22 February 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
21 February 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! நீங்கள் அனைவருக்கும் உண்மையான கீதையை சொல்லி சுகத்தைக் கொடுக்கக்கூடிய உண்மையிலும் உண்மையான வியாசர்கள், நீங்கள் நல்ல விதமாகக் கற்று பிறரையும் கற்பிக்க வேண்டும், சுகத்தைக் கொடுக்க வேண்டும்.
கேள்வி: -
நீங்கள் செய்கின்ற முயற்சி அனைத்திலும் உயர்ந்த எந்த ஒரு குறிக்கோளை அடைவதற்காக?
பதில்:-
தன்னை அசரீரி என புரிந்து கொள்வது, இந்த தேக அபிமானத்தின் மீது வெற்றி கொள்வது,- இது தான் அனைத்திலும் உயர்ந்த குறிக்கோளாகும், ஏனென்றால் அனைத்தையும் விட பெரிய எதிரி தேக அபிமானமாகும். இறுதியில் தந்தையைத் தவிர வேறு எந்த நினைவும் வராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். சரீரத்தை விட்டு தந்தையிடம் செல்ல வேண்டும். இந்த சரீரம் கூட நினைவில் இருக்கக் கூடாது. இந்த முயற்சியைத்தான் செய்ய வேண்டும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
இந்த பாவம் நிறைந்த உலகிலிருந்து. . .
ஓம் சாந்தி. ஜீவ ஆத்மாக்கள் அதாவது குழந்தைகள் பாபா நம்மை எங்கே அழைத்துச் செல்கிறார் என மனதிற்குள் புரிந்து கொள்கின்றனர். எங்கிருந்து வந்தோமோ அங்கேதான் அழைத்துச் செல்வார். பிறகு நம்மை புண்ணிய ஆத்மாக்களின் சிருஷ்டியில், ஜீவாத்மாக்களின் உலகத்திற்கு அனுப்பி வைப்பார். சிரேஷ்ட (உயர்ந்த) மற்றும் கீழான என்ற வார்த்தைகள் வெளிப்பட்டுள்ளன, கண்டிப்பாக ஜீவாத்மாக்களைத்தான் அப்படி சொல்வார்கள். சுகமோ அல்லது துக்கமோ சரீரத்தில் இருக்கும்போதுதான் அனுபவிக்கப்படுகிறது. இப்போது பாபா வந்துள்ளார் என குழந்தைகள் அறிந்துள்ளனர். பாபாவின் பெயர் எப்போதும் சிவன் என்பதாகும். நம்முடைய பெயர் சாலிக் கிராமம் ஆகும். சிவன் கோவிலில் சாலிக்கிராமங்களின் பூஜையும் நடக்கிறது. பாபா புரிய வைத்திருக்கிறார், ஒன்று ருத்ர ஞான யக்ஞம், மற்றொன்று ருத்ர யக்ஞம் ஆகும். அதில் குறிப்பாக பனாரஸில் இருக்கும் பிராமணர்களை, பண்டிதர்களை ருத்ர யக்ஞத்தின் பூஜைக்காக அழைக் கின்றனர். பனாரஸில்தான் சிவன் இருக்கும் கோவில்கள் நிறைய இருக்கின்றன. சிவ காசி என சொல்கின்றனர், உண்மையான பெயர் காசி என இருந்தது. பிறகு ஆங்கிலேயர்கள் பனாரஸ் என பெயர் வைத்தனர். வாரணாசி என்ற பெயர் இப்போது வைக்கப்பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தில் ஆத்மா பரமாத்மாவின் ஞானம் கிடையாது. இருவருக்கும் பூஜை தனித்தனியாக செய்கின்றனர். ஒரு பெரிய சிவலிங்கத்தை செய்கின்றனர், பிறகு சிறு சிறு சாலிக்கிராமங்கள் பலவற்றை செய்கின்றனர். நீங்கள் அறிவீர்கள், ஆத்மாக்களாகிய நம் பெயர் சாலிக்கிராமம் மற்றும் நம்முடைய பாபாவின் பெயர் சிவன் ஆகும். அனைத்து சாலிக்கிராமங்களையும் ஒரே அளவில் உருவாக்கு கின்றனர் எனும்போது தந்தை மற்றும் மகன்களின் சம்மந்தம் உள்ளது. ஓ! பரமபிதா பரமாத்மா! என ஆத்மா நினைவு செய்து கொண்டே இருக்கிறது. நாம் பரமாத்மா அல்ல, பரமாத்மா நம்முடைய தந்தை, இதனைப் புரிய வைக்க வேண்டும் என்ற அறிவுரை உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. யாரானாலும் முதலில் தந்தையின் அறிமுகம் கொடுத்து ஆஸ்தியை வழங்க வேண்டும். அவர் நிராகாரமான தந்தை என்பதை முதலில் நீங்கள் உறுதிப்படுத்தி புரிய வைக்க வேண்டும். இந்த பிரஜாபிதா சாகாரமானவர் (ஸ்தூல சரீரத்தில் இருப்பவர்). ஆஸ்தி நிராகாரரிடமிருந்து கிடைக் கிறது. என்னுடைய பெயர் ஒன்றுதான் அது சிவன் என்பதாகும் என இப்போது தந்தை புரிய வைக் கிறார். எனக்கு வேறு பெயர் எதுவும் கிடையாது. அனைத்து ஆத்மாக்களுக்கும் சரீரத்தின் பெயர்கள் பல உள்ளன. எனக்கு சரீரம் கிடையாது. நான் பரமாத்மா (சுப்ரீம் ஆத்மா) ஆவேன்.
அனைத்தையும் விட பெரிய எதிரி உங்களுக்கு யார் என பாபா கேட்கிறார். நல்ல குழந்தைகள் சொல்வார்கள், அனைத்திலும் பெரிய எதிரி தேக அபிமானமாகும், அதிலிருந்துதான் காமம் உற்பத்தி ஆகிறது. தேக அபிமானத்தை வெற்றி கொள்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஆத்ம அபிமானி ஆவதில் தான் உழைக்க வேண்டியுள்ளது. பிறவி பிறவிகளாக நீங்கள் தேகத்தின் சம்மந்தத்தில் நடந்தீர்கள். நான் ஆத்மா அழிவற்றவனாக உள்ளேன், இதன் ஆதாரத்தில் இந்த சரீரம் நடக்கிறது. நான் ஆத்மா, இந்த உடல் அல்ல என தார்மீக மனம் உள்ளவர்கள் புரிந்து கொள்கின்றனர். ஆத்மாவின் பெயர் ஒன்று தான் இருக்கும். தேகங்களின் பெயர் மாறுகின்றன. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு மற்றொன்றை எடுக்கிறது. நீங்கள் புண்ணிய ஆத்மாக்களின் உலகத் திற்குச் செல்ல வேண்டும் என நமக்கு தந்தை சொல்கிறார். இது பாவாத்மாக்களின் உலகமாகும். இராவணன் பிரஷ்டாச்சாரிகளாக (கீழானவர்களாக) ஆக்குகிறான். 10 தலைகள் உள்ள மனிதர்கள் யாரும் கிடையாது, ஆனால் இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. ஏராளமானோர் இராம் லீலா முதலானவற்றில் பங்கு எடுக்கின்றனர். அனைவரும் ஒரே கொள்கை உடையவர்கள் அல்ல. ஒரு சிலர் இந்த விஷயங்கள் எல்லாம் கற்பனை எனப் புரிந்துக் கொள்கின்றனர், ஆனால் இராவணனுக்குத் தான் கீழ்தரமானவர் என்று சொல்வதை அறியவில்லை. மாற்றான் மனைவியை கடத்துவது இழிச் செயல் அல்லவா. இச்சமயம் எல்லோருமே கீழ் தரமானவர்கள். ஏனெனில் விகாரத்தில் செல்கின்றனர். யார் விகாரத்தில் செல்வதில்லையோ அவர்கள் நிர்விகாரி எனப்படு கின்றனர். அது இராம இராஜ்யமாகும். இது இராவண இராஜ்யமாகும். பாரதத்தில் தான் இராம இராஜ்யம் இருந்தது. பாரதம் அனைத்தையும் விட பழமையானதாக இருந்தது. முதல் நம்பரில் சிருஷ்டியில் சூரிய வம்சத்தின் தேவி தேவதைகளின் கொடி உயர்ந்திருந்தது. அந்த சமயத்தில் சந்திர வம்சத்தவர் கூட இருக்கவில்லை. இப்போது குழந்தைகளாகிய உங்களுடையது சூரிய வம்சத்தின் கொடியாகும். உங்களுக்கு இலட்சியத்தைப் பற்றி தெரிந்திருக்கிறது, பிறகு மறந்து விடுகிறீர்கள். பாடசாலையில் மாணவன் தனது குறிக்கோளை ஒருபோதும் மறந்து போவதில்லை, மாணவன் ஆசிரியரையோ, அல்லது படிப்பையோ மறந்து போக முடியாது. எவ்வளவு உயர்ந்த படிப்பு, 21 பிறவிகளுக்கு இராஜ்ய பாக்கியத்தை அடைகிறீர்கள். இப்படிப்பட்ட பள்ளியில் எவ்வளவு நன்றாக தினம்தோறும் வந்து படிக்க வேண்டும். இந்த கல்பத்தில் தேர்ச்சியடையாவிட்டால் ஒவ்வொரு கல்பமும் தேர்ச்சியடையாமலே போவீர்கள். பிறகு ஒரு போதும் தேர்ச்சியடைய மாட்டீர்கள். ஆக எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நல்ல விதமாக தாரணை செய்து மற்றவர்களையும் செய்வியுங்கள் என ஸ்ரீமத் சொல்கிறது. இறை வழிப்படி நடக்காவிட்டால் உயர் பதவியை அடைய மாட்டீர்கள். தனது மனதுக்குள் கேளுங்கள், நாம் ஸ்ரீமத்படி நடக்கிறோமா? என்று தன்னை அனைத்தும் அறிந்தவர் என புரிந்து கொள்ளக் கூடாது. இப்போது தன்னைத் தான் சோதியுங்கள், இந்த பிரம்மா, சரஸ்வதி ஸ்ரீமத்படி நடப்பது போல நாமும் நடக்கிறோமா? நாமும் கற்று பிறருக்கும் கற்பிக்கிறோமா? ஏனென்றால் நீங்கள் உண்மையிலும் உண்மையான கீதையை சொல்லக் கூடிய வியாசர்கள். சுகதேவன் சிவபாபா கீதையின் பகவான் ஆவார். நீங்கள் அவருடைய குழந்தைகள், கதை சொல்லக் கூடிய வியாசர்கள்.
இது பாடசாலையாகும், பாடசாலையில் குழந்தைகள் படிப்பதிலிருந்தே அவர்களுடைய நிலை தெரிந்து விடும். அது வெளிப்படையானது, இது குப்தமானது. நாம் எந்த அளவு தகுதியானவர்கள் என்பது புத்தியின் மூலம் அறியப்படுகிறது. யாருக்கோ கற்று கொடுத்தற்கான நிரூபணம் கிடைத்துள்ளது. பாபா இவர் (இன்னார்) என்னை உங்கள் குழந்தையாக ஆகும்படி அம்பு எய்தினார், எனவே நாங்கள் உங்களுடையவராக ஆகிவிட்டோம், என குழந்தைகள் எழுதுகின்றனர். சிலரோ எதிரில் வந்தாலும் கூட பாபா நாங்கள் உங்களுடையவர்களாக ஆகி விட்டோம் என சொல்வ தில்லை. பல குழந்தைகள் (பெண்கள்) தூய்மையின் காரணமாக அடிகளும் கூட வாங்கியபடி இருக்கின்றனர். சிலரோ பாபாவின் குழந்தைகளாகியும் கூட பிறகு பிரிந்து போகின்றனர், ஏனென்றால் நல்ல முறையில் படிப்பதில்லை. இல்லாவிட்டால் பாபா எவ்வளவு நல்ல விதமாக புரியவைக்கிறார், குழந்தைகளே என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் மற்றும் படியுங்கள், இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் சக்கரவர்த்தி ராஜா ஆவீர்கள். வீட்டிற்கு வெளியிலும் எழுதிப் போடுங்கள், ஜனகரைப் போல் ஒரு வினாடியில் ஜீவன் முக்தி 21 பிறவிகளுக்குப் பெற முடியும்; ஒரு வினாடியில் நீங்கள் உலகின் எஜமான் ஆக முடியும். உலகின் எஜமானாக கண்டிப்பாக தேவதைகள் தான் ஆவார்கள் அல்லவா. அதுவும் புதிய உலகம், புதிய பாரதம். புதியதாக இருந்த பாரதமே இப்போது பழையதாக ஆகி விட்டது. பாரதத்தைத் தவிர வேறு எந்த கண்டத்தையும் புதியது என சொல்ல மாட்டோம். புதியது என சொன்னால் பின் பழையது எனவும் சொல்ல வேண்டியிருக்கும். நாம் முழுமையான புதிய பாரதத்திற்குச் செல்கிறோம். பாரதம் தான் 16 கலைகள் நிரம்பியதாக ஆகிறது மற்ற எந்த கண்டமும் முழு நிலவாக ஆக முடியாது. அவைகளோ பாதி (கல்பத்திற்கு) க்குப் பிறகே தொடங்குகின்றன. எவ்வளவு நல்ல நல்ல இரகசியங்கள் உள்ளன. நம்முடைய பாரதம்தான் உண்மையான கண்டம் என சொல்லப் படுகிறது. உண்மைக்குப் பின்னால் பிறகு பொய்மையும் உள்ளது. பாரதம் முதலில் முழு நிலவாக ஆகிறது. பின்னாளில் காரிருளாக ஆகி விடுகிறது. முதல் கொடி சொர்க்கத்தினுடையதாகும். பாரடைஸ் (சொர்க்கம்) இருந்தது என பாடவும் செய்கின்றனர். நாம் நல்ல விதமாக புரிய வைக்க முடியும், ஏனென்றால் நமக்கு அனைத்து அனுபவமும் உள்ளது. சத்யுகம், திரேதாவில் நாம் எப்படி இராஜ்யம் செய்தோம், பிறகு துவாபர கலியுகத்தில் என்ன ஆனது என அனைத்தும் புத்தியில் வருவதன் மூலம் எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும். சத்யுகம் வெளிச்சம், கலியுகம் காரிருள் என சொல்லப்படுகிறது. அப்போது ஞானம் எனும் கண்மை சத்குரு கொடுத்தார்….. என சொல்கின்றனர். பாபா வந்து எப்படி அபலைகள், மாதர் களாகிய உங்களை எழுப்பியுள்ளார். செல்வந்தர்களில் யாரோ ஒருவர் நிலைக்கின்றனர். இந்த சமயத்தில் உண்மையில் பாபா ஏழைப்பங்காளராக இருக்கிறார். ஏழைகள்தான் சொர்க்கத்தின் எஜமானார்களாக ஆகின்றனர், செல்வந்தர்கள் அல்ல. இதற்கும் குப்தமான காரணம் உள்ளது. இங்கே பலியாக வேண்டியுள்ளது. ஏழைகளுக்கு பலியாவதற்கு நேரம் பிடிப்பதில்லை, ஆகையால் குசேலரின் உதாரணம் பாடப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது வெளிச்சம் கிடைத்துள்ளது. ஆனால் உங்களுக்குள்ளும் வரிசைக்கிரமமாக உள்ளனர். மற்ற அனைவரின் ஜோதியும் அணைந்து விட்டுள்ளது. இவ்வளவு சிறிய ஆத்மாவுக்குள் அழிவற்ற நடிப்பு நிறைந்துள்ளது. ஆச்சரியமல்லவா. இது ஏதும் அறிவியலின் சக்தி அல்ல. உங்களுக்கு இப்போது பாபாவிடமிருந்து சக்தி கிடைக்கிறது, இது அழிவற்ற சக்கரமாகும், இது சுற்றிக்கொண்டே இருக்கிறது, இதற்கு முதலும் முடிவும் கிடையாது. புதியவர்கள் யாராவது இந்த விஷயங்களை கேட்டால் குழப்பத்தில் வந்து விடுவார்கள். இங்கே 10, 20 வருடங்கள் ஆனவர்களுக்குக் கூட முழுமையாக புரிவதில்லை, பிறருக்குப் புரிய வைக்கவும் முடிவதில்லை. உங்களுக்கு கடைசி காலத்தில் இவர் இன்னாரிடம் சென்று பிறவி அடையப் போகிறார், இது ஆகப்போகிறது. . . என்பதெல்லாம் தெரிந்து போய்விடும். மகாவீரராக இருப்பவர்களுக்கு முன்னே போகப்போக அனைத்தும் காட்சியில் தெரிந்தபடி இருக்கும். கடைசி காலத்தில் உங்களுக்கு சத்யுகத்தின் மரம் (படைப்பு) மிகவும் சமீபத்தில் தென்படும். மகாவீரர் களின் மாலைதான் உள்ளது அல்லவா. முதலில் 8 மகாவீரர்கள், பிறகு 108 மகாவீரர்கள். பின்னாளில் நிறைய முதல் தரமான காட்சிகள் தெரியும். பரமபிதா பரமாத்மா பாணங்களை (அம்புகளை) வீசச் செய்தார் என பாடவும் பட்டுள்ளது. நாடகத்தில் நிறைய விஷயங்கள் உருவாக்கியுள்ளனர். உண்மையில் இது ஸ்தூலமான பாணங் களின் விஷயமல்ல. கன்யாக்கள், மாதர்களுக்கு பாணங்கள் பற்றி என்ன தெரியும். உண்மையில் இவை ஞானத்தின் அம்புகள், மேலும் இவர்களுக்கு ஞானத்தை கொடுப்பவர் பரமபிதா பரமாத்மா ஆவார். எவ்வளவு அதிசயமான விஷயங்கள். ஆனால் குழந்தைகளுக்கு ஒரு முக்கியமான விஷயம் தான் அடிக்கடி மறந்து விடுகிறது. அனைத்திலும் மிகவும் கடுமையான தவறு என்ன வென்றால் தேக அபிமானத்தில் வந்து தன்னை ஆத்மா என நிச்சயம் செய்து கொள்வதில்லை. யாரும் உண்மையை சொல்வதில்லை. உண்மையில் யாரும் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் கூட ஒரு நாளில் நினைவில் இருப்பது கடினமாக உள்ளது. யோகம் என எதனை சொல்கிறோம் என்பதும் கூட சிலருக்குப் புரிவதில்லை. இலட்சியமும் மிகவும் உயர்ந்ததாகும். தன்னை அசரீரி என புரிந்து கொள்ள வேண்டும், எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்ய வேண்டும், கடைசி காலத்தில் வேறு யாரும் நினைவுக்கு வரக்கூடாது. யாராவது நல்ல தத்துவ ஞானி, பிரம்ம ஞானியாக இருந்தால் அவர்கள் ஆசனத்தில் அமர்ந்தபடியே நாம் தத்துவத்தில் ஐக்கியமாகி விடுவோம் என புரிந்து கொள்வார்கள். சரீரத்தின் உணர்வு இருக்காது. பிறகு அவர்கள் சரீரத்தை விடும்போது அக்கம் பக்கத்தில் அமைதி ஏற்பட்டு விடும். யாரோ மகான் ஆத்மா சரீரத்தை விட்டுள்ளார் என புரிந்து கொள்வார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் நினைவில் அமர்ந்தீர்கள் என்றால் எவ்வளவு அமைதி பரவும். உங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த அனுபவம் ஏற்படும். மற்றவர்கள் கொசுக் கூட்டத்தைப் போல இறக்கக் கூடியவர்கள். உங்களுக்கு அசரீரி ஆகக் கூடிய பயிற்சி ஏற்பட்டு விடும். இந்த பயிற்சியை நீங்கள் இங்கேதான் செய்கிறீர்கள். அங்கே சத்யுகத்திலோ ஆத்மா ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கும். இங்கே நாம் சரீரத்தை விட்டு விட்டு பாபாவிடம் செல்ல வேண்டும் என நீங்கள் அறிந்துள்ளீர்கள். ஆனால் கடைசி காலத்தில் வேறு யாரும் நினைவுக்கு வரக்கூடாது. சரீரமே நினைவில் இல்லை எனும்போது வேறென்ன வேண்டியுள்ளது. இதில் முயற்சி தேவை. முயற்சி செய்து செய்து இறுதியில் தேர்ச்சியடைந்து வெளியேறுகிறீர்கள். முயற்சி செய்பவர்கள் பற்றியும் கூட தெரிந்து விடும் அல்லவா, அவர்கள் வெளிப்பட்டபடி இருப்பார்கள். பந்தனத்தில் உள்ள கோபிகைகள் கடிதம் எழுதும் அளவு விடுபட்டவர்கள் கூட எழுதுவதில்லை. அவர்களுக்கு நேரமே இல்லை. இந்த கைகளை கடன் எடுத்திருக்கிறார் எனும் போது சிவபாபாவின் கடிதம் வரும் என பந்தனத்தில் இருப்பவர்கள் புரிந்து கொள்கின்றனர். இப்படிப் பட்ட கடிதம் மீண்டும் 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு வரும். பாபாவுக்கு ஏன் தினமும் கடிதம் எழுதக் கூடாது. கண்ணிலிருக்கும் மையை எடுத்தாவது கடிதம் எழுதலாம் என்றெல்லாம் சிந்தனைகள் வரும். மேலும் அவர்கள் எழுதுகின்றனர், பாபா நான் அதே கல்பத்திற்கு முந்தைய கோபிகை. நாங்கள் உங்களை கண்டிப்பாக சந்திப்போம். ஆஸ்தியும் கண்டிப்பாக எடுப்போம். யோக பலம் இருக்கும்போது தன்னை பந்தனத்திலிருந்து விடுவித்தபடி இருக்கின்றனர். பிறகு மோகப் பற்றுதலும் யார் மீதும் இருக்கக் கூடாது. சாதுரியத்துடன் புரியவைக்க வேண்டும். தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். உறவை பராமரிப்பதற்காகவும் மிகவும் முயற்சி செய்ய வேண்டும். நாம் கணவரையும் உடன் அழைத்துச் செல்வோம் என தாய்மார்கள் புரிந்து கொள் கின்றனர். அவர்களுக்குப் புரிய வைப்பது நம்முடைய கடமை. தூய்மை மிகவும் நல்லதாகும். காமம் மிகப் பெரிய எதிரி, இதனை வெற்றி கொள்ளுங்கள் என பாபா தாமே கூறுகிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானாக ஆக்குவேன். கணவருக்கு புரிய வைத்து அழைத்து வரக்கூடிய குழந்தைகளும் இருக்கின்றனர். பந்தனத்திலிருப்பவர்களின் நடிப்பும் இருக்கிறது. அபலைகளின் மீது கொடுமைகள் இழைக்கப்படவே செய்கிறது. இது சாஸ்திரங்களிலும் கூட பாடப்படுகிறது – காமேஷு, குரேதேஷீ… புதிய விஷயம் எதுவும் இல்லை. உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தி கிடைக்கிறது, அதனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. யோக பலத்தின் மூலம் தனது அனைத்து பந்தனங்களையும் துண்டித்துக் கொண்டு பந்தனத்திலிருந்து விடுபட்டவர் ஆக வேண்டும். யார் மீதும் மோகப் பற்று வைக்கக் கூடாது.
2. கிடைத்திருக்கக் கூடிய ஈஸ்வரிய வழிகளின் படி முழுமையிலும் முழுமையாக நடக்க வேண்டும் நல்ல விதமாக கற்க வேண்டும் மற்றும் கற்பிக்கவும் வேண்டும். அனைத்தும் அறிந்தவர் என்ற கர்வம் கொண்டவராக ஆகக் கூடாது.
வரதானம்:-
அமைத்துக் கொண்டு விடக் கூடிய ஸ்மிருதி (நினைவு) மற்றும் (சமர்த்தி) சக்தி சொரூபம் ஆவீர்களாக.
முழு உலகத்தின் ஆத்மாக்கள் பரமாத்மாவை தந்தை என்று கூறுகிறார்கள். ஆனால் பாலனை மற்றும் படிப்பிற்கு பாத்திரம் ஆவதில்லை. முழு கல்பத்தில் மிகக் குறைந்த ஆத்மாக்களாகிய நீங்கள் தான் இப்பொழுது மட்டுமே இப்பேர்ப்பட்ட பாக்கியத்திற்கு பாத்திரம் ஆகிறீர்கள். எனவே இந்த பாலனையின் நடைமுறை சொரூபமாவது – சகஜயோகி வாழ்க்கை. குழந்தைகளினுடைய எந்தவொரு கஷ்டமான விஷயத்தையும் தந்தையால் பார்க்க பொறுப்பதில்லை. குழந்தைகள் தாங்களாகவே யோசித்து யோசித்து கடினமானதாக ஆக்கிக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் (ஸ்மிருதி சொரூபம்) நினைவின் சொரூபத்தின் சம்ஸ்காரங்களை (இமர்ஜ்) வெளிப்படுத் தினீர்கள் என்றால் (ஸமர்த்தி) சக்தி வந்து விடும்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!