19 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
18 January 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! செயல்களைச் செய்துக்கொண்டிருந்தாலும் புத்தியோகம் ஒரே ஒரு பாபாவிடம் இருக்கட்டும். இதுவே உண்மையான யத்திரையாகும். இந்த யாத்திரையில் ஒருபோதும் களைத்துப்போய்விடக்கூடாது
கேள்வி: -
பிராமண வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக எந்த விˆயத்தில் பலம் தேவை?
பதில்:-
அநேக ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தின் பலமே முன்னேற்றத்திற்கான சாதனமாகும். எந்தளவு தூரம் அநேகருக்கு நன்மை செய்வீர்களோ, பாபாவிடமிருந்து கிடைத்த ஞான ரத்தினத்தை தானம் செய்வீர்களோ, அவ்வளவு அநேக ஆத்மாக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். பணம் இருந்தால் சென்டர் திறவுங்கள் என்று பாபா குழந்தைகளுக்கு வழி கூறுகின்றார். மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறவுங்கள். அதில் யாருக்கு நன்மை கிடைக் கிறதோ அவர்களது ஆசீர்வாதம் கிடைக்கும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
இரவுப் பயணிகளே களைத்துப்போகாதீர்கள்….
ஓம் சாந்தி. பாடலின் பொருள் குழந்தைகளுக்குத் தானகவே புத்தியில் வர வேண்டும். இப்போது நாம் அனைவரும் ஆன்மீகப் பயணிகள். பகவான் தந்தையிடம் ஆத்மாக்கள் செல்ல வேண்டும். ஜீவ ஆத்மாக்கள் போக வேண்டும் என்று கூற மாட்டார்கள். ஜீவ ஆத்மாக்கள் சரீரத்தை விட்டு விட்டு திரும்பிப் போக வேண்டும். மனிதர்கள் இறந்து விட்டால் இன்னார் சொர்க்கவாசி ஆகிவிட்டார் என்று கூறுகிறார்கள். ஆனால் நல்ல அல்லது கெட்ட சம்சாரங்களுக்கு ஏற்ப மறு பிறவி ஏற்படுகிறது என உங்களுக்குத் தெரியும். கெட்ட சம்ஸ்காரங்களின் (பழக்கம்) காரண மாக உங்களுடைய தலையில் பாவங்களின் சுமை அதிகரித்திருக்கிறது இந்த பிறவி மற்றும் பல பிறவிகளின் பாவ சுமை தலைமீது இருக்கிறது.. இப்போது அதை நீங்கள் யோக பலத்தினால் எரிக்க வேண்டும். பாபாவை நினைவு செய்வது தான் யோக அக்னி எனப்படுகிறது. காமச்சிதையில் அமர்ந்ததால் பாவ ஆத்மா ஆகியிருக்கிறீர்கள். மேலும் இந்த யோக அக்னியினால் சேர்ந்துள்ள பாவம் எரிகின்றது. நாம் பயணிகள் என பிராமண குழந்தைகள் அறிகிறார்கள். குடும்ப விவகாரத்தில் இருந்தாலும் தொழில் போன்றவை செய்தாலும் புத்தி யோகம் பாபாவுடன் இருந்தால் நாம் யாத்திரையில் இருப்பது போன்றதாகும். இதில் களைப் படையக் கூடாது நிறைய முயற்சி வேண்டும். ஞானம் மிகவும் எளிது. பாரதத்தின் புராதான யோகத்திற்கு மிகவும் மகிமை இருக்கிறது. ஆனால் அந்த கீதையை சொல்பவர்கள் சிவபாபா யோகத்தைக் கற்பித்தார் என்று கூறுவதில்லை. ஒரு அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கூறினார் என்று கீதையில் காட்டப்பட்டிருக்கிறது. இந்த விˆயம் அப்படி இல்லை. இதுவோ மனிதனிலிருந்து தேவதையாக மாறுவதாகும். நிச்சயமாக பாண்டவ சேனை இருக்கிறது. பாண்டவ சேனையருக்குத் தான் ஞானம் கிடைக்கிறது. பாண்டவ பதி தான் ஞானத்தைக் கொடுக்கிறார். மனிதர் களுக்கு எதுவும் தெரியவில்லை. இன்னும் போகப்போக உண்மையில் கீதையின் பகவான் 5000 வருடங்களுக்கு முன்பு ஞானம் கொடுத்தார் என பலரும் கூறுவார்கள். ஆனால் யார் கொடுத்தார் என்று தெரியவில்லை. கல்பத்தின் ஆயுள் பற்றியும் தெரியவில்லை. காந்தியின் கீதை, தாகூரின் கீதை என அவரவர் வழிப்படி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உள்ளுக்குள் அர்ஜுனக்ககாக கிருஷ்ண பகவான் வாக்கு என்றே போடுகிறார்கள். ஆனால் சண்டையைப் பற்றிய விˆயம் இல்லை. இங்கே உங்களுடையது யோக பலத்தின் விˆயம் ஆகும். அவர்கள் சண்டையைப் பற்றி பெயர் வைத்து விட்டார்கள். சந்திர வம்ச இராமருக்கு அம்பு போன்றவைகளை கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் ஞான அம்பின் விˆயம் ஆகும். அவர் தேர்ச்சி பெறாததால் இந்த அடையாளத்தை கொடுத்திருக்கிறார்கள். எனவே திரேதாயுக இராம் சீதாவின் சித்திரத்தைக் கொடுக்க வேண்டும். வம்சம் இருக்கிறது அல்லவா? சூரிய வம்சம் , சந்திர வம்சம் என்று ஆனால், பகவான் கீதையைக் கூறி சூரிய வம்ச, சந்திர வம்ச இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார் என எழுதப்படவில்லை. ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தின் சாஸ்திரம் கீதையாகும் என்பது நிச்சயம். . அவர்கள் இந்து என்று கூறுகிறார்கள். தன்னை தேவி தேவதா தர்மம் என்று கூறு முடியாது. ஏனென்றால் அபவித்திரமாக இருக் கிறார்கள். பொய்யான மாயை பொய்யான உடல்.. என்பது முற்றிலும் சரியே! பொய்யான கண்டத்தில் பொய்யாகத்தான் வாழ்கிறார்கள். உண்மையான கண்டத்தில் உண்மையாக இருக் கிறார்கள். உண்மையான கண்டத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் உண்மையயைத் தெரிவிக்கின்றார். பாரதம் பூஜைக்குரியதாக இருந்தது. அதுவே இப்போது பூஜாரி ஆகிவிட்டது. பூஜைக்குரியயவர்களாக யார் வாழ்ந்து விட்டுப் போனார்களோ அவர்களே பூஜை செய்துக் கொண்டிருக்கிறார்கள். பூஜைக்குரிய வம்சத்தினராக இருந்தவர்களே இப்போது பூஜாரியாகி இருக்கிறார்கள். இதனால் தான் தாங்களே பூஜைக்குரியர் தாங்களே பூஜாரி என கூறுகிறார்கள். பூஜைக்குரியவரின் வம்சம் இருந்தது. இப்போது கலியுகத்தில் பூஜாரி சூத்திர வம்சம். சூரிய வம்ச குலம், சந்திர வம்ச குலம். குழந்தைகாளகிய நீங்கள் பாரதம் இவ்வாறு இருந்தது என புரிய வைக்க வேண்டும். படங்கள் இருக்கிறது அல்லவா? சத்யுகத்தில் பாரதம் செல்வந்தராக இருந்தது. இந்த எல்லையற்ற வரலாறு புவியியலை யாரும் அறியவில்லை. இந்த வர்ணங் களைக் கூட நிச்சயமாகப் புரிய வைக்க வேண்டும். நாம் பிராமணர்கள் உயர்ந்ததிலும் உயர்ந்த வர்கள், இதற்கு புதிய உயர்ந்த வர்ணம் (குலம்) என்பார்கள். திருமணம் செய்யும் போது குலத்தைப் பார்க்கிறார்கள் அல்லவா? எனவே உங்களுடைய குலம் மிகவும் உயந்தது. பிராமணர்கள் உலகத்தில் நிறைய இருக்கிறார்கள். ஆனால் சங்கமத்தில் பிரம்மாவின் சந்ததி பிராமண குலமாகிறது. அவர்களுக்கு இது தெரியவில்லை. இது புதிய விˆயம் அல்லவா? ஒரு வேளை இவர்களுடையது புதிய கீதையாக உருவாகி இருக்கலாம் என மனிதர்கள் நினைக்கிறார்கள். பாபா இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கின்றார் என குழந்தைகளாகிய நீங்கள் அறிகின்றீர்கள். நாம் தேவதையாகிக் கொண்டிருக்கின்றோம் நாம் இராஜ்யத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு வேறு யாரும் கூற முடியாது. அவர்கள் முடிந்து போன விˆயங்களைக் கதைகளாக அமர்ந்து கூறுகிறார்கள். இங்கே நாம் கீதையின் மகிமை தான் செய்கின்றோம். எனவே மனிதர்கள் இவர்கள் கீதையை ஏற்றுக் கொள் கிறார்கள்; நினைக் கிறார்கள். அது பக்தி மார்க்கத்தின் கீதை என உங்களுக்குத் தெரியும். ஆனால் யார் கீதையைச் சொன்னரோ அவரிடமிருந்து நேரடியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். குரங்கு சேனை கூட புகழ் வாய்ந்தாக இருக்கிறது. தீயவைகளைக் கேட்காதீர்கள். தீயவைகளைப் பார்க்கா தீர்கள்………… என்ற படங்களைக் காட்டுகிறார்கள். இவ்வாறு குரங்குகளுக்கு கூற முடியாது. நிச்சயமாக மனிதர்களுக்காகத்தான் இருக்கும். மனித முகம், ஆனால் குரங்கினுடைய நடத்தை. ஆகையால் மனித குரங்குகளுக்கு தீயவைகளைக் கேட்காதீர்கள், காதை மூடிக் கொள்ளுங்கள் என கூறுப்படுகிறது.
இது பழைய உடல் இதற்கு ஏதாவது ஒன்று ஆகிக் கொண்டு தான் இருக்கும் என குழந்தைகள் அறிகின்றீர்கள். யாருடைய மனைவியாவது இறந்து விட்டால் பழைய செருப்பு போனது, பிறகு புதியது வாங்கிக் கொள்வோம் என கூறுகிறார்கள். சிவபாபாவிற்கு பழைய செருப்பு தான் வேண்டும். புதிய செருப்பு என்றால் புதிய உடல் அதில் வர வேண்டியதில்லை. எது புதியதிலும் புதியதாக இருந்ததோ இப்பொழுது அது பழையதாகிவிட்டது, பாபா கூறுகின்றார், 84 பிறவிகளின் நம்பர் 1 ஆக இவர் பிறவி எடுத்திருக்கிறார். யார் நம்பர் ஒன் பாவனமானாரோ சர்வகுண சம்பன்னமாக ஆனாரோ… அவரே பதீத்தமாக ஆக வேண்டியுள்ளது. பிறகு மீண்டும் பாவனமாக வேண்டும். 84 பிறவிகளினுடைய கணக்கல்லவா? நீங்களே பூஜிக்கத்தக்கவர்களாக இருந்து…. அவரே ஸ்ரீ நாராயணனாக இருந்து எப்பொழுது அவரே பூஜாரியாக ஆகிறாரோ, அவரே ஸ்ரீ நாராயணனை பூஜை செய்கின்றார். ஆச்சரியமல்லவா? அதற்குப் பின்னால் பிறவிகளில் கூட ஸ்ரீ லட்சுமி நாராயணரை பூஜை செய்தார். ஆனால் ஸ்ரீ லட்சுமியானவர், ஸ்ரீ நாராயணனுடைய பாதங்களை பணியாள் போல் பிடித்துவிடுவது போன்ற படத்தை பார்க்கும் போது அவருக்கு நன்றாகவேயில்லை. லட்சுமியினுடைய படத்தை நீக்கி விட்டு நாராயணனுடைய படத்தை மட்டும் வைத்துக் கொண்டார். அதே ஆத்மா பிறகு பூஜாரியிலிருந்து பூஜிக்கத்தக்கதாக ஆகிறது. தத்தத்வம்! சத்யுகத்தில் குழந்தைகள் பிறக்கும்போது ஒன்றே ஒன்று மட்டும் இருக்காது. சத்யுகத்தில் குழந்தைகள் பிறக்கும்போது இளவரசன் இளவரசியாக இருக்கும் அல்லவா? இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் தந்தை திரும்ப அழைத்துச் செல்வதற்காக உங்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார். நாம் சொர்க்கத்தின் எஜமானராக ஆகிக் கொண்டிருக் கின்றோம் என்பதை அறிகிறீர்கள். மறுபிறவி என்பது சத்யுகத்தில் கிடைக்கும். இப்பொழுது ஸ்தாபனை ஆகிக்கொண்டிருக்கின்றது. மிகச்சரியாக தொடர்ந்து நீடிக்கின்ற, சுகம் சாந்தியின் இராஜ்யம் இருந்தது என்பதை அறிவீர்கள். நாங்கள் இராஜ யோகத்தை நடைமுறையில் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் எவருக்கும் புரிய வைக்க முடியும். சிலர் கூறுகின்றனர், நாங்கள் அந்த சாமியாரிடம் சென்றோம், மிகுந்த அமைதி கிடைத்தது என்று. ஆனால் அது கூட அற்பகால, தற்காலிக சாந்தி தானே! அதுவும் 10லி20 பேருக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் இங்கோ முழு உலகம் பற்றியது. உண்மையிலும் உண்யைமான அமைதி என்பது சத்யுகத்தில் மட்டுமேயிருக்கும். மிக நல்ல குழந்தைகள். கல்பத்தின் முன்னர் போன்று தங்களது புருˆôர்த்தத்தை செய்து கொண்டிருக்கின்றனர். அநேக புதுப்புது கோபியர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஒருமுறை ஞானம் கிடைத்துவிட்டது என்றால், குஷி அளவு கடந்து செல்கிறது. நேற்று ஒரு தம்பதியினர் பாபாவிடம் வந்தனர். பாபா அவர்களுக்குப் புரிய வைத்தார் லி குழந்தைகளே! நீங்கள் பாபாவிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தியை எடுக்க மாட்டீர்களா, அரைக் கல்பம் நரகத்தில் சங்கடங்களால் பீடிக்கப்பட்டு துக்கம் அடைந்துள்ளீர்கள். இந்த ஒரு ஜென்மம் மட்டும் விˆத்தை (விகாரத்தை) விட முடியாதா? சொர்க்கத்தின் எஜமானராக ஆவதற்கு தூய்மை ஆகமாட்டீர்களா? உண்மையில் கஷ்டம் தான்! காமச் சிதை யில் அமர்வதற்கு உலகிய பிராமணர்கள் உங்களை பிணைத்து கட்டி விட்டனர். இப்பொழுது நீங்கள் ஞான சிதையில் அமர்ந்து சொர்க்கத்தின் மகாராஜா, மகாராணி ஆகுங்கள் என்றார். அவர்கள் கூறினர். அப்படியென்றால் நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் லி பாபா கூறினார்: சிவபாபாவை நினைவு செய்து கொண்டிருந்தால் நிச்சயமாக உதவி கிடைக்கும். நாங்கள் நினைவு செய்வோம் என்று கூறினார்கள். உடன் பாபாவோடு தங்களை பிணைத்துக் கொண்டார்கள். மோதிரம் கூட அணிந்து கொண்டார்கள். இவர் பாப்தாதா அல்லவா? எல்லையற்றை தந்தை கூறுகின்றார், நீங்கள் பவித்திரமாக வில்லையென்றால், சொர்க்கம் கூட செல்ல முடியாது. இந்த இறுதிப் பிறவியில் தூய்மை ஆகவில்லையென்றால் நீங்கள் இராஜ பதவியை இழந்து விடுவீர்கள். இந்த குறைந்த காலம் கூட நீங்கள் தூய்மையாக ஆக முடியாதா? பாபா உங்களை ஞான யோகத்தால் அலங்காரம் செய்து கொண்டிருக்கின்றார். நீங்கள் இதுபோன்று லட்சுமி நாராயணன் ஆகிவிடுவீர்கள். பாபாவினுடைய கட்டளையைக் கேட்கவில்லையென்றால் அவர்களைப்போன்ற மகா மூர்க்கர்கள் வேறு எவரும் இல்லை என்று புரிந்து கொள்வர். சிலர் எல்லைக்குட்பட்ட, மூர்க்கர்கள், பிறர் எல்லையற்ற மூர்க்கர்கள். வாயுமண்டலத்தைக் கெடுக்கின்ற வகையில் இங்கே எவரும் அமர்ந்திருக்க முடியாது. அன்னத்தின் கூட்டத்தில் (மிலேச்சர்கள்) அசுத்தமானவர்கள் (நாரை) எவரும் அமர்ந்திருக்க முடியாது. பாபா எவ்வளவு அலங்காரம் செய்து ஸ்ரீலட்சுமி நாரயாணரைப்போன்று ஆக்குகின்றார். பிறகு மாயா முற்றிலும் ஒன்றுமில்லாதவர்களாக ஆக்கிவிடுகிறது. ஒரு பைசாவுக்கும் பெறாதவர்களாக ஆக்கிவிடுகிறது. சிலரிடம் 50 கோடியிருக்கலாம். ஆனாலும் ஒரு காசுக்கும் பெறதாவர்கள் தான். ஏனெனில் இவை அனைத்துமே எரிந்து சாம்பலாகி விடுகிறது.. கூடவே வருவது உண்மையான வருமானம் மட்டுமே!
பாபா வழி கூறுகிறார். குழந்தைகளே சென்டர்களைத் திறந்துக் கொண்டே செல்லுங்கள். மனிதர்களை அலங்காரம் செய்யுங்கள். ஆனால் பல்கலைக்கழகம் மற்றும் மருவத்துவமனை திறப்பவர்களும் நல்லவர்களாக இருக்க வேண்டும். எவருக்கும் புரிய வைக்கக் கூடியவர். அல்லது திறந்து வைக்க வேறு யாரையாவது ஏற்பாடு செய்தால் அவர், புரிய வைக்கச் செய்யலாம். அவர்களது ஆசீர்வாதத்தின் மூலமும் நிறைவாகிவிடுகிறது. பலம் கிடைக்கிறது அல்லவா? 21 பிறவிகளுக்கு லாபம் தான்! பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடக்காதவர்களும் இருப்பார்களா? எனவே ஒவ்வொரு அடியிலும் பாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். தடைகள் வரத்தான் செய்யும். பந்தனத்தில் இருக்கக்கூடிய கோபிகைகளுக்கு எவ்வளவு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இதில் பயமற்றவர்களாக இருக்க வேண்டும். பாபாவினுடைய மகிமையானது லி நிர்பய, (பயமற்றவர்). நிர்வைர் (பகையற்றவர்) நமக்கு எவர்மீதும் பகைமை கிடையாது. பாபா அலங்காரம் செய்கின்ற போது அவரது சேவையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பாபா நாங்கள் ஏன் உங்கள் ஸ்ரீமத்படி நடக்க மாட்டோம். அதில் எங்களுக்கு மிகவும் நன்மையுண்டு. எங்களுக்குப் பிறகு குழந்தைகள், குடும்பத்தார் முதலியோருக்கும் நன்மை உண்டு. ஒவ்வொரு வருக்கும் உண்மையான யாத்திரைப்படி நடப்பதற்கான வழியைக் கூறவேண்டும். சண்டை ஏற்படும், அபலைகள் பொருத்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் ஒத்துக்கொள்ள வில்லையென்றால், அவர்கள் நமது குலத்தவர்கள் அல்ல என்று புரிந்துக் கொள்ளுங்கள். மிகுந்த முயற்சி செய்ய வேண்டியுள்ளது! எங்கிருந்தாவது நமது குலத்தவர்கள் வெளிவரட்டும். பிறகு அவர்கள் பிரஜைகளாகவாது தகுதி ஆனாலும் சரி. பிறரையும் பிரஜைகளாக ஆக்கு வதற்கு தகுதியானவர்களாக வேண்டும். இதுவும் நல்லது. பிரஜைகளைக்கூட சேர்க்க வேண்டும் அல்லவா? மனிதர்களிலிருந்து தேவதையாக்கும் இந்த காரியத்தை பாபாவைத் தவிர வேறு எவரும் செய்ய முடியாது. நீங்கள் பிராமணர்கள் சிரேஷ்டத்திலும் சிரேஷ்டானவர்கள்; அவர்கள் கனிஷ்டத்திலும் (தாழ்வானவர்கள்) கனிஷ்டமானவர்கள். நீங்கள் அன்னம் போன்றவர் கள், அவர்கள் நாரைகள். ஆக நிச்சயம் தகராறு ஏற்படும். தொல்லைகள் ஏற்படும். மாயா இராவணன் அனைவரையும் கெடுத்துவிட்டான். பாபா வந்து வளமாக்குகிறார். செல்வ செழிப்பாக்குகின்றார். பிறகு எதிர்காலத்தில் சொத்து சுகம் எல்லாம் உங்களதாகிவிடும். சண்டைக்குப் பிறகு பாரத தேசம் மிகவும் செழிப்பாக ஆகிவிடுகிறது. இந்த மிகப்பெரிய போருக்குப்பின்னரே பாரதம் சொர்க்கமாக ஆகிறது என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். எனவே குழந்தைகள் இப்போது மிக நல்ல முறையில் புருஷார்த்தம் செய்ய வேண்டும். சொற் பொழிவுகள் கூட தெளிவாக புதுமையாகச் செய்ய வேண்டும். சங்கொலி முழக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், இவர்களிடம் சங்கே இல்லை என்று கூறிவிடுவார்கள். தாமரை மலருக்குச் சமமாக இருக்கலாம். கையில் சக்கரம் கூட இருக்கலாம், ஆனால் சங்கொலி இல்லையென்றால் சரிவராது. பாபா கூறுகின்றார், ஞானம் நிறைந்த ஆத்மாக்கள் தான் எனக்குப் பிரிய மானவர்கள். கோபிகைகளும் முரளியில் மூழ்கிப் போய்விடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணன் முரளி கூறவில்லை. இது ஸ்ரீகிருஷ்ணருடைய ஆத்மாவின் இறுதிப் பிறவியாகும். ஒரு சுற்று சுற்றி வந்திருக்கின்றார். இப்பொழுது இவருக்கு ஞானம் கிடைத்துள்ளது. இது பழைய உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு நீங்கள் விடுதலை கொடுத்து விட வேண்டும். நீங்கள் இப்போது புதிய உலகத்தின் எஜமானராக ஆகிக்கொண்டிருக் கின்றீர்கள். வினாசத்திற்கு முன்பாக பழைய உலகத்தை விலக்கி விடவேண்டும். அவ்வாறு விலக்கவில்லையென்றால் புதிய உலகத்தின் மீது புத்தியோகம் செல்லாது. இராவணபுரியில் 63 பிறவிகள் துக்கம் அடை கின்றனர். இப்பொழுது இந்த பழைய உலகத்தை விலக்கி (விவாகரத்து) விடுங்கள். தேகத்தோடு என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் கூட விலக்கிவிடுங்கள். பிறகு நீங்கள் தனியான ஆத்மாவாகி, என்னிடம் வருங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
(1) ஞானம் நிறைந்த ஆத்மாவாகி சங்கொலி எழுப்ப வேண்டும். ஒவ்வொருவருக்கும் உண்மையான யாத்திரையைக் கற்பிக்க வேண்டும். உங்களது பிரஜைகளைத் தயார் செய்ய வேண்டும்.
(2) புத்தியிலிருந்து பழைய உலகத்தை நீக்கி விடவேண்டும், புதிய உலகத்தை நோக்கி புத்தியோகத்தைசெலுத்த வேண்டும. பயமற்றவர்களாக, வெறுப்பு – பகைமை யற்றவர்களாக ஆகவேண்டும்.
வரதானம்:-
இல்லறத்தில் இருந்து கொண்டு, பந்தன்முக்த் (பந்தன்முக்த்) ஆவதற்காக, சங்கல்பத்தில் கூட எந்த ஒரு சம்மந்தத்திலும், தனது தேகம் மற்றும் பொருள்களிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது. சங்கல்பத்தில் கூட எந்த ஒரு பந்தனமும் கவரக் கூடாது. ஏனென்றால் சங்கல்பத்தில் வந்தால் சங்கல்பத்திற்குப் பிறகு கர்மத்திலும் வந்து விடும். எனவே சரீர உணர்வில் வந்தாலும், சரீர உணர்வின் கவர்ச்சியில் வரக் கூடாது. அப்போது தான் விலகிய மற்றும் அன்பான அவ்யக்த ஸ்திதியின் அனுபவம் செய்ய முடியும்.
சுலோகன்:-
அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.
பரமாத்ம அன்பில் சதா மூழ்கியவராக இருப்பீர்களானால் முகத்தின் ஜொலிப்பு மற்றும் பொலிவு, அனுபவத்தின் கிரணங்கள் அவ்வளவு சக்திசாலியாக இருக்கும் லி அது எந்த ஒரு பிரச்சினை அருகில் வந்தாலும் விலகி சென்றுவிடும், கண்களை முறைத்துப் பார்த்தாலும் பார்க்க முடியாது. எந்த விதமான முயற்சியும் அனுபவமாகாது.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!
➰🌹🌹🌹🌹🌹🌹🌹OM SHANTI 🙏💗