன்று வேறு யாருக்கும் கிடைப்பதில்லை என்று பிறர் அனுபவம் செய்வார்கள். ஆனால், அந்த ஆத்மாவோ சதா தன்னுடைய அபிராப்தியின், துக்கத்தின் வர்ணனை செய்து கொண்டே இருப்பார்கள். இவர்களைப் போன்று சுகமானவர்கள் எவரும் இல்லை என்று மக்கள் கூறுவார்கள் ஆனால், அவர்களோ, என்னைப் போன்று துக்கமானவர் எவரும் இல்லை என்று கூறுவார்கள். ஏனெனில், காற்றடைத்த பலூன் போன்று இருப்பார்கள். எப்பொழுது காற்றடைக்கப்பட்டு பெரியதாகிறதோ அப்பொழுது மிக உயரம் பறக்கிறது. எப்பொழுது காற்று வெளியேறிவிடுகிறதோ, அப்பொழுது எங்கேயாவது விழுந்து விடுகிறது! அது பறக்கும் போது பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக உள்ளது, ஆனால், அல்ப காலத்திற்கு மட்டுமே அது உள்ளது. ஒருபோதும் தனது பாக்கியத்தினால் திருப்தி அடைய மாட்டார்கள். எப்பொழுதும் தன்னுடைய பாக்கியத்திற்கு, அபிராப்திக்கு எவரையேனும் நிமித்தமாக ஆக்கிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இப்படி செய்கின்றார்கள், இது இப்படி நடக்கிறது, அதனால் எனக்கு பாக்கியம் இல்லை என்று பிறரை நிமித்தம் ஆக்குவார்கள். பாக்கிய விதாதாவே பாக்கியத்தை உருவாக்கக்கூடியவர். எங்கு பாக்கியவிதாதா பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றாரோ, அந்த பரமாத்ம சக்திக்கு முன் ஆத்மாவின் சக்தி, பாக்கியத்தை அசைக்க முடியாது. அவை அனைத்தும் சாக்குப்போக்குகள் ஆகும். பறக்கும் கலையின் வாத்தியம் இசைக்கத் தெரியாததால் சாக்குப்போக்கு அதிகம் சொல்கின்றார்கள். இதில் அனைவரும் புத்திசா-களாக உள்ளார்கள். ஆகையினால், அன்பினால் அடிபணிந்நு இருந்தாலும் சரி, அல்லது கணக்கு வழக்கு முடிவடையும் காரணத்தினால் அடிபணிந்து இருந்தாலும் சரி – இதை சோதனை செய்யுங்கள்.
யாரிடம் பொறாமை மற்றும் வெறுப்பு உள்ளது என்றால் அங்கும் கூட அடிபணிந்த நிலை இருக்கும். அடிக்கடி அவர்களே நினைவில் வந்து கொண்டே இருப்பார்கள். தந்தையை நினைவு செய்வதற்காக யோகத்தில் அமர்வார்கள். ஆனால். யார் மீது வெறுப்பு மற்றும் பொறாமை உள்ளதோ அவர்கள் நினைவு வரும். நான் சுயதரிசன சக்கரதாரி என்று நினைப்பார்கள், ஆனால், சுற்றுவதோ பரதரிசன சக்கரமாக இருக்கும். எனவே, இவ்விரு அடிபணிந்த நிலையும் கீழே கொண்டு வந்துவிடுகிறது. ஆகையினால், இரண்டையும் சோதனை செய்ய வேண்டும். பிறகு, தந்தைக்கு முன்னால், நான் மிகவும் நல்லவர் தான், இந்த ஒரு விசயம் மட்டும் இப்படி உள்ளது, இதை நீங்கள் அழித்துவிடுங்கள் என்று மனு தாக்கல் செய்வார்கள். கணக்கு உருவாக்கியது நீங்கள் ஆனால், அதை தீர்க்க வேண்டியது தந்தையா! என்று தந்தை புன்னகை பூக்கின்றார். கணக்கை முடிக்க வைத்துவிடுங்கள் என்று சொல்வது கூட சரியே, ஆனால் முடித்துவிடுங்கள் என்று கூறுவது சரியல்ல. உருவாக்கும் சமயம் தந்தையை மறந்துவிட்டீர்கள் மற்றும் தீர்க்க வேண்டிய சமயம் பாபா பாபா என்று கூறுகின்றீர்கள்! செய்பவர் செய்விப்பவர் செய்விப்பதற்கு கடமைப் பட்டுள்ளார், ஆனால், செய்ய வேண்டியவரோ நீங்கள் தான். குழந்தைகளுடைய என்னென்ன சமாச்சாரத்தை பாப்தாதா பார்க்கின்றார்கள் என்பதைக் கேட்டீர்களா? சாரம் என்ன? வறண்ட ஞானியாக மட்டும் ஆகாதீர்கள். வெறும் அறிவுப்பூர்வமான ஞானியாக ஆகாதீர்கள். உள்ளப்பூர் வமான ஞானி மற்றும் சினேகி ஆகுங்கள் மற்றும் லீக்கேஜ்ஜை சோதனை செய்யுங்கள். புரிந்ததா?
18 ஜனவரி வந்து கொண்டு இருக்கிறது அல்லவா! ஆகையால், 18 ஜனவரி தினத்தை சதா காலத்திற்கு சக்திசா-யான தினமாகக் கொண்டாடப்பட முத-லேயே நினைவு ஏற்படுத்துகின்றார்கள். புரிந்ததா? வாழ்க்கைக் கதையை மட்டும் சொல்- கொண்டாடக்கூடாது, ஆனால், சமமான வாழ்க்கை உருவாகக் கொண்டாட வேண்டும். நல்லது!
சதா மனிதன் மற்றும் பொருளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்ட, தந்தையின் அன்பில் மூழ்கியிருக்கும், சதா யதார்த்த ஞானம் மற்றும் உள்ளத்தின் அன்பு ஆகிய இரண்டிலும் இணைந்த நிலையின் அனுபவம் செய்யக்கூடிய, சதா யோகி ஆகி சாதனாவின் ஸ்திதியில் இருந்து சாதனங்களை காரியத்தில் ஈடுபடுத்தக்கூடிய, சதா சினேகி உள்ளத்தில் நிறைந்து இருக்கும் குழந்தைகளுக்கு திலாராம் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே!
பார்ட்டிகளுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:- தன்னை டபுள் ஹீரோ (இரட்டை கதாநாயகன்) என்று புரிந்து இருக்கின்றீர்களா? வைரத்திற்கு சமமான வாழ்க்கை உருவாகிவிட்டது. எனவே, வைரத்திற்கு (ஹீரா) சமமாக ஆகிவிட்டீர்கள் மற்றும் சிருஷ்டி நாடகத்தில் ஆதியி-ருந்து இறுதி வரை ஹீரோ பாகம் ஏற்று நடிப்பவர்கள் ஆவீர்கள். எனவே, டபுள் ஹீரோ ஆகிவிட்டீர்கள் அல்லவா. எல்லைக்குட்பட்ட நாடகத்தில் பாகம் ஏற்று நடிக்கும் ஹீரோ நடிகர் மகிமை பாடப்படு கின்றார், ஆனால், டபுள் ஹீரோ எவரும் இல்லை. ஆனால், நீங்கள் டபுள் ஹீரோ ஆவீர்கள். தந்தையுடன் நடிப்பு நடிப்பது என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! எனவே, இந்த சிரேஷ்ட பாக்கியத்தை நினைவில் வைத்து முன்னேறிக்கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா. நிற்பவர்கள் இல்லை அல்லவா? யார் களைப்படைவது இல்லையோ, அவர்கள் நிற்பதும் இல்லை, முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். எனில், நீங்கள் நிற்பவர்களா அல்லது களைப்படைபவர்களா? தனிமையாக இருக்கும் போது தான் களைப்பு அடைகின்றீர்கள். போர் (ச-ப்பு) ஆகிவிடுவதால் களைப்பு அடைந்துவிடுகின்றனர் ஆனால், எங்கு துணை இருக்குமோ, அங்கு எப்பொழுதுமே ஊக்க உற்சாகம் இருக்கும். எந்தவொரு யாத்திரைக்கு செல்லும் போதும் என்ன செய்கின்றார்கள்? குழுவை உருவாக்குகின்றார்கள் அல்லவா! ஏன் உருவாக்குகின்றார்கள்? குழுவினால், துணையினால் ஊக்க உற்சாகத்தோடு முன்னேறிச் செல்வதற்காக உருவாக்குகின்றார்கள். எனவே, நீங்கள் அனைவரும் கூட ஆன்மிக யாத்திரையில் சதா முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். ஏனெனில், தந்தையின் துணை, பிராமண பரிவாரத்தின் துணை ஆகிய எவ்வளவு சிறந்த துணை உள்ளது! ஒரு வேளை, ஒரு நல்ல துணைவன் உடன் இருந்தால் ஒருபோதும் ச-ப்பு ஏற்படாது, களைப்பு அடைய மாட்டார்கள். எனவே, சதா முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், சதா குஷியில் நடனமாடிக்கொண்டே இருப்பார்கள். எனவே, விருத்தி (வளர்ச்சி) அடைந்து கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா! விருத்தி அடைந்தே ஆகவேண்டும். ஏனெனில், எங்கே வேண்டுமானாலும், எந்த மூலையில் குழந்தைகள் பிரிந்து போயிருந்தாலும், அங்கு அந்த ஆத்மாக்கள் நெருக்கத்தில் வந்துதான் ஆகவேண்டும், ஆகையினால், சேவையிலும் கூட விருத்தி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அமைதியாக அமர வேண்டும் என்று எவ்வளவு தான் விரும்பினாலும் அமர முடியாது. சேவை அமரவிடாது, முன்னேறச் செய்யும். ஏனெனில், எந்த ஆத்மாக்கள் தந்தையினுடையவர்களாக இருந்தார்களோ, அவர்கள் மீண்டும் தந்தையினுடையவர் களாக ஆகத்தான் வேண்டும் நல்லது.
முக்கிய சகோதரர்களுடன் அவ்யக்த பாப்தாதாவின் சந்திப்பு:-
சக்திகளுக்கு வாய்ப்பு நன்றாக கிடைக்கிறது, தாதிகள் ஆகுவது நன்றாக உள்ளது என்று பாண்டவர்கள் யோசிக்கின்றனர். ஆனால், பாண்டவர்களின் பிளானிங் புத்தி (திட்டமிடும் புத்தி) இல்லை எனில் சக்திகள் என்ன செய்வார்கள்! இறுதி பிறவியில் கூட பாண்டவர் ஆகுவது ஒன்றும் குறைந்த விசயமல்ல. பாண்டவர்கள் இல்லாமல் சக்திகள் இல்லை, சக்திகள் இல்லாமல் பாண்டவர்கள் இல்லை. சதுர்புஜத்தில் (நான்கு புஜங்களில்) இரண்டு புஜங்கள் (கரங்கள்) அவர் களுடையது, இரண்டு புஜங்கள் இவர்களுடையது, ஆகையினால், பாண்டவர்களுடைய விசேஷத் தன்மை தனிப்பட்டது. நிமித்தமாக சேவை இவர்களுக்கு (தாதிகளுக்கு) கிடைத்துள்ளது, ஆகையால், இவர்கள் செய்கின்றார்கள். மற்றபடி, சதா பாண்டவர்கள் மீது சக்திகளுக்கும் மற்றும் சக்திகள் மீது பாண்டவர்களுக்கும் அன்பு உள்ளது, மரியாதை உள்ளது மற்றும் எப்பொழுதும் இருக்கும்.
சக்திகள் பாண்டவர்களை முன்னால் வைக்கின்றார்கள், இதில் தான் வெற்றி உள்ளது மற்றும் பாண்டவர்கள் சக்திகளை முன்னால் வைக்கின்றார்கள், இதில் தான் வெற்றி உள்ளது. முதலில் நீங்கள் என்ற பாடம் இருவருக்குமே பக்காவாக (உறுதியாக) உள்ளது. முத-ல் நீங்கள், முதலில் நீங்கள் என்று சொல்- சுயம் தானும் முத-ல் நீங்கள் ஆகிவிடுவீர்கள் (முத-ல் வந்து விடுவீர்கள்). தந்தை நடுவில் இருக்கின்றார், அதனால், சச்சரவே இல்லை. பாண்டவர்களுக்கு புத்திக்கான நல்ல வரதானம் கிடைத்துள்ளது. எந்தக் காரியத்திற்கு நிமித்தம் ஆகியிருக்கின்றார்களோ, அவர்களுக்கு அதே விசேஷத்தன்மை கிடைத்துள்ளது. மேலும், ஒவ்வொருவருடைய விசேஷத்தன்மையும் ஒன்றை விட ஒன்று மேலானது, ஆகையால், நீங்கள் நிமித்த ஆத்மாக்களாக இருக்கின்றீர்கள். நல்லது!
வரதானம்:-
தன்னுடைய எண்ணம், விருத்தி (உள்ளுணர்வு) மற்றும் ஸ்மிருதியை (நினைவு) சோதனை செய்யுங்கள், அதாவது, ஏதாவது தவறு நடந்துவிட்டது, அதற்காக வருத்தம் ஏற்பட்டது, மன்னிப்பு கேட்டானது, விடுதலை கிடைத்து விட்டது என்பது இல்லைதானே என்று சோதனை செய்யுங்கள். எவ்வளவு தான் மன்னிப்பு கேட்டாலும் சரி, ஆனால், என்ன பாவம் அல்லது வீணான செயல் செய்யப்பட்டதோ, அதன் அடையாளம் அழிந்து போகாது. பதிவேடு (ரிஜிஸ்டர்) தெளிவாக, சுத்தமாக இருக்காது. இந்த வழக்கை மட்டும் தனதாக்கிக் கொள்ளாதீர்கள், ஆனால், நான் சம்பூரணத் தூய்மையான பிராமணன், அபவித்திரதாவானது எண்ணம், விருத்தி மற்றும் நினைவைக் கூட தொட முடியாது என்பது நினைவில் இருக்கட்டும். இதற்காக ஒவ்வொரு அடியிலும் எச்சரிக்கை யாக இருங்கள்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!