15 January 2022 TAMIL Murli Today | Brahma Kumaris
Read and Listen today’s Gyan Murli in Tamil
14 January 2022
Morning Murli. Om Shanti. Madhuban.
Brahma Kumaris
இன்றைய சிவன் பாபா சாகர் முரளி, பாபடா, மதுபன்। Brahma Kumaris (BK) Murli for today in Tamil . Visit Daily Murli in Tamil to read and listen daily murlis.
இனிமையான குழந்தைகளே! இந்த தாதா (பிரம்மா) ஆச்சரியமான தபால் நிலையம் ஆவார், இவர் மூலம் தான் உங்களுக்கு சிவபாபாவின் கட்டளைகள் கிடைக்கிறது.
கேள்வி: -
பாபா குழந்தைகளுக்கு எந்த விசயத்தில் எச்சரிக்கை கொடுக்கின்றார்? ஏன்?
பதில்:-
பாபா கூறுகின்றார் லி குழந்தைகளே! எச்சரிக்கையாக இருங்கள், மாயையிடம் அடி வாங்காதீர்கள், ஒருவேளை மாயையிடம் அடி வாங்கிக் கொண்டே இருந்தீர்கள் எனில் உயிர் நீங்கி விடும் மேலும் பதவியும் அடைய முடியாது. ஈஸ்வரனிடம் பிறப்பு எடுத்து, பிறகு மாயை யிடம் அடி வாங்கி இறந்து விட்டீர்கள் எனில் இந்த மரணம் மிகவும் அனைத்தையும் விட மிகவும் தரக்குறைவாகும். மாயை குழந்தைகளின் மூலம் தலைகீழான காரியங்களை செய்விக் கும் போது பாபாவிற்கு மிகுந்த கருணை ஏற்படுகிறது, அதனால் தான் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கின்றார்.
♫ ஆடியோவைக் கேளுங்கள் (audio)➤
பாடல்:-
உன்னை அழைப்பதற்கு ……
ஓம்சாந்தி. எப்போது மனிதர்கள் துக்கமானவர்களாக ஆகிவிடுகிறார்களோ அந்த நேரம் தான் தந்தையை அழைக்கின்றனர். ஏனெனில் விகாரிகளாக ஆகிவிடுகின்றனர். எதனால் துக்கமடை கிறோம்? என்பதையும் தமோ பிரதான மனிதர்கள் அறியவில்லை. 5 விகாரங்கள் என்ற இராவணன் தான் துக்கமானவர்களாக ஆக்குகிறது. நல்லது, அதன் இராஜ்யம் எவ்வளவு காலத் திற்கு நடைபெறும்? கண்டிப்பாக உலகம் முடியும் (மாறும்) வரை நடைபெறும். இப்போது இராவண இராஜ்யம் என்று கூறுவோம். இராம இராஜ்யம், ராவண இராஜ்யம் என்ற பெயர் மிகவும் பிரபலமானது. இராவண இராஜ்யம் பற்றி பாரதத்தில் தான் அறிவார்கள். எதிரியாகவும் பாரதத்திற்குத் தான் இருக்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது. எப்போது தேவதைகள் விகார மார்க்கத்திற்குச் சென்றார்களோ அப்போதிலிருந்து பாரதத்தை இராவணன் தான் வீழ்ச்சியடைய செய்திருக்கின்றான். விகாரமற்ற பாரதம் எப்படி விகாரமானதாக ஆயிற்று? என்பதை உலகத் தினர் அறியவில்லை. பாரதத்திற்குத் தான் மகிமை இருக்கிறது. பாரதம் சிரேஷ்டமானதாக இருந்தது, இப்போது தாழ்வாக இருக்கிறது. எப்போது தாழ்வானதாக (தமோ பிரதானம்) ஆக ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே பூஜாரி பக்தர்களாக ஆகிவிட்டனர். அப்போதிலிருந்தே பகவானை நினைவு செய்து வந்தீர்கள். ஒவ்வொரு கல்பத்தின் சங்கயுகத்தில் தந்தை வரு கின்றார் என்பது புரிய வைக்கப் படுகிறது. கல்பத்திற்கு 4 யுகங்கள் உள்ளன, ஆனால் ஐந்தாவது சங்கமயுகம் பற்றி யாருக்கும் தெரியாது. பல சங்கமயுகங்கள் உள்ளன என்று அவர்கள் கூறிவிட்டனர். யுகத்திற்கு யுகம் என்று எத்தனையோ சங்கமங்கள் உள்ளன என்று கூறு கின்றனர். சத்யுகத்திலிருந்து திரேதா, திரேதாவிலிருந்து துவாபரம், துவாபரத்திலிருந்து கலியுகம். ஆனால் கல்பத்தின் சங்கமத்தில் தந்தை வந்தே ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். இதை கல்யாணகாரி புருஷோத்தம சங்கமயுகம் என்று கூறுகிறோம். இந்த நேரத்தில் தான் மனிதர்கள் விகாரத்திலிருந்து தூய்மையானவர்களாக ஆகின்றனர். கலியுகத்திற்குப் பிறகு சத்யுகம் வருகிறது. சத்யுகத்திற்குப் பிறகு என்ன இருக்கும்? திதோ வருகிறது. சூரியவம்சி லெட்சுமி நாராயணனின் இராஜ்யம் பிறகு சந்திரவம்சியாக ஆகிறது. திரோதாவில் இராம இராஜ்யம், சத்யுகத்தில் லெட்சுமி நாராயணனின் இராஜ்யம். லெட்சுமி நாராயணனுக்குப் பிறகு இராமர் சீதையின் இராஜ்யம் வருகிறது. சத்யுகம்லிதிரேதாவின் இடையில் அவசியம் சங்கமம் இருக்கும். அவர்களுக்குப் பிறகு இப்ராஹிம் வருகிறார், அவர் அந்த பக்கம் இருக்கிறார், அவருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. பிறகு துவாபர யுகத்தில் பலர் ஆகி விடுகின்றனர். இஸ்லாமியர்கள், பௌதர்கள் பிறகு கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவ தர்மம் நிறுவப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆயிற்று. சிலர் சிறிது அதிகமாகவே கணக்கு சொல் கின்றனர். இப்போது சங்கமத்திற்குப் பிறகு சத்யுகத்திற்குச் செல்ல வேண்டும். இந்த சரித்திர பூகோளம் புத்தியில் இருக்க வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் என்று பாடப் பட்டிருக்கிறது. அவரைத் தான் தாயும் நீயே, தந்தையும் நீயே என்று கூறப்படுகிறது. இது உயர்ந்ததிலும் உயர்ந்த பகவானின் மகிமையாகும். நீங்கள் தாய், தந்தை என்று யாரைக் கூறுகிறீர்கள்? என்பதை யாரும் அறியவில்லை. இன்றைய நாட்களில் எந்த மூர்த்தியின் முன் சென்றாலும் நீங்கள் தான் தாய், தந்தை …….. என்று கூறுகின்றனர். தாய், தந்தை என்று யாரைக் கூறுவது? லெட்சுமி நாராயணனையா? பிரம்மா, சரஸ்வதியையா? சங்கர், பார்வதியையா? இவ்வாறு ஜோடியாக காண்பிக்கின்றனர். ஆக யாரை தாய், தந்தை என்று கூற வேண்டும்? ஒருவேளை பரமாத்மா தந்தை எனில் அவசியம் தாயும் தேவை. தாய் என்று யாரைக் கூறுவது? என்பதையும் அறியவில்லை. இது தான் ஆழமான விசயம் என்று கூறப்படுகிறது. படைப்பவர் இருக்கின்றார் எனில் பிறகு பெண்ணும் தேவை. மகிமை ஒருவருக்குத் தான் செய்வோம் அல்லவா! சில நேரம் பிரம்மாவிற்கு, சில நேரம் விஷ்ணுவிற்கு, சில நேரம் சங்கருக்கு என்று கிடையாது. மகிமை ஒரே ஒருவருக்குத் தான் செய்கின்றனர். பதீத பாவனனே வாருங்கள் என்று பாடவும் செய்கின்றனர் எனில் அவசியம் கடைசியில் வருவார். யுகத்திற்கு யுகம் ஏன் வரப் போகிறார்? தூய்மை இல்லாமல் ஆவது கடைசியில் தான். தூய்மை இல்லாதவர்களை தூய்மை ஆக்கக் கூடியவர் தந்தை, அவர் அவசியம் இந்த அசுத்தமான உலகிற்கு வர வேண்டி யிருக்கிறது, அப்போது தான் வந்து தூய்மை ஆக்க முடியும். அங்கேயே அமர்ந்து ஆக்கி விட முடியாது. சத்யுகம் தூய்மையான உலகம், கலியுகம் தூய்மையற்ற உலகமாகும். பழைய உலகை புதிதாக்குவது ஒரு தந்தையின் காரியமாகும். புது உலக ஸ்தாபனை மற்றும் பழைய உலக விநாசம். எதை பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை செய்கிறார்? விஷ்ணுபுரியை. பிரம்மா மற்றும் பிராமணர்களின் மூலம் ஸ்தாபனை ஏற்படுகிறது. பிராமணர்களின் மூலம் யக்ஞம் உருவாக்கப்படுகிறது எனில் அவசியம் பிராமணர்களுக்குத் தான் கற்பித்திருக்க வேண்டும். பாபா பிரம்மா மற்றும் பிரம்மா வாய்வழி வம்சத்தினர்களாகிய பிராமணர்களுக்கு இராஜயோக படிப்பை கற்பிக்கிறார் என்று நீங்கள் எழுது கிறீர்கள். அதில் சரஸ்வதியும் வந்து விடுகிறார். பிராமணர்களின் இந்த குலம் மிகவும் ஆச்சரியமானது. சகோதரன், சகோதரி ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள முடியாது. யாராவது வருகின்றார் எனில் பரம்பிதா பரமாத்மா விற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? என்று கேட்டு அவர்களுக்கு அறிமுகம் கொடுக்கிறோம். தந்தை என்று கூறவும் கூறுகிறோம், அவர் தந்தை, இவர் தாதா. அவரிட மிருந்து ஆஸ்தி கிடைக்கிறது, அவர் தான் ஞானக் கடலானவர், எல்லையற்ற தந்தையாவார். பிரம்மாவின் மூலம் கொடுக்கின்றார். இது ஈஸ்வரிய மடியாகும். பிறகு தெய்வீக மடி கிடைக்கும். இதை புரிய வைப்பதும் எளிதாகும். நான்கு யுகங்களின் கணக்கும் சமமாக இருக் கிறது. தூய்மையான நிலையிலிருந்து தூய்மை இல்லாமல் ஆக வேண்டும். 16 கலை களிலிருந்து 14 கலைகளாக, பிறகு 12 கலைகளாக ஆக வேண்டும்.
நீங்கள் முதன் முதலில் அனைவருக்கும் தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பாபா விடம் யாராவது புதியவர்கள் சந்தித்தால் எதுவும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவர் ஆச்சரியமானவர், பாப்தாதா இணைந்திருக்கின்றனர். குழந்தைகளும் நான் யாருடன் உரை யாடிக் கொண்டிருக்கிறேன் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். புத்தியில் சிவபாபா தான் நினைவிற்கு வர வேண்டும். நான் சிவபாபாவிடம் செல்கிறேன். நீங்கள் இந்த பாபாவை (பிரம்மாவை) ஏன் நினைவு செய்கிறீர்கள்? சிவபாபாவை நினைவு செய் வதன் மூலம் உங்களது விகர்மங்கள் விநாசம் ஆகிவிடும். போட்டோ எடுத்தாலும் புத்தி சிவபாபாவின் பக்கம் இருக்க வேண்டும் – இவர் பாப்தாதா, இருவரும் இருக்கின்றனர். சிவபாபா இருப்பதால் தான் இவர் தாதாவாகவும் இருக்கின்றார். பாப்தாதாவுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறீர்கள். சிவபாபாவை இந்த தாதாவின் மூலம் சந்திக்க வந்திருக்கிறீர்கள். ஆக இவர் அஞ்சல் நிலையமாக ஆகிவிடுகிறார். இவர் மூலம் சிவபாபாவின் கட்டளைகளை பெற வேண்டும். இது மிகவும் ஆச்சரியமான விசயமாகும். எப்போது உலகம் பழையதாக ஆகிறதோ அப்போது பகவான் வர வேண்டியிருக்கிறது. துவாபரத்திலிருந்து உலகம் தூய்மை இழக்க ஆரம்பித்து விடுகிறது. கடைசியில் முழு உலகமும் தூய்மை இல்லாமல் ஆகி விடுகிறது. சித்திரங்களின் மூலம் புரிய வைக்க வேண்டும். சத்யுகம், திரேதாவை சொர்க்கம் என்றும், பாரடைஸ் என்றும் கூறப்படுகிறது. உலகம் எப்போதும் புதியதாகவே இருந்து விடாது. உலகம் எப்போது பாதி முடிவடைந்து விடுகிறதோ அது பழையது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளின் வாழ்க்கையும் பாதி பழையதாக, பாதி புதியதாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் சரீரத்தின் மீது எந்த நம்பிக்கையும் கிடையாது. இது பாதி கல்பத்திற்கான முழு கணக்காகும், இதில் எந்த மாற்றமும் ஏற்பட முடியாது. உரிய நேரத்திற்கு முன்பாகவே எதையும் மாற்றி விட முடியாது. பொருட்கள் இடையில் உடைந்து விடலாம். ஆனால் இந்த பழைய உலக விநாசம் மற்றும் புது உலக ஸ்தாபனையில் முன் பின் ஏற்படவே முடியாது. கட்டடம் எப்போது வேண்டுமென்றாலும் உடைந்து விடலாம், உத்திரவாதம் கிடையாது. ஆனால் இந்த சக்கரம் அநாதியானது, அழிவற்றது. சரியான நேரப்படி சுற்றிக் கொண்டே இருக்கிறது. பழைய உலகிற்கு மிகச் சரியான நேரம் (ஆயுள் காலம்) இருக்கிறது. அரைக் கல்பம் இராம இராஜ்யம், அரைக் கல்பம் இராவண இராஜ்யமாகும், முன் பின் ஏற்பட முடியாது. இப்போது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் முழு திரிலோகமும் (மூன்று லோகங்களும்) வந்து விட்டது. நீங்கள் திரிலோகத்திற்கே எஜமானராக இருப்பவர் மூலம் ஞானம் அடைந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களது இந்த நேரத்திற்கான பதவி மிகவும் உயர்ந்ததாகும். நீங்கள் இந்த நேரத்தில் திரிலோகிநாத் ஆக இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மூன்று லோகங்களின் ஞானத்தையும் அறிந்திருக்கிறீர்கள். மூலவதனம், சூட்சுமவதனம், ஸ்தூலவதனத்தை சாட்சாத்காரம் செய்கிறீர்கள். குழந்தைகளின் புத்தியில் முழு ஞானமும் இருக்கிறது. பாபா திரிலோகிநாத், மூன்று காலங்களையும் அறிந்தவர். உங்களுக்கு ஞானம் கொடுக்கிறார் எனில் நாமும் மாஸ்டர் திரிலோகிநாத் ஆகிவிடு கிறோம். எந்த ஞானம் பாபாவிடம் இருக்கிறதோ அது இப்போது உங்களிடத்திலும் வரிசைக் கிரமமான முயற்சியின் படி இருக்கிறது. பிறகு சத்யுகத்தில் நீங்கள் உலகிற்கு எஜமானர்களாக ஆவீர்கள். அங்கு உங்களை திரிலோகிநாத் என்று கூறமாட்டார்கள். லெட்சுமி நாராயணனிடம் மூன்று கால ஞானம் இருக்காது. உலக கால சக்கரத்தின் ஞானம் இருக்காது. நீங்கள் ஞானம் நிறைந்த இறைவனின் குழந்தைகள். அவர் கற்பித்து உங்களை தனக்குச் சமமாக ஆக்கியிருக்கின்றார். நாம் மீண்டும் விஷ்ணுபுரிக்கு எஜமானர்களாக ஆவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நேரத்தில் எதுவெல்லாம் கடந்து முடிந்ததோ அதன் ஞானமும் உங்களிடம் இருக்கிறது. மனிதர்கள் எல்லைக்குட்பட்ட சரித்திர பூகோளத்தை அறிவர். உங்களது புத்தியில் எல்லையற்ற சரித்திர, பூகோளம் இருக்கிறது. அவர்கள் ஸ்தூல யுத்தம் பற்றி அறிவார்கள். யோக பலத்தின் யுத்தம் பற்றி யாருக்கும் தெரியாது. யோக பலத்தின் மூலம் நாம் உலகிற்கு எஜமானர்களாக ஆகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். கற்றுக் கொடுப்பவர் திரிலோகநாத் தந்தை. இந்த நேரத்தில் உங்களது பதவி மிகவும் உயர்ந்தது ஆகும். நீங்கள் ஞானம் நிறைந்த தந்தையின் குழந்தைகள் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்கள் ஆவீர்கள். அவர் எந்த வகையில் ஞானம் நிறைந்தவர்? ஆனந்தம் நிறைந்தவர்? என்பதையும் நீங்கள் அறிவீர்கள். சத்லிசித்லிஆனந்த சொரூபம் என்று அவரை கூறுகின்றனர். இந்த நேரத்தில் நீங்கள் ஆனந்தத்தை உணர்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் மிகவும் துக்கமானவர்களாக இருந்தீர்கள். சுகம் மற்றும் துக்கத்தை நீங்கள் ஒப்பிட்டு பார்க்க முடியும். அந்த லெட்சுமி நாராயணன் இந்த விசயங்களை அறிய மாட்டார்கள். அவர்கள் இராஜ்யம் மட்டுமே செய்வார்கள். அது அவர்களது பிராப்தியாகும். நீங்களும் சென்று சொர்க்கத்தில் இராஜ்யம் செய்வீர்கள். அங்கு மிக நல்ல மாளிகைகள் உருவாக்குவீர்கள். அங்கு கவலைக்கான விசயம் எதுவுமிருக்காது. இதுவும் புத்தியில் நிலைத்து இருக்க வேண்டும், அப்போது தான் குஷியின் அளவு அதிகரிக்கும். பல விதமான புயல்கள் வரும், யாரும் சம்பூர்ணம் ஆகவில்லை. நீங்கள் மிகவும் உறுதியானவர் களாக ஆக வேண்டும் என்று தந்தை புரிய வைக்கின்றார். அவர்கள் அமர்நாத்திற்கு செல் கின்றனர், மீண்டும் அவர்கள் கீழே அவசியம் இறங்கியே ஆக வேண்டும். நீங்கள் தந்தையிடம் செல்வீர்கள், பிறகு புது உலகம், சத்யுகத்திற்கு வருவீர்கள், பிறகு மீண்டும் கீழே இறங்க ஆரம்பித்து விடுவீர்கள். நமது இந்த யாத்திரை எல்லையற்றதாகும். முதலில் பாபாவுடன் ஓய்வாக இருப்போம், பிறகு இராஜ்யத்தில் இராஜ்யம் செய்வோம், பிறகு பிறவி பிறவியாக கீழே இறங்கியே வருகிறோம். இதை சக்கரம் என்று கூறினாலும், ஏற்றம்லிவீழ்ச்சி என்று கூறினாலும் விசயம் ஒன்று தான். கீழிருந்து மேலே செல்வோம் பிறகு இறங்குவது ஆரம்பமாகி விடும். இந்த அனைத்து விசயங்களையும் அதி புத்திசாலிகள் (புத்தி கூர்மை உள்ளவர்) தான் நல்ல முறையில் புரிந்து கொள்ளவும் முடியும், மேலும் புரிய வைக்கவும் முடியும். இந்த பாபாவும் அறியாமல் இருந்தார். ஒருவேளை இவருக்கு யாராவது குரு இருந்தால் அந்த குருவை பின்பற்றக் கூடிய வேறு சிலரும் இருப்பர். இவ்வாறு ஒரே ஒருவர் மட்டுமே பின்பற்றக் கூடியவர் இருக்கமாட்டார். சாஸ்திரங்களில் பகவானின் மகாவாக்கியம் கூறுப்பட்டிருக்கிறது – ஹே அர்சுனா! என்று ஒரே ஒருவரின் பெயர் மட்டுமே எழுதி விட்டனர். அர்ஜுனனின் ரதத்தில் அமர்ந்திருக் கிறார் எனில் அவர் ஒருவர் மட்டுமே கேட்பார், மற்றவர்களும் இருப்பார்கள் அல்லவா! சஞ்சையும் இருப்பார். இந்த எல்லையற்ற பள்ளிக் கூடம் ஒரே ஒரு முறை தான் திறக்கப்படுகிறது. அந்த பள்ளிக் கூடம் எப்போதுமே இருக்கிறது, அரசர் எப்படியோ அப்படி தான் மொழிகள் இருக்கும். அங்கு சத்யுகத்திலும் நீங்கள் பள்ளிகளுக்கு செல்வீர்கள் அல்லவா! மொழி, தொழில் போன்ற அனைத்தையும் கற்றுக் கொள்வீர்கள். அங்கும் அனைத்தும் (பொருட்கள்) உருவாக்கப்படும். அனைத்தையும் விட மிக நல்ல பொருள் எதுவோ அது சொர்க்கத்தில் இருக்கும். பிறகு அவை அனைத்தும் பழையதாக ஆகிவிடும். தேவதைகளுக்கு மிகவும் நல்ல பொருட்கள் கிடைக்கும். இங்கு என்ன கிடைக்கும்? புது உலகில் அனைத்தும் புதிதாக கிடைக்கும் என்பதை புரிந்துக் கொள்கிறீர்கள். இது போன்ற அனைத்து விசயங்களையும் புரிந்துக் கொண்டு பிறகு மனிதர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இப்போது நாம் சங்கமத்தில் இருக்கிறோம், நமக்காக இப்போது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. நாடகப்படி உங்களை தூய்மையற்றதிலிருந்து தூய்மையான தேவி தேவதைகளாக ஆக்குவதற்குநான் மீண்டும் வந்திருக்கிறேன். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. பிரஜாபிதா பிரம்மாவின் மூலம் அவசியம் பிராமணர்களைத் தான் படைத்திருப்பார். பிராமணர்களின் மூலம் யக்ஞம் படைத்திருக்கிறார். பிராமணர்கள் தான் தேவதைகளாக ஆவார்கள். ஆகையால் விராட ரூப சித்திரமும் அவசியமானது. இதன் மூலம் பிரம்மா வாய்வழி வம்ச பிராமணர்கள் தான் தேவதைகளாக ஆவார்கள் என்பது நிரூபணம் ஆகிறது. வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டே செல்லும். தேவதை நிலையிலிருந்து சத்ரியன், வைஷ்யன், சூத்ரனாக ஆவோம். இந்த சங்கமயுகம் பிரபலமானது. ஆத்மா பரமாத்மாவைப் பிரிந்து வெகு காலம் ஆகிவிட்டது ……… முன்னேறும் கலை பிறகு கீழிறங்கும் கலை …… இதையும் புரிய வைக்க வேண்டும். முதலில் ஈஸ்வரிய வம்சம், பிறகு தேவதா வம்சம், பிறகு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே செல்லும். துக்கம் நீக்கி சுகம் கொடுப்பவர் என்று நீங்கள் யாரைக் கூறுகிறீர்கள்? என்று நீங்கள் கேட்க வேண்டும். பரம்பிதா பரமாத்மா என்று அவசியம் கூறுவர். எப்போது உலகின் துக்கம் நீங்கி விடுமோ அப்போது விஷ்ணுபுரி ஆகிவிடும். பிராமணர்களின் துக்கம் நீங்கி விடும், சுகம் கிடைத்து விடும். இது விநாடிக்கான விசயமாகும். லௌகீகத் தந்தையின் மடியிலிருந்து பரலௌகீகத் தந்தையின் மடிக்கு வந்து விட்டீர்கள். இது குஷிக்கான விசயமாகும்.
இது அனைத்தையும் விட மிக உயர்ந்த பரீட்சை ஆகும். இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆகிறீர்கள். பரம்பிதா பரமாத்மாவைத் தவிர வேறு யாரும் இராஜயோகம் கற்பிக்க முடியாது. இந்த சித்திரம் மிகவும் நன்றாக இருக்கிறது. எனக்கு பரம்பிதா பரமாத்மாவிடம் எந்த சம்மந்தமும் இல்லை என்று யார் கூறுவார்கள்! இப்படிப்பட்ட நாஸ்திகர்களிடம் பேசவே கூடாது. நாட்கள் செல்ல செல்ல மாயை குழந்தைகளின் மூலமும் தவறான காரியங்களை செய்வித்து விடுகிறது. பாபாவிற்கு கருணை ஏற்படுகிறது. பிறகு எச்சரிக்கையுடன் இருங்கள் என்ற புரிய வைக்கின்றார். அதிகம் அடி வாங்காதீர்கள், இல்லையெனில் பதவியும் அடைய மாட்டீர்கள். உயிரே போய் விடும் அளவிற்கு மாயை மிக ஜோராக அடிக்கிறது. இறந்து விட்டால் பிறகு பிறந்த நாள் கொண்டாட முடியாது. குழந்தை இறந்து விட்டது என்று கூறுவர். ஈஸ்வரனிடம் பிறப்பு எடுத்து, பிறகு இறந்து விட்டால் இந்த மரணம் அனைத்தையும் விட மோசமானது (கேவலமானதாகும்). ஏதாவது விசயம் சரியானதாக தோன்றவில்லையெனில் விட்டு விடுங்கள். சந்தேகம் எழுகிறது எனில் பார்க்காதீர்கள். பாபா கூறுகின்றார் லி மன்மனாபவ, என்னை நினைவு செய்யுங்கள் மற்றும் சுயதரிசன சக்கரத்தைச் சுற்றுங்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:-
1) பாபாவிற்கு சமம் மாஸ்டர் ஞானம் நிறைந்தவர்களாக ஆக வேண்டும். ஞானச் சிந்தனை செய்து அளவற்ற குஷியுடன் இருக்க வேண்டும். ஆனந்தத்தின் அனுபவம் செய்ய வேண்டும்.
2) பல விதமான புயல்களுக்கு நடுவில் இருந்தாலும் தன்னை உறுதியானவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மாயையின் அடியிலிருந்து தப்பிப்பதற்கு மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
வரதானம்:-
தெய்வீக குணங்கள் அனைத்தையும் விட சிரேஷ்டமான பிரபுவின் பிரசாதம் ஆகும். இந்தப் பிரசாதத்தை நன்றாக பங்கிட்டுக் கொடுங்கள். எவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பின் அடையாளமாக ஸ்தூலத்தில் டோலி கொடுத்து உபசரிக்கின்றீர்களோ, அவ்வாறே குணங்களின் டோலி கொடுங்கள். எந்த ஆத்மாவிற்கு எந்த சக்தியின் அவசியம் உள்ளதோ, அவருக்கு தன்னுடைய மனம் அதாவது சுத்தமான உள்ளுணர்வு, அதிர்வலைகள் மூலம் சக்திகளின் தானம் கொடுங்கள் மற்றும் கர்மத்தின் மூலம் குணமூர்த்தி ஆகி குணத்தை தாரணை செய்வதற்கு சகயோகம் கொடுங்கள். எனவே, இந்த விதிப்படி ஃபரிஷ்தாவிலிருந்து தேவதை ஆகவேண்டும் என்ற சங்கமயுகத்தின் இலட்சியம் என்ன உள்ளதோ, அது சகஜமாக அனைவரிடத்திலும் வெளிப்படையாகத் தென்படும்.
சுலோகன்:-
லவ்லீன் (அன்பில் மூழ்கிய) ஸ்திதியின் அனுபவம் செய்யுங்கள்
பரமாத்ம அன்பின் அனுபவத்தில் சகஜயோகி ஆகி பறந்து கொண்டே இருங்கள். பரமாத்ம அன்பானது பறக்க வைக்கும் சாதனம் ஆகும். பறக்கக்கூடியவர்கள் ஒருபோதும் பூமியின் ஈர்ப்பில் வரமுடியாது. மாயை எவ்வளவு தான் கவர்ச்சிக்கும் ரூபத்தில் இருக்கட்டும், ஆனால், அந்தக் கவர்ச்சி பறக்கும் கலை உடையவர்களை சென்றடைய முடியாது.
➤ Email me Murli: Receive Daily Murli on your email. Subscribe!