20 September 2021 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
19 September 2021
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு உயர்ந்த கர்மங்களைக் கற்பிப்பதற்காக வந்துள்ளார், அதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான இராஜ்யத்தின் ஆஸ்தியை அடைய முடியும், நிலையான பிளவுபடாத இராஜ்யத்தின் எஜமானாக ஆக முடியும்.
கேள்வி: -
இல்லறவாசிகள் மற்றும் சன்னியாசிகளுக்கிடையில் எந்த ஒரு கொள்கையில் (நம்பிக்கையில்) மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது?
பதில்:-
பகவான் ஏதேனும் ஒரு ரூபத்தில் கண்டிப்பாக வருவார் என்பது இல்லற வாசிகளின் நம்பிக்கை. பிரம்மத்தை நினைவு செய்து செய்து பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவோம் என்பது சன்னியாசிகளின் நம்பிக்கை. பிரம்மத்தில் யாரும் ஐக்கியமாக முடியாது என்று இப்போது தந்தை புரிய வைக்கிறார். ஆத்மா அழியாதது, அது எப்படி ஐக்கியமாக முடியும். பகவான் வருகிறார் என்றால் கண்டிப்பாக ஆசிரியராக ஆகி கற்றுத் தருவார். தூண்டுதல் மூலமாக ஞானம் கொடுப்ப தில்லை.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
உங்களை அடைந்து நாங்கள் உலகத்தை அடைந்தோம். .
ஓம் சாந்தி. இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் இந்தப் பாட்டைக் கேட்டீர்கள். ஆன்மீகக் குழந்தைகள் தான் பாபா என சொல்கின்றனர். இவர் எல்லைக்கப்பாற்பட்ட தந்தை அளவற்ற சுகத்தைத் தரக்கூடியவர் என குழந்தைகள் தெரிந்திருக் கின்றனர். அதாவது அவர் அனைவருடைய தந்தை ஆவார். அவரை அனைத்து எல்லைக்கப்பாற்பட்ட குழந்தைகளாகிய ஆத்மாக்கள் நினைவு செய்கின்றனர். ஏதேனும் ஒரு விதத்தில் நினைவு செய்கின்றனர். ஆனால் அந்த பரமபிதா பரமாத்மாவிடமிருந்து இராஜ்யத்தை எடுக்க வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியாது. தந்தை நமக்கு அளிக்கக் கூடிய சத்யுக உலகத்தின் இராஜ்யம் ஆடாத, பிளவுபடாத உறுதியான இராஜ்யம் என்பது உங்களுக்குத் தெரியும். நம்முடைய இராஜ்யம் 21 பிறவிகளுக்கு நிலையாக இருக்கும். முழு உலகின் மீதும் நம்முடைய இராஜ்யம் இருக்கும். அதை யாரும் பறிக்க முடியாது, கொள்ளை அடிக்க முடியாது. நம்முடைய இராஜ்யம் நிலையானது ஏனெனில் அங்கே ஒரே ஒரு தர்மம் தான் இருக்கும், துவைதம் (இரண்டு வழிகள்) இருக்காது. அது அத்வைத (ஒரே வழியை கடைபிடிக்கும்) இராஜ்யம் ஆகும். குழந்தைகள் பாட்டை கேட்கும்போது தன்னுடைய இராஜ்யத்தின் போதை புத்தியில் வரவேண்டும். இப்படிப்பட்ட பாடல்கள் வீட்டில் இருக்க வேண்டும், அதன் மூலம் தந்தை மற்றும் ஆஸ்தியின் நினைவு உடனடியாக வரும். தந்தை யின் நினைவில் மூழ்குவதற்கான பாடலாக இருக்க வேண்டும். உங்களுடைய அனைத்தும் மறை முகமானது. பெரிய மனிதர்கள் மிகுந்த ஆடம்பரத்தைக் காட்டுகின்றனர், உங்களிடம் எந்த ஆடம்பரமும் இல்லை. பாபா யாருக்குள் பிரவேசமாகியுள்ளாரோ அவரிடம் எந்த ஆடம்பரத்திற் கான விசயமும் இல்லை என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். உடைகள் போன்ற அனைத்தும் அப்படியே உள்ளது. நமக்கு இராஜ்ய பாக்கியத்தைக் கொடுப்பதற்காக பாபா இவருக்குள் (பிரம்மா உட-ல்) பிரவேசம் செய்திருக்கிறார் என்று புத்தியில் புரிந்து கொள்கிறீர்கள். இந்த நேரம் முழு உலகத்திலுள்ள மனிதர்கள் அனைவரும் தேக அபிமானத்தில் வந்து தவறான காரியங்கள் செய்கின்றனர் என்பதை குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். புத்தியற்றவர்களாக ஆகிவிட்டனர். அனைவருடைய புத்தியிலும் பூட்டு போடப்பட்டுள்ளது நீங்கள் எவ்வளவு புத்திசாலிகளாக உலகின் எஜமானர்களாக இருந்தீர்கள். இப்போது மாயை முற்றிலும் புத்தியற்றவர்களாக, எதற்கும் உதவாதவர்களாக ஆக்கிவிட்டது. தந்தையிடம் செல்வதற்கு யக்ஞம், தவம் நிறைய செய்கின்றனர், ஆனால் எதுவும் கிடைப்பதில்லை.அப்படியே முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். பரமாத்மாவை யாரும் தெரிந்து கொள்ள வில்லை. அவரை சர்வ வியாபி என்று சொல்லி விட்டனர். இது கூட எவ்வளவு தவறாகி விடுகிறது. தந்தை என்ற வார்த்தை புத்தியில் வருவதில்லை. சிலர் தந்தை என வெறும் பெயரளவுக்கு மட்டும் சொல்கிறார்கள். பரமபிதா என்று புரிந்து கொண்டு விட்டால் புத்தி ஒரேயடியாக ஜொலிக்கத் தொடங்கி விடும். தந்தை சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுக்கிறார், அவர் சொர்க்கத்தின் இறைத் தந்தை, பிறகு நாம் ஏன் கலியுக நரகத்தில் விழுந்து கிடக் கிறோம்! இப்போது நாம் முக்தி ஜீவன்முக்தி எப்படி அடைய முடியும் என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. இப்போது உங்களுக்கு புத்தி கிடைத்து விட்டது. புதிய உலகம், புதிய பாரதமாக இருந்தபோது நம்முடைய இராஜ்யம் இருந்தது, பாபா நமக்கு இந்த நினைவை கொடுத்திருக்கிறார். ஒரே வழி, ஒரே மொழி, ஒரே ஒரு மகாராஜா, மகாராணி இருந்தனர். சத்யுகத்தில் மகாராஜா, மகாராணி, திரேதா யுகத்தில் ராஜா, ராணி என்று சொல்லப்படுகின்றனர். பிறகு துவாபர யுகத்தில் (எதிர்மறையான) வாம (இல்லற) மார்க்கம் தொடங்குகிறது. அது ஒவ்வொருவருடைய கர்மங்களின் ஆதாரத்தில் இருக்கும். கர்மங்களின் ஆதாரத்தில் ஒரு சரீரத்தை விடுத்து மற்றொன்றை எடுக்கின்றனர். 21 பிறவிகளுக்கு இராஜ்யத்தை அடையும்படியான கர்மத்தை இப்போது நான் உங்களுக்கு கற்றுக் கொடுக் கின்றேன் என்று பாபா சொல்கிறார். அங்கே கூட எல்லைக்குட்பட்ட தந்தை கிடைக்கிறார், ஆனால் இந்த இராஜ்யத்தின் ஆஸ்தி எல்லைக்கப்பாற் பட்ட தந்தையால் கொடுக்கப்பட்டது என்ற ஞானம் அங்கே இருப்பதில்லை. பிறகு துவாபர யுகத்தில் இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆகும்போது விகாரி சம்மந்தமாக ஆகி விடுகிறது. எப்படிப் பட்ட கர்மமோ அப்படிப்பட்ட பலன் கிடைக்கிறது, தேவதைகள் வாம (விகார) மார்க்கத்தில் சென்று விடுகின்றனர். பிறகு சத்யுகத்தின் அனைத்தும் முடிந்து போய் விடுகிறது. கர்மங்களின் ஆதாரத்தில் பிறவிகள் எடுக்கின்றனர். பாரதத்தில் பூஜைக்குரிய இராஜாக்கள் இருந்தனர், அதே போல பூஜாரி இராஜாக்களும் இருந்தனர். சத்யுகத்தில் ராஜா, ராணி மற்றும் பிரஜைகள் அனைவரும் பூஜைக்குரியவர்களாக இருந்தனர். பிறகு எப்போது துவாபர யுகத்தில் பக்தி தொடங்கியதோ, அப்போது ராஜா ராணி போலவே பிரஜைகளும் பூஜாரிகள் ஆகிவிட்டனர். சூரிய வம்சத்தின் பெரிய ராஜா, பிறகு பூஜாரி ஆகி விடுகிறார், வைசிய வம்சத்தவராக ஆகி விடுகிறார். இப்போது நீங்கள் விகாரமற்றவர்களாக ஆகிறீர்கள். அதன் பலன் 21 பிறவிகளுக்கு நடக்கிறது, பிறகு பக்தி மார்க்கம் தொடங்குகிறது. யாரெல்லாம் பூஜைக்குரிய தேவி தேவதை களாக இருந்து சென்றனரோ, அவர்களுக்கு கோவில்கள் கட்டி பூஜை செய்கின்றனர். இது பாரதத்தில் மட்டுமே நடக்கிறது. தந்தை சொல்லக்கூடிய 84 பிறவிகளின் கதை கூட பாரதவாசிகளுக்குத்தானாகும். மற்ற தர்மத்தினர் பின்னர் வருகின்றனர், மக்கள் தொகை பெருகி அதிகமாகி விடுகின்றனர். வித விதமான தேவி தேவதைகளின் பழக்க வழக்கங்கள் (சடங்குகள்) இருந்தன, அவை பாரதத்தின் குருமார்களுடையது அல்ல. அரைக் கல்பத்திற்குப் பிறகு இராவண இராஜ்யம் ஆரம்பம் ஆனபோது பழக்க வழக்கங்கள் மாறிப் போய்விடுகிறது, பிறகு பூஜைக்குரியவரிலிருந்து பூஜாரிகளாக ஆகி விடுகின்றனர். பூஜை கூட முதலில் ஒரு சிவனுக்கு செய்கின்றனர், அவருக்கு கோவில்கள் கட்டுகின்றனர், பிறகு லட்சுமி நாராயணருக்கு கட்டுகின்றனர். ஒருவர் லட்சுமி நாராயணருக்கு கோவில் கட்டினால் அவரைப் பார்த்து மற்றவர்களும் கட்டத் தொடங்குகின்றனர். பிறகு ராமர் சீதையின் கோவிலை கட்டத் தொடங்குகின்றனர். பிறகு கலியுகத்தில் பாருங்கள் கணேசன், அனுமான், சண்டிகா தேவி போன்ற அனேக தேவிகளின் சித்திரங்கள் உருவாக்கிக் கொண்டே செல் கின்றனர். பக்தி மார்க்கத்திற்காக பொருட்களும் தேவை அல்லவா. விதை சிறிதாக இருக் கிறது, மரம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. அது போல பக்தியின் விஸ்தாரமும் ஏற்படுகிறது. நிறைய சாஸ்திரங்களை உருவாக்கிக் கொண்டே போகின்றனர். இப்போது இந்த பக்தி மார்க்கத்தின் பொருட்கள் அனைத்தும் முடியப் போகிறது என பாபா குழந்தைகளுக்குச் சொல்கிறார். இப்போது தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். பக்தியின் பிரபாவமும் (தாக்கமும்) கூட நிறைய உள்ளதல்லவா. எவ்வளவு அழகாக உள்ளது. நடனம், கேளிக்கைகள், பாடல்கள், கீர்த்தனைகள் முதலானவைகளில் செலவுகள் எவ்வளவு செய் கின்றனர். தந்தையாகிய என்னையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள் என இப்போது தந்தை சொல்கிறார். ஆதி சனாதன தர்மத்தை நினைவு செய்யுங்கள். பல விதமான பக்தியை பிறவி பிறவிகளாக செய்தபடி வந்தீர்கள். இல்லற தர்மத்தவர்களே பக்தியை தொடங்கு கின்றனர். சன்னியாசிகளுக்கு பக்தி செய்ய வேண்டியதில்லை. யக்ஞம், தவம், தான புண்ணியங்கள், தீர்த்த யாத்திரை முதலான இவையனைத்தும் இல்லறவாசிகளின் வேலை யாகும், சன்னியாசிகளுடையது அல்ல. அவர்கள் துறவற மார்க்கத்தினர் ஆவர். வீடு வாசலை விட்டுச் சென்று காட்டில் வசிப்பதும் பிரம்ம தத்துவத்தை நினைவு செய்வதும் அவர்களுக் கான சட்ட விதிகள் ஆகும். அவர்கள் தத்துவ ஞானிகள், பிரம்ம ஞானிகளாக இருக்கின்றனர். பிரம்ம தத்துவத்தையே ஈஸ்வரன் என சொல்லி விடுகின்றனர். பாரதவாசிகள் உண்மையில் ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர் கள். ஆனால் இந்துஸ்தானத்தில் இருப்பதால் தம் தர்மத்தை இந்து என புரிந்து கொண்டனர், அதுபோல சன்னியாசிகளும் கூட ஆத்மாக்கள் இருக்கக் கூடிய இடமான பிரம்ம தத்துவத்தை பரமாத்மா என்று புரிந்து கொள்கின்றனர். பிரம்ம தத்துவத்தை நினைவு செய்கின்றனர். உண்மையில் சன்னியாசிகள் சதோபிரதானமாக இருந்த போது காட்டில் சென்று அமைதியில் இருந்தனர். அவர்கள் பிரம்மத்தில் சென்று ஐக்கியமாகின்றனர் என்பதல்ல. இது அவர்களுடைய தவறான ஞானமாகும் என பாபா சொல்கிறார். யாரும் ஐக்கியமாக முடியாது. ஆத்மா அழிவற்றது, ஆக அது எப்படி ஐக்கியமாக முடியும். பக்தி மார்க்கத்தில் எவ்வளவு மண்டையை உடைத்துக் (குழப்பிக்) கொள்கிறார்கள். பகவான் ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்து சந்திப்பார் என்றும் சொல்லி விடுகின்றனர். இப்போது யார் சொல்வது சரி? பிரம்மத்தில் நினைவை ஈடுபடுத்தி பிரம்மத்தில் ஐக்கியமாவோம் என அவர்கள் சொல்கின்றனர். பகவான் ஏதாவது ஒரு ரூபத்தில் வருவார், தூய்மையற்றவர்களை தூய்மையாக்குவார் என இல்லறத்தினர் சொல்கின்றனர். மேலிருந்தபடி தூண்டுதலின் மூலமே கற்றுத்தருவார் என்ப தல்ல. ஆசிரியர் வீட்டிலிருந்தபடி தூண்டுதல் கொடுப்பாரா என்ன! தூண்டுதல் எனும் வார்த்தையே கிடையாது. தூண்டுதலின் மூலம் எந்த காரியமும் நடக்காது. சங்கரனின் தூண்டுதலின் மூலம் வினாசம் என சொல்லப்படுகிறது. ஆனால் இது நாடகத்தின் பதிவாகும். அவர்கள் இந்த ஆயுதங்கள் போன்றவற்றை உருவாக்கத்தான் வேண்டும். தூண்டுதலின் விசயம் கிடையாது. இறைவனின் தூண்டுதலின் மூலம் அனைத்தும் நடக்கிறது மற்றும் சங்கரன் கண்ணைத் திறப்பதால் பிரளயம் ஏற்படுகிறது என மனிதர்கள் சொல்கின்றனர். இவையனைத்தும் கதைகளாகும். அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. யாருடைய கோவிலில் சென்றாலும் அச்சுதம், கேசவம் . . . என்று சொல்லி விடுகின்றனர், அர்த்தம் எதுவும் புரிந்து கொள்வதில்லை. யாரும் தம்முடைய பெரியவர்களின் மகிமையை தெரிந்து கொள்ளவில்லை. தர்ம ஸ்தாபகர்களை குரு என சொல்லி விடுகின்றனர். உண்மையில் அவர்களை குரு என சொல்வது தவறாகும். கிறிஸ்து ஏதோ குரு அல்ல. அவர் தர்மத்தை மட்டும் ஸ்தாபனை செய்கிறார். யார் சத்கதியை கொடுக்கிறாரோ அவர்தான் குரு எனப் படுகிறார். அவர் தர்மத்தை ஸ்தாபனை செய்ய வருகின்றார். அவருக்குப் பின்னால் அவருடைய வம்சாவளி வருகிறது. யாருக்கும் சத்கதி கொடுப்பதில்லை. ஆக அவரை குரு என எப்படி சொல்ல முடியும்! குரு என்பவர் ஒரே ஒருவர்தான் ஆவார், அவர் அனை வருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் எனப்படுகிறார். தந்தையாகிய பகவான்தான் வந்து அனைவருக்கும் சத்கதியை வழங்குகிறார். முக்தி-ஜீவன் முக்தி கொடுக்கிறார். அவருடைய நினைவை ஒரு போதும் யாரிடமிருந்தும் நீக்க முடியாது. மனிதர்கள் ஓ பகவானே, ஓ ஈஸ்வரா என்று சொல்லி ஒரு தந்தையைத்தான் நினைவு செய்கின்றனர். ஏனெனில் அவர்தான் அனைவருக்கும் சத்கதி வழங்கும் வள்ளல் ஆவார். இவர்கள் அனைவரும் படைப்புகள் என தந்தை புரிய வைக்கிறார். படைக்கக் கூடிய தந்தை நான் தான் – அனைவருக்கும் சுகத்தைக் கொடுக்கக் கூடியவர், ஆஸ்தி தரக்கூடியவர் ஒரே ஒரு தந்தை தான் ஆவார். சகோதரன் சகோதரனுக்கு ஆஸ்தி கொடுக்க முடியாது. ஆஸ்தி எப்போதும் தந்தையிட மிருந்து கிடைக்கிறது. நான் அனைத்து எல்லைக்கப்பாற்பட்ட குழந்தை களுக்கு எல்லைக்கப் பாற்பட்ட ஆஸ்தி கொடுக்கிறேன், ஆகையால்தான் ஓ பரமாத்மாவே மன்னித் தருளுங்கள் என என்னை நினைவு செய்கின்றனர், எதையும் புரிந்து கொள்வதில்லை.
பாபா சொல்கின்றார் – நான் இவர்கள் அழைப்பதால் வருவதில்லை. இது நாடகத்தில் உருவாகியுள்ளது. நாடகத்தில் நான் வரக்கூடிய நடிப்பும் கூட பதிவாகியுள்ளது. பல தர்மங்களின் வினாசம், ஒரு தர்மத்தின் ஸ்தாபனை அல்லது கலியுகத்தின் வினாசம், சத்யுகத்தின் ஸ்தாபனை செய்ய வேண்டியுள்ளது. நான் என்னுடைய நேரத்தில் தானாக வருகிறேன். இந்த பக்தி மார்க்கத் தின் நடிப்பும் கூட நாடகத்தில் இருக்கிறது. இப்போது பக்தி மார்க்கத்தின் பாகம் முடியக்கூடிய சமயத்தில் நான் வந்துள்ளேன். கல்பத்திற்கு முன்பும் கூட பாபா நீங்கள் பிரம்மாவின் உடலில் வந்திருந்தீர்கள். இந்த ஞானம் உங்களுக்கு இப்போது கிடைக்கிறது. பிறகு ஒரு போதும் கிடைக்காது. இது ஞானம், அது பக்தி ஆகும். ஞானத்தின் பலன் ஏறும் கலை. ஒரு வினாடியில் ஜீவன் முக்தி என சொல்லப்படுகிறது. ஜனகருக்கு ஒரு வினாடியில் ஜீவன்முக்தி கிடைத்தது அல்லவா. ராதா சென்று அனுராதா ஆகின்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஜனகர் சென்று சீதையின் தந்தை அனுஜனகர் ஆகிறார். இந்த ஞானத்தின் மூலம் ஒவ்வொரு உதாரணம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஜனகர் ஒரு வினாடியில் ஜீவன் முக்தி அடைந்தார் என சொல்லப்படுகிறது. ஒரு ஜனகர் மட்டும் ஜீவன் முக்தி அடைந்தாரா என்ன? ஜீவன் முக்தி அனைவருமே அடைகின்றனர். முழு உலகமும் அடைகிறது. சத்கதி அல்லது ஜீவன் முக்தி ஒரே வார்த்தைதான் ஆகும். ஜீவன் முக்தி என்றால் இந்த இராவண இராஜ்யத்தின் வாழ்க்கையிலிருந்து முக்தி கொடுக்கின்றார். குழந்தைகளுக்கு எவ்வளவு துர்கதி ஏற்பட்டுள்ளது என பாபா தெரிந்திருக்கிறார், முற்றிலும் துக்கம் நிறைந்தவர்களாக ஆகி விட்டுள்ளனர். அவர்களுக்கு சத்கதி ஏற்பட வேண்டும். முதலில் முக்திக்குச் சென்று பிறகு ஜீவன்முக்திக்கு வருவார்கள். சாந்தி தாமத்திலிருந்து பிறகு சுகதாமத்திற்கு வருவார்கள். இந்த சக்கரத்தின் ரகசியத்தை பாபா புரிய வைத்திருக்கிறார். பாபா சொல்கிறார் – இந்த நேரம் முழு உலகத்தின் மரம் உளுத்துப் போய் தமோபிரதானமாகி விட்டது. ஆகையால் யாரும் தன்னை ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தவர் என்று புரிந்து கொள்வதில்லை. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தினராக இருந்தனர், தேவதைகள் தூய்மையாக இருந்தனர். தூய்மையற்ற தம்மை தேவதைகள் என எப்படி சொல்லிக் கொள்ள முடியும். ஆகையால் இந்த விகாரங்களை விட்டு விடுங்கள் என சொல்லப்படுகிறது. இந்த விகாரம் போன்றவை அரைக் கல்பமாக இருந்து கொண்டிருக்கிறது. இப்போது ஒரு பிறவியில் அதை விட வேண்டும், இதில் உழைப்பு தேவைப் படுகிறது. உழைப்பில்லாமல் உலகின் எஜமானராக ஆக முடியாது. தந்தையை நினைவு செய்தால் தான் தனக்கு ராஜ்யத்தின் திலகம் கொடுத்துக் கொள்ள முடியும். அதாவது இராஜ்யத்தின் அதிகாரி ஆகின்றீர்கள். எந்த அளவுக்கு நன்றாக நினைவு செய்கிறீர்களோ, ஸ்ரீமத்படி நடப்பீர்களோ அந்த அளவு ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆவீர்கள். படிப்பிக்கக் கூடிய ஆசிரியர் கற்றுத் தர வந்துள்ளார். இது மனிதரிலிருந்து தேவதை ஆவதற்கான பாடசாலையாகும். நரனிலிருந்து நாராயணன் ஆவதற்கான கதையை சொல்கிறார். இந்த கதை எவ்வளவு பிரசித்தமானது. இதை அமர கதை, சத்ய நாராயணன் கதை, மூன்றாம் கண்ணின் கதை என சொல்கின்றனர்.
பாடல் எவ்வளவு நன்றாக உள்ளது பாருங்கள். பாபா நம்மை உலகின் எஜமானாக ஆக்குகின்றார். இந்த ராஜ்யத்தை யாரும் கொள்ளை அடிக்க முடியாது. பூகம்பம் போன்ற எதுவும் ஏற்படாது. அங்கே தடைகள் எதுவும் ஏற்படுவதில்லை. அப்படிப்பட்ட நிலையான, பிளவு படாத, தூய்மையான, சுகம், சாந்தி நிறைந்த ராஜ்யத்தை அடைகின்றீர்கள். கல்பத்திற்கு முன்பு போல ஒவ்வொரு 5 ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு சொர்க்கம் உருவாகிறது. நாம் தேவதைகளாக இருந்தோம், பிறகு 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்படி ஆகி விட்டோம். மீண்டும் நாம் தான் தேவதை ஆவோம். இதை சுயதரிசன சக்கரதாரி என சொல்லப்படுகிறது. நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. தனக்குத் தானே இராஜ்ய திலகத்தை கொடுத்துக் கொள்வதற்காக நினைவு யாத்திரையில் தீவிர முயற்சி செய்ய வேண்டும். அனைத்து விகாரங்களையும் விட்டு விட வேண்டும்.
2. பிரம்மா பாபாவுக்குச் சமமாக சாதாரணமாகவும் மறைமுகமாகவும் இருக்க வேண்டும். வெளிப்பகட்டு (ஆடம்பரம்) போன்றவைகளை செய்யக் கூடாது. தனது எதிர்கால இராஜ்யத்தின் போதையில் இருக்க வேண்டும்.
வரதானம்:-
வார்த்தைகளினால் சேவை செய்கிறீர்கள் என்றால் மனம் சக்திசாலியாக இருக்கிறது. மனதின் மூலம் மற்றவர்களின் மனதை மாற்றம் செய்யுங்கள், அதாவது மனதின் மூலம் மனதை கட்டுப்படுத்துங்கள், மற்றும் வார்த்தைகள் மூலம் லைட் மைட் (ஒளி மற்றும் சக்தி) கொடுத்து ஞானம் நிறைந்தவராக மாற்றுங்கள், மேலும் செயலினால் அதாவது தொடர்பில் மற்றும் தனது இனிமையான (இதமான) நடத்தையினால் அவர்களுக்கு தனது உண்மையான குடும்பமாக உணரச் செய்ய வையுங்கள். இவ்வாறு மூன்று சொரூபத்தில் இருந்து ஒவ்வொரு காரியம் செய்தீர்கள் என்றால் வெற்றி சொரூபமாக எளிதாக ஆகிவிடலாம்.
சுலோகன்:-
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!