21 August 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

August 20, 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

மகா சிவராத்திரி கொண்டாடுவது என்றால் உறுதிமொழி செய்வது, விரதம் இருப்பது மற்றும் பலி கொடுப்பது

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று திவ்ய மகாஜோதி தந்தை தன்னுடைய ஜோதிர்பிந்து குழந்தைகளுடன் சந்திப்பு செய்து கொண்டிருக்கின்றார். பாப்தாதா கூட மகான் ஜோதி ஆவார்கள் மற்றும் குழந்தைகளாகிய நீங்களும் கூட மகான் ஜோதி சொரூபம் ஆவீர்கள். ஆகவே, தெய்வீக ஜோதியான தந்தை தெய்வீக ஜோதி ஆத்மாக்களுடன் சந்திப்பு செய்து கொண்டு இருக்கின்றார். இந்த மகான் ஜோதி எவ்வளவு அன்பானவராக மற்றும் தனிப்பட்டவராக உள்ளார். பாப்தாதா ஒவ்வொருவர் நெற்றியின் நடுவில் ஜொலித்துக் கொண்டிருக்ககும் ஜோதியைப் பார்த்துக் கொண்டு இருக் கின்றார்கள். இந்த ஆன்மிக ஜோதிமயமான நட்சத்திரங்களின் மண்டலமானது அலௌகீக மானதாக மற்றும் மிகவும் அழகானதாக உள்ளது. நீங்கள் அனைவரும் கூட இந்த தெய்வீகமான நட்சத்திர மண்டலத்தில் தன்னுடைய ஜொலித்துக் கொண்டிருக்கும் பிந்து (புள்ளி) சொரூபத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்களா? இதுவே மகாசிவராத்திரி ஆகும். சிவ ஜோதியின் கூடவே நீங்கள் அனேக ஜோதிப்புள்ளி சாலிகிராம் ஆவீர்கள். தந்தையும் மகான் ஆவார், குழந்தைகளும் மகான் ஆவீர்கள், ஆகையினால், மகாசிவராத்திரி மகிமை பாடப் படுகிறது. எவ்வளவு சிரேஷ்டமான பாக்கியசாலி ஆத்மாக்கள் நீங்கள்! சைத்தன்யமாக சாகார சொரூபத்தில் சிவதந்தையுடன் சிவராத்திரியைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றீர்கள். இத்தகைய அலௌகீக சிவராத்திரியைக் கொண்டாடக் கூடிய சாலிகிராம் ஆத்மாக்கள் நாம் என்பதை ஒருபொழுதும் எண்ணத்தில் கூட, கனவிலும் கூட நினைத்ததில்லை. நீங்கள் அனைவரும் சைத்தன்ய ரூபத்தில் கொண்டாடுகின்றீர்கள். அதனுடைய ஞாபகார்த்தமே இப்பொழுது பக்தர்கள் மூலம் ஜடச்சித்திரத்தை சைத்தன்ய பாவனையோடு கொண்டாடுவதைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். உண்மையான பக்தன் சித்திரத்தில் பாவனையினால், பாவனை சொரூபத்தை அனுபவம் செய்கின்றார்கள் மற்றும் சாலிகிராம் ஆத்மாக் களாகிய நீங்கள் எதிரில் கொண்டாடுபவர்கள். எனவே, எவ்வளவு பாக்கியம் உள்ளது! கோடி, பில்லியன் (100 கோடி), டிரில்லியன் (ஒரு இலட்ச கோடி) , . . . .இது கூட உங்களுடைய பாக்கியத்திற்கு முன் ஒன்றுமே கிடையாது. ஆகையினால், அனைத்துக் குழந்தைகளும் நம்பிக்கை யின் பெருமையோடு நாங்கள் பார்த்துவிட்டோம், நாங்கள் அடைந்துவிட்டோம்….. என்று சொல் கின்றீர்கள். இந்த பாடல் அனைவருடையதா அல்லது ஒரு சிலருடையதா? அனைவரும் பாடுகிறீர்கள் அல்லவா? அல்லது பார்த்துக் கொள்ளலாம், அடைந்துவிடுவோம் என்று பாடு கிறீர்களா? அடைந்துவிட்டீர்களா அல்லது அடைய வேண்டுமா? இரட்டை அயல்நாட்டினர் என்ன நினைக்கின்றீர்கள் – அடைந்துவிட்டீர்களா? தந்தையைப் பார்த்தும் விட்டீர்கள் அல்லவா? தந்தையைப் பார்த்துவிட்டோம், அடைந்துவிட்டோம் என்று உள்ளத்தில் இருந்து சொல்கின்றீர்கள். பார்ப்பது மற்றும் கேட்பது என்ன, ஆனால், தந்தையை தன்னுடைய வராகவே ஆக்கிவிட்டீர்கள். தந்தை உங்களுடையவர் ஆகிவிட்டார் அல்லவா? பாருங்கள், உங்களுடைய தந்தை ஆகி விட்டதனாலேயே உங்களுடைய சொல்லுக்கு இணங்கி தந்தை வந்துவிடுகின்றார் அல்லவா. எனவே, அதிகாரி ஆகிவிட்டீர்கள் அல்லவா.

மகாசிவராத்திரியின் விஷேசத்தன்மைகள் என்னென்ன? ஒன்று, தந்தைக்கு முன் உறுதி மொழி செய்கின்றீர்கள் மற்றும் இரண்டாவது, தந்தையின் அன்பில் விரதம் இருக்கின்றீர்கள், ஏனெனில், அன்பு மற்றும் குஷியில் அனைத்தையும் மறந்துவிடுகின்றீர்கள், ஆதலால், விரதம் இருக் கின்றீர்கள். குஷி என்ற உணவை சாப்பிடுவதால் வேறு உணவிற்கான அவசியம் ஏற்படுவதில்லை. சந்திப்பினுடைய குஷியின் காரணத்தினால் விரதம் இருக்கின்றீர்கள். விரதம் என்பது குஷியின் அடையாளமும் கூட மற்றும் விரதம் இருப்பது என்றால் அன்பில் தியாக பாவனை உள்ளதாக அர்த்தம். எதையாவது விடுவது என்பது தியாக பாவனையின் அடையாளம் ஆகும். மூன்றாவது விசயம் – சிவராத்திரி என்றால் பலி கொடுப்பது. நினைவுச் சின்ன ரூபத்திலோ ஸ்தூலமாக பலி கொடுக்கின்றார்கள், ஆனால், கொடுக்க வேண்டியதோ மனம், புத்தி மற்றும் சம்பந்தத்தால் சமர்ப்பணம் ஆகுவது – இதுவே உண்மையான பலி கொடுப்பதாகும். எனவே, இந்த மூன்று விஷேசத்தன்மைகளும் மகாசிவராத்திரியின் விஷேசத் தன்மைகள் ஆகும். சிவராத்திரி கொண்டாடுவது என்றால் இந்த மூன்று விஷேசத்தன்மை களையும் நடைமுறை வாழ்வில் கொண்டு வருவதாகும். சொல்வது மட்டும் கூடாது, ஆனால் செய்ய வேண்டும். சொல் மற்றும் செயல் எப்பொழுதும் சமமாக இருக்க வேண்டும். பாரதத்தின் குழந்தைகளோ அல்லது வெளிநாட்டுக் குழந்தைகளோ, அனைவருமே மகாசிவராத்திரிக்கான நடைமுறை சொரூபமாக உறுதிமொழி செய்திருக்கிறீர்கள் என்ற குழந்தைகளுடைய நற்செய்தி யின் சமாச்சாரத்தையும் பாப்தாதா கேட்டார்கள். எனவே, உறுதிமொழி செய்வது என்றால் சொல் மற்றும் செயல் இரண்டும் சமமாக இருப்பதாகும். அனைவரும் முதலில் பாப்தாதாவிற்கு அனைத்தையும் விட பெரியதிலும் பெரிய பிறந்த நாள் பரிசாக உறுதிமொழி அதாவது சிரேஷ்ட சங்கல்பத்தைக் கொடுத்திருக் கின்றீர்கள் என்பது மிகவும் நல்ல விசயமாகும். எனவே, பாப்தாதாவும் அனைத்துக் குழந்தை களுடைய பரிசிற்காக நன்றிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். பரிசாகக் கொடுக்கப் பட்ட உறுதிமொழியை சதா நினைவில் வைத்தால், அது சக்திசாலியாக ஆக்கிக் கொண்டே இருக்கும். உறுதிமொழி செய்திருக்கிறேன், ஆனால், அதன்படி நடக்க முடியுமா அல்லது முடியாதா என்பது தெரியவில்லை என்று முதலிலேயே நினைக்காதீர்கள். கடைபிடிக்க முடியுமா அல்லது கடைபிடிக்க முடியாமல் போகுமா! இப்படி சிந்திப்பது என்றால் பலவீனத்தை அழைப்பது என்பதாகும். எனவே, பலவீனம் அதாவது மாயையை எப்பொழுது சுயம் தானே அழைத்துக்கொண்டு இருக்கின்றீர்களோ, அப்பொழுது அந்த பலவீனம் வருவதற்கு முதலிலேயே தயாராக இருக்கிறது. இதுவோ, நீங்கள் அதற்கு அழைப்பு கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள். ஆகையினால், எந்தவொரு எண்ணம், செயல் செய்யும் பொழுதும் சக்திசாலி ஸ்திதியில் நிலைத்திருந்து சக்தி வாய்ந்தவராகி செய்யுங்கள். பலவீனமான எண்ணத்தைக் கலப்படம் செய்யாதீர்கள். தைரியம் என்னுடையது, கவனம் என்னுடையது மற்றும் உதவியோ தந்தையினுடையது. இந்த விதிப்படி உறுதிமொழியை நடைமுறையில் கொண்டு வருவது என்பது மிகவும் எளிதாக இருப்பதாக அனுபவம் செய்வீர் கள். அனேக கல்பத்தின் வெற்றியாளர் ஆத்மா நான் என்று எப்பொழுதும் நினைத்திடுங்கள். வெற்றியின் மகிழ்ச்சி, வெற்றியின் போதை சக்திசாலி ஆக்கிவிடும். வெற்றி பிராமண ஆத்மாக்களாகிய உங்களுடைய துணைவனாக சதா கட்டுண்டிருக்கிறது. அது வேறு எங்கு செல்லும்? பாண்டவர்களைத் தவிர வெற்றி வேறு எவருக்கும் துணையாக இருந்ததா? அதே பாண்டவர்கள் தானே நீங்கள்! தந்தை துணைவனாக இருக்கின்றார், எனவே, வெற்றியும் உங்கள் துணைவனாக உள்ளது. சதா தன்னுடைய நெற்றியில் வெற்றித் திலம் வைக்கப் பட்டிருக்கிறது, இதைப் பாருங்கள். யார் பிரபுவினுடைய கழுத்து மாலை ஆகிவிட்டார்களோ, அவர்களுக்குத் தோல்வி ஒருபொழுதும் ஏற்பட முடியாது. சம்பரண வெற்றியாளர் ரூபத்தில் தன்னுடைய நினைவுச்சின்னமான வெற்றி மாலையைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா? வெற்றி மற்றும் தோல்வி மாலை என்பதாக மகிமை கிடையாதல்லவா! கிடையாது, வெற்றி மாலை என்று தான் உள்ளது. வெற்றி மணிகளோ நீங்கள் அல்லவா! எனவே, வெற்றிமாலையின் மணிகள் ஒருபொழுதும் தோல்வி அடையமுடியாது. ஒவ்வொருவரும் என்ன சங்கல்பம் செய்துள்ளீர்கள் என்ற முழு காட்சியையும் பாப்தாதா பார்த்தார்கள். நல்ல ஊக்க உற்சாகத்துடன் குஷி குஷியோடு உறுதிமொழி செய்திருக்கிறீர்கள். மேலும், சைத்தன்ய சாலிகிராம் ஆகிய நீங்கள் உறுதிமொழிகள் எடுத்திருக்கிறீர்கள் ஆதலால், பக்தர்களும் கூட உங்கள் நினைவுச்சின்னத்தைக் கொண்டாடிக் கொண்டு இருக்கின்றார்கள் (தபஸ்யாவிற்கு சம்பந்தமாக நேற்று அனைவரும் 56வது சிவஜெயந்தியில் 56 உறுதிமொழிகள் செய்துள்ளனர்).

பலியாகி விட்டீர்கள். பலியாகுவது என்றால் மகாபலவான் ஆகுவதாகும். எதை பலி செய் கின்றீர்கள்? பலவீனங்களை பலி செய்துவிட்டீர்கள் என்றால் என்னவாகி விட்டீர்கள்? மகாபலவான். தேக அபிமானமே அனைத்தையும் விட பெரிய பலவீனமாகும். தேக உணர்வை சமர்ப்பணம் செய்வது என்றால் அதனுடைய வம்சத்தையும் சமர்ப்பணம் செய்வது என்பதாகும். ஏனெனில், தேக அபிமானத்தின் சூட்சுமமான வம்சமோ மிகவும் பெரியது. அனேக விதமான சிறிய பெரிய தேக உணர்வு உள்ளது. எனவே, தேக உணர்வை பலி செய்வது என்றால், அதனுடைய வம்சம் சகிதம் சமர்ப்பணம் ஆவதாகும். அம்சத்தைக் கூட வைத்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை, அம்ச அளவில் கூட தங்கி இருந்தால் அடிக்கடி காந்தம் போல் ஈர்த்துக் கொண்டே இருக்கும். உங்களுக்குத் தெரியவே தெரியாது. விரும்பாமலேயே காந்தம் தன் பக்கம் இழுக்கும். ஏதாவது ஒரு நேரத்தில் இந்த தேக அபிமானத்தை ஏதாவது ஒரு விதத்தில் காரியத்தில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். பிறகு என்ன சொல்கிறார்கள்? இது இல்லாமல் வேலை நடக்காது என்று சொல் கிறார்கள். வேலை நடக்கிறது, ஆனால், கொஞ்ச சமயத்திற்கு வெற்றி தென்படும். அபிமானத்தை சுவமானம் என்று புரிந்து கொள் கின்றீர்கள். ஆனால், இந்த அல்ப கால வெற்றியில் நீண்ட காலத்திற்கான தோல்வி அடங்கியுள்ளது. மேலும், எதை கொஞ்ச சமயத்திற் கான தோல்வி என புரிந்து இருக்கின்றீர்களோ, அது சதா காலத்திற்கான வெற்றியை அடைய வைக்கிறது. ஆகையினால், தேக அபிமானத்தின் அம்ச சகிதமாக சமர்ப்பணம் ஆக வேண்டும். – இதையே சிவ தந்தையிடம் பலி ஆகுவது, அதாவது மகா பலவான் ஆகுவது என்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு சிவராத்திரியைக் கொண்டாடி யிருக்கின்றீர்கள் அல்லவா? இந்த விரதத்தை தாரணை செய்ய வேண்டும். உலக மக்களோ ஸ்தூல பொருட் களினுடைய விரதம் இருக்கின்றார்கள், ஆனால், நீங்கள் என்ன விரதம் இருக்கின்றீர்கள்? சதா பலவீனமான உள்ளுணர்வை அழித்துவிட்டு சுபமான மற்றும் சிரேஷ்டமான உள்ளுணர்வை தாரணை செய்வேன், என்று சிரேஷ்டமான உள்ளுணர்வு மூலம் விரதம் மேற்கொள்கிறீர்கள். எப்பொழுது உள்ளுணர்வில் சிரேஷ்டத்தன்மை உள்ளதோ, அப்பொழுது சிருஷ்டி சிரேஷ்டமாகவே தெரியும். ஏனெனில், உள்ளுணர்வோடு பார்வை மற்றும் செயலுக்கு தொடர்பு உள்ளது. எந்த ஒரு நல்ல அல்லது தீய விசயமோ முதலில் உள்ளுணர்வில் தாரணை ஆகிறது, பிறகு பேச்சு மற்றும் செயலில் வருகிறது. உள்ளுணர்வு சிரேஷ்டமானதாக ஆகுவது என்றால் பேச்சு மற்றும் செயல் தானாகவே சிரேஷ்டமானதாக ஆகுவதாகும். உலக மாற்றத்திற்கான உங்களுடைய விஷேசமான சேவை கூட சுபமான உள்ளுணர்வினாலேயே நடைபெறுகிறது. உள்ளுணர்வில் இருந்தே அதிர்வலைகள், வாயுமண்டலத்தை உருவாக்குகின்றீர்கள். எனவே, சிரேஷ்டமான உள்ளுணர்வின் இந்த விரதத்தை தாரணை செய்ய வேண்டும். இதுவே சிவராத்திரி கொண்டாடுவது ஆகும். கொண்டாடுவது என்றால் ஆகுவது, சொல்லுவது என்றால் செய்வது என்பதைக் கேட்டு இருக்கிறீர்கள் அல்லவா? யார் ஸித்தியை அடைந்த ஆத்மாக்களோ, அவர்களை உலகாய மொழியில் ஸித்தி (வெற்றி) புருஷர்கள் என்று சொல்லப் படுகிறது. ஆனால், நீங்களோ சித்தி சொரூப ஆத்மா என்று சொல்வீர்கள் – இவர்கள் தனக்காகவோ அல்லது பிறருக்காகவோ எழுப்பக் கூடிய ஒவ்வொரு எண்ணமும் கர்மத்தில் சித்தி (வெற்றி) ஆகிவிடுகிறது. என்ன வார்த்தை பேசுகின்றார்களோ, அது சித்தி ஆகிவிடு கின்றது. இதையே சத்திய வார்த்தை என்று சொல்கின்றனர். எனவே, அனைவரையும் விட பெரியதிலும் பெரிய சித்தி (வெற்றி) சொரூப ஆத்மாக்கள் நீங்கள் ஆவீர்கள் அல்லவா, எனவே, எண்ணம் மற்றும் பேச்சு ஸித்தி ஆகும் அல்லவா, ஸித்தி ஆகுவது என்றால் வெற்றி அடைவது என்று அர்த்தம். பிரத்யட்ச சொரூபத்தில் வருவது என்பது சித்தி அடைவது என்பதாகும். எனவே, நாம் அனைவரும் ஸித்தி சொரூப ஆத்மாக்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். சித்தி சொரூப ஆத்மாக்களாகிய நம்முடைய ஒவ்வொரு எண்ணம், ஒவ்வொரு வார்த்தை, ஒவ்வொரு செயல் தனக்கும் மற்றும் அனைவருக்கும் வெற்றியை கிடைக்கச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். வீணானதாக இருக்கக் கூடாது, சொல்லப்பட்டது, உடனே செய்யப்பட்டுவிட்டது என்றால் ஸித்தி ஆகிவிட்டது. சொல்லப்பட்டது, யோசித்து விட்டு பிறகு செய்யவில்லை என்றால் தனக்காக அல்லது சேவைக்காக அது வீணாகிவிட்டது. என்னுடைய சங்கல்பம் மிகவும் நன்றாக வருகிறது, மிகவும் நல்ல நல்ல சிந்தனைகள், ஊக்கம் வருகிறது, ஆனால், சங்கல்பம் வரை மட்டும் இருந்துவிடுகிறது. நடைமுறை கர்மத்தில், சொரூபத்தில் வருவதில்லை. இதை என்னவென்று சொல்லலாம்? சங்கல்பம் மிக நன்றாக உள்ளது, ஆனால், கர்மத்தில் வித்தியாசம் ஏன்? இதற்கான காரணம் என்ன? ஒருவேளை, விதை மிகவும் நன்றாக உள்ளது, ஆனால், பழம் நன்றாக வெளிப்படவில்லை எனில் என்ன சொல்வது? நிலம் அல்லது பத்தியத்தின் குறைபாடு உள்ளது. அதுபோன்றே சங்கல்பம் என்ற விதை நன்றாக உள்ளது. பாப்தாதாவிடம் சங்கல்பங்கள் வந்தடைகின்றன. மிகவும் நன்றாக விதை விதைத்து இருக்கின்றார்கள், மிகவும் நல்ல சங்கல்பங்கள் செய்து இருக்கின்றார் கள், இப்பொழுது பலன் நிச்சயம் கிடைத்துவிடும் என்று பாப்தாதாவும் மகிழ்ச்சி அடை கின்றார்கள். ஆனால், நடப்பது என்ன? உறுதியான தாரணை என்ற நிலத்தின் குறைபாடு மற்றும் அடிக்கடி கவனம் கொடுப்பது என்ற பத்தியத்தின் குறைபாடு ஏற்பட்டுவிடுகின்றது. பாப்தாதா சிரிப்பான விளையாட்டைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். எவ்வாறு சிறு குழந்தைகள் கேஸ் பலூனை பறக்கவிடுகின்றார்கள் அல்லவா, மிகவும் நன்றாக காற்றை நிறைத்துவிட்டு பறக்கவிடுகின்றார்கள் மற்றும் மகிழ்ச்சி அடைகின்றார்கள், பலூன் மேலே சென்று விட்டது, மிகவும் நன்றாக பறந்து கொண்டு இருக்கின்றது…. ஆனால், போகப் போக கீழே வந்துவிடுகிறது. எனவே, ஒருபோதும் முயற்சியில் நம்பிக்கை இழந்தவர் ஆகாதீர்கள். செய்தே ஆகவேண்டும், நடந்தே ஆகவேண்டும், ஆகியே தீர வேண்டும், வெற்றி மாலை என்னுடைய ஞாபகார்த்த சின்னம் தான். நம்பிக்கை இழந்து, நல்லது செய்யலாம், பார்க்கலாம், என்று யோசிக்காதீர்கள். இப்படி நினைக்காமல் நாளை என்ன, இப்பொழுதே செய்தே ஆக வேண்டும். ஒருவேளை, நம்பிக்கையற்ற நிலைக்கு சில வினாடி கள் அல்லது நிமிடங்கள் கூட தனக்குள் இடம் கொடுத்துவிட்டால் பிறகு, அது எளிதாக செய்யக் கூடியது கிடையாது. அதற்குக் கூட பிராமண ஆத்மாக்களிடம் இருப்பதற்கே போதை வருகிறது. ஆகையினால், நம்பிக்கை இழந்தவராக ஒருபோதும் ஆகாதீர்கள். அபிமானமும் கூடாது, நம்பிக்கை இழந்த நிலையும் கூடாது. சிலர், அபிமானத்தில் வந்துவிடுகின்றனர், சிலர் நம்பிக்கை இழந்த நிலைக்கு வந்துவிடுகின்றனர். இவை இரண்டுமே மகா பலவான் ஆகவிடாது. எங்கு அபிமானம் இருக்குமோ, அங்கு அவமானத்தின் உணர்வும் அதிகமாக வரும். சில நேரம் அபிமானம், சில நேரம் அவமானம் – இந்த இரண்டோடும் விளையாடிக் கொண்டே இருக்கின்றார்கள். எங்கு அபிமானம் இருக்காதோ, அவர்களுக்கு அவமனாம் கூட அவமானமாகத் தோன்றாது. அவர்கள் சதா பணிவாக இருப்பார்கள் மற்றும் படைப்பு காரியத்தில் பிஸியாக இருப்பார்கள். யார் பணிவாக இருக்கிறார்களோ, அவர்களே படைக்கவும் முடியும். எனவே, சிவராத்திரி கொண்டாடுவது என்றால் பணிவானவர் ஆகி படைக்கும் காரியத்தில் ஈடுபடுவதாகும். புரிந்ததா?

இன்று அனைவரும் தன்னுடைய உள்ளத்தில் சிரேஷ்டமான சங்கல்பத்தின் கயிறு மூலம் வெற்றியின் கொடியைப் பறக்கவிடுங்கள். இந்தக் கொடியைப் பறக்கவிடுவது பிராமணர்களின் சேவையின் வழக்கம், விதி ஆகும். ஆனால். இதன் கூடவே சதா வெற்றியின் கொடியையும் பறக்க விட்டுக் கொண்டே இருங்கள். ஏதாவது ஒரு துக்கமான விசயம் வந்து விட்டால் கொடியைக் கீழே இறக்கி விடுகிறார்கள், ஆனால், உங்களுடைய கொடி ஒருபோதும் கீழே இறங்க முடியாது. சதா உயரப் பறக்கும், எனவே, இப்படி கொடியைப் பறக்கவிடுவீர்கள் அல்லவா? நல்லது. தபஸ்யா வருடத்தின் ரிசல்ட்டும் கிடைத்துவிட்டது. அனைவரும் தனக்குத் தானே நீதிபதி ஆகி தனக்கு எண் (நம்பர்) கொடுத்துள்ளீர்கள். நன்றாக செய்து இருக்கிறீர்கள். இந்த தபஸ்யா வருடத்தில் அனைவரும் சுய முயற்சியில் நன்றாக கவனத்தை ஏற்படுத்தி இருப்பது நாலாபுறங்களில் இருந்து வந்த ரிசல்ட்டில் பெரும்பான்மையாகத் தென்பட்டது. எப்பொழுது கவனம் சென்றதோ, அப்பொழுது டென்சனும் போயே போய் விடும் அல்லவா. சிலருடைய மொத்த ரிசல்ட் நன்றாக இருந்தது. பெரும்பான்மையானோர் இரண்டாவது எண்ணில் உள்ளனர். மூன்றாவது எண்ணிலும் உள்ளனர், ஆனால், முதல் மற்றும் நான்காவது எண்ணில் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இரண்டாவது எண்ணில் இருப்பவர்களின் கணக்குப்படி முதல் மற்றும் நான்காவது எண்ணில் இருப்பவர்கள் குறைவாகவே உள்ளனர். மற்றபடி இரண்டாவது மூன்றாவது எண்ணில் பெரும் பான்மையாக இருக்கின்றனர். அனைவரும் இந்த தபஸ்யா வருடத்திற்கு மகத்துவம் கொடுத்து இருக்கின்றீர்கள். அதனால் பரீட்சை வந்தது. ஆனால், பெரும்பான்மையினர் நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் – இந்த ஒரு விசயத்தில் பாப்தாதா விஷேசமாக மகிழ்ச்சி அடை கின்றார்கள். தபஸ்யா செய்ய வேண்டும் என்று என்ன சங்கல்பம் வைத்தீர்களோ, அந்த சங்கல்பத்தின் சக்தியானது சகயோகம் கொடுத்துள்ளது. ஆதலால், ரிசல்ட் நன்றாக உள்ளது, மோசமாக இல்லை. வாழ்த்துக்கள். மற்றபடி இப்பொழுது பரிசோ தாதிகள் கொடுப்பார்கள். தந்தை அனைவருக்கும் மிகவும் நல்லது, மிகவும் நல்லது என்ற பரிசு கொடுத்துவிட்டார். தபஸ்யா வருடம் முடிந்துவிட்டது என்று, இப்பொழுது சோம்பேறித்தனம் உடையவர் ஆகிவிட்டது – இப்படி இருக்கக் கூடாது. மாறாக இன்னும் பெரிய பரிசு பெற வேண்டும். கர்மம் மற்றும் யோகத்தின் சமநிலைக்கான பரிசு பெற வேண்டும். சேவை மற்றும் தபஸ்யாவின் சமநிலைக்கான ஆசீர்வாதத்தை அனுபவம் செய்ய வேண்டும் மற்றும் நிமித்த மாத்திரத்திற்கு பரிசு பெற வேண்டும் என்று சொல்லப்பட்டது அல்லவா. தந்தை மற்றும் பரிவாரத்தின் ஆசீர்வாதத்தின் பரிசே உண்மையான பரிசு ஆகும். அதுவோ அனைவருக்கும் கிடைத்துக் கொண்டு இருக்கிறது. நல்லது.

இன்று சூட்சும வதனத்தை உருவாக்கி இருக்கின்றீர்கள். நன்றாக உள்ளது, வாயுமண்டலம் நன்றாக உருவாகியுள்ளது. அந்த ஜோதி மயமான தேசத்திற்கு முன்னால் இந்த அலங்கரிக் கப்பட்ட சூட்சுமவதனம் மாதிரியாகத் (மாடல்) தான் தோன்றுகிறது அல்லவா. ஆனாலும், குழந்தைகளுடைய ஊக்கம் மற்றும் உற்சாகம், வாயுமண்டலம் உள்ளுணர்வை நிச்சயமாகக் கவர்ந்து ஈர்க்கிறது. அனைவரும் சூட்சுமவதனத்தில் அமர்ந்து இருக்கின்றீர்களா? சாகார சரீரத்தில் இருக்கும்போதிலும் மனதால் சூட்சுமவதனவாசி ஆகி சந்திப்பைக் கொண்டாடுங்கள். குழந்தை களுக்கு சூட்சுமவதனம் அந்தளவு அன்பானதாக இருப்பதனாலேயே உருவாக்கி இருக்கின்றீர்கள் அல்லவா – இது பாப்தாதாவிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் நன்றாக முயற்சி செய்து உருவாக்கி இருக்கின்றீர்கள் மற்றும் அன்போடு உருவாக்கி இருக்கின்றீர்கள், சிரேஷ்டமான ஊக்க உற்சாகமான சங்கல்பத்துடன் உருவாக்கி இருக்கின்றீர்கள். ஆகையால், பாப்தாதா சங்கல்பம் செய்தவர்களுக்கு, சாகாரத்தில் கொண்டு வந்தவர்களுக்கு , அனைவருக்கும் வாழ்த்துக்கள் கொடுக்கின்றார்கள். இது கூட எல்லையற்ற விளையாட்டில் ஒரு விளையாட்டு ஆகும். வேறு என்ன விளையாடுவீர்கள், இந்த விளையாட்டே விளையாடு வீர்கள் அல்லவா. சில நேரம் சொர்க்கத்தை உருவாக்குவீர்கள், சில நேரம் சூட்சுமவதனத்தை உருவாக்குவீர்கள். இது புத்தியை ஈர்க்கிறது. நாலாபுறங்களிலும் உள்ள அனைத்து ஜோதிர்பிந்து சாலிகிராமங்களுக்கு தந்தையின் தெய்வீகப் பிறப்பு மற்றும் குழந்தைகளுடைய தெய்வீகப் பிறப்பினுடைய வாழ்த்துக்கள்.

அத்தகைய சர்வ சிரேஷ்ட சதா வெற்றி சொரூப ஆத்மாக்களுக்கு, சதா தெய்வீகமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கு, சதா அபிமானம் மற்றும் அவமானத்திலிருந்து விடுபட்டு இருக்கக் கூடிய சுவமானத்தில் நிலைத்திருக்கக் கூடிய ஆத்மாக்களுக்கு, சதா சிரேஷ்டமான முயற்சி மற்றும் சிரேஷ்டமான சேவையின் ஊக்க உற்சாகத்துடன் கூடிய சிரேஷ்ட ஆசைகளின் தீபத்தை ஏற்றியுள்ள ஆத்மாக்களுக்கு, சதா தனது உள்ளத்தில் வெற்றிக் கொடியைப் பறக்கவிடக் கூடிய சிவமய சக்தி சேனைக்கு, சதா முயற்சியில் வெற்றியை சகஜமாக அனுபவம் செய்யக் கூடிய வெற்றி சொரூபமான குழந்தைகளுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

சிவஜெயந்தியில் பாப்தாதா கொடி ஏற்றியவுடன் அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள் கொடுத்தார்கள்

தந்தை மற்றும் வெற்றியாளர் குழந்தைகளுக்கு, சுகம், சாந்தி கொடுக்கக் கூடிய இந்தக் கொடி முழு விஷ்வத்தில் சதா பறந்து கொண்டே இருக்கும். நாலாபுறங்களிலும் சிவதந்தை மற்றும் சிவசக்திகளின் ஆன்மிக சேனை என்ற இந்தப் பெயர் புகழ்பெற்றதாக ஆகிக் கொண்டே இருக்கும். இந்த மகானான உயர்ந்த கொடி சதா பறந்து கொண்டிருப்பது உலகத் திற்குத் தெரிய வரும். இந்த அழிவற்ற கொடியானது அழிவற்ற தந்தை மற்றும் அழிவற்ற சிரேஷ்ட ஆத்மாக்களின் நினைவுச்சின்னம் ஆகும். எனவே, சதா குஷியின் அலைகளோடு, குஷியின் கொடி, தந்தையின் பெயரை புகழடையச் செய்யும் கொடி, தந்தையைப் பிரத்யட்சம் செய்யும் கொடியை ஏற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள், ஏற்றிக் கொண்ட இருப்பீர்கள். இப்பேற்பட்ட மகாசிவராத்திரியில் குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் நாலாபுறங் களிலும் உள்ள அனைத்து விஷேசமான பிராமண ஆத்மாக்களுக்குப் பிறந்த நாளுக்கான மிகுந்த வாழ்த்துக்கள் மற்றும் அன்பு நினைவுகள் உரித்தாகுக.

வரதானம்:-

ஒருவரிடம் என்ன இயல்பு உள்ளது, அது தானாகவே தனது வேலையைச் செய்கிறது. யோசிக்க வேண்டிய அல்லது செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதுபோல் விசேˆத் தன்மையின் சமஸ்காரமும் இயல்பானதாக ஆக வேண்டும், இந்த விஷேசஆத்மாவின் இயல்பே விசேˆமானதாக உள்ளது என்று ஒவ்வொருவருடைய வாயிலிருந்தும், மனதிலிருந்தும் வெளிப்பட வேண்டும். சாதாரண கர்மம் முடிவடைந்து விடவேண்டும், அப்பொழுதே மறுபிறவி எடுத்தவர்கள் என்று கூறலாம். சாதாரணத்தன்மையில் இருந்து இறந்து விட்டோம், விஷேசத் தன்மையோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். சங்கல்பத்தில் கூட சாதாரணத்தன்மை இருக்கக் கூடாது.

சுலோகன்:-

குறிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இராஜயோகி தபஸ்வி சகோதர, சகோதரிகள் அனைவரும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை விஷேச யோகப் பயிற்சி செய்யும் நேரத்தில் தன்னுடைய சுபபாவனைகள் நிறைந்த சிரேஷ்டமான விருத்தி மூலம் மனதால் மகாதானி ஆகி அனைவருக்கும் பயமற்ற நிலையில் இருப்பதற்கான வரதானம் கொடுத்து அனைவரையும் கவலையிலிருந்து விடுபட்டவர் ஆக்குங்கள்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top