21 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
20 January 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! புத்திசாலியாகி ஒவ்வொரு காரியமும் செய்யுங்கள், மாயை எந்த பாவ காரியமும் செய்வித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.
கேள்வி: -
தந்தையின் பெயரை வெளிப்படுத்துவதற்காக எந்த தாரணைகள் தேவை?
பதில்:-
தந்தையின் பெயர் வெளிப்படுத்துவதற்காக ஒழுக்கமானவர்களாகவும், நேர்மை யானவர் களாகவும் ஆகுங்கள். உண்மையாக சேவை செய்யுங்கள். ஓடும் கங்கையாகி அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள். தனது கர்மேந்திரியங்களை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்து, ஆசைகளை விடுத்து நியமப்படி நடக்க வேண்டும், சோம்பேறிகளாக ஆகாதீர்கள். ஞான, யோகம் முதலில் தனக்குள் தாரணை செய்ய வேண்டும், அப்போது தான் தந்தையின் பெயரை வெளிப்படுத்த முடியும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
இன்றைய மனிதர்கள்..
ஓம்சாந்தி. இது பாரதத்தின் இன்றைய நிலையாகும். ஒரே ஒரு பாட்டில் பாரதத்தின் வீழ்ச்சி காண்பிக்கப் பட்டிருக்கிறது. மற்றொரு பாட்டில் பாரதத்தின் மகிமையும் செய்கின்றனர். உலகத்தினர் இந்த விசயங்களை அறிந்து கொள்ளவில்லை. குழந்தைகளாகிய உங்களிலும் கூட பாரதம் தான் 100 சதவிகிதம் புத்திசாலியாக இருந்தது, இப்போது 100 சதவிகிதம் புத்தியற்றதாக ஆகிவிட்டது என்பதை சிலர் மட்டுமே புரிந்திருக்கிறீர்கள். 100 சதவிகித புத்திசாலிகளாக 2500 ஆண்டு காலம் இருந்தனர், பிறகு முழுமையாக புத்தியற்றவர்களாக ஆகி விட்டனர். புத்தியற்ற வர்களாக ஆவதற்கு அரைக் கல்பம் ஏற்படுகிறது. புத்தியற்றவர் களை ஒரே ஒரு பிறவியில் புத்திசாலியாக ஆக்கக் கூடியவர் தந்தை ஆவார். யாராவது புத்தியற்ற காரியம் செய்கின்றனர் எனில் உள்ளுக்குள் உள்ளம் உறுத்துகிறது, செய்த பாவங்கள் நினைவிற்கு வருகிறது. இப்போது புரிந்து கொண்டு காரியங்கள் செய்ய வேண்டும். புத்தியற்ற காரியம் எதுவும் நடந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு (மறை முகமாக) மாயை யுத்தம் செய்கிறது. காமத்தின் செமி போதையும் இருக்கிறது. பாபா, புயல் வருகிறது என்று குழந்தைகள் எழுதுகின்றனர். காமத்தின் புயல் குறைந்தது கிடையாது. பல வகையான போதையின் புயல்கள் தலையை சூடாக்கி விடுகிறது. தேகத்தின் மீது அன்பும் அந்த அளவிற்கு ஏற்பட்டு விடுகிறது, அதில் புத்தி சென்று விடுகிறது. யோகா முழுமையாக இல்லாததால், மன நிலை பக்குவமற்று இருப்பதால் அவர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படு கிறது. பாபாவிடம் ரிப்போர்ட் அதிகம் வருகிறது. மிக கடுமையான புயலாகும். பேராசையும் அதிகம் தொந்தரவு செய்கிறது. அது நியமத்தை மீறி நடக்க வைத்து விடுகிறது. அந்த சந்நியாசிகள் இருப்பது போன்று நீங்களும் சந்நியாசிகளாக இருக்கிறீர்கள். அவர்கள் ஹட யோகிகள், நீங்கள் இராஜயோகிகள். அவர்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது, சிலர் தங்களது குடிசைகளில் இருக்கின்றனர், அவர்களுக்கு உணர்வு அங்கேயே வந்து விடுகிறது அல்லது கேட்டு வரவழைத்துக் கொள்கின்றனர். விகாரங்களை சந்நியாசம் செய்வதால் தூய்மை மனிதர் களை கவர்ச்சிக்கிறது. அவர்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. இங்கும் ஞான, யோக பலம் தேவை. எந்த அளவு யோகாவில் இருப்பீர்களோ, அந்த அளவு இந்த அனைத்து விசயங்களிலும் எந்த பிரச்சனையும் இருக்காது. யோகா தான் ஆரோக்கியத்தின் அடையாளமாகும். பழைய பாவ கர்மத்தின் கணக்குகளை அனுபவிக்க வேண்டியிருந்தாலும் யோகா தான் ஆதாரமாகும். இந்த பொருள் தேவை… என்று கேட்கக் கூடாது, சந்நியாசிகள் கேட்பது கிடையாது. யோக பலம் இருக்கிறது. தத்துவ யோகிகளிடம் சக்தி இருக்கும். நிர்வாண சந்நியாசிகள் மருந்துக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது செய்கையானதாகும்.
உங்களது அனைத்தும் நினைவின் ஆதாரத்தில் இருக்கிறது. உங்களது யோகா (நினைவு) தந்தையிடம் இருக்கிறது, ஆக இதன் மூலம் பதவியும் உயர்வானதாக கிடைக்கும். உங்களது தேவி தேவதா தர்மம் மிகவும் சுகமானதாகும். அதற்காக உங்களுக்கு ஸ்ரீமத் கிடைக்கிறது. அவர்களுக்கு ஈஸ்வரிய வழி கிடைப்பது கிடையாது. உங்களுக்கு ஈஸ்வரன் வந்து வழி (ஸ்ரீமத்) கொடுக்கின்றார். எவ்வளவு உயர்ந்த வழி கிடைக்கிறது! 21 பிறவி களுக்கான பிராப்தியாகும். பரம்பிதா பரமாத்மா வந்து கற்பிக்கிறார். ஆனால் குழந்தைகள் தந்தையை கூட மறந்து விடுகின்றனர். யோகா முழுமையாக இருந்தால் இந்த பேராசை, பற்றுதல் போன்ற விகாரங்கள் தொந்தரவு செய்யாது. இது வேண்டும், அது வேண்டும் என்று பலருக்கு தொந்தரவு செய்கிறது. பக்கா சந்நியாசிகளிடம் இது இருக்காது. ஒரே ஒரு ஜன்னல் வழியாக என்ன கிடைக்குமோ அதை பெற்றுக் கொண்டனர். யாருக்கு கர்மேந்திரியங்களின் மீது முழு கட்டுப்பாடு இருக்குமோ அவர்கள் ஒருபோதும் மற்றவர்களது பொருட்களை வாங்கிக் கொள்ளமாட்டார்கள். சிலர் வாங்கிக் கொள்கின்றனர். இங்கும் அவ்வாறு இருக்கிறது. உண்மையில் ஈஸ்வரனின் பண்டாரா விலிருந்து எதுவெல்லாம் நியமப்படி கிடைக்கிறதோ அதன் படி நடப்பது தான் சரியானதாகும். மனிதர்களுக்கு அதிக ஆசைகள் ஏற்படுகிறது. ஆசைகள் நிறைவேறாத காரணத்தினால் சோம்பேறிகளாக ஆகிவிடுகின்றனர். இங்கு அனைவரும் நேர்மையானவர்களாக, ஒழுக்க மானவர்களாக ஆக வேண்டும். அனைத்து ஆசைகளையும் நீக்கி விட வேண்டும். குழந்தை களாகிய நீங்கள் மிகவும் சிரேஷ்டமானவர்களாக ஆக வேண்டும்.
குழந்தைகள் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக தந்தை ஒவ்வொரு விதத்திலும் முயற்சி செய்விக்கின்றார். ஒன்று யோகாவில் இருக்க வேண்டும் மற்றும் ஞானத்தை தாரணை செய்து மற்றவர்களுக்கும் செய்விக்க வேண்டும். கங்கைகள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், உண்மையான யோகா என்று எதற்கு கூறப்படுகிறது? என்பதை புரிய வைக்க வேண்டும். பகவான் அனைவருக்கும் தந்தை ஆவார், கிருஷ்னர் இறை தந்தை கிடையாது. என்னை நினைவு செய்யுங்கள், நான் அமைதி மற்றும் சுகத்திற்கான ஆஸ்தி கொடுப்பேன் என்று தந்தை இப்போது கூறுகின்றார். எவ்வளவு எளிய விசயமாகும்! யாருக்கும் அம்பு பதிவது கிடையாது, ஏனெனில் ஏதாவது குறைகள் இருக்கவே செய்கின்றன. அளவற்ற சேவை இருக்கிறது. மனிதர்களுக்கு மயானத்தில் நேரம் இருக்கிறது. குழந்தைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும், சேவையில் ஆர்வம் இருக்க வேண்டும், எந்த விகாரமும் இல்லையெனில் சென்று புரிய வைக்க முடியும். ஒரு தந்தையை நினைவு செய்யுங்கள், அவர் மூலம் தான் பலன் அதாவது ஆஸ்தி அடைய முடியும் என்பதை நீங்கள் புரிய வைக்க வேண்டும். சந்நியாசி கள், ஹடயோகிகள், குருக்கள் போன்றவர்கள் என்ன கொடுக்கின்றனர்! யார் போதனைகள் செய்தாலும் அல்பகால சுகத்திற்காகத் தான். மற்ற அனைவருமே துக்கம் தான் கொடுக் கின்றனர். மேலும் இந்த தந்தை சதா சுகத்திற்கான வழி கூறுகின்றார். என்னை நினைவு செய்யுங்கள் என்று இப்போது தந்தை கூறு கின்றார். விநாசம் எதிரில் இருக்கிறது. என்னை நினைவு செய்தால் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆகிவிடுவீர்கள். தூய்மையாக இருக்க வேண்டும். அழைப்பு கொடுக்க வேண்டியிருக்கிறது. நாளுக்கு நாள் கருத்துகள் எளிதாக்கி கொடுக்கப்படுகிறது. பெரிய பெரிய நகரங்களின் மயானங்களில் பலர் வருகின்றனர். மயானத்தில் அதிக சேவை செய்ய முடியும். எங்களுக்கு நேரமில்லை என்று குழந்தைகள் கூறுகின்றனர், நல்லது, விடுப்பு எடுத்துச் செல்லுங்கள். சேவையில் அதிக பலன் இருக்கிறது. விநாசம் ஏற்பட்டே ஆக வேண்டும். பூகம்பம் போன்றவைகள் நிகழும், அனைத்து அணைகளும் உடைந்து விடும். பல ஆபத்துக்கள் வர இருக்கின்றன. யாரிடம் ஞானம் இருக்கிறதோ அவர்கள் நடனமாடிக் கொண்டே இருப்பார்கள். யார் சேவாதாரி குழந்தைகளோ அவர்கள் தான் கடைசியில் ஹனுமானைப் போன்று உறுதியானவர்களாக இருக்க முடியும். சிலர் அணு குண்டின் ஓசை கேட்டதும் இறந்து விடுவர். ஹனுமான் ஒரு உதாரணமாக இருக்கின்றார், ஆனால் 108 லி ல் வருபவர்கள் இவ்வாறு சக்தியுடையவர்களாக இருப்பார்கள் அல்லவா! அந்த சக்தி சேவையின் மூலம் தான் வரும். குழந்தை களே! சேவை செய்து உயர்ந்த பதவி அடையுங்கள், பின்னாலில் பட்சாதாபப்படக் கூடாது என்று தந்தை கூறு கின்றனர். ஆகையால் உயர்ந்த பதவி அடையுங்கள் என்று முன் கூட்டியே கூறி விடுகிறேன். மற்றவர்களுக்குப் புரிய வைப்பதும் மிக எளிதாகும். கோயில்களுக்கும் நீங்கள் சென்று புரிய வைக்க முடியும். இவர் களுக்கு இந்த இராஜ்யம் கொடுத்தது யார்? பகவான் கொடுத்தார் என்று உடனேயே கூறிவிடுவர். உங்களுக்கு இந்த செல்வம் கொடுத்தது யார்? என்று மனிதர்களிடத்தில் கேட்டால் பகவான் என்று உடனேயே கூறிவிடுவர். லெட்சுமி நாராயணனுக்கு பகவான் இந்த செல்வம் எப்படி கொடுத்தார்? என்பதையும் புரிய வைக்க வேண்டும். தந்தையை அறிந்து கொள்வதன் மூலம் நீங்களும் அந்த பதவியை அடைய முடியும். வந்தால் புரிய வைக்கிறோம் அல்லது இந்த விலாசத்திற்கு வந்து புரிந்து கொள்ளுங்கள். இங்கு பணம் போன்றவைகளை வைத்துக் கொள்ளக் கூடாது. குழந்தைகளாகிய உங்களது புத்தியில் அனைத்து இரகசியங்களும் உள்ளன. லெட்சுமி நாராயணன், சீதாலிஇராமர் இவர்களுக்கு இந்த இராஜ்யத்தை கொடுத்தது யார்? அவசியம் பகவானிடமிருந்து அடைந்திருக்க வேண்டும். சூரியவம்சம், சந்திரவம்ச இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. லெட்சுமிலிநாராயணன் இராஜ்யத்தை எவ்வாறு சீதா-இராமரிடம் கொடுக்கின்றனர் என்பதை நீங்கள் சாட்சாத்காரமும் செய்திருக்கிறீர்கள். லெட்சுமிலிநாராயணன் பகவானிடமிருந்து அடைகின்றனர். புரிய வைக்க முடியும் அல்லவா! விசயங்கள் மிகவும் எளியது மற்றும் இனிமையானது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை அல்லவா! என்று கூறுங்கள். அந்த பரம்பிதா பரமாத்மாவை அறிவீர்களா? என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். கிருஷ்ணரை பாபா என்று கூறமாட்டோம். கிருஷ்ணர் முந்தைய பிறப்பில் இந்த இராஜயோகத்தின் மூலம் இந்த பதவியை அடைந்திருக் கிறார். இப்படிப்பட்ட கருத்துகளை குறிப்பெடுக்க வேண்டும், பிறகு மறந்து விடவும் கூடாது. மனிதர்கள் ஏதாவது விசயத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமெனில் முடிச்சு போட்டுக் கொள்வர். நீங்களும் இரண்டு விசயங்களுக்கான முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். மன்மனாபவ (தந்தை) மற்றும் மத்தியாஜீ (ஆஸ்தி) என்று தந்தை கூறுகின்றார் என்ற இரண்டு விசயங்களை கூறிக் கொண்டே இருங்கள். அனைத்து தர்மத்தினருக்கும் செய்தி கொடுங்கள் என்று நமக்கு தந்தை கூறியிருக்கின்றார் என்று கண்காட்சிகளிலும் அதிக சேவை செய்ய முடியும். நீங்கள் தனியான ஆத்மா. இப்போது தந்தையாகிய என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசமாகும், மேலும் நீங்கள் என்னிடத்தில் வந்து விடுவீர்கள். இந்த கடைசிப் பிறவியில் தூய்மையாக ஆக வேண்டும். அமரலோகம் செல்ல வேண்டுமெனில் என்னை நினைவு செய்யுங்கள். அவ்வளவு தான், இதை புரிய வைக்கும் தொழில் செய்யுங்கள். அரைக் கல்பம் பக்தியில் ஏமாற்றம் அடைந்தீர்கள். இந்த பிறவியில் இந்த செய்தியை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். பாபா என்ன கூறுகின்றார் என்று தண்டோராவும் போடுங்கள். பாபாவின் செய்தியை கொடுக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார், அதிகம் புரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் எனில் வந்து புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அதிக சேவை செய்ய முடியும். செலவிற்கு அனைத்தும் கிடைத்து விடும். ரொட்டியை தனது கைகளினாலேயே சமைத்துக் கொள்ள முடியும். சேவை செய்ய முடியும். சேவைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லையெனில் என்ன செய்ய முடியும்? ஏற்ற ஆசாமியையும் பார்க்க வேண்டியிருக்கிறது. சிறிதளவு இரகசியத்தை மற்றவர்களுக்குப் புரிய வைத்தால் நான் உங்களுக்கு கிட்பேக் உருவாக்கிக் கொடுப்பேன் என்று பாபா கூறுகிறார். பக்தியின் பலனை கொடுப்பதற்காக பாபா வந்திருக்கின்றார். குழந்தைகளே! இப்போது அசரீரியாகி திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். ஆகையால் என்னை நினைவு செய்தால் நீங்கள் கர்மாதீத நிலை அடைந்து விடுவீர்கள். நீங்கள் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள் என்று பாபா உத்திரவாதம் செய்கின்றார். பலருக்கு செய்தி கிடைத்து விட வேண்டும். அவரவர்களது ஊரிலும் சேவை செய்ய முடியும். அதாவது வெளி ஊர்களுக்குச் சென்று செய்யுங்கள், செலவிற்கு கிடைத்து விடும். யாராவது சேவை செய்து காண்பியுங்கள். தொழில்கள் செய்தாலும், அதிக சேவை செய்ய முடியும். 8 மணி நேரம் தொழில் செய்யுங்கள், 8 மணி நேரம் ஓய்வெடுத்தாலும் அதிக நேரம் கிடைக்கும். ஒரு மணி நேரம் உண்மையான சேவை செய்தாலும் மிக நல்ல பதவி அடைய முடியும். நாலா புறமும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும், ஆனால் இதில் பயமற்ற நிலையும் தேவை. நான் ஒன்றும் யாசிக்க வர வில்லை, நான் உங்களுக்கு ஈஸ்வரனை அடைவதற்கான வழி கூற வந்திருக்கிறேன் என்று அவர்களுக்கு முதலில் கூற வேண்டும். நமக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது, ஒரு நிமிடத் திற்கான மகா மந்திரம் கொடுத்து விட்டு செல்வேன். இது சஞ்சீவினி மூலிகை ஆகும். நாங்கள் பாபாவின் செய்தி கொடுப்பதற்காக வந்திருக்கிறோம். என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். அதிக சேவை இருக்கிறது. ஆனால் சுயம் யாராவது தேக அபிமானத்தில் இருந்தால் மற்றவர்களுக்கு அம்பு பாயாது. தந்தையிடம் சத்தியமாக இருக்க வேண்டும். உற்றார், உறவினைர்களை நினைவு செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று இருக்கக் கூடாது. இது வேண்டும், அது வேண்டும்…. நீங்கள் எதையும் கேட்கக் கூடாது. நீங்கள் யாரிடத்திலும் வாங்கக் கூடாது. மற்றவர்களது கைகளினால் சமைத்ததை சாப்பிடக் கூடாது. நாம் நமது கைகளினால் சமைத்ததை சாப்பிட வேண்டும். தனது கைகளினால் சமைத்ததை சாப்பிடும் போது சக்தி அதிகம் கிடைக்கும். ஆனால் அந்த அளவிற்கு உழைப்பு யாரும் செய்வது கிடையாது. மாயை மிகவும் பலசாலி. தேக அபிமானத்தின் வியாதி நீங்குவது மிகவும் கடினமாக இருக்கிறது. அதிக உழைப்பு இருக்கிறது. யோகாவில் இல்லையெனில் சமைப் பதையே நிறுத்தி விடுகின்றனர். யோகாவில் இருந்து சாப்பிடுங்கள். ஆத்ம அபிமானி நிலை உருவாக்கு வதற்கு அதிக உழைப்பு தேவை. பெரிய பெரிய சத்சங்களுக்குச் சென்று ஒரே ஒரு விசயத்தை புரிய வையுங்கள், பகவானின் மகாவாக்கியம்: என் ஒருவனை நினைவு செய்தால் சொர்க்கத் திற்கு வந்து விடுவீர்கள். பாரதம் சொர்க்கமாக இருந்தது அல்லவா! உலகிற்கு எஜமானர் ஆவது, உயர்ந்த பதவி அடைவது என்பது உயர்ந்த முயற்சியாகும். பிரஜையாக வருவது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) புத்தியற்ற எந்த காரியமும் செய்யக் கூடாது. இதற்கு ஞான, யோக பலத்தை சேமிக்க வேண்டும். நேரம் ஒதுக்கி சத்தியத்துடன், பயமற்ற நிலையுடன் சேவை அவசியம் செய்ய வேண்டும். சேவையின் மூலம் தான் சக்தி கிடைக்கும்.
2) தேக அபிமானம் என்ற நோயிலிருந்து தப்பிப்பதற்கு உணவை மிகவும் யோகயுக்த்தாக இருந்து சாப்பிட வேண்டும். முடிந்தால் தனது கைகளினால் சமைத்து சுத்தமான உணவை சாப்பிட வேண்டும்.
வரதானம்:-
எவ்வாறு ரோஜா மலர் துர்நாற்றம் வீசும் உரத்தின் மூலம் நறுமணத்தை தாரணை செய்து நறுமணம் வீசும் ரோஜாவாக ஆகிவிடுகிறதோ, அதே போன்று உலகை மாற்ற செய்யும் சிரேஷ்ட ஆத்மாக்களாகிய நீங்கள் சுபமற்ற, வீணான, சாதாரண பாவணை மற்றும் உணர்வு களை சிரேஷ்டமானதாக, சுபமற்ற உணர்வு மற்றும் பாவணையை சுப உணர்வு மற்றும் பாவணையாக மாற்றுங்கள். அப்போது தான் பிரம்மா பாபாவிற்கு சமமாக அவ்யக்த பரிஸ்தா ஆகக் கூடிய இலட்சியம் எளிதாக மற்றும் தானாகவே வந்து விடும். இதன் மூலம் மாலையில் மணிகளின் நெருக்கத்தில் வருவீர்கள்.
சுலோகன்:-
அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.
பாப்தாதாவிற்கு குழந்தைகளின் மீது அதிகமாக அன்பு இருக்கிறது, அதனால் தான் ஒவ்வொரு குழந்தையும் என்னை விட முன்னேறிச் செல்ல வேண்டும் என்று நினைக்கின்றார். உலகிலும் யார் மீது அதிக அன்பு இருக்கிறதோ, அவரை தன்னை விட முன்னேற்றத்தில் கொண்டு செல்வர். இதுவே அன்பின் அடையாளமாகும். ஆக பாப்தாதாவும் கூறுகின்றார் லி இப்பொழுது என்னுடைய குழந்தைகளிடம் எந்த குறைகளும் இருக்கக் கூடாது, அனைவரும் சம்பூர்னம், சம்பன்னம் மற்றும் சமம் ஆக வேண்டும்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!
🕊️🕊️🕊️🇲🇰 OM SHANTI BABA OM SHANTI MAMA OM SHANTI FAMILY OM SHANTI SHANTI SHANTI 💛🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌐🐘🐘🐘🐘🐘🐘🐘🙏🕉️