17 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
16 January 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைளே ! அன்பாக (பிரியத்துடன்) முரளி கேளுங்கள் மற்றும் சொல்லுங்கள், ஞான இரத்தினங்களால் தனது புத்தி என்ற பையை நிறைத்துவிடுங்கள், அப்பொழுது தான் எதிர்கால இராஜ்யத்திற்கு அதிகாரியாக ஆவீர்கள்.
கேள்வி: -
சிவபாபாவை போலாநாத் (கள்ளம் கபடமற்றவர்) என்று ஏன் அழைக்கப்படுகின்றது?
பதில்:-
ஏனெனில் சிவபாபா அனைத்து குழந்தைகளின் சீர் கெட்டத்தை ஒரு நொடியில் சீர்திருத்தம் செய்துவிடுகின்றார். இராஜா ஜனகருக்கு நொடியில் ஜீவன் முக்தி கிடைத்தது என்று கூறுகின்றார்கள், இது ஒரு ஜனகருக்கான விசயமல்ல, உங்கள் அனைவருக்கும் பாபா ஒரு நொடியில் ஜீவன் முக்தி கொடுத்துவிடுகின்றார். பாரதத்தை கெட்டுப்போன நிலையி-ருந்து சீர்செய்துவிடுகின்றார். துக்கமான குழந்தைகளை சதா காலத்திற்கும் சுகமாக ஆக்கிவிடு கின்றார், ஆகையால் அவரை அனைவரும் போலாநாத் (கள்ளம் கபடமற்றவர்) என்று கூறி நினைவு செய்கின்றார்கள். சங்கரரை போலாநாத் என்று கூறுவதில்லை.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
கள்ளம் கபடமற்றவர் ஆயினும் தனிப்பட்டவர்.
ஓம் சாந்தி! கள்ளம் கபடமற்ற பாபாவினுடைய முதல் கட்டளை யாதெனில், கள்ளம் கபடமற்றவரின் நினைவில் இருங்கள். மனிதர்களை கள்ளம் கபடமற்றவர்கள் என்று கூற முடியாது. கள்ளம் கபடமற்றவர் என்று சிவபாபாவைத் தான் கூறமுடியும். சங்கரரையும் கூட கள்ளம் கபடமற்றவர் என்று கூறமுடியாது. கெட்டுப்போனதை சரியாக்குபவர் என்றால் துக்க மானவர்களை சுகமாக்குபவர் என்று அர்த்தம், அப்படிப்பட்ட வரைத்தான் போலாநாத் என்று கூறப்படுகின்றது. கெட்டுப்போனது பாரதவாசிகளினுடையது தான் எனில் அதை சீர்திருத்தம் செய்பவரும் அவசியம் பாரதத்தில் தான் வருவார் அல்லவா! கெட்டுப்போனதை சீர்திருத்தம் செய்வதற்கான யுக்தியை நொடிப்பொழுதில் கூறிவிடுகின்றார். ஜனகருக்கும் யுக்தி கொடுக்கப் பட்டது. அவர் ஒருவருடைய கெட்டுப்போனதை மட்டும் சீர்திருத்தம் செய்வதில்லை. ஒரு வேளை ஜனகரை முன்னேற்றினார் மற்றும் அவர் ஜீவன் முக்தி அடைந்தார் எனில், அவசியம் இராஜ்யமும் இருந்திருக்கும். அவருடன் சேர்த்து அனேக பேருக்கு ஜீவன் முக்தி கிடைத் திருக்கும். பாரதம் ஜீவன் முக்தியில் இருந்தது என்று பாரதவாசிகளும் புரிந்திருக்கின்றார்கள். சொர்க்கத்தை ஜீவன் முக்தி என்று கூறப்படுகின்றது. நரகத்தை ஜீவன் பந்தனம் என்று கூறப்படுகின்றது. இது இராஜயோகமாகும். இராஜயோகத்தின் மூலம் தான் இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றது. ஒரு ஜனகருக்கான விசயமல்ல. பகவான் இராஜயோகம் கற்றுக் கொடுத்திருந்தார் எனில் இராஜ்யமும் கொடுத் திருந்தார். சத்யுகத்தின் இலட்சுமி நாராயணர் இராஜ்யத்தை எப்படி அடைந்தார்கள் என்று பார்க்கின்றார்கள். இப்பொழுது இருப்பது க-யுகம். பிரஜை, பிரஜை மீதான இராஜ்ய ஸ்தாபனை ஏற்பட்டுவிட்டது. இந்த பஞ்சாயத்து இராஜ்யத் திற்குப் பிறகு இருப்பது சத்யுகம். இலட்சுமி நாராயணர் சூரியவம்ச இராஜ்யத்தை அடைந்தார் கள் எனில் அதற்கு முந்தைய ஜென்மத்தில் அப்படிப்பட்ட காரியம் செய்திருந்தார்கள் என்பதை நீங்களே அறிந்திருக் கிறீர்கள். பிறகு, சந்திரவம்சத்தினர் வருகின்றார்கள். அந்த இராஜ்யம் கை மாறிவிடுகிறது. கீதைதான் சர்வ சாஸ்திரங்களிலும் தலை சிறந்தது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள், இதன் மூலம் மூன்று தர்மங்கள் ஸ்தாபனை ஆகின்றன. மற்ற ஒவ்வொரு தர்மங்களுக்கும் தர்ம சாஸ்திரம் என்ற ஒன்று தான் இருக்கிறது. சங்கமயுகத் தினுடைய சாஸ்திரமும் ஒன்று தான். மகிமை அனைத்தும் கீதைக்குத் தான், இதன்மூலம் அனைவருக்கும் சத்கதி ஏற்படுகின்றது. சத்கதி அளிப்பவர் ஒருவர் தான். கீதையில் ருத்திர ஞான யக்ஞத்தின் வர்ணனையும் இருக்கின்றது, இதன் மூலம் இந்த பழைய நரகத்தின் வினாசமும் ஏற்படுகின்றது மற்றும் சொர்க்க ஸ்தாபனையும் ஏற்படுகின்றது. இதில் குழப்பமடைவதற்கான விசயமே இல்லை. உலகத்தில் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் உலகத்தின் எஜமானர் ஆவார் என்று முதன் முத-ல் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்கவேண்டும் என்று பாபா புரிய வைத்திருக்கின்றார். அவர் அனைவருக்கும் தந்தை, பிறகு இந்த இலட்சுமி நாராயணர் உலகத்திற்கு எஜமானர்கள். அவர்களுக்கு அவசியம் சிவபாபா தான் இராஜ்யத்தை கொடுத்திருப்பார். இப்பொழுது இருப்பதோ க-யுகம். பாரதம் சோழிக்குச் சமமாக இருக்கின்றது, கடன் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது, எனவே தங்கத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்து கொண்டேயிருக்கிறனர். பாரதம் பிறகு வைரம் போன்று எப்படி ஆகும்? இலட்சுமி- நாராயணருக்கு சொர்க்க இராஜ்யம் கிடைத்திருக்கின்றது அல்லவா!
வசைச் சொல்லை (நிந்தனை) ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதை குழந்தைகள் நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாரதத்தில் தேவதைகளும் நிந்தனையை அடைந்தே வந்தார்கள், மற்ற தேசத்தவர்களோ மிக அதிகமாக மகிமை செய்கின்றார்கள், ஏனெனில் இவர்கள் பழமையான பாரதத்தின் எஜமானர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகள் நீங்கள் நடைமுறையில் பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள். குழந்தைகளில் யாருக்கு விசாலமான புத்தியிருக்குமோ அவர்களுக்கு தான் குஷி இருக்கும். தாரணை செய்து, மற்றவர்களையும் தாரணை செய்யவைக்கின்றவர்களே விசாலமான புத்தியுடைவர்கள் ஆவார். மற்ற சத்சங்கங்களில் எல்லாம் 5-10 ஆயிரம் பேர் தினமும் செல்கின்றார்கள், இங்கு அவ்வளவு பேர் வரவில்லையே என்று நினைக்காதீர்கள். பக்தி என்பது அவசியம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து கொண்டேதானிருக்கும். அதி-ருந்து இந்த நாற்றுகள் நடப்பட்டுக் கொண்டேயிருக்கும். யார் கல்பத்திற்கு முன் புரிந்து கொண்டார்களோ, அவர்களால் தான் இந்த விசங்களைப் புரிந்து கொள்ள முடியும். உலக மக்கள் கதை கூறுகின்றார்கள் மற்றும் கேட்பவர்கள் கேட்டுவிட்டு வீடு திரும்பிவிடுகின்றனர், அவ்வளவு தான். இங்கோ, எவ்வளவு முயற்சி செய்ய வேண்டியது இருக்கின்றது! தூய்மையாக இருப்பதில் எவ்வளவு பிரச்சனை ஏற்படுகின்றது. அரசாங்கத் தாலும் எதுவும் செய்ய முடியாது. இந்த பாண்டவ அரசாங்கம் மிகவும் மறைமுகமானது. மறைமுகமான (அண்டர்கிரவுண்ட்) சேனைகள் என்று ஒரு பெயரும் உள்ளது. நீங்கள் சக்தி சேனைகள் மிகவும் மறைமுகமானவர்கள். உங்களை யாரும் புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் அஹிம்சா சக்தி சேனைகள். இதற்கான அர்த்தத்தை யாரும் புரிந்து கொள்ள முடியாது. கீதையின் வார்த்தைகளுடைய அர்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாது. இந்த ஞானம் மறைந்து போய்விடும் என்று தந்தையே கூறுகின்றார். இலட்சுமி நாராயணரிடம் கூட இந்த ஞானம் இருக்காது. நான் எந்த ஞானத்தைக் கூறி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றேனோ, அது யாருடைய புத்தியிலும் இருக்க வில்லை. இந்த பாபா கூட கீதை போன்றவற்றை படித்திருந்தார். ஆனால் இந்த விசயங்கள் அவருடைய புத்தியில் இருக்கவில்லை. இப்பொழுது பார்த்தால், சென்டர்களும் எத்தனை திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. நடைமுறையில் தூய்மையாக இருப்பதற்கு தடைகளும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாகவும் இருந்தது. அந்த கீதாபாடசாலைகளில் தடைகளுக்கான விசயமில்லை. இங்கு நீங்கள் பிரம்மா குமாரர்கள், குமாரிகளாக ஆகின்றீர்கள். இந்த வார்த்தை கீதையிலும் இல்லை. இது கூட புரிந்து கொள்ளவேண்டிய விசயமாகும். ஒவ்வொரு மனிதரும் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள், பிரம்மா குமாரர், குமாரிகள் பாரதவாசிகள் மட்டும் அல்ல. ஆனால் முழு உலகத்தின் மனிதர்கள் அனைவரும் ஆவார்கள், பிரஜாபிதா பிரம்மாவை அனைவரும் ஆதாம் என்று கூறுகின்றார்கள். அவர் மனித சிருஷ்டியின் முதல் தலைவர் என்று அறிந்திருக் கிறார்கள். மனித குலத்தை ஸ்தாபனை செய்பவராவார். சிருஷ்டி என்பதே இல்லை, பிறகு பிரம்மா பிறந்தார், அவரின் வாயி-ருந்து மனிதர்கள் படைக்கப்பட்டார்கள், என்பதெல்லாம் கிடையாது. ஒருவேளை எந்த மனிதனும் இல்லையெனில் பிறகு முகவம்சாவளியும் படைக்கப்படமுடியாது. பிரம்மா முகவம்சாளியும், பிரம்மா கர்பத்தின் மூலமான வம்சாவளியும் இருக்க முடியாது. முழுவதுமே படைப்பு தான், அவரின் படைப்பு (நாற்றாங்கால்) ஏற்படு கின்றது. இந்த புதுப்புது விசயங்கள் எல்லாம் புரிந்து கொள்ளவேண்டியவையாகும். சிலரது புத்தியில் பதிய கால அவகாசம் எடுக்கின்றது. சிலர் ஒரு மாதத்திலேயே (புரிந்து கொண்டு) தயாராகி விடுகின்றனர். பெங்களூருவைச் சார்ந்த அங்கன்னா குழந்தைக்கு எவ்வளவு போதை அதிகரித்திருந்தது என்று பாருங்கள். நம்மிடம் 20 வருடங்களாக இருப்பவர்களுக்கும் கூட அவ்வளவு போதையில்லை. குஷியில் ஆடிக்கொண்டிருந்தார். பகவான் கிடைத்துவிட்டார், குஷிக்கான விசயம் அல்லவா! பகவான் வந்து மாயாவிடமிருந்து பாதுகாப்பு அளிக் கின்றார். பிறகு சொர்க்க இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கின்றார். பாபா மிகவும் தெளிவாகப் புரியவைக்கின்றார். நான் இந்த சாதாரண உடல் மூலம் குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் அதே சகஜ இராஜயோகம் மற்றும் சிருஷ்டிச் சக்கரத்தின் ஆதி மத்திய மற்றும் இறுதியின் ஞானத்தை கற்றுத் தருகின்றேன் வாருங்கள், நாங்கள் உங்களுக்கு சத்யுகத்தி-ருந்து க-யுகம் வரையிலான வரலாறு மற்றும் இப்பொழுது மீண்டும் எப்படி சத்யுகம் வரப்போகின்றது என்பதையும் கூறுகின்றோம் என்று நீங்கள் கூறமுடியும். அவசியம் கற்றுக்கொடுப்பவரும் இருக்க வேண்டும். நமக்கு கற்றுக் கொடுப்பதனால் தானே நாம் புரியவைக்கமுடிகின்றது அல்லவா! மற்றபடி கீதை கூறுபவர்கள் இருக்கின்றார்கள், அவர்களிடமிருந்து நீங்கள் அதிகமாக கேட்டிருக்கின்றீர்கள். அதிகமான சொற்பொழிகள் நடந்து கொண்டிருக்கின்றன, ஆனால் அவர்கள் இந்த தர்மத்தைச் சாராதவர்கள் என்பதால் இந்த பக்கம் ஈர்க்கப்படுவதில்லை. எப்பொழுது உங்களின் பிரபாவம் ஏற்படுமோ அப்பொழுது வளர்ச்சி ஏற்படும். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டே யிருக்கும். பாரதம் எவ்வளவு ஏழ்மையானதாகி விட்டது என்று நீங்கள் அறிந்துள்ளீôர்கள். மனிதர்கள் பசியால் அதிகமாக இறக்கின்றார்கள். துக்கப்படுகின்றார்கள். துக்கத்தி-ருந்து விடுவிக்க வாருங்கள் என்று பகவானிடம் பக்தி செய்கின்றார்கள். சுகமான சிருஷ்டி எப்பொழுது இருக்கும் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இங்கு குழந்தைகளாகிய உங்களின் (புத்தி என்ற) பை இந்த அழிவற்ற ஞான இரத்தினங்களால் நிறைந்து கொண்டிருக்கின்றது. இதற்கு முன்பும் அனைவரும் கேட்டுக்கொண்டும், கூறிக்கொண்டும் இருந்தீர்கள். ஆனால் அதில் பை நிறைவது என்ற கேள்வியே இல்லை. இப்பொழுது உங்களுடைய பை மட்டும் தான் நிறைந்து கொண்டிருக்கின்றது. மேலும் யார் ஒ-நாடாவில்(டேப்) கேட்பீர்களோ, முரளி படித்து அல்லது கேட்டிருப்பீர்களோ அவர்களின் பை நிறைந்து கொண்டிருக்கின்றது.
நீங்கள் சிவசக்தி சேனை, பாரதத்தின் பையை நிறைக்ககூடியவர்கள். பாரதம் மிகவும் பணக்கார நாடாக ஆகிவிடும். ஆனால் யார் பையை நிறைக்கின்றார்களோ, அவர்கள் மட்டும் தான் இராஜ்யம் செய்வார்கள். பாரதம் பொற்குருவியாக இருந்தது, மீண்டும் ஆகிவிடும். அனைவரும் சுகமாக இருப்பார்கள். ஆனால் இன்று பாரதத்தில் எத்தனை கோடி பேர் இருக்கின்றார்கள். இவ்வளவு பேர் அங்கு இருக்கமாட்டார்கள். யார் பையை நிறைக்கின்றார்களோ, இராஜ்ய பாக்கியத்தையும் அவர்களே அடைவார்கள். அது எப்படி இருக்கும்? என்று குழப்பமடைவதற் கான விசயமேயில்லை. இந்த இலட்சுமி நாராயணரைப் பார்த்தீர்கள் அல்லவா! இவர்கள் சத்யுகத்தின் எஜமானர்கள் அல்லவா. சொர்க்கத்தைப் படைப்பவர் சிவபாபா மற்றும் இந்த இலட்சுமி நாராயணர் சத்யுகத்தின் எஜமானர்கள். அவசியம் முந்தைய ஜென்மத்தில் முயற்சி செய்திருப்பார்கள். முந்தைய ஜென்மம் சங்கமயுகத்தில் இருந்திருக்கும். சங்கமம் கல்யாணக்காரியானது அல்லவா, ஏனெனில் சங்கமயுகத்தில் தான் உலகம் மாறுகின்றது. அப்படியானால் கட்டாயமாக க-யுகம் மற்றும் சத்யுகத்திற்கு மத்தியில் தான் ஞானம் கொடுத் திருப்பார். அதேபோன்று இப்பொழுது மீண்டும் கொடுத்துக்கொண்டிருக்கின்றார். பிறகு நிராகார மான பரமாத்மா எப்படி வந்து இராஜயோகத்தை கற்றுக் கொடுத்திருப்பார் என்று யாரேனும் கேட்கலாம். அப்பொழுது நீங்கள் திருமூர்த்தியைக் காட்டுங்கள். பிரம்மா மூலம் ஸ்தாபனை. எனவே யார் ஸ்தாபனை செய்வார்களோ, பாலனையும் அவர்களே செய்வார்கள். எப்படி கிறிஸ்து ஸ்தாபனை செய்தார் பிறகு பாலனைக்காக போப்பாக அவரே ஆகவேண்டியது இருக்கும். யாரும் திரும்பப்போக முடியாது. பாலனை கட்டாயம் செய்தாக வேண்டும். மறு ஜென்மம் எடுத்துத்தான் ஆகவேண்டும், இல்லையெனில் சிருஷ்டி எப்படி முன்னேறும்? சத்யுகம் திரேதா யுகத்தில் முத-ல் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது எனில், அனைவரைக்காட்டிலும் அதிக மக்கள்தொகை இவர்களுடையது இருந்திருக்க வேண்டும். பிறகு கிறிஸ்தவர்களுடையது எப்படி அதிகமாக இருக்கும்? பிறகு லட்சக்கணக்கான வருடங்களுக்கான விசயமும் இல்லை. நமது வம்சத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த விசயங்களைப் புரிந்து கொள்வார்கள். மற்றவர் களுக்கு உள்ளம் வரை அம்பு தைக்காது. இது ஞானம் என்ற அம்பு அல்லவா! எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள், அவர்களுக்கு ஞான அம்பு போடலாம் என்று பாபா கூறுகின்றார். பிராமணக்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றால் அம்பு தைக்கும். யுத்தத்தில் யாதவர்களும் கௌரவர்களும் மாண்டார்கள் என்று சாஸ்திரத்தில் காட்டுகிறார்கள். பாண்டவர்கள் ஐவர் இருந்தார்கள். பிறகு இமயமலையில் சென்று கரைந்து இறந்துவிட்டார்கள். இப்பொழுது அப்படியெல்லாம் இருக்க முடியாது. தற்கொலை என்பது மகாபாவம் என்று கூறப்படுகின்றது. ஆத்மாவை ஒருபொழுதும் கொலை செய்ய முடியாது. ஆத்மா தானே தனது சரீரத்தை அழிக்கின்றது. இப்பொழுது பாண்டவர் களுக்கு ஸ்ரீமத் கொடுப்பவர் பரமாத்மாவாக இருக்கையில், அவர்கள் போய் மலைகளில் கரைந்து போகின்றார்கள் என்பதே இருக்க முடியாது. நல்லது அவர்கள் ஐவர் இருந்தார்கள். மற்ற பாண்டவர்கள் எங்கு போனார்கள்? சேனைகளைக் காட்டவே இல்லை. வினாசம் எப்படி ஏற்படும் என்று நீங்கன் அறிவீர்கள். நீங்கள் பார்க்கவும் செய்வீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு சாட்சாத்காரமும் அதிகமாகக் கிடைக்கும். ஆரம்பத்தில் உங்களுக்கு அதிக காட்சி கிடைத்தது. ஒருசமயம் இலட்சுமிக்கும், சில சமயம் நாராயணருக்கும் அழைப்பு விடுத்தீர்கள். எத்தனை காட்சிகள் கிடைத்தன? பிறகு இறுதி சமயத்தில், பிரச்சனைகள் இருக்கும் பொழுது மீண்டும் உங்களுக்குக் காட்சி கிடைக்கும். குழப்பங்கள் ஏற்படும் பொழுது குழந்தைகள் நீங்கள் வந்து இங்கு கூடுவீர்கள், ஆகையால் மதுவனத்தில் அதிகமான கட்டடங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். பிறகு குழந்தைகள் உங்களை இந்த காட்சியின் மூலம் மகிழ்ச்சியில் ஆழ்த்திக்கொண்டிருப்பார்கள், ஆனால் அனைவரும் வந்து விடுவது என்பது சித்தி வீட்டிற்குவ் செல்வது போல் அல்ல. யார் நல்ல குழந்தைகளோ, பாபாவிற்கு உதவியாளர்களோ அவர்களே இங்கு வருவார்கள். ஒருவேளை பாண்டவர்கள் கரைந்துவிடுகின்றார்கள் என்ற விசயம் இருந்தால் பிறகு ஏன் கட்டடங்கள் எல்லாம் உருவாக்கவேண்டும்! எந்த விசயங்களிலும் குழப்பமிருந்தால் அதிக வருடங்கள் ஈடுபாட்டிலுள்ள (மூத்த) குழந்தைகளிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம். இல்லையெனில் இந்த பிரம்மா பாபா இருக்கின்றார். இவரும் கூறவில்லை எனில் பெரிய தந்தை (சிவபாபா) இருக்கின்றார். இப்பொழுது அதிகமான விசயங்கள் இன்னும் புரிந்து கொள்ள வேண்டியது உள்ளது. முழு சக்கரத்தின் இரகசியத்தை பாபா புரியவைத்துக் கொண்டிருக் கின்றார், எத்தனை கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இன்னும் நேரமிருந்தால் அவசியம் மேலும் புரியவைக்க வேண்டியது வரும். பரமபிதா பரமாத்மா படிப்பிக்கின்றார் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்ற மூல விசயத்தை முத-ல் எழுதவைக்க வேண்டும், இந்த நம்பிக்கையை இரத்தத்தால் எழுதவைக்கவேண்டும். வெறுமனே எழுதுவதால் மட்டும் மாறிவிடுவார்கள் என்றல்ல. நாங்கள் அப்படியே எழுதிவிட்டோம் என்று கூறுகின்றார்கள். அதிகமாக யாரிடமும் மூளைக் கசக்கிக் கொள்ளவேண்டாம். பகவானின் மகாவாக்கியம் – பகவான் என்று நாங்கள் சிவபாபாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்று கூறுங்கள். அவர் ஞானக்கடல், சத்தியமான உள்ளம் கொண்டவர். அவருக்கென்று எந்த சரீரமும் கிடையாது. அவசியம் சாதாரண உடலை ஆதாரமாக எடுத்திருப்பார் அல்லவா! எனவே, மனதால் என்னை நினைவு செய் என்று தந்தை முதன் முத-ல் கூறுகின்றார். தேகத்தின் அனைத்து தர்மங்களை விடுத்து என்னை நினைவு செய்யுங்கள், அப்பொழுது விகர்மம் வினாசம் ஆகும் மற்றும் என்னிடம் வந்துவிடுவீர்கள். சக்கரத்தை நினைவு செய்தால் நீங்கள் சக்கரவர்த்தி இராஜாவாக ஆவீர்கள். பாபா எத்தனை இனிமையானவர் மேலும் பாருங்கள். நம்மையும் எவ்வளவு இனிமையாக ஆக்குகின்றார். சத்யுகத்தின் நினைவுச்சின்னங்கள் உள்ளன அவை, மீண்டும் திரும்ப அவசியம் ஏற்படும். க-யுகம் நடக்கிறது, இப்பொழுது நீங்கள் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். வினாசம் எதிரிலேயே நிற்கின்றது. வேறு என்ன சான்று அளிப்பது? நல்லது
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்காக தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிக தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1. பாப்சமான் ஆகவேண்டும். பகவான் வந்து மாயாவிடமிருந்து நம்மை பாதுகாக்கின்றார், இந்த குஷியில் இருக்கவேண்டும்
2. எந்த விசயத்திலும் குழப்பமடைய வேண்டாம், நல்ல குழந்தையாகி தந்தையின் முழுமையிலும் முழுமையான உதவியாளர் ஆகவேண்டும்.
வரதானம்:-
எப்படி பிரம்மா பாபா எதை தனது சம்ஸ்காரமாக மாற்றினாரோ, அதை அனைத்தும் குழந்தைகளுக்கும் இறுதி நேரத்தில் நினைவு படுத்தினார். – நிராகாரி, நிர்விகாரி, மற்றும் நிர் அகங்காரி – எனவே இந்த பிரம்மா பாபாவின் சம்ஸ்காரம் தான் பிராமணர்களின் இயல்பான சம்ஸ்காரமாக இருக்க வேண்டும். எப்பொழுதும் இவரின் சிரேஷ்ட சம்ஸ்காரங்களை முன்னால் வையுங்கள். மூன்று சம்ஸ்காரகளும் இமர்ஜ் (வெளிபடுகிறதா) முழு நாளில் ஒவ்வொரு காரியம் செய்யும் பொழுதும் சோதனை செய்யுங்கள். இவரின் சம்ஸ்காரங்களை தாரணை செய்வதன் மூலம் சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றம் ஆகிவிடும்.
சுலோகன்:-
அன்பில் லயித்திருக்கும் நிலையை (லவ்லின் ஸ்திதி) அனுபவம் செய்யுங்கள்.
பாபாவிற்கு குழந்தைகளாகிய உங்களிடம் எந்தளவு அன்பு இருக்கிறதோ, அது வாழ்க்கையின் சுகம் – சாந்தியின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்துவிடும். பாபா சுகம் மட்டும் கொடுப்பதில்லை, ஆனால் சுகத்தின் பொக்கிஷத்திற்கு (கிடங்கு) எஜமானராக மாற்றிவிடுகிறார். கூடவே உயர்ந்த அதிர்ஷ்ட ரேகையை உருவாக்கக் கூடிய பேனாவையும் கொடுத்து விடுகிறார், எந்தளவு வேண்டுமோ, அந்தளவு பாக்கியத்தை உருவாக்க முடியும் – இது தான் பரமாத்மாவின் அன்பாக இருக்கிறது. இந்த அன்பில் மூழ்கியிருங்கள்.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!