18 July 2021 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

July 17, 2021

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

சதா உற்சாகத்தில் இருந்து உற்சவத்தைக் கொண்டாடுங்கள்

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

இன்று விஷ்வேஷ்வரன் தந்தை தன்னுடைய விஷ்வத்தின் சிரேஷ்டமான படைப்பு மற்றும் சிரேஷ்ட மான ஆதி இரத்தினங்களுடன், மிகவும் அன்பான மற்றும் நெருக்கமான குழந்தைகளுடன் சந்திப்பைக் கொண்டாடுவதற்காக வந்திருக்கின்றார். விஷ்வத்தினுடைய அனைத்து ஆத்மாக்களும் விஷ்வேஷ் வரன் தந்தையினுடைய குழந்தைகளே ஆவார்கள். ஆனால், பிராமண ஆத்மாக்கள் மிகவும் அன்பான, நெருக்கமான ஆத்மாக்கள் ஆவார்கள், ஏனெனில், பிராமண ஆத்மாக்கள் ஆதி படைப்பு ஆவார்கள். தந்தையின் கூடவே பிராமண ஆத்மாக்களும் பிராமண வாழ்க்கையில் அவதரித்து தந்தையினுடைய காரியத்தில் சகயோகி ஆத்மாக்கள் ஆகியிருக்கின்றார்கள். ஆகையினால், பாப்தாதா இன்றைய தினம் குழந்தைகளுடைய பிராமண வாழ்க்கையின் அவதாரம் எடுத்த பிறந்த தினத்தைக் கொண்டாடு வதற்காக வந்திருக்கின்றார்கள். குழந்தைகள் தந்தையினுடைய பிறந்த நாளைக் கொண்டாடு வதற்காக ஊக்க உற்சாகத்தோடு குஷியில் நடனமாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், பாப்தாதா குழந்தைகளுடைய இந்த பிராமண வாழ்க்கையைப் பார்த்து, அன்பு மற்றும் சகயோகத்தில், தந்தை யின் கூடவே ஒவ்வொரு காரியத்திலும் தைரியத்துடன் முன்னேறிக் கொண்டு இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றார்கள். நீங்கள் பாப்தாதாவினுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றீர்கள் மற்றும் தந்தை குழந்தைகளுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். பிராமணர்களாகிய உங்களுக்கும் பிறந்த நாள் அல்லவா. எனவே, அனைவருக்கும் பாப்தாதா, ஜெகதம்பா மற்றும் உங்களுக்குத் துணையாக இருக்கும் அனைத்து அட்வான்ஸ் பார்ட்டியில் சென்ற விசேஷமான சிரேஷ்ட மான ஆத்மாக்களுடன் இணைந்து உங்களுடைய அலௌகீக பிராமண பிறப்பிற்காக, அன்போடு பொன்னிறமான புஷ்பங்களின் மழை பொழிந்து வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றார்கள். இது உள்ளத்தின் வாழ்த்துக்கள் ஆகும், வாயினால் மட்டும் சொல்லப்படும் வாழ்த்துக்கள் அல்ல. ஆனால், திலாராம் (உள்ளத்தைக் கொள்ளை கொண்ட) தந்தை யினுடைய உள்ளத்தின் வாழ்த்துக்களை அனைத்து சிரேஷ்ட ஆத்மாக் களுக்கும் கொடுக்கின்றார்கள், அவர்கள் எதிரில் அமர்ந்திருந்தாலும் சரி, மனதால் தந்தைக்கு முன் இருந்தாலும் சரி, நாலாபுறங் களிலும் உள்ள குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

இன்றைய தினம் பக்த ஆத்மாக்களிடம் தந்தையினுடைய புள்ளி ரூபத்தினுடைய விசேஷமான நினைவு உள்ளது. சிவஜெயந்தி அல்லது சிவராத்திரி என்பது சாகார ரூபத்தின் நினைவுச்சின்னம் கிடையாது. ஆனால், நிராகார ஜோதி புள்ளி வடிவமான தந்தை, யாரை சிவலிங்க வடிவத்தில் பூஜிக் கின்றார்களோ, அந்த புள்ளிக்கு மகத்துவம் உள்ளது. உங்கள் அனைவருடைய உள்ளத்திலும் தந்தையினுடைய புள்ளி ரூபத்தின் நினைவு சதா உள்ளது. நீங்களும் புள்ளி மற்றும் தந்தையும் புள்ளி, எனவே, இன்றைய தினம் பாரதத்தில் ஒவ்வொரு பக்த ஆத்மாவின் உள்ளத்தில் விசேஷமாக புள்ளி ரூபத்திற்கான மகத்துவம் உள்ளது. புள்ளி யானது எந்தளவு சூட்சுமமாக இருக்கிறதோ, அந்தளவு சக்திசாலியாகவும் இருக்கிறது. ஆகையினால், புள்ளியான (பிந்து) தந்தையையே சக்திகளுடைய, குணங்களினுடைய, ஞானத் தினுடைய கடல் (சிந்து) என்று கூறப்படுகிறது. இன்று அனைத்து குழந்தைகளின் உள்ளத்தில் இருந்து பிறந்த தினத்தின் விசேஷமான உற்சாகத்தின் அலை பாப்தாதா விடம் அமிர்த வேளையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளாகிய நீங்கள் சேவைக்காக மற்றும் அன்பு சொரூபம் ஆகி தந்தையினுடைய கொடியை ஏற்றினீர்கள், தந்தை எந்தக் கொடியை ஏற்றி இருக்கின்றார்? நீங்கள் அனைவரும் சிவபாபாவின் கொடியை ஏற்றியிருக்கின்றீர்கள், தந்தை இந்தக் கொடியை ஏற்றுவாரா என்ன? இந்த சேவையினுடைய சாகார ரூபத்தின் பொறுப்பு குழந்தை களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தையும் கூட கொடி ஏற்றியிருக் கின்றார் ஆனால், என்ன கொடியை எங்கு ஏற்றியிருக்கின்றார்? பாப்தாதா தங்களுடைய உள்ளத்தில் அனைத்து குழந்தை களுடைய விசேஷத்தன்மைகளுடைய அன்பின் கொடியை ஏற்றியிருக்கின்றார்கள். எத்தனை கொடிகளை ஏற்றியிருப் பார்கள்? இந்த உலகத்தில் இத்தனை கொடிகளை யாராவது ஏற்ற முடியுமா! எவ்வளவு அழகான காட்சியாக இருக்கும்!

ஒவ்வொரு குழந்தையினுடைய விசேஷத்தன்மைகளுடைய கொடி பாப்தாதாவின் உள்ளத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. நீங்கள் மட்டும் கொடியை ஏற்றவில்லை, பாப்தாதா வும் ஏற்றி இருக் கின்றார்கள். இந்தக் கொடியை ஏற்றும் சமயத்தில் என்ன நடக்கிறது? மலர்களின் மழை பொழிகிறது. பாப்தாதாவும் எப்பொழுது குழந்தைகளுடைய விசேஷத் தன்மையின் அன்பின் கொடியை பறக்கவிடுகின்றார்களோ, அப்பொழுது என்ன மழை பொழிகிறது? ஒவ்வொரு குழந்தையின் மீதும் அழிவற்றவர் ஆகுக, அமரர் ஆகுக, ஆடாத அசையாதவர் ஆகுக என்ற இந்த வரதானங்களின் மழை பொழிகிறது. இந்த வரதானங்கள் தான் பாப்தாதாவின் அழிவற்ற அலௌகீக மலர்கள் ஆகும். பாப்தாதாவிற்கு இந்த அவதார தினத்தின் அதாவது சிவஜெயந்தி தினத்தின் குஷியானது குழந்தை களை விட அதிகமாக உள்ளது, மகிழ்ச்சியே மகிழ்ச்சியாக உள்ளது! ஏனெனில், இந்த அவதார தினத்தை ஒவ்வொரு வருடமும் ஞாபகார்த்தமாகக் கொண்டாடுகின்றார்கள், ஆனால், எப்பொழுது சாகார பிரம்மாவின் உடலில் தந்தையின் அவதாரம் ஏற்படுகிறதோ, அப்பொழுது பாப்தாதாவிற்கு அதிலும் விசேஷ மாக சிவத் தந்தைக்கு, தன்னுடைய நெருக்கமான அன்பான குழந்தைகளை நீண்ட காலமாக பிரிந்து பரந்தாமத்தில் இருக்கும் சிவத் தந்தைக்கு, பரந்தாமத்தில் மற்ற ஆத்மாக்களும் இருக் கின்றார்கள், ஆனால், யார் முதல் படைப்பாக இருக்கும் ஆத்மாக்களோ, யார் தந்தைக்கு சமமாக ஆகக்கூடிய மற்றும் சேவையில் துணையாக இருக்கும் ஆத்மாக்களோ, அவர்கள் எவ்வளவு காலத்திற்கு பிறகு அவதாரம் செய்ததினால் மீண்டும் சந்திக்கின்றார்கள் மற்றும் எவ்வளவு காலமாகப் பிரிந்திருக்கும் சிரேஷ்ட ஆத்மாக்கள் மீண்டும் வந்து சந்திக்கின்றார்கள் என்ற இந்த விசயத்தின் மகிழ்ச்சி விசேஷமாக சிவ தந்தைக்கு உள்ளது. ஒருவேளை, யாராவது மிகவும் அன்பானவரைப் பிரிந்து பிறகு சந்தித்தார்கள் என்றால் மகிழ்ச்சியிலும் விசேஷமான மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா. அவதார தினம் என்றால் தன்னுடைய ஆதி படைப்பை மீண்டும் சந்திக்கும் தினம் என்று அர்த்தம். நமக்கு தந்தை கிடைத்துவிட்டார் என்று நீங்கள் யோசிப்பீர்கள் மற்றும் எனக்கு குழந்தைகள் கிடைத்துவிட்டார்கள் என்று தந்தை கூறுகின்றார். எனவே, தந்தைக்கு தன்னுடைய ஆதி படைப்பின் மீது பெருமை இருக்கிறது. நீங்கள் அனைவரும் ஆதி படைப்பு ஆவீர்கள் அல்லவா, சத்திரியர்களாக இல்லை தானே? அனைவரும் சூரியவம்சத்தின் ஆதி படைப்பு ஆவீர்கள். பிராமணரிலிருந்து தேவதை யாக ஆகின்றீர்கள் அல்லவா. எனவே, பிராமண ஆத்மாக்கள் ஆதி படைப்பு ஆவார்கள். அனைவருமே அனாதி படைப்பு ஆவார்கள், முழு விஷ்வத்தின் ஆத்மாக்களும் படைப்பே ஆவார்கள். ஆனால், நீங்கள் அனாதி மற்றும் ஆதி படைப்பு ஆவீர்கள். எனவே, இரட்டை போதை உள்ளது அல்லவா.

இன்றைய தினம் பாப்தாதா விசேஷமாக ஒரு சுலோகன் கொடுக்கின்றார்கள். இன்றைய தினத்தை உற்சவத்திற்கான தினம் என்று கூறப்படுகிறது. சிவராத்திரி அல்லது சிவஜெயந்தி தினத்தைக் கொண்டாடுகின்றார்கள். பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உற்சவத் திற்கான நொடியாகும் என்ற உற்சவ தினத்திற்கான இந்த சுலோகனை நினைவில் வைக்க வேண்டும். பிராமண வாழ்க்கை என்றால் சதா உற்சவத்தைக் கொண்டாடுவது, சதா உற்சாகத் தில் இருப்பது மற்றும் சதா ஒவ்வொரு கர்மத்தில் ஆத்மாவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துவது என்பதாகும். எனவே, உற்சவத்தை (விழாவை) கொண்டாட வேண்டும், உற்சாகத்தில் இருக்க வேண்டும் மற்றும் உற்சாகத்தை ஏற்படுத்த வேண்டும். எங்கு உற்சாகம் உள்ளதோ, அங்கு ஒருபொழுதும் எவ்விதமான தடையும், உற்சாகத்தில் இருக்கும் ஆத்மாவை உற்சாகத்தில் இருந்து விலக்க முடியாது. எவ்வாறு அல்பகால உற்சாகத்தில் இருக்கும்பொழுது அனைத்து விசயங்களும் மறந்துவிடுகின்றன அல்லவா. ஏதாவது உற்சவத்தைக் கொண்டாடுகின்றீர்கள் எனில், அந்த சமயத்தில் குஷியைத் தவிர வேறு எந்த நினைவும் இருக்காது. எனவே, பிராமண வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் உற்சவம் (விழா) ஆகும் அதாவது ஒவ்வொரு நொடியும் உற்சாகத்தில் இருப்பதற்கான நொடியாகும். எனவே, வேறு ஏதாவது விசயங்கள் வருமா என்ன? எந்த ஒரு எல்லைக்குட்பட்ட உற்சவத்திற்கு சென்றீர்கள் என்றாலும் அங்கு என்ன நடக்கிறது? ஆடல், பாடல், விளையாட்டைப் பார்த்தல் மற்றும் உணவு உட்கொள்ளுதல் ஆகிய இவை தான் இருக்கின்றன அல்லவா. எனவே, பிராமண வாழ்க்கையின் உற்சவத்தில் முழு நாளும் என்ன செய்கின்றீர்கள்? சேவை செய்கின்றீர்கள் எனில் விளையாட்டு எனப் புரிந்து செய்கின்றீர்கள் அல்லவா அல்லது சுமையாகத் தோன்றுகிறதா? தற்கால உலகத்தில் எந்த அஞ்ஞானி ஆத்மாவும் கொஞ்சம் புத்தியின் வேலை செய்தார்கள் என்றால் மிகவும் களைப்படைந்துவிட்டேன், புத்தியில் வேலையின் அதிக சுமை உள்ளது என்று கூறுவார்கள். மேலும், நீங்கள் சேவை செய்துவிட்டு வருகின்றீர்கள் என்றால் என்ன கூறுகின்றீர்கள்? சேவையின் பலனை சாப்பிட்டுவிட்டு வந்திருக்கின்றோம் ஏனெனில், எவ்வளவு பெரியதிலும் பெரிய சேவைக்கு நிமித்த மாகின்றீர்களோ, அவ்வளவு சேவை யினுடைய பிரத்யட்சபலன் மிகச் சிறந்ததாக மற்றும் பெரியதாகக் கிடைக்கிறது. எனவே, பிரத்யட்ச பலனை (பழம்) உண்பதால் இன்னும் அதிக சக்தி வந்துவிடுகிறது அல்லவா. குஷியினுடைய சக்தி அதிகரிக் கிறது. ஆகையினால், எவ்வளவு தான் சரீரத்திற்கான கடுமையான வேலையாக இருக்கலாம் அல்லது திட்டம் தீட்டுவதற்கான புத்திக்கான வேலையாக இருக்கலாம் ஆனால், உங்களுக்கு களைப்பு ஏற்படாது. இரவா அல்லது பகலா என்பது தெரிவதில்லை அல்லவா. ஒருவேளை, கடிகாரம் உங்களிடம் இல்லை எனில் எத்தனை மணி ஆகிவிட்டது என்பது தெரிகிறதா என்ன? ஆனால், உற்சவம் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றீர்கள், ஆகையினால், சேவை உற்சாகத்தைக் கொடுக்கிறது மற்றும் உற்சாகத்தை அனுபவம் செய்விக்கிறது.

பிராமண வாழ்வில் ஒன்று சேவை, இரண்டாவது என்ன உள்ளது? மாயை வருகிறது. மாயையின் பெயரைக் கேட்டு சிரிக்கின்றீர்கள் ஏனெனில், மாயைக்கு நம்மீது அதிக அன்பு உள்ளது என்பதை புரிந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு அன்பு இல்லை, அதற்கு அன்பு உள்ளது. உற்சவத்தில் விளையாட்டும் பார்க்கப்படுகிறது. தற்சமயம் அனைவருக்கும் எந்த விளையாட்டு அதிகமாகப் பிடிக்கிறது? மிக்கி மௌஸ் விளையாட்டு அதிகம் காண்பிக் கின்றார்கள். விளம்பரங் களைக் கூட மிக்கி மௌஸ் விளையாட்டாகக் காண்பிக்கின்றார்கள். போட்டியை (மேட்ச்) விரும்புகின்றீர்கள் அல்லது மிக்கி மௌஸ் விளையாட்டை விரும்புகின்றீர்கள். இங்கு கூட மாயை வருகிறது எனில், போட்டி போடுங்கள், இலக்கை குறிவைத்திடுங்கள். விளையாட்டில் என்ன செய்கின்றீர்கள்? பந்து வருகிறது என்றால் அதைப் பிடித்து நீங்கள் இன்னொரு பக்கம் எறிகின்றீர்கள் அல்லது பிடித்துவிடு கின்றீர்கள் என்றால் வெற்றியாளர் ஆகிவிடுகின்றீர்கள். அதுபோன்று இந்த மாயையின் பந்து, சில நேரம் காமம் என்ற ரூபத்தில் வரு கின்றது, சில நேரம் கோபம் என்ற ரூபத்தில் வருகின்றது. இது மாயையின் விளையாட்டு என்பதை கேட்ச் செய்யுங்கள் (புரிந்து கொள்ளுங்கள்). ஒருவேளை, மாயையின் விளையாட்டை விளையாட்டு எனப்புரிந்துகொண்டீர்கள் என்றால் உற்சாகம் அதிகரிக்கும் மற்றும் ஒருவேளை, மாயையின் எந்தவொரு பிரச்சனையையும் எதிரி எனப் புரிந்து பார்க்கின்றீர்கள் என்றால் பயந்துவிடுகின்றீர்கள். மிக்கி மௌஸ் விளையாட்டில் சில நேரம் குரங்கு வருகிறது, சில நேரம் பூனை, சில நேரம் நாய், சில நேரம் எலி வருகிறது ஆனால், நீங்கள் பயப்படுகின்றீர்களா என்ன? பார்க்கும் பொழுது மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா. அதுபோன்று மாயையின் வெவ்வேறு பிரச்சனைகளின் விளையாட்டை உற்சவம் என்ற ரூபத்தில் பாருங்கள். விளையாட்டைப் பார்க்கும்பொழுது யாராவது பயப்படுகின்றார்கள் என்றால் அவர்களை என்ன சொல்லலாம்? விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பந்து என்னிடமே வந்து கொண்டிருக்கிறது, என்மீது பட்டுவிடக்கூடாது என்று யோசித்தார்கள் என்றால் விளையாட்டைப் பார்க்க முடியுமா? ஆகையினால், குஷி மற்றும் மகிழ்ச்சியோடு விளையாட்டைப் பாருங்கள், மாயையைக் கண்டு பயப்படாதீர் கள். ஒரு மனக் கேளிக்கை எனப் புரிந்து கொள்ளுங்கள். அது சிங்க ரூபத்தில் வந்தாலும் பயப்படாதீர்கள். பிராமண வாழ்வினுடைய ஒவ்வொரு நொடியும் விழாவாகும், உற்சாகம் நிறைந்ததாகும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு மத்தியில் இந்த விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள், மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டும் இருக்கின்றீர்கள் மற்றும் தந்தை யினுடைய பிராமண பரிவாரத்தின் விசேஷத்தன்மைகளுடைய, குணங்களினுடைய பாடலும் பாடிக்கொண்டு இருக்கின்றீர்கள் மற்றும் பிரம்மா போஜனமும் மகிழ்ச்சியோடு சாப்பிட்டு க்கொண்டு இருக்கின்றீர்கள்.

உங்களைப் போன்று சுத்த உணவு, நினைவிலிருந்து சமைக்கப்பட்ட உணவு விஷ்வத்தில் எவருக்கும் கிடைப்பதில்லை. இந்த உணவையே துக்கத்தை அழிக்கும் உணவு என்று கூறப்படுகிறது. நினைவிலிருந்து சமைக்கப்பட்ட உணவு அனைத்து துக்கத்தையும் தூரமாக்கி விடுகிறது, ஏனெனில், சுத்த அன்னத்தினால் மனம் மற்றும் உடல் ஆகிய இரண்டும் சுத்தம் ஆகிவிடுகின்றன. ஒருவேளை, செல்வம் கூட அசுத்தமான செல்வம் வருகிறது என்றால் அசுத்த செல்வம் குஷியை மறைத்து விடுகிறது, கவலையைக் கொண்டு வந்துவிடுகிறது. எவ்வளவு அசுத்த செல்வம் வருகிறது அதாவது ஒரு இலட்சம் பணம் வருகிறது என்றால் கவலை கோடி மடங்கு வரும். மேலும், கவலையை எப்பொழுதும் சிதை என்று சொல்லப் படுகிறது. சிதையில் அமர்ந்திருப்பவர்களுக்கு எவ்வாறு குஷி இருக்கும்! சுத்த அன்னம் மனதை சுத்தமாக்கிவிடுகிறது, ஆகையினால், பணமும் சுத்தமாகி விடுகிறது. நினைவிலிருந்து சமைக்கப்பட்ட அன்னத்திற்கு மகத்துவம் உள்ளது, ஆகையினால், பிரம்மா போஜனத்திற்கு மகிமை உள்ளது. ஒருவேளை, நினைவில் சமைக்கப்படவில்லை மற்றும் சாப்பிடவில்லை எனில், இந்த அன்னமானது ஸ்திதியை மேலும், கீழுமாக (நிலையற்றதாக) ஆக்கிவிடுகிறது. நினைவில் தயாரிக்கப்பட்ட மற்றும் நினைவில் உட்கொள்ளப்பட்ட அன்னமானது மருந்தினுடைய வேலையும் செய்கிறது மற்றும் ஆசீர்வாதத்தின் வேலையும் செய்கிறது. நினைவி லிருந்து சமைக்கப்பட்ட அன்னமானது ஒருபொழுதும் நஷ்டத்தை ஏற்படுத்த முடியாது. ஆகையினால், ஒவ்வொரு நொடியும் உற்சவத்தைக் கொண்டாடுங்கள். மாயை எந்த ரூபத்திலும் வரட்டும். நல்லது. மோகத்தின் ரூபத்தில் வருகின்றது என்றால் குரங்கின் விளையாட்டைக் காண்பிக்க வந்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். விளையாட்டை சாட்சியாகிப் பாருங்கள், சுயம் மாயையின் சக்கரத்தில் வந்துவிடாதீர்கள். சக்கரத்தில் வந்துவிடுகிறீர்கள் ஆதலால் பயப்படுகிறீர் கள். தற்சமயம் சின்னச் சின்ன குழந்தைகளை மேலே தூக்கி விடும் மற்றும் கீழே இறக்கிவிடும் மனக்கேளிக்கையின் விளையாட்டு விளையாட வைக்கின்றார்கள். இது மனக் கேளிக்கை ஆகும், விளையாட்டு ஆகும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரட்டும், இதை மிக்கி மௌஸ் விளையாட்டு எனப் பாருங்கள். எது வருகிறதோ, அது சென்றும் விடுகிறது. மாயை எந்த ரூபத்தில் வருகிறது என்றாலும் இப்பொழுது வந்திருக்கிறது, இப்பொழுதே சென்றுவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிரேஷ்ட ஸ்திதியில் இருந்து இறங்கி மாயையுடன் சென்றுவிடாதீர்கள். மாயையை வரவிடுங்கள் ஆனால், நீங்கள் அதனுடன் ஏன் செல்கின்றீர்கள்? ஏதாவது வரும், ஏதாவது போகும், ஏதாவது மாறும் – விளையாட்டில் இதெல்லாம் நடக்கும். ஒருவேளை, காட்சி மாறவில்லை எனில் விளையாட்டு நன்றாகவே இருக்காது. மாயை கூட எந்த ரூபத்தில் வந்தாலும், எந்தக் காட்சியாக இருந்தாலும் அது அவசியம் மாறிவிடும். எனவே, காட்சி மாறிக்கொண்டே இருக்கட்டும் ஆனால், உங்களுடைய சிரேஷ்டமான ஸ்திதி மாறக்கூடாது. ஏதாவதொரு விளையாட்டில் யாராவது விளையாடு கின்றார்கள் என்றால் நீங்களும் அவர்களுடன் அவர்களைப் போலவே ஓடுவீர்களா என்ன? பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டு மட்டும் இருப்பார்கள் அல்லவா. மாயை கீழே விழவைப் பதற்காக வரட்டும் அல்லது எந்த சொரூபத்தில் வேண்டுமானாலும் வரட்டும் ஆனால், நீங்கள் அதை விளையாட்டாகப் பாருங்கள். எவ்வாறு கீழே விழவைப்பதற்காக வந்திருக்கிறது என்ற அதனுடைய ரூபத்தை கேட்ச் செய்யுங்கள் (புரிந்துகொள்ளுங்கள்) மற்றும் விளையாட்டு எனப் புரிந்து அந்தக் காட்சியை சாட்சியாகப் பாருங்கள். பின்வரும் காலத்திற்கான மற்றும் சுய ஸ்திதியை வலுப்படுத்து வதற்கான படிப்பினையை எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள்.

சிவராத்திரியின் உற்சவம் என்றால் உற்சாகத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சவம் இன்றைய தினம் மட்டுமல்ல ஆனால், எப்பொழுதுமே உங்களுக்கு உற்சவம் தான் மற்றும் உற்சாகம் கூடவே உள்ளது. இந்த சுலோகனை சதா நினைவில் வைக்க வேண்டும் மற்றும் அனுபவம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டுமே அதற்கான விதியாகும். சதா சாட்சியாகிப் பார்க்க வேண்டும் மற்றும் தந்தையினுடைய துணைவனாகி இருக்க வேண்டும். தந்தையின் துணைவனாக சதா இருந்தீர்கள் எனில், எங்கு தந்தை இருக்கின்றாரோ, அங்கு சாட்சியாகிப் பார்ப்பதனால் சுலபமாக மாயையை வென்றவராக ஆகி அனேகப் பிறவிகளுக்காக உலகத்தை வென்றவர் ஆகிவிடுவீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? சுயம் தந்தை ஒவ்வொரு குழந்தைக்கும் துணையைக் கொடுப்பதற்காக பொன்னான சலுகையைக் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார், ஆகையினால், சதா கூடவே இருங்கள். இரட்டை அயல்நாட்டினர் தனித்து இருப்பதற்கு விரும்புகின்றார்கள். அவர்கள் எந்த பந்தனத்திலும் மாட்டி விடக்கூடாது, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே துணை யுடன் இருப்பதில்லை. ஆனால், இந்தத் துணையுடன் இணைந்து இருக்கும்பொழுது கூட சுதந்திரமாக இருக்கின்றீர்கள், பந்தனத்தின் அனுபவம் ஏற்படாது. நல்லது. இன்றைய தினம் இரட்டை உற்சவத்திற் கான தினம் ஆகும். வாழ்க்கையும் உற்சவமாக உள்ளது மற்றும் ஞாபகார்த்த உற்சவமும் நடைபெறு கிறது. பாப்தாதா அனைத்து அயல்நாட்டு குழந்தைகளை சதா நினைவு செய்கின்றார்கள் மற்றும் இன்றைய விசேஷ தினத்திற்கான நினைவுகளையும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஏனெனில், யார் எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள் என்றாலும் அனைவருடைய நினைவு கடிதத்தைக் கொண்டு வந்திருப்பீர்கள். கார்டு, கடிதம், டோலிகளைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள். எந்தக் குழந்தைகள் உள்ளத்தின் உற்சாகத்துடன் அன்பு நினைவுகளை அனுப்பி இருக்கின்றார்களோ மற்றும் எந்த ரூபத்தில் தன்னுடைய நினைவின் அடையாளத்தை அனுப்பி இருக்கின்றார்களோ, அந்த அனைத்துக் குழந்தை களுக்கும் பாப்தாதாவும் விசேஷமாக நினைவிற்கான ரிட்டர்ன் (கைம்மாறு) பலகோடி மடங்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள் மற்றும் ஒவ்வொரு குழந்தையின் உள்ளத்தில் சேவை யினுடைய மற்றும் சதா மாயையை வென்றவர் ஆகுவதற்கான ஊக்க உற்சாகம் மிகவும் நன்றாக உள்ளது என்பதை பாப்தாதா பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது சக்திக்கும் அதிகமாக சேவையில் முன்னேறிக் கொண்டு இருக்கின்றார்கள் மற்றும் முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். மற்றபடி யார் உண்மையான உள்ளத்துடன் உள்ளத்தின் சமாச்சாரத்தை தந்தைக்கு முன் வைக்கின்றார் களோ, அவர்களுடைய உண்மை யான உள்ளத்தைப் பார்த்து தந்தை சதா மகிழ்ச்சி அடைகின்றார். ஆகையினால், உள்ளத்தின் சமாச்சாரத்தில் சின்னச் சின்ன விசயங்கள் என்னவெல்லாம் வருகின்றனவோ, அவை தந்தை யின் விசேஷமான நினை வினுடைய வரதானத்தின் மூலம் முடிவடைந்துவிடும். தந்தையை மகிழ்விப்பது என்றால் தந்தையின் உதவியோடு சுலபமாக மாயையை வென்றவர் ஆவதாகும். ஆகையினால், பாபாவிற்கு எதைக் கொடுத்துவிட்டீர்களோ, அது சமாச்சார ரூபத்திலோ, கடிதத்தின் ரூபத்திலோ, ஆன்மிக உரையாடலின் ரூபத்திலோ, தந்தைக்கு முன் வைத்து விட்டீர்கள், கொடுத்துவிட்டீர்கள் எனில், ஒருவருக்கு ஒரு பொருள் கொடுக்கப்படுகிறது என்றால் அதற்குப் பிறகு அது தன்னுடையதாக இருக்காது, அது பிறருடையதாக ஆகிவிடுகிறது. ஒருவேளை, பலவீனமான எண்ணத்தைக் கூட தந்தைக்கு முன்னால் வைத்துவிட்டீர்கள் என்றால் அந்த பலவீனம் உங்களுடையதாக இல்லை, நீங்கள் கொடுத்துவிட்டீர்கள், அதிலிருந்து முக்தி அடைந்துவிட்டீர்கள். ஆகையினால், நான் தந்தைக்கு முன்பு வைத்து விட்டேன் அதாவது கொடுத்துவிட்டேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். மற்றபடி அயல்நாட்டிலிருந்து ஊக்க உற்சாகத்தின் அலை நன்றாக வந்துகொண்டிருக் கிறது. குழந்தைகளுடைய தடையற்றவராக ஆகுவதற்கான ஊக்கம் மற்றும் சேவையில் தந்தையைப் பிரத்யட்சப்படுத்துவதற்கான ஊக்கத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சி அடைகின்றார்கள். நல்லது.

சதா அனாதி மற்றும் ஆதி படைப்பின் ஆன்மிக போதையில் இருக்கக்கூடிய, சதா ஒவ்வொரு விநாடியையும் உற்சவத்திற்கு சமமாகக் கொண்டாடக்கூடிய, சதா நினைவு மற்றும் சேவையின் உற்சாகத்தில் இருக்கக்கூடிய, சதா மாயையின் ஒவ்வொரு பிரச்சனையையும் விளையாட்டு எனப் புரிந்து சாட்சியாகிப் பார்க்கக்கூடிய, சதா தந்தையுடன் ஒவ்வொரு அடியிலும் துணைவனாகி நடக்கக் கூடிய, அத்தகைய சர்வ சிரேஷ்ட பிராமண ஆத்மாக்களுக்கு அலௌகீக பிறப்பினுடைய வாழ்த்துக் களுடன் கூடவே அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம் உரித்தாகுக. மிகவும் அன்பான, இதய சிம்மாசனதாரியான அனைத்து குழந்தைகளுக்கும் பாவனமான சிவஜெயந்தியின் பலகோடி மடங்கு அன்பு நினைவுகள் மற்றும் வாழ்த்துக்கள்.

வரதானம்:-

யார் சதா அனைத்து ஆத்மாக்களும் தங்களுக்கு சமமாக ஆஸ்திக்கு அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற இந்த ஆன்மிக பாவனையில் இருக்கின்றார்களோ, அவர்கள் மாஸ்டர் வள்ளல் ஆவார்கள். பிறருடைய குறை, பலவீனத்தைப் பார்க்காமல் அவர்கள் தன்னால் தாரணை செய்யப்பட்ட குணங்களினுடைய, சக்திகளினுடைய சகயோகத்தைக் கொடுப்பார்கள். இவர்கள் இப்படித்தான் என்ற இந்த பாவனைக்குப் பதிலாக இவர்களையும் தந்தைக்கு சமமாக ஆக்குவேன் என்ற இந்த சுபபாவனை இருக்க வேண்டும். இதன் கூடவே, இந்த அனைத்து ஆத்மாக்களும் ஏழ்மை, துக்கம், அசாந்தி யிலிருந்து சதா சாந்தமாக, சுக சொரூபமாக, செல்வந்தராக ஆகிவிட வேண்டும் என்ற இந்த சிரேஷ்ட மான விருப்பம் இருக்க வேண்டும், அப்பொழுதே மாஸ்டர் வள்ளல் என்று கூறமுடியும்.

சுலோகன்:-

குறிப்பு:- இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச யோகா தினம் ஆகும். பாபாவினுடைய அனைத்துக் குழந்தைகளும் மாலை 6.30 லிருந்து 7.30 மணி வரை விசேஷமாக தன்னுடைய ஆகாரி சொரூபத்தில் நிலைத்திருந்து பாப்தாதாவுடன் உயர்ந்த ஒளியாலான மலை மீது நின்று கொண்டு முழு விஷ்வத்திற்கும் பவித்திரதாவின் கிரணங்களைக் கொடுத்து இயற்கையுடன் சேர்த்து அனைத்து ஆத்மாக்களையும் சதோபிரதானம் ஆக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும்.

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top