17 June 2022 TAMIL Murli Today | Brahma Kumaris

Read and Listen today’s Gyan Murli in Tamil 

16 June 2022

Morning Murli. Om Shanti. Madhuban.

Brahma Kumaris

இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.

இனிமையான குழந்தைகளே ! நினைவில் இருந்து தனது விகர்மங்களுக்கான பிராயச்சித்தம் செய்யுங்கள். அப்பொழுது விகர்மங்களை வென்றவர்களாக ஆகி விடுவீர்கள். அனைத்து பழைய கணக்கு வழக்குகளும் முடிந்து போய் விடும்

கேள்வி: -

எந்த குழந்தைகளின் மூலமாக ஒவ்வொரு விஷயத்தின் தியாகமும் சுலபமாக ஆகி விடுகிறது?

பதில்:-

எந்த குழந்தைகளுக்கு உள்ளிருந்து வைராக்கியம் வருகிறதோ அவர்கள் ஒவ்வொரு விஷயத்தின் தியாகத்தையும் சுலபமாகவே செய்து விடுகிறார்கள். குழந்தை களாகிய உங்களுக் குள் இப்பொழுது இதை அணிய வேண்டும், இதை சாப்பிட வேண்டும், இதை செய்ய வேண்டும்…… என்ற இந்த இச்சைகள் இருக்கக் கூடாது. தேக சகிதம் முழு பழைய உலகத்தையே தியாகம் செய்ய வேண்டும். தந்தை உங்களுக்கு உள்ளங்கை யில் சொர்க்கத்தை அளிக்க வந்துள்ளார். எனவே இந்த பழைய உலகத்திலிருந்து புத்தியோகம் அகன்று விட வேண்டும்.

♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤

பாடல்:-

மாதா ஓ மாதா.

ஓம் சாந்தி. குழந்தைகள் தங்களது தாயின் மகிமையைக் கேட்டீர்கள். குழந்தைகளோ நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையில் தந்தை இருக்கிறார் என்றால் அவசியம் தாயும் இருக்கிறார் என்று புரியப் படுகிறது. படைப்பிற்காக அவசியம் தாய் இருப்பார். பாரதத்தில் மாதாவிற்காக மிகவும் நல்ல மகிமை பாடப்படுகிறது. ஜகதம்பாவிற்கு பெரிய திருவிழா நடக்கிறது. ஏதாவது ஒரு விதத்தில் அம்மனுக்கு பூஜை நடக்கிறது. தந்தைக்குக் கூட ஆகிக் கொண்டிருக்கக் கூடும். அவர் ஜகத் அம்பா என்றால் அவர் ஜகத் பிதா ஆவார். ஜகத் அம்பா சாகாரத்தில் இருக்கிறார் என்றால் ஜகத் பிதாவும் சாகாரத்தில் இருக்கிறார். இந்த இருவரையும் படைப்பவர் என்றே கூறுவார்கள். இங்கோ சாகாரத்தில் இருக்கிறார்கள் அல்லவா? நிராகாரமானவருக்குத் தான் காட்ஃபாதர் என்று கூறப்படுகிறது. மதர் (தாய்) ஃபாதர் (தந்தை) பற்றிய இரகசியமோ புரிய வைக்கப்பட்டுள்ளது. சிறிய தாயும் இருக்கிறார். பெரிய தாயும் இருக்கிறார். மகிமை சிறிய தாயிற்கு உள்ளது. தத்து எடுக்கிறார் தான். தாயைக் கூட தத்து எடுத்துள்ளார். எனவே இவர் பெரிய தாய் ஆகி விட்டார். ஆனால் மகிமை முழுவதும் சிறிய மாதாவிற்கு உரியாதாகும்.

ஒவ்வொருவரும் தங்களது வினைப் பயனின் கணக்கு வழக்கைத் தீர்க்க வேண்டும் என்பதை யும் குழந்தைகள் அறிந்துள்ளார்கள். ஏனெனில் விகர்மாஜீத் – விகர்மங்களை வென்றவர்களாக இருந்தீர்கள். பிறகு இராவணன் விகர்மி – விகர்மம் செய்பவராக ஆக்கி விட்டுள்ளான். விக்கிரம நூற்றாண்டு கூட உள்ளது. பின் விகர்மா ஜீத் நூற்றாண்டு கூட உள்ளது. முதல் அரை கல்பம் விகர்மா ஜீத் என்று கூறுவார்கள். பிறகு அரை கல்பம் விக்கிரம நூற்றாண்டு ஆரம்பமாகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் விகர்மங்கள் மீது வெற்றி அடைந்து விகர்மா ஜீத் ஆகிறீர்கள். இருக்கக் கூடிய பாவங்களுக்கு யோக பலத்தினால் பிராயச்சித்தம் செய்கிறோம். நினைவினால் தான் பிராயச்சித்தம் ஆகிறது. குழந்தைகளே நினைவு செய்தீர்கள் என்றால், பாவங்களுக்கு பிராய சித்தமாகிவிடும். அதாவது துரு நீங்கிப் போகும் என்று தந்தை புரிய வைக்கிறார். தலை மீது ஜன்ம ஜன்மாந்திரங்களின் பாவங்களின் சுமை நிறைய உள்ளது. யார் முதல் நம்பரில் புண்ணிய ஆத்மா ஆகிறாரோ அவரே பிறகு முதல் நம்பரில் பாவ ஆத்மா கூட ஆகிறார் என்று புரிய வைக்கப் பட்டுள்ளது. அவருக்கு நிறைய உழைப்பும் (முயற்சி) செய்ய வேண்டி இருக்கும். ஏனெனில், கற்பிப்பதற்கான ஆசிரியர் ஆகிறார் என்றால், அவசியம் உழைப்பு செய்ய வேண்டி இருக்கும். நோய்கள் ஆகியவை ஏற்படுகின்றன என்றால், தங்களுடைய கர்மம் தான் என்று கூறப்படுகிறது. அநேக பிறவிகளாக விகர்மங்கள் செய்துள்ளார்கள். அது காரணமாக அனுபவிக்க வேண்டி உள்ளது. எனவே ஒரு பொழுதும் இதற்குப் பயப்படக் கூடாது. குஷியுடன் தேர்ச்சி அடைய வேண்டும். ஏனெனில், தாங்களே செய்து கொண்ட கணக்கு வழக்கு ஆகும். ஒரு தந்தையின் நினைவினால் பிராயச்சித்தம் ஆகவே வேண்டி உள்ளது. உயிருள்ள வரையும் குழந்தைகளாகிய நீங்கள் ஞான அமிருதம் பருக வேண்டும். யோகத்தில் இருக்க வேண்டும். விகர்மங்கள் ஆகி உள்ளது. அதனால் தான் இருமல் ஆகியவை ஏற்படுகின்றது. இங்கேயே எல்லா கணக்கும் முடிந்து போய் விடும் என்ற குஷி ஏற்படுகிறது. மீதம் இருந்து விட்டால் பாஸ் வித் ஆனர் ஆக மாட்டோம். அடியும் வாங்கி பின் ரொட்டி கிடைக்கிறது என்றால் கூட அவமரியாதை ஆகும் அல்லவா? அநேக விதமான துக்கங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இங்கு அநேகவிதமான துக்கங்களுக்கு அளவே இல்லை. அங்கு சுகத்திற்கு எல்லையே இருக்காது. பெயரே சொர்க்கம் என்பதாகும். கிறித்தவர்கள் ஹெவென் என்று கூறுகிறார்கள். ஹெவென்லி காட்ஃபாதர் – இந்த விஷயங்களை நீங்கள் அறிந்துள்ளீர்கள். துறவற மார்க்கத்தினரான சந்நியாசிகளோ இவை எல்லாமே காக்கை எச்சிலுக்குச் சமமான சுகம் என்று கூறி விடுகிறார்கள். இந்த உலகத்தில் உண்மையில் அப்படி தான் உள்ளது. எவ்வளவு தான் ஒருவருக்கு சுகம் இருந்தாலும் கூட அது அல்ப கால சுகமாகும். நிலையான சுகமோ முற்றிலும் இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே ஆபத்துக்கள் வந்து விடுகின்றன. ஹார்ட் ஃபெயில் ஆகி விடுகிறது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றில் பிரவேசம் செய்யும் பொழுது சரீரம் தானாகவே மண் ஆகி விடுகிறது. மிருகங்களுடைய உடல் பிறகும் பயன்படுகிறது. மனிதனினுடையது பயன்படு வதில்லை. தமோபிரதான தூய்மையற்ற (பதீதமான) உடல் எதற்கும் பிரயோஜனமில்லை. சோழிகள் போல உள்ளது. தேவதைகளின் உடல் வைரம் போன்றுள்ளது. எனவே பாருங்கள் அவர்களுக்கு எவ்வளவு பூஜை ஆகிறது. இந்த அறிவு இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குக் கிடைத்துள்ளது.

இவர் எல்லையில்லாத தந்தை ஆவார். மிகவுமே அன்பிற்குரியவர் ஆவார். அவரை பிறகு அரை கல்பம் நினைவு செய்துள்ளீர்கள். யார் பிராமணர்களாக ஆகிறார்களோ அவர்களே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெறுவதற் கான உரிமையாளர்களாக ஆகிறார்கள். உண்மையான பிராமணர்கள் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். உண்மையான கீதை படிப்பவர்களோ தூய்மையாக இருக்கவே வேண்டும். அந்த பொய்யான கீதை படிப்பவர்கள் தூய்மையாக இருப்பதில்லை. இப்பொழுது கீதையிலோ காமம் மகா எதிரி என்று எழுதப்பட்டுள்ளது. பின் சுயம் கீதையைக் கூறுபவர்கள் எங்கே தூய்மையாக இருக்கிறார்கள். கீதை அனைத்து சாஸ்திரங்களுக்கும் தாயாக இருக்கிறது. தலையாயது ஆகும். இதன் மூலம் தந்தை சோழி யிலிருந்து வைரம் போல ஆக்கி உள்ளார். இதையும் நீங்கள் புரிந்துள்ளீர்கள். கீதையைப் படிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களோ கிளிப்பிள்ளை போல படித்துக் கொண்டே இருப்பார்கள். முழு மகிமையும் ஒரே ஒருவருக்கு தான் .வேறு எந்த பொருளுக்கும் மகிமை இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரனுக்குக் கூட கிடையாது. நீங்கள் அவர்களுக்கு முன்னால் எவ்வளவு தான் தலை வணங்குங்கள், அவர்களுக்கு முன்னால் பலியாகுங்கள் அப்பொழுது கூட ஆஸ்தி கிடைக் காது. காசியில் காசி கல்வெட் (கிணற்றில் விழந்து, தலையை வெட்டிக் கொள்வது) செய் கிறார்கள் அல்லவா? இப்பொழுது அரசாங்கம் அதற்கு தடை விதித்து விட்டுள்ளது. இல்லை யென்றால், நிறைய பேர் காசி கல்வட் செய்து கொண்டிருந்தார்கள். கிணற்றில் போய் குதிப்பார்கள். ஒரு சிலர் தேவி மீது பலியாவார்கள். ஒரு சிலர் சிவன் மீது. தேவதைகள் மீது பலியாவதால் எந்த ஒரு நன்மையும் இல்லை. காளி மீது பலியா கிறார்கள். காளியை எவ்வளவு கறுப்பு கறுப்பாக ஆக்கி விட்டுள்ளார்கள். இப்பொழுதோ எல்லோரும் இரும்பு யுகத்தினராக இருக்கிறார்கள். முதலில் தங்க யுகத்தினராக இருந்தார்கள். அம்பா என்று ஒருவருக்குத் தான் கூறப்படுகிறது. பிதாவை ஒரு பொழுதும் அம்பா என்று கூறமாட்டார்கள். இப்பொழுது இது யாருக்கும் தெரியாது. ஜகத் அம்பா சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார். பிரம்மா அவசியம் பிரஜாபிதாவாகத் தான் இருப்பார். சூட்சும வதனத்திலோ இருக்க மாட்டார். சரஸ்வதி பிரம்மாவின் மகள் ஆவார் என்று புரிந்தும் இருக்கிறார்கள். பிரம்மாவிற்கு மனைவி இருப்பதாகக் கூறுவதில்லை. தந்தை புரிய வைக்கிறார். நான் இந்த பிரம்மா மூலமாக மகளான சரஸ்வதியை தத்து எடுத்துள்ளேன். மகளும் புரிந்திருக் கிறார், தந்தை தத்து எடுக்கிறார் என்று. பிரம்மாவையும் தத்து எடுத்திருக்கிறார். இது மிகவும் ஆழமான விஷயங்கள் ஆகும். இது யாருடைய புத்தியிலும் இல்லை. தந்தை உங்களுக்கு தன்னைப் பற்றிய அறிமுகத்தையும் அமர்ந்து கொடுக்கிறார். அதுவும் அவசியம் நேரிடையாகத் தானே கொடுப்பார். உந்துதல் மூலமாக கொடுப்பாரா என்ன? பகவான் கூறுகிறார் – ஹே குழந்தைகளே…. எனவே அவசியம் சாகாரத்தில் வந்தால் தானே அவ்வாறு கூறுவார் இல்லையா? நிராகார தந்தை இவர் மூலமாகக் கற்பிக்கிறார். பிரம்மா படிப்பிப் பதில்லை. பிரம்மாவிற்கு ஞானக் கடல் என்று கூறப்படுவதில்லை. ஒரே ஒரு தந்தைக்குத் தான் கூறப்படுகிறது. இது லௌகீக தந்தை படிப்பிப்பதில்லை என்பதை ஆத்மா புரிந்திருக் கிறது. பரலோகத் தந்தை வந்து கற்பிக்கிறார். அவர் மூலமாக ஆஸ்தியை எடுத்துக் கொண்டிருக் கிறோம். வைகுண்டத்திற்கு பரலோகம் என்று கூறப்படுவதில்லை. அது அமரலோகம் ஆகும். இது மரண உலகம் ஆகும். பரலோகம் என்றால், ஆத்மாக்களாகிய நாம் இருக்கும் இடம். இது பரலோகம் அல்ல. ஆத்மாக்களாகிய நாம் இந்த உலகத்திற்கு வருகிறோம். பரலோகம் என்பது ஆத்மாக்களாகிய (சரிரமில்லா) நம்முடைய உலகம். நீங்கள் இந்த பாரதத்தில் ஆட்சி புரிந்துள்ளீர்கள். பரலோகத்தில் அல்ல. பரலோகத்தின் ராஜா என்று கூறமாட்டார்கள். லோகம், பரலோகம் இனிமையானதாக இருக்கட்டும் என்று கூறுகிறார்கள். இது ஸ்தூல உலகமாகும். மேலும் பரலோகம் இனிமையானதாக ஆகி விடுகிறது. அதே பாரதம் வைகுண்டமாக இருந்தது. மீண்டும் ஆகப் போகிறது. இது மரண உலகம் ஆகும். உலகத்தில் மனிதர்கள் இருப்பார்கள். வைகுண்ட உலகத்திற்குப் போகலாம் என்கிறார்கள். தில்வாலா கோவிலில் கூட கீழே தவத்தில் அமர்ந்துள்ளார்கள். மேலே வைகுண்டத்தின் சித்திரங்களை வரைந்துள்ளார்கள். இன்னார் வைகுண்டம் சென்றார் என்று நினைக்கிறார்கள். ஆனால் வைகுண்டமோ இங்கு தான் உண்டாகிறது. மேலே அல்ல. இன்றைக்கு பதீதமாக இருக்கும் இந்த உலகம் பிறகு பாவன உலகமாக மாறி விடும். பாவன உலகமாக இருந்தது. இப்பொழுது கடந்து போய் விட்டது. எனவே பரலோகம் என்று கூறப்படுகிறது. பரே என்றால் அப்பால் சென்று விட்டது அல்லவா? பாரதம் சொர்க்கமாக இருந்தது. இப்பொழுது நரகம் ஆகும். எனவே சொர்க்கம் இப்பொழுது அப்பால் போய் விட்டது அல்லவா? மீண்டும் நாடகப்படி வாம மார்க்கத்தில் சென்று விடும் பொழுது சொர்க்கம் (பரே) – அப்பால் போய் விடுகிறது. எனவே பரலோகம் என்று கூறுகிறார்கள். இப்பொழுது நீங்கள் நாம் இங்கு வந்து புது உலகத்தில் மீண்டும் எங்களது இராஜ்ய பாக்கியத்தைப் பெறுவோம் என்று கூறுகிறீர்கள். ஒவ்வொருவரும் தங்களுக்காக முயற்சி (புருஷôர்த்தம்) செய்கிறார்கள். யார் செய்கிறார்களோ அவர்கள் அடைவார்கள். எல்லோரும் செய்ய மாட்டார்கள். யார் எழுதுவார்களோ படிப்பார்களோ அவர்கள் வைகுண்டத் தின் நவாப் அதாவது அதிபதி ஆகிடுவார்கள். நீங்கள் இந்த சிருஷ்டியை தங்கமானதாக ஆக்குகிறீர்கள். துவாரகை தங்கத்தினால் ஆகி இருந்தது. பிறகு சமுத்திரத்திற்குக் கீழே சென்று விட்டது என்று கூறு கிறார்கள் அல்லவா? பின் அதை எடுப்பதற்கு யாரும் உட்கார்ந்து கொண்டு ஒன்றும் இல்லையே? பாரதம் சொர்க்கமாக இருந்தது. தேவதைகள் ஆட்சி புரிந்து கொண்டி ருந்தார்கள். இப்பொழுதோ ஒன்றுமில்லை? மீண்டும் அனைத்தையும் தங்கத்தினுடையதாக ஆக்க வேண்டி இருக்கும். அப்படியின்றி அங்கு தங்க அரண்மனைகளை வெளியே கொண்டு வருவதால் வெளி வந்து விடும் என்பதல்ல. எல்லாமே மீண்டும் அமைக்க வேண்டி வரும். நாம் இளவரசர் இளவரசி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற போதை இருக்க வேண்டும். இது இளவரசர் இளவரசி ஆவதற்கான கல்லூரி ஆகும். அது இளவரசர் இளவரசி கள் படிப்பதற்கான கல்லூரி. நீங்கள் இராஜ்யத்திற்காக படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் முந்தைய பிறவியில் தான புண்ணியம் செய்வதால் இராஜாவின் வீட்டில் பிறவி எடுத்து, இளவரசர் ஆனார்கள். அந்த கல்லூரி எவ்வளவு நன்றாக இருக்கும். எவ்வளவு நல்ல பயிற்சி அளிப்பவர் கள் (கோச்) இருப்பார்கள். ஆசிரியர்களுக்காகவும் நல்ல பயிற்சி அளிப்பவர்கள் இருப்பார்கள். சத்யுகம் திரேதாயுகத்தில் இளவரசர் இளவரசியாக இருப்பவர் களின் கல்லூரி எவ்வளவு நன்றாக இருக்கும். கல்லூரிகளிலோ சென்று கொண்டிருப்பார்கள் அல்லவா? மொழியோ கற்றுக் கொள்வார்கள் அல்லவா? அந்த சத்யுக இளவரசர் இளவரசியின் கல்லூரி மற்றும் துவாபரத்தின் விகாரி இளவரசர் இளவரசியின் கல்லூரி பாருங்கள். மேலும் இளவரசர் இளவரசியாக ஆகக் கூடிய உங்களுடைய கல்லூரியைப் பாருங்கள் எப்படி சாதாரணமாக உள்ளது? மூன்றடி நிலம் கூட கிடைப்பதில்லை. அங்கு இளவரசர்கள் எப்படி கல்லூரிகளுக்குச் செல்வார்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அங்கு கால்நடையாக கூட செல்ல வேண்டி இருக்காது. அரண்மனை யிலிருந்து வெளியில் வந்தார்களோ இல்லையோ விமானத்தில் பறந்து சென்று விடுவார்கள். அங்கு எவ்வளவு நல்ல கல்லூரிகள் இருக்கும்! எப்படி அழகான மலர்த் தோட்டம் மாளிகைகள் ஆகியவை இருக்கும்! அங்கு இருக்கும் ஒவ்வொரு பொருளும் புதியதாக எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக முதல் தரமாக இருக்கும். 5 தத்துவங்களுமே சதோபிரதானமாக ஆகி விடும். உங்களுக்கு சேவை யார் செய்வார்கள்? இந்த 5 தத்துவங்கள் உங்களுக்காக மிகச் சிறந்த பொருட்களை உற்பத்தி செய்யும். எங்காவது எதாவதொரு மிகவும் நல்ல பழம் வெளி வந்தது என்றால், அதை ராஜா ராணிக்குப் பரிசாக அனுப்புவார்கள். இங்கோ உங்களுடைய தந்தை சிவபாபா எல்லோரையும் விட உயர்ந்தவர் ஆவார். அவருக்கு நீங்கள் என்ன உணவூட்டு வீர்கள். இவர் எந்த ஒரு பொருளினுடைய விருப்பமும் கொள்வதில்லை. இதை அணிய வேண்டும். இதை சாப்பிட வேண்டும். இதைச் செய்ய வேண்டும்…… குழந்தைகளாகிய உங்களுக்கு கூட இந்த விருப்பங்கள் இருக்கக் கூடாது. இங்கு இது எல்லாம் செய்தீர்கள் என்றால் அங்கு அது குறைந்து போய் விடும். இப்பொழுதோ முழு உலகத்தை தியாகம் செய்ய வேண்டும். தேக சகிதம் அனைத்தையும் தியாகம். வைராக்கியம் வந்து விட்டது என்றால் தியாகம் ஆகி விடுகிறது.

நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உள்ளங்கையில் சொர்க்கத்தை அளிக்க வந்துள்ளேன் என்று பாபா கூறுகிறார். பாபா நம்முடையவர் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனவே அவசியம் அவரை நினைவு செய்ய வேண்டி உள்ளது. எப்படி ஒரு கன்னிகைக்கு நிச்சயதார்த்தம் ஆகிறது அல்லது ஈடுபாடு ஆகி விட்டது என்றால், நான் அவரை நினைவு செய்வதில்லை என்று ஒரு பொழுதும் கூறமாட்டார். ஏனெனில், அது வாழ்க்கையில் இணைந்து விடுவதாக ஆகி விடுகிறது. அதே போல தந்தை மற்றும் குழந்தைகளினுடைய இணைதல் ஆகி விடுகிறது. ஆனால் மாயை மறக்க வைத்து விடுகிறது. என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் ஆஸ்தியை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். இதில் முக்தி, ஜீவன் முக்தி வந்து விடுகிறது. பிறகு ஏன் உங்கள் மூலம் இந்த தவறு ஏற்பட்டு விடுகிறது? இதில் புத்தியின் வேலை உள்ளது. வாயால் கூட எதுவும் கூற வேண்டி இருப்பதில்லை. மேலும் நிச்சயம் கொள்ள வேண்டும். தூய்மையாக இருந்து தூய்மையான உலகத்தின் ஆஸ்தியைப் பெறுவோம் என்று நாம் அறிந்துள்ளோம். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் உள்ளது. பேச வேண்டிய விஷயம் இல்லை. நாம் பாபாவினுடையவராக ஆகி உள்ளோம். சிவபாபா பதீதர்களை (தூய்மையற்ற வர்கள்) பாவனமாக ஆக்கக் கூடியவர் ஆவார். என்னை நினைவு செய்துக் கொண்டே இருங்கள் என்று கூறுகிறார். இதன் பொருளே மன்மனாபவ என்பதாகும். அவர்கள் பிறகு கிருஷ்ண பகவானுவாச என்று எழுதி விட்டுள்ளார்கள். பதீத பாவனரோ ஒரே ஒருவர் ஆவார். அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் ஒருவர். ஒருவரைத் தான் நினைவு செய்ய வேண்டும். தந்தை யாகிய என் ஒருவனை மறந்து விட்டதன் காரணமாக எத்தனை பேரை நினைவு செய்து கொண்டே இருக்கிறீர்கள் என்று கூறுகிறார். இப்பொழுது நீங்கள் என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மாஜீத் ராஜா ஆகி விடுவீர்கள். விகர்மாஜீத் ராஜா மற்றும் விக்ரமி ராஜாவினுடைய வித்தியாசம் கூட கூறினார் அல்லவா? பூஜைக்குரியவரிலிருந்து பூசாரி ஆகி விடுகிறீர்கள். கீழே வரவே வேண்டி உள்ளது. வைசிய வம்சம் பிறகு சூத்திர வம்சம். வைசிய வம்சத்தினர் ஆவது என்றால் வாம மார்க்கத்தில் வருவது. சரித்திரம் பூகோளமோ முழுமையாக புத்தியில் உள்ளது. இது பற்றிய கதைகள் கூட நிறைய உள்ளது. அங்கு மோகத் தினுடையது கூட விஷயம் இருப்பதில்லை. குழந்தைகள் ஆகியோர் மிகவும் ஆனந்தமாக இருப்பார்கள். இயல்பாகவே நல்ல முறையில் வளருவார்கள். தாச தாசியர்களோ (வேலையாட்கள்) முன்னால் இருக்கவே இருப்பார்கள். எனவே உங்களுடைய அதிர்ஷ்டத்தைப் பாருங்கள் – நாம் எப்பேர்ப்பட்ட கல்லூரியில் அமர்ந்துள்ளோம் என்றால் நாம் இங்கு படித்து வருங்காலத்தில் இளவரசர் இளவரசி ஆகிறோம். வித்தியாசத்தையோ அறிந்துள்ளீர்கள் அல்லவா? அவர்கள் கலியுக இளவரசர் இளவரசி. அவர்கள் சத்யுகத்தின் இளவரசர் இளவரசிகள்….. அவர்கள் மகாராஜா மகாராணி. அவர்கள் இராஜா இராணி. நிறைய பேருடைய பெயர்கள் கூட இலட்சுமி நாராயணர், இராதை கிருஷ்ணர் என்றுள்ளது. பிறகு அந்த இலட்சுமி நாராயணர் மற்றும் இராதை கிருஷ்ணருக்கு ஏன் பூஜை செய்கிறார்கள். பெயரோ ஒன்றே தான் அல்லவா? ஆம். அவர்கள் சொர்க்கத்தின் அதிபதியாக இருந்தார்கள். இந்த ஞானம் சாஸ்திரங்களில் இல்லை என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். யக்ஞம், தவம், தானம், புண்ணியம் ஆகியவற்றில் எந்த சாரமும் இல்லை என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து விட்டுள்ளீர்கள். நாடகப்படி உலகமோ பழையதாக ஆகவே வேண்டி உள்ளது. மனிதர்கள் அனைவருமே தமோபிரதானமாக ஆகவே வேண்டி உள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் தமோபிரதானம். கோபம் பேராசை அனைத்திலும் தமோபிரதானம். எங்களுடைய பாகத்தில் இவர்களது தலையீடு ஏன்? குண்டு வீசுங்கள்…. எவ்வளவு அடிதடி செய்கிறார்கள். தங்களுக்குள் எவ்வளவு சண்டையிடுகிறார்கள். ஒருவரையொருவர் கொலை செய்வதில் கூட தாமதிப்பதில்லை. தந்தை எப்படியாவது இறந்து விட்டால் சொத்தெல்லாம் கிடைக்குமே என்று பையன் நினைக்கிறான்…. இப்பொழுது இப்பேர்ப்பட்ட தமோபிரதான உலகத்தின் விநாசம் ஆகத்தான் போகிறது. பிறகு சதோபிரதான உலகம் வரும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:-

1. புண்ணிய ஆத்மா ஆக வேண்டும் என்றால் நினைவில் உழைப்பு(முறற்சி) செய்ய வேண்டும். எல்லா கணக்கு வழக்குகளையும் முடித்து விட்டு பாஸ் வித் ஹானர் ஆகி கௌரவத்துடன் போக வேண்டும். எனவே கர்ம கணக்கிற்கு பயப்படக் கூடாது. குஷி குஷியுடன் தீர்க்க வேண்டும்.

2. நாம் வருங்காலத்தில் இளவரசர் இளவரசி ஆகிக் கொண்டிருக்கிறோம் என்ற இந்த போதையில் எப்பொழுதும் இருக்க வேண்டும். இது இளவரசர் இளவரசி ஆவதற்கான கல்லூரி ஆகும்.

வரதானம்:-

உறுதியான ஸ்திதியில் இருப்பவர்களுக்குள் இவரும் உறுதியானவராக ஆகிவிட வேண்டும் என்ற சுப பாவனை, சுப விருப்பம் உருவாகிக் கொண்டே இருக்கும். உறுதியான ஸ்திதி உடையவர்களின் விசேஷ குணம் கருணை உள்ளமாகும். ஒவ்வொரு ஆத்மாவின் மீதும் சதா வள்ளலுக்கான பாவனை இருக்கும். அவர்களது விசேஷ பட்டமே விஷ்வ கல்யாணகாரி ஆகும். அவர்களுக்குள் எந்த ஒரு ஆத்மாவின் மீதும் வெறுப்புணர்வு, பகையுணர்ச்சி, பொறாமை அல்லது நிந்திக்கும் உணர்வு ஏற்பட முடியாது. சதா நன்மைக்கான உணர்வு இருக்கும்.

சுலோகன்:-

Daily Murli in Tamil

Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top