17 March 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
16 March 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! நீங்கள் பக்தியினுடைய சுவையான விசயங்களுக்குப் பதிலாக ஆன்மிக விசயங்களை அனைவருக்கும் சொல்ல வேண்டும், இராவண இராஜ்யத்திலிருந்து விடுவிக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும்.
கேள்வி: -
சேவையில் வெற்றியைப் பிராப்தியாக அடைவதற்கு முக்கியமாக என்ன குணம் தேவை?
பதில்:-
அகங்காரமின்மை என்ற குணம். மகாவீரருக்காகக்கூட (ஹனுமான்), எங்கெல்லாம் சத்சங்கம் நடந்ததோ அங்கு சென்று காலணிகள் போடும் இடத்தில் அமர்ந்தார் என்று காண்பிக் கின்றனர். ஏனெனில், அவருக்குள் தேக அபிமானம் கிடையாது. ஆனால் இதற்கு துணிச்சல் வேண்டும். நீங்கள் எந்த விதமான ஆடையை அணிந்து கொண்டும் அந்த சத்சங்கங்களுக்குச் சென்று கேட்க முடியும். மறைமுகமான (குப்தமான) வேடத்தில் சென்று அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
ஓம் நமோ சிவாய….
ஓம்சாந்தி. இது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானுடைய மகிமையாகும். ஈஸ்வரன் என்று சொல்லுங்கள், பரமபிதா பரமாத்மா என்று சொல்லுங்கள், ஈஸ்வரன் அல்லது பகவான் என்று மட்டும் கூறுவதால் தந்தை என்று புரிந்துகொள்ள இயலாது. ஆகையால், பரமபிதா பரமாத்மா என்று சொல்ல வேண்டும். அவர் இந்த மனித சிருஷ்டியின் படைப்பாளர் ஆவார். இப்பொழுது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை வந்து என்ன கூறுகின்றார்? பதீதமான மனிதர்கள், எங்களை வந்து பாவனம் ஆக்குங்கள் என்று என்னை அழைக்கின்றனர் என்று கூறுகின்றார். பாவனம் என்றால் தூய்மை. பதீத பாவனர் என்று பகவான் தான் அழைக்கப்படுகிறார். அவர் அவசியம் வருகின்றார். பக்தி மார்க்கத்தில் பகவானை நினைவு செய்கின்றனர். எனவே, அவர் அவசியம் வருகின்றார். ஆனால், எப்பொழுது பக்தர்களுக்கு பக்தியின் பலன் கொடுக்க வேண்டுமோ அப்பொழுதே அவர் வருவார். பலன் கொடுப்பது என்றால் ஆஸ்தி கொடுப்பது, இது அவருக்கு மிகவும் சுலபமானது ஆகும். ஒரு விநாடியில் ஜீவன் முக்தி கொடுக்க இயலும். ஜனகருக்கு ஒரு விநாடியில் ஜீவன் முக்தி கிடைத்ததாகக் கூறுகின்றனர். ஒருவருடைய பெயர் மட்டும் புகழப்பட்டிருக்கிறது. ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்றால் சுகம், சாந்தி கிடைத்துவிட்டது என்று அர்த்தம். சாந்தி, சுகம் மற்றும் நீண்ட ஆயுள் வேண்டும் என்று மனிதர்கள் கூறவும் செய்கின்றனர். சிறு வயதில் யாராவது மரணமடைந்தால் அகாலமரணம் வந்துவிட்டது. முழு ஆயுளுடன் வாழவில்லை என்று கூறுகின்றனர். இப்பொழுது தந்தை என்னவெல்லாம் செய்து விட்டுச் சென்றிருக்கிறாரோ, அதற்கான மகிமைதான் உள்ளது. நொடியில் ஜீவன்முக்தி என்றால் அவசியம் அதற்கு முன்பு ஜீவன்பந்தனத்தில் இருந்திருப்பார்கள். ஜீவன்பந்தனம் என்று கலியுகத் தின் இறுதி மற்றும் ஜீவன்முக்தி என்று சத்யுகத்தின் ஆரம்பத்தைக் கூறப்படுகிறது. ஜனகர் போல் இல்லறத்தில் இருந்துகொண்டு ஜீவன்முக்தியை அடையவேண்டும் என்று கூறுகின்றார் கள்.
தந்தை புரிய வைக்கின்றார் வார்த்தைகள் கூட இரண்டு மட்டும் தான் இராஜயோகம் மற்றும் ஞானம். பாரதத்தினுடைய பழமையான இராஜயோகமோ புகழ்வாய்ந்தது. பழமையானது என்றால் முதன்முதலில் என்று அர்த்தம், ஆனால் எப்பொழுது? என்பதை மனிதர்கள் அறிய வில்லை. ஏனெனில், கல்பத்தின் ஆயுளை இலட்சக்கணக்கான ஆண்டுகள் என்று கூறிவிடு கின்றனர். பாரதத்தின் பழமையான ஞானம் மற்றும் யோகத்தை அனைவரும் விரும்புகின்றனர், இவற்றின் மூலம் பாரதம் சொர்க்கம் ஆகிறது. இப்பொழுதோ பாரதம் மிகவும் துக்கம் நிறைந்ததாக உள்ளது. முதலில் சூரியவம்ச இராஜ்யம் இருந்தது. இப்பொழுது இல்லை. பிறகு அவர்களை நினைவு செய்கின்றனர், ஆனால் அவர்களுக்கு இராஜயோகம் மற்றும் ஞானத்தை யார் கொடுத்தார்கள் என்பது தெரியாது.
ஒரு வேளை தெரிந்திருந்தால், தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைவதில் குழந்தைகளுக்கு எந்தக் கஷ்டமும் கிடையாது. தந்தையினுடையவர் ஆகிவிட்டால் ஆஸ்திக்குத் தகுதியானவர் ஆகிவிட்டோம். பிறகும் தாய், தந்தை, ஆசிரியருடைய அறிவுரைகள் கிடைக்கப்பெறுகின்றன. முக்தி என்ற ஆஸ்தி கூட தேவை, ஆகையால் குருவிடம் செல்கின்றனர். ஆனால், ஒரு பொழுதும் எவரும் ஜீவன் முக்தி கொடுக்க இயலாது. எப்பொழுது ஜீவன் பந்தனத்தின் இறுதி வருகிறதோ, ஜீவன் முக்தியின் ஆரம்பம் வருகிறதோ, அப்பொழுதே ஜீவன் முக்தியைக் கொடுக்கக்கூடியவர் வருவார். ஒரு நொடியில் ஜீவன் முக்தி அதாவது நொடியில் இராவண இராஜ்யத்திலிருந்து இராம இராஜ்யம், பதீதத்திலிருந்து பாவனம் என்பதை மட்டும் மனிதர்கள் கேட்டிருக்கின்றனர். ஆனால் எவ்வாறு என்பதை அறியவில்லை. தந்தை ஆத்மாக்களாகிய உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார். பரமஆத்மா இந்த ஆன்மிக அறிவுரைகளை வழங்குகின்றார். அங்கே மனிதர்கள் தான் சாஸ்திரங்கள் போன்றவற்றைப் படிக்கின்றனர். இந்த மகாத்மா இந்த ஞானத்தை அளித்தார் என்று கூறுகின்றனர். இங்கே பழமையான இராஜயோகம் மற்றும் ஞானத்தை 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பரமபிதா பரமாத்மா கொடுத்திருந்தார். இதன் மூலம் நீங்கள் தேவி தேவதை ஆகியிருந்தீர்கள். இப்பொழுது மறைந்துவிட்டது. ஒரு வேளை மறைந்து போகவில்லை என்றால் எவ்வாறு சொல்வது? மனிதர்கள் பதீதம் ஆக வில்லை என்றால் பதீதபாவனர் தந்தை எவ்வாறு வருவார்? பதீதமாவதற்கு 84 பிறவிகள் எடுக்க வேண்டியதாக உள்ளது. இதனுடைய முழு விஸ்தாரத்தை தந்தை புரியவைக்கின்றார். குலங் களைப் பற்றியும் புரிய வைக்கின்றார். பிரம்மா வேண்டும் என்றால் பிரம்மாவின் தந்தையும் வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகிய இந்த மூவரின் தந்தை சிவன் ஆவார். இப்பொழுது பிரம்மா மூலம் பழமையான ஞானம் அளிக்கின்றார். இதன் மூலம் விஷ்ணுபுரியின் எஜமானர் ஆகப்போகிறீர்கள் மற்றும் பிராமணரிலிருந்து தேவதை ஆகிவிடுகிறீர்கள். பிராமண தர்மத்தை சேர்ந்த மனிதனிலிருந்து நீங்கள் தேவி தேவதா தர்மத்தை சேர்ந்தவர்கள் ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். எனவே, பிரஜாபிதா பிரம்மா தேவை. கிருஷ்ணரை பிரஜாபிதா என்று கூறமுடியாது. இவ்வாறு அனைத்தையும் தலைகீழான விசயங்களாக உருவாக்கி விட்டனர். கிருஷ்ணருக்கு இத்தனை இராணிகள், குழந்தைகள் இருந்தனர் என்பது தவறு ஆகும். உண்மையில் பிரம்மா விற்கு குழந்தைகள் உள்ளனர், கிருஷ்ணருக்கு அல்ல. பிரம்மா தான் கிருஷ்ணர் ஆகின்றார். இந்த ஒரு பிறவியினுடைய குழப்பமே மனிதர்களை குழப்பிவிட்டது. கீதையின் பகவான் என்று கிருஷ்ணரைக் கூறிவிட்டு சிவனை நீக்கிவிட்டனர். பிரம்மாவிற்கு மூன்று முகங்கள் இருந்தன என்று அனைவரும் கூறுகின்றனர், படைப்பாளர் சிவனை முற்றிலும் மறைத்துவிட்டனர். படைப்பாளரே வந்து நான் எவ்வாறு தேவி தேவதா தர்மத்தைப் படைக்கின்றேன் என்று கூறுகின்றார். பரமாத்மா எவ்வாறு சிருஷ்டியைப் படைப்பார்! என்பதல்ல. ஹே! பதீத பாவனரே வந்து பதீதமானவர்களாகிய எங்களை பாவன மாக்குங்கள் என்று பரமபிதா பரமாத்மாவை அழைக்கின்றனர். இந்த சமயத்தில் இராவணனுடைய இராஜ்யம் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது என்பது உலகத்திற்குத் தெரியவே தெரியாது. இராவணனைப் பற்றி பெரிய பெரிய கதைகளை அமர்ந்து கூறுகின்றனர். இதை பக்தியினுடைய சுவையான விசயங்கள் என்று கூறப்படுகிறது மற்றும் இவை ஆன்மிக விசயங்கள் ஆகும். இந்த சமயத்தில் அனைத்து சீதைகள் அதாவது பக்தைகள் இராவணனுடைய சிறையில் உள்ளனர் மற்றும் இராவண இராஜ்யத்தில் மிகவும் துக்கமானவர்களாக உள்ளனர். இப்பொழுது அனைவரையும் இராவண இராஜ்யத்திலிருந்து விடுவிக்க வேண்டும். இப்பொழுது பாபா வந்திருக்கின்றார். குழந்தைகளே, உங்களுடைய 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைந்துவிட்டன, இப்பொழுது திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றார். துக்கத்தை நீக்கி சுகத்தை அளிப்பவரே வாருங்கள் என்று என்னைத் தான் அழைத்தீர்கள். இந்த பெயர் என்னுடையதே ஆகும். கலியுகத்தில் அளவற்ற துக்கம் உள்ளது. சத்யுகத்தில் அளவற்ற சுகம் உள்ளது. உங்களுக்கு சுகத்தின் ஆஸ்தியை அளிப்பதற்காக மீண்டும் உங்களுக்கு இராஜயோகம் மற்றும் ஞானத்தைக் கற்பித்துக் கொண்டி ருக்கின்றேன். இந்தப் பழைய உலகம் விநாசம் ஆகிவிடும். மனிதர்களோ விநாசத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். இவர்கள் தங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்ளவில்லை என்றால் சாந்தி ஏற்பட்டு விடும் என்று நினைக்கின்றனர். இத்தனை அனேக தர்மங்களுக்கு இடையில் சாந்தி எவ்வாறு ஏற்படும்? இப்பொழுது உள்ள இத்தனை அனைத்து தர்மங்களும் முன்பு கிடையாது, எப்பொழுது ஒரே ஒரு தர்மம் இருந்ததோ அப்பொழுது சுகம், சாந்தி நிறைந்த இராஜ்யம் இருந்தது என்று தந்தை புரிய வைக்கின்றார். மனதிற்கு சாந்தி எவ்வாறு கிடைக்கும் என்று இப்பொழுது அனைவரும் கேட்கின்றனர். மனம் என்றால் என்ன? – முதலில் இதைப் புரிந்துகொள்ளுங்கள். ஆத்மாவில் தான் மனம், புத்தி உள்ளது. மனிதனுடைய நாக்கு பேசுகிறது. கண் பார்க்கின்றது. மொத்தமாக சேர்த்து மனிதர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். எவராக இருந்தாலும், தந்தையை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று புரிய வைப்பது மிக எளிது ஆகும். பின்னர், மரம் மற்றும் நாடகத்தின் ஞானமும் அளிக்க வேண்டும். இதற்காக இந்த சித்திரங்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றன. மன்மனாபவ என்று கூறுவதற்கு மட்டும் இந்த சித்திரங்களின் அவசியம் இல்லை. சித்திரங்களைப் பற்றி புரியவைப்பதற்கு மணிக்கணக்காக ஆகிவிடுகின்றது. பழமை யான இராஜயோகத்தை பகவான் கற்பித்தார் மற்றும் இராஜ்யம் கிடைத்துவிட்டது. பின்னர், எந்த மனிதரும் இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதே சரியானது ஆகும். ஆனால், எதுவரை ஒருவருக்கு இது விரிவாகப் புரியவைக்கப் படவில்லையோ அதுவரை புத்தி திறக்காது. சிருஷ்டிச் சக்கரத்தை புரிந்து கொள்ளமாட்டார்கள். யாராவது நாடகம் பார்த்துவிட்டு வருகிறார்கள் என்றால் அவர்கள் புத்தியில் முதலிலிருந்து கடைசி வரை சுற்றிக்கொண்டே இருக்கும். சொல்லும்பொழுதோ, நாங்கள் நாடகத்தைப் பார்த்து விட்டு வந்திருக்கிறோம் என்று மட்டும் தான் சொல்வார்கள். நீங்களும் கூட நாங்கள் இந்த நாடகத்தைப் பற்றி அறிந்திருக்கிறோம் என்று கூறுகிறீர்கள். ஆனால், அதைப் பற்றிய விவரமோ அதிகம் உள்ளது. தந்தையிடமிருந்து சுகம் சாந்தியின் ஆஸ்தி கிடைக்கிறது, பிறகு புத்தியில் சக்கரமும் உள்ளது. 84 பிறவிகளின் சக்கரத்தை அவசியம் அடிக்கடி நினைவு செய்ய வேண்டும். இந்த ஞானம் பிராமணர்களுக்குத்தான் கிடைக்கிறது, அவர்களே பிறகு தேவதை ஆகின்றனர். பிரம்மாவிலிருந்து விஷ்ணு பிறகு விஷ்ணுவிலிருந்து பிரம்மா ஆகின்றார். நீங்கள் தேவி தேவதையாக இருந்தீர்கள். மறுபிறவி எடுத்து எடுத்து பின்னர் பிராமணர் ஆகி இருக்கிறீர்கள். எல்லைக்கு உட்பட்ட தந்தையோ படைப்பு, பாலனை மட்டும் செய்கின்றார். விநாசம் செய்வ தில்லை. விநாசம் என்றால் முழு பதீத உலகமே அழிந்து போவது. முழு இராவண இராஜ்யத் தினுடைய விநாசம் ஏற்பட வேண்டும். இல்லையெனில், இராம இராஜ்யம் எவ்வாறு ஏற்படும்! அங்கே ஒருபொழுதும் இராவணனை எரிப்பதில்லை. பக்திமார்க்கத்தின் எந்த விசயமும் ஞான மார்க்கத்தில் கிடையாது. நீங்கள் சத்யுகம், திரேதாயுகத்தில் பிராப்தியை அனுபவிக்கிறீர்கள். அது ஞானத்தின் பிராப்தி ஆகும். அற்பகால, நொடியில் அழியக்கூடிய சுகத்தை பக்தியின் பிராப்தி என்று கூறலாம். முதலில் ஒருவரை மட்டும் நினைவு செய்யும் பக்தி இருந்தது. பின்னர், பலரை நினைவு செய்து செய்து முற்றிலும் துக்கம் நிறைந்தவர் ஆகிவிட்டனர். சத்கதியை வழங்கும் வள்ளல் ஒரு தந்தை ஆவார். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். நினைவு செய்தீர்கள், மேலும் சொர்க்கத்தின் அரசாட்சி கிடைத்தது. பின்னர், நரகத்திற்கு எவ்வாறு வந்தீர்கள்? இந்த அனைத்து விசயங்களும் அமர்ந்து புரிய வைக்கப்படுகிறது. இப்பொழுது உங்களுக்கு முழு சிருஷ்டிச் சக்கரத்தினுடைய முதல், இடை, கடை பற்றி தெரிந்துவிட்டது. எனவே இந்த சமயம் நீங்கள் திரிகாலதரிசி (மூன்று காலம் அறிந்தவர்கள்) ஆகிக்கொண்டு இருக்கிறீர்கள். தேவதைகள் கூட திரிகாலதரிசியாக இல்லை என்று அவர்களுக்கு நீங்கள் கூறுவீர்கள். பின்னர் யார் இருந்தார்கள்? என்று கேட்பார் கள். ஏனெனில், சங்கமயுக பிராமணர்களை எவரும் அறியவே இல்லை. எங்கெல்லாம் சத்சங்கம் நடைபெற்றதோ அங்கெல்லாம் ஹனுமான் சென்று காலணிகளுக்கு அருகில் அமர்ந்து கொண்டார் என்று காண்பிக்கின்றனர். இப்பொழுது இந்த விசயம் மகாவீரருக்காக (ஹனுமான்) ஏன் சொல்லப்பட்டிருக்கிறது? ஏனெனில், குழந்தைகளாகிய உங்களுக்குள் எந்த தேக அபிமானமும் கிடையாது. சத்சங்கத்தில் ஏதாவது அத்தகைய விசயம் வெளிப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் பழமையான எளிய இராஜயோகம் மற்றும் ஞானத்தின் மூலம் நொடியில் ஜீவன் முக்தியை பெறவேண்டும் எனில் இன்னாரிடம் செல்லுங்கள் என்று கூற முடியும். புரிய வைக்கக்கூடியவர் மிகவும் துணிச்சலானவராக, அகங்காரமற்றவராக இருக்க வேண்டும். கொஞ்சம் கூட தேக அபிமானம் இருக்கக்கூடாது. எங்கு வேண்டுமானாலும் சென்று அமர்ந்துகொண்டு சமயம் கிடைக்கும்பொழுது பேசிவிட வேண்டும். இல்லறத்தில் இருந்துக்கொண்டே எவ்வாறு நொடியில் ஜீவன்முக்தியைப் பெற முடியும் என்று உறுதியாக இருப்பவர் சொற்பொழிவு ஆற்றுவார். பரமபிதா பரமாத்மாவைத் தவிர வேறு எவரும் கொடுக்க முடியாது. இதை மகாவீரர் தான் புரியவைக்க இயலும். கேட்பதற்குத் தடை இல்லை, இல்லறத்தில் இருந்து கொண்டே குழந்தைகளாகிய நீங்கள் மிகுந்த சேவை செய்ய முடியும். இராஜயோகத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பிரம்மா குமாரிகளிடம் செல்லுங்கள் என்று கூறுங்கள். போகப் போக உங்களுடைய பெயர் புகழடைந்து விடும். பெரும்பான்மையினர் ஆகிவிடுவீர்கள். இப்பொழுதோ குறைவாகவே இருக் கின்றீர்கள். துரத்து கின்றனர் என்ற பெயரும் அதிகம் உள்ளது. கிருஷ்ணன் துரத்தினார் என்கின்றனர், துரத்துவதற்கான விசயமே கிடையாது. ஆசிரியர் கற்பிப்பதற்காக எப்பொழுதாவது துரத்துகிறாரா என்ன! சேவை செய்யக்கூடியவர்கள் ஞானத்தை மிகவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் (விசார் சாகர் மந்தன்) மற்றும் மிகவும் துணிச்சலானவர் ஆக வேண்டும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தை களுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. அனைத்து பக்தி செய்யும் அனைத்து சீதைகளை இராவணனுடைய சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும். நொடியில் முக்தி, ஜீவன்முக்திக்கான வழியைக் காண்பிக்க வேண்டும்.
2. தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும். தேக அபிமானத்தைவிடுத்து, மகாவீரர் ஆகி சேவை செய்ய வேண்டும். விசார் சாகர் மந்தன் செய்து சேவையின் புதுப்புது யுக்திகளை உருவாக்க வேண்டும்.
வரதானம்:-
பிராமணர்கள் என்றாலே சதா மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கக் கூடியவர்கள். உள்ளத்தில் சதா தானாகவே இந்த பாடல் பாடிக்கொண்டேயிருப்பார்கள் – ஆஹா பாபா மற்றும் ஆஹா என்னுடைய பாக்கியம். உலகத்தின் எந்த வித குழப்பம் தரக்கூடிய சூழ்நிலையில் ஆச்சரிய படமாட்டார்கள், முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள். என்ன நடந்தாலும் – உங்களுக்கு புதியதல்ல. எதுவுமே புதிய விˆயமில்லை. இந்தளவு உள்ளுக்குள் ஆடாத நிலையில் இருந்து, ஏன், என்ன போன்ற குழப்பத்தில் வராத பொழுது ஆடாத அசையாதவர் என்று சொல்ல முடியும்.
சுலோகன்:-
விலைமதிப்பிட முடியாத ஞான இரத்தினங்கள் (தாதிகளின் பழைய டைரியிலிருந்து)
1. இப்பொழுது நீங்கள் தெய்வீககுணங்களின் தாரணை செய்ய வேண்டும். தைரியம் என்ற குணத்தின் தாரணை செய்வது கூட நம்பிக்கையின் மூலம் தான் ஏற்படுகிறது. மேலும் சாட்சி நிலையின் மனநிலையில் தான் குஷி இருக்கிறது. இந்த தாரணை மூலம் தான் பரமாத்மா தானாகவே ஆயிரம் அடி முன்னால் எடுத்து வைப்பார். நீங்கள் சூட்சமத்தில் இரண்டு நெருக்கத்தில் வந்தால் நான் ஸ்தூலத்தில் பல அடிகள் எடுத்து முன்னால் வருவேன் என்று பாபா சொல்கிறார். ஞானம் என்பதே சுய இலட்சியத்தில் நிலைத்திருப்பதாகும். சுயத்தில் நிலைத்திருப்பதின் மூலம் பரமாத்மா தானே முன்னால் வந்து விடுவார். பாபாவின் இந்த மகாவாக்கியம் நினைவு செய்யுங்கள். எந்தளவு தெய்வீக குணங்களின் தாரனை செய்கிறீர் களோ, அந்தளவு தான் ஒருவர் மற்றவருக்கு சுகம் தருவதற்காக நிமித்தம் ஆவீர்கள். இன்று கொடுத்தால் நாளையே கிடைத்து விடும். இன்று சேவாதாரியாக விட்டால் நாளை எஜமானராக ஆகி இராஜ்யம் செய்வீர்கள். இப்பொழுது உலகத்தின் சேவாதாரியாக இருக் கிறோம் அல்லவா.
2. ஒவ்வொருவரும் சுய சொரூபத்தில் நிலைத்திருந்து தனது இரதத்தை (உடலை) பயன்படுத்த வேண்டும். எப்படி நான் இந்த இரதத்தை நான் அமர வைக்கிறேன், நான் உணவு பரிமாறுகிறேன், நான் தூங்க வைக்கிறேன். நான் வாயின் மூலம் பேச வைக்கிறேன். ஒருவேளை நான் வாயினால் யாருக்காவது துக்கத்தை கொடுக்கிறேன் என்றால் தன்னை தானே அவமானம் செய்கிறேன். அதன் பிறகு சம்பூரண ஆத்மா சொல்கிறோம், – ஆத்மா வருத்தமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மனிதனிடத்தில் தூய்மையான ஆத்மா பிரவேசம் ஆக முடியாது. தூய்மையான ஆத்மா இருக்குமிடத்தில் துக்கம் வருத்தம் இருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் ஒருபொழுதும் மற்றவர்களுக்கு துக்கத்தை தர முடியாது. தூய்மையான ஆத்மா சுக சொரூபமாக இருக்கும். மேலும் அப்படிப்பட்ட நம்பிக்கை புத்தியுடைய ஆத்மாவிற்கு எப்பொழுதும் சுகம் சென்றடையும். அவர்கள் சாட்சாத் என்னுடைய சொரூபமாக இருக் கிறார்கள், மேலும் யார் தன்னை தன்னை ஆத்மா என்று நம்பிக்கைக் கொள்கிறார்கள், ஆனாலும் துக்கத்தை தருகிறார்கள். அவர்கள் வெறும் பண்டிதர்களாக இருக்கிறார்கள். அதனுடைய தாக்கம் மற்றவர்களின் மீது சென்றடையாது. நல்லது – ஒம்சாந்தி.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!